பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, January 19, 2007

கூட்டணி மந்திரிசபை - கருணாநிதி அதிரடி முடிவு!

காங்கிரஸ், பாமகவுக்கு தலா இரண்டு அமைச்சர் பதவி - கருணாநிதி அதிரடி முடிவு

தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக கூட்டணி கட்சிகளுக்கு மந்திரிசபையில் பங்கு கொடுக்க முதலமைச்சர் கருணாநிதி திட்ட மிட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், பாமக ஆகிய கட்சி களுக்கு தலா இரண்டு அமைச்சர் பதவிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் கொடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நடைபெறவிருக்கும் சட்டசபை கூட்டத்திற்கு பின்னர் மந்திரி சபையில் இதற்கான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

தமிழக வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமையவிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் பேர் அமைச்சராகலாம் என்று விதி உள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 234 உறுப்பினர்களில் 34 பேர் அமைச்சராகலாம். தற்போது தமிழக அமைச்சரவையில் 31 பேர் இடம் பெற்றுள்ளனர்.

கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்களிப்பதற்கு வசதியாக ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கி விட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

6 Comments:

ரவி said...

சுடச்சுட தந்த இட்லிவடையாருக்கு நன்றி...

சென்ஷி said...

உண்மையிலேயே ந்யூ-ஸாத்தான் இருக்கு - நன்றி

Anonymous said...

கூட்டணி மந்திரி சபை அமைந்தால் மிகவும் வருத்தப்படப்போவது உங்க ஜெயலலிதாவும், சோவும் தான்.

Anonymous said...

ஆட்சியை தக்கவைத்துகொள்ள கருனாநிதி செய்யும் தந்திரங்களில் இதுவும் ஒன்று.

இதனால் அவர்களுக்கு(கருனாநிதியின் குடும்பதிற்கு) பெரிதாக நஷ்டம் ஒன்றும் இல்லை.

மாறாக இதனால் கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் வாயை அடைக்கமுடியும்.

Anonymous said...

Now we can expect fights inside congress to grab minister post....

G.Ragavan said...

இது முதலிலேயே செஞ்சிருக்க வேண்டியது. இப்பக் காலங் கடந்து செஞ்சிருந்தாலும் சரியான முடிவு. இப்ப என்ன காரணதுக்காக இந்த முடிவுக்கு வந்தாரு?