பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, January 23, 2007

இட்லிவடை கழுகார் சொன்ன தகவல்

சாய்பாபா பக்கத்தில் சில சீடர்களை பார்த்திருப்பீர்கள் சாய்பாபா கூடவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். கலைஞரை சந்திக்க சென்ற போது கூட பார்த்திருப்பீர்கள்.( வெள்ளை குர்த்தா அணிந்தவர்கள்) அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்

சாய்பாபா கலைஞரை பார்த்துவிட்டு, தயாநிதி மாறன், துறைமுருகன் அவர்களுக்கு மோதிரம் மற்றும் தயாளு அம்மாளுக்கு வீபூதி கொடுத்துவிட்டு செல்லும் போது மஞ்சள் துண்டு அணிந்தவர் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாக தகவல்.

( மேலும் சில தகவல்கள் இருக்கிறது, ஆனால் அதை இங்கு பிரசுரித்தால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என்று பிரசுரிக்கவில்லை )

பிகு: சாய்பாபா பதிவால் டென்ஷன் ஆகியுள்ள சில பதிவர்களை சாய்பாபா எல்லா நன்மைகளும், ஆசிகளும் அவர்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தித்துக்கொள்கிறேன்.

12 Comments:

இலவசக்கொத்தனார் said...

இதுக்கு எந்த பருந்தார் என்ன எதிர்வினை தராருன்னு பார்க்கலாம்! :)

பங்காளி... said...

வலைபதிவுகளில்....செய்தியை முந்தித்தந்து தனக்கென மதிப்பான இடத்தினை வைத்திருந்த இட்லிவடையார் கொஞ்சம் கொஞ்சமாய் சாயம் பூசிக்கொள்வது வருத்தமளிக்கிறது.

சிலரை சந்தோஷப்படுத்தவும், பலரை சீண்டிப் பார்க்க வேண்டுமானால் வேறொரு வலைப்பதிவினை துவங்கலாமே....இட்லிவடை எல்லோருக்கும் பொதுவாய் இருந்துவிட்டு போகட்டுமே...

யோசியுங்கள் நண்பரே.....

பூனைக்குட்டி said...

சார், உங்களுக்குத் நன்றாகத் தெரிந்த விஷயத்தை மட்டும் இந்தமாதிரி பதிவிடும் பொழுது போடுவது நல்லது.

ஏனென்றால், உண்மை அது இல்லாமலும் இருக்கலாம் நான் நேரில் சென்று பார்க்கவில்லை எப்படி நீங்கள் பார்க்கவில்லையோ அப்படி.

அவரு கூட இருந்தவரு சொன்னாருங்கிறதுக்காக எல்லாவிஷயத்தையும் நம்பிட முடியாது.

இதை நான் நம்புறேனா இல்லையா என்பது வேறு விஷயம். இப்படி ஒரு பதிவிட வேண்டி உங்களுக்கு வந்ததை வருத்தத்துடன் பார்க்கிறேன்.

மோகன்தாஸ்

பூனைக்குட்டி said...

publish my comment buddy.

IdlyVadai said...

//வலைபதிவுகளில்....செய்தியை முந்தித்தந்து தனக்கென மதிப்பான இடத்தினை வைத்திருந்த இட்லிவடையார் கொஞ்சம் கொஞ்சமாய் சாயம் பூசிக்கொள்வது வருத்தமளிக்கிறது. //

//இதை நான் நம்புறேனா இல்லையா என்பது வேறு விஷயம். இப்படி ஒரு பதிவிட வேண்டி உங்களுக்கு வந்ததை வருத்தத்துடன் பார்க்கிறேன்.//

கருத்துக்கள் ஏற்றுக்கொள்ள படுகிறது. இனிமேல் செய்திகளை மட்டும் ( சில சமயம் என் கருத்துக்களுடன் ) வெளியிடப்படும். நன்றி நண்பர்களே.

Anonymous said...

இட்லிவடை பதிவுகள் காத்து வாங்கிட்டு இருக்குன்னு இரவுக் கழுகார் சொன்னது உண்மை தான் போலிருக்கு :-)

Anonymous said...

இட்லிவடையாரே, இதற்கு முன் பல செய்திகளில் உங்கள் கருத்துக் களைத் தந்தபோதிலும், பாபா-கலைஞர் பதிவுகளில் வந்த உங்கள் கருத்துக்கள் எதிர்க்கப்படுவது ஏனோ ?. அதற்கு சாயம் பூச படுவது ஏனோ ?. வெறும் செய்திகளைத்தான் படிக்கவேண்டும் என்றால் அதற்கு ஆயிரம் தளங்கள் இருக்கின்றன. இ.வ வின் நகைச்சுவை நடையோடும் கருத்தோடும் கூடிய படைப்புக்களை படிக்கத்தான் நாங்கள் ஆவலாக இருக்கிறோம். அடுத்து வரக் கூடிய செய்தியில் நாம் இருவர் கருத்துக்கள் மாறுபடலாம், ஆனால் அதற்காக உங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று சொல்வது சர்வாதிகரம்.

பி.கு. இப்படி ஒரு பின்னூட்டம் வெளியிட வேண்டியிருக்கிறதே என்று நான் வருத்தப் படவில்லை ;-)

பங்காளி... said...

என்னுடைய ஆதங்கத்தினை புரிந்து கொண்டத்ற்கு நன்றி....

அப்புறம் அனானி நண்பருக்கு சொல்லிக்கொள்வதெல்லாம்......

"தலைவா...இட்லிக்கு சாம்பாரும் தூக்கலா இருக்கும்...கறி குழம்பும் டாப்பா இருக்கும்....அதுனால இட்லி எப்பவும் எல்லாருக்கும் செல்லமா இருந்துட்டு போகட்டுமேன்னு சொன்னேன்...இதுல சர்வாதிகாரம் எங்க இருந்து வந்தது..."

VSK said...

ஆதாரமற்ற [ஆளைக் காட்டிக்கொடுக்காதவரையில் அது ஆதாரமற்றதுதானே, எவ்வளவு உண்மையாக இருந்த போதிலும்!] இச்செய்தியைப் போட்டு, உங்கள் தரத்தைச் சற்றுத் தாழ்த்திக் கொண்டிருக்கிறீர்கள் எனத்தான் சொல்ல வேண்டும்.

என்ன சொல்ல வருகிறீர்கள் இதன் மூலம்?

சாய்ராம்.

Anonymous said...

// ( மேலும் சில தகவல்கள் இருக்கிறது, ஆனால் அதை இங்கு பிரசுரித்தால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என்று பிரசுரிக்கவில்லை )

இப்படி போடுவது தான் எம்போன்றவர்களுக்கு வருத்தத்தை தருகிறது. இந்த செய்தியால் யாரும் கருத்தியல் ரீதியிலான வருத்தம் தானே வரும். மற்றபடி விபத்து, ஆபாசம், அருவருக்க தக்கதாக ஏதும் இராதே...
ஏன் தயங்க வேண்டும்... அப்படி தயங்கினால் பிறகு நாளை வேறு ஒரு செய்திக்கு இன்னமும் பலர் வருந்தக் கூடும். அப்ப செய்திகளையே தர இயலாது போகுமே...?

அனைத்தையும் உள்ளதை உள்ளபடி தருவதாக நினைத்து தான் இட்லிவடை படிக்கப் படிக்கப் படுகிறது. இப்படி வடிகட்டி தரும்பட்சத்தில் அது ஒரு தலைபட்சமாகி விடும்.

Anonymous said...

சூடான ,பரபரப்புச் செய்திகளுக்கு வேற இடம் போகலாம்.
இட்லிவடைனு பெயர் வைத்துக்கொண்டு
சாம்பார் இல்லாமல் பதிவு போட்டால் நாங்க படிக்க மாட்டொம்னு உறுதி மொழி எடுக்கிறொம்.:-)

கால்கரி சிவா said...

அதே வெள்ளை சட்டைக் காரர் என்னிடம் சொன்ன தகவல்

துரைமுருகனுக்கும், த.நி மாறனுக்கும் மோதிரம் தந்த சாய்பாபா கருணாநிதிக்கு புன்னகை மட்டும் தந்தார்.

அதற்கு துரைமுருகன் "கருணாநிதி அண்ணா தந்த மோதிரத்தை மட்டும் அணிவார் என்பது பாபாவிற்கு தெரியும்" என சொல்ல
த.நி.மா "பாபா கருணாநிதிக்கு இதயத்தை தந்துவிட்டார்" என பகுத்தறிவு பொழிந்திருக்கிறார்