ஷில்பா கண்ணீர் விட்டார் என்று எல்லா செய்தி சேனல்களிலும் வந்துவிட்டது. மத்திய அரசு, டோனி பிளேர் என்று எல்லோரும் அட்டண்டன்ஸ் கொடுத்துவிட்டார்கள். சிரித்தது பற்றி யாரும் பேச வில்லை.அந்த செய்தி கடைசியில்..
செய்தி பற்றி ஒரு அறிமுகம்.
பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை இங்கிலாந்தின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி நடத்தி வருகிறது. உலகின் பிரபலமான 10 பேரை அழைத்து தனி வீட்டில் அவர்களை தங்க வைத்து அவர்களின் தினசரி வாழ்க்கையை காலை முதல் மாலை வரை அப்பட்டமாக படம் பிடித்து ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.
இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வெளியில் உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பாலிவுட் நட்சத்திரம், முதல் இந்தியர் என்ற பெருமை(?) நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்தது. இதற்கு ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 3 கோடி சம்பளம். மொத்தம் 25 நாட்களுக்கு ஷில்பா தனி வீட்டில் பிற பிரமுகர்களுடன் இருக்கிறார்.
ஷில்பா மற்றும் அவருடன் பங்கேற்கும் பிரமுகர்களும் கடந்த புதன்கிழமை டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஷில்பாவுடன் ஒரே வீட்டில் தங்கப் போகும் மற்ற பிரபலங்கள்: மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், இங்கிலாந்தின் முன்னாள் அழகு ராணி டெனிலா லாய்டு, நடிகர் டிரிக் பெனடிக்ட், நடிகை ஷெலோ ரோக்காஸ், பத்திரிகையாளர் கரோல் மலோன், திரைப்பட இயக்குனர் கென் ஆகியோர் ஆவர்.
பிக் பிரதர் நிகழ்ச்சி குறித்து ஷில்பா கூறுகையில், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. இருந்தாலும் என் சுயமரியாதையையும், கௌரவத்தையும் என்னால் காக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறினார்.
குளிக்க பயந்த ஷில்பா
வீட்டுக்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதால் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாமல் தவித்தார். முக்கியமாக குளிக்க அவர் அச்சப்பட்டார். குளியலறையிலும் கேமராவை வைத்து ஷூட் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பாத்ரூம் பக்கமே போகாமல் இருந்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக குளிக்காமல் கொள்ளாமல் அட்ஜஸ்ட் செய்து வந்துள்ளார்.
கூடத் தங்கியிருக்கும் பிரபலங்கள் கேமராவெல்லாம் கிடையாது, தைரியமாக குளியுங்கள் என்று சொல்லியும் அவர் குளிக்கப் பயந்துள்ளார். கை, கால், முகத்தில் மட்டும் தண்ணீரை விட்டுக் கொண்டு வந்துள்ளார்.
அவர் குளிக்க பயப்படுவதை அறிந்த பிக் பிரதர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாத்ரூமில் கேமரா கிடையாது என உறுதி அளித்த பின்னர்தான் அவர் சமாதானமடைந்தாராம்.
இனி அவர் சுதந்திரமாக குளிப்பார் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் புன்னகையுடன் கூறினார். குளித்தாரா, இல்லையா என்பதை ஷில்பாதான் சொல்ல வேண்டும்.
அவமதிப்பு - கண்ணீர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் இருக்கும் பெண் பிரபலங்கள் மூன்று பேரால் ஷில்பா ஷெட்டி இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்ட காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகின. ஜடே கூடி, டானிலி லாயிட், ஜோ ஓ மியாரா ஆகியோர் ஷில்பா ஷெட்டியை உடலின் நிறத்தை சுட்டிக் காட்டி இழிவுப்படுத்தியது, நாய் என்று திட்டியது, ஷில்பா சமைத்த உணவை சாப்பிட மறுத்தது இதன் காரணமாக ஷில்பா கண்ணீர் விட்டு அழுதது ஆகிய காட்சிகள் ஒளிபரப்பாகியதால் பிரிட்டன் "டிவி' ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.
காட்சி இங்கே
பிரபலமான பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், ஷில்பாவுக்கு "உங்களை குற்றம் சாட்டுகிறவர்கள், தங்கள் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும்'' என்று ஆறுதல் கூறி தேற்றினார்.
இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தவர்கள், நடிகை ஷில்பா ஷெட்டி மற்ற போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் கூறி வருகிறார்கள். ஷில்பா ஷெட்டி இந்தியர் என்பதால், அவரிடம் மற்ற போட்டியாளர்கள் இனவெறி உணர்வுடன் நடந்து கொள்வதாக அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளனர். ஷில்பாஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும், இதுபற்றி ஷில்பாஷெட்டிக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. காரணம், அவரும், மற்றவர்களும் வெளி உலக தொடர்பு இல்லாமல், அந்த பங்களாவில் இன்னும் தொடந்து வசித்து வருகிறார்கள்.
ஷில்பாவை நாய் என்று சொன்ன காட்சி
இங்கிலாந்தில் டெலிவிஷன் சேனல்களை கண்காணிக்கும் `ஆப்காம்' என்ற அமைப்பிடம் இதுபற்றி 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் புகார் செய்து உள்ளனர். பல மிரட்டல் `இ மெயில்'களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் "ஆப் காம்' என்ற அமைப்பு மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை கட்டுப் படுத்தும் அமைப் பாக உள்ளது. இந்த அமைப்புக்கு இதுநாள் வரை எட்டாயிரம் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சேனல் 4 "டிவி' நிறுவனத்துக்கும் நேரிடையாக இரண் டாயிரம் வாசகர்கள் போன் மற்றும் இ-மெயில் மூலம் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருவதாக "ஆப்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி., கீத் வாஸ் என்பவர் பார்லிமென்ட்டில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ""அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியவை இந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று'' என்று அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பிரபலமான வெளிநாட்டு வாழ் இந்திய "டிவி' நடிகையான மீரா சியாலும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியுள்ளார். இன பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து மேற்கொள்ளப் பட்டுள்ள பிரசாரத்தை அவர் தலைமையேற்று நடத்தி வருகிறார். வாசகர்களின் ஆதரவை இழக்கும் பிரபலங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்பது தான் " பிக் பிரதர்' நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். அந்த வகையில், இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்டதால் பிரிட்டன் வாசகர்களிடம் ஷில்பா ஷெட்டிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது. தற்போது அவர் இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கவலை
பிரிட்டன் "டிவி' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனபாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப் பட்டுள்ளது கண்டு மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இது குறித்து வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்,""இந்த பிரச் னையை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளோம். பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக் கப்படும். அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் இந்தியா அடியோடு எதிர்த்து வருகிறது என்பதை உலகமே அறியும்'' என்றார்.
டோனி பிளேர் கருத்து
நடிகை ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய இந்திய வம்சாவளி எம்.பி. கெயித் வாஸ், டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் இத்தகைய அவமதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுமா? என்று பிரதமர் டோனி பிளேரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த டோனி பிளேர், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியை தான் பார்க்காததால் அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அதே நேரத்தில், நிறவெறி எந்த வடிவத்தில் வந்தாலும் விரும்பத்தக்கது அல்ல. அதை வன்மையாக எதிர்க்கவேண்டும் என்று தனது கண்டனத்தை வெளியிட்டார்.
புனானிக்கு சிரித்த ஷில்பா
பிரபலங்கள் கலந்துரையாடிய போது 'Punani' என்றால் என்ன என்று விவாதித்தனர். அது பற்றிய வீடியோ தொகுப்பு ( இதை பற்றி இதுவரை மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை )
குசுக்கு சிரித்த ஷில்பா.
யரோ குசுவிட்டதற்கு விழுந்து விழுந்து சிரித்த ஷில்பா.
கடைசியாக ஒரு குஜால் சீன் மற்றும் ஒரு குஜால் பாட்டு ரசிகர்களுக்கு
Update 19th Jan 2007
டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி
`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.
இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4' டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் "நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை'' என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.
ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.
வீடியோ படம் பார்க்க
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Thursday, January 18, 2007
சிரித்த ஷில்பா , அழுத ஷில்பா
Posted by IdlyVadai at 1/18/2007 03:06:00 PM
Labels: செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
7 Comments:
ஆகா...இவ்வளவு விரிவாகவா...தன்யனானேன்...!!!
நன்றி !!!
இட்லிவடைக்கு ஒரு Standard இருக்கில்ல :-)
//இட்லிவடைக்கு ஒரு Standard இருக்கில்ல :-)//
நிச்சயமா :-)
சில்பாவா, ஷில்பாவா :-)
அனானி - அது சீப்பா
:-))
டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி - செய்தியும் படமும்.
Post a Comment