இந்த வாரம் ஜூவியில் கழுகார் சொன்ன செய்தி !"ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் கைகுலுக்கப் போகின்றன...’’ என்று அடுத்த செய்திக்கு ரூட் போட்டார்.
நாம் புரியாமல் விழிக்க, "என்ன குழம்பி விட்டீர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவும் கருணாநிதியும் நல்ல விஷயம் ஒன்றுக் காக ஒரே மேடையில் தோன்றப் போகிறார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன்... வீணாகக் குழம்பி தேவை யில்லாத கற்பனையில் ஈடுபடாதீரும்’’ என்று சொல்லிவிட்டு, விஷயத்துக்கு வந்தார்.
"சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் சில காரணங்களால் இன்னமும் முழுமையடையாமல் இருக்கிறது. இந்தத் திட்டத்தை முழுமையாக முடித்து, எதிர்பார்த்தபடி சென்னை மக்களுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்ப்பதற் கான முயற்சியில் சத்ய சாய் அறக்கட் டளை இறங்கியது. அதற்காக பல கோடி ரூபாய்களை செலவழிக்கவும் அவர் கள் தயாராக இருந்தார்கள். இதற்காக அறிவிப்பு ஒன்றையும் கடந்த சில வருடங் களுக்கு முன்பாக கொடுத்திருந்தார் சாய்பாபா. ஆனால், இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் இந்த திட்டம் அறிவிப் போடு நின்றுபோனது. இப்போது அந்த விஷயத்துக்கு உயிரூட்ட முயற்சி எடுத்திருக்கிறது தி.மு.க. தரப்பு. அதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்காக ஏற்கெனவே அறிவித்தபடி அறக்கட்டளை சார்பில் தொகையைக் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார் சாய்பாபா. இதற்காக வரும் இருபத்தோராம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்ட மாக விழா ஒன்று நடக்கப் போகிறது. அதில் சாய்பாபாவும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கலந்துகொள்ள போகிறார்கள். ஒரே மேடையில் தோன்றும் இவர்கள், கிருஷ்ணா குடிநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்து, அடுத்தடுத்துத் தமிழகத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் பல்வேறு திட்டங்களையும் அங்கே அறிவிப்பார்களாம்...’’
"சரி, அ.தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டுப் பட்டியல் படிப்பார்களா... மாட்டார்களா?’’
"நல்லது நடக்கும்போது அரசியல் தாக்குதல்கள் வேண்டாம் என்று இரு தரப்பிலுமே நினைக்கிறார்கள். அதனால், அங்கே தாக்குதல் பாலிடிக்ஸுக்கு வேலை இருக்காது என்றே நினைக்கிறேன்.’’
"வெரிகுட்!’’
[ செய்தி: ஜூவி, படம் - இட்லிவடை :-) ]
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, January 12, 2007
சாய்பாபாவுடன் கருணாநிதி?
Posted by IdlyVadai at 1/12/2007 02:15:00 PM
Labels: பத்திரிக்கை
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
Will Veeramani also attend and grace the function.
அடடா. அப்ப, "பரட்டயனுக்கு" எதிரான "கொள்கை" பிடிப்புள்ள பல திராவிடர்கள் இந்த தண்ணிய குடிக்க மாட்டாங்களோ?
கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு பணம் கொடுப்பதால் கி.வீ நிச்சயமாக வரமாட்டார். அவரோட அறக்(?)கட்டளைக்கு பணம் கொடுக்கிற மாதிரி இருந்தா பாஞ்சிகினு வந்து பாபா கால்ல விழுந்தாலும் விழுவார்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.
//இதற்காக வரும் இருபத்தோராம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்ட மாக விழா ஒன்று நடக்கப் போகிறது. அதில் சாய்பாபாவும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கலந்துகொள்ள போகிறார்கள். ஒரே மேடையில் தோன்றும் இவர்கள், கிருஷ்ணா குடிநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்து, அடுத்தடுத்துத் தமிழகத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் பல்வேறு திட்டங்களையும் அங்கே அறிவிப்பார்களாம்...’’//
விளம்பரம் குடுக்கிறதிலே கருனாநிதிக்கு நிகர் அவர் தான்.
இதற்கு முன் ஒரு முறை ஒரு குடம் கிருஷ்ணா நீரை மேடையில் காட்டி தமிழ்நாட்டுக்கு கிருஷ்ணா நீர் வந்து விட்டது என்று சொன்னார்களே அது என்ன பொய்யா?
இல்லை ஸ்டாலினை மேயர் ஆக்க போடப்பட்ட நாடகமா?
ஒன்னுமே புரியலப்பா...
I am sure Karuna needs all the Nidhi he can get. The coffers are running dry thanks to Free TV (without cable) Free Gas Stove (Without gas) and free patta of wastelands. Any donations will be welcome.
Will Kanchi Subramaniyan come and bless M.K? perhaps Sai Baba? ;-)
இ.வ. இதில் நான் முந்திவிட்டேன். என் பதிவு http://sivacalgary.blogspot.com/2007/01/blog-post_11.html
என் உறவினர்கள் புட்டபர்த்தியில் சேவை செய்கிறார்கள் அவர்கள் கரைவேட்டிகளை அங்கே பார்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு பெயர் சரியாக தெரியவில்லை துரைமுருகனாக இருக்கலாம் என்பது அவர்களின் ஊகம்
கால்கரி சிவா - செய்திக்கு நன்றி
//கிருஷ்ணா நதி நீர் திட்டத்துக்கு பணம் கொடுப்பதால் கி.வீ நிச்சயமாக வரமாட்டார். அவரோட அறக்(?)கட்டளைக்கு பணம் கொடுக்கிற மாதிரி இருந்தா பாஞ்சிகினு வந்து பாபா கால்ல விழுந்தாலும் விழுவார்.
என்றென்றும் அன்புடன்,
பா.முரளி தரன்.//
முரளிதரன் அய்யா,
நீங்கள் சூரமணி அய்யாவை தரக் குறைவாக விமர்சித்துள்ளீர்கள் என்று தோன்றுகிறது. அவர் ஜீ.கே அய்யாவுக்கு காஃபி கொடுத்த மாமனிதர்.ஜெயலலிதா அம்மாவின் உருவத்தில் சமூக நீதி காத்த வீராங்கனையைக் கண்டு தமிழர்களுக்கு பரவசத்தை ஏற்படுத்தியவர்.பணம் அவருக்கு பிரியம் தான்.அதுக்காக அவர் எதையும் செய்யக் கூடியவர் தான்.ஆனால் எல்லாவற்றுக்கும் மேலாக அனைவரும் காஃபி குடிக்க வேண்டும் என்ற உன்னத கொள்கையும் உடையவர் என்பதை மறந்து விடாதீர்கள்.
பாலா
தன்னிடம் உள்ள எல்லாவற்றுக்கும் ஒரு விலை வைத்து விற்பனை அவ்வப்போது செய்வது உண்டு கருணாநிதி.
என் நண்பர் எம்ஜிஆர் உடல் நிலை தேறி வந்தவுடன் ஆட்சியை மீண்டும் எம்ஜிஆரிடம் ஒப்படைப்பேன் என்று தன்மானத்தை விலை வைத்து விற்றதிலிருந்து,
மஞ்சள் துண்டுக்கு இதுவரை 108 காரணம் சொல்லி பகுத்தறிவு நேர்மை, உண்மைக்கு விலை வைத்தது,
யாகத்தில் கலந்து கொள்வது, பலனடைவது, கமிஷன் கட்டிங் காண்டிராக்டுக்காக புட்டபர்த்திக்குப் படை எடுப்பது.
ஹே கிருஷ்ணா,மாயக்கிருஷ்ணா நாத்திக கருணாநிதியின் ஆட்சியின் போது மட்டும் நதிநீராக குடத்திலிருந்து மாயையாக வந்து வந்து போகிறாயே, காவிரி, பெரியாற்று நீர்பங்கீட்டு மாய்மாலக் கருணாநிதியின் அடுத்த திசை திருப்பு ஓரங்க நாடக வெளியீடு!
வினை செய்தது சாயி ஆன்மீக இயக்கம். விரல்சூப்ப கருணாநிதி பந்திக்கு முந்துகிறார்!
பொய்ஞான சுயமரியாதை,பகுத்தறிவுத் தமிழனுக்கும் தாகம் தீர்க்கும் திட்டம் தந்த மெய்ஞான இந்து ஆன்மீகம் வாழ்க!
Veeramani will say that while we oppose Saibaba we dont' oppose
Karunanidhi accepting his aid
for the state or help in project
in view of the larger interest
of Tamils.The very next day Karunanidhi will proclaim that
I am always a follower of Periyar
although I may share dais with
Hindu saints.
சந்திப்பு நிகழாமலேயே ஏன் இந்த குதி குதிக்கிறீர்கள்
ஹீ ஹீ ஹீ !!! கருணாநிதியே ஒரு தெலுங்கு.. அவன் "பாப்பான்" ன்னு ஒரு தடவ சொன்னா ஆயிரம் தடவன் "நான் ஒரு தெலுங்கு...எனக்கு தமிழ் பிடிக்காது...தமிழர் பிடிக்காது" ன்னு சொல்லரா மாறி..."எனக்கு இந்தி தெலுங்கு காரர் தான் பிடிக்கும்...".
அதான் :
www.tn.gov.in/bcmbcmw/bclist.htm OBC பட்டியல்ல ஒரே இந்தி தெலுங்கு காரர்கள்!!!
தமிழ்நாட்டுல தெலுங்கு நடிகர்கள் நிறையப் பேர் போல!!!
Post a Comment