பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, January 20, 2007

கலைஞர் - சாய்பாபா சந்திப்பு - படங்கள்

* 45 ஐந்து நிமிடங்கள் பேசினார்.
* எப்போதும் பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் தான் சாய்பாபாவை போய் சந்திப்பார்கள் ஆனால் இன்று கலைஞரை சந்த்தித்தது பக்த்தர்களிடையே பெரும் வியப்பாக இருக்கிறது என்று சன் டிவிக்கு ஒரே ஆனந்தம்
* அமைச்சர்கள், தயாநிதி மாறன், உடன் இருந்தார்கள்.
( செய்தி சன் டிவி )

* முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி ஆகியோருக்கு சாய்பாபா ஆசி வழங்கினார். அப்போது, தாய் காவியம் புத்தகத்தை சாய்பாபாவுக்கு கருணாநிதி வழங்கினார்.

* சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, சுந்தரம் கோவிலில் சாய்பாபா தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள கட்டடத்தை சுற்றிலும் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர்கள் துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், ரவி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாய் பாபா தங்கியுள்ள இடத்தைச் சுற்றிலும் நூறு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஜெ: எல்லோருக்கும் லிங்கம் எடுத்து தரும் சாய்பாபா ஏன் கலைஞருக்கு தரவில்லை

வைகோ:

ராமதாஸ்:

காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள்:

திருமாவளவன்:

என்ன சொல்லுவார்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். :-)

13 Comments:

We The People said...

ஒரு கோடி கொடுக்கறா மாதிரி இருந்தா கருணாநிதியை 45 நிமிடம் சந்தித்து பேச முடியும் என்று தெரிந்து கொண்டேன்!

பங்காளி... said...

வெறும் செய்தியாக தந்ததைப் போல தெரியவில்லை உங்கள் பங்கு.....அதையும் மீறிய ஏதோ ஒன்றுக்கு ஆசைப்பட்டு கும்மியடிக்க விடுத்த அழைப்பாகவே பார்க்கிறேன்.....

We the People அதற்கு நல்ல அச்சாரம் அமைத்துக்கொடுத்திருக்கிறார்.

நடத்துங்கள்....

IdlyVadai said...

We the people : 200 கோடிக்கு 45 நிமிஷம். ஒரு கோடிக்கு 4.4 நிமிஷம்.

பங்காளி - வெறும் செய்தியில் என்ன சுவாரசியம் இருக்கு :-)

VSK said...

பக்தனுக்கு எது பிடிக்குமோ, வேண்டுமோ, அதைத் தருவதுதானே பகவானின் கடமை!

இவன் அவனிடம், அவன் இவனிடம் என்பதெல்லாம் பாழும் அற்ப மானிடருக்கே!

பகவானுக்கில்லை!

Anonymous said...

//ஜெ: எல்லோருக்கும் லிங்கம் எடுத்து தரும் சாய்பாபா ஏன் கலைஞருக்கு தரவில்லை
//

கருனாநிதி நாத்திகராச்சே!?. அதனால் ஒருவேளை தங்கமாக கொடுத்திருப்பார்.

Anonymous said...

சாய்பாபா செய்த பொது சேவையைப் பாராட்ட முதல்வர் என்ற முறையில் அவர் சந்தித்ததும் பாரட்டுவதும் பண்பாடு காரணமாகத்தான் ஆனால் சதாரணமான முறையில் ஒரு போலிச் சாமியாரை (வாயிலிருந்து லிங்கம் எடுப்பது ) சந்திப்பதும் சந்திக்காமல் இருப்பதும் அவரது உரிமை அதை விமரிசனம் செய்வது எந்த வகையில் நியாயம் என்று தெரியவில்லை. அதே போல் குருவாயூர் கோவிலுகு யானை வழங்குவதும் ஜோதிடரைப் பார்பதும் ஜயலலிடதாவின் தனிப்பட்ட உரிமையாகும்.

வெற்றி said...

/* We The People said...
ஒரு கோடி கொடுக்கறா மாதிரி இருந்தா கருணாநிதியை 45 நிமிடம் சந்தித்து பேச முடியும் என்று தெரிந்து கொண்டேன்! */
சாய்பாபா என்ற மனிதரையும் பல இலட்சங்கள் கொடுத்தால் AC பூட்டிய தனியறையில் சந்திக்கலாம்.

BadNewsIndia said...

வீடியோல சவுண்ட் வரலியே.

யாராவது யார் கால்லயாவது விழுந்தாங்களா சந்திப்புல?

சாய் பாபா, ஆயிரம் controversy இருந்தாலும் (லிங்கம் எடுப்பது, விபூதி கொடுப்பது, etc..) இவ்வளவு பெரிய அமைப்பை தொய்வில்லாமல் நடத்தி வருகிறார். அவரின் பக்தர்களிடம் இருந்து வசூலாகும் பணம் பல நல்ல வழிகளுக்கு செலவு செய்யப்படுவது சிறப்பு.
கொள்ளை அடித்து பெட்டியில் பூட்டும் அரசியல்வாந்திகளுக்கு, சில சாமியார்கள் எவ்வளவோ தேவலாம்.

அவர் புண்ணியத்துல தண்ணி வந்தா சரி. 200 கோடிக்கு thanks!

IdlyVadai said...

BadnewsIndia,
ஆமாம் வீடியோவில் ஒலி இல்லை. என்னிடம் இருக்கும் கேமரா அவ்வளவுதான் :-(

வெற்றி said...

/*
BadNewsIndia said...
அவரின் பக்தர்களிடம் இருந்து வசூலாகும் பணம் பல நல்ல வழிகளுக்கு செலவு செய்யப்படுவது சிறப்பு.
கொள்ளை அடித்து பெட்டியில் பூட்டும் அரசியல்வாந்திகளுக்கு, சில சாமியார்கள் எவ்வளவோ தேவலாம்.*/

இதே பணத்தை[அவரின் பத்தர்களின்] வைத்து அவரது மாளிகையில் நடக்கும் கிரிமினல் மற்றும் மன்மதலீலைகள் போன்ற குற்றங்களை மூடி மறைப்பதற்கும் அந்த மனிதர் பாவிப்பதாக நான் பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன்.

அறிய வேண்டும் எனும் ஓர் ஆர்வத்தில்தான் கேட்கிறேன், சும்மா எதிர்வினைக்காக அல்ல. இப் பணத்தை வைத்து இந்த மனிதர் வேறு ஏதாவது முதலீடுகள் , வியாபாரங்களும் செய்கிறாரா?

வெற்றி said...

/* அவர் தங்கியுள்ள கட்டடத்தை சுற்றிலும் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர்கள் துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், ரவி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாய் பாபா தங்கியுள்ள இடத்தைச் சுற்றிலும் நூறு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். */

அடடே, அவதாரபுருஷருக்கு இவ்வளவு பாதுகாப்பா? லிங்கம், திருநீறு என்பவற்றைக் கையிலிருந்து எடுக்கும் இந்த அவதாரத்திற்குச் சாதாரண மனிதர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாக்க முடியவில்லையா? அட, என்ன விந்தையடா சாமி!

புத்தபிரான் அரச வாழ்வே வேண்டாம் என உதறித் தள்ளி விட்டு வெறும் மரத்தின் கீழ் இருந்து மக்களுக்குச் சேவையாற்றினார்.

யேசுபிரான் காடுகள், மேடுகள் எல்லாம் கல்லிலும் புல்லிலும் நடந்து மக்களுக்குச் சேவைசெய்தார்.

எமது சைவ சமய நாயன்மார்கள் எல்லாம் திருத்தலங்களுக்கு கால் நடையாகச் சென்று இறைவன் அருள் பெற்று மக்களுக்குச் சேவை செய்தனர்.

ஆனால், இவருக்குத் தான் தங்குவதற்கு மாளிகை. கை கால் பிடித்து விட கட்டிளம் பெண்கள். கொடுத்து வைச்ச பிறவி. அனுபவி ராசா அனுபவி.

அது சரி ஐயா, இவரை வழிபடுபவர்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என விளிப்பது? சாயிசம்?

Anonymous said...

//ஆனால், இவருக்குத் தான் தங்குவதற்கு மாளிகை. கை கால் பிடித்து விட கட்டிளம் பெண்கள். கொடுத்து வைச்ச பிறவி. அனுபவி ராசா அனுபவி.//

In continuation ..Look at the chair that Sai Baba is sitting...anyone has information, please share with us...

IdlyVadai said...

Anony -
"பொதுப்பணித் துறை அமைச்சர் துரைமுருகன் மற்றும் இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் வணங்கி வரவேற்றனர். கார் கதவை திறந்ததும் சாய்பாபாவில் கையில் துரைமுருகன் பூச்செண்டு கொடுத்தார்.

அதைத் தொடர்ந்து மற்றொரு காரில் இருந்து குஷன் வைக்கப்பட்ட சிகப்பு நிற சக்கர நாற்காலி கொண்டு வரப்பட்டது. அதில் உதவியாளரின் உதவியுடன் சாய்பாபா ஏறி அமர்ந்தார். பின்னர் சக்கர நாற்காலியை 2 உதவியாளர் தள்ளிக் கொண்டு வாசலுக்கு வந்தனர். வரும் வழியில் சாய்பாபாவை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை மந்திரி தயாநிதிமாறன் வணங்கி வரவேற்றார்"