பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, January 04, 2007

போட்டுத்தாக்கு

சில விஷயங்களில் கருணாநிதி மீதும் எனக்கு வருத்தம் தான் ஏற்படுகிறது. "என்கிட்டே 30 கோடி இருந்ததுன்னா வைகோவையே வாங்கியிருப்பேன்'னு சொல்றார்; 30 கோடி கொடுத்து வாங்குகிற அளவுக்கு வைகோ என்ன பெரிய ஆளா? இப்படித்தான் காமெடி பண் றதா நினைச்சுக்கிட்டுக் கருணாநிதியும் சிலரைத் தூக்கி விட்டுடறாரு. அதுமட்டுமல்ல, தொடர்ந்து தி.மு. க.,வுக்கு எதிராக குற்றமிழைத்துக் கொண்டிருக்கும் வைகோவை எப்படியாவது மன்னிச்சுடுறாரு தலைவர். அதுலயும் எனக்கு வருத்தம் தான் - தி.மு.க., பேச்சாளர் வெற்றி கொண்டான்
( அப்பா ஒரு மாறுதலுக்கு ஆபாசமா பேசலை)

1953_ல், ராஜாஜி முதல்வராக இருந்தபோது, உருவ வணக்க தத்துவத்தை எதிர்த்து, பெரியார் போராட்டம் நடத்தினார். அப்போது பிள்ளையாரை அவரே விலைக்கு வாங்கி, அதையே உடைத்தார். கோயில்களிலோ, மரத்தடி, குளத்தடியில் உள்ள பிள்ளையாரையோ எந்த தி.க.காரர்களும் உடைக்கவில்லை. பெரியாரின் ஒழுக்கம், கட்டுப்பாட்டை நாங்கள் இன்றும் பின்பற்றுபவர்கள். - வீரமணி குமுதம் பேட்டியில்
( ஆ! என்ன ஒரு பகுத்த அறிவு ! )

முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழக அரசு பொன்னான வாய்ப்பை தவற விட்டு விட்டது - ஜெயலலிதா
அரிய வாய்ப்பை நழுவவிட்டது ஜெயலலிதா தான். - கலைஞர்
(யார் தவற விட்டாலும் பாதிப்பு தமிழகத்துக்குத்தான் )

வைகோ ஒரு துரோகி. கவர்ச்சி நடிகையைப் போல அரசியலில் கவர்ச்சி காட்டி ஏமாற்றியவர். அவரது ஏமாற்று வேலைகளை, தொடர்ந்து அம்பலப்படுத்துவேன் - செஞ்சி ராமச்சந்திரன் ( நீங்க திராவிட கட்சிதான் நாங்க நம்பிட்டோம்!)

ஜெயலலிதா பேசிய பேச்சுக்கு மான, ரோசமுள்ள எவரும் வரமாட்டார்கள். தேர்தல் காலத்தில் சோனியாவைப் பற்றி பேசிய பேச்சுக்களை மறக்க முடியுமா? ( ராமதாஸ் என்ன சொல்கிறார் )

4 Comments:

சிநேகிதன் said...

//உருவ வணக்க தத்துவத்தை எதிர்த்து, பெரியார் போராட்டம் நடத்தினார். அப்போது பிள்ளையாரை அவரே விலைக்கு வாங்கி, அதையே உடைத்தார். //

அப்புறம் எதற்கு பெரியாருக்கு முக்குக்கு முக்கு சிலை வைச்சு அதுக்கு மாலை வேறு போடுறாங்க.

தங்களுடைய மூதாதையர் போட்டோவுக்கெல்லாம் மரியாதை செய்யுறாங்க. அவையேல்லாம் வெறும் பேப்பர் தானே?

Anonymous said...

//உருவ வணக்க தத்துவத்தை எதிர்த்து, பெரியார் போராட்டம் நடத்தினார். அப்போது பிள்ளையாரை அவரே விலைக்கு வாங்கி, அதையே உடைத்தார். //

அப்போ துட்டு குடுத்து பெரியார் சிலைய வாங்கி யார் வேணுமுனாலும் உடைக்கலாமா?..

சிநேகிதன் said...

//அப்போ துட்டு குடுத்து பெரியார் சிலைய வாங்கி யார் வேணுமுனாலும் உடைக்கலாமா?..//

ஆத்திகர்களின் நம்பிக்கையான தும்பிக்கையானை நாத்திகர்கள் துட்டு கொடுத்து உடைக்கும்போது, நாத்திகர்களின் நம்பிக்கையான பெரியார் சிலையை ஆத்திகர்கள் விலை கொடுத்து வாங்கி உடைப்பதில் எந்த தவறும் இல்லை.

ஆனால் அப்படி செய்வது பண்பு அல்ல என்று இவர்களுக்கு தெரியும், ஆனால் பகுத்தறிவாளர்களுக்கு இது புரியுமா?

Anonymous said...

என்னய்யா நீங்க (சினேகிதன் & அனானி),

பகுத்தறிவு என்பதன் பொருள் தெரியாதா?....தமிழகத்தில் கழங்கள் வந்தபின் அந்தவார்த்தைக்கு அர்த்தம் வேற...அதாவது பகுத்தறிவு என்பது பார்பனீய எதிர்ப்பு, இந்து துவேஷம், மஞ்சள் துண்டு மகிமை, இதெல்லாம் தான்....இதுக்கு மேல ஒண்ணு இருக்கு, அதாகப்பட்டது, ஆட்சில இருக்கிற கட்சித்தலைவர்-முதல்வருக்கு பட்டங்கள் (சமுகநீதி காத்த வீராங்கனை, சமத்துவ பெரியார்) தந்து கட்சி வளர்ச்சி நிதி, மற்றும் பல உதவிகள் பெறுவது...இப்படி உலகில் வாழும் உயிரினங்களுக்கு தமிழகப் பெயர்தான் பகுத்தறிவாளர்....