பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, January 22, 2007

நோ கமெண்ட்ஸ் - 2

சென்னையில் பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில்

தயாநிதிமாறன் :
அருள்மிகு பாபா முதல்-அமைச்சரின் வீட்டுக்கு நேற்று வந்த போது எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது, அவருக்கு மோதிரம் கொடுத்து விட்டீர்கள் எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார்.

உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்கு கொடுத்து விட்டீர்கள் கலைஞருக்கு கொடுங்கள் என்று கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.

துரைமுருகன் :
சாய் பாபா எதையும் முன் கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் என்ற பெருமையை நான் நேற்று தலைவர் வீட்டில் பார்த்தேன்.

பாபாவின் ஆன்மீக சக்தியால் அவர் எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். இதைப்பார்த்து வியந்தோம். எங்களுக்கு கொடுத்தது போல், முதல்-அமைச்சருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுக்க வில்லையே என்று நினைத்தேன்.

அப்போது தான், கலைஞர் கையில் அண்ணா அணிவித்த மோதிரம் உள்ளது. அண்ணா அணிவித்த மோதிரத்தை அணிந்துள்ள கை விரல் வேறு எந்த மோதிரத்தையும் ஏற்காது என்பதை முன் கூட்டியே அறியும் சிந்தனை பாபாவிடம் இருப்பதை உணர்ந்தேன்.

பகுத்தறிவு ?

15 Comments:

Anonymous said...

அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.

Perhaps this is what Anna called
Ethiyum Thangum Ithayam.

Anonymous said...

nocommectsன்னு சொல்லிட்டு comment baxஐ திறந்து வைக்ககூடாது.

dondu(#11168674346665545885) said...

"எங்களுக்கு கொடுத்து விட்டீர்கள் கலைஞருக்கு கொடுங்கள் என்று கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்."

எப்படி? பரிதி இளம்வழுதிக்கு ஒரு சமயம் (1996) மந்திரி பதவி கொடுக்காது இதயத்தில் இடம் அளித்தாரே கருணாநிதி, அம்மாதிரியா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Hariharan # 03985177737685368452 said...

பகுத்தறிவு இல்லைன்னா சுயமரியாதைன்னும் வச்சிக்கலாம். மானமிகு கி.வீரமணிக்கு ஒரு மோதிரம் வாங்கித்தந்திருக்கலாமே துரைமுருகன்.

அதுசரி! வீரமணியால் துரைமுருகனுக்கு நேரடிப் பலனேதுமில்லை மற்றும் வீரமணி துரைமுருகனின் சாதியும் இல்லையா... அது சரி இது சமூகநீதி!!

Hariharan # 03985177737685368452 said...

பகுத்தறிவு இல்லைன்னா சுயமரியாதைன்னும் வச்சிக்கலாம். மானமிகு கி.வீரமணிக்கு ஒரு மோதிரம் வாங்கித்தந்திருக்கலாமே துரைமுருகன்.

அதுசரி! வீரமணியால் துரைமுருகனுக்கு நேரடிப் பலனேதுமில்லை மற்றும் வீரமணி துரைமுருகனின் சாதியும் இல்லையா... அது சரி இது சமூகநீதி!!

- யெஸ்.பாலபாரதி said...

அட்றா..அட்றா...அட்றா..

Anonymous said...

நகைச்சுவை என்ற லேபிள் நக்கல்தானே ?

சென்ஷி said...

பகுத்தறி வெனப்படுவது யாதெனின் பழசை விரும்பாத மனம்

வெங்கட்ராமன் said...

அப்படியே பாபா கையால திருநீரு வரவைத்து, தி.மு.க காரர்கள் பூசிக்கொள்ளும் படி செய்யலாம்.

இந்த பக்கம் பெரியார் சிலை திறப்பு, வீரமனியுடன் சவகாசம்.

அந்த பக்கம் பாபா கொடுத்த மோதிரத்த போட்டி போட்டு வாங்குற பேரனுக. . . . .

கலிகாலம் டா சாமி. . . . . . .

Sunny said...

ha ha... very nice one...

Sunny said...

ha ha.... they never change at all

Anonymous said...

LOL! Ivanga ellam pagutharivu kaavalargal. Ennai Ketta, Kadavulai nambuvan muttalna , ivangalai namburavan vadikattina muttal :-).

Anonymous said...

Absolute FRAUD.
Then why not change the fate of India by giving every poor Indian living on the streets a gold ring...

If he can tell everything in advance, why not Tsunami

BASTARDS. Now doing somekind of business together !!!

Anonymous said...

இவங்க வேலையே இதுதானே, அவர்களுக்கு வேண்டும்போது மூதறிஞர் என்பார்கள் இல்லையென்றால் குல்லுக பட்டர் என்பார்கள். ஒரு MLA தீமிதி விழாவில் கலந்து கொண்டால் கட்சியை விட்டு ஒதுக்கி வைப்பார்கள், குடும்பத்தில் ஒருவர் செய்தால் எல்லா கொள்கைகளையும் ஏற்கும் மனது என்பார்கள். ஆதரித்து செய்தி போட்டால் அந்த பத்திரிகையே சொல்லிவிட்டது என்பார்கள் இல்லையென்றால் அவாள் பத்திரிகை என்பார்கள். இந்த இரட்டை வேடதாரிகளுக்கு இன்னும் ஓட்டுப் போடுவோரைப் போன்ற பரிதாபமானோர் யாருமே இல்லை

சீனு said...

//அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார்.//
எப்படி? கலைஞர் கூட்டனி கட்சிகளுக்கு தருவாரே! அப்படியா?