1. விழிப்புணர்வு
நேற்று ரத்ததானம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக பெங்களூரில் பிரமாண்ட ரத்ததான முகாம் நடந்தது.
2. உணர்வு
நேற்று நடந்த முகரம் ஊர்வலத்தில் ஷியா முஸ்லிம் சிறுவர்கள், தங்களை தாங்களே உடலில் காயம் ஏற்படுத்திக் ரத்தம் வழிந்து கொண்டு நடந்து சென்ற காட்சி
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Wednesday, January 31, 2007
ரத்ததானம் - உணர்வு - விழிப்புணர்வு
Posted by IdlyVadai at 1/31/2007 12:20:00 PM 2 comments
Labels: செய்திகள்
துக்ளக் - 37 - 2
Posted by IdlyVadai at 1/31/2007 11:50:00 AM 2 comments
Labels: பத்திரிக்கை
Tuesday, January 30, 2007
விஜயகாந்த் அம்மா அரசியல்
வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினால் அதை சட்ட ரீதியாக எதிர்கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனமாக கொடும்பாவியை எரிப்பது, வன்முறையில் ஈடுபடுவது ஆகியவை தவறான முன் உதாரணமாகும். "அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடைபிடிப்பான்'' என்பதைப் போல நடந்து கொள்வது கடுமையான கண்டனத்திற்குரியது. இப்போதாவது அரசியலில் "வானம்'' யார் என்பதையும், வெறும் "கைக்குட்டைகள்'' யார் என்பதையும் புதிய "திடீர் அரசியல்வாதிகள்'' தெரிந்து கொண்டால் அவர்களுக்கு நல்லது.- ஜெயலலிதா அறிக்கை
‘சென்னையின் 99 வார்டுகளுக்கான மறு தேர்தலில் நாங்கள் கலந்து கொள்ள மாட்டோம் என்று ஜெய லலிதா அறிவித்திருக்கிறார். ‘வன்முறைக்குக் காரணமான வர்களான டி.ஜி.பி., தேர்தல் கமிஷனர், போலீஸ் கமிஷனர் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்படும் வரை உள் ளாட்சி மன்ற தேர்தலில் கலந்துகொள்ள மாட்டோம்...’ என்பதுதான் அந்த அறிக்கையின் சாராம்சம். இப்படி யொரு அறிக்கை வந்திருப்பதன் பின்னணி குறித்து விசாரித் தால், விஜயகாந்தை கைகாட்டுகிறார்கள் அ.தி.மு.க-வினர். இப்போதிருக்கும் நிலையில் தேர்தல் நடத்தினால், சென்னையின் பல வார்டுகளில் விஜயகாந்த் கட்சி இரண்டாமிடத்துக்கு வந்துவிடுமாம். அதாவது, அ.தி.மு.க. மூன்றாமிடத்துக்குத் தள்ளப்பட்டுவிடுமாம். அப்படி யொரு இக்கட்டை தெரிந்துகொண்ட பின்னால்தான் சாமர்த்தியமாக ‘தேர்தலைப் புறக்கணிக்கிறோம்’ என்று சொல்லி, ஒதுங்கிக்கொள்ள நினைக்கிறார்களாம் அ.தி.மு.க-வினர்.’’
- ஜூவி செய்தி
Posted by IdlyVadai at 1/30/2007 01:39:00 PM 3 comments
Labels: அரசியல்
' இட்லியால்' ரணகளமான கல்யாண வீடு!
கடலூரில் கல்யாண விருந்தில் இட்லிக்குப் பதில் பொங்கல் பரிமாறப்பட்டதால், பெரும் ரகளை ஏற்பட்டு, அடிதடியில் முடிந்தது. ( செய்தி உதவி: தட்ஸ் தமிழ் ). விவரமான செய்தி கீழே...
கடலூர் அருகே உள்ள நத்தப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் உத்திராடன். இவரது மகன் முத்துலிங்கத்திற்கும், பண்ருட்டி அருகே உள்ள கரும்பூரைச் சேர்ந்த பத்மநாபன் மகள் கஸ்தூரிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம் கடலூர் மஞ்சக்குப்பத்தில் உள்ள கல்யாண மண்டபத்தில் நடைபெற்றது. இதையொட்டி இரு வீட்டாரின் உறவினர்கள், நண்பர்கள் மண்டபத்தில் குழுமியிருந்தனர்.
முத்துலிங்கம், கஸ்தூரியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு கல்யாண விருந்து தொடங்கியது. அப்போது இட்லி, பொங்கல், வடை ஆகியவை ப>மாறப்பட்டது.
கூட்டம் அதிகமாக இருந்ததால் இட்லி, வடை ஆகியவை காலியாகி விட்டன. முதல் பந்திகளிலேயே மணமகனின் வீட்டார் ஆக்கிரமித்து எல்லாவற்றையும் காலி செய்து விட்டனர் போலும். எனவே பின்னால் சாப்பிட வந்த மணமகள் வீட்டாருக்கு வெறும் பொங்கல்தான் கிடைத்தது.
இதனால் அவர்கள் கோபமடைந்தனர். பெண் வீட்டுக்காரர் ஒருவர் எனக்கு கண்டிப்பாக இட்லிதான் வேண்டும் என்று அடம் பிடித்துள்ளார். ஆனால் இட்லி இல்லை, பொங்கல்தான் இருக்கிறது. சாப்பிடுங்கள் என்று கூறியுள்ளனர்.
இதையடுத்து மாப்பிள்ளை வீட்டாருக்கும், பெண் வீட்டாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சாப்பாட்டு அறையிலேயே அடித்து உருண்டனர்.
இருக்கைகளை தூக்கி வீசியும், ஒருவரை ஒருவர் தாக்கியும், சட்டைகளை கிழித்தும், வேட்டிகளை உருவியும் சண்டை களை கட்டியது. இதனால் மண்டபமே களேபரமாக இருந்தது. திருமணத்திற்கு வந்தவர்கள் மண்டபத்தை விட்டு வெளியே ஓடினர். இதை பொதுமக்கள் திகைத்துப் போய் வேடிக்கை பார்த்தனர்.
இந்த சண்டையில் மாப்பிள்ளை வீட்டாருக்கே அதிகமான அடி விழுந்தது. ஆறுமுகம் என்பவர் உள்பட 4 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது.
பெண் வீட்டாரின் ஆவேச தாக்குதலால் பயந்து போன மாப்பிள்ளை முத்துலிங்கம் கடலூர் முதுநகர் போலீஸில் புகார் கொடுத்தார். மாப்பிள்ளை வீட்டாரை, பெண் வீட்டார் அடித்த வேகத்தைப் பார்க்கும்போது எனது வாழ்க்கை எப்படி இருக்குமோ என பயமாக இருக்கிறது என புகார் கொடுத்தார்.
இதையடுத்து பெண் வீட்டாரை காவல் நிலையத்திற்கு அழைத்த போலீஸார் அவர்களை மாப்பிள்ளை வீட்டாருடன் சமாதானம் பேசி இரு தரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Posted by IdlyVadai at 1/30/2007 01:07:00 PM 9 comments
Labels: செய்திகள்
Thursday, January 25, 2007
கடவுள் நம்பிக்கை - 93%
ஆங்கில பத்திரிகையும், தனியார் டெலிவிஷனும் இணைந்து சி.எஸ்.டி.எஸ். அமைப்பை வைத்து மத நம்பிக்கை குறித்து வைத்து ஆய்வு செய்தது. மத நம் பிக்கை, மதங்களின் காட் டும் செயல்பாடு குறித்து 7670 பேரிடம் ஆய்வு செய்யப்பட் டது.
அதன்படி 93 சதவீதம் பேருக்கு கடவுள் நம்பிக்கை உள்ளது தெரிய வந்தது. படித்தவர்கள் மத்தியிலும், பெண்களிடமும் வயதான வர்களிடம் கடவுள் நம்பிக்கை அதிகமாக உள்ளது.
கிராமபுற பெண்களை விட நகர்புற பெண்கள் தான் அதிக நம்பிக்கையில் உள்ளனர். கோவில், மசூதி, சர்ச் ஆகிய வற்றுக்கு வழக்கமாக 64 சத வீதம் பேர் செல்கிறார்கள். தினசரி பிரார்த்தனையில் 53 சதவீதம் பேர் கலந்து கொள் கிறார்கள். இதில் படித்த வர்கள் தான் அதிகம்.
பேய், பிசாசுகள் மீது 46 சதவீதம் பேருக்கு நம் பிக்கை உள்ளது. 24 சத வீதம் பேர் ஜோசியம் மீது ஆர்வமாய் உள்ளனர். ஒரு மத விழாவில் அடுத்த மதத்தை சேர்ந்தவர்களில் பங் கேற்பதில் 68 சதவீதம் பேர் விருப்பமாக உள்ளனர்.
மேலும் விபரங்களுக்கு :
Urban Indians more religious:
What makes Indians keep the faith
Posted by IdlyVadai at 1/25/2007 02:39:00 PM 10 comments
Labels: செய்திகள்
Wednesday, January 24, 2007
சின்ன பிள்ளை காலில் விழலாம்
மதுரை அழகர் கோவிலை சேர்ந்தவர் சின்ன பிள்ளை (வயது 63). கிராமபுற பெண்களின் மேம்பாட்டிற்காக இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு களஞ்சியம் என்ற இயக்கத்தை தொடங்கினார்.
இந்த இயக்கத்தில் முதலில் 10 பேர் இருந்தனர். தற்போது 9 மாநிலங்களில் 4 லட்சம் பேர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு மூலம் கிராமபுற பெண்கள் பெரிதும் பயன் பெறுகிறார்கள்.
இவரது சமூக சேவையை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பாராட்டி அவர் காலில் விழுந்து ஆசி பெற்றார். ஜனாதிபதி அப்துல்கலாம் இவரது சமூக சேவையை பாராட்டி இருந்தார். சமீபத்தில் அவருக்கு சிறந்த சமூக சேவகத்துக்கான விருதை பொதிகை டி.வி. வழங்கியது.
கிராமப்புற வளர்ச்சி பற்றிய ஆலோசனைகளை வழங்குவதற்காக சின்னப் பிள்ளை ஆப்பிரிக்கா, ஆலந்து, மெக்சிகோ நாடுகளுக்கு செல்கிறார். இந்தியாவில் கிராமப்புற வளர்ச்சியை எவ்வாறு செயல்படுத்தியது என்பதை அவர் விளக்குகிறார். ஆப்பிரிக்க கண்டத்தில் தான்சானியா, எத்தியோப்பியாவுக்கு செல்கிறார்.
இவர் நம் முதலமைச்சர் ஆனால் எப்படி இருக்கும் ?
இட்லிவடையின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள
Posted by IdlyVadai at 1/24/2007 05:05:00 PM 28 comments
Labels: செய்திகள்
மோசமான நகரம் சென்னை !
Posted by IdlyVadai at 1/24/2007 12:13:00 PM 4 comments
Labels: சமுதாயம்
ரெய்டுக்கு பிறகு விஜயகாந்த் பேட்டி
வீடு, கட்சி அலுவலகங்களில் வருமானவரித்துறை சோதனை குறித்து தேசிய முற்போக்கு திராவிடர் கழகத்தின் தலைவர் விஜயகாந்த் சோதனை முடிந்தபிறகு வீட்டில் நிருபர்களிடம் கூறியது:
எனது வீடு மட்டுமல்ல கல்லூரி, கட்சி அலுவலகம், உறவினர் வீடுகளிலும் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி உள்ளனர். இது போன்ற எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படமாட்டேன். இது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.
கருணாநிதிக்கு நான் பொன்விழா நடத்தினேன். அப்போது கருணாநிதி என்னிடம் தம்பி சிறப்பாக விழா நடத்தி உள்ளாய், இதற்கு உங்களுக்கு என்ன கைமாறு பண்ணப்போகிறேன் என்று தெரியவில்லையே என்றார். இந்த சோதனை மூலமாக கைமாறு செய்துள்ளார்.
திருமணமண்டப விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, மத்திய மந்திரி டி.ஆர்.பாலுவுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளது. அதை திசைதிருப்ப இப்படி செய்கிறார்கள். இந்த வருமானவரி சோதனை கோடிக்கணக்கில் ஆவணங்கள் சிக்கியதாக பொய் செய்தி பரப்பி உள்ளார்கள். அதிகாரிகள் சோதனையில் ஒன்றும் கிடைக்கவில்லை. ஒன்றும் கிடைக்காத போதும் அதிகாரிகள் போனில் யாரிடமோ அடிக்கடி பேசினார்கள்.
வருமானவரி சரியாக கட்டியதால் எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படமாட்டேன். இதனால் கட்சியை விட்டு விட்டு ஓடிவிட மாட்டேன். என் சொத்தே அழிந்தாலும் கட்சியை விட்டுவிட்டு ஓடமாட்டேன். மக்களை நான் தெய்வமாக நினைக்கிறேன். அவர்கள் நடப்பதை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஊழல் செய்த அமைச்சர்கள் வீட்டில் இப்படி சோதனை நடத்தினார்களா? ஊழல் செய்து சொத்து சேர்த்தால் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் உழைத்து சம்பாதித்தால் அரசியல் பழிவாங்க வருமானவரி சோதனை நடத்துகிறார்கள்.
சட்டசபைக்கு இன்று (நேற்று) போவதாக இருந்தேன். இதன் மூலம் தடுத்துவிட்டார்கள். சட்டசபைக்கு செல்லாமல் தடுப்பது உரிமைமீறல் பிரச்சினை ஆகும். இது குறித்து சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சினை எழுப்புவேன்.
Posted by IdlyVadai at 1/24/2007 08:14:00 AM 11 comments
Labels: பேட்டி
Tuesday, January 23, 2007
அரைத்த மாவையே அரைத்தால் ?
தமிழக சட்டசபையில் ஆளுநர் ஆற்றிய உரை குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள கருத்து: அரைத்த மாவையே அரைத்துள்ளனர். இட்லி மாவை மேலும் மேலும் அரைத்தால் என்ன ஆகும் என்பது பெண்களுக்குத் தெரியும். இட்லி வார்க்கவே முடியாது. துணியுடன் ஒட்டிக் கொள்ளும். அதுபோலத்தான் ஆளுநர் உரையிலும் அரைத்த மாவையே அரைத்துள்ளனர் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இட்லியை பற்றிய இந்த உண்ணத தகவல் உண்மையா என்று தெரிந்துக் கொள்ள கூகிள் ஆண்டவரை நாடினேன். தேடும் போது இந்த வலைப்பதிவில் தாளிக்கும் சத்தம் கேட்டு போனேன். இதில் இட்லி எப்படி செய்ய வேண்டும் என்று இருக்கிறது ஆனால் "அரைத்த மாவையே அரைத்தால்.." என்னவாகும் மட்டும் மிஸ்சிங். [ இந்த வலைப்பதிவு பற்றி சில தகவல்கள் - தமிழ்மணம், தேன்கூடு ஆகியவற்றில் இது இல்லை, ஆனால் பாபா லிங்க் கொடுத்துள்ளார்( இது நம்ம பாபா சாய்பாபா இல்லை), முன்பு மரத்தடியில் எல்லோரையும் தாளித்த இவர் இப்போது சைலண்டாக மரத்தடி ஆயா போல் இட்லிவிக்க ஆரம்பித்துவிட்டார் ]
சரி அரைத்த மாவையே அரைத்தால் என்னவாகும் என்று வலைப்பதிவு பெண்களிடம் தான் இந்த கேள்வியை கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன், ஆனால் அவர்களும் அரைத்த மாவையே தானே அரைக்கிறார்கள். :-)
Posted by IdlyVadai at 1/23/2007 01:45:00 PM 3 comments
Labels: நகைச்சுவை
அவுட்டா நாட் அவுட்டா - 7 நிமிஷம் இருங்க
அவுட்டா நாட் அவுட்டா என்று தெரிந்துக் கொள்ள 7 நிமிஷம் காத்திருக்க வேண்டும்!.
இந்தியா வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் ஒளிபரப்பு தொடர்பான வழக்கு விசாரணை இன்று டில்லி ஐகோர்ட்டில் நடைபெற்றது. இந்தியா வெஸ்ட் இண்டீஸ் இடையே நடைபெற்று வரும் ஒருநாள் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்பும் உரிமையை நிம்பஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் தனது ஒளிபரப்பை தூர்தர்ஷனுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. வழக்கு விசாரணை முடிவில் 7 நிமிடம் தாமதமாக போட்டியை ஒளிபரப்ப கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
CNN-IBN
NDTV
Posted by IdlyVadai at 1/23/2007 12:58:00 PM 0 comments
Labels: செய்திகள்
FLASH: விஜயகாந்த் வீட்டில் ரெய்டு
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் சென்னை வீடு மற்றும் அவருக்கு சொந்தமானவர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர் . அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் விஜயகாந்த் மட்டுமல்லாது நடிகர் முரளி, பொறியியல் கல்லூரி தலைவர் ஜேப்பியார் வீடு உட்பட 9 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
30 பேர் கொண்ட குழு இன்று அதிகாலை முதல் சோதனைகளில் ஈடுபட்டுள்ளது.
இன்று காலை 8 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரி கள் விஜயகாந்த்தின் வீட் டிலும், அலுவலகத்திலும் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.
வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று சோதனை நடத்தினார்கள். வீட்டில் இருந்தவர்களிடமும் விசா ரணை நடத்தினார்கள்.
இதே போல் சாலி கிராமத் தில் உள்ள விஜயகாந்தின் மைத்துனரும், பட அதிபரு மான சுதீஷ் வீட்டிலும் அலு வலகத்திலும் வருமான வரித் துறை அதிகாரிகள் புகுந்து திடீர் சோதனை நடத்தினார் கள்.
100 அடி ரோட்டில் உள்ள சுதீசுக்கு சொந்தமான `லீ கிளப்' என்ற கேளிக்கை விடுதியிலும் வருமான வரி சோதனை நடந்தது.
ஒவ்வொரு இடத்திலும் வருமான அதிகாரிகள் குழு குழுவாக சென்று ஒரே நேரத்தில் சோதனை நடத்தினார்கள். அப்போது உள்ளே இருந்தவர்கள் வெளி யில் செல்ல அனுமதிக்கப் படவில்லை. சோதனை நடந்த போது வீடு அலுவலகங்கள் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
நடிகர் விஜயகாந்த் கடந்த ஆண்டு அரசியலில் குதித்து தே.மு.தி.க. என்ற கட்சி தொ டங்கினார். அவரது கட்சி சட்டசபை தேர்தலில் போட்டி யிட்டது. இதில் விஜயகாந்த் வெற்றி பெற்று எம்.எல்.ஏ. ஆனார். அவரது கட்சி கணிச மான ஓட்டுக்களை பிரித்தது.
அதன் பிறகு நடந்த உள் ளாட்சி தேர்தலிலும் தே.மு. தி.க. போட்டியிட்டது. முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக விஜயகாந்த் உண்ணாவிரதம் இருந்தார்.
விஜயகாந்துக்கு சொந்த மான திருமண மண்டபம் கோயம்பேட்டில் உள்ளது. மேம் பாலம் கட்டுவதற்காக அவரது கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட உள்ளது. இதை எதிர்த்து அவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த நிலையில் விஜயகாந் தின் வீடு, அலுவலகம், அவ ரது மைத்துனர் வீடு, அலு வலகத்தில் வருமான வரித் துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை புறநகர்ப் பகுதிகளில் உள்ள சில தனி யார் கல்லூரிகளிலும் இன்று வருமான வரி சோதனை நடந்தது. பழைய மகாபலிபுரம் ரோட்டில் ஜேப்பியாருக்கு சொந்தமான சத்யபாமா என்ஜினீயரிங் கல்லூரி உள் ளது. அதே பகுதியில் அருகில் ஜேப்பியார் வீடு இருக்கிறது. அந்த வீடு மற்றும் கல்லூரியில் சோதனை நடந்தது.
திருநின்றவூரில் உள்ள ஜெயா என்ஜினீயரிங் கல்லூரி யிலும் வருமான வரித்துறை யினர் புகுந்து சோதனை நடத்தினார்கள்.
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டையில் புரபஷனல் கொரியர் நிறு வனத்தின் கோவை ஏரியா நிர்வாகி கணேசன் என்பவரது வீடு-அலுவலகம் உள்ளது. அங்கும் வருமான வரி சோதனை நடந்தது. இவர் தே.மு.தி.க. பிரமுகர் ஆவார். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் இங்கு சோதனை மேற்கொண்டார்கள். ( இவர் மிக 'முக்கியமான' நபரின் பினாமி என்று கருதப்படுகிறது. )
தமிழ்நாடு முழுவதும் மொத் தம் 9 இடங்களில் அதிரடி சோதனை நடந்தது. 400க்கும் மேற்பட்ட அதிகாரிகள் 10 குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் சோதனை நடத்தி னார்கள்.
தொடர்ந்து சோதனை நடந்து கொண்டு இருக்கிறது. இதன் முடிவில்தான் எதுவும் சிக்கியதா என்பது தெரிய வரும்.
நேரடி ரிப்போட் இங்கே
Posted by IdlyVadai at 1/23/2007 12:48:00 PM 4 comments
Labels: செய்திகள்
இட்லிவடை கழுகார் சொன்ன தகவல்
சாய்பாபா பக்கத்தில் சில சீடர்களை பார்த்திருப்பீர்கள் சாய்பாபா கூடவே எல்லா இடங்களுக்கும் செல்வார்கள். கலைஞரை சந்திக்க சென்ற போது கூட பார்த்திருப்பீர்கள்.( வெள்ளை குர்த்தா அணிந்தவர்கள்) அவர்களில் ஒருவர் சொன்ன தகவல்
சாய்பாபா கலைஞரை பார்த்துவிட்டு, தயாநிதி மாறன், துறைமுருகன் அவர்களுக்கு மோதிரம் மற்றும் தயாளு அம்மாளுக்கு வீபூதி கொடுத்துவிட்டு செல்லும் போது மஞ்சள் துண்டு அணிந்தவர் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாக தகவல்.
( மேலும் சில தகவல்கள் இருக்கிறது, ஆனால் அதை இங்கு பிரசுரித்தால் சிலருக்கு தர்ம சங்கடமாக இருக்கும் என்று பிரசுரிக்கவில்லை )
பிகு: சாய்பாபா பதிவால் டென்ஷன் ஆகியுள்ள சில பதிவர்களை சாய்பாபா எல்லா நன்மைகளும், ஆசிகளும் அவர்களுக்கு தர வேண்டும் என்று பிராத்தித்துக்கொள்கிறேன்.
Posted by IdlyVadai at 1/23/2007 09:31:00 AM 12 comments
Labels: செய்திகள்
Monday, January 22, 2007
நோ கமெண்ட்ஸ் - 2
சென்னையில் பாபாவுக்கு நடந்த பாராட்டு விழாவில்
தயாநிதிமாறன் :
அருள்மிகு பாபா முதல்-அமைச்சரின் வீட்டுக்கு நேற்று வந்த போது எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். அப்போது, அவருக்கு மோதிரம் கொடுத்து விட்டீர்கள் எனக்கும் ஒரு மோதிரம் தாருங்கள் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டார்.
உடனே அவருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். எங்களுக்கு கொடுத்து விட்டீர்கள் கலைஞருக்கு கொடுங்கள் என்று கேட்டபோது, அவருக்கு என் மனதையே தருகிறேன் என்றார். அவர் மனதில் நானும், என் மனதில் அவரும் இருக்கிறார் என்று பாபா தெரிவித்தார்.
துரைமுருகன் :
சாய் பாபா எதையும் முன் கூட்டியே அறியும் சக்தி படைத்தவர் என்ற பெருமையை நான் நேற்று தலைவர் வீட்டில் பார்த்தேன்.
பாபாவின் ஆன்மீக சக்தியால் அவர் எனக்கு மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். மத்திய மந்திரி தயாநிதி மாறனுக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுத்தார். இதைப்பார்த்து வியந்தோம். எங்களுக்கு கொடுத்தது போல், முதல்-அமைச்சருக்கும் மோதிரம் வரவழைத்துக் கொடுக்க வில்லையே என்று நினைத்தேன்.
அப்போது தான், கலைஞர் கையில் அண்ணா அணிவித்த மோதிரம் உள்ளது. அண்ணா அணிவித்த மோதிரத்தை அணிந்துள்ள கை விரல் வேறு எந்த மோதிரத்தையும் ஏற்காது என்பதை முன் கூட்டியே அறியும் சிந்தனை பாபாவிடம் இருப்பதை உணர்ந்தேன்.
பகுத்தறிவு ?
Posted by IdlyVadai at 1/22/2007 11:14:00 AM 15 comments
Labels: நகைச்சுவை
Sunday, January 21, 2007
போலிகள் ஜாக்கிரதை
* காவிரியும் கொள்ளிடமும் போல மக்களுக்கு பயன்படும் நதிகளை போல நானும், சாய்பாபாவும் ஒன்றுபட்டிருக்கிறோம்.
* பாபா போன்று மக்களுக்கு பாடுபடுபவர்கள் துறவுக்கு மேலானவர்கள்.
* மற்றும் மஞ்சள் துண்டு மகிமை
செய்தியும் படமும் கீழே...
கலைஞர் பேச்சு: தமிழகத்தில் ஏழ்மையை ஒழிப் பதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பாபா போன்றவர்கள் பங்களிக்க தயாராக இருக்கும் பொழுது இன்னும் பல சாதனைகளை இந்த அரசு செய்யும்.
பாபாவினுடைய பல்வேறு சமுதாயப் பணிகளை இங்கே பேசியவர்கள் சுட்டிக்காட்டினார்கள். இந்த விழாவில் எழுதப்பட்டிருக்கும் பொன்மொழி களிலேயே அந்த சாதனைகள் வெளிப்படுகிறது. "சர்வீஸ் டூ மேன் சர்வீஸ் டூ காட்' என்கிற பொன்மொழிக்கேற்ப நாங்கள் ஒன்றாக இணைந்து பணியாற்று கிறோம்.
காவிரியும், கொள்ளிடமும் வேறு வேறு ஆறுகளாக இருக்கலாம். இரண்டிலும் ஓடுவது தண்ணீர் தான். அந்த தண்ணீர் தான் கழனிகளுக்கு செல்கிறது. அந்த கழனியில் விளைவது தான் கதிர்கள். அந்த கதிர்களில் கிடைப்பது தான் நெல்மணி. அந்த நெல்லில் உருவாவது தான் அரிசி. இந்த அரிசிதான் எல்லோருக்கும் உணவாக பயன்படுகிறது.
இப்படி காவிரியும், கொள்ளிடமும் போலத்தான் நானும், பாபாவும் தமிழகத்தில் உயர்வுக்கு பாடுபடுகிறோம். தமிழகத்தை தீபகற்ப பகுதி என்பார்கள். தமிழகம் தண்ணீர் சூழ்ந்த தனித்தீவாக இருக்கிறது.
கேரளா, ஆந்திரா, கர்நாடகா போன்ற அண்டை மாநிலங்களின் தயவு இல்லாவிட்டால் தமிழகத்திற்கு தண்ணீர் கிடைக்காது. தண்ணீர் கிடைக்காமல் மக்கள் கண்ணீர் விட நேரிடும். அந்த கண்ணீரை துடைக்க அரசுக்கு துணையாக பாபா வந்திருக்கிறார். பல பேர் வெளியே பிரச்சாரம் செய்கிறார்கள். இவன் கடவுளை நம்பாதவன். இவன் எப்படி பாபாவை பாராட்டி பேசுவது என்று. கடவுளை நான் ஏற்கிறேனா? இல்லையா? என்பது பிரச்சனை இல்லை. கடவுள் என்னை ஏற்கும் அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா? இல்லையா? என்பது தான் பிரச்சனை.
அப்படி எடுத்து கொண்டால் கடவுள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் என்னை ஏற்பார். பாபா அவர்கள் இலவசமாக கல்வி, மருத்துவ வசதிகளை செய்து வருகிறார்கள். நாமும் இலவசமாக பலருக்கு தந்து கொண்டிருக்கிறோம்.
பாபாவின் பணி; ஆண்டவன் பணி. இங்கு நடப்பதோ ஆள்கின்றவர் பணி. அவருக்கே தெரியாமல் அவரை நான் கவனித்து வருவதை போல, பல ஆண்டுகளாக அவரும் என்னை கவனித்து வந்திருக்கிறார். 8 வருடங்களுக்கும் மேலாக இந்த மஞ்சள் துண்டு பிரச்சனைகளை பலர் கிளப்பினாலும், விடாமல் போட்டிருக்கிறாயே என்றார்.
நான் அதற்கு, புத்தர் கூட மஞ்சள் துண்டை தான் அங்கவஸ்திரமாக அணிந்திருந்தார் என்று கூறி என்னை தொடர்ந்து கவனித்து வந்துள்ளீர்களா? என்று கேட்டதற்கு, ஆமாம் என்றார். நாட்டிலுள்ள வேடதாரிகளை எல்லாம் ஒருபகுதியாக பிரித்து விட்டு இப்படிபட்ட நல்ல உள்ளம் படைத்த துறவு கொண்டோரை நான் தனியாக பிரித்து பார்க்க தவறியதில்லை.
பாபா போன்று மக்களுக்கு பாடுபடுபவர்கள் துறவுக்கு மேலானவர்கள். ஆண்டவனுக்கு ஒப்பானவர்கள். பாபா அப்படிப்பட்டவர். சென்னை மக்களின் தண்ணீர் தேவையை உணர்ந்து தம்மால் இயன்ற உதவிகளை அவர் செய்து வருகிறார். கூவம் நதியை உலக தலைநகரங்களில் ஓடும் அழகுமிகு நதிகள் போல ஆக்க வேண்டும் என்று கேட்டதற்கு, அதற்கு துணையாக இருப்போம் என்று சொல்லியிருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.
பிகு: முன்பு ஒரு MLA குங்கும பொட்டு வைத்துக்கொண்டிருந்ததற்கு கலைஞர் என்ன பேசினார் என்று உங்கள் நினைவுக்கு வந்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. இன்று தயாளு அம்மாள் பாபா காலில் விழுந்து வணங்கினார். முன்பு ஒரு முறை ஹிந்து என்றால் திருடன் என்றார் ஆனால் இன்று திருடனின் தலைவனை வணங்கி பாராட்டு விழா.
யார் போலி பாபாவா ? (பகுத்தறிவு) பக்தனா ? பட்டிமன்றம் நடத்தலாம்.
Posted by IdlyVadai at 1/21/2007 05:30:00 PM 19 comments
Labels: செய்திகள்
நோ கமெண்ட்ஸ்
(சாய்பாபாவின் காலை தொட்டு வணங்கி தயாளு அம்மாள் ஆசி பெற்றார்.)
கலைஞர் பேட்டி கீழே..
கேள்வி:- சாய்பாபாவுடன் என்ன பேசினீர்கள்:
பதில்:- தமிழ் பேசினேன். அவர் நன்றாக தமிழ் பேசுகிறார்.
கேள்வி:- எது குறித்து பேசினீர்கள்?
பதில்:- நான் ஆன்மீகம் பேசவில்லை. அவர் அரசியல் பேசவில்லை.
கேள்வி:- கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக எதாவது பேசினீர்களா?
பதில்:- இந்தத் திட்டத்துக்காக சாய்பாபாவுக்கு நன்றி தெரிவித்தேன். இதுமட்டுமல்ல மேலும் நல்ல பல திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்து இருக்கிறேன்.
Posted by IdlyVadai at 1/21/2007 09:52:00 AM 2 comments
Labels: செய்திகள்
பெரியாருக்கு சிலைகள் - பாலா பதிவின் தொடர்ச்சி
பெரியாருக்கு மேலும் சிலைகள் ! என்ற enRenRum-anbudan.BALA பாலா பதிவை தொடந்து சில செய்திகள்.
முதலில் சிலையை வணங்குவதை எதிர்த்தவர்கள், ஊருக்கு ஊர் சிலை வைக்கின்றனர். பெரியாருக்கு வெண்கலச் சிலைகளை அமைக்கப் போவதாக வீரமணி கூறியுள்ளது, ஒரு நல்ல பரிணாம வளர்ச்சி. வாழ் நாள் முழுவதும் சிலைக்கு எதிரியாக இருந்தவர் பெரியார். இன்று அவர் பெயரைச் சொல்லி பணம் வசூல் செய்து சிலை வைப்பது, அவருடைய கருத்துக்கு விரோதமானது. - ராமகோபாலன்.
சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும் - அசோகமித்திரன் ( தீராநதி பேட்டி )
Posted by IdlyVadai at 1/21/2007 08:16:00 AM 2 comments
Labels: செய்திகள்
Saturday, January 20, 2007
கலைஞர் - சாய்பாபா சந்திப்பு - படங்கள்
* 45 ஐந்து நிமிடங்கள் பேசினார்.
* எப்போதும் பிரதமர், ஜனாதிபதி போன்றவர்கள் தான் சாய்பாபாவை போய் சந்திப்பார்கள் ஆனால் இன்று கலைஞரை சந்த்தித்தது பக்த்தர்களிடையே பெரும் வியப்பாக இருக்கிறது என்று சன் டிவிக்கு ஒரே ஆனந்தம்
* அமைச்சர்கள், தயாநிதி மாறன், உடன் இருந்தார்கள்.
( செய்தி சன் டிவி )
* முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு, மகள் செல்வி ஆகியோருக்கு சாய்பாபா ஆசி வழங்கினார். அப்போது, தாய் காவியம் புத்தகத்தை சாய்பாபாவுக்கு கருணாநிதி வழங்கினார்.
* சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள, சுந்தரம் கோவிலில் சாய்பாபா தங்கியுள்ளார். அவர் தங்கியுள்ள கட்டடத்தை சுற்றிலும் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட், இணை கமிஷனர்கள் துரைராஜ், சந்தீப்ராய் ரத்தோர், ரவி ஆகியோர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சாய் பாபா தங்கியுள்ள இடத்தைச் சுற்றிலும் நூறு போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
ஜெ: எல்லோருக்கும் லிங்கம் எடுத்து தரும் சாய்பாபா ஏன் கலைஞருக்கு தரவில்லை
வைகோ:
ராமதாஸ்:
காங்கிரஸ் கோஷ்டி தலைவர்கள்:
திருமாவளவன்:
என்ன சொல்லுவார்கள் என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம். :-)
Posted by IdlyVadai at 1/20/2007 08:47:00 PM 13 comments
Labels: செய்திகள்
அசோகமித்திரன் நேர்காணல்
குமுதம் தீராநதி நேர்காணல்
"சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க முடியாம இருக்கிறார்கள் என்ற ரீதியில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.. மறுத்திடாமல் பேசுங்கள்?"
தமிழ் இலக்கிய வெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இதை இந்த நேர்காணலும் உணர்த்தவே செய்யும்.
தீராநதி :1972_ல் உங்களின் ‘வாழ்விலே ஒரு முறை’ வெளியானது. இதையொட்டி ‘காலமும் ஐந்து குழந்தைகளும்...’ 1988_ல் மீண்டும் அது மறுபதிப்பு கண்டது. அது பரவலாக விற்பனைக்குப் போகும் முன்னதாக எலிக்கும், கறையானுக்கும் உணவாகிப் போனதாக ஒருமுறை வருந்தி எழுதியிருந்தீர்கள். ஆனால், இன்று தமிழ் பதிப்பகங்கள் சர்வதேச தரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இம்மாற்றத்தை எப்படி உணருகிறீர்கள்?
அசோகமித்திரன்: முதல் தொகுதி ‘வாழ்விலே ஒரு முறை’ இருக்கே அது ரொம்பக் கொறச்சலா 500 பிரதிகள் தான் போட்டோம். முன் கூட்டியே முன்பதிவு செஞ்சியிருந்தவங்களுக்கு அதைக் கொடுத்துட்டோம். பெரிய பதிப்புன்னு சொல்ல முடியாது இதை. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ நூல் அதுதான் முறையான பதிப்பாளர் கலைஞன் வெளியிட்டார். கலைஞன் மீது அதுக்காக இன்றைக்கும் நான் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். 1974_ல் வெளியிட்டார். அப்ப என்ன ஆயிடுத்துன்னா பதிப்பகம் சின்ன எடமா இருந்ததால எலியும் கறையானும் அரிச்சிடுது. அப்ப அவர் மாடிமேல இருந்தார். மழை வேற பெய்ஞ்சு தண்ணில நெனைஞ்சு பாதிக்கு மேல பாழாப்போயிடுத்து. அவரு அன்போடயும் ஆர்வத்தோடயும் வெளியிட்டார். நான் ரொம்ப விற்கக்கூடிய எழுத்தாளன் இல்லன்னு அவருக்குத் தெரியும். தெரிஞ்சும் தைரியமா வெளியிட்டார் .அதுக்காகத்தான் என்னோட வருத்தமெல்லாம். நம்மலால ஒருத்தர் நஷ்டமாயிட்டாரேன்னு வருத்தம். இன்னைக்கு எவ்வளவோ மாறிடுத்து. சுயமா வெளியிட்டுக்குறாங்க. இப்படி சுயமா வெளியிட்டுக்குறதுல சங்கடங்கள் என்னான்னா, அவங்க வந்து இதை விமர்சனப் பூர்வமா செய்ய முடியாது. பப்ளீஷருக்கு என்ன பெரிய விமர்சனம் தெரியும்னு நாம கேட்கலாம். பப்ளீஷரோட தேர்வு இருக்கே அந்தத் தேர்வே ஒரு விமர்சனம். இந்தப் புத்தகம் போடலாம். இந்தப் புத்தகம் போடமுடியாதுன்னு கணிக்குறதே விமர்சனம்தான். ஆகவே, ரொம்ப பேரு என்னது விற்காதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. அதை ஒண்ணும் தவறா நெனைக்கல. ஏன்னா அது அவங்களோட விமர்சனம். இவருக்கும் (கலைஞன்) பெருசா விற்கும்னு நம்பிக்கை கிடையாது. இருந்தும் மிக்க அன்புடன் போட்டார். பதிப்பகங்கள் வளர்ச்சியில எனக்கு என்னைக்குமே ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனா படிக்கப்படணும். நெறைய புத்தகங்கள்லாம் வருது. பாத்தீங்கன்னா தடிதடி புத்தகங்கள்லாம் வருது. இதெல்லாம் படிக்கப் படறதான்னு தெரியுல. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எழுதுறதெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். 500 பக்கம் 600 பக்கம் எழுதுறாங்க எப்படி? களைச்சுப் போயிடும். அதாவது இன்னைக்கு ஒரு விதத்துல படிக்குறத தவிர வேற அறிவு பூர்வமா ஒரு பயிற்சி தரக்கூடிய ஈடுபாடுகள் கிடையாது.
இப்ப எதை நீங்க தவிர்த்தாலும் தவிர்த்துடலாம். பத்திரிகைகளைத் தவிர்க்க முடியாது. ரொம்பக் கஷ்டம் அது. பத்திரிகைகள் படிச்சா பெரிய அளவுக்கு விஷயங்கள் இல்லாத மாதிரி தெரியும். அதேபோல, நீங்க பத்திரிகை படிக்கலைன்னா வாழ்க்கையோட தொடர்பு இல்லாம போயிடும். அது எந்த மாதிரி பத்திரிகையினாலும் தேவல. கட்சி சார்ந்ததா கூட படிக்க வேண்டியது இருக்கு. அந்தச் சமயத்துல இவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் வருது. இது படிக்கப்படணும். படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம்தான். இதுக்கெல்லாம் ஒரு வாசகத்தளம் இருக்குதான்னு எனக்குத் தெரியுல. விற்கறது கூட வித்துடுறாங்க. நெறைய விற்பனை ஆயிடறதா சொல்றாங்க. என்னோட அனுபவத்துலேயே பார்த்தேன். நெறைய பேரு பேர தெரிஞ்சு வெச்சி இருக்காங்க. முகத்த தெரிஞ்சு வெச்சிருக்காங்க. உங்களை டி.வி.ல பார்த்தேன். பத்திரிகையிலே பார்த்தேங்குறாங்க. ஆனா படிக்கறத பத்தி ஒரு கதைய பத்தி, ஒரு வார்த்தை வரவே வராது. அவரோட ஒரு மணி நேரம் பேசினாக்கூட நம்ம படைப்பைப் பத்தி அபிப்ராயமே வராது. அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் படிக்கலன்னு அர்த்தம். பத்திரிகையில வரக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்_ இதுதான். ஆகவே ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் என்னான்னா, அவனோடதை படிச்சிட்டு நன்னா இருக்குன்னு சொன்னா போதும். அப்புறம் இந்த பப்ளீஷிங் இருக்கே, நெறைய வெளியிடுறது, விற்பனை ஆறதுயெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா இந்த ஒரு கவலையும் இருக்கு. படிக்கப்படணுமே.
தீராநதி: பல எழுத்தாளர்களின் Style படைப்பின் இடை இடையே குறுக்கிடுவதாகவே இருக்கும். அந்தத் தன்மை உங்களிடம் அறவே இல்லாத மாதிரி தோணுகிறது. பொதுவாக Style _ல் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
அசோகமித்திரன்: பொதுவா Style _ல பத்தி சொல்வாங்க. Style தான் ஒரு மனிதன்னு. Style of the Men. Style in the writer ன்னு. Style இல்லாம எழுதுறதே ஒரு Style தான். Style இல்லாம இருக்குறதுக்கும் ஒரு பயிற்சி வேணும். இதெல்லாம் அவ்வளவு எளிதில் வந்த ஒரு விஷயம் இல்ல. ஏதேதோ பயிற்சி செய்துதான் வந்தது. படிச்சு, எழுதி எழுதி வந்தது. ஒரு இடைவெளி இருக்கக் கூடாது. அதான் ஒரு முயற்சி. எழுத்துல வர்ற அனுபவத்துல இடைவெளி அதிகம் இருக்க கூடாதுன்னு முயற்சி செய்தேன். இந்த முயற்சில எந்த அளவுக்கு வெற்றி அடைஞ்சி இருக்கேன்னு அதெல்லாம் சொல்ல முடியாது. அம்பது வருஷம் அதுக்கு மேலேயே ஆயிடுத்து நான் எழுத ஆரம்பிச்சு. ஞாபக மறதி வேற வந்துடுத்து. இன்னும் இதை என்னால உறுதியா சொல்ல முடியல, இன்னும் அதுல நான் வெற்றி அடைஞ்சுட்டேன்னு. என்னோட இயல்பா இதை எடுத்துக்கலாம். இப்ப உங்ககிட்ட என்ன மாதிரி உறவு வெச்சிக்கிறனோ அதை மாதிரி தான் என் எழுத்துலயும் வெச்சியிருக்கேன். எழுத்துல வந்து வேற மாதிரியா வெச்சிக்க முயற்சி செய்யல. Style இருக்கே அதை நான் நிராகரிக்கல. நான் அதைச் செய்யல. Style இல்லாம இயங்குறதுல எனக்கு ஒரு நிறைவு இருக்கு, அப்படி செஞ்சும் கதை புரியலங்குறாங்க. பார்த்தீங்கன்னா ‘அமுதசுரபி’ யில இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்தப் பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் Êஓனர்னு கதை போகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல.
தீராநதி: ஆரம்பகாலங்களில் ஜெமினி ஸ்டுடியோவில் PRO _வாக பணி செய்திருக்கிறீர்கள். பழைய நாடகங்களில் கூட பங்களிப்பு செய்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கு நடத்தப்படும் நவீன நாடகங்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் உங்களின் மதிப்பீடு என்ன?
அசோகமித்திரன்: இந்த ஸ்டுடியோ பணி இருக்கே ... நான் என்ன செய்றதுப்பா? எங்க அப்பா வந்து அவருக்கு நண்பரா இருந்தாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா செத்துப் போயிட்டார். வீட்ல ரொம்ப கஷ்டம். அந்த நாள்லயெல்லாம் பெரிய பாதுகாப்பெல்லாம் கிடையாது. நான்தான் வீட்ல மூத்தவன். வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். ஏதோ நான் மட்டும் கஷ்டப் பட்டுருக்கேன்னு சொல்ல வர்ல. என்னைவிட கஷ்டப்பட்டவன்லாம் இருக்காங்க. வீட்ல பொண்ணுங்க இருக்கு. ஒரு அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஆனாலும் அவ்வளவு சந்தோஷமா இல்ல. வேலைக்கும் போயிட்டேன். அவருக்கு என்ன வேலை எனக்கு தர்றதுன்னே தெரியுல. எனக்கும் தயக்கம், சினிமா கம்பெனியாச்சே. அங்க இருந்தா நமக்கும் சினிமாத்தனமெல்லாம் வந்துடுமே. எழுத்தோடயே சம்பந்தப்பட்ட வேலையா இருந்தா நல்லது. அதான் PRO வேலை. நான் சேர்ந்த போதும் ஒருத்தர் இருந்தார். ரெண்டு மூணு வருஷத்துல அவருக்கு வேற வேலை. செகரட்ரியா போயிட்டார். என்னோட வெறும் டெசிகினேஷன் தான் PRO. அதை வந்து நான் பெரிய பதவியா நெனைக்கல. பெரிய சினிமா அனுபவமெல்லாம் கிடையாது. எல்லோரையும் போல சினிமா பார்த்தேன், அவ்வளவுதான். மாறுபட்ட தன்மையோ பார்வையோ எனக்குக் கிடையாது. ஆனா நாடகங்களோட பரிச்சயம் உண்டானதுக்கு ஞாநிதான் காரணம்.
ஞாநி ஒரு பத்திரிகைக்காரர். இந்திரா பார்த்தசாரதியை ஒரு தடவை பேட்டி கண்டு எழுதி இருந்தார். அப்ப ஞாநியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த மாதிரி ஒரு ஆள் பத்திரிகையில இருக்குறது எவ்வளவு நல்ல விஷயம்னு தோணுச்சு. அப்புறம் அவரே நாடகம் போடணும்னு இறங்கினார். அவரே நாடகங்களும் எழுதி இருக்கார். அதேபோல நான் மொதல்ல எழுதுறதுக்கு தூண்டுதல இருந்தவர் ஒரு நாடகக்காரர். ராஜாமணின்னு பேரு. நெறைய படிச்சவர். அவரு என்ன ஒத்துண்டதே கிடையாது அவரு இருந்த வரைக்கும். சீக்கிரமே செத்துப் போயிட்டார். அதிக நாள் இல்லை. அப்ப நான் எழுதின கதைகள்லாம் கூட படிச்சிட்டு ‘இல்ல, இல்ல நீ மறுபடியும் இதைத் திரும்ப எழுதணும்னு சொல்லுவார். பப்ளீஷ் ஆன கதையையும் கூட, இதெல்லாம் போதாதும்பார். அந்த அளவுக்கு உரிமை என் மேல எடுத்துக்குவார். தமிழ் சினிமா பத்தி எனக்குத் தெரியாது. ஆனா 14 வருஷம் அந்தத் துறையில இருக்குறவனுக்கு அதுல விஷயம் இருக்கும் இல்லையா? இதெல்லாம் அசாதாரணமான நிகழ்ச்சிகளா நான் நெனைக்கல. இந்த மாதிரி நான் வேற ஒரு துணி உற்பத்தி செய்யறதுல இருந்தா அது சம்மந்தமா எழுதி இருப்பேன். அரசாங்க சம்மந்தப்படுத்தின வேலையா இருந்தா அதை எழுதி இருப்பேன்.
ஆனா நான் யாரையும் இழிவுபடுத்தி எழுதணும்னு நெனைச்சு எழுதினது கிடையாது. ரெண்டு லட்சியங்கள் உண்டு. ஒண்ணு: யாருகிட்டயும் விரோதம் பாராட்டக் கூடாது. ரெண்டு: புறம் பேசக்கூடாது. இன்றைக்கு நவீன நாடகங்கள் எல்லாம் வந்து கிமிக்ஸ் அளவோட நின்னுபோவுது. முகத்துல கோரமா வேஷம் போட்டுக்கிட்டு கிமிக்ஸ் பண்றதுன்னு போயிட்டா பண்ணிகிட்டே போகலாம். வாழ்க்கையில இருக்குற விசேஷத்தன்மை சொல்லப்படல. ஷேக்ஸ்பியரை இன்னைக்கும் ஒரு கவிஞராத்தான் எடுத்துக்க முடியுது. அவரு நாடகத்துல எல்லாம் பெருசா செஞ்சார்னு சொல்ல முடியாது. 200, 300 வருஷங்கள் பின்னால வந்தவங்கதான் செஞ்சி இருக்காங்க. ஷெரிடன்னு ஒருத்தர் செஞ்சியிருக்கார். அப்புறம் இப்சன்னு ஒருத்தர் செஞ்சி இருக்கார். ஷேக்ஸ்பியர் நாடகமெல்லாம் பொன்மொழிகளாகத்தான் இருக்கு. நாடகமாப் பெருசா ஒண்ணும் இல்ல. தமிழ்லயும் அதிகம் செய்யுல. ஆங்கிலத்துல செஞ்சு நான் பார்த்து இருக்கேன். ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நிறைய நாடகங்கள் நடத்தி இருக்காங்க. இங்க யதார்த்தத்தை வந்து மட்டமா நினைக்கிறாங்க. அதை யதார்த்தம்னே தெரியாத மாதிரி ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமா காண்பிச்சு இருப்பாங்க. ஆனா இதெல்லாம் மேல் நாட்டு நாடகங்கள்ல இருந்து எடுத்து செஞ்சி இருக்காங்க.
விஜய் டெண்டுல்கர்ன்னு மராத்தியில ஒரு நாடகக்காரர் அவரு பண்ணுவார். ஆனா அதுல தீவிரத்தன்மை இருக்கும். அவரு ஒரு நல்ல நாடகாசிரியர். தமிழைப் பொறுத்த அளவில் நான் எல்லா நாடகத்தையும் பார்த்துட்டேன்னு சொல்ல மாட்டேன். பார்த்த அளவுக்கு அதிகமாக கவர்ல. எனக்கும் வயசாயிடுத்து இல்லையா? ஒரு மணிநேரம் உட்கார்ந்து நாடகம் பார்க்குற நிலையில இப்ப என் உடம்பு இல்ல.
தீராநதி : வ.வே.சு. ஐயர். கு.ப.ரா. புதுமைப்பித்தன் என்று மூத்த படைப்பாளிகள் பற்றியும் நகுலன், ஜெயகாந்தன், கோபிகிருஷ்ணன் என்று பெரும் பட்டியலிடும் அளவிற்கு சகபடைப்பாளி பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். இந்த ஆர்வத்திற்கான அடிநாதம் எது?
அசோகமித்திரன் : பெரிய ஆர்வமன்னு ஒண்ணு கிடையாது. சிலதைப் படிக்கிறோம் அது நன்னா இருக்கு. அது எல்லாருக்கும் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்திருக்காது. இந்த மாதிரி நிகழ்ந்திருக்கு சொல்லலாம். ஒரு நூல் இருக்குன்னு சொல் லறதுக்கும் ஒரு எடம் வேணும். அந்த எடம் கிடைச்சது. ஆனா க.நா.சு. ஒரு இயக்கமா இதை நடத்தி வந்தாரு. அடுத்து சி.சு. செல்லப்பா. இலக்கிய விமர்சனம் இலக்கிய படைப்புகள்னு தொடர்ந்து செய்து வந்தாங்க. நான் அந்த மாதிரி இயக்கத் தலைவருன்னுயெல்லாம் என்னை சொல்லிக்க மாட்டேன்.
தீராநதி : அப்படி நீங்கள் எழுதிய விமர்சனங்கள் முன்னுரைகள் கறார்தனம் இல்லாதவை என்று கருத்து நிலவுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அசோகமித்திரன்: முன்னுரையில் நாம அப்படி கறாரா இருக்கக்கூடாது. முன்னுரை எழுதச் சொல்லறதோட நோக்கமே இன்னாரை இந்த நாவல படிக்க வெச்சிடனும் என்பதுதான். அவங்களைப் போய் இது மோசமா இருக்குன்னு சொல்லக்கூடாது. கூடுமான வரைக்கும் அதுல இருக்குற நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டலாம். சாதாரண படைப்புலயும் எங்கேயாவது ஒரு எடத்துல ஒரு பொறி இருக்கும். அந்தப் பொறியை எடுத்துக்காட்டிப் பேசலாம். இதுல வந்து ஏன் இந்த மாதிரி இருக்கீங்க? அது தவறு இல்லையான்னு கேட்கலாம். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாழ்க்கையில நெறைய விஷயங்கள் பெரிய நன்மைக்காக சிறிய விஷயங்களைத் தியாகம் பண்ணவேண்டி இருக்கும். அதனால கறாரா செய்யணும்னு, சொல்லணும்னு நெனைச்சா அது ஒரு தன்மைதான். நான் இல்லன்னு சொல்லல. அதனால இந்த முன்னுரைகள்ல பொதுவா எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்ப வந்து ஒரு அம்மா எஸ்டிடி போட்டு பேசறாங்க. நீங்க முன்னுரை எழுதித் தரணும்னு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா பத்துபக்கம் சேர்ந்தாப்ல படிச்சம்னா பத்தாம் பக்கம் வர்றச்சே முதல் பக்கம் என்ன படிச்சோம்னு மறந்து போயிடுது.
தீராநதி : பாஸிடிவ் அப்ரோச்சான முடிவையே உங்களின் பெரும்பாலான கதைகள் கொண்டிருக்கிறது?
அசோகமித்திரன் : பாசிடிவ் அப்ரோச்ல ஒண்ணும் தவறு கிடையாது. இது என்ன தெரியுமா? பாசிடிவ் அப்ரோச்ன்னாலே ஒரு உண்மையைப் பார்த்து நாம செய்யறோம். சில பேரு எப்ப பார்த்தாலும் நெகடிவ்வாவே பேசுவா. ஜாக்ரதையா போங்க... கீழ விழுந்துடுவேன்னு. இவர் என்ன சொல்றது. போறவனுக்குத் தெரியாதா நாம கீழ விழுந்துடுவோம்னு. அப்படி ஒரு பயமெல்லாம் தேவயே இல்ல. உலகத்துல நெறைய பேரு சங்கடப்படுறாங்க. எனக்கு இன்னும் நெறைய விஷயங்கள் வருத்தமா இருக்கு. நாடு துவேஷம். மொழி துவேஷம். உலகத்த பார்த்தாலும் துவேஷம். யாரை யார் நம்பறதுன்னே தெரியுல. பார்லிமெண்ட் தாக்கப்பட்டப்போது அம்பது பேரு செத்துபோனா. இந்த அம்பது பேருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. கொழந்தை குட்டி இருக்காங்க. மனைவி இருக்காங்க. எனக்கு வந்து அஃப்சல் குருவ தூக்குல போடணுமா.? தூக்குல போடக்கூடாதாங்குறதுல நான் கலந்துக்கல. அவங்களுக்கு நியாயங்கள் செய்யப்படலேன்னு சொல்றாங்க. இந்த ராணுவத்துக்கு வர்றவங்க இருக்காங்களே... வேற எந்தப் பணிய செய்யமுடியாத நிலையிலே ஆர்மிக்கு வர்றாங்க. திடீர்ன்னு சாவு வர்றதுக்கு வாய்ப்புகள் நெறையா. ராஜீவ்காந்தி அனுப்புன அமைதி படையிலக் கூட 6000, 7000 பேர் செத்துப் போனதா சொல்றாங்க. நாம அவங்களை பலி கொடுத்த மாதிரிதான் ஆயிடுச்சு. என்னத்த பெருசா நம்மலால சாதிக்க முடிஞ்சது? இன்னும் அவங்க சண்டைப்போட்டுகிட்டுதான் இருக்காங்க. இந்த ராணுவ வேலையே அந்த மாதிரிதான். காவல்காரனா இருக்குறானே அவன் என்ன பாவம் செஞ்சான். முதல்ல அவனோட (எதிரிகள்) கண்ணுக்குத் தெரியுறது காவல்காரன்தான். அதனால அவன முதல்ல அடிச்சுடுறது. இராணுவத்துல இருக்குறவன் யாருன்னா காவல்காரன். அவன் எங்கிருந்து வந்தவன்? கிராமத்துல இருந்து வேலை கிடைக்காம ராணுவத்துக்கு வந்தவன். அவன் செத்துப்போறான். என்ன ஒரு ட்ராஜிடி.
தீராநதி : உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நகரவாசிகள். கிராமம் தொடர்பான அனுபவமே உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
அசோமித்திரன் : எனக்கு கிராம அனுபவமே இல்லன்னுதான் சொல்லணும். சிகந்தராபாத்துல பொறந்து வளர்ந்தவன் நான். அது ஒரு சின்ன கண்டோன்மெண்ட். அதனால எனக்கு எந்த அனுபவம் கொறைவா இருக்கோ, அந்த அனுபவம் கதையில கொறைவா இருக்கும். அதை நான் ஒரு இழப்பா நெனைக்கறதில்ல. நகர வாழ்க்கையில் இருக்குற சின்னச் சின்ன விஷயங்கள் எழுதுறதுக்கு நெறையா இருக்கு. எவ்வளவோ இன்னும் எழுதப்படல. வீடு மாத்திகிட்டு வந்தபோது ரேஷன் கார்டு மாத்த ஏற்பட்ட அனுபவம் இருக்கே, அதை வெச்சி பெரிய நாவலே எழுதலாம். அவ்வளவு தீவிரம் இருக்கும்.
தீராநதி : Commual harmony பற்றி இன்று நிறைய பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்களின் கதைகள் மூலம் அன்றே அதைச் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். இது தன்னியல்பானதா? திட்டமிட்டதா?
அசோகமித்திரன் : நாங்க இருந்த ஏரியா இருக்கே.... அவுங்க அவுங்க அவங்களோட பழக்கத்தை வெச்சிக்குவாங்க. ஆனாலும் ஒண்ணா இருந்துக்குவாங்க. இப்ப சட்டைக்காரங்க இருக்காங்கன்னா அந்தப் பழக்கத்தோட இருப்பாங்க. முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமயானா சர்ச்சுக்குப் போவாங்க. அதே மாதிரி மூணு முஸ்லிம் இருந்தாங்க. அதுல ஒருத்தர் மட்டும் தமிழ் முஸ்லிம். அப்புறம் முதலியாரு, நாயுடு, அது கலப்படமான எடமா இருந்தது. அதை நீங்க நிர்ணயிக்க முடியாது. நீங்களே ஒரு எடம் இருந்து தனியா தேடிகிட்டுப் போனாதான். இங்க (சென்னை) ஒரு மொழி பெயர்ப்பாளர் அப்துல்லான்னு இருந்தார் _ கோழிக்கோடுக்காரர். அவர் பஷீரை, ஆங்கிலத்துல மொழிபெயர்த்தவர். பஷீர் கூட கோழிக்கோடுகாரர். அவரு (அப்துல்லா) என்னோட நல்ல பழக்கம். 1960_கள்ல இருந்தும் 80 வரைக்கும் இயங்கிட்டு இருந்தார். ஒரியண்ட் லாங்மன்ல வேலை, யுனஸ்கோவுலயே இவரோட மொழிபெயர்ப்பைத்தான் அங்கீகரிச்சு வெச்சி இருக்காங்க. அவரு மாம்பலத்துல குடி இருந்தார். அங்கப் போனப்பதான் தெரிஞ்சுது முஸ்லிம்களுÊக்கு மாம்பலத்துல சுலபமா வீடு கிடைக்காதுன்னு. ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் எடுத்து பதினைஞ்சு குடும்பங்க இருந்தாங்க. தாமு ரெட்டி தெருவ எடுத்துக்கோங்க ஒரு வீடு கிடையாது. இப்ப வந்துட்டாங்க அந்தக்காலத்துல முடியவே முடியாது. சாத்தியமே இல்ல... முஸ்லிம்கள்லாம் கறி சமைப்பாங்கன்னு தரமாட்டாங்க. எதுக்கு சொல்றன்னாக்க இந்த மாதிரி ஒரு விஷயங்கள் ‘டக்’குன்னு ஸ்ட்ரைக் (Strike) ஆவுது.
அந்த நாள்ல ஒட்டர்கள்னு இருந்தாங்க. அவங்களெல்லாம் நகரசுத்தி வேலை பார்ப்பாங்க. இப்ப வந்து அந்த மாதிரி இல்ல. ட்ரை லாவட்டரின்னு பேரு. ட்ரை லாவட்டரின்னா அன்ன அன்னைக்கு வந்து எடுத்துகிட்டுப் போகணும். எங்க வீட்ல ஒரு அம்மா ஒருத்தி இருந்தா. தினமும் அவளோட சண்டை. அதாவது நாங்க மூணுநாள் வர்லேன்னு சொல்லுவோம். அவ வந்தேன்னு சொல்லுவா. வர்லங்கறது நமக்குத் தெரியும். இருந்தும் சொல்லுவா. நான் அந்த அம்மாவைத் தேடிகிட்டு ஒரு நாள் அவ வீட்டுக்குப் போனேன். அங்க போனப்பதான் தெரியுது அந்தக் காலனியே கம்லீட்டா ஒட்டர்கள்னு. எதுக்கு நான் சொன்னேன்னா தனிப்பட்ட வாழ்க்கைல இருக்க இந்த இழைகள் வந்து எல்லாத்துக்கும் சொல்றதுக்கு முடியுறதில்ல. நான் என்னவோ கொஞ்சம் கொஞ்சம் தான் முயற்சி பண்ணி இருக்கேன்.
சிகந்தராபாத்துல இருக்குற முதலியாருங்க இருக்குறாங்களே அவங்க வீட்லயே உருதுதான் பேசுவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போவேன். முஸ்லீம் நவாப் மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு போட்டோ எடுத்து வீட்ல மாட்டி வெச்சியிருப்பாங்க, அவங்கள பார்த்தா முதலியாருன்னே தெரியாது. ஹைதராபாத்துல அப்ப இந்தியாவுடைய டாங்கெல்லாம் (துருப்பு) வந்துடுச்சு. அங்க இருக்குற முஸ்லிம்க சின்னச்சின்ன கத்தி வெச்சிகிட்டு ‘டெல்லி பக்கடோ’ன்னு கத்திகிட்டு திரிவாங்க. ஓட்டை கத்தி கபடா வெச்சிட்டு எப்படி இவங்கள டெல்லிய புடிக்க முடியும். கொஞ்சம் கூட பொருத்தமே இருக்காது. படிக்கல, எப்படி யோசிக்கமுடியும் பாவம். இப்ப பாருங்க ஹைதராபாத்தோட அடையாளமே மாறிப் போச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆகவே, இது எதுவும் திட்டமிட்டப்படி நடக்கல. இயல்பாகத்தான் நடந்தது. இங்க வந்த பிறகுதான் நெனைச்சுப் பாக்குறப்போ நமக்கே தெரிய வருது.
தீராநதி : தமிழிலக்கியப் போக்கில் கணையாழிக்கு ஓரிடமுண்டு. அதோடு இருபத்தைந்தாண்டுகள் சம்மந்தப்பட்டிருந்தவர் என்பதால் கேட்கிறேன். இன்று அப்பத்திரிகை பற்றி உங்களின் அவதானிப்பு என்ன? திருப்தி தரக்கூடிய அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளதா?
அசோகமித்திரன்: கணையாழிக்கு நான் உரைநடைக்கு மட்டும் பொறுப்பா இருந்தேன். அதுக்கு நெறைய ஆசிரியர்கள் இருந்தாங்க. டெல்லியில இருந்து கடைசி நிமிடம் சொல்லுவாங்க. இதைப் போடுங்க இதை நிறுத்துங்கம்பாங்க. இதைப் போடணுமா போடக்கூடாதான்னு வர்றப்ப சண்டை வந்திடும். அதை நன்னா கொண்டுவரணும்னு எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஈடுபாடு இருக்குறச்ச சரியா செய்யலாம். ஆனா, இன்னைக்கு நின்னுப் போச்சுன்னு சொல்லறாங்க.
அப்ப நான் இருந்தப்ப நல்ல கதையா இருந்தா எழுதினவனுக்கு லெட்டர் எழுதி சொல்லிடுவேன். கதைய நாங்க எவ்வளவு நாள் தாமதமானாலும் கண்டிப்பா வெளியிடுவோம்னு எழுதுவேன்.
கதையில இது சரியா இருக்கு. இத கொஞ்சம் மாத்தணும்னு இருந்தா அதையும் எழுதிடுவேன். தொடர்ந்து பத்திரிகை இயங்க ஒரு துணிவு வேண்டி இருக்கு. அந்தத் துணிவை எடுத்துகிட்டு செஞ்சது. இன்னைக்கு எப்படியோ தெரியுல. என்ன பணி செய்யும்படியா இருந்ததோ அந்தப் பணிய நன்னாச் செய்யணும்னு நினைக்கிறேன். செஞ்ச வரைக்கும் திருப்தியா இருந்தது.
தீராநதி : சிகந்தரபாத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்தது. சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைக் கேட்க அன்று ரேடியோ மட்டுமே தகவல் சாதனம். ரேடியோவின் வால்வ் சூடேறுவதற்கே நான்கு மணிநேரம் பிடிக்கும். பிறகு தான் செய்தி கேட்க முடியும் என்று எழுதியிருந்தீர்கள். குறைந்த அறிவியல் சாதனங்கள் இருந்த காலமது. ஆனால் இன்றோ சகலமும் ஒளி வேகத்தில்... இரு அனுபவமும் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். இன்றைய தகவல் யுக வளர்ச்சி பற்றி?
அசோகமித்திரன்: ஆகஸ்ட் 14, 1947_ இராத்திரியெல்லாம் ரேடியோ கேட்டோம். சிகந்தராபாத்தில் எங்க வீட்ல இருந்த ஐந்து வால்வ் ரேடியோ மூலமா சென்னை ஒலிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளை இராத்திரி வேளையிலதான் ஓரளவுக்குக் கேட்க முடியும். ரேடியோவில் வரும் கரகரப்பு சத்தத்தைப் பொருட்படுத்தாம கேட்போம். ஹைதராபாத்திலயும் ரேடியோ நிலையம் இருந்தது. அது நிஜாம் அரசாங்கத்தின் ரேடியோ. இந்திய சுதந்திரக் கொண்டாட்டங்களை ஒலிபரப்பியே ஆகணும்னு கட்டாயம் அதுக்கு இல்ல.
நாங்க இருந்த சிகந்தராபாத்தும் _ நிஜாமின் தலைநகர் ஹைதராபாத்தும் பக்கத்துப் பக்கத்து ஊர்கள் என்றாலும், இரண்டிலும் வேறு வேறு போலீஸ் படைகள். நிஜாம் போலீஸ் முழுக்க உருதுமொழியில் இயங்கும். சிகந்தராபாத் போலீஸ் தெலுங்கு, இங்கிலீஷ்ல இயங்கும். நிஜாம் போலீஸ் நீலக்கலருல யூனிஃபார்ம் போட்டு இருப்பாங்க. சிகந்தரபாத் போலீஸ் காக்கிச்சட்டை. சிகந்தராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல சைக்கிள் லைசன்ஸ் வாங்கினா அது பித்தளைத் தகட்டில் இங்கிலீஷ் எழுத்துகள்ல எழுதி இருப்பாங்க. ஹைதராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல அதே லைசன்ஸ் தகரத்தகட்டுல உருதுல எழுதினதா இருக்கும். யாரோ ஒருத்தர்கிட்ட லைசன்ஸ் வாங்கினா ரெண்டு நகரத்துக்கும் போதுமானதா இருந்தது.
போலீஸ்காரங்கள விரல்விட்டு எண்ணிடலாம். ஆனாலும் அவ்வளவு கட்டுப்பாடு. ரோட்ல எந்த வண்டியும் ரூல்ஸ்ஸ மீற முடியாது. ஆறு மணிக்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும் சைகிள்ல விளக்கு ஏத்தியிருப்பாங்க.
உண்மையில சொல்லணும்னா. இந்தியாவோட சுதந்திரம் நிஜாம் சமஸ்தானத்துக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியா இல்ல. ஜனவரி 30, 1948_ல் காந்தி செத்துப்போனது எங்களுக்கு ஏழு மணிக்குத்தான் தெரியும். ஆனா அவரு 5.10 க்கு செத்துப்போயிட்டார். ரேடியாவுல 9 மணிக்குதான் நியூஸ். இப்போ மணிக்கு ஒரு தரம் நியூஸ் மாதிரி அன்னைக்கு இல்ல. 10 மணிக்கு ரேடியோவே முடிஞ்சி போயிடும். இப்படி இருந்த சமயத்துலயும் உலக இயக்கத்துல நாங்க பங்கு பெற்றது இருக்கே அது ஒண்ணும் தடைபடலன்னுதான் நான் சொல்லுவேன். இப்ப வந்து டான்டான்னு எல்லாம் தெரிஞ்சுடுது. நாம என்ன என்னமோ பார்க்குறோம். தாமதமா தெரிய வந்தாலும், அந்த அனுபவங்கள் இருக்கே நிஜ அனுபவங்களாகவே இருந்தது. தகவல் சாதனங்களின் வேகம் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் உலக இயக்கத்தில் எங்களின் ஒரு பங்கு இருக்கே அது வந்து குறையலன்னுதான் நான் நெனைக்கிறேன்.
தீராநதி: இந்து_முஸ்லிம் சண்டை சச்சரவுகள் கலவரங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இரு தரப்புகளுக்கும் இன்று பகை தீர்ந்தபாடில்லை என்பது போல ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. இதுவெல்லாம் நிஜமா என்று தெரியவில்லை..? அன்றைய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அசோகமித்திரன்: நிஜாம் சமஸ்தானத்தில் அந்த ஆண்டில் (1947) இந்திய சுதந்திரத்தை ஒட்டி விதர்பா ஏழை முஸ்லிம்கள் அகதிகளாக வந்து சேர்ந்தாங்க. நிஜாம் சமஸ்தானத்திலிருந்து ஹிந்துக்கள் பல சமஸ்தானத்தை விட்டு வெளியேறினாங்க. சில குடும்பங்கள் நிரந்தரமாவே வெளியேறிப் போயிட்டாங்க. அதைப் பார்த்ததும் நிஜாம் சர்க்கார் உடனே ஒரு உத்திரவு போட்டது. யாரும் சரியான காரணம் இல்லாம சமஸ்தானத்தை விட்டு வெளியேறக் கூடாதுன்னு. யார் இரயில்ல போக வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கும் பணத்தோட போலீஸ் பர்மிட்டும் வெச்சிருக்க வேண்டும். இந்தியாவுக்குள்ளாகவே பாஸ்போர்ட் இருந்தாதான் போகமுடியும்.
இந்த உத்தரவு போட்டவுடன் சிகந்தராபாத்தில் பதட்டம் இன்னும் ஜாஸ்தியாயிடுத்து. எங்களுக்கு வெளியூர் எங்க போறது... யார் வீட்ல போய் தங்குறதுன்னெல்லாம் யோசிக்க முடியல. ஆனா ஊரைவிட்டுப் போயேயாகணும்னு முடிவெடுத்துட்டோம். பாஸ்போர்ட், பர்மிட் விஷயத்துல தடை வரக்கூடாதுன்னு அப்பாகிட்ட ரெண்டு மனுக்கள் எழுதிக் கொண்டு நான் சிகந்தராபாத் கோர்ட் ஆபீசுக்குப் போனேன். சிகந்தராபாத்தில டிசம்பர் மாதத்துல மழை நின்று போய் பனி பெய்யும். டிசம்பர் பனியில கண் பார்க்கும் எடமெல்லாம் பெரிய ஓவியம் போல இருக்கும்.
பெரிய பெரிய காம்பவுண்டுச் சுவர்கள் நிற்கும், ரோட்ல ரெண்டு பக்கமும் இருக்குற மரங்கள் ஒரு குகைமாதிரி தெரியும். அந்தக் குகைக்குள்ள முன்னேறி கோர்ட் ஆபீஸுக்குப் போய் சேர்ந்தேன். அங்கேயேதான் போலீஸ் ஸ்டேஷனும் இருந்துச்சு. அங்க எனக்கு முன்னாலயே டஜன் கணக்குல மக்கள் கூடி இருந்தாங்க. எப்படியோ போராடி பாஸ்போர்ட் வாங்கிட்டோமே தவிர ஊரெதுக்கும் போகல. வட இந்தியாவில் அந்த நாள்ல நடந்த படுகொலைகளை மனம் ஏற்றுக்க மறுத்தது. இருந்தும் உறவினர் வீட்டுக்கு ஒரு லட்டர் போட்டோம். மறு தபாலில் பதில் எழுதிப் போட்டுவிட்டாங்க அவங்க. இங்கு விலைவாசி மிக அதிகம்னு.
இதற்கிடையில் இந்திய அரசுக்கும் நிஜாமுக்கும் தற்காலிக ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாச்சு. ஆனா இது எந்தச் சிக்கலையும் தீர்க்கல. சாதாரண மக்களுக்கு உணவுச் சாமான்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. நகரப் பகுதிகள்ல பகிரங்கமாக காஸிம் ரஸ்வி என்ற ஒரு இனவாதத் தலைவரின் ரஜாக்கர் குழுக்கள் ராணுவப் பயிற்சி எடுக்கத் தொடங்கினாங்க. அந்தப் பயிற்சியை வெச்சிகிட்டு மிகச் சாதாரண ராணுவ ஆயுதத்தைக் கூடக் கையாள முடியாதுன்னு ஒரு குழந்தைக்குகூடத் தெரியும். ஆனா அன்று அந்தக் ‘காச் மூச்சு’ கூச்சல் கூப்பாடு இலட்சக்கணக்கான மக்களைக் கதிகலங்க வெச்சது. காரணம் _ அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் அவ்வளோதான். காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதம்னு அறிவிச்சது சிகந்தராபாத், ஹைதராபாத்துல இருந்த இந்துக்கள் நிலையைக் கொஞ்சம் தீவிரமாக்கியது. ஆச்சர்யமா இருக்கிறது; இவ்வளவு அமளி துமளியிலயும் அந்த ஊர்ல தெலுங்கு சினிமா படங்கள் வரும். மாசக் கணக்குல ஓடும். நாங்களும் ரெண்டு மாசங்கள் மூன்று மாசங்களுக்கு ஒரு முறை ஊர்வலமாக நடந்து போய் அந்தப் படத்தைப் பார்த்துட்டு வருவோம். ஒரு வாரம் தவறாமல் ஒரு மைல் தள்ளியிருந்த பிள்ளையார் கோவிலுக்கு மறுபடியும் ஊர்வலம் போய் வருவோம். இன்று இதையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது அப்போ அனுபவித்த பீதி, கிலியெல்லாம் ஆதாரமற்றதுதானான்னு கூடத் தோன்றும். காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.
சமீபத்துல ஒரு இந்திய பெண் எழுத்தாளர் கதையை மொழி பெயர்ப்புல படிச்சேன். ‘இந்துசார் உசேன் ஐ ஆம் வெய்டிங் ஃபார் யூ’ங்கறது கதையோட பேரு. இந்துசார் உசேன் பாகிஸ்தான் ரைட்டர். அந்த அம்மாவோ இண்டியன் ரைட்டர். கதை என்னான்னா இந்த அம்மாவோட அப்பா காணாம போயிடுறார். அவர் கலவரத்துல மாட்டி பாகிஸ்தான் போயிட்டதா தெரியவருது. இந்த அம்மா பாகிஸ்தான்ல இருந்து வர்ற கதைகள்ல தன்னோட அப்பாவ பத்தி ஏதாவது சேதி வந்துருக்கான்னு தொடர்ந்து படிக்குறா. கலவரம் முடிஞ்சு அம்பது வருஷமாயிடுச்சு. ஆனாலும் இன்னும் படிக்கிறா. இதை படிச்சப்போ அந்தப் பத்திரிகைக்கு கதை நல்லா இருக்குன்னு எழுதினேன். முடிஞ்சா அந்த அம்மாவுக்கு இதைத் தெரிவிங்கன்னு சொன்னேன். அந்த அம்மாவுக்குத் தகவல் கிடைச்சு பேசினாங்க. இப்ப நான்கு ஐந்து வருஷமாத்தான் இது மாதிரியா படைப்புகள் நிறைய வருது. அந்தக்கால பிரச்னையை மையமாக வைத்து படைப்புகள் நிறைய வருது. அந்தக்காலத்துல பிரச்னை சண்டைகள் இருந்துச்சு. ஆனா இந்த மாதிரி ஒழிச்சிடணும்னு ஒரு வெறி இருந்ததா எனக்குப்படல.
தீராநதி: சிறுகதைகளின் வெளி தமிழில் சுருங்கி வருவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. சிறுகதை வளர்ச்சி குறித்துப் பேசுவோமா?
அசோகமித்திரன்: சிறுகதை நெறைய வரலன்னு சொல்ல முடியாது. நெறைய எழுதப்படுறது. ஆனா அதை பத்திரிகைகள் வெளியிடுறதான்னு பார்த்தா கிடையாது. அப்படியே போட்டாலும் ஒண்ணே ஒண்ணுதான். சிறுகதைகள் நெறைய வந்துகிட்டுதான் இருக்கு.
தீராநதி: சிறுபத்திரிகைவாசிகள் ஒரு காலத்தில் வெகு ஜன தளத்தில் பங்கு கொள்ளத் தயங்குவார்கள். இன்றோ நிலை தலைகீழ். சிற்றிதழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வெகுஜன ஊடகத்திலும் பங்களிப்புச் செய்கிறார்கள். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடா. நீத்துப் போனதற்கான அடையாளமா?
அசோகமித்திரன்: ஆரம்பத்துல இருந்தே நான் வந்து பத்திரிகைகள்ல பாகுபாடு பாக்குறத வெச்சிகிட்டதே கிடையாது. பத்திரிகைகள்ல துவேஷம் பார்க்கறது கூடாதுன்னு நெனைப்பேன். எல்லோருக்கும் ஒரே போலதான் எழுதுறேன். இவனுக்கு ஒரு கதை. அவனுக்கு ஒரு கதைன்னு எழுதறது இல்ல. ‘மாலதி’ன்னு ஒரு கதை எழுதி 1974_வாக்குல குமுதத்துக்கு அனுப்பி வைச்சிருந்தேன். அந்தக்கதை வெளி வரல. அப்ப வந்து குமுதம் ஆபீஸுக்கே போய் என்ன அறிமுகப்படுத்திகிட்டு என்னோட கதையைப் போடலயினாலும் பரவா இல்லை. என்கிட்ட அதோட காப்பி இல்லை அத கொடுத்துடுங்களேன்னேன். அவங்க இல்ல இல்ல அந்தக் கதை தீபாவளி மலரில வருதுன்னாங்க. எனக்கு நம்பிக்கை வரல. எங்க காட்டுங்க பார்ப்போம்ன்னேன். உடனே காண்பிச்சாங்க. அந்த வருஷம் சொன்ன மாதிரி தீபாவளி மலர்ல வந்துச்சு. இத ஏன் சொல்லறன்ன, அப்ப போட்டோ காப்பியெல்லாம் கிடையாது. ஒரு கதை எழுதுனா, அத படி எடுத்துதான் அனுப்பி வைக்கணும். அதுக்குள்ள அலுத்துப் போயிடும். சிலநேரம் அப்படியே அனுப்பிடுவோம். அது குமுதத்துல வந்ததால எந்த விதத்துலயும் குறைஞ்சு போயிடல. ஆனா சில நேரம் நம்ம கதையோட தலைப்பையே மாத்தி வெளியிட்டுடுவா ‘குமுதம்’. ஒரு கதை அப்படிதான் ‘விட்டேன் ஒரு விதை’ன்னு மாத்தி போட்டாங்க. அப்புறம் ‘கொண்டு வா பெட்ரோல’ன்னு போட்டாங்க. மத்தவங்கயெல்லாம் என்ன கிண்டல் பண்ணாங்க. மாத்துனா என்ன? படிக்குறவனுக்குத் தெரியாதா நல்லதா கெட்டதான்னு சொல்லுவேன். அதனால சிறு பத்திரிகைக்கும் பெரிய பத்திரிகைக்கும் இப்ப வித்தியாசமெல்லாம் இல்லாம போயிடுச்சு. என்ன இவங்களவிட அவன் கொஞ்சம் சினிமா செய்திய அதிகமா போடுவான் அவ்வளவுதான். சிறு பத்திரிகைகள் அத்தியாவசியமா இருந்த ஒரு காலகட்டம் முடிஞ்சுப் போயிடுத்து.
தீராநதி: பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா?
அசோகமித்திரன்: சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி அந்தப் பேச்சு மொழிய, எப்படி மொழி பெயர்க்க முடியும்.
என்னதான் நாம பண்ணாலும் ஆங்கிலத்துல இருக்குற ஒரு ஸ்டேண்டர்டு இங்கிலீஷ்லதான் பண்ணமுடியும். முழுக்க முழுக்க பேச்சுலையே அந்த அனுபவத்த தர்றேன்னு வைச்சிகிட்டா கஷ்டம். ஆனா சில தகவல்கள் கொடுத்து புரிய வைக்கலாம். இதுக்கு உங்களுக்கு நீங்களேதான் ஒரு திட்டம் வகுத்துக்கணும். சிலபேர் நிறைய செய்யறாங்க. அதுக்குன்னு பொதுவான மொழியிலேயே எழுதிட்டுப் போயிட்டா இவர் என்ன ஜாதின்னே தெரியாது. இங்க நாம ஜாதின்னு சொல்றப்ப ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதனால அந்தக் கதைக்கு தனித்தன்மை வந்திடுது. அதெல்லாம் இல்லாம போயிட்டா எல்லாமே ஒரே மாதிரி ஸ்டேண்டடா போயிடும்.
இப்பக்கூட பாமான்னு ஒரு ரைட்டரோடைய கதையை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க. அந்த மொழி பெயர்ப்புக்கே அவார்டெல்லாம் கிடைச்சது. ஆனா அந்த மொழி பெயர்ப்பு மேலயும் விமர்சனங்கள் வர்றது. நான் இரண்டையும் படிச்சேன். தமிழ்ல இதுவரைக்கும் அந்த Form வரல. வெளியில இருந்தும் நாமதான் மொழிபெயர்த்து படிக்கிறோம். அப்ப நம்மளோடத யாரு மொழி பெயர்க்குறாங்க? வெள்ளைக்காரன்தான் பண்ணணும். எந்த வெள்ளைக்காரன் வர்றான் நம்மளேதான் பண்ண வேண்டி இருக்கு. ஆக, ஆங்கிலத்துல இருந்தும் நாமதான் பண்றோம். தமிழ்ல இருந்து ஆங்கிலத்துக்கும் நாமதான் பண்றோம். இது ஒரு விதத்துல சங்கடமானதுதான்.
தீராநதி: இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்கள் அனுபவித்த சிராய்ப்புகள் அதிகம். அதைக் கண்கூடாக உணர்ந்தவர் நீங்கள். ரொட்டிக்கும் சீனிக்கும் ரேஷனில் காத்துக்கிடக்க வேண்டி இருந்தது என்றெல்லாம் எழுத படித்திருக்கிறோம். அன்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா.. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பேசுங்களேன்?
அசோகமித்திரன்: தலையை எண்ணித் தானியம் கொடுத்தாங்க. அரிசியெல்லாம் கிடையாது. கோதுமை கிடையாது. சோளம். ரேஷன் கடை, ஆபீஸ், அதிகாரின்னு லஞ்சம் கொடுக்கணும். தெருவிளக்குகள் குல்லாய் மாதிரி ஒன்றைத் தொங்கவிட்டாங்க. வெளிச்சம் கம்பத்தின் கீழே மட்டும் அடிக்கும். வீட்டு வெளிச்சம் இரவில் வெளியே தெரியக் கூடாது. ஜன்னலை மூடிவை. சாலையில் மிலிடெரி வண்டிகளைப் பார்த்தாலே பதுங்கத்தான் வேண்டும். பணம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க இருவருமே தடுமாறினாங்க. கண்ணியமங்கறது ரெண்டாம் பட்சமானது. யுத்தம் முடிஞ்சதுன்னு சொன்னவுடனேயே அப்பாடா இனிமே ரேஷன்ல காத்துக்கிடக்க வேண்டியதில்லடான்னு தோணுச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல் தூரம் நடந்து போய் ரேஷன் வாங்கணும். பிற்பகல் தவறவிட்டுடா அடுத்த நாள் காலை போய் நின்னா நேற்றே எல்லாம் வந்து தீர்ந்துடுச்சுன்னு பதில் வரும். இங்க நம்ம சென்னையில விறகு வாங்குறதுக்கு ரேஷன் கார்டு வேணும் தெரியுமா உங்களுக்கு? அரை குண்டு ஒரு குடும்பத்துக்குன்னு தருவாங்க. ஐரோப்பிய யுத்தம், ஜப்பான் யுத்தம், கொரியா யுத்தம், சூயஸ் யுத்தம், பங்களாதேஷ் யுத்தம், வியட்நாம் யுத்தம் எவ்வளவு யுத்தங்கள். ஆனாலும் இன்று வேறு கவலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. ஆக்சுவலி எதுக்கு சண்டைப் போட்டாங்கன்னு யோசிச்சா சங்கடமா இருக்கு. சமீபத்துல ஒரு போலந்து படம் பார்த்தேன். இது யதேட்சையா நடந்தது. ஜெர்மன் போலந்து மேலதான் முதல்ல படையெடுத்தாங்க. முதல்ல இருந்தே ஜெர்மனோட திட்டம் என்னான்னா ஜூசை எல்லாத்தையும் ஒழிச்சிடனும்ங்கறது. அந்தப் படத்துல வர்றவன் ஒரு ஜூ. அவன் ஒரு பியானோயிஸ்ட். அவன் ஜெர்மன் ஆர்மிகிட்ட மாட்டிக்கிறான். ஆர்மி ‘நீ யாரு’ன்னு கேட்கிறான். இவன் பியானோயிஸ்ட்னு சொல்றான். அப்ப பக்கத்து அறையில இருந்து ஒரு பியானோவ எடுத்து வந்து வாசிக்கத் தர்றான் ஆர்மி. இவன் பியானோ வாசிச்சே பல வருஷங்கள் ஆயிடுச்சு. யுத்தத்துக்கு முன்னாடி வரைக்கும் வாசிக்க அவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்புறம் மேல இல்லாம போயிடுச்சு. அப்ப ரொம்ப இடைவெளி வந்தாச்சு. அவனோட கையெல்லாம் பரபரக்குது. ஆனாலும் வாசிக்கிறான். பிரமாதமா வாசிக்கிறான். அப்ப அந்த ஆர்மி தன் கோட்டைப் பரிசளிக்கிறான். அவ்வளவு வெறிக்கு மத்தியிலேயும் இசையால் அவன் உயிர் பொழச்சிருக்குறான் _ இது அந்தப்படம். நாம எவ்வளவு உயிரை இழந்தோம். அதனால என்னத்த பெருசா சாதிச்சிட்டோம். ஒண்ணுமே கிடையாது. யாரோ நாலுபேர் ஆட்சி செய்றதுக்காக இவ்வளவு சாவுகள். நம்மலால எழுதத்தான் முடியும். வேற என்ன செய்ய முடியும்.
தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்_ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார் இந்திரஜித், சாருநிவேதிதா இவ்வாறு நிறைய.. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?
அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கணும்ங்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்களோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்துலயும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவை பத்தினதுதான். என்ன ஒரு மேன்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கணும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம எழுதுறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு கிடையாது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நெனைக்கிறேன். நான் நெனைக்கிறேன் அவ்வளவுதான். அவங்க வேறமாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் வாங்கி இருக்கிறாரே பாமுக். அவர பாக்குறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்குறாரே ஒழிய, இந்த மாதிரியெல்லாம் எழுதுல. ‘டாக்டர் ஷிவாக்கோ’ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கக்கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.
தீராநதி: மறுமலர்ச்சி அடைந்திருக்கும் தலித் படைப்புகள் குறித்து?
அசோகமித்திரன்: ரொம்ப நாளைக்கு தலித்காரங்ககிட்ட படிப்பே இல்லாம இருந்தது. எழுத்துல இதையெல்லாம் பதிவு செய்யணும். ஓரல் ஹிஸ்டரின்னு இதைச் சொல்லலாம். இப்ப உடனே பதிவு செய்யப்படுறது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி சாத்தியமாச்சு. அப்புறம் எழுதுறதுக்கு ஒரு சாத்தியம் வந்திருக்கு. எல்லா தலித் இலக்கியங்களும் பழையபடி துக்கத்தையும், சோகத்தையும் சொல்லிக்கிட்டே இருந்தா போதாது. வேற மாதிரி வரணும். இந்திய மொழிகள்லயே இந்தியும், மராட்டியும் குறிப்பிட்டுச் சொல்லலாம். தயாபவர் _ மராட்டிய எழுத்தாளர். எனக்கு நல்ல நண்பர். அவரு வீட்டுக்கெல்லாம் வரச்சொல்லி போனபோது என் கையிலேயே துரதிருஷ்டவசமா செத்துப்போனார். அவரை மைனாரட்டின்னு நான் சொன்னப்போ, நீயும் மைனாரட்டிதான்னு சொல்லுவார். அவரு நிறைய எழுதி இருக்கார். அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கார். இங்கேயும் நல்ல எழுத்தெல்லாம் வர்றது. அதுல இன்னும் பிரிவுகள் எல்லாம் வரும். இதையெல்லாம் நான் வரவேற்கிறேன்.
தீராநதி: சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க முடியாம இருக்கிறார்கள் என்ற ரீதியில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.. மறுத்திடாமல் பேசுங்கள்?
அசோகமித்திரன்: இந்தப் பேட்டி சங்கடமானது. இப்படித்தான் டெலிபோன்ல பேட்டி எடுத்தாங்க. பேட்டி எடுக்குறவங்களுக்குன்னு ஒரு சில கருத்துக்கள் இருக்கும். அத நம்ம சொன்னதா சேர்த்து சமயத்துல எழுதிடுவாங்க. இதுவும் அப்படித்தான் நேர்ந்திடுச்சு. இல்லப்பா.. இங்கயெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்குதுன்னேன். என்னோட பையனுங்க அட்மிஷனுக்காக போறப்ப சில கஷ்டங்கள் இருந்தது. ஒரு பையனுக்கும் அவன் கேட்ட குரூப் கிடைக்கல. இதை நாம சொல்றோம். நமக்கு எந்த துவேஷமும் கிடையாது. காந்தியே சொல்லி இருக்கார். கண்ணுக்குக் கண்ணுன்னு நீங்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா உலகத்துல எல்லாம் குருடனா போயிடுவான்னு. வலியுறுத்த வேண்டியதுதான். சொல்ல வேண்டியதுதான். சில நியாயத்தைச் சொல்றோம். நியாயம்னு நமக்கு உடனே தெரியுறதில்ல. சில காலம் கழிச்சி தெரியும். ஸெரீனா வாழ்க்கையில ரெண்டு மூணு வருஷம் எப்படி ஆயிடுச்சு பாருங்க. இந்த மூணு வருஷமும் திரும்பக் கிடைக்குமா அவளுக்கு? பீகாரை எடுத்துகிட்டா அப்படிதான். எங்க முன்னேற்றம் இல்லையோ அங்க கிரைமும் அதிகமும் இருக்கும். உடனே முன்னேறின நாடுகள்ல கிரைம் இல்லையான்னு கேட்கக் கூடாது. பீகாருல திருடுனானன்னு நெத்தியில ஒருத்தனுக்கு சூடு போட்டாங்க. என்ன கொடுமை இது? _ ஆயுள் முழுக்க நெத்தியில சுமந்துகிட்டு திரியவேண்டியது. இப்படி பலபேர் செத்துப் போனங்க. அப்புறம் கண்ணை குருடடிச்சு விட்டுடுறது. இவன் யாரு அவன் கண்ணை குருடடிக்க. திருடினான்னா உன்னால நிரூபிக்க முடிஞ்சா எவ்வளவு சிறை வாசமோ அதக் கொடுக்க வேண்டியதுதானே. சித்துவ எடுத்துக்குங்க. அவன்கிட்ட பணம் காசு இருக்கு. அப்பாவிங்க என்ன செய்வாங்க. சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும்.
(நன்றி: தீராநதி )
Posted by IdlyVadai at 1/20/2007 09:23:00 AM 1 comments
Labels: பத்திரிக்கை, பேட்டி
Friday, January 19, 2007
கூட்டணி மந்திரிசபை - கருணாநிதி அதிரடி முடிவு!
காங்கிரஸ், பாமகவுக்கு தலா இரண்டு அமைச்சர் பதவி - கருணாநிதி அதிரடி முடிவு
தமிழக அரசியலில் அதிரடி திருப்பமாக கூட்டணி கட்சிகளுக்கு மந்திரிசபையில் பங்கு கொடுக்க முதலமைச்சர் கருணாநிதி திட்ட மிட்டிருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ், பாமக ஆகிய கட்சி களுக்கு தலா இரண்டு அமைச்சர் பதவிகளும், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு அமைச்சர் பதவியும் கொடுக்க அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. நடைபெறவிருக்கும் சட்டசபை கூட்டத்திற்கு பின்னர் மந்திரி சபையில் இதற்கான மாற்றங்கள் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
தமிழக வரலாற்றில் நீண்ட காலத்திற்கு பிறகு கூட்டணி மந்திரி சபை அமையவிருப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையில் அதிகபட்சம் 15 சதவீதம் பேர் அமைச்சராகலாம் என்று விதி உள்ளது. இதன்படி தமிழகத்தில் உள்ள 234 உறுப்பினர்களில் 34 பேர் அமைச்சராகலாம். தற்போது தமிழக அமைச்சரவையில் 31 பேர் இடம் பெற்றுள்ளனர்.
கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவையில் பங்களிப்பதற்கு வசதியாக ஏற்கனவே உள்ள அமைச்சர்களில் சரியாக செயல்படாத அமைச்சர்களை நீக்கி விட்டு வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்று தெரிகிறது.
Posted by IdlyVadai at 1/19/2007 04:35:00 PM 6 comments
Labels: செய்திகள்
கலைஞர் பேட்டி - சோ ஸ்பெஷல்
துக்ளக் 37 ஆண்டு விழாவில் சோ சென்ன கருத்துக்கு கலைஞர் பதில்
துக்ளக் ஆண்டு விழா பகுதி-1 படிக்க
கேள்வி: அதிமுகவுடன், பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைக்க வேண்டும் என சோ சொல்லியுள்ளாரே?
கருணாநிதி: ஜெயலலிதாவுக்காக கூட்டணி சேர்க்க அவரும் படாதாபாடு பட்டுக் கொண்டுதான் உள்ளார்.
கேள்வி: திமுக அளித்த வாக்குறுதிகளை .ழுமையாக செய்யாமல் பகுதி பகுதியாக செய்து வருகிறீர்கள் என்று சோ சொல்லியுள்ளாரே?
கருணாநிதி: மகாபாரதத்தை துக்ளக் இதழில் வெளியிடப் போவதாக சோ சொன்னார். அதைப் பகுதி பகுதியாகத்தானே எழுதினார், ஒரே சமயத்தில் எழுதி முடித்து விட்டாரா என்ன?
கேள்வி: 2 ஏக்கர் நிலம் தருவதாக சொன்னார் கருணாநிதி. இப்போது கையளவேனும் தருகிறேன் என்கிறார் என சோ கூறியுள்ளாரே?
கருணாநிதி: நான் சட்டப் பேரவையில் சொன்னது என்ன? கையளவு நிலம்தான் இருக்கிறது என்றாலும் அதை நிலமற்ற ஏழை விவசாயிக்குத்தான் தருவோம் என்றேன். இப்படிச் சொன்னதின் உணர்வுதனை சோ போன்ற எழுத்தாளர்கள் புரிந்து கொள்ளாததுதான் தமிழ்நாட்டின் பெரிய சோகம்.
இந்த ஆட்சியில் இதுவரை இரண்டு கட்டங்களாக மாவட்டந்தோறும்ம நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அவற்றின் வாயிலாக நிலமற்ற ஏழை விவசாயிகளுக்காகவும், விவசாயத் தொழிலாளர்களுக்காகவும் 50,000 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டிருக்கிறது, பாசணக் கிணறும் தோன்டித் தரப்பட்டுள்ளது.
இந்த விவரங்கள் எல்லாம் படங்களுடன் பத்திரிக்கைகளில் வந்துள்ளதே, பத்திரிகைகளைத் தவறாமல் படிக்கும் பழக்கமுடைய சோ கண்களில் எப்படி இந்த விவரங்கள் படாமல் போயின?
கேள்வி: இலவசத் திட்டங்களால் பீகார் அரசு போல அரசு ஊழியர்களுக்குச் சம்பளம் தரக் கூட முடியாத நிலை தமிழகத்திலும் ஏற்படுமோ என சோ கவலை தெரிவித்துள்ளாரே?
கருணாநிதி: ஆடு நனைகிறதே என புலி கவலைப்படுகிறது போலும். அல்லது மக்கள் மத்தியில் கிலி ஏற்படுத்த திட்டம் போலும். ஜெயலலிதா ஆட்சி 56,000 ரூபாய் கடன் சுமையை வைத்து விட்டுச் சென்றது. அதையும் சமாளித்து, மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களையும் நிறைவேற்றும் திறமை இருக்கவே செய்கிறது.
அதற்காக சலுகைகள் வழங்காத சர்வாதிகாரியாகவோ, கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாத கொடுங்கோலர்களாக இருக்க மாட்டோம், ஜெயலலிதாவைப் போல.
கேள்வி: திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டது என்று ஜெயலலிதா எழுதியிருக்கிறாரே.?
கருணாநிதி: ஜெயலலிதாவுக்கு மிகவும் வேண்டிய பத்திரிக்கையாளர் சோ, அவருடைய துக்ளக் இதழில், பெருவாரியான மக்களிடையே இந்த அரசைப் பற்றி இன்னும் அதிருப்தி ஏற்படவில்லை என்றுதான் நானும் நினைக்கிறேன் என்று சோ எழுதியுள்ளார். இந்த உண்மை ஜெயலலிதாவுக்குத் தெரிந்தபோதிலும், தொண்டர்களை நம்ப வைப்பதற்காக இப்படியெல்லாம் அறிக்கை விட வேண்டியுள்ளது.
கேள்வி: வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படை வீரர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளதே?
கருணாநிதி: கடந்த காலத்தில் தமிழக, கர்நாடகப் பகுதிகளில்தமிழக சிறப்பு அதிரடிப்படையினரும், தமிழக, கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை குறித்து மனித உரிமை ஆணையத்தால் விசாரணை நடத்த நீதிபதி சதாசிவம் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது.
அந்த கமிஷன் அறிக்கை அடிப்படையிலேயே பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நிவாரணமாக நிவாரணத் தொகை வழகப்பட்டது. அதற்கான செய்தி அப்போதே வெளிவந்தது. தற்போது மனித உரிமை ஆணையத்தின் பரிந்துரைப்படி அதிகாரப்பூர்வமாக முழு விவரங்களும் கிடைத்த பின்னர் மீதமுள்ள தொகையும்ம பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக விரைவில் வழங்கப்படும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
Posted by IdlyVadai at 1/19/2007 12:21:00 PM 4 comments
துக்ளக் - 37 - 1
Posted by IdlyVadai at 1/19/2007 08:28:00 AM 3 comments
Labels: பத்திரிக்கை
ஆண்களுக்கு ஆபத்து
தை மாதம் பிறந்த நேரம் ஆண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்ற வதந்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் காட்டுத்தீ போல் வேகமாக பரவி வருகிறது. இந்த தோஷத்தில் இருந்து தப்பிக்க வீடுகளுக்கு முன் பெண்கள் விளக்குகள் ஏற்றி வழி படவேண்டும் எனவும் தகவல் பரப்பப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் சென்னை நகரிலும், புதுச்சேரியிலும் பெண்கள் வீட்டில் உள்ள ஆண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அகல் விளக்குகளை வீட்டின் வாசலில் ஏற்றி வழிபட்டு வருகின்றனர்
வலைப்பதிவில் இருக்கும் ஆண்களை காப்பாத்த பெண் வலைப்பதிவர்கள் விளக்குகள் ஏற்றுவார்களா ?
Posted by IdlyVadai at 1/19/2007 01:21:00 AM 7 comments
Labels: நகைச்சுவை
Thursday, January 18, 2007
சிரித்த ஷில்பா , அழுத ஷில்பா
ஷில்பா கண்ணீர் விட்டார் என்று எல்லா செய்தி சேனல்களிலும் வந்துவிட்டது. மத்திய அரசு, டோனி பிளேர் என்று எல்லோரும் அட்டண்டன்ஸ் கொடுத்துவிட்டார்கள். சிரித்தது பற்றி யாரும் பேச வில்லை.அந்த செய்தி கடைசியில்..
செய்தி பற்றி ஒரு அறிமுகம்.
பிக் பிரதர் என்ற வித்தியாசமான நிகழ்ச்சியை இங்கிலாந்தின் சேனல் 4 என்ற தொலைக்காட்சி நடத்தி வருகிறது. உலகின் பிரபலமான 10 பேரை அழைத்து தனி வீட்டில் அவர்களை தங்க வைத்து அவர்களின் தினசரி வாழ்க்கையை காலை முதல் மாலை வரை அப்பட்டமாக படம் பிடித்து ஒளிபரப்புவதுதான் இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்.
இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் வெளியில் உள்ளவர்களுடன் எந்த தொடர்பும் இருக்காது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முதல் பாலிவுட் நட்சத்திரம், முதல் இந்தியர் என்ற பெருமை(?) நடிகை ஷில்பா ஷெட்டிக்கு கிடைத்தது. இதற்கு ஷில்பா ஷெட்டிக்கு ரூ. 3 கோடி சம்பளம். மொத்தம் 25 நாட்களுக்கு ஷில்பா தனி வீட்டில் பிற பிரமுகர்களுடன் இருக்கிறார்.
ஷில்பா மற்றும் அவருடன் பங்கேற்கும் பிரமுகர்களும் கடந்த புதன்கிழமை டிவி நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். ஷில்பாவுடன் ஒரே வீட்டில் தங்கப் போகும் மற்ற பிரபலங்கள்: மைக்கேல் ஜாக்சனின் அண்ணன் ஜெர்மைன் ஜாக்சன், இங்கிலாந்தின் முன்னாள் அழகு ராணி டெனிலா லாய்டு, நடிகர் டிரிக் பெனடிக்ட், நடிகை ஷெலோ ரோக்காஸ், பத்திரிகையாளர் கரோல் மலோன், திரைப்பட இயக்குனர் கென் ஆகியோர் ஆவர்.
பிக் பிரதர் நிகழ்ச்சி குறித்து ஷில்பா கூறுகையில், பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லை. இருந்தாலும் என் சுயமரியாதையையும், கௌரவத்தையும் என்னால் காக்க முடியும் என உறுதியாக நம்புகிறேன் என அவர் கூறினார்.
குளிக்க பயந்த ஷில்பா
வீட்டுக்குள் கேமராக்கள் வைக்கப்பட்டு அவரது நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுவதால் எதையும் சுதந்திரமாக செய்ய முடியாமல் தவித்தார். முக்கியமாக குளிக்க அவர் அச்சப்பட்டார். குளியலறையிலும் கேமராவை வைத்து ஷூட் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் பாத்ரூம் பக்கமே போகாமல் இருந்துள்ளார். கடந்த நான்கு நாட்களாக குளிக்காமல் கொள்ளாமல் அட்ஜஸ்ட் செய்து வந்துள்ளார்.
கூடத் தங்கியிருக்கும் பிரபலங்கள் கேமராவெல்லாம் கிடையாது, தைரியமாக குளியுங்கள் என்று சொல்லியும் அவர் குளிக்கப் பயந்துள்ளார். கை, கால், முகத்தில் மட்டும் தண்ணீரை விட்டுக் கொண்டு வந்துள்ளார்.
அவர் குளிக்க பயப்படுவதை அறிந்த பிக் பிரதர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், பாத்ரூமில் கேமரா கிடையாது என உறுதி அளித்த பின்னர்தான் அவர் சமாதானமடைந்தாராம்.
இனி அவர் சுதந்திரமாக குளிப்பார் என்று நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் புன்னகையுடன் கூறினார். குளித்தாரா, இல்லையா என்பதை ஷில்பாதான் சொல்ல வேண்டும்.
அவமதிப்பு - கண்ணீர்
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடன் இருக்கும் பெண் பிரபலங்கள் மூன்று பேரால் ஷில்பா ஷெட்டி இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்ட காட்சிகள் "டிவி'யில் ஒளிபரப்பாகின. ஜடே கூடி, டானிலி லாயிட், ஜோ ஓ மியாரா ஆகியோர் ஷில்பா ஷெட்டியை உடலின் நிறத்தை சுட்டிக் காட்டி இழிவுப்படுத்தியது, நாய் என்று திட்டியது, ஷில்பா சமைத்த உணவை சாப்பிட மறுத்தது இதன் காரணமாக ஷில்பா கண்ணீர் விட்டு அழுதது ஆகிய காட்சிகள் ஒளிபரப்பாகியதால் பிரிட்டன் "டிவி' ரசிகர்கள் கொந்தளிப்பு அடைந்தனர்.
காட்சி இங்கே
பிரபலமான பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் ஜெர்மைன் ஜாக்சன், ஷில்பாவுக்கு "உங்களை குற்றம் சாட்டுகிறவர்கள், தங்கள் முகத்தை முதலில் கண்ணாடியில் பார்த்துக்கொள்ளட்டும்'' என்று ஆறுதல் கூறி தேற்றினார்.
இந்த நிகழ்ச்சியை டி.வி.யில் பார்த்தவர்கள், நடிகை ஷில்பா ஷெட்டி மற்ற போட்டியாளர்களால் அவமானப்படுத்தப்பட்டதாக புகார் கூறி வருகிறார்கள். ஷில்பா ஷெட்டி இந்தியர் என்பதால், அவரிடம் மற்ற போட்டியாளர்கள் இனவெறி உணர்வுடன் நடந்து கொள்வதாக அந்த புகாரில் குறிப்பிட்டு உள்ளனர். ஷில்பாஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம் இவ்வளவு பரபரப்பை ஏற்படுத்தி இருந்த போதிலும், இதுபற்றி ஷில்பாஷெட்டிக்கு இதுபற்றி எதுவும் தெரியாது. காரணம், அவரும், மற்றவர்களும் வெளி உலக தொடர்பு இல்லாமல், அந்த பங்களாவில் இன்னும் தொடந்து வசித்து வருகிறார்கள்.
ஷில்பாவை நாய் என்று சொன்ன காட்சி
இங்கிலாந்தில் டெலிவிஷன் சேனல்களை கண்காணிக்கும் `ஆப்காம்' என்ற அமைப்பிடம் இதுபற்றி 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் புகார் செய்து உள்ளனர். பல மிரட்டல் `இ மெயில்'களும் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இந்த விவகாரம் இங்கிலாந்தில் மட்டுமின்றி இந்தியாவிலும் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டனில் "ஆப் காம்' என்ற அமைப்பு மீடியாக்களில் வெளியாகும் நிகழ்ச்சிகளை கட்டுப் படுத்தும் அமைப் பாக உள்ளது. இந்த அமைப்புக்கு இதுநாள் வரை எட்டாயிரம் வாசகர்கள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் சேனல் 4 "டிவி' நிறுவனத்துக்கும் நேரிடையாக இரண் டாயிரம் வாசகர்கள் போன் மற்றும் இ-மெயில் மூலம் புகார்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து விசாரித்து வருவதாக "ஆப்காம்' அமைப்பு தெரிவித்துள்ளது. பிரிட்டனில் தொழிலாளர் கட்சியை சேர்ந்த எம்.பி., கீத் வாஸ் என்பவர் பார்லிமென்ட்டில் நேற்று முன்தினம் இது தொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். ""அந்த நிகழ்ச்சியில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள், பயன்படுத்தப்பட்ட விதம் ஆகியவை இந்த காலகட்டத்தில் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று'' என்று அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனில் பிரபலமான வெளிநாட்டு வாழ் இந்திய "டிவி' நடிகையான மீரா சியாலும் ஷில்பா ஷெட்டிக்கு ஆதரவாக போர்க்கொடி தூக்கியுள்ளார். இன பாகுபாடு காட்டப்படுவதை எதிர்த்து மேற்கொள்ளப் பட்டுள்ள பிரசாரத்தை அவர் தலைமையேற்று நடத்தி வருகிறார். வாசகர்களின் ஆதரவை இழக்கும் பிரபலங்கள் அந்த வீட்டை விட்டு வெளியேற்றப்படுவர் என்பது தான் " பிக் பிரதர்' நிகழ்ச்சியின் முக்கிய அம்சம். அந்த வகையில், இன பாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப்பட்டதால் பிரிட்டன் வாசகர்களிடம் ஷில்பா ஷெட்டிக்கு நாளுக்கு நாள் ஆதரவு கூடி வருகிறது. தற்போது அவர் இரண்டாவது இடத்தில் பட்டியலிடப்பட்டுள்ளார்.
மத்திய அரசு கவலை
பிரிட்டன் "டிவி' நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி இனபாகுபாடு காட்டி இழிவுப்படுத்தப் பட்டுள்ளது கண்டு மத்திய அரசு கவலை அடைந்துள்ளது. இது குறித்து வெளியுறவு இணை அமைச்சர் ஆனந்த் சர்மா கூறுகையில்,""இந்த பிரச் னையை கவனத்தில் எடுத்து கொண்டுள்ளோம். பிரச்னையின் அனைத்து அம்சங்களையும் பார்க்க வேண்டியுள்ளது. சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக் கப்படும். அனைத்து வகையான இன பாகுபாடுகளையும் இந்தியா அடியோடு எதிர்த்து வருகிறது என்பதை உலகமே அறியும்'' என்றார்.
டோனி பிளேர் கருத்து
நடிகை ஷில்பா ஷெட்டி அவமதிக்கப்பட்ட விவகாரம், இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நேற்று சலசலப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கண்டன தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய இந்திய வம்சாவளி எம்.பி. கெயித் வாஸ், டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் இத்தகைய அவமதிப்பு ஏற்படாமல் தடுக்கப்படுமா? என்று பிரதமர் டோனி பிளேரிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதில் அளித்த டோனி பிளேர், குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியை தான் பார்க்காததால் அதுபற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார். அதே நேரத்தில், நிறவெறி எந்த வடிவத்தில் வந்தாலும் விரும்பத்தக்கது அல்ல. அதை வன்மையாக எதிர்க்கவேண்டும் என்று தனது கண்டனத்தை வெளியிட்டார்.
புனானிக்கு சிரித்த ஷில்பா
பிரபலங்கள் கலந்துரையாடிய போது 'Punani' என்றால் என்ன என்று விவாதித்தனர். அது பற்றிய வீடியோ தொகுப்பு ( இதை பற்றி இதுவரை மத்திய அரசு கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை )
குசுக்கு சிரித்த ஷில்பா.
யரோ குசுவிட்டதற்கு விழுந்து விழுந்து சிரித்த ஷில்பா.
கடைசியாக ஒரு குஜால் சீன் மற்றும் ஒரு குஜால் பாட்டு ரசிகர்களுக்கு
Update 19th Jan 2007
டி.வி.நிகழ்ச்சியில் யாரும் என்னை அவமதிக்கவில்லை: ஷில்பா ஷெட்டி திடீர் பல்டி
`என்னை ஜேட்கூடி அல்லது வேறு கலைஞர்கள் யாரும் அவமதிக்கவில்லை. இனவெறியை தூண்டும் வகையில் யாரும் நடந்து கொள்ளவில்லை என்னை அவமதித்ததாக கூறப்படுவது உண்மை அல்ல என்றே நான் கருதுகிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாதம் நடந்தது உண்மைதான். இதில் இனவெறி எதுவும் இல்லை.
இதற்காக யாரும் என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டியதில்லை. அவர்கள் மன்னிப்பு கேட்கும் நிலை வந்தால் அவர்களிடம் நானும் மன்னிப்பு கேட்கிறேன் என்று ஷில்பா ஷெட்டி `சேனல்-4' டி.வி. நிறுவனத்திடம் கூறியிருக்கிறார்.
ஷில்பா ஷெட்டியை அவமதித்த பென் ஜேட்கூடி மீண்டும் ஷில்பாவிடம் "நான் உனக்கு மரியாதை கொடுக்க தேவையில்லை. நீ இளவரசியாக இருக்கலாம். இது பற்றி எனக்கு கவலை இல்லை'' என்று கூறி வாக்கு வாதம் செய்தார்.
ஷில்பா ஷெட்டி அல்லது ஜேட் கூடி இருவரில் யாராவது ஒருவரை நிகழ்ச்சியில் இருந்து பார்வையாளர்களோ வாக்கெடுப்பு மூலம் நீக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே இந்த டெலிவிஷன் நிகழ்ச்சிக்கான ஒப்பந்தத்தை அதன் விளம்பரதாரர்கள் ரத்து செய்து உள்ளனர்.
வீடியோ படம் பார்க்க
Posted by IdlyVadai at 1/18/2007 03:06:00 PM 7 comments
Labels: செய்திகள்
Wednesday, January 17, 2007
நடுவீட்டில் 'ஆய்' போன கொள்ளையன்!
தட்ஸ் தமிழில் வந்த செய்தி :-)
திருட வந்த இடத்தில் ஒரு பொருளும் கிடைக்காததால் கடுப்பான திருடன், வீட்டின் நடுவே மலம் கழித்து தனது கோபத்தை காட்டிவிட்டுப் போனான்.
சென்னை அருகே மூவரசம்பட்டு செந்தூரன் காலனியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவர் படாளத்தில் தோல் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த மாதம் இவரது அண்ணன் பரமேஸ்வரன் சௌதியிலிருந்து சென்னைக்கு வந்தார்.
ரவிச்சந்திரன் வீட்டு மாடியில் தங்கியிருந்தார். பின்னர் சௌதி திரும்பிச் சென்றார். அதன் பின்னர் மாடி பகுதிக்கு ரவிச்சந்திரன் குடும்பத்தினர் யாரும் போகவில்லை.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு மாடிப் பக்கம் ரவிச்சந்திரன் போனார். அப்போது அறையின் கதவு உடைந்திருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டிருந்தது.
அதிலிருந்த பொருட்கள் அறை முழுவதும் வீசி எறியப்பட்டிருந்தன. இதை விடக் கேவலமாக, அறையின் நடுவே மலம் இருந்தது. எந்தப் பொருளும் கிடைக்காத ஆத்திரத்தில் திருடன் மலம் கழித்து விட்டுச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த 'நாறத்' திருட்டு முயற்சி குறித்து மடிப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ( DNA டெஸ்ட் செய்வார்களா ? )
Posted by IdlyVadai at 1/17/2007 05:54:00 PM 8 comments
Labels: செய்திகள்
99 கவுன்சிலர்கள் பதவி விலக முடிவு!
சென்னை மாநகராட்சிக்கு தேர்தல் நடந்த போது வன்முறை ஏற்பட்டு, முறையாக தேர்தல் நடக்கவில்லை என்று அ.தி.மு.க.தரப்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனை விசாரித்த இரண்டு நீதிபதிகளின் ஒருவரான இப்ராஹிம் கலிபுல்லா, பிரச்னைக்குறிய 99 வார்டுகளிலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று சொல்லியிருந்தார்.இரு நீதிபதிகள் வேறு வேறு கருத்துக்கள் சொல்லியிருந்ததால் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்நிலையில் தி.மு.க.தலைவர் கருணாநிதி, 99 வார்டுகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க.கூட்டணி வேட்பாளர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு மறு தேர்தலை சந்திப்பார்கள் என்று அறிவித்துள்ளார்.
Posted by IdlyVadai at 1/17/2007 05:34:00 PM 5 comments
Labels: செய்திகள்
பகவான் சத்ய சாயிபாபா பாராட்டு விழா !
இட்லிவடையில் கழுகார் செய்தி
இன்றைய மாலை மலர் செய்தி கீழே !
சென்னை நகர மக்கள் குடிநீர் தேவைக்கு கிருஷ்ணா நதிநீர் வழங்க வேண்டும் என கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்தம் கையெழுத்தானது.
மறைந்த பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையே ஒப்பந்தம் நடந்தது.
ஸ்ரீகைலேசம் அணையில் இருந்து சோமசீலா அணைக்கு தண்ணீர் திறக்கப்பட்டு அங் கிருந்து கண்டலேறு அணைக்கு விடப்பட்டு அதன் வழியாக சென்னையை அடுத்த பூண்டி ஏரிக்கு தண்ணீர் விடப்பட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தத்தின்படி 3 மாநில அரசும் தலா 5 டி.எம்.சி. வீதம் 15 டி.எம்.சி. தண்ணீர் சென்னை குடிநீர் தேவைக்கு வழங்கப்பட வேண்டும்.
அந்த ஒப்பந்தத்தின்படி 1996-ம் ஆண்டு சென்னைக்கு தண்ணீர் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் தண்ணீர் வரவில்லை. ஆந்திர மாநிலத் தில் உள்ள கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து தமிழக எல்லை பகுதி வரை கால்வாய் மோசமாக இருந்ததே இதற்கு காரணம்.
கால்வாயின் இருபுறமும் பலம் இல்லாமல் உடைந்து இருந்ததாëல் கிருஷ்ணா நீர் வழியில் வீணானது. இதனால் தண்ணீர் வரவில்லை. குடிநீëர் கிடைக்காமல் சென்னை மக்கள் பாதிக்கப்பட்டதை அறிந்த புட்டபர்த்தி சாய் பாபா கால்வாயை சரி செய்து தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்தார்.
ஸ்ரீசத்திய சாயி சேவா அமைப்பு மூலம் சுமார் ரூ.200 கோடி செலவில் கால்வாய் பலப்படுத்தப்பட்டது. பூண் டிக்கு வரும் நீரின் வேகத்தை தாங்கும் அளவிற்கு கால்வாயின் கரைகள் மேம் படுத்தப்பட்டன.
சாய்பாபாவின் முயற்சியால் சென்னை மக்களுக்கு கிருஷ்ணா நீர் கிடைத்ததையொட்டி அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கில் 21-ந் தேதி காலை 11 மணிக்கு சென்னை மக்கள் சார்பாக நடத்தப்படுகிறது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார். விழாவில் சத்ய சாயிபாபா கலந்து கொள்கிறார்.
தமிழக கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா, மகாராஷ்டிரா கவர்னர் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்-மந்திரிகள் ராஜசேகர ரெட்டி (ஆந்திரா), தேஷ்முக் (மகாராஷ்டிரா), குமாரசாமி (கர்நாடகா), மத்திய மந்திரிகள் சிவராஜ் பட்டீல், லல்லு பிரசாத், தயாநிதி மாறன், மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், மு.க.ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.
சாய்பாபாவுக்கு சென்னை மக்கள் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி குறித்து ஸ்ரீ சத்திய சாயி அமைப்பு அகில இந்திய தலைவர் சீனிவாசன், மாநில தலைவர் ரமணி ஆகியோர் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அவர்கள் கூறியதாவது:-
பகவான் சத்ய சாயிபாபா 10 வருடங்களுக்கு பிறகு நாளை (19-ந் தேதி) சென்னை வருகிறார். சென்னை மக் களின் தாகத்தை தீர்க்க உதவும் வகையில் கண்டலேறு அணை முதல் பூண்டி நீர் தேக்கம் வரை கால்வாய் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பணி 18 மாதங்கள் நடந்தன.
இதன் மூலம் சென்னை மக்களின் குடிநீர் தேவை முழுமையாக பூர்த்தி அடைந்து உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குடிநீர் சேதம் அடை யாமல் முழுமையாக சென்னைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
பாபா டிரஸ்ட் மூலம் இந்த பொதுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.200 கோடி செலவிடப்பட்டது. சாய்பாபாவின் அற்புத சேவையை சென்னை மக்கள் நன்றி தெரிவிக்கும் வகையில் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் விழா நடத்தப்படுகிறது.
உலக மக்கள் நன்றாக இருக்கும் வகையில் திருவான் மிïரில் 10 நாட்கள் யாகம் நடத்தப்படுகிறது. 20-ந் தேதி முதல் நடக்கும் இந்த யாகத்தில் சாய்பாபா கலந்து கொள்கிறார்.
அதிருத்ரயகினம், அதிருத்ர அபிஷேகம் காலை 6 மணி முதல் 11 மணி வரையும் பிற்பகல் 3.30 மணி முதல் 6.30 மணி வரையிலும் நடக்கிறது. இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொள்ளலாம்.
கண்டலேறு-பூண்டி கால்வாய் சீரமைப்பு பணிக்கு என்று யாரிடமும் நன்கொடை பெறவில்லை. முற்றிலும் அறக்கட்டளையின் நன்கொடை நிதியில் இருந்து செய்யப்பட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள். பேட்டியின் போது டிரஸ்ட் உறுப்பினர்கள் பூபாலன், ஆதிமூலம் உடன் இருந்தனர்.
( நன்றி மாலை மலர் )
Posted by IdlyVadai at 1/17/2007 03:30:00 PM 3 comments
Labels: செய்திகள்
30வது புத்தக கண்காட்சி
புத்தக கண்காட்சி பற்றி செய்திகள், படங்கள், வலைப்பதிவுகள் etc.,
Last updated: 23-Jan-2007
Update 23-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - ஒரு பார்வை
சென்னை புத்தகக் கண்காட்சி - கடைசி நாள் - PKS
Update 21-01-07
The Chennai Book Fair !!
Update 20-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - பதினோறாம் நாள் - முதல்வர் வருகை !
பத்தாம் நாள் பற்றி பிகேஸ்
Update 19-01-07
Frankly, i was a bit let down by the content quality
Update 18-01-07
சென்னை புத்தகக் கண்காட்சி - ஒன்பதாம் நாள்
கூட்டீட்டு போனாய்ங்க....
எட்டாம் நாள் பற்றி பிகேஸ்
Update 17-01-07
A Lacklustre Fair...
புத்தகக் கண்காட்சி - கவனித்தவை - பொன்ஸ்
காலச்சுவடு முதல் பஞ்சுமிட்டாய் வரை (Book Fair 2007)
சென்னைப் புத்தகக் கண்காட்சி - மணிகண்டன்
Book Fair 2007 - last three days
Update 16-01-07
A mighty charm of multimedia - the Hindu
ஏழாம் நாள் பற்றி பிகேஸ், சுஜாதா, பத்ரி படங்கள்
30 வது புத்தகக் கண்காட்சி, ஆனால் இவருக்கு இது முதல் முறையாம்!
Book Fair @ Chennai
Chennai Book Fair
வாஸ்து, சோதிடம், சமையல் புத்தகங்கள் இந்த ஆண்டும் வசூலில் பட்டையை கிளப்பும்
Chennai Book Fair - 2007
Prodigyயின் குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் - விமர்சனம்
ஆறாம் நாள் படங்கள் - பிகேஸ்
தன்னுடைய Class Mate இப்போது எடுபடி வேலை செய்கிறார் ( படம் )
புத்தகம் வாங்குபவர் 35 வயது மேல் என்கிறார் இவர் அப்படியா ?
புத்தக கண்காட்சி பற்றி சும்மா அதையும் இதையும் எழுதுகிறேன் என்று நல்லா எழுதியிருக்கிறார் - தீபக் வெங்கட்
இரண்டு முறை சென்று வந்திருக்கிறார். கடைசியாக "Well, I still prefer the cozy airconditioned Landmark !"
நல்ல வேளை எனக்கு நான்கு மணி நேரம் மூச்சா வரவில்லை.
அடடா..நம்ம புத்தகமும்..
Update: 14-01-07
தமிழில் MP3 ஒலிப்புத்தகங்கள் - கிழக்கு பதிப்பகம்
நான்காம் நாள் பற்றி பத்ரி
சென்னைப் புத்தக்கண்காட்சி சில சுவாரசியங்கள்
A walk through the book expo
Visiting the BOOK FAIR
Update: 13-1-07
புத்தகக் கண்காட்சி: புது வரவுகள் மற்றும் முழு விலைப்பட்டியல்
இரண்டாம் நாள் செய்தி - பத்ரி
மூன்றாம் நாள் செய்தி - பத்ரி
குறும்பட விழா -செ.பு.க 3
சுஜாதா புத்தகங்கள் பற்றி தேசிகன்
சென்னை புத்தகக் கண்காட்சி: சென்றதும் கொணர்ந்ததும் - tamilnathy
மூன்றாம் நாள் படங்கள் - PKS ( கொஞ்சம் பெரிய படங்கள் :-)
Update 12-1-07
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் சங்கத்திற்கு சொந்த பணத்தில் இருந்து முதல்-அமைச்சர் கருணாநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார். ( தினத்தந்தி செய்தி )
புத்தக கண்காட்சி 2 நாள் படங்கள் - சென்னபட்டினம்
Update 11-1-07தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இந்த புத்தக கண்காட்சி ஒவ்வொரு ஆண்டும் அண்ணா சாலையில் உள்ள காயிதே மில்லத் அரசினர் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த 30-வது புத்தக கண்காட்சியின் தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவுக்கு தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டி தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
* கண்காட்சியில் மொத்தம் 474 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அரங்குகளை பேட்டரி கார் மூலம் முதல்வர் பார்வையிட்டார்.கலைஞர் பேச்சிலிருந்து சில் பகுதிகள்
* அரசு விழாக்களில் கலந்துகொள்ளும் முக்கிய விருந்தினர்களுக்கு மாலை, பொன்னாடை அணிவிப்பதற்குப் பதிலாக புத்தகங்கள் வழங்க வேண்டும் என்ற வழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இதை ஆணை எனëறு உரைத்தாலும் கூட புத்தகங்கள் மீது நீங்கள் காட்டுகிற மரியாதை என்ற அளவில் எடுத்துக்கொண்டு ஒரு வேண்டுகோளாக ஏற்று இந்த கடைமையை நிறைவேற்றுமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
* சன் டி.வி. நிறுவனத்திடமிருந்து எனது மனைவி மூலம் எனக்கு கிடைத்த பங்குத்தொகையில் ரூ.5 கோடியை வங்கியிலே அறக்கட்டளை பெயரால் டெபாசிட் செய்து அதிலே வருகிற வட்டியை நலிந்தவர்களுக்கு, நோயுற்றவர்களுக்கு, கல்வி தேவைப்படுவோருக்கு உதவி நிதியாக வழங்கிக்கொண்டிருக்கிறோம். அறக்கட்டளை பெயரால் வங்கியிலே போடப்பட்டுள்ள அந்த தொகையில் இருந்து ரூ.1 கோடியை இந்த அமைப்புக்கு தருகிறேன்.
Official Website
வலைத்தள: http://www.bapasi.org/
வலைப்பதிவுகள்
சென்னை புத்தகக் கண்காட்சி - முதல் நாள் ( படங்கள் )
சென்னை புத்தகக் காட்சி: நாள் 1 - பத்ரி
குழந்தைகளுக்கான புத்தகங்கள் - தமிழில்
செய்திகள்:
More space, more books, some films: fair from today - The Hindu
Chennai Book Fair has new venue - The Hindu
Chief Minister's largesse to book publishing industry - The Hindu
தினத்தந்தி செய்தி
தினமலர் செய்தி
தினமணி செய்தி
பதிப்பக செய்திகள்
* 676787 என்ற எண்ணுக்கு start nhm என்று SMS செய்தால் கிழக்கு பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள், விழாக்கள் குறித்த விவரங்கள், தமிழகமெங்கும் நடைபெறும் புத்தகக் கண்காட்சி குறித்த தகவல்கள், புத்தக உலக முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்.
* AnyIndian தரும் பரிசுகள் !
என்ன புத்தகங்கள் வாங்கலாம் ?
Wait for updates.... :-)
பிகு:
புத்தக கண்காட்சி பற்றி பதிவுகள் இருந்தால் பின்னூட்டதில் தெரிவித்தால் இங்கு சேர்க்கிறேன். நன்றி
இந்த பதிவு தினமும் அப்டேட் செய்யப்படும்.
Posted by IdlyVadai at 1/17/2007 01:54:00 PM 25 comments
Labels: புத்தககண்காட்சி-2007
Friday, January 12, 2007
சாய்பாபாவுடன் கருணாநிதி?
இந்த வாரம் ஜூவியில் கழுகார் சொன்ன செய்தி !"ஆத்திகமும் நாத்திகமும் ஒரே மேடையில் கைகுலுக்கப் போகின்றன...’’ என்று அடுத்த செய்திக்கு ரூட் போட்டார்.
நாம் புரியாமல் விழிக்க, "என்ன குழம்பி விட்டீர். புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவும் கருணாநிதியும் நல்ல விஷயம் ஒன்றுக் காக ஒரே மேடையில் தோன்றப் போகிறார்கள். அதைத்தான் சொல்ல வந்தேன்... வீணாகக் குழம்பி தேவை யில்லாத கற்பனையில் ஈடுபடாதீரும்’’ என்று சொல்லிவிட்டு, விஷயத்துக்கு வந்தார்.
"சென்னைக்கு குடிநீர் வழங்கும் கிருஷ்ணா நதிநீர் திட்டம் சில காரணங்களால் இன்னமும் முழுமையடையாமல் இருக்கிறது. இந்தத் திட்டத்தை முழுமையாக முடித்து, எதிர்பார்த்தபடி சென்னை மக்களுக்குத் தண்ணீரைக் கொண்டு வந்து சேர்ப்பதற் கான முயற்சியில் சத்ய சாய் அறக்கட் டளை இறங்கியது. அதற்காக பல கோடி ரூபாய்களை செலவழிக்கவும் அவர் கள் தயாராக இருந்தார்கள். இதற்காக அறிவிப்பு ஒன்றையும் கடந்த சில வருடங் களுக்கு முன்பாக கொடுத்திருந்தார் சாய்பாபா. ஆனால், இந்தத் தொகையைப் பெற்றுக்கொள்ள அப்போதிருந்த அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அதனால் இந்த திட்டம் அறிவிப் போடு நின்றுபோனது. இப்போது அந்த விஷயத்துக்கு உயிரூட்ட முயற்சி எடுத்திருக்கிறது தி.மு.க. தரப்பு. அதைத் தொடர்ந்து அந்தத் திட்டத்துக்காக ஏற்கெனவே அறிவித்தபடி அறக்கட்டளை சார்பில் தொகையைக் கொடுப்பதற்கு முன்வந்திருக்கிறார் சாய்பாபா. இதற்காக வரும் இருபத்தோராம் தேதி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் பிரமாண்ட மாக விழா ஒன்று நடக்கப் போகிறது. அதில் சாய்பாபாவும் தமிழக முதல்வர் கருணாநிதியும் கலந்துகொள்ள போகிறார்கள். ஒரே மேடையில் தோன்றும் இவர்கள், கிருஷ்ணா குடிநீர் கால்வாய் சீரமைப்புப் பணிகளைத் துவக்கி வைத்து, அடுத்தடுத்துத் தமிழகத்தில் நிறைவேற்றப்படவிருக்கும் பல்வேறு திட்டங்களையும் அங்கே அறிவிப்பார்களாம்...’’
"சரி, அ.தி.மு.க. அரசு மீது குற்றச்சாட்டுப் பட்டியல் படிப்பார்களா... மாட்டார்களா?’’
"நல்லது நடக்கும்போது அரசியல் தாக்குதல்கள் வேண்டாம் என்று இரு தரப்பிலுமே நினைக்கிறார்கள். அதனால், அங்கே தாக்குதல் பாலிடிக்ஸுக்கு வேலை இருக்காது என்றே நினைக்கிறேன்.’’
"வெரிகுட்!’’
[ செய்தி: ஜூவி, படம் - இட்லிவடை :-) ]
Posted by IdlyVadai at 1/12/2007 02:15:00 PM 13 comments
Labels: பத்திரிக்கை
Monday, January 08, 2007
கதைக்கு தேவை அதான்!
படங்களைப் பார்த்து விட்டீர்களா? இனி வசனங்களைப் படியுங்கள்.
நமீதா: ஹலோ கொஞ்சம் ஹெல்ப் பண்றீங்களா?
சூர்யா : என்ன ஹெல்ப்மா?
நமீதா : (கையில் இன்ச் டேப்பைக் கொடுத்து) இந்த டேப்பை வச்சு கொஞ்சம் அளக்கணும்.
சூர்யா: ஃப்யூ, இவ்வளவு தானா? எங்க அளக்கணும்?
நமீதா : இங்கே (இடுப்பைக் காட்டுகிறார்)
சூர்யா அளக்கிறார். அளவைப் பார்த்துவிட்டு ‘அடேங்கப்பா’ என்கிறார்.
நமீதா : என்னாச்சு? அசந்துட்டீங்களா? இப்போ இந்த அளவு எடுங்க (தொடையைக் காட்டுகிறார்). தொடையில் டேப்பை சுற்றும் சூர்யா ‘அம்மாடியோவ், திருமலை நாயக்கர் தூண் மாதிரி இருக்கே’ என்கிறார்.
நமீதா: அளவெடுக்கத்தான் சொன்னேன். கமெண்ட் அடிக்க இல்ல. இப்ப இங்க.. என்று கைகளை உயர்த்த... ‘வியாபாரி’ ஷூட்டிங் ஸ்பாட்டில் நின்று கொண்டிருந்த நமக்குப் பயமாக இருந்தது.
"சார், இதெல்லாம் சென்சார்ல தப்பிக்குமா?’’ என்றோம் இயக்குநர் ஷக்தி சிதம்பரத்திடம்.
"சீனை சும்மா வைக்கல. கதை பின்னணியோட வச்சிருக்கோம். அதனால, ஆபாசமாகத் தெரியாது. கதைக்குப் பொருத்தமில்லாம ஆபாசக் காட்சிகளைத் திணிக்கறதல எனக்கு உடன்பாடு கிடையாது’’ என்றார். நம்புவோமாக.
"இந்தக் காட்சில நமீதாவை நடிக்க வைக்கிறதுலதான் ரொம்பக் கஷ்டப்பட்டுட்டோம். ‘ரொம்ப கிளாமரா இருக்கு. நடிக்க மாட்டே’ன்னு தயங்குனாங்க. நாங்கதான் கதைக்கு தேவைனு எடுத்துச் சொல்லி நடிக்க வச்சோம். ஆனா, ஒரே ஒரு கண்டிஷன் கேட்டாங்க.’’
"என்ன கண்டிஷன்?’’
"என்னோட நிஜ அளவுகளைப் படத்துல சொல்லக் கூடாது. அப்புறம் எல்லாரும் கிண்டல் பண்ணுவாங்கனு சொன்னார். நாங்களும் சரின்னு சொல்லிட்டோம்.’’அப்பாடா?! தமிழ் கூறும் நல்லுலகம் பிழைத்தது.
கடைசியாக, இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தந்த கொசுறு தகவல். இந்தக் காட்சி தவிர, மற்ற காட்சிகளிலெல்லாம் நமீதாவுக்குப் புடவைதானாம். :-(
(ஸ்பெஷல் நன்றி: குமுதம் )
Posted by IdlyVadai at 1/08/2007 02:08:00 PM 4 comments
Labels: சினிமா
Friday, January 05, 2007
சதாம் உசேன் - துக்ளக் தலையங்கம்
சதாம் ஹுஸேன் தூக்கு பற்றி துக்ளக் தலையங்கம்
தவறு காண இடமில்லை !
சதாம் ஹுஸேன் தூக்கிலிடப்பட்டது, இந்தியாவில் பலத்த கண்டனத்திற்குள்ளாகியிருக்கிறது. இது வியப்புக்குரியதல்ல.
பொதுவாகவே ஒரு குற்றத்திற்குரிய தண்டனை அளிக்கப்படுகிறபோது, பலர்
மனங்களிலும் குற்றம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, தண்டனையின் கடுமையே பெரிதாகத் தெரிகிறது. அதுவும், தண்டனை பெறுகிறவர் "பெரிய நபர்' என்றால், அதனால் ஏற்படுகிற அதிர்ச்சி பரவலாகவே அமைந்து விடுகிறது. சாதாரண மனிதன் மீது சட்டம் தனது கடுமையைக் காட்டினால் அது சர்வ சாதாரணமான விஷயமாகிறது; அதுவே ஒரு "பெரிய மனிதர்' – அதுவும் ஆட்சி செய்தவர், பெரிய பதவியில்
இருந்தவர் என்றால், மக்கள் சஞ்சலம் அடைகிறார்கள்.
கைது, சிறைவாசம், வழக்கு போன்றவற்றை அம்மாதிரி நபர் சந்திக்க நேர்ந்தால், "அப்படி என்ன யாரும் செய்யாத குற்றத்தை இவர் செய்து விட்டார்? இவரை இப்படி நடத்துகிறவர்கள் மட்டும் யோக்கியர்களா?' என்ற கேள்விகள் பலர் மனதில் எழுகின்றன. காரணம் – மக்கள் மனதில், குறிப்பாக ஆட்சி செய்தவர்கள் பற்றியும், பொதுவாகவே தங்கள் பின்னால் ஒரு கூட்டத்தை வைத்திருப்பவர்கள் பற்றியும், பிரமிப்பு கலந்த, ஒரு எண்ணம் இருக்கிறது; "அவர்கள் நம்மை விட உயர்ந்தவர்கள்' என்ற எண்ணம் பலர் மனதின் அடித்தளத்திலும் இருக்கிறது. அதனால்தான் சட்டம் அவர்களை நோக்கிச் செல்கிறபோது, மக்கள் மனதில் ஒரு நெருடல் உண்டாகிறது. ஆயிரம்தான் ஜனநாயகம், அனைவரும் சமம், மனிதர்களிடையே உயர்வு தாழ்வு கிடையாது என்றெல்லாம் பேசினாலும், "முக்கியஸ்தர்'களை, சட்டம் வித்தியாசமாக நடத்த வேண்டும் என்கிற எண்ணம், நமது மனங்களின் ஆழத்தில் புதைந்து கிடக்கிறது.
இது சரியான நிலை அல்ல; ஆனால் நடைமுறை உண்மை. சதாமுக்கு முன்னால், பல நாடுகளில் பலர் மரண தண்டனைக்கு உள்ளாகி இருக்கிறார்கள்; இனியும் ஆவார்கள். இவற்றில் சில, சர்வாதிகார ஆட்சிகள் தருகிற அநியாயமான தண்டனைகள்; வேறு சில, தவறான தீர்ப்பினால் விளைபவை. இம்மாதிரி நடந்திருக்கிறது; நடக்கிறது; நடக்கும். ஆனால் அவை பற்றியெல்லாம் பத்திரிகைகளில் படிக்கிறபோது, அது அன்றைய செய்தியாக மட்டும் அமைகிறது; அடுத்த நாள் மறந்து விடுகிறது. சதாம் ஹுஸேனைத் தவிர மேலும் இருவர் தூக்கிலிடப்படுவது பற்றி, யாரும் பெரிய சோகத்திற்குள்ளானதாகத் தெரியவில்லை என்பது கவனிக்கத்தக்கது. சதாமுக்கு கிடைத்த தண்டனையோ உலகின் பல பாகங்களில் அதிர்ச்சியையும், கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது.
இத்தனைக்கும், அவர் ஒன்றும் அப்பாவி அல்ல; தன் மீது சுமத்தப்பட்ட "148 பேர் கொலை' என்கிற குற்றத்தை, தான் செய்ததில் தவறில்லை என்றுதான் அவர் வாதாடினாரே தவிர, அம்மாதிரி நடக்கவில்லை என்று கூற அவரால் இயலவில்லை. ஆனால் அவரால் கொலையுண்டவர்கள் சாதாரண மக்கள்; அதனால் அது
அதிர்ச்சியைத் தரவில்லை. அவரோ ஆட்சியில் இருந்தவர்; முக்கியஸ்தர்; ஆகையால் அவருக்கு அளிக்கப்பட்ட தண்டனை அதிர்ச்சியைத் தருகிறது! இது தவறான அணுகுமுறை.
நம்மைப் பொறுத்தவரையில், குற்றம் செய்தவர், குற்றத்திற்கேற்ற தண்டனையைப் பெற்றிருக்கிறார் என்றே கருதுகிறோம். இதனால் ஈராக்கில் அமைதி ஏற்பட்டு விடாது; மாறாக, ஷியாக்கள் மீது ஸுன்னிகள் நடத்துகிற பயங்கரவாதம் மேலும் கடுமையாகக் கூடும். ஆனால் அமைதி கருதி, ஒரு குற்றவாளியிடமிருந்து சட்டம் ஒதுங்கிக் கொள்ளும் என்பது சரியாக இருக்காது. அவர் உயிருடன் இருந்தாலும், அதன் காரணமாக, ஈராக் கலவரங்கள் நின்றுவிடப் போவதில்லை.
தங்களுடைய சர்வாதிகார ஆட்சியில் பல கொடுமைகள் புரிந்த யூகோஸ்லேவியாவின் (ஸெர்பியா) மிலோஷிவிச், சிலியின் பினோசெட் ஆகியோர் சமீப காலத்தில், தங்களுடைய கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆனார்கள். அந்த வரிசையில்தான், சதாம் ஹுஸேனும் தனது கொடுமைகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர் ஆனார். இதில் தவறு காண இடமில்லை.
( நன்றி: துக்ளக் )
Posted by IdlyVadai at 1/05/2007 04:15:00 PM 19 comments
Labels: பத்திரிக்கை