பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, December 04, 2006

விஜயகாந்த் பேட்டி

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்தார். பிறகு அவர் அளித்த பேட்டி..
( நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் )

கேள்வி:- முதல்-அ மைச்சரை சந்தித்ததற்கு ஏதாவது காரணம் உண்டா?

பதில்:- எனது தொகுதி பிரச்சினைகள் குறித்து முதல்- அமைச்சரிடம் மனு கொடுத்தேன். அவற்றை நிறைவேற்ற ஆவன செய்வதாக அவர் உறுதி கூறி உள்ளார்.

அது போல உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரையும் சந்தித்து என் தொகுதி பற்றிய கோரிக்கைகளை தனி தனியாக கொடுத்துள்ளேன்.

3 அமைச்சர்களை மட்டும் சந்திக்க இயலவில்லை. நான் சந்தித்த அனைவரும் என் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்துள்ளனர்.

கே:- ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். தற்போது அமைச்சர்களை சந்தித்துள்ளீர்களே?

ப:- விமர்சிப்பது வேறு. கோரிக்கைகள் வைப்பது வேறு.

கே:- நீர் வளத்துறைக்கு ஒரு அமைச்சர் பதவியை தி.மு.க. கேட்டு பெறவில்லை என்று குறை கூறி இருக்கிறீர்களே?

ப:- நீர் பங்கீட்டில் பிரச்சினை உள்ளதால் அந்த துறைக்கு அமைச்சரை கேட்டு வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீர் தொடர்பான பிரச்சினை இருந்து போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் நீர்வளத்துறை மந்திரியாக இருந்தார்.

மராட்டியத்துக்கும் கர்நாடகத்துக்கும் தற்போது எல்லைப் பிரச்சினை உள்ளது. ஆனால் சிவராஜ் பாட்டீல் (மராட்டியம்) உள்துறை மந்திரியாக உள்ளார்.

எனவே நீர் வளத்துறை மந்திரி பதவியை கேட்டு வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அப்படி வாங்கி இருந்தால் தமிழ்நாட்டுடன் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தண்ணீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் செய்ய இயலாது.

தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி நெய்வேலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டது போல இதற்கும் ஒரு முயற்சி எடுத்து தீர்வு காண வேண்டும்.

கே:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் டைட்டில் போட்டதும் கிளைமாக்சை எதிர் பார்க்கக் கூடாது என்று முதல்வர் கூறி உள்ளாரே?

ப:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் "கிளைமாக்ஸ்''. கேரள அரசின் அறிவிப்பு மற்றொரு "கிளைமாக்ஸ்''. எனவே "கிளைமாக்ஸ்'' வந்த பிறகு மீண்டும் பழைய படத்Ûக் காட்டினால் யாரும் பார்க்கமாட்டார்கள் என்பதுதான் எனது வாதம். ( மிக நல்ல பதில். சூப்பர் )

புதிய அணை கட்டினாலும் எங்களால் முடிந்த அளவுதான் தண்ணீர் கொடுப்போம் என்று கேரளா முதல்- மந்திரி கூறி உள்ளார். (அப்போது ஒரு ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தியை நிருபர் ஒருவரிடம் விஜயகாந்த் படிக்க கூறினார். பிறகு அவர் எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றவர்களை படிக்கச் சொல்லி விபரத்தை தெரிந்து கொள்வேன்'' என்றார்.)

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதுதான் இதற்கு ஒரே தீர்வு. அதற்காகத்தான் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.

கே:- தி.மு.க. மலை போன்றது. சிறு கட்சிகள் மோத வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கூறி உள்ளாரே?

ப:- அவர் சொல்வது நியாயம்தான். ஒரு காலத்தில் மலை போல இருந்த காங்கிரசிடம் மோதித்தான் தி.மு.க. பெரிய கட்சியாக உருவாகியது.

தி.மு.க.விடம் மோதிதான் அ.தி.மு.க. வந்தது. மிகப்பெரிய மலையான ஊட்டி மலையில் கூட 22 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்த உருவம் மாறி விட்டது. எனவே பெரிய கட்சிகளுடன் மோதுவதில் எந்த தவறும் இல்லை.

கே:-ஈழத் தமிழர் பிரச்சினை நீண்டு கொண்டே போகிறதே?

ப:- மண்ணுக்காக போராடுபவர்கள் போராளிகள். காசுக்காக போராடுபவன் அரசியல்வாதி. மண்ணுக்கான போராட்டம் கால தாமதம் ஆனாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதுதான் வரலாறு.

கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?

ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.

என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.

கே:- 3-வது அணி அமைத்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வீர்களா?

ப:- நான் எப்போதும் என்னை முதல் அணியாகவே நினைத்துக் கொள்கிறேன். யாரையும் அழைக்கவில்லை. அவர்களாக வந்தால் சேர்த்துக் கொள்வேன்.

கே:- ஊழலை ஒழிக்க போவதாக சொன்னீர்களே. ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்ப்பது ஏன்?

ப:- ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருந்த மாட்டார்களா? யார் என் கட்சிக்கு வந்தாலும் என் தன்மையில் இருந்து மாறமாட்டேன். என்னை தேடி வருபவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் தவறு இல்லை.

கே:- நீங்கள் ஆட்சியைப் பிடிப்பீர்களா?

ப:- ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் ஆட்சியைப் பிடித்து இருக்கிறார்கள். நாங்களும் நிச்சயம் ஆட்சியை பிடிப்போம்.

கே:- ஜெயலலிதா உங்களை குறை சொல்லி அறிக்கை வெளியிட்டாரே?

ப:- அதை மக்களும் மறந்து விட்டார்கள். நானும் மறந்து விட்டேன். மறப்போம். மன்னிப்போம். ( என்ன ஒரு முதிர்ச்சி )

5 Comments:

Anonymous said...

நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் )


over to Kuzhali for suitable reply :)

IdlyVadai said...

இதையும் பேசியிருக்கார்
" ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களில் பல்வேறு டிவி சேனல்களை நடத்தும் ஒருவருக்கு அதே துறை தொடர்பான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் பொறுப்பை முதலமைச்சர் கருணாநிதி கேட்டு பெற்றுத் தந்திருக்கிறாரே? இது எந்த வகையில் நியாயம்?

மலை போன்ற கட்சிகளுடன் மோதக்கூடாது என்று கருணாநிதி கூறியிருக்கிறார். மலைபோல இருந்த காங்கிரஸ் கட்சியைத்தானே திமுக எதிர்த்தது. சுதந்திரம் வாங்கித்தந்த கட்சியுடனே மோதி திமுக வெற்றிபெற்றது.

அப்போது மலைபோல இருந்த இதே திமுகவுடன் மோதித்தான் அதிமுக பிறந்தது. அதிமுக தனிக்கட்சியாக உருவானதும், எம்ஜிஆர் இருக்கும் வரை கருணாநிதியால் மீண்டும் ஆட்சிக்கு வர முடியவில்லையே?"

VSK said...

அட என்னங்க/
தமிழக மக்களுக்கு நன்மை செய்யவா ஆட்சியைப் பிடிததது?

தன் குடும்ப நலனுக்காக அல்லவா வருமானம் வரும் வசதியான மந்திரி பதவிகளை மத்தியில் கேட்டுப் பெற்றோம்!

இதில் நீர்ப்பாசனத்துறை கேட்கவில்லை என்று குறைபடுகிறீர்களே!

அதை வாங்கிவிட்டு ஒன்றும் செய்யவில்லை என்றாலும் குறைதான் சொல்லப் போகிறீர்கள்!

அதற்கு இதுவே பரவாயில்லை!

:))

மு.கார்த்திகேயன் said...

அநியாயம்..அக்கிரமம்.. கேப்டன்னு ஒருத்தர் அரசியல்ல சேர்ந்துட்டு இப்போ தப்பான பதில் எல்லாம் கொடுத்து நானும் மற்ற அரசியல்வாதிகளுக்கு சளைத்தவன் அல்லன்னு பேசிகிட்டு இருக்கார்..அதுக்கு வரவேற்கிறோம்னு ஒரு சப்போர்ட்..

விஜயகாந்த மேல இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையும் நம்பிக்கையும் போயிடுச்சு.. இந்த பேட்டி பெரும்பாலும் பொய்யான தகவலை தரும் ஜெ. பேட்டிக்கு சற்றும் சளைத்ததல்ல..

நீங்க விஜயகாந்த் சப்போர்ட் பண்ற ஆளுன்னு தெரியும்..ஆனா இந்த அளவுக்கா..

Anonymous said...

"..பல்வேறு டிவி சேனல்களை நடத்தும் ஒருவருக்கு அதே துறை தொடர்பான தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்.."

Vijayakanthuku yaar Minister for 'Information & Broadcasting' nu theriyumaa? Dayanathi Maran is a Minister for "IT & Communications". TV networkum IT & Communicationskum enna samantham? TV network natatharathu Kalanithi Maran not Dayanithi Maran!

Captaina utta.. Karunaindhi, prime minister pathavai kettu vangirukanum..apparum natulla irukura ella nathigallum Tamil Natukey sondhamnu mathidalanu kooda sollvar.

Mothala DMK'kitta ivaru evalavu thuttu vaangikitu eppadi double game aadarararnu sollatum!