பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Sunday, December 03, 2006

வலைப்பதிவில் பெண்கள்

இரண்டு மாதம் முன் குடும்ப வன்முறை சட்டம் வந்தது நினைவிருக்கலாம். மனைவியை அடிக்கும் கணவனுக்கு 20ஆயிரம் அபராதமும் அத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை என்கிறது சட்டம்.

இந்த சட்டம் பற்றி வந்த சில கார்ட்டூன்கள் இங்கே

சில கார்ட்டூன்கள்
1
2
3
4
5
6
7
8
9
10

சமீபத்தில் 'நட்சத்திர பெண்' தனது கட்டுரையில் 'பெண் வலைப்பதிவாளர்' பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.

'நிலா பெண்' கட்டுரையை கட்டுக்கதை என்றார். இதனால் ஆண் வலைப்பதிவாளர்கள் குழம்பி போனார்கள்.

வழக்கம் போல் ஒரு வாக்கு பதிவு சைடுல.. :-)( பயப்படாமல் ஓட்டு போடுங்கள் )


( கார்ட்டூன் உதவி: மதி, தினமணி )

Update: முடிவுகள்:

15 Comments:

IdlyVadai said...

முடிவுகள்.

Premalatha said...

who decides what women do?

when it was claimed that men are the one who dominates (Tamil)blogworld, let me get this right, that most of your voters were men? so, you decide what women do?
Great!
உங்களது நகைச்சுவை உணர்வு is interesting.

Anonymous said...

பிரேமலதா,

இங்க தமிழ்வலைப்பதிவுகள்ல பார்த்தீங்கன்னா, பெண்ணியம் பத்தி ஒரு பெண்ணோட பதிவு வந்தா(அது தவறோ சரியோ) அதுக்கு சப்போர்ட் செய்ற ஆண்கள் மிகமிக அதிகம். நாம ஏதும் சொல்லாட்ட நம்மை பெண்ணிய விரோதின்னு நினைப்பாங்களோன்னு பயந்து, அருமையான பதிவு, நெத்தியடி, பின்னிட்டீங்க, பிரிச்சு மேஞ்சிட்டீங்க, உங்கள் சேவை நாட்டுக்குத் தேவை, உங்க எழுத்து பெண்களின் ஒட்டுமொத்த உலகப் பெண்களின் எழுச்சிக்கேயான பெண்மொழி, பல புரிதல்களைக் கொடுக்கிறது, பல பரிமாணங்களைத் தொடறது, சமூகச் சிடுக்குகளை ஷாம்பூபோட்டு அலசிக் காயப்போட்டிருக்கீங்க, புரியறவங்களுக்குப் புரியணுமே(அதாவது இவரு புரிஞ்சு தன் வீட்டுப் பெண்களை நல்லாத்தான் வெச்சிருக்காருன்னு படிக்கறவன் நினைக்கணுமாம்), நீங்க இதுக்கெல்லாம் மெனக்கெட்டு பதிவுபோடணுமா? இதையெல்லாம் படிச்சு திருந்தவா போறாங்க.......... இப்படி பலபரட்டையா இருக்கும் பின்னூட்டங்கள். இதெல்லாம் யாருன்னு நினைக்கிறீங்க. நீங்க சொல்ற அதே மெஜாரிட்டி ஆண்கள் தான்.

இவங்க போடற ஓட்டு எப்படி இருந்திருக்கணும்? பின்ன ஏன் இப்படி இருக்கு?

பின்னூட்டத்துலயும் ஒன்னையும் பின்னால வாக்கெடுப்புல ஒன்னையும் சொல்றாங்களே, அதைவிடவா பெரிய நகைச்சுவை இட்லிவடையோட இந்தப் பதிவு. யோசிங்க.

இப்படி ஒரு வாக்கெடுப்பு நடத்தி வலைப்பதிவில் பெண்கள், வலைப்பதிவில் ஆண்கள் ரெண்டையும் பத்தி எடுத்துப் போட்ட இட்லிவடைக்கு ஒரு பெரிய ஓ!

Premalatha said...

anon,

:)

எல்லாம் சரி, எம்பேரப் போடற தெஹிரியம் எனக்கிருக்கு. உமக்கு ஏனய்யா இந்தப்பயம்? :)

இன்னோண்ணு, தமிழ் வலைப்பதிவுலகைத்தாண்டி வெளில போகதவங்க குண்டுச்சட்டிக்குள்ள குதிர ஓட்டிக்கிட்டு நிறயப் பேர் இருக்காங்கங்கிறதும் இட்லிவடையோட வாக்கெடுப்பு நிரூபணப்படுத்தியிருக்கு. அதாவது, 1) அய்யனார் (இட்லிவடையார்) வாக்கெடுக்கணும்னு தின்க்லாம் பண்ணினி பெரீசா முடிவெல்லாம் எடுத்தார் பாருங்கோ, புல்லரிக்குது. 2) ஓட்டுப்போட்டாய்ங்க பாருங்க.. அடா அடா, என்னே என்னே!. வாழ்க தமிழ். வளர்க தமிழ்.

irony is, இட்லியும், வடையும் என்னோட fav items. என்னக் கடத்திட்டுப்போகணும்னா ரெண்டு இட்லி ரெண்டு வட (உளுந்த வட) ஒரு தட்டுல போட்டு..... எனக்கு வேறென்ன தெரியும், பொட்டக்களுத.

Premalatha said...

anon சொல்றமாதிரி "இந்த" ;) மாதிரி ஆம்பளைகளப் பத்தி ஒரு வாக்கெடுப்பு எடுங்களேன் இட்லி அய்யா (note, I am addressing you with atmost respect, "atmost" in my terms).

Premalatha said...

desipundit-ல நான் contribute பண்ணிக்கிட்டிருந்த காலத்துல "புது வருட வாழ்த்துக்கள்"னு இட்லிவடையோட பதிவை link பண்ணியிருந்ததா ஞாபகம். அதுக்கப்புறம் இப்போத்தேன் இங்கிட்டு வர முடிஞ்சுது. மன்னிக்கணும். நீங்க பெரீய்ய பருப்புன்னு, oops, பதிவர்னு தெரியாது.

Premalatha said...

anon,

by the way, மெய்யாலுமே உங்க points நெத்தியடி. மெய்யாலுமே பிரிச்சு மேய்ஞ்சுட்டீங்க. கிண்டலா சொல்லல. நிசம்மா சொல்றேன், I agree with you 200%.

நிலா said...

//'நிலா பெண்' கட்டுரையை கட்டுக்கதை என்றார். //

இட்லி வடை,
இது என்ன புதுசா நாரதர் வேலையெல்லாம்? நல்லாதானே இருந்தீங்க :-)))

நான் சொல்ல வந்ததெல்லாம் சிம்பிள்: 'ஓவர் சென்சிடிவா எல்லாத்தையும் பாக்காதீங்க. நம்ம பலத்தை நாமே குறைச்சு மதிப்பிட்டுக் கொள்ள வேண்டாம்' - இதுக்கும் நீங்க கட்டுக்கதைன்னு நான் சொன்னதா சொல்றதுக்கும் வித்தியாசம் இருக்குங்க...

வேண்டாம்... நல்லால்ல... சொல்லிட்டேன் :-)))) (கைப்பு ஸ்டைல்ல படிங்க)

Anonymous said...

பிரேமலதா, பழைய பதிவு ஒண்ணு உங்க பார்வைக்கு. முக்கியமா கமெண்டுகளைப் படிக்கவும். அனானி ஐயா நீங்களும்தான் :-)

http://urpudathathu.blogspot.com/2005/03/blog-post_17.html

-ramachandran usha

IdlyVadai said...

பதிவு போட்டு இவ்வளவு நாள் கழித்து விவாதாமா - பெண் புத்தி பின் புத்தி என்று இதனால் தான் சொன்னார்களா ? :-)

IdlyVadai said...

நிலாவே //கட்டுரையை கட்டுக்கதை// ரைமிங்கா இருக்கில்ல (கைப்பு ஸ்டைல்ல படிங்க)

Premalatha said...

ஆண்புத்தி கோணல் புத்தின்னு சொன்னத குறிச்சு வைச்சுக்கலயா? :)ஏன், எழுதினது ஆம்பிளையா? :)

பெண் கொஞ்சம் பிஸியா இருந்தா. அதா லேட்டாயிருச்சு. அதோட இட்லி என்னோட ரேடார்ல இல்ல. உசா, பொன்ஸ்கிட்டயிருந்து இங்க வந்தேன்.

IdlyVadai said...

//ஆண்புத்தி கோணல் புத்தின்னு// தமிழ்மணத்தை எல்லோரும் எழுதுவதை பார்த்தாலே இது தெரியும் :-).

//அதோட இட்லி என்னோட ரேடார்ல இல்ல.//

:-)))( சந்தோஷம் )

//உசா, பொன்ஸ்கிட்டயிருந்து இங்க வந்தேன்.//

:-((( ( வருத்தம் )

மொத்த பின்னூட்டத்திற்கும் :-)

Premalatha said...

சந்தோசம் புரியுது :)

ஏன் வருத்தம்? நான் இங்க வந்ததே உங்களுக்கு வருத்தமா?

Anonymous said...

பிரேமலதா, இணைய சூப்பர் ஸ்டார் இட்லிவடையாரை தவறாய் நினைக்க வேண்டாம். பின் புத்தி அதாவது பெண் என்பவர்
பின் - ஊசிப்பொன்ற கூர்மையான புத்தியுடைவள் என்கிறார்,
இ.வ, பின் புத்தியா? கொஞ்சம் மேல் கைண்ட் வாசம் அடிக்குது :-)
-Ramachandranusha