சதாம் தூக்கிலிடப்பட்டது சரியா தவறா என்று விவாதிக்கலாம். ஆனால் இதை அமெரிக்கா செய்தது சரியா ? என்றால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் ? இன்று நாம் சாதாமிற்கு கலங்குவது அவர் அமெரிக்காவை எதிர்த்தது தான் காரணம். இதன் பலனை அமெரிக்கா இன்னும் 100 ஆண்டுகளுக்கு அனுபவிக்கும்.
இன்று வந்த The Hindu கார்ட்டூனை நான் பார்க்கும் போது சதாம் துக்கிலிடப்பட்டார் என்று செய்திகள் வந்ததது.
சதாம் உசேன் வாழ்க்கையில் ஏற்பட்ட எழுச்சியும் வீழ்ச்சியும் :
1937 ஏப்ரல். 28:- பாக்தாத் நகருக்கு அருகே உள்ள திக்ரித்தில் அல் அலாஜா கிராமத்தில் ஏழை விவசாய குடும்பத்தில் சதாம் உசேன் பிறந்தார்.
1956 அக். :- இங்கிலாந்து ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசுக்கு எதி ராக போராடினார். `பாத்' கட்சியில் சேர்ந்து தீவிரமாக போராடினார்.
1959:- மன்னர் ஆட்சி அகற்றப்பட்ட ஓராண்டுக்குப் பிறகு பிரதமர் அப்துல் கரீம் காசிமை கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப் பட்டார். நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
1963 பிப். :- பாத் கட்சி புரட்சி செய்து ஆட்சியை பிடித்ததும் சதாம் நாடு திரும்பினார். ஆனால் 9 மாதத்திலேயே பாத் கட்சி ஆட்சி அகற்றப்பட்டது. சதாம் கைது ஆகி சிறையில் அடைக் கப்பட்டார். சிறையில் இருக்கும் போதே கட்சியின் துணை பொதுச் செயலாளராக அவரை தேர்ந்தெடுத்தனர்.
1968 ஜுலை:- பாத் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தது.
1979 ஜுலை. 16:- அதிபர் அகமது உசேன் அப்பகர் பதவி விலகியதை தொடர்ந்து புரட்சி படை கவுன்சில் தலைவர் ஆனார்.
1980 செப். 22:- ஈரான் மீது படையெடுத்து சதாம் உசேன் இந்த எல்லைப்போர் 8 ஆண்டுகளாக நீடித்தது.
1988 மார்ச். 16:- ஈராக் படைகள் விஷவாயு தாக்குதல் நடத்தியது. இதில் ஈராக்கின் ஹால்பூஜா நகரில் உள்ள 5000 பேர் பலியானார்கள்.
1990 அக். 2:- குவைத் மீது போர் தொடுத்தார் சதாம்.
1991 ஜன. 17:- அமெரிக்காவினால் கூட்டுப்படைகள் ஈராக் படையை குவைத்தில் இருந்து விரட்டி அடித்தது. ஈராக் மீது ஐ.நா. பல்வேறு தடைகள் விதித்தது.
1995 :- சதாம் மீண்டும் ஈராக் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 99 சதவீத ஓட்டுகள் அவருக்கு கிடைத்தது.
2002 அக். 15:- மீண்டும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார். குவைத் மீது படையெடுத்ததற்காக இதே ஆண்டில் டிசம்பர் 7-ந் தேதி பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
2003 மார்ச். 20:- பேரழிவு ஆயுதங்கள் தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்தது.
சதாமின் 2 மகன்களும் மோசல் நகரில் குண்டு வீச்சில் கொல்லப்பட்டதாக அமெரிக்க ராணுவம் ஜுலை 22-ந் தேதி அறிவித்தது.
2003 டிச. 14:- பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேன் அமெரிக்க படையினரிடம் சிக்கினார்.
2005 அக்.19:- ஷியா முஸ்லிம்கள் 148 பேரை துஜைல் நகரில் கொன்று குவித்ததாக சதாம் மீது பாக்தாத் கோர்ட்டில் விசாரணை தொடங்கியது.
2006 நவ. 5:- ஷியா மக்கள் 148 பேரை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.
2006 டிச. 26:- சதாம்உசேன் அப்பீல் மனுவை நிராகரித்த மேல் கோர்ட்டு உறுதி செய்தது.
2006 டிச. 30:- பல்நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சதாம்உசேன் தூக்கில் போடப்பட்டார்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Saturday, December 30, 2006
சதாம் உசேன் - எழுச்சியும் வீழ்ச்சியும்
Posted by IdlyVadai at 12/30/2006 02:55:00 PM 4 comments
Labels: செய்திகள்
Wednesday, December 27, 2006
2007-1 டாப் 10-1 லூஸ் டாக்ஸ்
2006ல் எல்லோரும் நிறையவே ஃபிலிம் காமித்தார்கள். ஃபிலிம் என்றால் கூடவே லூஸ் டாக்ஸூம் சேர்ந்து வரும். இதோ 2006 டாப் 10-1 லூஸ் டாக்ஸ்.
1. மண்டபக்காரன் - விஜயகாந்தின் அடுத்த படம்
அரசியலில் சமீபத்தில் குதித்து இவர் வெற்றி பெற, இவருடைய படங்கள் எல்லாம் மண்ணைக் கவ்வியது. முன்பு "ரமணா" என்ற படத்தில் "பொய், தமிழ்ல எனக்குப் பிடிக்காத வார்த்தை!!" என்ற பன்ச் மிகப் பிரபலம் ஆகியது. அதனால் இந்த முறை "மண்டபக்காரன்" படத்திற்கு பொய் என்றால் வெகுண்டு எழும் குழலிக்கு ஒரு வாய்ப்பை அளிக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறார். ஆனால் குழலி மரம் வெட்டும் ஒரு சீன் கட்டாயம் வேண்டும் என்று அடம்பிடிப்பதாக வதந்தி. புதிதாக வெட்ட மரம் எதுவும் பாக்கி இல்லை என்றால் மண்டப வாசலில் கட்டியிருக்கும் வாழைமரத்தையாவது வெட்டவேண்டும் என்று பரபரக்கிறார். ஹீரோ கல்யாண மண்டபத்தில் பாம் வைக்கும் வில்லன்களை எப்படிக் கையாள்கிறார் என்பதே கதை. வசனகர்த்தா என்றாகிவிட்டால் எல்லாப் பகுதியையும் தான் தானே எழுதவேண்டும் என்று குழலியும் இயல்புக்கு மாறாகக் கஷ்டப்பட்டு வடிவேலுவின் நகைச்சுவை 'கைப்புள்ள' பகுதிகளுக்கும் எழுத முயன்று வருகிறார். விஜயகாந்த படத்துக்கான ஹைலைட்டான புள்ளி விபரங்களையும் பொளந்துகட்டி இருக்கிறார். தேவையே இல்லாமல் ரஜினியைத் தாக்கும் வசனங்களையும் அங்கங்கே சேர்ப்பது எதற்கு என்று தெரியவில்லை. எக்கச்சக்க புள்ளி விபரங்களையும் கைநிறைய வைத்துக் கொண்டு பக்கம் பக்கமாகப் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தவர் பாதியில் திடீரென தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம் வெளியிட்டதில் 11 சதம் புள்ளிவிபரப் பக்கத்தைக் காணவில்லை என்று எங்கே எங்கே என்று தேடக் கிளம்பிவிட்டார். எப்போ வருவாரோ? 'பொழுதுபோகாம இட்லிக்கும் வடைக்கும் சர்வே எடுத்துண்டிருந்த ஆளை எல்லாம் கேப்டனுக்கு வசனம் எழுதவெச்சா இதுதான் கதி' என்று லைட்பாய் நமுட்டுச் சிரிப்புடன் பகிர்ந்துகொண்டது.
2. ஈ-தமிழ் - குடும்பம் ஒரு தேன்கூடு
வெள்ளித் திரையின் பக்கம் நெடுநாட்களுக்குப் பின் 'ஈ-தமிழில்' அடியெடுத்து வைத்திருக்கும் 'குடும்ப' இயக்குநர் வி. சேகர் கதைக் கருவை 'அசுர' வேகத்தில் பட்டியலிட்டு நண்பர் ஒருவருடன் சேர்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே ஈ என்று ஒரு படம் வந்துவிட்டதால், E-Tamil என்று ஆங்கிலத்திலும், வரிவிலக்குக்கு ஆசைப்பட்டு ஈ-தமிழ் என்று தமிழிலும் பெயர் வைத்துள்ளார். இவர் சீரியஸாகப் பேசிய ஆடியோ பேச்சுகள் 'ஒரே காமெடியாக இருக்கு!..' என்று நண்பர்கள் சொல்லுவதால் இந்தப் படத்தில் இவரே பாடவும் செய்வார் என்று பேசிக்கொள்கிறார்கள். படம் வெளியாகும் போது, தியேட்டரில் பிரகாசமான திரைப்பட 'அக்ரகேட்டர்' ஒன்று ஆரம்பிக்கும் பணியிலும் மும்முரமாக இருக்கிறார். "எதுக்கு ரிஸ்க், இப்படி ஓசியில மத்தவங்க படங்களுக்கும் விளம்பரம் தேவையா?" என்று கேட்டால், "நம்ம படம் அந்த அக்ரகேட்டர்ல வரவே வராது. அக்ரகேட்டர்ல வர படத்தையெல்லாம் பாத்துட்டு நம்ப படமே தேவலைன்னு எல்லாம் திரும்பி வந்துடுவாங்க" என்று ஒரே போடாகப் போடுகிறார். வர மாட்டார்களா பின்னே, இவர்தான் சொல்லி அடிப்பதில் 'கில்லி' ஆயிற்றே!. படம் பாத்துவிட்டு வெளியே வருபவர்களை "சார் படம் எப்படி இருக்கு?" என்று டிவிக்காரர்கள் கேட்பது போல், இந்தப் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களை, "சார், படத்தில் பிடித்த காட்சி எது?" என்று கேட்கிறார்கள். எல்லோரும் கடைசியில் "சுபம்" ரொம்ப சூப்பர் என்கிறார்கள்.
3. தசாவதாரம் முடியுமா ?
கமல் தான் நடிக்கும் தசாவதாரம் படத்தை எப்படி எடுக்கலாம் என்று குழம்பிப் போயிருக்கிறார். பத்து வேஷம் போட வேண்டும் என்றால் சும்மாவா? சவாலாக தினமும் ஒரு மேக்கப் போட்டு பழக்கப் பட்ட பொன்ஸ் தீடீர் என்று ஏதோ புரட்சிகரமான புத்தகத்தைப் படித்துவிட்டு நான் யானைக்கு தான் மேக்கப் போடுவேன் மனிதருக்கு இல்லை என்று குட்டையைக் குழப்பிவிட்டார். இப்போது திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் பாதிக்கு மேல் இடதுகையால் எச்சில்தொட்டு அழித்துவிட்டு வலதுகையால் வாசுகியை எழுதச் சொல்லவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அம்மணி காதல், கற்பு, கல்யாணம், பிள்ளைக்குட்டி என்று எல்லாவற்றையும் கட்டுடைக்கும் ஜூரவேகத்தில் இருந்தாலும் மேக்கப்வுமன் காமிராவுக்குப் பின் தான் இருக்கவேண்டும், முன்னால் அல்ல என்பதில் மட்டும் பிடிவாதமாக இருக்கிற(பம்முகிற) முரணைத்தான் புரிந்துகொள்ள முடியாமல் திரையுலகம் திணறுகிறது. இவர் இதுவரை மேக்கப் போட்ட 'கமல் பக்கங்கள்' டைட்டில் ஜஸ்டிஃபை ஆகி இருப்பதால், Fire box தொழில்நுட்பத் திரையரங்குகளில் சரிவரத் தெரியாது. படத்தில் கமல் ஒரு சாஃப்ட்வேர் இஞ்சினியர். எனினும், கதைக் களம் சரவண பவனிலும், சென்னைப் பூங்காக்களிலுமே மாறி மாறிச் சுழலும் என்கிறார் படத்தின் பி.ஆர்.ஓ.
4. ஆழ்வார் படம் எப்படி?
காட்ஃபாதர் தந்த வெற்றியில் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறார் அஜீத். அடுத்த படம் ஆழ்வாரில் இவருக்கு கதை வசனம் எழுத தேசிகனை அணுகியிருக்கிறார். (அவர் சுஜாதாவை அனுகியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள்.) 33% பெண்மை கலந்து நடித்ததற்கே இவ்வளவு பாராட்டு என்றால் முழுக்க முழுக்க பெண்ணாக நடித்தால் நிறைய பாராட்டு வரும் என்று டைரக்டரை நச்சரித்துக் கொண்டிருக்கிறார். தேசிகன் படம் என்பதால், படத்தில் இவர் தினமும் திருப்பாவை பாடுகிறார். நோன்பு இருப்பது, கோலம் போடுவது போன்ற காட்சிகளே படத்தில் ஏராளம். படத்தில் 'என் பேர் ஆண்டாள்' என்று பாடிக்கொண்டே வரும் ஓப்பனிங் சீன் அஜீத் ரசிகர்களுக்கு விருந்து. தல தல என்று தலை முழுக்க தலைமயிர் (விக்கு தாங்க) வைத்துகொண்டு பட்டையைக் கிளப்பியிருக்கிறார். சில சீன்களில் தேவை இல்லாமல் தப்புத் தப்பாக ஹிந்தி பேசுவதற்குத் தான் பலர் முகம் சுளிக்கிறார்கள். படம் முழுக்க எதாவது ஒரு கோயிலில் ஷூட்டிங் நடத்த வேண்டியிருப்பதில் நிறைய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருப்பதால், செட்போட்டு நடத்திவிடத் தீர்மானித்திருக்கிறது ஆழ்வார் யூனிட். யதார்த்தத்தை தத்ரூபமாகக் கொண்டுவருவதில் புலியான ஆர்ட் டைரக்டர் சாபுசிரிலுடன் கோவில் செட் அருகே அமைக்க பெரியார் சிலையின் வடிவமைப்பை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தார். படத்தில் வரும் சுரேஷ் தனியாக வந்து காமெடி பண்ணுகிறார். அவர் வரும் போது ஃபிளாஷ் காட்சிகள் திருட்டுப் பட வீசிடியில் பினாத்தலாக படம் பார்ப்பது போல் இருக்கிறது என்கிறார்கள்.
5. சின்ன வெங்காயம் பெரிய வெங்காயம்
சத்யராஜ் பெரியார் படத்திற்குப் பிறகு அடுத்தப் படத்திற்கு மும்முரமாகி இருக்கிறார். படத்தின் பெயர் "சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம்" என்று பூஜை போட்டிருக்கிறார்கள். நமக்குப் பழக்கப்பட்ட இரண்டு கோஷ்டிகளின் கதை. ஒரு கோஷ்டி பெரிய வெங்காயத்தை உரித்துக் கொண்டிருக்கிறது, இன்னொரு கோஷ்டி சின்ன வெங்காயத்தை உரிக்கிறது. யார் நிறைய உரிக்கிறார்கள் என்பதே கதை. பெரிய வெங்காயத்தை உரிக்கும் கோஷ்டி நிறைய கெட்ட வார்த்தைகளைப் பேசி விறுவிறுவென எல்லோர் மனத்திலும் இடம் பிடிக்கிறார்கள். சின்ன வெங்காயத்தை உரிக்கும் கோஷ்டி வெங்காயத்தை உரிக்க மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்தக் காட்சிப் படப்பிடிப்பிலேயே மக்கள் கண்ணீர் விடுகிறார்கள். (வெங்காயம் உரித்தால் கண்ணெரியாமல் என்ன ஆகும்?). இதனால் தமிழ்மணம் கம்பைன்ஸ் என்ற பெயரையே தயாரிப்பு நிர்வாகம் வெங்காயமணம் என்று மாற்றினாலும் மாற்றுவார்கள் என்று பேச்சு. பெரியார் படத்தில் குஷ்புவுடன் நடித்து அலுத்துப் போனதால். இந்தப் படத்தில் நமிதாவுடன் ஒரு குத்தாட்டம் போட வேண்டும் என்று கதையை விவாதித்துக் கொண்டிருக்கிறார் படத்தின் ஹீரோ.
இதற்கு இடையில் அதே கதையே ஒட்டுக்கேட்டு உல்டாவாக்கி "துபாயில் சின்ன பெரிய வெங்காயம்" என்று ஹரிஹரன் ஃபிலிம்ஸ் புதிதாகத் துவங்கிப் படமெடுத்து வருவதாக வந்த செய்தியில் தயாரிப்பு நிர்வாகமும் யூனிட்டும் கொஞ்சம் அதிர்ந்தும் குழம்பியும் போனதால் படப்பிடிப்பில் வேகம் குறைந்திருக்கிறது. தொடர்ந்து எடுத்தால் யார் படம் வெற்றி பெறும், யார் கையைச் சுட்டுக் கொள்வார்கள், எது அசல் எது சுட்டது என்பது போன்ற பரபரப்பான சண்டைக் காட்சிகள் திரைத் துறையில் அரங்கேறப் போவது உறுதி. இந்தப் படத்தின் கதையைச் சுடுபவர்கள் Intellectual Property rights(IP) சட்டம் மூலம் கைது செய்யப்படுவார்கள் என்று சொல்லுகிறார்கள்.
கிளைமாக்ஸ் காட்சியில் மாயவரத்திலிருந்து பாசஞ்சர் டிரேயின் பிடித்து மலேசியா சென்று போலிஸில் புகார் செய்கிறார்கள். ஆனால் கடைசியில் இருவர் உரிக்கும் வெங்காயமும் இட்லிவடைக்கு (இது போல்)தொட்டுக்கொள்ள சாம்பாராகிறது என்பது தான் கதை.
6. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் ( தமிழ் பெயர் சென்னப்பட்டிணம் )
இயக்குனர் பாலா பிதாமகன் ஸ்டைலில் மீண்டும் ஒரு படம் எடுக்க உள்ளார். படம் பெயர் என்ன என்று முடிவாக வில்லை ஆனால் திருவாளர் கோயிந்தா திருவாளர் குழந்தையா என்று விவாதிக்கப்படுகிறது. இதிலும் புரிந்துகொள்ள முடியாத ஹீரோ ரோல். ஹீரோ பார்ப்பதற்கு எவ்வளவு சீரியசாக இருந்தாலும் யாரும் அவரை சிந்தனாவாதியாக ஏற்றுக்கொள்ளாமல் கலாய்ப்பதிலேயே முடிகிறது. உணர்ச்சிவசப்பட்டாலும், கோபப்பட்டாலும் கூட திரையரங்கில் அனைவரும் சிரிக்கப் போவது உறுதி என்று படப்பிடிப்புக் குழு நம்புவதால் முழுநீளக் காமெடிப் படமாக இருக்கலாம். படத்தில் ஹீரோவின் பஞ்ச் டயலாக் "யூ டூ..." மட்டுமே இதுவரை படத்தில் மொத்தம் 539 தடவைகள் வருகிறது.
படப்பிடிப்பில் ஒரு காட்சி:
பஸ் கண்டக்டர்: ஆங் பனகல் பார்க் எல்லாம் இறங்கு
ஹீரோ: தி.நகர் பனகல் பார்க்கா?
கண்டக்டர்: அட ஆமாம் இறங்குய்ய்யா.. ரைட் ரைட்..
ஹீரோ: ஐயோ நான் மாட்டேன். இங்க பார்க்கே கண்ணுக்குத் தெரியலை.
கண்டக்டர்: அடச் சே ஒரு முடிவோட தான் கிளம்புவானுங்க போல, யோவ் சா..., நீ என்ன ஊருக்குப் புச்சா? அங்க எங்க போவணும்?
ஹீரோ: நான் தான் "சென்னப்பட்டிணம்" தலை. பனகல் பார்க்ல எங்க மாநாடு.
கண்டக்டர்: ஊரே உனக்கு சரியாத் தெரியலை. இந்த லட்சணத்துக்கு நீ சென்னப்பட்டின தலையா? பின்ன உன் வாலெல்லாம் எப்படி இருக்கும்? இறங்குய்யா..
படத்தைத் தூக்கி நிறுத்த விஜய் கெஸ்ட் ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால் நடுவில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, விஜய் என்ற பெயரைக் கேட்டாலே ஜூட் என்று ஓடுகிறார் ஹீரோ. இவரைத் தொடர்ந்து மற்றவர்களும் ஓட, பார்ப்பதற்கு வைகோ நடைப் பயணம் போல் இருப்பதாகக் கோடம்பாக்கம் கெக்கலிக்கிறது.
7. ரவி'ஸ் ஏஞ்சல்ஸ்
Charlies' Angels என்கிற ஆங்கில படத்தின் உல்டா என்று சொல்லுகிறார்கள். சார்லியாக ரவியும் ஏஞ்சலஸ்(?)'ஆக மூன்று பெண்களும் நடிக்கும் படம் என்கிறார்கள். படத்தின் தமிழ் பெயர் - திமிரு, கொழுப்பு, தெனாவெட்டு; இதில் வரும் பெண்கள் அனைவருமே கலக்கியிருக்கிறார்கள். "பெண்களுக்கே இயல்பாக உள்ளவற்றை நடிக்க சொல்லித்தர வேண்டுமா?" என்கிறார்கள் அதில் நடிக்கும் துடிப்புள்ள பெண்கள். சார்லி ( ரவி) ஒரு பெண்ணை தற்கொலையிலிருந்து காப்பாற்ற முயல்கிறார். அந்த மூன்று பெண்களும் சார்லிக்கு உதவுகிறார்கள். அப்போது அவர்களிடையே சண்டை வருகிறது.அவர்களது ரசிகர்களுக்குள்ளும் சண்டை விரிவுபடுகிறது. இந்தக் குழப்பத்தில் சார்லி துண்டைக் காணேம் துணியை காணேம் என்று ஓடுகிறார். இந்த மூன்று பெண்கள் குழாயடி சண்டை போடுவதை பார்த்து அந்த பெண் மீண்டும் தற்கொலைக்கு முயல்கிறார் என்பதே கதையில் டிவிஸ்ட்.
8. இம்சை அரசன் 23.5 புலிகேசி
ஹீரோ காமெடி ரோல் பண்ணும் வித்தியாசமான படம். லக்கி என்பவர் பார்ப்பதற்கு நல்ல லுக்காக இருக்கிறார் என்பதால் அவர் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சமீபத்தில் இந்தப் பட பூஜை சென்னையில் நடந்தது நினைவிருக்கலாம். அந்தப் பூஜையில் சிகப்பு-கருப்பு (யூனிஃபார்ம்) சொக்காயில் ஷோக்காக வந்திருந்தார். அப்பொழுது யாரோ போகிற போக்கில், "உன் லுக் மட்டும் நன்னா இருந்தால் போதாதுடா கண்ணா, நீ மத்தவாளைப் பார்க்கற லுக்கும் நன்னா இருக்கவேண்டாமோ?!" என்று சாம்பிராணி போட்டதில் இவர் இந்தப் படத்தில் குங்குமத்தால் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டு எல்லோருக்கும் நல்லவனாய் அடுத்த வருடம் நான் தான் நம்பர் 1 என்று வசனம் பேசிக்கொண்டு கலந்துகட்டியான புதுவித கெட்டப்பில் வருவார் என்று எதிர்பார்க்கபடுகிறார். இதனால் பொங்கிப் போன லக்கியின் 'பக்க'பலங்களிடம் "வேஷம் எதானால் என்ன, இதெல்லாம் சும்மா டைம் பாஸ்தான்" என்கிறார் சம்பந்தமே இல்லாமல் 'மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்' என்ற எம்.ஜி.ஆர் பாடலும் கட்டாயம் படத்தில் தனக்கு இருக்கவேண்டும் என்று வற்புறுத்துவதில் தான் பட யூனிட் கொஞ்சம் குழம்பிப் போயிருக்கிறது.
9. மீண்டும் குமரன் ?
M.Kumaran - Son of Mahalakshmi என்ற படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இவர் M.குமரன் (மீண்டும் குமரன் என்று வரிவிலக்கிற்காக மாற்றம் செய்யபட்டுள்ளது. ) என்ற பெயரில் படம் எடுக்க உள்ளார். கதை என்னவோ பழைய முருகன், பிள்ளையார் மாம்பழக் கதையின் தெலுங்கு உல்டா தான். முருகன் என்ற குமரன் தமிழ்மணம் தான், தமிழுக்கும் தனக்கும் வாழ்க்கை கொடுத்ததாகக் கூறிக்கொண்டே அதே பெற்றோர் தனக்குக் கொடுத்தது தான் கொடுத்தார்; துர்மணம் கொண்ட அழுகல் மாம்பழத்தை அல்லவா கொடுத்தார் என்று கோபித்துக்கொண்டு உலகத்தைச் சுற்றக் கிளம்புவது திரைக்கதைக்குப் புதுசு கண்ணா புதுசு. அப்படிச் சுற்றும் போதே வெளிநாட்டில் லவ் செய்வது, டுயட் பாடுவது எல்லாம் செய்கிறார். முன்பு மயில் மேல் சென்றார். ஆனால் இதில் மயிலார் இவருக்குத் தோழர்; படத்தில் இவர்தான் ஓரளவு சிரிப்பு மூட்டுகிறார். பெற்றோர் இதுபற்றி எல்லாம் கவலைப்படாமல் தான் பிடித்த முயலுக்கு கருப்பே கலர் என்று விடாப்பிடியாக இருப்பதும் சுற்றி நின்ற சிவலோகத்தார் 'கருப்பு தான் எனக்கு பிடித்த கலரு..' என்று பாடத் தொடங்குவதும் கதையில் யாருமே எதிர்பாராத அல்லது சிலர் சரியாகவே எதிர்பார்த்த ட்விஸ்ட். குமரன் கடைசியில் தன் பெற்றோருடன் சேருகிறாரா, பெற்றோர் அதற்காக ஏதாவது கவலைப்பட்டு முயற்சி எடுக்கிறார்களா, அல்லது நாடகமாடித்தான் அவரைக் கழட்டிவிடார்களா? குமரன் குணமாகி மணத்தில் சேருகிறாரா, அல்லது கோபித்துக் குன்றமேருகிறாரா? தமிழ்மணமா, தமிழ் மானமா என்பதே மீதிக் கதை!.
பிகு : ஃபோட்டொ போட்டால் டென்ஷாகிறார்கள். புதுவருட ஆரம்பத்தில் டென்ஷன் வேண்டாம் என்று போடவில்லை. புத்தாண்டு வாழ்த்துக்கள்..மீண்டும் 2007ல் சந்திப்போம் :-)
Posted by IdlyVadai at 12/27/2006 10:04:00 AM 22 comments
Labels: இட்லிவடை ஸ்பெஷல்
Monday, December 25, 2006
வைகோ நாட் அவுட் !
பரபரப்பான சூழ்நிலையில் ம.தி.மு.க. உயர் நிலைக் கூட்டம் தாயகத்தில் இன்று காலை கூடியது.
இதில் கலந்து கொள்வதற்காக பொது செயலாளர் வைகோ காலை 10 மணிக்கு தாயகம் வந்தார். அங்கு ஆயிரக்கணக்கான தொண்டர்களும், கட்சி நிர்வாகிகளும் கூடி இருந்தனர்.
வைகோவைப் பார்த்ததும் "புரட்சிப் புயல் வைகோ வாழ்க'' என்று உணர்ச்சி பொங்க வாழ்த்து கோஷம் எழுப்பி வரவேற்றனர். தாயகம் முன்பு உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து விட்டு தொண்டர்கள் மத்தியில் வைகோ ஆவேசமாக பேசினார்.
அப்போது உணர்ச்சி மிகுதியால் கண்ணீர் விட்டு கதறி அழுதார். வைகோ வந்ததும் கூட்டம் தொடங்கியது. முன்னதாக தாயகத்தில் தொண்டர் வைத்திருந்த கேக் வெட்டி கிறிஸ்துமஸ் கொண்டாடினார். நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் வழங்கினார்.
தொண்டர்கள் மத்தியில் வைகோ பேசியதாவது:-
ம.தி.மு.க.வை எத்தனையோ கஷ்டங்களை சந்தித்து வளர்த்தோம். 5 உயிர்களை இழந்தோம். தாயகம் என்ற பெயரில் புதிய கட்சி அலுவலகத்தையும் திறந்தோம்.
இந்த அலுவலகம் சாதாரணமாக கட்டப்பட்டது அல்ல. ஜோசப் என்பவர் ஏசு பிறந்த ஊரான பெத்லகேம் சென்று அங்கிருந்து புனித நீரை எடுத்து வந்து தெளித்து வாஸ்து முறைப்படி கட்டப்பட்டது.
13 வருடங்களாக எந்த வன்முறையிலும் ஈடுபடாமல், யாருக்கும் தீங்கு செய்யாமல் கட்சி நடத்துகிறோம். கலவரம் நிற்க வேண்டும், சாந்தி தழைக்க வேண்டும் என்பதே விருப்பம். கிறிஸ்துமஸ் பண்டிகையை கூட அந்த நோக்கத்தில்தான் இன்று கொண்டாடுகிறார்கள்.
ம.தி.மு.க. உருவான வரலாறை நினைத்துப்பார்க்கிறேன். கொலைகார பழி சுமத்தி வெளியேற்றினார்கள். பலர் மடிந்தனர். பொட்டல் காட்டில் நின்று கட்சி வளர்த்தோம். வீதி வீதியாக பணம் திரட்டி புதிய கட்டிடம் கட்டினோம். இதற்காக பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. இந்த தாயகம்தான் எனக்கு கோவில், மசூதி, தேவாலயம்.
குருவிக்குத்தான் கூடு கட்டிய கஷ்டம் தெரியும். ஏழை விவசாயி மனைவி மக்களுடன், மண்ணைப் பிசைந்து சுவர் எழுப்பி ஓலைகள் கட்டி குடிசை செய்து உள்ளே குடியேறுகிறான். அந்த விவசாயிக்குத்தான் கூரை வீட்டின் அருமை தெரியும். அவர்களைப் போலத்தான் தாயகத்தை கட்டினோம்.
1994 ஜனவரி 15-ல் இந்த அலுவலகம் திறக்கப்பட்ட போது என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தோம். அண்ணாவின் தாயகம் நினைவுக்கு வந்தது. அந்த பெயரை சூட்டினோம். இது எல்லோரும் கூடும் தாயகம் நம் அனைவருக்கும் வீடு. இதனை உருவாக்கப்பட்டபாடுகள் ஏராளம்.
இப்படி வளர்க்கப்பட்ட இயக்கத்தை நிர்மூலம் செய்ய திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இந்த நேரத்தில் யாரும் ஆத்திரப்படக்கூடாது. அமைதி காக்க வேண்டும். பழிச்சொல்லுக்கு பழக்கப்பட்டவர்கள் நாம் துயரப்படுகிறவர்கள் பாக்கியவான்கள். சாந்த குணம் உள்ளவர்கள் பாக்கிய வான்கள்.
13 வருடங்களாக கட்சி நடத்துகிறோம். எந்த கலவரத்திலும் ஈடுபட்டது இல்லை. பொதுமக்களுக்கு இடைïறு செய்தது இல்லை. முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக நடை பயணம் சென்றேன். 5 நிமிடம் கூட போக்குவரத்து நின்றது இல்லை.
நமது கட்சிதான் தமிழ் நாட்டுக்கு தேவையான நல்ல கட்சி. ஜெயிக்கலாம், ஜெயிக்காமல் போகலாம். ஓட்டு கிடைக்கலாம், கிடைக்காமல் போகலாம். ஆனால் தமிழ்நாட்டுக்கு நல்ல கட்சி நமது கட்சிதான். தற்போது ம.தி.மு.க.வை அழிக்க சில திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.
அ.தி.மு.க. உடன்பாட்டில் இருந்து நம்மை வெளியேற்றுவது முதல் திட்டம். கலவரம் செய்து நாங்கள்தான் உண்மையான ம.தி.மு.க. என்று அறிவிக்க செய்வது இன்னொரு திட்டம். சதி திட்டங்கள் எங்கு வகுக்கப்பட்டது என்பது உங்களுக்கு தெரியும்.
கடந்த மாதம் 27-ந் தேதி இரவு 10.30 மணிக்கு சி.ஐ.டி. நகர் வீட்டில் முதல்- அமைச்சரை இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளனர். இன்று காலை கூட செஞ்சி ராமச்சந்திரன் ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார்.
200-க்கும் மேற்பட்ட கிரிமினல்கள் போக்கிரிகளுடன் தாயகத்துக்கு உள்ளே வர திட்டமிட்டதாக தகவல் கிடைத்து உள்ளது. அவர்களை தடுத்தால் கலவரம் செய்யவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அவர்களுடன் சேர்ந்து தாக்குதல் நடத்த தயாராக இருப்பதாக தகவல் வந்துள்ளது.
கடைசி நேரத்தில் இது மாறலாம். உள்ளே நுழையும்போது நீங்கள் தடுத்தால் கைகலப்பில் ஈடுபடுவார்கள். அதன் பிறகு மாநகராட்சி தேர்தலில் நடந்ததுபோல வன்முறைகள் நிகழும். எனவே எந்த கட்டத்திலும் ஆத்திரப்படாதீர்கள்.
ம.தி.மு.க. என்ற கட்சியே இருக்க கூடாது என்பதுதான் அவர்கள் திட்டம். ஜெயிலில் இருந்து வெளிவர உதவும்படி நான் மன்றாடியதாக பழி சொல்லப்பட்டுள்ளது. நான் ஜெயிலில் இருந்து வெளிவர விரும்பாமல் தான் உள்ளே இருந்தேன். யாரிடமும் மன்றாடவில்லை. இன்னும் என் மீது வழக்கு உள்ளது.
தேர்தலில் ஆதரவு வேண்டும் என்று கேட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும். நான் போய் கண்ணீர் விட்டு கதறி அழுதேனாம். தி.மு.க. வுக்கு ஆபத்து வந்த காலங்களில் கூட கட்சியை பாது காக்க போராடியவன். கட்சிப் பதவியில் இருந்து எல். கணேசன், செஞ்சி ராமச்சந்திரனை நீக்கினோம்.
கோர்ட்டில் அதற்கு மட்டும்தான் தடை பெறப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தை நடத்த தடை இல்லை. அவர்களே பொதுக்குழுவை கூட்டுவதாக அறிவித்துள்ளனர். அதன் பிறகு இங்கே ஏன் வர வேண்டும். தி.மு.க. தொண்டர்களுக்கும், எங்களுக்கும் பகை இல்லை. நீங்கள் குறுக்கே வராதீர்கள்
ரவுடிகள் வரட்டும், போலீஸ் வரட்டும் அறவழியில் எதிர்ப்போம். என்னையும் தாக்க திட்டமிட்டுள்ளனர். தாயகத்தை பூட்டி விட வேண்டும். இந்த கட்சி இருக்ககூடாது. அலுவலகம் இயங்க கூடாது என்று நினைக்கிறார்கள். பூட்டி போடவும் திட்டமிடுகிறார்கள்.
அப்படிப்பட்ட அநீதி நடந்தால் பொட்டல் காட்டில் நின்று கூட கட்சியை நடத்துவேன். என் உடம்பில் உயிர் இருக்கும் வரை கட்சியை வளர்ப்பேன். எனக்கு பிறகு லட்சோப லட்சம் தொண்டர்கள் வளர்ப்போம். எதற்கும் அஞ்ச மாட்டோம்.
(இவ்வாறு கூறும்போது வைகோ கண்கலங்கி அழுதார்)
எங்கள் மனதில் கள்ளம் இல்லை, துரோகம் இல்லை, எது நடந்தாலும் சந்திப்போம், கலவரம் செய்து தாயகத்தை பூட்டி விடலாம் ஆனால் நாங்கள் வாழும் தமிழக மக்களின் இதயங்களை பூட்ட முடியாது.
இவ்வாறு அவர் பேசினார்.
இன்றைய கூட்டத்தில் மொத்தம் உள்ள 36 மாவட்ட செயலாளர்களில் 33 பேர் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் தியாகபாடி எல்.கணேசனுக்கு ஆதரவு தெரிவித்து இருப்பதால் அவர் கலந்து கொள்ள வில்லை.
கோவை, புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உடல் நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். நீலகிரி மாவட்ட செயலாளர் நஞ்சன் அமெரிக்கா சென்று உள்ளார். இவர்கள் இருவரும் வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர்.
பொருளாளர் கண்ணப்பன், மல்லை சத்யா, பட அதிபர் எஸ்.தாணு, செய்தி தொடர்பாளர் நன்மாறன், சென்னை மாவட்ட செயலாளர்கள் வேளச்சேரி மணிமாறன், ஜீவன், எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், வீர.இளவரசன், ஞானதாஸ், டாக்டர் சதன்திருமலை குமார், வரதராஜன், மாநில நிர்வாகிகள் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், சீமா பஷீர், மனோகரா, ராமமூர்த்தி, குமாரி விஜயகுமார், தேவ தாஸ், அருணாசலம், பாளை. குருநாதன், உள்பட ஏராள மானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஏற்கனவே கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட எல்.கணேசன் செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோரை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்க வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
தென்மாவட்ட விவசாயிகளின் ஜீவாதார பிரச்சினையான முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக நடை பயணம் மேற்கொண்டு மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்த்தமைக்காக வைகோவுக்கு நன்றி தெரிவிப்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
நன்றி: மாலைமலர்
செஞ்சி ராமச்சந்திரன் காமெடி:
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ விலகினால் எங்களது முடிவை மறு பரிசீலனை செய்வதற்கு தயாராக இருக்கிறோம், என்று செஞ்சி ராமச்சந்திரன் கூறினார். இதுகுறித்து நிருபர்களிடம் ராமச்சந்திரன் கூறியதாவது: நடக்கும் பிரச்னைக்கு அரசியல் காரணமல்ல. தமிழினக் கொள்கை தான் கட்சியின் முக்கிய அம்சம். ஆனால், கட்சியின் கொள்கையில் இருந்து வைகோ தடம் மாறிச் சென்று விட்டார். இலங்கைத் தமிழர்கள் பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும் என்று வைகோவிடம் வலியுறுத்தி வந்தோம்.
தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறிக் கொண்டே இருப்பதால் இந்திய அளவில் நம்பகத்தன்மை இல்லாத தலைவராக வைகோ இருக்கிறார். இது கட்சிக்கு நல்லதல்ல. தேர்தல் முடிந்த பிறகு அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறி இருக்க வேண்டும்; செய்யவில்லை. இப்போதாவது அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறினால் எங்களது முடிவை மறுபரிசீலனை செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.
ஆற்காடு வீராசாமி காமெடி:
தமிழக முதல்வரை களங்கப்படுத்தியதற்காக வைகோ மீது வழக்கு தொடரபோவதாக திமுக கூறியுள்ளது.
மதிமுகவில் ஏற்படும் குழப்பங்களுக்கு காரணம் திமுக தலைவர் கருணாநிதியே காரணம் என மதிமுக பொது செயலர் வைகோ கூறியிருந்தார். இது கருணாநிதியை களங்கப்படுத்தும் விதமாக உள்ளதால் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்போவதாக திமுக அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார். மேலும் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிக்கை மீதும் வழக்கு தொடரபோவதாக கூறியுள்ளார்.
Posted by IdlyVadai at 12/25/2006 09:34:00 PM 0 comments
Labels: அரசியல்
Thursday, December 21, 2006
வைகோ பேசினார்
நேற்று ஆண்டிப்பட்டியில் நடை பயண விளக்க பொதுக்கூட்டத்தில் வைகோ பேச்சு "கம்பம் பள்ளத்தாக்கு உள்பட தெற்கு சீமை சகாரா பாலைவனமாக மாறிவிடக்கூடாது என்பதற்காக மக்களிடம் பெரியாறு அணை உரிமை நமக்கு என்பதை எடுத்து காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்த நடைபயணம் மேற்கொண்டு இருக்கிறோம்.
இந்த நடை பயணம் மக்களிடையே பொய்த்து போக கேரள முதல்-மந்திரி அச்சுதானந்தன் முயற்சி செய்தால் பரவாயில்லை. நம் தாய் தமிழகத்தில் ஆட்சி பொறுப்பில் உள்ள மைனாரிட்டி அரசு நடத்துபவர்கள் முதல்- அமைச்சர் நாற்காலியில் அமர்ந்து இருப்பவர்கள் இந்த நடை பயணத்தை பாழாக்க நினைக்கிறார்கள். எனது கவனத்தை திசை திருப்ப திட்டமிட்டு சதி செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தி.மு.க. செய்யும் இந்த முயற்சிக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும். நான் எனது கவனத்தை சிதறவிடமாட்டேன். இலக்கு நோக்கி செல்வேன். நடைபயணம் முடிந்ததும் ம.தி.மு.க.வை சேதப்படுத்த நினைப்பவர்களை பார்த்துக் கொள்கிறேன்.
முல்லை பெரியாறு அணை பிரச்சினையில் தமிழகத்தின் உரிமையை காக்க தி.மு.க. அரசு தவறி விட்டது. பெரியாறு அணை பிரச்சினையில் தமிழர்களின் வாழ்வோடு விளையாடினால் இளைஞர்கள் மனதில் விபரீத சிந்தனைகள் வளர்ந்து விடும். இதற்கு கேரள அரசு வித்திடக்கூடாது. எனவே மத்திய அரசு உடனடியாக தலையிட்டு கேரள அரசின் அடாவடிதனத்தை அடக்க வேண்டும்"
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் பிரிவால் மதிமுக விக்கு பாதிப்பு இருக்கமா ? போக போக தான் தெரியும்.
Posted by IdlyVadai at 12/21/2006 01:12:00 PM 7 comments
Labels: அரசியல்
Wednesday, December 20, 2006
எல்.கணேசன் வைகோவிற்கு டாட்டா என்கிறார்
ஜூவியில் "வைகோவுக்கு நெருக்கடி" என்று படித்த போது, சரி இன்னும் சில வாரங்களில் இது நடக்கும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இன்று தினமணி, தினமலர் செய்திகளை பார்த்தால் இன்னும் இரண்டு நாட்களில் இந்த செய்தி பரபரப்பாக இருக்கும் போல இருக்கிறது.
தினமலர் செய்தியில் எல்.கணேசனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்று சொல்லுகிறார்கள். பார்க்கலாம்.
மூன்றில் ஒரு பங்கு எம்.பி.,க்கள் கட்சி மாறினால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் பதவியை பறிக்க முடியாது. அதனால் செஞ்சி ராமச்சந்திரனும் மாறுவார் என்று தெரிகிறது.
"வைகோ அடிக்கடி கூட்டணி மாறியதால் மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார்" - எல்.கணேசன். அதே போல் இடஒதுக்கீடு விவகாரத்தில் தமிழக முதல்வர் கருணாநிதியின் சாதனையை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.
தனது மகள் திருமணத்தை முதல்வர் கருணாநிதி முன்னிலையில் தான் நடத்தப் போவதாக செஞ்சி ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
வைகோ இது பற்றி எதுவும் பேசவில்லை. என்ன பேச முடியும் ?
Posted by IdlyVadai at 12/20/2006 12:55:00 AM 5 comments
Labels: அரசியல்
Tuesday, December 19, 2006
2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 3
சிறந்த புதுவித அறிமுக நடிகர். ஏற்கனவே ஸ்டீரியோடைப்பாக பழக்கப்பட்ட ஒருவரை, இதுவரை வேறு உதிரி பாத்திரங்களில் நடித்தவர் புதுமுகமாக தோன்றியது)
2006 - சிறந்த புதுவித அறிமுக நடிகர் நாமினேஷன்'ஸ்:
( நாமினேஷன் உதவி - பாஸ்டன் பாலா )
1. இம்சை அரசன் - நகைச்சுவை நடிகர் வடிவேலு
2. வெயில் - பசுபதி
3. தலைநகரம் - சுந்தர் சி
4. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - பாக்யராஜ்
5. உயிர் - சங்கீதா
சைடில ஓட்டு :)
Posted by IdlyVadai at 12/19/2006 08:54:00 AM 1 comments
Labels: வாக்கெடுப்பு
Saturday, December 16, 2006
2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 2
ஆங்கிலம் விலக்கு = வரிவிலக்கு. எது சூப்பர் விளக்கு ?
ஜெயில் கைதிகளுக்கு சிக்கன் சலுகை மாதிரி, தமிழ் சினிமாவுக்கு தமிழில் பெயர் வைத்தால் முழு வரி விலக்கு என்று கலைஞர் அளித்த சலுகை முகமது பின் துக்ளக் செய்யும் காமெடியை 2006ல் மிஞ்சியது. ஏற்கெனவே தமிழ்ப் பெயரோடு வந்த திரைப்படங்கள் ? நோ பிராபளம். மிஸ்ஸியம்மா படத்தை கூட மாத்தலாம் என்று சிக்ஸர் மேல் சிக்ஸர் அடித்தார் கலைஞர்.
உங்க குழந்தையின் பெயர் தமிழில் இருந்தால் படிப்பு இலவசம், கடையின் பெயர் தமிழில் இருந்தால் விற்பனை வரிவிலக்கு, நீங்கள் போகும் பஸ் ஸ்டாண்ட் பெயர் தமிழில் இருந்தால் பஸ் கட்டணம் இலவசம் என்று 2007ல் நடக்கலாம்.
கோடம்பாக்க காரர்களை சும்மா என்று நினைத்துவிட்டீர்களா ? வரலாறு என்று சொல்லிவிட்டு - History of God Father, சிவாஜி என்று சொல்லி விட்டு - The Boss, வாத்தியார் - The Ruler என்று தமிழில் பெயர் வைத்துவிட்டு கீழே ஆங்கிலத்தில் ஒரு எஸ்ஸே எழுதுகிறார்கள். அதைவிடுங்க 90% தமிழ் படங்களில் பேர் காண்பிக்கும் போது(அதாங்க டைட்டில்) ஆங்கிலத்தில் தான் முதலில் காண்பிக்கிறார்கள். இப்படி போஸ்டர்களில், விளம்பரங்களில் பிற மொழிச் சொற்களைப் பயன்படுத்தி விட்டு, ஃபிலிம் போர்டு சான்றிதழில் மட்டும் தமிழ்ப் பெயரை வைப்பதால், தமிழுக்கு அப்படி என்னதான் நல்லது நடக்கப் போகிறதோ, தெரியவில்லை.
'மைடியர் குட்டிச் சாத்தான்' என்று முன்பு ஒரு 3-D படம் வந்தது. அதற்கு வரிவிலக்கு அளித்தார்கள். டிக்கேட் கட்டணம் குறைந்தது. ஆனால் வரிவிலக்கு அளித்த தற்போதைய படங்களுக்கு டிக்கெட் கட்டணம் ? இன்றும்ம் சம்திங் சம்திங் கொடுத்து பிலாக்கில் தான் பார்க்கிறோம். புதிதாக வரி வந்தால், அது மக்கள் தலையில், வரிக்கு விலக்கு வந்தால் மட்டும் அது மக்களுக்கு இல்லையா? இல்லாத வரியை வசூல் செய்து தியேட்டர், விநியோகஸ்தர், தயாரிப் பாளர் ஆகியோர் பங்கிட்டுக் கொள்கிறார்கள். நமக்கு ? 30 ரூபாய் என்று அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டில் 50 ரூபாய் என்று ரப்பர் ஸ்டாம்ப் குத்தி வசூலிக்கிறார்கள். நாமும் பிரிண்ட் சரியாக இல்லை என்றாலும் திருட்டு விசிடியில் பார்த்து, வலைப்பதிவில் விமர்சனம் செய்கிறோம்.
2006 - சிறந்த வரிவிலக்கு நாமினேஷன்'ஸ்:1. சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்: வரி விலக்கு பெற்ற முதல் படம் என்ற பெருமையை தட்டிச் சென்றது. முதலில் 'Something Something உனக்கும் எனக்கும் 'என்று இருந்தது, பிறகு 'சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும' என்று மாறி, கடைசியாக 'உனக்கும் எனக்கும்' என்று மாறியது. இன்றும் போஸ்டர்களில் மட்டும் சம்திங் சம்திங் இருக்கும்.
2. காட்ஃபாதர் - வரலாறு. அஜித் நடித்த படம். கே.எஸ்.ரவிகுமார் ஒரு பேட்டியில் வரிவிலக்கு என்பதால் ரொம்ப சந்தோஷம் என்று சொல்லியிருந்தார். வரலாறு என்று சொல்லிவிட்டு Background'ல் கொட்டை எழுத்தில் காட்ஃபாதர் என்று எழுதி ஒரு வரலாறு படைத்தார்.
3. எம்டன் மகன் - எம் மகன் - டன் என்ற சொல்லை டண்டனக்காவாக்கி பெயர் மாற்றம் செய்த படம். கூடிய சீக்கிரம் தமிழ் சினிமா பெயர் மாற்றும்அகராதி போட போவதாக பேசிக்கொள்கிறார்கள். அப்படியா ?
4. ஜில்லுனு ஒரு காதல் - சில்லுனு ஒரு காதல் - ரொம்ப சிம்பிளாக பெயர் மாற்றம் செய்த படம் எது என்றால் இது தான். ஜி எடுத்துவிட்டு சி என்று மாற்றினார்கள். சிவாஜியில் உள்ள 'ஜி'யை என்ன செய்ய போகிறார்கள்? என்னை கேட்டால் நான் என்ன 'The Bossசா?
5. by2 - இருவர் மட்டும். கடைசியாக பெயர் மாற்றம் செய்த படம் இது என்று நினைக்கிறேன். by2 என்பதை மாற்றியதால் வரிவிலக்கு பாதியாக குறையவில்லை, முழுசாக குறைந்தது.
சரி இந்த வருடம் வந்த இந்த படங்களில் எந்த பெயர் மாற்றம் சூப்பர் ? - நீங்களே ஓட்டு போடுங்க ( வழக்கம் போல சைடில .. )
Posted by IdlyVadai at 12/16/2006 08:00:00 PM 5 comments
Labels: வாக்கெடுப்பு
மூடு அவுட் ஆன வைகோ
கல்கியில் கரன் தாபரின் பேட்டி வந்துள்ளது. அதில் தனது அனுபவங்களை சொல்லொயிருக்கிறார்.
கேள்விகளை மட்டும் தருகிறேன். பதில்களுக்கு விஷால் அட்டைப்படம் போட்ட கல்கியை வாங்கி படியுங்கள். (விலை 8/=).
1. வைகோவை எத்ற்காக பேட்டி காண விரும்பினீர்கள்
2. நீங்கள் முதலமைச்சர் கருணாநிதியை பேட்டி காண முயற்சி செய்யவில்லையா ?
3. இன்றைய அரசியல்வாதிகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
4. நீங்கள் பேட்டி கண்டவர்களுள் மறக்க முடியாதவர் யார் ?
அதில் வந்த பாக்ஸ் செய்தி - மூடு அவுட் ஆன வைகோ
டெவில்ஸ் அட்வகேட் ஒளிப்பதிவின் போது "விடுதலை புலிகள், அரசியல் தலைவர்களைக் குறிவைத்துத் தாக்கி அழிப்பது தவிற்க்க முடியாதது. விடுதலைப் போராட்டத்தில் இது சகஜமான ஒன்று என்று வைகோ கூறியபோது, கரன் தாபர் "இந்த வாதம் ராஜிவ் படுகொலைக்கும் பொருந்துமா? என்று மடக்க வைகோ 'மூடு அவுட்' ஆகிவிட, 'சரி, அந்தக் கேள்வியை ஒளிபரப்ப மாட்டோம்' என்று சமாதானம் செய்யும்படியானதாம். அதேபோல், 'அடிக்கடி, கூட்டணி மாறும் நீங்கள் ஒரு சந்தர்ப்ப வாதியா ?" என்று கேட்ட போதும் வைகோ கடுகடுத்துவிட்டாராம்!
ஆனால் மறுநாள், பேட்டியளித்ததற்கு நன்றி தெரிவித்து, கரந்தாபர் கடிதம் எழுத உடனே வைகோ டெல்லிக்கு போன் செய்து வருத்தம் தெரிவித்து. இனி முழு ஒத்துழைப்புத் தருகிறேன். நம் நட்பு தொடரட்டும்" என்று கரன் தாபரிடம் சொன்னாராம்.
கொசுறுகள்:
* ஜெயை டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக்குழு கூட்டத்தின் போது சந்த்தித்தபோது சிரிப்புடன் கை குலுக்கிக் கொண்டார்களாம்.
* ஜெத்மாலனி அவேசமாக பேசினாலும், பேட்டி முடிந்ததும் கூலாக 'வாருங்கள் விஸ்கி சாப்பிடலாம்' என்று அழைத்தாராம்
( வைகோவுடன் கரன் தாப்பர் )
Posted by IdlyVadai at 12/16/2006 06:14:00 AM 0 comments
Labels: பேட்டி
Friday, December 15, 2006
ஜெ - கலைஞர் - கேள்வி பதில்
புதிய அணி, சோனியா, அப்சலுக்கு தூக்கு தண்டனை, பெரியார் சிலை, ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை, இலங்கை பிரச்சினை, கியாஸ் சிலிண்டர், முல்லைப் பெரியாறு, நுழைவுத் தேர்வு ஆகியவை பற்றி ஜெ பேசியுள்ளார். ( நேற்று )
இதற்கு கலைஞர் பதில் அளித்துள்ளார். ( இன்று )
ஜெ - பேட்டி
கேள்வி:- புதிய அணி உருவாகும் என்று கூறியிருந்தீர்களே?
பதில்:- அதற்கான நேரம் இப்போது வரவில்லை. அப்படி வரும்போது உங்களுக்கு தெரிவிக்கிறேன்.
கேள்வி:- எம்.ஜி.ஆர். சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்திக்கு அழைப்பு விடுத்தும் வரவில்லையே?
பதில்:- நான் யாருக்கும் எதிரி அல்ல. சிலர் என்னை எதிரியாக நினைத்தால் அது என் தவறு அல்ல.
கேள்வி:- சரத்பவார் சோனியாவை வெளிநாட்டவர் என்று சொன்னதற்காக வருத்தப்படுகிறேன் என்று கூறியுள்ளாரே? உங்கள் கருத்து என்ன?
பதில்:- என்னைப் பொறுத்தவரை சோனியா காந்தி நாட்டின் பிரதமர் ஆக வருவதை நான் எதிர்த்தேன். சோனியா காந்தி என்ற தனிப்பட்ட பெண்ணை நான் எதிர்க்கவில்லை. அவர் பிரதமராக வரவில்லை. ஆகவே இப்போது எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் இப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார். ஒரு அந்நிய நாட்டு பெண்மணியை தலைவராக ஏற்றுக் கொள்ள காங்கிரஸ் கட்சி தயாராக இருந்தால் அது காங்கிரஸ் கட்சியின் உள்கட்சி விவகாரம். அதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவும் இல்லை.
கேள்வி:- எதிர்காலத்திலும் இதே நிலை தானா?
பதில்:- என்னுடைய கருத்தை நான் தெளிவாக கூறிவிட்டேன்.
கேள்வி:- அப்சலுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது தாமதமாகி வருகிறதே?
பதில்:- தூக்கு தண்டனை கொடுத்தது உச்சநீதிமன்றம். அது நிறைவேற்றப்பட வேண்டும். உச்சநீதிமன்றத்தையே கேள்வி கேட்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை.
கேள்வி:- ராஜீவ் காந்தி கொலையாளிகளுக்கும் தூக்கு தண்டனை தாமதமாகி வருகிறதே?
பதில்:- அதற்கும் என்ன அர்த்தம், ஏன் இப்படி ஆகிறது என்பது தெரியவில்லை. சி.பி.ஐ. ராஜீவ் காந்தி கொலை வழக்கை சிரமப்பட்டு விசாரித்தார்கள். அவர்களுக்கு என்னுடைய ஆட்சிக் காலத்தில் முழு ஒத்துழைப்பும் கொடுக்கப்பட்டது. தனி நீதிமன்ற நீதிபதிக்கும் அச்சுறுத்தல் இருந்தது. அவருக்கு போதிய பாதுகாப்பும் கொடுத்தோம். மாநில அரசின் ஒத்துழைப்பு இல்லாமல், மாநில அரசின் காவல்துறை உதவி இல்லாமல் சி.பி.ஐ. அந்த வழக்கை விசாரித்து முடித்திருக்க முடியாது.
வழக்கில் சிலர் குற்றவாளிகள் என்று கண்டறியப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் கூட இத்தனை ஆண்டுகள் ஆகியும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை என்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றே தெரியவில்லை. இந்தியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் இப்படி நடைபெற வாய்ப்பே இல்லை.
என்னுடைய அரசையும், சி.பி.ஐ.யையும், மாநில காவல்துறையையும் எல்லோருமாக சேர்ந்து முட்டாளாக்கி விட்டார்கள் என்று தான் அர்த்தம்.
கேள்வி:- உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் பிரசாரத்துக்கு செல்வீர்களா?
பதில்:- முலாயம் சிங் யாதவ், அமர் சிங் ஆகியோர் என்னிடம் உத்தரபிரதேசத்தில் நடைபெற இருக்கும் தேர்தலில் பிரசாரம் செய்ய வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். நான் அநேகமாக செல்வேன்.
கேள்வி:- ஸ்ரீரங்கத்தில் வைக்கப்பட்ட பெரியார் சிலை பற்றி?
பதில்:- தீயையும், பஞ்சையும் பக்கத்திலேயே வைத்துவிட்டு, பின்னர் தீப்பற்றிக் கொள்ளாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் அது மிகவும் சிரமமான காரியம். விவேகம், சாதுர்யம், அறிவு உள்ளவர்கள் தீயையும், பஞ்சையும் வேறு வேறு இடங்களில் தான் வைப்பார்கள். பெரியார் சிலை வைப்பதற்கு எத்தனையோ இடங்கள் உள்ளன. வேறு எங்காவது வைத்திருந்தால் இந்த பிரச்சினையே வந்திருக்காது. தமிழ்நாட்டில் ஏராளமான இடங்களில் பெரியார் சிலைகள் உள்ளன. அங்கெல்லாம் இதுபோன்ற பிரச்சினை ஏற்படவில்லையே?
கேள்வி:- உங்கள் கூட்டணியில் உள்ள வைகோ ஈழப்பிரச்சினையில் ஆதரவு தெரிவித்து பேசுகிறாரே?
பதில்:- கூட்டணியில் இருக்கிறார் என்பதற்காக அவருடைய கொள்கைகளை எல்லாம் நாங்கள் ஏற்க வேண்டும் என்பதல்ல. காங்கிரஸ் அரசை கம்யூனிஸ்டுகள் ஆதரிக்கவில்லையா? எங்களைப் பொறுத்தவரை எங்கள் நிலைப்பாட்டை பலமுறை தெளிவுபடுத்தியிருக்கிறேன். இலங்கையில் தமிழர்களுக்கு முழு உரிமையோடும், பாதுகாப்போடும் கண்ணியத்தோடும் வாழ்க்கை நடத்த இலங்கை அரசு வசதி செய்து தரவேண்டும். அதுதான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு. ஆனால் பயங்கரவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் அதனை அ.தி.மு.க. எதிர்க்கும்.
கேள்வி:- சிலிண்டர் தட்டுப்பாடு இருக்கும் இந்த நிலையில் அரசு இலவச கியாஸ் இணைப்பும் அடுப்பும் தரப்போவதாக அறிவித்துள்ளதே?
பதில்:- மக்களை ஏமாற்றுகிற மற்றுமொரு அறிவிப்பு. மக்களை ஏமாற்றுவதற்கு மற்றுமொரு நாடகம். ஏற்கனவே இருக்கின்ற இணைப்புகளுக்கு போதுமான சிலிண்டர்களை வழங்க முடியவில்லை. இன்னும் 3 லட்சம் அல்லது 20 லட்சம் இணைப்புகளை கொடுத்தால் சிலிண்டருக்கு எங்கே போவார்கள். இதற்கு கருணாநிதி தான் பதில் கூற வேண்டும்.
கேள்வி:- இந்தியா அமெரிக்கா அணு ஒப்பந்தம் குறித்து?
பதில்:- இந்த ஒப்பந்தமே சரியில்லை. அதில் இருக்கும் சரத்துகளும் சரியில்லை. இந்தியாவின் இறையாண்மைக்கு இது ஊறுவிளைவிக்கும். இந்தியாவின் இறையாண்மைக்கும் சுதந்திரத்துக்கும், வருங்கால முன்னேற்றத்திற்கும் ஊறு விளைவிக்கும் எந்த ஒப்பந்தத்திலும் இந்தியா கையெழுத்திடக் கூடாது.
கேள்வி:- நுழைவுத் தேர்வை ரத்து செய்து சட்டம் இயற்றியுள்ளது பற்றி?
பதில்:- நாங்கள் நல்ல எண்ணத்துடன் நுழைவுத் தேர்வை ரத்து செய்து 2 முறை சட்டம் கொண்டு வந்தோம். நீதிமன்றம் தான் அதற்கு தடை விதித்தது. இப்போது மீண்டும் ஒரு சட்டத்தை தி.மு.க. அரசு கொண்டு வந்திருக்கிறது. நீதிமன்றத்தில் ஏற்கனவே எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளுக்கு அவர்கள் எந்த வகையில் பதில் சொல்லப் போகிறார்கள். கோர்ட்டில் மீண்டும் அது தடை செய்யப்பட்டால் அது நிற்குமா? என்பது பற்றி அரசு தான் பதில் சொல்ல வேண்டும்.
கேள்வி:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இரு மாநில அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்துவது பற்றி?
பதில்:- மத்திய அரசு முன்னிலையில் இரு மாநில முதல்வர்கள் பேச்சு நடத்த வேண்டும் என்று தான் உச்சநீதிமன்றம் தனது ஆணையில் கூறியிருந்தது. இரு மாநில அமைச்சர்கள் பேச வேண்டும் என்று ஆணையிடவில்லை. உச்சநீதிமன்ற ஆணைப்படி இரு மாநில முதல்வர்கள் சந்தித்து பேசிவிட்டார்கள். அது தோல்வியில் முடிந்தது. அதன் பின்னர் தமிழக முதல்-அமைச்சர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை தான் அணுகியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு நீதிமன்ற ஆணையில் இல்லாத ஒன்றை செய்கிறார்கள் என்றால் இந்த மக்களை மீண்டும் ஏமாற்றுகிறார்கள்.
தமிழக அரசின் சார்பில் வாதாடிய வக்கீல் பராசரன் தேவையற்ற ஒரு கருத்தை சொல்லியிருக்கிறார். அணையை வலுப்படுத்துவதற்கு நாங்கள் செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை கேரள அரசு தடுக்கிறது என்று கூறியுள்ளார். இது வேண்டுமென்றே ஒரு தவறான எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக சொல்லப்பட்ட ஒரு கூற்று. ஏனென்றால் எனது ஆட்சிக் காலத்தின் போதே அணையை வலுப்படுத்துவதற்கான மராமத்துப் பணிகள் அனைத்தும் செய்து முடிக்கப்பட்டுவிட்டன. மத்திய அரசின் அதிகாரிகளும் வந்து பார்த்துவிட்டு அணை வலுவாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறார்கள். அதன் பின்னர் தான் உச்சநீதிமன்றம் எனது ஆட்சிக் காலத்தில் 142 அடி வரை தேக்கலாம் என்று ஆணையிட்டது. இப்படி தீர்ப்பளித்த பிறகு இப்போது மீண்டும் போய் நாங்கள் மராமத்து பணிகளை செய்ய கேரள அரசு தடுத்துக் கொண்டிருக்கிறது என்றால் என்ன அர்த்தம்.
கலைஞர் பேட்டி
மதுரையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா எப்போது துவங்கப்படும்?
தேதி சொல்ல முடியாது. விரைவில் கோவைக்கு அடுத்து திருச்சி, மதுரையில் இதற்கான பணிகள் துவங்கும்.
பெரியார் சிலை பிரச்னையில் நெருப்பும், பஞ்சும் பக்கத்தில் இருப்பதால்தான் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்வதாக முன்னாள் முதல்வர் ஜெ., குற்றம் சாட்டியுள்ளாரே?
ஸ்ரீரங்கத்தில் நகராட்சி தலைவராக வெங்கடேச தீட்சிதர் இருந்த போது தி.க.,விற்கு அந்த இடத்தில் பெரியார் சிலை வைக்க அனுமதியளிக்கப்பட்டது. சில கோபுரங்களில் என்னன்னவோ சிலைகள் உள்ளன. பல கோயில்களில், கோபுரங்களில் உள்ள சிலைகளை எல்லாம் போய் பார்த்தால் புனிதரும், புரட்சியாளருமான பெரியார் சிலை ஒரு கோயில் வாசலில் இருப்பது தவறு இல்லை.
சோனியா பிரதமர் ஆவதைதான் எதிர்த்ததாகவும், தனிப்பட்ட முறையில் எதிர்க்கவில்லை என ஜெ., பேட்டியளித்துள்ளாரே?
சோனியாவுக்கு பதிபக்தி இல்லை என சொன்னார்களே அதற்கு என்ன பெயர்?
பெரியார் சிலை பிரச்னையில் தமிழக அரசு கடமை தவறி விட்டதாக ஜெ., கூறியுள்ளாரே?
அரசு கடமை தவறாத காரணத்தால் பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும், அதற்கு போட்டியாக சில கடவுளர் படங்களை எரித்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருசாரரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு சாரர் மீதும், இன்னொரு சாரருக்கு வேறு விதம் என்றும் பாரபட்சம் காட்டப்படவில்லை. வீரமணி கூறியிருப்பதை போல கடவுளர் படங்களை எரித்தவர்கள் தி.க.,வினர் அல்ல. அவர்கள் பெரியார் தி.க., என்ற அமைப்பை சேர்ந்தவர்கள். யாராக இருந்தாலும் மதவாதிகளையோ அல்லது பகுத்தறிவாதிகளையோ புண்படுத்துகிற எந்த செயலையும் அரசு அனுமதிக்காது.
முல்லைபெரியாறு பிரச்னையில் கேரள முதல்வரின் வெப்சைட்டில் தவறான தகவல்கள் தரப்பட்டுள்ளதே?
முல்லை பெரியாறு பிரச்னையில் மத்திய அரசு சுப்ரீம் கோர்ட் கருத்தை ஏற்று 2 மாநில அரசுகளையும் இதுபற்றி பேச சொல்லியுள்ளபோது கேரள அரசு இத்தகைய குறுக்கு சால் ஓட்டுகின்ற போக்கு நல்லதல்ல. வரும் 18ம் தேதி அமைச்சர்கள் நடத்தும் பேச்சுவார்த்தையில் தமிழகத்திற்கு எந்த பயனும் அளிக்காது என்றால் உடனடியாக சுப்ரீம் கோர்ட்டை நாடுவதை தவிர வேறுவழியில்லை.
பெரியாறு அணை பிரச்னையில் சுப்ரீம் கோர்ட் 2 மாநில முதல்வர்களும் தான் பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டது. அமைச்சர்கள் பேச உத்தரவிடவில்லை என ஜெ., கூறியுள்ளாரே?
இதனை விட பைத்தியக்காரத்தனமாக வேடிக்கையான, தமாஷான வாதம் வேறு இருக்க முடியாது. முதல்வர் பேசினால் அமைச்சர்கள் பேசக்கூடாதா. முதல்வர் மட்டத்தில் பேச சொன்னவுடன் பேசியாச்சு. பேச்சுவார்த்தையில் நடுநாயகமாக இருந்த மத்தியமைச்சர் "விரிவாக பேசுவது என்றால் முதல்வர்கள் அளவில் தேவையில்லை. அமைச்சர்கள் மட்டத்தில் பேசுவது போதுமானது' என தெரிவித்தார். அதுஎப்படி பேச்சுவார்த்தையில் ஒரு பகுதியாகாமல் இருக்க முடியும்? அவர் சொல்கிறார் என்றால் பத்திரிக்கையாளர்களும் வெளியிடுகிறீர்களே. பத்திரிக்கையாளர்கள் என்றால் படித்தவர்கள், நாட்டை உணர்ந்தவர்கள், அரசியல் புரிந்தவர்கள், அறிவு நிறைந்தவர்கள்.
மூன்றரை லட்சம் இலவச காஸ் அடுப்பு என்ற அரசின் அறிவிப்பு வெத்து வேட்டு அறிவிப்பு என ஜெ., கூறியுள்ளாரே?
அதற்கு பதிலாக அந்தம்மாவை "வெத்து வேட்டு' என சொல்ல விரும்பவில்லை. அவங்க ஆட்சியில் இருந்தபோது இலவச அடுப்பு வழங்குவதாக அறிவித்தார்கள். ஆனால் கொடுக்கவில்லை. அதற்கு பெயர் தான் "வெத்து வேட்டு'.
பழனிவேல்ராஜன் அமைச்சராக இருந்த போது முக்கியத்துவம் வாய்ந்த துறை தரப்பட்டது. இப்போது மதுரைக்கு முக்கியத்துவம் வாய்ந்த துறை வழங்கவில்லையே?
உங்களுக்கு வழங்கப்படாது.
பெரியாரும் பெரியாறும் முதல்வரின் நகைச்சுவை : முதல்வர் கருணாநிதியிடம் பேட்டியின் போது பெரியாறு அணை குறித்து நிருபர் ஒருவர் கேட்ட போது ""பெரியாரை பற்றி பேசிக்கொண்டு இருக்கும் போது "பெரியாறு' பற்றி கேட்கிறீர்கள். "முல்லைபெரியாறு' என்று கேளுங்கள்'' என்றார் நகைச்சுவையாக. பேட்டியின் இறுதியில், ""சசிகலா கணவர் நடராஜன் வழக்கு ஒன்றிற்காக உங்களை ரகசியமாக சந்தித்ததாக கூறப்படுகிறதே'' எனக் கேட்ட போது," நீண்ட நேரம் பேட்டி கொடுத்தால் இப்படித்தான் கேள்வி கேட்பீர்களோ' என்று பலத்த சிரிப்புடன் பதிலளித்தார்.
Posted by IdlyVadai at 12/15/2006 06:38:00 PM 0 comments
Labels: பேட்டி
2006 இட்லிவடை அவார்ட்ஸ் - 1
இன்று முதல் தொடங்கி ஒரு வாரத்திற்கு இட்லிவடை - 2006 சிறந்த சினிமா அவார்டுகள் தொடக்கம்.
2006 வருடம் தமிழ் படங்களில் வில்லன்களை விட வில்லிகளே அதிகம். யாரை நாமினேட் செய்வது என்று ஒரே மண்டை குடைச்சல். ஆண்,பெண் என்று வித்தியசம் பார்த்தால் சிலர் கோவிச்சிக்கிறாங்க அதனால் லேடீஸும் இதில் இடம் பெற்றிருக்கிறார்கள். லேடீஸ் சந்தோஷம் தானே ?. (ஆண்களுக்கு கஷ்டப்பட்டு 33% இடஒதிக்கீடு அளிக்கப்பட்டுள்ளது)
2006 - வில்லன்கள்/வில்லிகள் நாமினேஷன்'ஸ்:திமிரு - சிரேயா ரெட்டி
பெயருக்கு ஏற்றபடி பலரும் "திமிரு" பிடித்து அலைந்த படம். ஈஸ்வரியாக வில்லன்களின் தங்கையாக வரும் ஷ்ரேயா ரெட்டி. அடேங்கப்பா எவ்வளவு திமிருடன் அலைந்து... அப்ப்ப்ப்பா.. வருகிற அரை மணி நேரத்தில் நம்மை அதிர வைத்து விட்டுப் போய் விடுகிறார். நடிப்பில் எல்லாரையும் தூக்கி சாப்பிட்டு விடுகிறார்.எம்-மகன் - நாசர்
`மெட்டி ஒலி' மெகா சீரியல் இயக்குநர் திருமுருகன் இயக்க பரத், நாசர், கோபிகா, சரண்யா, வடிவேல், கஜாலா நடித்திருக்கிறார்கள. உழைத்து முன்னேறி இருக்கும் கண்டிப்பான அப்பா நாசர். சிக்கனம், கண்டிப்பு மளிகைக் கடை வேலை.. இப்படியான அப்பா பிள்ளைகளுக்கிடையான உறவு, உரசல், பாசம் என்று அருமையால நடித்திருந்தார்.ஈ- ஆஷிஸ் வித்யார்த்தி
இயற்கை தந்த ஜனநாதனின் அடுத்த படம். முதல் படத்தில் புதிய களம், யதார்த்தமான கதை என்று ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திரும்பிப் பார்க்க வைத்தவர். மருத்துவ துறையில் சில டாக்டர்கள் பணத்துக்காக எதையும் செய்வார்கள் என்பது தெரியும். ஒட்டுமொத்த சமூகத்திற்கும் கேடு விளைவிக்கக்கூடிய ஒரு செய்கையை மக்களுக்கு தெரியாமல் எப்படிச் செய்கிறார்கள் என்பதை ஆஷிஸ் வித்யார்த்தி பசுத்தோல் போர்த்தின புலியாக அழகாக செய்து காண்பித்துள்ளார்.கலாபக் காதலன் - அக்ஷயா
நெல்லை பெண்ணை மணக்கிற சென்னை இளைஞன் ஆர்யா. புதுமண தம்பதிகளின் ரகசிய ரொமான்ஸ்கள்! திடீரென்று வருகிற சூறாவளி போல் வந்து சேர்கிறார் அக்ஷயா. ஆர்யாவின் ஆசை மனைவி ரேணுகா மேனனின் தங்கை! கொழுந்தியாளாக இருந்தாலும் கொஞ்சம் தள்ளியே இரு என்கிற லாஜிக் தெரியாத ஆர்யா, அக்ஷயாவோடு நெருங்கி பழக, அவரோ நான் உன்னை காதலிக்கிறேன் என்கிறார் ஆர்யாவிடம். மனைவியை கூட கொஞ்ச விடாமல் குறுக்கே நுழைகிறது அக்ஷயாவின் அடாவடிதான் அதிகம் ஸ்கோர் பண்ணியிருப்பது. பார்க்க குயிலாக இருந்தாலும், நடிப்பில் ஒயிலாக இருக்கிறார். தன்னை ஊஞ்சலில் வைத்து ஆட்டாத ஆர்யாவிடம் கோபித்துக் கொண்டு ஊஞ்சலையே கழற்றி வைப்பதும், தன் பெற்றோர்களுக்கும், ஆர்யா பெற்றோர்களுக்கும் சண்டை மூட்டிவிட்டு அவர்களை சென்னையை விட்டு விரட்டுவதும், இந்த ஒல்லிக்கார வில்லியின் அட்டகாச அசத்தல்!தலைநகரம் - ஜூடோ ரத்னம்
மிகுந்த தன்னம்பிக்கையுடன் நடித்த சுந்தர் சி படம். பல படங்களுக்கு ஸ்டண்ட்மாஸ்டராக பணிபுரிந்துள்ள ஜூடோ ரத்னம் முதன்முறையாக இப்படத்தில் காசிம்பாய் என்ற வேடத்தில் நடித்திருக்கிறார்.
வழக்கம் போல் சைடில இருக்கும் வாக்குபெட்டியில் உங்கள் ஓட்டை போடுங்கள்.
Posted by IdlyVadai at 12/15/2006 02:15:00 PM 7 comments
Labels: வாக்கெடுப்பு
Thursday, December 14, 2006
ஆன்டன் பாலசிங்கம் காலமானார்
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆன்டன் பாலசிங்கம் (வயது 68) காலமானார். அவருக்கு புற்றுநோய், நீரிழிவு நோய் மற்றும் சிறுநீரக கோளாறு ஆகிய நோய்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது குடும்பத்திற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்
IBN Live செய்தி
Posted by IdlyVadai at 12/14/2006 09:21:00 PM 9 comments
Labels: செய்திகள்
Wednesday, December 13, 2006
காந்தி இருந்திருந்தால் ?
முதலில் இதை பார்க்கவும்
http://www.epica-awards.org/assets/epica/2004/winners/film/flv/11071.htm
காந்தியின் மீது உள்ள நம்பிக்கையை காண்பிக்கிறது. EPICAவின் சிறந்த விளம்பர படம் பரிசு இதற்கு கிடைத்திருக்கிறது.
(இதை எடுத்தவர் ஒரு இந்தியர் இல்லை :-)
Posted by IdlyVadai at 12/13/2006 07:33:00 PM 4 comments
Labels: படம்
ஜனாதிபதி விருதுகள் திருப்பி அளிக்கப்பட்டன
நாடாளுமன்றத்தின் மீது தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தியதன் 5வது ஆண்டு தினமான இன்று, நாடாளுமன்றத்தை பாதுகாக்க தீவிரவாதிகளுடன் தீரமாக போராடி வீரமரணம் அடைந்த பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட வீரதீர விருது பதக்கங்களை அவர்களது குடும்பத்தினர் இன்று அரசிடம் திருப்பி கொடுத்துள்ளனர். இது தொடர்பான குற்றவாளியான அப்சல் குருவின் மரண தண்ட னையை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டப்படுவதை கண்டித்து, வீரர் களின் குடும்பத்தினர் மேற்கொண்ட இந்த எதிர்ப்பு நடவடிக்கை அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் நாடாளுமன்றம் நடந்து கொண்டிருக்கும்போதே பட்டப் பகலில் கடும் பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் முயற்சி மேற் கொண்டனர். அவர்களது முயற்சியை பாதுகாப்பு படையினர் முறியடித் தனர். தீவிரவாதிகளுடன் நடந்த சண்டை யில் பாதுகாப்பு படையை சேர்ந்த எட்டு வீரர்கள் தங்களது இன்னுயிரை நீத்து வீரமரணம் அடைந்தனர்.
அவர்களது வீரமரணத்தை, தேசப் பற்றை பாராட்டி கௌரவிக்கும் வகை யில் அவர்களுக்கு வீரதீர பதக்கங்கள் வழங்கப்பட்டன. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றவாளியான அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை நிறைவேற்றுவதில் தயக்கம் காட்டப் பட்டு வருவது அந்த குடும்பத் தினரை பெரும் வேதனைக்கு உள்ளாக்கி இருப்பதாக கூறப்படு கிறது.
தாய்நாட்டின் மானத்தை பாது காத்ததற்காக உயிரை தியாகம் செய்த வீரர்களை கௌரவித்து வழங்கப்பட்ட இந்த பதக்கங்கள், குற்றவாளிக்கு தண்டனையை நிறைவேற்றுவதில் ஏற்படும் காலதாமதத்தால் புனிதம் இழந்துவிட்டதாக அவர்கள் கருது வதாக அகில இந்திய பயங்கரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் எம்.எஸ்.பிட்டா கூறியுள்ளார்.
வீரர்களின் தியாகத்தை கேலி கூத்தாக்கும் அரசின் செயலை கண்டித்து பதக்கங்களை, வீரர்களின் குடும்பத்தினர் இன்று ஜனாதிபதி மாளிகைக்கு சென்று திரும்ப ஒப்படைத்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. வீரர்களின் தியாகத்தை கேலி கூத்தாக அரசு நினைக்கும்போது, அந்த பதக்கங்களை வைத்திருப்பதில் எந்த பயனும் இல்லை என்று பிட்டா கூறினார்.
இந்த நடவடிக்கை மத்திய அரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே அரசு வழங்கிய பதக்கங்களை திருப்பி செலுத்துவது அரசியல் சட்டத்துக்கு முரணானது என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. அரசியல் சட்டத்துக்கு விரோதமாக யாரும் எதையும் செய்ய அனுமதிக்க முடியாது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.
எடிட் செய்யாத வீடியோ காட்சிகள் பார்க்க : http://www.ibnlive.com/videos/28372/raw-unedited-footage-of-dec-13-attack.html
Posted by IdlyVadai at 12/13/2006 05:48:00 PM 3 comments
Labels: செய்திகள்
Tuesday, December 12, 2006
ரஜினி தாத்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
ரஜினி தாத்தாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இப்படிக்கு,
பேரன் யாத்திரா மற்றும்
இட்லிவடை
( வலைப்பதிவு ரசிகர் மன்றம் )
Posted by IdlyVadai at 12/12/2006 10:45:00 AM 3 comments
Saturday, December 09, 2006
பெரியார் சிலை - இல.கணேசன் பேட்டி
அயோத்தியா மண்ட தாக்குதல் கோழைத்தனமானது- இல.கணேசன் பேட்டி
தயானந்தசரஸ்வதி சுவாமிகள் மீது பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் குற்றம் சுமத்தியதாக தெரிகிறது. ஆனால் அரசு நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.
பொய்யாக, பொறுப்பற்ற முறையில் யாரோ ஒருவர் புகார் செய்தார் என்பதற்காக தயானந்தசரஸ்வதி சுவாமி மீது நடவடிக்கை எடுத்தால் தேசிய அளவில் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கிறேன்.
ஈ.வெ.ரா. வாழ்நாள் முழுவதும் நாத்திகம் பேசி வந்தவர். ஆலயங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர். அவருக்கு ஆலயத்தை பார்த்து நிற்பதை போல் சிலை அமைப்பது அவருக்குத்தான் அவமானம். தேசிய அளவில் பிரபலமான ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மனம் இதனால் புண்படும். எந்த நோக்கத்திற்காக இந்த இடத்தை சிலை வைக்க தேர்வு செய்தார்கள் என்று தெரியவில்லை.
இவ்வளவு எதிர்ப்பு கிளம்பிய பிறகும் அந்த இடத்தில்தான் சிலை திறக்க வேண்டுமா என்பதை பகுத்தறிவோடு சிந்திக்க வேண்டும். ஈ.வெ.ரா.வுக்கு சிலை வைக்க கூடாது என்பதல்ல. ஸ்ரீரங்கம் கோவில் முன்தான் சிலை வைக்க வேண்டுமா? என்பதுதான் கேள்வி.
உணர்ச்சி வயப்பட்ட சில இளைஞர்கள் ஈ.வெ.ரா. சிலையை சிதைத்ததை அமைதியை விரும்பும் எவரும் அங்கீகரிக்கவில்லை. அவர்கள் மீது அரசும் சட்டரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பாவிகள் தாக்கப்படுவது, சாமிசிலைகள் சேதப்படுத்துவது கோழைத்தனமான செயல். நேரடியாக மோத திராணியற்றவர்கள், முதுகெலும்பு இல்லாதவர்கள், அப்பாவிகள் மீது தங்கள் வீரத்தை காட்டுகிறார்கள்.
காவல்துறையையும், சட்டம் ஒழுங்கையும் நம்பும் மக்களை அரசு பாதுகாக்க வேண்டும். இந்த நிலை தொடர்ந்தால் அரசின் கொள்கைக்கு உடன்பட்டவர்கள் செய்வதால்தான் கண்டு கொள்ளவில்லை என்ற அவநம்பிக்கை அரசு மீது ஏற்பட்டுவிடும். எனவே அப்படி ஒரு சூழல் உருவாக அரசு அனுமதிக்காது என்று நம்புகிறேன்.
( செய்தி : மாலைமலர் )
Posted by IdlyVadai at 12/09/2006 11:42:00 AM 5 comments
Labels: செய்திகள்
பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - 3
இந்த வாரம் 'துக்ளக்'ல் வந்த பெரியார் படத்திற்கு சில யோசனைகள்..
கர்ப்பம் இடையூறானது !
""...பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன், பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது.
...புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தப் புருஷனையும், எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும்.
– குடியரசு கட்டுரை 1.3.1931
""...இந்தக் "கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே, கணவன்
– மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது...
– தந்தை பெரியார் பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு – விடுதலை 28.6.1973
நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்களை எவ்வளவு கேவலமாக ஆக்கி விட்டார்கள்?
– தந்தை பெரியார் "வாழ்க்கைத் துணை நலம்' எனும் புத்தகத்திலிருந்து 1938ஆம் ஆண்டு பதிப்பு
ஆண்களின் சூழ்ச்சி !
...அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால், பெண்களின் அடிமைத்தனம் வளர்வதுடன், பெண்கள் என்றும் விடுதலைப் பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக்காக பாடு படுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம், பெண்களை ஏமாற்றுவதற்கு செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.
பெண் விடுதலை
...பெண்கள், பிள்ளைபெறும் தொல்லையிலிருந்து விடுதலையாக வேண்டும் என்கிற மார்க்கத்தைத் தவிர, வேறு எந்த வகையிலும் அவர்களுக்கு விடுதலை இல்லை என்கின்ற முடிவு நமக்கு கல்லுப் போன்ற உறுதியுடையதாய் இருக்கிறது.
தவிர, "பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தி விட்டால், உலகம் விருத்தியாகாது; மானிட வர்க்கம் விருத்தியாகாது' என்று தர்ம நியாயம் பேச சிலர் வருவார்கள். உலகம் விருத்தியாகா விட்டால் பெண்களுக்கு என்ன நஷ்டம்? மானிடவர்க்கம் பெருகா விட்டால் பெண்களுக்கு என்ன ஆபத்து ஏற்பட்டு விடக்கூடும்? அல்லது இந்த தர்ம நியாயம் பேசுபவர்களுக்குத்தான் என்ன நஷ்டம் உண்டாகி விடும் – என்பது நமக்குப் புரியவில்லை.
– "குடியரசு' (12.8.28)
பத்தினி என்பது முட்டாள்தனம்
பத்தினி, பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள் தனத்திலிருந்தும்
மூர்க்கத்தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு
இயற்கையிலோ, நீதியிலோ, சுதந்திரத்திலோ சிறிதும் இடமில்லை.
– "விடுதலை' (4.5.73)
தேசிய குற்றம்
ஒரு பெண்ணை தாய், தகப்பன், பி.ஏ. படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுத்து, அந்தப் பெண் சமையல் செய்யவும், குழந்தை வளர்க்கவும், நகை துணி அலங்காரங்களுடன் மக்களின் கவனத்தை ஈர்க்கவும் செய்தால், பி.ஏ. படிக்க வைத்த பணம் வீண் என்பதோடு, அதற்காக சர்க்கார் செலவழித்த மக்கள் வரிப் பணமும் வீண்தானே? இது தேசிய குற்றமாகாதா?
ஆண் போல நடக்க வேண்டும்
...எனவே பெற்றோர்கள் தங்கள் பெண்களை பெண் என்றே அழையாமல் ஆண் என்றே அழைக்க வேண்டும். பெயர்களும் ஆண்கள் பெயர்களையே இட வேண்டும். உடைகளும் ஆண்களைப் போல கட்டுவித்தல் வேண்டும். சுலபத்தில் இது ஆணா பெண்ணா என்று மற்றவர்கள் கண்டு பிடிக்காத மாதிரியில் தயாரிக்க வேண்டும். பெண்ணும் தன்னை "பெண் இனம்' என்று கருத இடமும், எண்ணமும் உண்டாகும்படியாக நடக்கவே கூடாது.
– திருப்பத்தூரில் (15.9.46) பெரியார் சொற்பொழிவு
சுயேச்சைக்கு விரோதம்
...ஆகையால் ஆண், பெண் இருவர்களின் சுயேச்சைக்குமே கர்ப்பமாவதும், பிள்ளைகளைப் பெறுவதும் இடையூறான காரியமாகிறது. அதிலும் பெண்கள் சுயேச்சைக்கு, கர்ப்பம் என்பது கொடிய விரோதியாய் இருக்கிறது. அதனால்தான் நாம் கண்டிப்பாய் "பிள்ளை பெறுவதை நிறுத்தியே ஆக வேண்டும்' என்கிறோம்.
– "குடியரசு' (6.4.1930)
திருமணம் பெண்ணை அடிமையாக்குகிறது
புருஷன் – மனைவி சம்பந்தமே, எஜமான் அடிமை சம்பந்தமே ஒழிய அன்பு முறை சம்பந்தமோ, நட்பு முறை சம்பந்தமோ அல்ல. ஒரு பெண்ணை, ஒரு ஆணுக்கு அடிமையாக்குவது தவிர்த்து – திருமண முறையில், புருஷன் – மனைவி முறையில் வேறு தத்துவம் இல்லவே இல்லை என்பதை உறுதியாகச் சொல்வேன்.
""நீ என் மனைவி; நானே உனக்கு கணவன்; நீ என்னைத் தவிர வேறு யார் மீதும் காதல் கொள்ளக் கூடாது'' என்று ஒரு தலைமகன் கூறும் தத்துவத்தை – ஒரு தலைவி அப்படியே ஏற்றுக் கொள்வதாய் இருந்தால் அது அடிமைப் புத்திதானே? பெண்களுக்கு உரிமை வேண்டுவோர், இத்தத்துவத்தைக் கொண்டுள்ள திருமண முறைகளை ஒழித்துக் கட்ட முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டாமா?
கண்ணகி பற்றி பெரியார்...
"".....கோவலன் சிலம்பு வைத்திருப்பது ராஜாவினுடையது – என்று பொய்க் குற்றம் சாட்டப்பட்டதன் உண்மையைக் கண்டுபிடிக்க முடியாத அரசன், கோவலனை வெட்டிக் கொல்லச் சொல்லுகிறான்; கோவலன் இறந்து போகிறான். இதை அறிந்த அம்மாள் கண்ணகிக்குப் பெரும் கோபம் வந்து, நிரபராதிகளான மதுரை மக்களைச் சுட்டுச் சாம்பலாக்கினாள்... கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப்பெண்.
""அகலிகை, சீதை, துரோபதை, தாரை எல்லாம் கற்புக்கரசிகளாய் இருக்கும் போது, கண்ணகி கற்புக்கு மாத்திரம் முட்டாள்தனம் வேண்டுமா? மற்றும் இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி? மார்பைக் கையால் திருகினால் அது வந்து விடுமா? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர, வேறு எதிலும் எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை (முலை) வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றிக் கொள்ளுமா? அதில் "பாஸ்பரஸ்' இருக்குமா? இந்த மூடநம்பிக்கை கற்பனையானது, என்ன பயùனக் கொடுக்கிறது? இதனால் கண்ணகிக்கு வீரம் இருந்ததாகக் கூற முடியுமா?
""அக்கினி பகவானுக்கு கண்ணகி, "பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்களைச் சுடு!' என்று கட்டளை இட்டாளாம். அதுபோல் பார்ப்பனர்களைத் தவிர, மற்றவர்கள் சாம்பலானார்களாம்; மதுரை நகரம் சாம்பலாயிற்றாம்! இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா? அவள் புத்தியின் பெருமையா? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால், நிரபராதிகளைச் சுடலாமா? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா? – என்கின்ற அறிவு வேண்டாமா? பார்ப்பனர்களை எதற்காக மீதம் விட வேண்டும்? ஆகவே, வருணாசிரம தர்ம
மனு நூல், ராமாயணம், பாரதத்திற்கும் இதற்கும் என்ன வித்தியாசம்?...
""...பாண்டியன் விசாரணை செய்து அவனுக்குக் கிடைத்த உண்மை மீது, கோவலனுக்குத் தண்டனை விதித்தான். ஆனால், கண்ணகி ஒரு விசாரணையும் செய்யாமல், ஒரு குற்றமும் காணாமல் நிரபராதிகளான மக்களை, பெண்களைச் சுட்டு எரித்துக் கொன்றாள். அவள் கற்புக்கரசி! வணங்கத்தக்கவள்! தெய்வமானவள்! பாண்டியன் "குற்றவாளி' – இதுதானே சிலப்பதிகாரக் கதை? இதுதான் தமிழர் பண்பாம்! எவ்வளவு முட்டாள்தனம் – இந்த மாதிரியான ஆபாசமும், அநீதியும் நிறைந்து இருக்கும் கதைகளை நாம் வைத்துக் கொண்டு, நமக்குச் சொந்தம் என்றா சொல்வது?
""இவைகளைத்தான் நாம் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; நெருப்பு வைக்க வேண்டும் என்று சொல்லுகிறோம்; சமுதாயத்திற்கு உதவாக்கரை என்று ஒதுக்கி வைக்கிறோம்!...''
(28.7.1951 விடுதலையில் வெளியாகிய பெரியாரின் உரை – ஆதாரம் : 22.12.2001 விடுதலை)
உப்பு, மிளகாயா பெண்கள் !
"ஒருவனுடைய வீட்டு உப்பு மிளகாய் புளியை அபகரிக்க நினைப்பது எப்படி திருட்டாகுமோ, அதுபோல் அவனுடைய மனைவியையும் அபகரிக்க நினைப்பது திருட்டு ஆகும்' என்று நினைத்து, அவளை அனுபவிக்க மனத்தாலும் நினைக்கக் கூடாதாம். என்னே அடிமைத்தனம்! உப்பு, மிளகாயா பெண்கள்? கேவலம் பெண்கள் இப்படியா ஒருவனுடைய வீட்டு உப்பு, மிளகாயைப் போல் தனி உடமைச் சொத்தாகி விடுவது?
– "விடுதலை' (11.10.48)
கல்யாண முறை ஒழிய வேண்டும் !
கலியாணம் என்பதையே சட்ட விரோதமாக்க வேண்டும். இந்தக் கலியாணம் என்ற அமைப்பு முறை இருப்பதால்தான் கணவன் – மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. மனைவியாகி விட்டால் அதோடு சரி – அவள் ஒரு சரியான அடிமை! அது மட்டுமல்ல இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் – அவற்றுக்கு சொத்துக்கள் சம்பாதிப்பது – அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன?
– "விடுதலை' (28.6.73)
தமிழனுக்கு தனிவழி கிடையாது !
தமிழன் நடந்து கொள்வதற்கென்று தனிமுறை, வழிமுறை கிடையாது. தமிழனுக்கு என்று தனித்த முறையில் ஆரியம் கலவாத இலக்கியம் கிடையாது.
– "குடியரசு' (27.11.43)
(தொடரும் :-)
( நன்றி துக்ளக் )
Posted by IdlyVadai at 12/09/2006 08:08:00 AM 0 comments
Labels: பத்திரிக்கை
Friday, December 08, 2006
முரசொலி மாறன் சிலை திறப்பு
முன்னாள் மத்திய மந்திரி முரசொலி மாறனின் முழு உருவசிலை பாராளுமன்றத்தில் மேல்-சபை செல்லும் வாயிலில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா முதல் -அமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று காலை நடந்தது.
பிரதமர் மன்மோகன்சிங் விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார்.
விழாவில் துணை ஜனாதிபதி பைரோன்சிங் செகாவத், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் அத்வானி, சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி, மத்திய மந்திரிகள் சரத்பவார், மணிசங்கர் அய்யர், ப.சிதம்பரம், டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ராஜா, ஜெயபால் ரெட்டி, ஜி.கே.வாசன், ரகுபதி, வெங்கடபதி, பழனிமாணிக்கம், சுப்புலட்சுமி ஜெகதீசன், வேலு, காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா. அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீரா சாமி.
இந்திய கம்ïனிஸ்டு மூத்த தலைவர் குருதாஸ் குப்தா, தெலுங்கு தேசம் பாராளுமன்ற தலைவர் எர்ரன்நாயுடு, முன்னாள் தமிழக கவர்னர் பி.சி.அலெக்சாண்டர், கரண் சிங், தொழில் அதிபர் ராகுல் பஜாஜ், எம்.பி.க்கள் திருநாவுக்கரசர், ஏ.கே.மூர்த்தி, பெல்லார்மின், மோகன், அப்பாதுரை.
முதல்-அமைச்சர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், முரசொலி மாறனின் மனைவி மல்லிகா மாறன், முரசொலி செல்வம், அவருடைய மனைவி செல்வி மற்றும் பலர் கலந்து கொண் டனர்.
திறப்பு விழா முடிந்ததும் அனைவரும் முரசொலி மாறன் சிலைக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
Posted by IdlyVadai at 12/08/2006 05:59:00 PM 0 comments
Labels: செய்திகள்
பெரியார் சிலை - சில கேள்விகள்
திருச்சி ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் முன்பு 100 அடி தூரத்தில் நிறுவப்பட்ட 8 அடி உயர பெரியார் சிலையை நேற்று இந்துமக்கள் கட்சியை சேர்ந்த 5 பேர் உடைத்தனர். பின்பு அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் சிலை உடைக் கப்பட்டதை கண்டித்து திராவிடர் கழகம் தி.மு.க., புரட்சிகர மாணவர் இளைஞர் அணி, மக்கள் கலை இலக்கிய கழகம் உள்ளிட்ட அமைப்புகள் சாலை மறியல், கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் உடைக்கப்பட்ட சிமெண்டு சிலைக்கு பதிலாக அதே இடத்தில் புதிய பெரியார் சிலையை அமைக்க திராவிட கழகம் முடிவு செய்தது. இதற்காக நேற்று சென்னையில் இருந்து புதிய வெண்கல பெரியார் சிலையை உடனே கொண்டு வந்தனர். இரவு 11 மணிக்கு தொடங்கிய பணி அதிகாலை 4 மணி வரை நடந்தது. புதிதாக வைக்கப்பட்டுள்ள வெண்கல பெரியார்சிலை 550 கிலோ எடை உள்ளது. பெரியார் உட்கார்ந்து படிப்பதுபோல் அமைக்கப்பட்டு உள்ளது.
புதிய பெரியார் சிலை வருகிற 16-ந்தேதி திறக்கப்படுகிறது. அமைச்சர் நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர் செல்வராஜ் முன்னிலை வகிக்கிறார்.
திராவிட கழக தலைவர் வீரமணி திறந்து வைக்கிறார். புதிய சிலை சுற்றி தற்போது தகரத்தால் ஆன தடுப்பு போடப்பட்டு உள்ளது. ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலை மையில் 4 போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே இந்து மக்கள் கடசி போலீஸ் தடையை மீறி உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்து உள்ளது. இதனால் ஸ்ரீரங்கத்தில் இன்றும் பதட்டம் நிலவுகிறது. சிலை திறப்பு விழா நாளன்றும் உண்ணாவிரதம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் பதட்டம் இன்னும் ஒயவில்லை.
போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் சங்கர் ஜிவால், துணை கமிஷனர் ராஜசேகரன் மற்றும் ஏராளமான போலீசார் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து உள்ளனர்
சில கேள்விகள்:
1. பெரியார் சிலைக்கு தனி போலிஸ் படை, ஸ்டேஷன் ஒன்று ஸ்ரீரங்கத்தில் திறக்கப்படுமா ?
2. பெரியாருக்கு தகுந்த பாதுகாப்பு கிடைக்குமா ? நாளைக்கு அவர் சிலைக்கு யாராவது நாமம் போட்டால் பெரிய பிரச்சனை ஆகாதா ? ( U நாமமா Y நாமமா என்ற பிரச்சனை வேறு இருக்கிறது )
3. சிலைக்கு கீழ் என்ன எழுதியிருக்கும் ? ( பெரியாழ்வார் என்றா ? )
4. சிலையை வைத்தது பகுத்தறிவா, அல்லது அதற்கு உண்ணாவிரதம் இருப்பது பகுத்தறிவா ?
5. இந்த சம்பவம் பெரியார் படத்தில் கிளைமாக்ஸில் வருமா ?
( படம் உதவி செந்தழல் ரவி )
Update: 8/6/2006 12:30pm
கள்ளக்குறிச்சி அருகே வினாயகர் சிலைகள் உடைப்பு: கிராம மக்கள் மறியல்-பதட்டம்
விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் தாலுகா அலுவலக வளாகத்தில் வினா யகர் சிலை வைக்கப்பட்டு இருந்தது. தாலுகா அலுவலகம் அருகில் வினாயகர் கோவிலும் உள்ளது.
இக்கோவிலில் வினாய கருடன் துர்க்கை அம்மன், நவக்கிரக கோவிலும் உள்ளது. நேற்று நள்ளிரவு இங்கிருந்த வினாயகர் சிலையை மட்டும் சில விஷமிகள் உடைத்து விட்டனர்.
இதே போன்று தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்த வினாயகர் சிலையும் உடைக் கப்பட்டு இருந்தது. இந்த இரு சிலைகளும் முற்றிலும் சேதம் அடைந்து விட்டது.
இன்று அதிகாலை கோவிலுக்கு சாமி கும்பிட சென்ற பக்தர்கள் வினாயகர் சிலை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு திடுக்கிட்டனர். சற்று நேரத்தில் இந்த தகவல் காட்டுத்தீ போல சங்கராபுரம் முழுவதும் பரவியது.
பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை மெயின் ரோட்டில் குவிந்தனர். அவர் கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியில் போக்கு வரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. பதட்டமான சூழ்நிலை உருவா னது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கள்ளக்குறிச்சி உதவி கலெக்டர் ஜெயபால், டி.எஸ்.பி. பாலசுப்பிரமணியம் சங்கராபுரம் தாசில்தார் கதிர்வேல் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அவர்கள் மறியல் செய்தவர்களுடன் சமா தான பேச்சு நடத்தினர்.
ஆனால் பொதுமக்கள் கலைந்து செல்லவில்லை. தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். வினாயகர் சிலைகளை உடைத்த விஷமிகளை கைது செய்ய கோரி கோஷம் எழுப்பினார்கள்.
வினாயகர் சிலை உடைக்கப் பட்ட பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அங்கு துண்டு பிரசுரங்கள் கிடந்தன. அதில் அம்பேத்கார், பெரியார் சிலை உடைப்புக்கு எதிர்ப்பு என்று எழுதப்பட்டு இருந்தது.
ஆனால் அந்த துண்டு பிரசுரத்தில் வினாயகர் சிலையை உடைத்தது எந்த அமைப்பு என்பது பற்றி குறிப்பிடப்பட வில்லை. அந்த துண்டு சீட்டுகளை போலீசார் கைப்பற்றினர்.
உடைக்கப்பட்ட இரு வினாயகர் சிலைகளையும் போலீசார் கைப்பற்றினர். அந்த சிலைகள் தற்போது தாலுகா அலுவலகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
சிலைகள் உடைப்பு சம்பவத்தால் சங்கராபுரத்தில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். ( செய்தி: மாலைமலர் )
Posted by IdlyVadai at 12/08/2006 11:58:00 AM 24 comments
Labels: செய்திகள்
Thursday, December 07, 2006
சிலை செய்திகள்
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை உடைப்பு, டெல்லியில் எம்.ஜி.ஆர் சிலை திறப்பு
ஸ்ரீரங்கம் பெரியார் சிலை:
ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை இடிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் திராவிட கழகம் சார்பில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு விரைவில் திறக்கப்பட இருந்தது. இதற்கு அப்பகுதியில் உள்ள இந்து அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலையில் பெரியார் சிலையின் தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டசபையில் இன்று ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் சார்பில் ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு பதில் அளித்து முதல்-அமைச்சர் கருணாநிதி "பெரியார் சிலை மட்டுமல்ல பெரும் தலைவர்களுடைய சிலைகளிலும் அந்த தலைவர் சொன்ன கருத்துக்களிலும் வேறுபாடான நிலை சிலருக்கு இருக்கலாம். அதற்காக சிலைகளை சேதப்படுத்துவதை அனுமதிக்க முடியாது. இந்த அரசு அதை நிச்சயமாக அனுமதிக்காது.
பெரியாருடைய சிலை என்றால் அதை சேதப்படுத்தியவரையும் சேர்த்து மனிதனாக்கியவரின் சிலை. அதை மறந்து விடக்கூடாது. இந்த சிலையை உடைத்தவர்கள் யாராக இருந்தாலும் மன்னிக்கப்பட கூடியவர்கள் அல்ல. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு இந்த விஷ மத்தனத்தில் ஈடுபட்ட 4 பேர் கைதாகி இருக்கிறார்கள்.
மேலும் விசாரணை நடக்கிறது. கருத்துக்கு கருத்து, எண்ணங்களுக்கு எண்ணம், கொள்கைக்கு கொள்கை என்ற மோதல் இருக்க வேண்டுமே தவிர சிலைகளை உடைப்பது, சீரழிப்பது என்பது என்றைக்கும் பொறுத்துக் கொள்ள முடியாது.
இன்று நடைபெற்ற இந்த விஷமத்துக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் இதை மேலும் வளர்த்து பூதாகரமாக்காமல் இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்."
டெல்லியில் எம்.ஜி.ஆர் சிலை:
பார்லிமென்ட் வளாகத்தில் இன்று காலையில் எம்.ஜி.ஆர்., முழு உருவச்சிலையை லோக்சபா சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி திறப்பு வைத்தார். விழாவில் அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இவ்விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ஜெயகுமார், செங்கோட்டையன், பாண்டுரங்கன், மதுசூதனன் தளவாய் சுந்தரம், நயினார் நகேந்திரன், வளர்மதி, செம்மலை, சத்தியமூர்த்தி மற்றும் அ.தி.மு.க., சட்டசபை உறுப்பினர்களும், கட்சி பிரமுகர்களும் நேற்று பிற்பகல் சென்னையில் இருந்து விமானம் மூலம் டில்லி சென்றனர். விழாவில் கலந்து கொண்ட பின்னர் ஜெயலலிதா இன்று மாலையே சென்னை திரும்புகிறார். சிலை திறப்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கும் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்தும் அவர்கள் கலந்துகொள்ளவில்லை.
நிருபர்களிடம் பேசிய ஜெயலலிதா, இச்சிலையை பார்லிமென்ட்டில் திறப்பதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி பல தடைகளை கொடுத்ததாகவும், அவற்றையெல்லாம் மீறி வெற்றிகரமாக இச்சிலை இன்று திறக்கப்பட்டதாகவும் கூறினார்.
(செய்தி உதவி: தினமலர், மாலைமலர், தட்ஸ்தமிழ் )
Posted by IdlyVadai at 12/07/2006 04:37:00 PM 4 comments
Labels: செய்திகள்
Wednesday, December 06, 2006
சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை
முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்துவிற்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து பஞ்சாப் அரியானா ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. நவ்ஜோத்சிங் சித்து 18 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலை கொலை வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். இதனால் அவர் தனது எம்.பி.பதவியை ராஜினாமா செய்தார். இன்று அவருக்கு பஞ்சாப் அரியானா ஐகோர்ட் 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தும், 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பை வரும் ஜனவரி 31 , 2007 ம் தேதி வரை கோர்ட் நிறுத்தி வைத்துள்ளது. எனவே அதற்குள் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்து கொள்ளலாம். அதனால் சித்து உடனடியாக கைது செய்யப்படவில்லை. ( செய்தி: மாலைமலர், தினமலர் )
Posted by IdlyVadai at 12/06/2006 05:03:00 PM 7 comments
Labels: செய்திகள்
ரஜினிக்கு மேலும் சுமை
"புகழ் ஒரு சுமை' என்று அண்மையில் ஒரு விழாவில் கூறிய ரஜினிக்கு அவருடைய புகழை மேலும் கூட்டும் வகையில் ஜப்பானிலும் அவருக்கு ரசிகர் மன்றங்கள் உருவாகியுள்ளன.
இன்று தினமணியில் படித்தது. நீங்கள் படிக்காமல் இருந்தால் மேற்கொண்டு படிக்கலாம். ( நீங்க என்ன தான் கரடியாக கத்தினாலும் ரஜினியிடம் ஏதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருக்கிறது, தெரியவில்லை என்றால் உங்கள் குழந்தைகளிடம் கேட்கவும். )
ரஜினிகாந்த் நடித்த "முத்து' படம் ஜப்பானில் வெளியாகி பரவலான பாராட்டுகளைப் பெற்று பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து அவருக்கு ஜப்பானில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் உருவாகினர்.ரஜினியின் புதிய படங்கள் இங்கு வசூலாவதைப் போலவே ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளிலும் வசூலை வாரிக்குவித்தன. "சந்திரமுகி' படம் தமிழகத்தில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பெரும் வசூலை ஈட்டியது.
இதனால் ரஜினி நடித்த பழைய படங்களின் டி.வி.டி.க்களுக்கு ஜப்பானில் அமோக வரவேற்பு கிடைக்கத் தொடங்கியுள்ளது. தற்போது ரஜினிகாந்துக்கு தனி கொடியுடன் ஜப்பானில் ரசிகர் மன்றங்கள் உருவாகத் தொடங்கியுள்ளன.
ஆரம்பத்திலேயே 5 ஆயிரம் பேர் ரசிகர் மன்ற உறுப்பினர்களானார்கள். தற்போது அந்த எண்ணிக்கை மேலும் கூடி வருகிறது. ரசிகர் மன்றங்கெளுக்கென தனி அலுவலகம் அமைக்கப்பட்டு அங்கு ரஜினியின் பல வித போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
ரஜினியை வாழ்த்தி ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட பல வாசகங்கள் பேனர்களிலும், போஸ்டர்களிலும் இடம்பெற்றிருக்கின்றன. மன்றத்துக்கென தனி பஸ் வாங்கப்பட்டு அதில் ரஜினி படத்தில் இடம்பெற்ற பல வசனங்கள் தமிழிலும், ஜப்பானிய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன.
இந்த பஸ் மூலம் பல இடங்களுக்கும் சென்று ரசிகர் மன்றங்களுக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் பணி நடைபெற்று வருகிறது.'சிவாஜி' படம் பற்றிய பல துணுக்குச் செய்திகள் ஜப்பானிய பத்திரிகைகளிலும் வெளிவந்துகொண்டிருக்கின்றன.
கடுமையான உழைப்புக்குப் பெயர் போன ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் இந்த சினிமா மோகம் அடுத்து எந்த மாதிரியான விளைவுகளைத் தோற்றுவிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Posted by IdlyVadai at 12/06/2006 09:21:00 AM 11 comments
Labels: சினிமா
Tuesday, December 05, 2006
சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை
தனது உதவியாளரை கொலை செய்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிபு சோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தில்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
சிபு சோரனிடம் உதவியாளராக பணிபுரிந்த சசிநாத் ஜா 1994ம் ஆண்டு தில்லியில் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக நடைபெற்ற சிபிஐ விசாரணையில் சிபு சோரன் உட்பட 5 பேர் குற்றவாளிகள் என்பது நிரூபிக்கப்பட்டது. தில்லி உயர்நீதிமன்றமும் இவர்களை சமீபத்தில் குற்றவாளிகளாக அறிவித்தது. இதையடுத்து அவர் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதனிடையே, இன்று மாலை அறிவிக்கப்பட்ட தீர்ப்பில் சிபு சோரனுக்கு ஆயுள்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அத்துடன் கொல்லப்பட்ட சசிநாத் ஜா குடும்பத்தினருக்கு அவர் நஷ்டஈடாக 5 லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டது. இத்தொகையில், சசிநாத் ஜாவின் தாயாருக்கு ஒரு லட்சம் ரூபாயும், அவரது இரண்டு மகள்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும் வழங்கப்படும்.
( செய்தி: தினமணி, கார்ட்டூன் : DC )
Posted by IdlyVadai at 12/05/2006 08:52:00 PM 0 comments
Labels: செய்திகள்
ஜெ - பேட்டி
அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் சட்டசபை எதிர்க் கட்சி தலைவருமான ஜெயலலிதா இன்று பகல் 12.05 மணிக்கு சட்டசபைக்கு வந்தார். அவர் சட்டசபை லாபிக்கு வந்து உறுப்பினர்கள் பதிவேட்டில் கையெழுத்திட்டார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற போது தந்த பேட்டி
முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் 2 மாநில முதல்வர்களும் பேசியே முடிவெடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும் போது அவர்களுக்கு கீழ்உள்ள அமைச்சர்கள் பேசி என்ன முடிவு ஏற்படப் போகிறது.
இது காலம் தாழ்த்த நடத்தப் படும் நாடகமே தவிர வேறு எதுவும் இல்லை.
நமக்கு பொன்னான வாய்ப்பு ஏற்பட்டது. அதை வீணடித்து விட்டார்கள். கன மழை பெய்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்ட போது மதகுகளை இறக்கிஇருந்தாலே 142 அடி உயரத்துக்கு தண்ணீரை உயர்த்தி இருக்கலாம். ஆனால் நம்முடைய வாய்ப்பை வீண டித்து விட்டார்கள்.
கேள்வி:- நாடாளுமன்ற வளாகத்தில் எம்.ஜி.ஆர். சிலை முழு உருவச்சிலையாக வைக்கப்படுமாப
பதில்:- நாடாளுமன்ற வளாகத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் முழு உருவச் சிலை வைக்கப்படும். மக்க ளவை சபாநாயகர், எம்.ஜி. ஆரின்சிலையை திறந்து வைப்பார். இந்த நிகழ்ச்சிக்காக துணை ஜனாதிபதி பைரோன் சிங் செகாவத், பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, வாஜ்பாய், அத்வானி ஆகியோருக்கு அ.தி.மு.க. சார் பில் அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.
கே:- முன்னாள் மத்திய மந் திரி சிபுசோரனுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதே?
ப:- இந்திய வரலாற்றில் இது ஒரு கரும்புள்ளி சம்ப வம். திரும்பத் திரும்ப அவருக்கு ஏன் அமைச்சர் பதவி அளித்தார்கள் என்று
தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் `காரில் ஏறிச் சென்றவர் மீண்டும் நிருபர் களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நாடாளுமன்ற வளாகத்தில் சிலை வைக்க அனுமதி அளித்தது பாரதீய ஜனதா அரசு. அதனால் வாஜ்பாய்,அத்வானிக்கு அழைப்பு அனுப்பியுள் ளோம்.
தற்போது காங்கிரஸ் தலை மையிலான மத்திய அரசு உள்ளது. எனவே பிரத மர் மன்மோகன்சிங், சோனியா காந்தி ஆகியோருக்கும் அழைப் பிதழ் அனுப்பியுள்ளோம்.
நாடாளுமன்ற வளாகத்தில் ஏற்கனவே அண்ணா சிலை அமைக்க ஏற்பாடு செய்ததும் அ.தி.மு.க.தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜெயலலிதா இன்று சட்ட சபைக்கு வந்த போது அவரை ஓ.பன்னீர்செல்வம், செங் கோட்டையன், ஜெயக் குமார், சேகர்பாபு உள்படஏராளமான பேர் அவரை வரவேற்று அழைத்து சென்ற னர். ம.தி.மு.க. சார்பில் கண்ணப்பன் ஜெயலலிதாவை வரவேற்றார்.
ஜெயலலிதாவை பார்ப்ப தற்காக இன்று சட்டசபைக்கு வெளியே ஏராளமான பொதுமக்கள் கூடி இருந் தனர். போலீஸ் பாதுகாப்பும் அதிக அளவில் போடப்பட் டிருந்தது.
( நன்றி: மாலைமலர் )
Posted by IdlyVadai at 12/05/2006 02:20:00 PM 2 comments
Labels: பேட்டி
பாராளுமன்ற வளாகத்தில் சிலை - சோ
இந்த வாரம் வந்த துக்ளக் கேள்வி பதில்:
கே : நாடாளுமன்ற வளாகத்தில் முரசொலி மாறனுக்கு சில திறப்பது தொடர்பாக தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் அறிக்கைப் போரில் இறங்கியுள்ளது பற்றி?
ப : அ.தி.மு.க.வின் ஆட்சேபனையை நியாயமற்றது என்று ஒதுக்கிவிட முடியாது. அதே சமயத்தில் "எம்.ஜி.ஆர். சிலையை பாராளுமன்ற வளாகத்தில் வைக்க வேண்டும்' என்ற அ.தி.மு.க.வின் கோரிக்கையிலும் நியாயம் இல்லை.
பாராளுமன்ற வளாகத்தில், யார் யாருக்கு சிலை இல்லை என்று பார்த்தால், நான் சொல்வதில் உள்ள நியாயம் புரியும். அந்த பெரிய பட்டியலைப் பார்க்கா விட்டாலும், ஒரு சில உதாரணங்களையாவது பார்த்தாலே போதும்.
நாட்டின் மிக உன்னதமான மனிதர்களில் ஒருவரும், சுதந்திரப் போராட்டத்தில் பல தியாகங்களைச் செய்தவருமான ஆச்சார்ய கிருபளானி;
சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் நின்று பங்கு கொண்டதோடு மட்டுமின்றி, பம்பாய் முதல்வர், மத்திய நிதி மந்திரி, துணை பிரதம மந்திரி, பிரதம மந்திரி என்ற பதவிகளை எல்லாம் மிகத் திறம்பட நிர்வகித்த காந்தியவாதி மொரார்ஜி தேசாய்;
நாட்டின் முதல் இந்திய கவர்னர் ஜெனரல், மேற்கு வங்க கவர்னர்,
சென்னையின் பிரதமர் (அந்தக் காலத்தில் அது பிரதமர் பதவி), பின்னர்
மதராஸ் ராஜதானியின் முதல்வர் என்ற பதவிகளை வகித்தவர் – கூர்மையான அறிவாற்றலுக்காக எல்லோராலும் பாராட்டப்பட்டவர் – அணு ஆயுதத் தடுப்பில் மும்முரமாக ஈடுபட்டு உலக கவனத்தை ஈர்த்தவர்... என்ற பல தகுதிகளைப் பெற்ற ராஜாஜி;
பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படுகிற, மத்திய நிதி மந்திரி, உணவு
மந்திரி.... என்ற பதவிகளை திறம்பட நிர்வகித்த ஸி. சுப்ரமணியம்;
உலகம் போற்றிய தத்துவ மேதையும், நாட்டின் ஜனாதிபதியாக பணியாற்றியவருமான ராதா கிருஷ்ணன்; சிறந்த பார்லிமென்டேரியன்களான புபேஷ் குப்தா; நாத் பாய்; பிலு மோடி; ஃபிரோஸ் காந்தி; ஜோதிர்மாய் பாஸு; மற்றும் ஹெச்.வி. காமத்; ஹிரேன் முகர்ஜி; சியாம பிரஸாத் முகர்ஜி... என்று பல உதாரணங்கள் கூறலாம்.
இவர்களுக்கெல்லாமே பாராளுமன்ற வளாகத்தில் சிலைகள் கிடையாது. மாறன், மத்திய மந்திரியாக திறம்பட பணியாற்றினார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாராளுமன்ற வளாகத்தில் சிலை வைக்கப்படுவதற்கு, இந்தத் தகுதி போதும் என்றால், அங்கே ஒரு சிலை மியூஸியமே திறக்க வேண்டியதுதான்; ஒவ்வொரு
மந்திரி சபையிலும் சுமார் அரை டஜன் திறமையாளர்களாவது இருந்து வருகிறார்களே! எல்லோருக்கும் சிலை என்றால் எங்கே போவது இடத்திற்கு?
எம்.ஜி.ஆர். சிலை என்பதும் இதே ரகம்தான். மாநில முதல்வர்களாக
இருந்தவர்களுக்கெல்லாம் சிலை என்பதும் ஒப்புக் கொள்ள முடியாததுதான்.
ஆனால் ஒன்று. பாராளுமன்ற வளாகத்தில் சிலை விவகாரம் இப்படி மனம்போன போக்கில் அணுகப்படுவது என்பது – இப்போது ஆரம்பித்த விஷயம் அல்ல. ஏற்கெனவே தொடங்கி விட்ட வக்ரம் இது. அதே அணுகுமுறை தொடர்கிறது.
Posted by IdlyVadai at 12/05/2006 09:25:00 AM 2 comments
Labels: பத்திரிக்கை
Monday, December 04, 2006
விஜயகாந்த் பேட்டி
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் இன்று முதல்- அமைச்சர் கருணாநிதி மற்றும் அமைச்சர்களை சந்தித்து மனுக்கள் கொடுத்தார். பிறகு அவர் அளித்த பேட்டி..
( நல்ல பதில்கள், நிச்சயம் இவர் வரவேண்டும் என்று நினைக்கிறேன் )
கேள்வி:- முதல்-அ மைச்சரை சந்தித்ததற்கு ஏதாவது காரணம் உண்டா?
பதில்:- எனது தொகுதி பிரச்சினைகள் குறித்து முதல்- அமைச்சரிடம் மனு கொடுத்தேன். அவற்றை நிறைவேற்ற ஆவன செய்வதாக அவர் உறுதி கூறி உள்ளார்.
அது போல உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோரையும் சந்தித்து என் தொகுதி பற்றிய கோரிக்கைகளை தனி தனியாக கொடுத்துள்ளேன்.
3 அமைச்சர்களை மட்டும் சந்திக்க இயலவில்லை. நான் சந்தித்த அனைவரும் என் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி கொடுத்துள்ளனர்.
கே:- ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறீர்கள். தற்போது அமைச்சர்களை சந்தித்துள்ளீர்களே?
ப:- விமர்சிப்பது வேறு. கோரிக்கைகள் வைப்பது வேறு.
கே:- நீர் வளத்துறைக்கு ஒரு அமைச்சர் பதவியை தி.மு.க. கேட்டு பெறவில்லை என்று குறை கூறி இருக்கிறீர்களே?
ப:- நீர் பங்கீட்டில் பிரச்சினை உள்ளதால் அந்த துறைக்கு அமைச்சரை கேட்டு வாங்கவில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் கர்நாடகாவுக்கும் ஆந்திராவுக்கும் தண்ணீர் தொடர்பான பிரச்சினை இருந்து போது கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ராவ் என்பவர் நீர்வளத்துறை மந்திரியாக இருந்தார்.
மராட்டியத்துக்கும் கர்நாடகத்துக்கும் தற்போது எல்லைப் பிரச்சினை உள்ளது. ஆனால் சிவராஜ் பாட்டீல் (மராட்டியம்) உள்துறை மந்திரியாக உள்ளார்.
எனவே நீர் வளத்துறை மந்திரி பதவியை கேட்டு வாங்குவதில் எந்த தவறும் இல்லை. அப்படி வாங்கி இருந்தால் தமிழ்நாட்டுடன் கர்நாடகா, கேரளா மாநிலங்கள் தண்ணீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் செய்ய இயலாது.
தற்போது முல்லைப் பெரியாறு பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்- அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுடன் பேசி நெய்வேலி பிரச்சினைக்கு உடனடி தீர்வு கண்டது போல இதற்கும் ஒரு முயற்சி எடுத்து தீர்வு காண வேண்டும்.
கே:- முல்லைப் பெரியாறு பிரச்சினையில் டைட்டில் போட்டதும் கிளைமாக்சை எதிர் பார்க்கக் கூடாது என்று முதல்வர் கூறி உள்ளாரே?
ப:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புதான் "கிளைமாக்ஸ்''. கேரள அரசின் அறிவிப்பு மற்றொரு "கிளைமாக்ஸ்''. எனவே "கிளைமாக்ஸ்'' வந்த பிறகு மீண்டும் பழைய படத்Ûக் காட்டினால் யாரும் பார்க்கமாட்டார்கள் என்பதுதான் எனது வாதம். ( மிக நல்ல பதில். சூப்பர் )
புதிய அணை கட்டினாலும் எங்களால் முடிந்த அளவுதான் தண்ணீர் கொடுப்போம் என்று கேரளா முதல்- மந்திரி கூறி உள்ளார். (அப்போது ஒரு ஆங்கில பத்திரிகையில் வந்த செய்தியை நிருபர் ஒருவரிடம் விஜயகாந்த் படிக்க கூறினார். பிறகு அவர் எனக்கு ஆங்கிலம் தெரியாது. மற்றவர்களை படிக்கச் சொல்லி விபரத்தை தெரிந்து கொள்வேன்'' என்றார்.)
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அமல்படுத்துவதுதான் இதற்கு ஒரே தீர்வு. அதற்காகத்தான் நாங்கள் உண்ணாவிரதம் இருந்தோம்.
கே:- தி.மு.க. மலை போன்றது. சிறு கட்சிகள் மோத வேண்டாம் என்று முதல்வர் கருணாநிதி கூறி உள்ளாரே?
ப:- அவர் சொல்வது நியாயம்தான். ஒரு காலத்தில் மலை போல இருந்த காங்கிரசிடம் மோதித்தான் தி.மு.க. பெரிய கட்சியாக உருவாகியது.
தி.மு.க.விடம் மோதிதான் அ.தி.மு.க. வந்தது. மிகப்பெரிய மலையான ஊட்டி மலையில் கூட 22 இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டு அந்த உருவம் மாறி விட்டது. எனவே பெரிய கட்சிகளுடன் மோதுவதில் எந்த தவறும் இல்லை.
கே:-ஈழத் தமிழர் பிரச்சினை நீண்டு கொண்டே போகிறதே?
ப:- மண்ணுக்காக போராடுபவர்கள் போராளிகள். காசுக்காக போராடுபவன் அரசியல்வாதி. மண்ணுக்கான போராட்டம் கால தாமதம் ஆனாலும் நிச்சயம் வெற்றி பெறும் என்பதுதான் வரலாறு.
கே:- உங்கள் திருமண மண்டபம் இடிப்பு பற்றி நீங்கள் கட்சி தொடங்கும் முன்பே தகவல் சொல்லி விட்டதாக டி.ஆர்.பாலு கூறி விட்டரே?
ப:- அது தவறான தகவல். நான் கட்சி தொடங்கும் முன்பு கூறி இருந்தால் கலைஞரையே நான் பார்த்து இருப்பேன். டி.ஆர்.பாலு சொல்வது பொய்.
என் திருமண மண்டபத்தில் எந்த அளவு இடிப்பு ஏற்படும் என்று முறையாக கேட்டும் இதுவரை பதில் சொல்லவில்லை.
கே:- 3-வது அணி அமைத்து ஆட்சியை பிடிக்க முயற்சி செய்வீர்களா?
ப:- நான் எப்போதும் என்னை முதல் அணியாகவே நினைத்துக் கொள்கிறேன். யாரையும் அழைக்கவில்லை. அவர்களாக வந்தால் சேர்த்துக் கொள்வேன்.
கே:- ஊழலை ஒழிக்க போவதாக சொன்னீர்களே. ஆனால் ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்களை சேர்ப்பது ஏன்?
ப:- ஊழல் குற்றம் சாட்டப்பட்டவர்கள் திருந்த மாட்டார்களா? யார் என் கட்சிக்கு வந்தாலும் என் தன்மையில் இருந்து மாறமாட்டேன். என்னை தேடி வருபவர்களுக்கு மரியாதை கொடுப்பதில் தவறு இல்லை.
கே:- நீங்கள் ஆட்சியைப் பிடிப்பீர்களா?
ப:- ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் ஆட்சியைப் பிடித்து இருக்கிறார்கள். நாங்களும் நிச்சயம் ஆட்சியை பிடிப்போம்.
கே:- ஜெயலலிதா உங்களை குறை சொல்லி அறிக்கை வெளியிட்டாரே?
ப:- அதை மக்களும் மறந்து விட்டார்கள். நானும் மறந்து விட்டேன். மறப்போம். மன்னிப்போம். ( என்ன ஒரு முதிர்ச்சி )
Posted by IdlyVadai at 12/04/2006 02:59:00 PM 5 comments
Labels: பேட்டி
சினிமா, அரசியல், விளையாட்டு
நான்கு நாட்கள் முன்பு நடிகர், அரசியல்வாதி, கிரிக்கெட் வீரர் என்ற பதிவை எழுதியிருந்தேன்.
தினமணியில் (சினிமா, அரசியல், விளையாட்டு) என்று கார்ட்டூனாக வந்துள்ளது.
(Like Minds Think Alike :-)
Posted by IdlyVadai at 12/04/2006 08:15:00 AM 0 comments
Labels: நகைச்சுவை
கலைஞர் பேட்டி - விஜயகாந்த் ஸ்பெஷல்
கலைஞர் பேட்டி - மத்திய அமைச்சர்கள் என்ன செய்கிறார்கள், ""டைட்டில்'' முடிந்தவுடன் "கிளைமாக்ஸ்" ?, முல்லைப் பெரியாறு, அலையன்ஸ் பப்ளிஷர்ஸ்..
கேள்வி:-"மத்தியில் 12 அமைச்சர்களைப் பிடிவாத மாகக் கேட் டுக் பெற்ற தி.மு.க. தலைவர் மத்திய நீர் வள அமைச்சர் பதவியை ஏன் போராடிப் பெற வில்லை?'' என்று தேனி உண்ணா விரத கூட்டத்தில் விஜயகாந்த் கேட்டிருக்கிறாரே?
பதில்:- நதி நீர்ப் பிரச்சினையை உள்ளடக்கிய மாநிலங்களில் இருந்து நீர்வள அமைச்சரை நியமித்தால், அவரது நடுநிலையில் ஐயப்பாடு வரும் என்பதற்காக அந்தப் பிரச்சினையுள்ள மாநிலத் தவரை நீர் வள அமைச்சராக நியமிப்பதில்லை என்று இன்றைய மத்திய அரசு ஒரு வழி முறையை வைத்திருக்கிறது என்பதை அரசியல் தெரிந்த பண்ருட்டியாவது விஜயகாந்த்துக்கு கூறியிருக்கலாம். தமிழ் நாட்டுக்கும் கேரளாவுக்கும் நதி நீர்ப்பிரச்சினை இருப்பதால்தான் கேரளாவில் இருந்தோ, தமிழ்நாட்டில் இருந்தோ நீர் வளத்துறை அமைச்சர் நியமிக்கப்படவில்லை என்பதை இன்றைய அரசியல் வகுப்பு மூலம் புதிய மாணவர்கள் கற்றுக் கொள்வார்களாக.
கே:- விஜயகாந்த் கட்சியினர் உண்ணாவிரதம் என்று அறிவித்ததும் தமிழக முதல்வர் டெல்லியில் முல்லைப் பெரியாறு பற்றி பேசியதை விளம்பரமாகப் போடுகிறார்கள் என்று விஜயகாந்த் கேலி பேசியுள்ளாரே?
ப:- "காக்கை உட்கார பனம்பழம் விழுந்தது'' என்ற கதை தான் டெல்லி பேச்சு வார்த்தை கூட்டத்தில் நான் பேசியதை, தமிழில், ஆங்கிலத்தில், மலை யாளத்தில் மொழியில் வெளி யிடப்பட்டுள்ளது. அதைப் பொறு மையாகப் படித்துப் பார்த்தால் கேரள மக்களுடன் நட்புணர்வு கெடாமலே முல்லைப் பெரியாறு பிரச்சினைக்கு ஒரு நல்ல முடிவு காணவே நாம் விரும்புகிறோம் என்ற தூய உள்ளம் புலப்படும். அண்டை மாநிலங்களில் வாழும் மக்களுடன் ஒருமைப்பாடும், ஒற்றுமையும் வலிமை பெற்று விளங்கிட அந்தந்த மாநில அரசுகள் முனைய வேண்டும் என்பதுதான் தி.மு.க.வின் விருப்பம்.
கே:- முல்லைப் பெரியாறு பிரச்சினைக்காக தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சர்கள் ராஜினாமா செய்வார்களா? என்று விஜயகாந்த் கேட்டுள்ளாரே?
ப:- அவர் நடித்த எந்தவொரு படத்திலாவது "டைட்டில்'' முடிந்தவுடன் "கிளைமாக்ஸ்'' காட்சி காட்டப்பட்டுள்ளதா என் பதை அவர்தான் விளக்கிச் சொல்ல வேண்டும்.
கே:- இலவச "கியாஸ்'' அடுப்பு கொடுப்பதற்குக்கூட ஜெயலலிதா எதிர்ப்பு தெரிவித்துள்ளாரே?
ப:- அவர் எதற்குத் தான் எதிர்ப்பு தெரிவிக்கவில்லைப அரிசி கிலோ 2 ரூபாய் என்றால், அதற்கு எதிர்ப்பு, நிலமற்ற ஏழை விவசாயிக்கு நில மென்றால் அதற்கும் எதிர்ப்பு, சத்துணவுடன் வாரம் 2 முட்டை என்றால் அதற்கும் எதிர்ப்பு, 7 ஆயிரம் கோடி ரூபாய் கூட்டுறவு கடன் அறவே ரத்து என்றால், அதற்கும் எதிர்ப்பி, இலவச வண்ணத்தொலைக்காட்சிக்கு எதிர்ப்பு, ஜெயலலிதா தருவதாகச் சொல்லி தராமலேயே விட்டு விட்ட இலவச கியாஸ் அடுப்புக்கும் இப்போது நாம் வழங்கும் போது எதிர்ப்பு, எல்லாமே அம்மையாரின் நல் லெண்ணத்தைப காட்டும் அடையாளர்கள்தானே?
கே:- நாளிதழ் ஒன்றில் தி.மு.க. அரசு வண்ணத் தொலைக் காட்சிக்காக 3 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியிருப்பதாக ஒரு அதிகாரி சொன்னதாக செய்தி வெளியிட்டுள்ளதே?
ப:- 2006-07ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் வண்ணத் தொலைக்காட்சிக்காக 750 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவரோ ஒரு அதிகாரி சொன்னதாக அந்த ஏடு எழுதி யிருப்பது உண்மைக்கே பெருங்கேடு!
கே:- வருமான வரி வழக்கி லிருந்து தப்பிக்க ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவினை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே?
ப:- உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததும், அதை உடனடியாக ஜெயலலிதா ஏற்றுக் கொண்டு விடுவாரா என்னப உச்ச நீதி மன்றம் செல்வார், அங்கே மீண்டும் முறையிடுவார், அங்கும் தள்ளுபடி செய்யப்பட்டால் மீண்டும் ஒரு காரணத்தைக்கண்டு பிடித்து தொடக்கத் திலிருந்து வழக்கை நடத்த வேண்டுமென்பார்.
கையிலே காசு இருக்கிறது, வழக்காட வக்கீல்கள் இருக் கிறார்கள். நீதிமன்றத்திலே விசாரணை நடைபெறாமல் எத்தனை ஆண்டுகளுக்கு இழுத்துக் கொண்டு சென்றா லும், மக்களுக்கு உண்மை நன்றாகவே தெரியும் அல்லவா?
கே:- கேரளாவிலிருந்து வெளிவரும் ஆங்கில வார ஏடு ஒன்று முல்லைப் பெரி யாறு பிரச்சினையில், அந்த மாநிலத்திற்கு ஆதரவாகவும், தமிழகத்திற்கு பாதகமாகவும் உண்மைகளைத் திரித்தும், மறைத்தும் நீண்ட கட்டுரை ஒன்றினை வெளியிட்டிருக்கிறதே?
ப:- அந்த மாநிலப் பற்று தமிழகத்திலே உள்ள ஒரு சில ஆங்கில ஏடுகளுக்கு இல்லையே என்பதை நினைத்துத் தானே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். தமிழகத்தின் சாபக்கேடு அது, இங்கே தமிழகத்தின் நலனைப் பற்றிக் கவலைப்படுவதை விட, தி.மு.க. அரசை எதிர்க்க ஒரு வாய்ப்பு என்று நினைக்கும் போக்குதான் அந்த ஏடுகளுக்கு உள்ளது.
கே:- போரூர் ஏரிப் பிரச்சினை முடிந்து விட்டதா?
ப:- அதைப் பற்றி ஒரு சில ஏடுகளில் மட்டும் வந்துள்ள செய்தி கவனத்தில் கொள்ளத்தக்கது. அது வருமாறு:-
"போரூர் ஏரியில் வீடிழந்த ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூடப்பாக்கம் கிராமத்தில் ஒரு சென்ட் வீதம் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது. இங்கு குடியேறுபவர்களுக்கு முதல் கட்டமாக இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பில் தண் ணீர் வசதிக்காக நான்கு கை பம்புகள், குடிநீர்தொட்டி அமைக்கப்படவுள்ளது. ரூ. 2.5 லட்சம் மதிப்பில் கழிப்பறைகள், சாலை வசதிகள் மற்றும் பஸ் போக்குவரத்து வசதிகள் செய்து தரப்படும்.
மின் வாரியம் மூலம் தெரு விளக்குகள், வீடுகளுக்கு உடனடி மின் இணைப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. மாற்று இடம் வழங் கப்பட்டு குடியேறுபவர்கள் அனைவருக்கும் உடனடியாக ரேஷன் கார்டு வழங்க மாவட்ட வழங்கல் அலுவலருக்கு உத் தரவிடப்பட்டுள்ளது. இவர் களது குடும்பத்தில் உள்ள குழந்தைகள் படிப்பிற்காக கூடப்பாக்கம், திருமழிசை, கீழ்மணம்பேடு, கொப்பூர், மணவாளநகர் ஆகிய பகுதி களில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ள கல்வித்துறை அலுவலர் களுக்கு உத்தரவு பிறப்பிக்கப் பட உள்ளது''.
கே:- தமிழை நீதி மன்றத்தில் வழக்கு மொழியாக்க உள் கட்டமைப்பு வேண்டும் என்று தலைமை நீதிபதி அறிவித்துள்ளாரே?
ப:- ஆம் கொள்கை அளவில் தமிழை நீதி மன்றத்தில் வழக்கு மொழியாவதை ஏற்றுக் கொண்டுள்ள தலைமை நீதிபதி அவர்கள். அதற்குத் தேவையான உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி உள்ளார். நீதிபதி அந்தக் கருத்தை தொலை நோக்குப் பார்வையில் அணுகி அவரது அரிய யோசனைகளை நடைமுறைப் படுத்திட அந்த அரசு இயன்ற வகையில் எல்லாம் பாடுபடும் என்பது உறுதி.
கே:- பதிப்புப் பணியிலும் தமிழ் வளர்ச்சிப் பணியிலும் கடந்த நூற்றாண்டுகளுக்கும் மேலாகத்தொடர்ந்து ஈடுபட்டு வரும் அலையன்ஸ் பப்ளிஷர்ஸ்'' நிறுவனத்தின் அரிய பணிகளைப் பாராட்டி சான்றிதழ் வழங்கி உள்ளீர்களே?
ப:- இந்த செய்தி பல ஏடுகளில் வெளியிடப்படவில்லை. ஆனால் இதற்கென்று ஒரு பின்னணி செய்தி உண்டு. அதாவது இந்த நிறுவனத்தினைப் பாராட்டி சான் றிழ் வழங்வேண்டும் என்பதற்கான கோப்பு கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே முறையாக அனுப்பப்பட்டு, அந்தக் கோரிக்கை ஏற்கப்பட்ட போதிலும், பின்னர் அந்தச் சான்றிதழ் முதல்-அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டு பல மாதங்கள் அது முதல்- அமைச்சர் அலுவலகத்திலே காத்திருந்தும் கையெழுத்தாகவில்லை. பின்னர் ஆட்சி மாறிய பிறகு அந்தக் கோப்பு என்னுடைய ஒப்புதலுக்காக வந்து நான் கையெழுத்திட்டு, நேற்றைய தினம் அந்தச் சான்றிதழ் அந்த நிறுவனத் தினருக்கு வழங்கப்பட்டது.
Posted by IdlyVadai at 12/04/2006 08:05:00 AM 2 comments
Labels: பேட்டி
Sunday, December 03, 2006
வலைப்பதிவில் பெண்கள்
இரண்டு மாதம் முன் குடும்ப வன்முறை சட்டம் வந்தது நினைவிருக்கலாம். மனைவியை அடிக்கும் கணவனுக்கு 20ஆயிரம் அபராதமும் அத்துடன் ஓராண்டு சிறைத் தண்டனை என்கிறது சட்டம்.
இந்த சட்டம் பற்றி வந்த சில கார்ட்டூன்கள் இங்கே
சில கார்ட்டூன்கள்
1
2
3
4
5
6
7
8
9
10
சமீபத்தில் 'நட்சத்திர பெண்' தனது கட்டுரையில் 'பெண் வலைப்பதிவாளர்' பற்றி ஒரு பதிவு எழுதியிருந்தார்.
'நிலா பெண்' கட்டுரையை கட்டுக்கதை என்றார். இதனால் ஆண் வலைப்பதிவாளர்கள் குழம்பி போனார்கள்.
வழக்கம் போல் ஒரு வாக்கு பதிவு சைடுல.. :-)( பயப்படாமல் ஓட்டு போடுங்கள் )
( கார்ட்டூன் உதவி: மதி, தினமணி )
Update: முடிவுகள்:
Posted by IdlyVadai at 12/03/2006 08:04:00 PM 15 comments
Labels: வாக்கெடுப்பு
வைகோவுடன் கரண் தாப்பர்
இன்று இந்திய நேரம் மாலை 8:30 மணிக்கு வைகோவுடன் Devil's Advocate நிகழ்ச்சியில் வைகோவுடன் கரண் தாப்பர் உரையாடுகிறார். அதில்
"நாங்கள் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு ஆதரவளிக்கவில்லை. அமைச்சர் பதவி எங்களுக்குத் தேவையில்லை. அமைச்சரவையால் நாங்கள் பயனடையப் போவதுமில்லை. இந்த கூட்டணியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டதாலேயே காங்கிரஸ் கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது"
விடுதலைப் புலிகளை பயங்கரவாத இயக்கம் என காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கருதி வரும் நிலையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் மதிமுக காங்கிரஸின் நிலையை ஏற்றுக்கொள்கிறதா என்ற கேள்விக்கு
"மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்டு கட்சிகள் காங்கிரஸின் அனைத்து கொள்கைகளையும் ஏற்காமல் அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவளித்து வருகிறார்கள். நாங்களும் அரசுக்கு வெளியில் இருந்துதான் ஆதரவு தருகிறோம். நாங்கள் அமைச்சரவையில் இல்லை"
தனித் தமிழ் ஈழம் ஒன்றே இலங்கையிலுள்ள தமிழ் மக்களை திருப்திபடுத்தும் என்பது பல ஆண்டுகளாக நான் கூறிவரும் கருத்து என வைகோ மேலும் கூறினார்.
எந்தவொரு பயங்கரவாத இயக்கத்துக்கும் அதிமுக ஆதரவு தராது என அக்கட்சியின் பொதுச்செயலர் ஜெயலலிதா கூறி வருவது குறித்து வைகோவிடம் கேட்டபோது, அரசியல் கட்சிகள் ஒவ்வொரு பிரச்சினையையும் தங்களது சொந்த கொள்கைகளின்படிதான் அணுகும். அதிமுகவுக்கென்று ஒரு கொள்கை உள்ளது. மதிமுகவுக்கென்று ஒரு கொள்கை உள்ளது. இதனாலேயே எங்களுக்குள் ஒற்றுமை இல்லை என்று ஆகிவிடாது என்றார்.
Posted by IdlyVadai at 12/03/2006 06:42:00 PM 3 comments
Labels: பேட்டி