பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, November 30, 2006

பெரியார் படத்திற்கு சில யோசனைகள் - 2

போன வாரம் பெரியார் படத்திற்கு சில யோசனைகளை தொடர்ந்து இந்த வாரமும்.
( நன்றி துக்ளக் ).


கற்பு ஒழுக்கம் என்பது பூச்சாண்டி !

உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள் எப்படி பெண் மக்களை அடிமைப்படுத்தி, அடக்கி ஆளவென்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ, அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும், எளியோரையும் பாமர மக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமேயல்லாமல், அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது. கற்பு, காதல், சத்தியம், நீதி, ஒழுக்கம் என்பனவெல்லாம் ஒரே தாயின் பிள்ளைகள். அதாவது குழந்தைகளைப் பயமுறுத்த பெரியவர்கள் "பூச்சாண்டி, பூச்சாண்டி'
என்பது போல், இவை எளியோரையும் பாமர மக்களையும், வலுத்தவர்களும்
தந்திரக்காரர்களும் ஏமாற்றச் செய்த ஒரு பெரும் சூழ்ச்சியேயாகும்.

– "மெட்டீரியலிசம் அல்லது பிரகிருதிவாதம்' என்ற நூலிலிருந்து.பெண்களும் கற்பும்

பெண் தன்னைப் பற்றியும், தனது கற்பைப் பற்றியும் காத்துக் கொள்ள, தகுதி பெற்றுக் கொள்ள விட்டு விட வேண்டுமே ஒழிய, ஆண் காவல் கூடாது. இது ஆண்களுக்கும் இழிவான காரியமாகும்.

– 3.11.1935 "குடி அரசு' இதழ்பெண்களுக்கு அறிவுரை

ஆண்களும், பெண்களும் ஒரே மாதிரியாக லுங்கி கட்ட வேண்டும். ஜிப்பா போட வேண்டும். நம் நாட்டுப் பெண்களின் முன்னேற்றத்தை வேகமாகத் தடுத்து வருவது அவர்களது புடவை, நகை, துணி, அலங்கார வேஷங்கள்தான் என்பதை அவர்கள் உணர வேண்டும். பெண்கள் எல்லாம் ஆறடி ஏழடி என்று கூந்தலை வளர்த்துக் கொள்வது, அநாகரீகமும் தேவையற்ற தொல்லையுமாகும். ஆண்களைப் போலவே பெண்களும் கிராப் வைத்துக் கொள்ள வேண்டும்.

– "பெரியார் ஒரு வாழ்க்கை நெறி' என்ற நூலிலிருந்து.உண்மையான சமரசம்

ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால், பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும். உடனே நிலைமை சரிப்பட்டுப்போகும். உண்மையான சமரசம் தோன்றி விடும். பிறகு கஷ்டமே இருக்காது.

– "தந்தை பெரியார் அறிவுரை 100' என்ற நூலிலிருந்து.பெண்ணடிமை ஒழிய...

பெண்ணடிமைக்கு அடிப்படைக் காரணங்கள் திருமணம், கற்பு என்பவைகளேயாகும். திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது... திருமணம் என்பது ஆண்களுக்கு நன்மையாகவும், பெண்களுக்கு கேடாகவும் இருக்கிறது. பெண்களை அடிமையாக வைத்திருப்பது என்பது ஆண்களுக்கு லாபமாக இருக்கிற காரணத்தால், பெண்கள் உரிமைக்கு ஆண்கள், ஒப்புவது இல்லை. இந்த நிலை மாறியாக வேண்டும். நாளைக்கே ஒரு அரசாங்கம் வந்து, திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று சட்டம் செய்து விட்டால் பிரச்சனை இல்லை... எனவே, பெண்ணடிமை ஒழிய திருமண முறை ஒழிந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல. மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டுமென்றாலும், இந்த திருமண முறை ஒழிந்தே ஆக வேண்டும்.பெண் விடுதலை

...கற்புக்காக பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும்படியான, நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்... கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு காதலும் அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கிற சமூகக் கொடுமையும் அழிய வேண்டும்.

– "உயர் எண்ணங்கள்' என்ற நூலில் பெரியார்ஒரே புருஷன் என்ற கட்டாயம் கூடாது

...இந்தக் காதல் காரணத்தினாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடனும்,
ஒரு மனைவி, ஒரே புருஷனுடனும் மாத்திரம் இருக்க வேண்டியதென்றும் கற்பித்து, அந்தப்படி கட்டாயப்படுத்தியும் வரப்படுகிறது. இதன் பலாபலன் எப்படியிருந்தாலும் இந்தப்படி சொல்கின்றவர்களை எல்லாம் உலகனுபவமும், மக்கள் தன்மையின் அனுபவ ஞானம் இல்லாதவர்கள் என்றோ, அல்லது இயற்கைத் தன்மையையும் உண்மையையும் அறியாதவர்கள் என்றோ, அல்லது உண்மை யறிந்தும் வேறு ஏதாவதொரு காரியத்திற்காக வேண்டி, வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள் என்றோதான் கருத வேண்டியிருக்கிறது.
...இவையெல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும், தனக்குப் பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும் அவனுடைய தனி இஷ்டத்தையும், மனோபாவத்தையும், திருப்தியையும் மாத்திரமே சேர்ந்ததென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்றுதான் சொல்ல வேண்டும்.அடிமைத்தனம்

மக்களின் அன்பும், ஆசையும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, அது இன்னவிதமாக, இன்னாரோடு மாத்திரம்தான் இருக்க வேண்டும் என்பதாக நிர்பந்திக்க எவ்வித நியாயமும் இருப்பதாக நமக்குத் தோன்றவில்லை. ஏனெனில், ஆசை என்பது ஜீவ சுபாவமானது. அதை ஏதோ நிர்பந்தத்திற்காக தடுத்து வைப்பது என்பது ஒரு வகையான அடிமைத்தன மேயாகும்.கற்பு என்பது புரட்டு

சாதாரணமாகவே இன்றைய கற்பு, விபச்சாரம் என்னும் வார்த்தைகள் சுதந்திரமும் சமத்துவமும் கொண்ட வாழ்க்கைக்கு, சிறிதும் தேவையில்லாததேயாகும். எப்படி கற்பு என்ற வார்த்தையும் அதைப் பயன்படுத்தும் முறையும் புரட்டானது என்றும், பெண்ணடிமை கொள்ள உத்தேசித்து ஏற்படுத்தியதாகும் என்றும் சொல்லுகிறோமோ, அது போலவே விபச்சாரம் என்னும் வார்த்தையும் அதன் பிரயோகமும்
புரட்டானதும், பெண்களை அடிமை கொள்வதற்கென்றே ஏற்படுத்தப்பட்டதென்றும் காணப்படுவதோடு, அது முக்கியமாய் இயற்கைக்கு விரோதமானதென்றும் கூட
விளங்கும்.ஒழுக்கம் அவசியமில்லை

சாதாரண மனித ஜீவனின் உணர்ச்சியையும், இந்திரியச் செயலையும் கட்டுப்படுத்தும்படியானதான கொள்கைகளை, ஒழுக்கங்களை, கட்டுப்பாடுகளை ஏற்படுத்தினால் அது செலாவணியாகுமா? செலாவணியாவதாயிருந்தாலும், அதற்கு என்ன அவசியம் என்பன போன்றவைகளை கவனிக்க வேண்டாமா என்றுதான் கேட்கிறோம்.கர்ப்பத்தின் விளைவு

பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப்பருவம்
அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணமடைவதற்கும் கர்ப்பம்
என்பதே மூலகாரணமாயிருக்கிறது. பெண்கள் விடுதலைக்கும், சுயேச்சைக்கும், முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும்
என்று நாம் சொல்லுகின்றோம்.

– "பெண் ஏன் அடிமையானாள்?' என்ற நூலிலிருந்து.பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு
என்னும் சங்கிலியால் கட்டிப் போட்டிருக்கும் கட்டை உடைத்தெறிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும், நிர்பந்தத்திற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது!

– தந்தை பெரியார் – சமுதாய சீர்திருத்தம் என்ற நூல் – பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடுகேள்வி : பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்?

பதில் : கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ, அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்குக் காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபச்சார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள்.

– தந்தை பெரியார் – குடிஅரசு 29.10.1933 – "விடுதலை' வெளியிட்ட தந்தை பெரியார் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
( தொடரும்.. :-)

Read More...

செய்தியும் படமும்.

நேற்று நடந்த முல்லை பெரியாறு பேச்சுவார்த்தையின் போது இரு மாநில முதல்வர்களும் கைகுலுக்கி போஸ் கொடுக்கும்படி கேமராமேன்கள் கேட்டனர். ஆனால், அச்சுதானந்தன் சம்மதிக்கவே இல்லை. அவர் கூட்டத்திற்கு வந்து அமர்ந்ததில் இருந்தே முகத்தை கடுகடுவென இறுக்கமாகவே வைத்திருந்தார். எந்தவொரு சமாதானத்துக்கும் தயாராக இல்லை என்பது போல அவர் மிகவும் இறுக்கம் காட்டினார். கேமரா மேன்களின் தொடர் வற்புறுத்தல் காரணமாக அமைச்சர் சோஸ் கூட அச்சுதானந்தனிடம் கேட்டுக்கொண்ட போதிலும் அதற்கு அவர் இணங்கவில்லை. முதல்வர் கருணாநிதி உட்பட தமிழக தரப்பினர் அனைவரும் சிரித்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். தமிழக முதல்வர் கைகுலுக்க தயாராக இருந்தும்கூட அதற்கு அச்சுதானந்தன் உடன்படாமலேயே சில நிமிடங்கள் நீடித்தன. நிலைமையை உணர்ந்த அமைச்சர் சோஸ் எழுந்து இரு மாநில முதல்வர்களின் கைகளை அவரே பிடித்து சிரித்தபடி போஸ் கொடுத்தார்.

( இப்போ நீங்க சிரிப்பா சிரிக்கலாம் )

Read More...

இட்லிவடை பற்றி கருத்து கணிப்பு

நீங்க இட்லிவடை படிப்பவரா ? அப்படியென்றால் இட்லிவடை பற்றிய கருத்து கணிப்பை குழலி நடத்துகிறார்.

நேராக http://kuzhali.blogspot.com/2006/11/blog-post_30.html சென்று மனசாட்சி படி ஓட்டு போட்டுட்டு உங்க கடமைய முடிசிடுங்க.

குழலி,

ஓட்டு பதிவு நடத்துவதற்கு நன்றி.

அன்புடன்,
இட்லிவடை

Update: 2-12-2006
இட்லிவடை பதிவு எப்படி ? என்று வாக்கு பதிவு நடத்தி முடித்த குழலிக்கும், வாக்கு போட்ட அனைவருக்கும் நன்றி. ( போடாதவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி :-)முழு விவரம் : http://kuzhali.blogspot.com/2006/12/blog-post.html

Read More...

மீண்ட கங்குலி !


தென்னாப்ரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சவுரவ் கங்குலி இடம் பெற்றுள்ளார். டில்லியில் நடைபெற்ற இந்திய அணி தேர்வு குழு கூட்டத்தில் டெஸ்ட் போட்டிக்கான அணி அறிவிக்கப்பட்டது. நீண்ட எதிர்பார்ப்பிற்கு பின் கங்குலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 10 மாதங்களுக்கு முன் பாகிஸ்தான் தொடரில் கங்குலி விளையாடினார். அதன் பின்னர் தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். லட்சுமண் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். அணி விபரம் :- ராகுல் டிராவிட் (கேப்டன்), லட்சுமண் (துணை கேப்டன்), சச்சின், சவுரவ் கங்குலி, சேவாக், காம்பிர், வாசிம் ஜாபர், தோனி, கார்த்திக், முனாப் படேல், ஜாகிர் கான், ஸ்ரீ சாந்த், வி.ஆர்.வி. சிங், பதான், கும்ளே.
( செய்தி: தினமலர், கார்ட்டூன் தினமணி (ஜனவரியில் வந்தது)

Read More...

மேலே கீழே
( நன்றி: அவள் விகடன் )

Read More...

முல்லை பெரியாறு அரசியல்

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக - கேரள முதல்வர்களிடையிலான முதல் கட்ட பேச்சுவார்த்தையில் தீர்வு கிடைக்கவில்லை. அதே நேரத்தில், இரு மாநில பொதுப்பணித்துறை அமைச்சர்கள் அடுத்த இரு வாரங்களுக்குள் சந்தித்துப் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது. - செய்தி

"முல்லை பெரியாறு விவகாரம் குறித்து பேசிய விவரங்களை சோனியாவிடம் தெரிவித்துள்ளேன். இந்த விஷயத்தில் சோனியாவின் உதவியை எதிர்பார்க்கிறேன்" - கலைஞர்

"முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பேச்சுவார்த்தை, மெகா சீரியலைப் போல நீண்டு கொண்டே போகாது என்றும் அதே நேரத்தில் சிறுகதை போல முடிந்துவிடாது" - கலைஞர்

"தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டதே எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்த பேச்சுவார்த்தை முடியும்வரை நாங்கள் அணையின் நீர்மட்டத்தை 136 அடிக்கு மேல் உயர்த்த விட மாட்டோம்" - கேரள முதல்வர் அச்சுதானந்தன்.

"பெரியாறு அணையின் நீர் மட்டத்தை சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி 142 அடியாக உயர்த்த வலியுறுத்தி தே.மு.தி.க., சார்பில் தேனியில் டிச., 2ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது. இதில், அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கலந்து கொள்கிறார்"

"இரு மாநில முதல்வர்களும் கைகுலுக்கி போஸ் கொடுக்கும்படி கேமராமேன்கள் கேட்டனர். ஆனால், அச்சுதானந்தன் சம்மதிக்கவே இல்லை. அவர் கூட்டத்திற்கு வந்து அமர்ந்ததில் இருந்தே முகத்தை கடுகடுவென இறுக்கமாகவே வைத்திருந்தார்" - செய்தி

"கருணாநிதி, அச்சுதானந்தன் பேச்சுவார்த்தை முடிந்தவுடன் அந்த ஹாலை விட்டு வெளியில் வந்த தமிழக முதல்வர் கருணாநிதியும், கேரள முதல்வர் அச்சுதானந்தனும் எதிரில் உள்ள அறைக்குள் சென்றனர். சற்று வேகமாக உள்ளே சென்றதை பார்த்தவுடன் அங்கு குழுமியிருந்த நிருபர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. இரு மாநில முதல்வர்களும் தனிப்பட்ட முறையில் சில நிமிடங்கள் பேசுவதற்காக செல்கின்றனரோ என்று நினைத்து, கேள்வி எழுப்பினர். சில நிமிடங்கள் அங்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. அந்த சூழ்நிலையில் கேரள நீர்பாசனத்துறை அமைச்சர் ஹேமச்சந்திரன், "ஒன் டூ ஒன் என்றெல்லாம் இல்லை. இரண்டு முதல்வர்களுமே சிறுநீர் கழிப்பதற்காக ஒரே பாத்ரூமிற்குள் சென்றுள்ளனர்' என்று கூறியவுடன், அங்கு கூடியிருந்த அனைவர் மத்தியிலும் பலமான வெடிச்சிரிப்பு ஏற்பட்டது. - செய்தி.

முல்லை பெரியாறு பிரச்னை பற்றி முழுவதும் தெரிந்துக்கொள்ள

கலைஞர் பேட்டி முழுவதும் கீழே..


கேள்வி:- முல்லைப்பெரியாறு பேச்சுவார்த்தை எப்படி இருந்தது?

பதில்:- பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. ஏறத்தாழ ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது.

கேள்வி:-புதிய அணை கட்டப்பட வேண்டுமென்ற கேரள அரசின் கோரிக்கை பற்றி?

பதில்:- தமிழக அரசின் சார்பில் எங்கள் கருத்துக்களை எடுத்து தெரிவித்திருக்கிறோம். கேரள அரசினர் அவர்களுடைய கருத்துக்களை எடுத்து வைத்தார்கள். விவாத முறையில் இரண்டு விதக் கருத்துக்களும் வேறுபட்டவைகளாக இருந்தாலும், நல்ல எண்ணத்தின் அடிப்படையில் இன்றைய விவாதம் முடிவுற்றிருக்கிறது.


கேள்வி:- பேச்சுவார்த்தை முற்றுப் பெற்றுவிட்டதா?

பதில்:- இன்னும் பத்து நாட்களில் அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை இரு மாநில பொதுப்பணித் துறை அமைச்சர்கள் கலந்து கொண்டும், பொறியாளர்கள் கலந்து கொண்டும் நடைபெற இருக்கிறது. அதற்கான தேதியை மத்திய அமைச்சர் குறிப்பிடுவார்.

கேள்வி:- இந்தப் பேச்சுவார்த்தை எங்கே நடக்கும்?

பதில்:- அநேகமாக டெல்லியில்தான் நடைபெறும்.

கேள்வி:- முதல் அமைச்சர்கள் பேசியே உடன்பாடு ஏற்படவில்லை. அமைச்சர்கள் பேசியா உடன்பாடு ஏற்பட்டு விடப் போகிறது?

பதில்:- உடன்பாடு ஏற்படவில்லை என்று ஒரேடியாக சொல்ல முடியாது. உடன்பாட்டை நோக்கிச் செல்லும்போது எந்தெந்த வழியில் செல்லலாம் என்பதை எங்களுக்கு உணர்த்துவதற்கு இந்த அடுத்த கட்ட பேச்சுவார்த்தை பயன்படும் என்று நம்புகிறேன்.

கேள்வி:- பேச்சுவார்த்தையே தொடர்கதையாக நீளுகிறதே? ஜனவரி 1ந் தேதிக்குள் அறிக்கை தர வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட்டு சொல்லி இருக்கிறதே? ஏதாவது காலவரையறை நிர்ணயம் செய்யப்படுமா?

பதில்:- காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.


கேள்வி:- முல்லைப்பெரியாறு பிரச்சினை காரணமாக பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். நெய்வேலிப் பிரச்சினையில் நீங்கள் மத்திய அரசுக்கு எதிராக ஒரு நிலை எடுத்ததைப் போல, இந்த பிரச்சினை காரணமாகவும் நீங்கள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா?

பதில்:- பா.ஜ.க.வின் ஆசையை நீங்கள் வெளிப்படுத்தி இருப்பதாக நான் இந்த கேள்வியை எடுத்து கொள்கிறேன்.

கேள்வி:- பேச்சுவார்த்தைக்கு கால நிர்ணயம் செய்யப்பட வேண்டுமென்று வற்புறுத்துவீர்களா?

பதில்:- இது மெகா சீரியலாகவும் இருக்காது. சிறுகதையாகவும் இருக்காது.

கேள்வி:- சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையே, கேரளா மதிக்க மறுப்பது, தவறான முன்மாதிரியாக ஆகி விடாதா?

பதில்:- எதற்கும் முன்மாதிரி என்று ஒன்று உண்டு. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்ச்சிகள் முன்மாதிரியாக ஆகி விடக் கூடாது.

கேள்வி:- தமிழ்நாடு பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் இடஒதுக்கீடு பிரச்சினையில் நீங்கள் சரியாக அக்கறை காட்டவில்லை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருக்கிறாரே? அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாங்கள் இன்னும் அதிக அக்கறை காட்ட வேண்டுமென்று எங்களை ஊக்கப்படுத்தியிருக்கிறார் என்று கருதுகிறேன்.

Read More...

Wednesday, November 29, 2006

இது என்ன ?இது என்ன ?
தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கலாம்.

Read More...

விக்கி பசங்க

விக்கி பசங்க என்ற வலைப்பதிவை இந்த ஆண்டின் சிறந்த கூட்டணி( கூட்டணி விவரம் கீழே) வலைப்பதிவு என்று சொல்லலாம்.

சட்டையை எப்படி மடிக்கலாம், படம் காமிப்பது எப்படி, பால் பேரிங் பற்றி, இந்தியா கிரிக்கெட்டில் ஜெயிப்பது எப்படி போன்ற பல பயணுள்ள தகவல்களை சொல்லியிருக்கிறார்கள். அவர்களுக்காக தனியாக இட்லிவடை பதிவில் சைடில ஒரு டப்பா எப்போதும் இருக்கும்.

நிச்சயம் பாராட்டபட வேண்டிய வலைப்பதிவு.

கீழே இருக்கும் இவர்களுக்கு ஒரு சபாஷ்.
இராமநாதன்
துளசி கோபால்
சுரேஷ் (penathal Suresh)
முகமூடி
இலவசக்கொத்தனார்
சின்னவன்
விக்கி பசங்க
பிரகாஷ் ( ஏங்க உங்க பேர் தெரியலை :-)
விக்கி பசங்க கிட்ட மாட்டிக்க இங்கே போங்க

Read More...

Tuesday, November 28, 2006

கரி அமைச்சர் சிபுசோரன் கைது. ராஜினாமா ?

மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் சிபுசோரன் உட்பட ஐந்து பேர் அவரது உதவியாளர் கொலை வழக்கில் குற்றவாளி என டில்லி கோர்ட் தீர்ப்பு வழங்கியது.இதை தொடர்ந்து சிபுசோரனும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். இந்த தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து சிபுசோரனை மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்யுமாறு பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார்.

கூட்டணி தர்மம் என்றால் முகத்தில் கரி புசி கொள்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

Read More...

FLASH: சஞ்சய் தத் - தீர்ப்பு

நடிகர் சஞ்சய் தத் மும்பை தடா கோர்ட்டில் ஆஜரானார். "நிழல் உலக தாதா அபு சலீமிடம் இருந்து ஏ.கே.56 ரக துப்பாக்கி வாங்கினார் என்ற சஞ்சய் தத் மீதான வழக்கில் ஆயுதங்கள் வைத்திருந்தது மற்றும் தடா வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளார். ( இதற்கு குறைந்தபட்ச தண்டனை மூன்று வருடம் இருக்கலாம் )

இன்னும் சிறிது நேரத்தில் இந்த வழக்கிற்கான தீர்ப்பு அளிக்கப்படவுள்ளது. ஆனால் மும்பை குண்டு வெடிப்பு சூழ்ச்சியில் அவருக்கு பங்கில்லை.


( More updates follow.. )

Read More...

Monday, November 27, 2006

கிரிக்கெட் காமெடி

இந்திய எம்.பிக்கள் சம்பளம் வாங்குவதற்காக எதை வேண்டுமானாலும் பேசுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கூறியதற்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர் - செய்தி

நீங்க என்ன சொல்லறீங்க ? ( ஓட்டு போட்டுட்டு போங்க )

இன்று தினமணியில் வந்த சில கார்ட்டூன்கள் கீழே

Read More...

நகைச்சுவையின் அனாடமி

2004ல் 'நகைச்சுவை ஓர் எளிய அறிமுகம்' என்ற தலைப்பில் சிலபதிவுகளை எழுதியது பலர் மறந்திருக்கலாம்.

அரசியல் நகைச்சுவையை கொஞ்ச குறைத்துவிட்டு மீண்டும் இதை தொடரலாம் என்று எண்ணம். என்ன ரெடியா ? ( என்ன எழுதலாம் என்று நான் யோசித்துக்கொண்டிருக்கும் வரை இதை படித்துக்கொண்டிருங்களேன் )

பகுதி 1
பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7
பகுதி 8
பகுதி 9
பகுதி 10
பகுதி 11

Read More...

வைகோ உண்ணாவிரதம்

இலங்கை அதிபர் ராஜ பக்சே 5 நாள் சுற்றுப் பயணமாக நேற்று முன்தினம் டெல்லி வந்தார். பல கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்தவண்ணம் இருக்கிறார்கள் ( ராமதாஸ் வீட்டுக்கு முன் கருப்பு கொடி பறக்கவிட்டார்).

இன்று வைகோ தன்பங்கிற்கு டெல்லியில் உண்ணாவிரதம் இருக்கிறார். இதில்
ம.தி.மு.க. எம்.பி.க்கள் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கிருஷ்ணன், ரவிசந்திரன் மற்றும் ம.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.

அ.தி.மு.க. சார்பில் பி.ஜி. நாராயணன், தினகரன், மலைச்சாமி ஆகியோர் வைகோவுக்கு வாழ்த்து தெரிவித்தனர். காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரி பரூக் அப்துல்லா மற்றும் அமர்சிங் ஆகியோரும் நேரில் வாழ்த்தினார்கள்.

வைகோ நிருபர்களிடம் கூறியதாவது

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அமைதி பேச்சு வார்த்தையையும் இலங்கை அரசு மீறுகிறது.

இதை மத்திய அரசு இலங்கை அதிபரிடம் எடுத்துச் சொல்லி, இலங்கை ராணுவத்தில் மனித உரிமை மீறலை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை தமிழர்கள் உரிமை நிலை நாட்டப்பட வேண்டும்.

Read More...

மஞ்சள் துண்டு யார் அணியலாம் - கலைஞர்

கலைஞர் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் மஞ்சள் துண்டு அணிவது குறித்து மீண்டும் ஒரு விளக்கம் அளித்துள்ளார்.

"சேறு படிந்த சிந்தனைகளும் நிறைந்த ஏமாற்றும் துணிவும் கொண்டவன் மஞ்சள் ஆடை அணிவது பொருந்தாது என்றும், தன்னியல்பை ஆள்பவன் எவனோ, ஒளியும் தெளிவும் உண்மையுமானவன் எவனோ அவன் மஞ்சளாடை அணியலாம் என்று புத்தர் சொன்னதாக "ஓஷோ' வின் "தம்மபதம்' எனும் நூலில் குறிப்பிட்டிருப்பதை நான் பல தடவை சுட்டிக்காட்டியுள்ளேன்'

ராகு காலத்தில் திறப்பு: தாம் திரை மறைவில் கடவுளை வணங்குவதாக ஒரு பேட்டியில் வந்துள்ளதை சுட்டிக்காட்டி, தாம் பகுத்தறிவுவாதி என்பதற்கு யாரும் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்று கடுமையாக கூறியுள்ளதோடு, பலர் வேண்டாம் என்று கூறிய பிறகும் புழல் மத்திய சிறையை ராகு காலத்தில் திறந்து வைத்ததாக கருணாநிதி அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.


ஞாநி ( ஜூன் மாதம் ஆனந்த விகடனில் எழுதியது )
ஜெயலலிதா ஆட்சியின்போது, கண்ணகி சிலை அங்கிருந்து காணாமல் போனது ஏன் என்பது, எவ்வளவு விமர்சனங்கள் வந்தா லும் கருணாநிதி ஏன் மஞ்சள் சால்வையை அகற்றுவதில்லை என்கிற மர்மத்துக்கு நிகரானது. இரண்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என்றெல் லாம் ஊகிக்கலாமே தவிர, புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது.

டாப் டென்+1 விடை தெரியாத கேள்விகள் ?!

Read More...

Sunday, November 26, 2006

முல்லை பெரியாறு அணை பிரச்சனை

இன்று வந்த தினத்தந்தியில் முல்லை பெரியார் அணை பிரச்சனை பற்றி அந்த அணையின் வரலாற்றை பற்றி ஒரு கட்டுரை வந்துள்ளது. அதை முழுவதும் படிக்க சிபாரிசு செய்கிறேன்.

படிக்க/பார்க்க இங்கே செல்லவும்


( 'பெரியாறு' என்பதை 'பெரியார்' என்று பழக்கதோஷத்தில் படிக்க வேண்டாம் என்று வாசகர்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் )

Read More...

காலங்கள் மாறும் கோலங்கள் மாறும்

சென்னை வியாசர்பாடியில் வேலைக்கு சென்ற காஞ்சனா என்ற இளம்பெண்ணை பார்த்து சில வாலிபர்கள் கிண்டல் செய்தனர். இதனால் ஆவேசம் அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தும் திராவகத்தை (ஆசிட்) எடுத்து வந்து வாலிபர்களை நோக்கி வீசினார். கிண்டல் செய்தவர்களின் கண்ணில் எரிச்சல் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் வழக்கு பதிவு செய்து காஞ்சனாவை கைது செய்தனர்.

வலைப்பதிவில் பெண்களை கிண்டல் செய்பவர்களே இனிமேல் யோசியுங்கள் :-)

Read More...

Saturday, November 25, 2006

தமிழுக்கு அமுதென்று பெயர் !

'பெரியார்' படத்திற்கு சில யோசனைகள் என்ற பதிவிற்கு குழலியின் பின்னூட்டம், தேடும் வசதிக்காக தனி பதிவாக இங்கே.
( தலைப்பு பழைய பாலச்சந்தர் படத்திலிருந்து ஒரு பாட்டு :-)


குழலி ...

இட்லிவடை இவ்வளவு தூரம் பெரியார் பட இயக்குனருக்கு எடுத்துகொடுத்துள்ளீர் என் பங்குக்கு நானும் எடுத்து தருகிறேன், இப்படியெல்லாம் தமிழை திட்டிய பெரியார் அறிமுகப்படுத்தியது தான் இன்றைய தமிழ் அச்செழுத்து சீர்திருத்தம், தமிழ் என்ற இந்த காட்டுமிராண்டிகளின் மொழியில் அச்செழுத்து சீர்திருத்தத்தை பெரியார் அறிமுகப்படுத்துவதற்கு முன் "லை" இப்படி இருந்ததல்ல, அது எப்படி இருந்தது என்றால் பாலச்சந்தரின் "வானமே எல்லை" சுவரொட்டியையோ பழைய துக்ளக், கல்கியையோ பார்க்கவும்(கடந்த சில ஆண்டுகளாகத்தான் இவர்களும் பெரியார் உருவாக்கிய தமிழ் அச்செழுத்து சீர்த்திருத்தத்தை ஏற்றுகொண்டார்கள் என நினைக்கின்றேன்), பெரியார் கூற்றுப்படி நல்ல விடயங்களுக்காகவும் அச்சு நவீனத்துவத்துக்குமான மாற்றத்தை மொழியில் ஏற்காதவர்களின் மொழி காட்டுமிராண்டிகளின் மொழி "வானமே எல்லை" படம் வெளிவந்தபோது இந்த கூற்றுப்படி பாலச்சந்தர் காட்டுமிராண்டி, துக்ளக்கும் கல்கியும் நீண்ட நாட்களுக்கு இதை ஏற்காததால் அவர்களும் அவர்கள் எழுதிய தமிழும் காட்டுமிராண்டி, இதே மாதிரி நீங்கள் ஒரு பதிவிட்டபோதும் நான் இதே மாதிரி பெரியாரின் அச்செழுத்து சீர்திருத்தத்தை எழுதியிருந்தேன், உங்கள் பதிவின் செய்தி சேவையினால் அதை தேடி கண்டுபிடிக்கமுடியவில்லை, இந்த பதிவை குறித்து வைக்க வேண்டும், மீண்டும் இதே மாதிரி நீங்கள் பதிவிடுவீர் அப்போது எனக்கு CTL-C , CTL-V செய்தால் போதுமானதாக இருக்கும், புதிதாக தட்டச்ச தேவையில்லை...உ

பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பெரியார் சொன்னது போலத்தான் இருக்கும், திருக்குறளுக்கு பிந்தைய காலகட்டத்தில் வெளியான தமிழிலக்கிய நூல்களில் பெரும்பாலானவை போர் பரணிகளும், அரசர்களுக்கு தட்டிய ஜால்ராக்களும், சைவ,வைணவ மதமென்று பார்ப்பனியத்துக்கு கூஜா தூக்கிய படைப்புகளாகவும் தானிருந்தன, பார்ப்பனீயம் ஊடுறுவிய, அதைஉள்வாங்கிய ஒரு சமூகத்தின் மொழி வெளிப்பாடு பிறகெப்படி இருக்கும்? அப்படித்தானிருக்கும்.? பார்ப்பனிய அதிகாரத்துவத்தை எதிர்க்கும் பெரியாரின் குரல் இப்படி தான் இருக்கும், கருத்தளவில் இப்படி எதிர்த்த இதே பெரியார் இதே தமிழ் மொழி நவீனத்துவமடையவேண்டுமென்று அச்செழுத்து சீர்திருத்தம் செய்திருக்கிறாரென்றால் அவர் தமிழ் மொழியை கேவலமாக நினைத்தவரா என்பது புரியும்...

அது சரி தமிழ் என்றால் பலர் உணர்ச்சிவயப்படவும் சிலர் எரிச்சலடையவும் காரணமென்ன?

தமிழ்- முகமூடி, குழலி பதிவுகளை முன்வைத்து என்ற பதிவில் எழுத்தாளர் மாலன் சொல்லியிருப்பதிலிருந்து சில வரிகள் கீழே...

மிகை உணர்ச்சிகளை நீக்கிவிட்டு வரலாற்றுக் கண் கொண்டு பார்த்தால், இரண்டு விஷயங்களை விளங்கிக் கொள்ள முடியும்:

1.தமிழ் அறிவு என்பது ஒரு சமநிலைச் சமூகத்திற்கான (egalitarian society) விழைவை நோக்கி இட்டுச் செல்லும் ஒன்று
2.தமிழ் உணர்வு என்பது அதிகாரத்திற்கெதிரான, குறிப்பாக -வலியார் சிலர் எளியோர் தமை வதை செய்குவதை- போர்க் குணத்தை அளிப்பது. (anti -establishment)

கம்பன், பாரதி, பாரதிதாசன், ஜீவா ஆகியோரிடம் காணப்படும் அதிகார எதிர்ப்பு நிலைகளுக்கும் ஒரு முக்கிய காரணியாக தமிழுணர்வு இருந்திருக்கிறது.

தமிழுக்கு ஐம்பெரும் காப்பியங்களைத் தந்த சமண பெளத்த சமயங்கள், ஒரு வித சமநிலைச் சமூகத்தை விரும்பின. நிறுவனமாக்கப்பட்ட அமைப்புக்கள் மூலம் கல்வி வழங்கல், வைதீக சமயங்கள் பெண்களுக்கு அளித்திருந்ததைவிட சற்று மேம்பட்ட நிலையை அளித்தல் இவை அவற்றின் இந்த விழைவுகளுக்கு உதாரணங்கள். ஆனால் அவை தங்களது தமிழ் ஆர்வத்தை உணர்வு நிலையில் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அறிவார்ந்த நிலையிலேயே வெளிப்படுத்திக் கொண்டன. தமிழர்களிடையே இந்த சமயங்கள் பெரும் செல்வாக்குப் பெற இயலாமல் போனதற்கு இதுவும் ஒரு காரணம்.

அரசியல் வரலாற்றின் வெளிச்சத்தில் பார்த்தால், களப்பிரர்களுக்கு எதிராக சைவர்களும், ஆங்கிலேயர்களுக்கு எதிராக பார்ப்பனர்களும், பார்ப்பனர்களுக்கு எதிராக பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரும், இன்று பிற்பட்டோருக்கு எதிராகத் தாழ்த்தப்பட்டவர்களும் எழுப்பும் கலக்க்குரலின் அடையாளமாகத் தமிழ் உணர்வு இருந்து வருகிறது.


அதுசரி இப்போது புரிந்திருக்குமே தமிழென்றால் சிலருக்கு உணர்ச்சிப்பெருக்கும், சிலருக்கு வயிற்றெரிச்சலும் உருவாவதன் காரணம்.

சரி இந்த பின்னூட்டத்தினால் ஏதோ நீர் புரிந்துகொள்வீரென்ற நம்பிக்கையெல்லாம் எனக்கு இல்லை, ஏனென்றால் இதே மாதிரி ஏற்கனவே ஒரு பதிவிலும் சொன்னது தானே இது, ஆனாலும் ஏன் எழுதுகிறேனென்றால் உம் மாதிரியான ஆட்கள் தொடர்ந்து இயங்கும் போது (எதற்கு எதிராக இயங்குகிறீர்கள் என்பது சொல்ல தேவையில்லை) எம் மாதிரியான ஆட்களும் தொடர்ந்து இயங்க வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.

Read More...

Friday, November 24, 2006

பெரியார் படத்திற்கு சில யோசனைகள்

தமிழக அரசு 95 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்ய, பெரியார் பற்றிய திரைப்படம் தயாராகிறது. அவர் அழுத்தம் திருத்தமாக, பிரகடனம் செய்த கருத்துக்கள் அந்தப் படத்தில் இடம் பெறும் என்று நம்புகிறோம். அம்மாதிரி கருத்துக்களுக்கு உதாரணமாக, அவருடைய பேச்சுக்கள் மற்றும் எழுத்துக்களிலிருந்து ஒரு சில பகுதிகள் இங்கே பிரசுரம் ஆகின்றன. தயாரிப்பாளர்களுக்கு உதவி செய்வதைத் தவிர, வேறு நோக்கம் எங்களுக்கு இல்லை. ( நன்றி துக்ளக் 29.11.06 )


தமிழ் காட்டுமிராண்டி பாஷை

இந்த தமிழ் மொழியானது காட்டுமிராண்டி மொழி என்று நான் ஏன் சொல்கிறேன்? எதனால் சொல்கிறேன்? – என்று இன்று கோபித்துக் கொள்ளும் யோக்கியர்கள் ஒருவர் கூட சிந்தித்துப் பேசுவதில்லை. "வாய் இருக்கிறது எதையாவது பேசி வயிறை வளர்ப்போம்' என்பதைத் தவிர, அறிவையோ, மானத்தையோ, ஒழுக்கத்தையோ பற்றி சிறிது கூட சிந்திக்காமலே பேசி வருகிறார்கள்.
இப்படிப்பட்ட இவர்கள் போக்குப்படியே சிந்தித்தாலும், "தமிழ் மொழி 3000 – 4000 ஆண்டுகளுக்கு முந்தி ஏற்பட்ட மொழி' என்பதை, தமிழின் பெருமைக்கு ஒரு சாதனமாய்க் கொண்டு பேசுகிறார்கள். நானும் தமிழ் காட்டு மிராண்டி மொழி என்பதற்கு அதைத் தானே முக்கிய காரணமாய்ச் சொல்கிறேன். அன்று இருந்த மக்களின் நிலை என்ன? அவன் சிவனாகட்டும், அகஸ்தியனாகட்டும், பாணிணியாகட்டும், மற்றும் எவன்தான் ஆகட்டும், இவன்களைப் பற்றி தெரிந்து கொள்ள உனக்கு புத்தியில்லா விட்டால், நீ தமிழைப் பற்றி பேசும் தகுதி உடையவனாவாயா?தமிழால் என்ன நன்மை?

தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய
இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.தமிழறிஞர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகு தூரம்

"தமிழ் படித்த, தமிழில் புலவர்களான வித்துவான்கள் பெரிதும் 100க்கு 99 பேருக்கு ஆங்கில வாசனையே இல்லாத வித்துவான்களாக... தமிழ்ப் புலவராகவே வெகு காலம் இருக்க நேர்ந்து விட்டதால், அவர்களுக்கும் பகுத்தறிவுக்கும் வெகுதூரம் ஏற்பட்டதோடு, அவர்கள் உலகம் அறியாத பாமரர்களாகவே இருக்க வேண்டியவர்கள் ஆகிவிட்டார்கள். ஆகவேதான் புலவர்கள், வித்துவான்கள் என்பவர்கள் 100க்கு 90 பேர்கள் வரை, இன்றைக்கும் அவர்களது வயிறு வளர்ப்பதற்கல்லாமல் மற்றெதற்கும் பயன்படுவதற்கில்லாதவர்களாகவே
ஆகி விட்டார்கள்.பிழைப்புக்கு ஆதாரமாய் தாய்மொழி வேஷம்

அரசியலில் பிரவேசிக்க நேர்ந்த பல அரசியல்வாதிகள், மக்களின் மடமையை நிறுத்து அறிந்ததன் காரணமாய், அவர்களில் பலரும் தமிழை தங்கள் பிழைப்பிற்கு ஆதாரமாய்க் கொண்டு தாய் மொழிப் பற்று வேஷம் போட்டுக் கொண்டு வேட்டை ஆடுவதன் மூலம், மக்களது சிந்தித்துப் பார்க்கும் தன்மையையே பாழாக்கி விடுகிறார்கள்.வேறு மொழி ஏற்பதால் கேடு என்ன?

தமிழை ஒதுக்கி விடுவதால் உனக்கு நட்டம் என்ன? வேறு மொழியை ஏற்றுக்
கொள்ளுவதால் உனக்குப் பாதகம் என்ன? தமிழிலிருக்கும் பெருமை என்ன? நான் சொல்லும் ஆங்கிலத்தில் இருக்கும் சிறுமை என்ன? நமது நாட்டுக்கு கமால் பாட்சா ஆட்சி போன்ற ஒரு வீரனும் யோக்கியனுமான ஒருவன் ஆட்சி இல்லை என்பதால், பல முண்டங்கள் பல விதமாய் பேசி முடிக்கிறதே அல்லாமல், இன்று தமிழைக் காப்பாற்ற வேண்டிய அவசியம் யாருக்கு என்ன வந்தது என்று கேட்கிறேன்.தொல்காப்பியன் மாபெரும் துரோகி

தொல்காப்பியன் ஆரியக் கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக்கணமாகச் செய்து விட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக்காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரிய கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றி கவலைப்படாமல் நீதி கூறும் வகையில், தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்.

– பெரியார் எழுதிய "தமிழும் தமிழரும்' என்ற நூலிலிருந்து.தமிழில் என்ன நல்ல கருத்து உள்ளது?

நாட்டுக்கு "சுதந்திரம்' கிடைத்து இன்றைக்கு 20ஆவது ஆண்டு நடக்கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, "இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ் வேண்டும்'. இதுதானா? அய்யோ பைத்தியமே! தமிழை (பிற
மொழிகளிலிருந்து மொழி பெயர்க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல்களில் எதை எடுத்துக் கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந்த தமிழ் "சுவை' அல்லாமல், அறிவு, பகுத்தறிவு, வாழ்க்கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை, பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டுபிடிக்க முடியுமா? கண்டுபிடித்து பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன்.சிலப்பதிகாரம்

இது விபச்சாரத்தில் ஆரம்பித்து, "பத்தினி'த்தனத்தில் வளர்ந்து, முட்டாள்தனத்தில்,
மூடநம்பிக்கையில் முடிந்த பொக்கிஷமாகும்.வெளிநாட்டான் அறிவு இனிப்பு; மொழி கசப்பா ?

சர்வத்தையும் விஞ்ஞான மயமாக மேல்நாட்டு முறைகளைக் கொண்டு ஆக்கி, சர்வத்திலும் மேல்நாட்டானை (புதிய முறைகளை)ப் பின்பற்றி, வளர்ச்சி அடையவே முயற்சிக்கிறோம். திட்டம் போடுகிறோம். இந்தக் காரியங்களுக்கு
தமிழர் – முத்தமிழர் சங்கங்களையே நம்பி என்ன காரியத்திற்கு, ஆங்கிலக் கருத்தோ,
இங்கிலீஷ் சொல்லோ, ஆங்கிலேயனிடம் பயிற்சியோ இல்லாமல் இங்கிலீஷை பகிஷ்கரித்து விட்டு என்ன சாதித்துக் கொள்ள முடியும்?பலரும் அறிந்த சொல்லைப் புறக்கணிப்பானேன் ?

சாதாரணமாக பிரயாணத்திற்குப் பயன்படும் ரயில், கார், லாரி, பஸ், சைக்கிள் என்ற பெயர்களை எதற்காக மாற்ற வேண்டும்? இந்தியாவில் உள்ள பல நூற்றுக்கணக்கான மொழி பேசும் மக்களும், இந்தப் பெயர்களை அப்படியேதான் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

– பெரியாரின் கருத்துகள், "அறிவு விருந்து' என்ற நூலிலிருந்து.தமிழ் படித்தால் நடைப்பிணமாய் இருக்கலாம்

...தமிழ் மக்கள் என்னும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்னும் தமிழானது, முன்னேற்றம் என்னும் உடல் தேறுவதற்கோ வளர்வதற்கோ பயன்பட்டு இருக்கின்றதா? பயன்படுமா? "தாய்ப்பால் சிறந்தது' என்பதில் தாய்ப்பாலில் சக்தியும், சத்தும் இருந்தால்தான் அது சிறந்ததாகும். இங்கு தமிழ் என்னும் தாயே சத்தற்றவள் என்பதோடு, நோயாளியாகவும் இருக்கும்போது அந்தப் பாலைக் குடிக்கும் பிள்ளை உருப்படியாக முடியுமா? தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது?

இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு – காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன்.

இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.

– "தாய்ப் பால் பைத்தியம்' என்ற நூலிலிருந்து.
(தொடரும் :-) )

Read More...

நோ கமெண்ட்ஸ் - 3அப்சல் விவகாரம் - நாடாளுமன்றம் ஸ்தம்பிப்பு - சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி சபையை ஒத்தி வைத்தார் - செய்தி

அப்சலுக்கு 'Capital' பனிஷ்மெண்ட்
சோம்நாத் சட்டர்ஜிக்கு 'Capital'லில் பனிஷ்மெண்ட் :-)

Read More...

நோ கமெண்ட்ஸ் - 2

"கிரீமி லேயர்' பிரச்னையை சமாளிக்க காங்கிரஸ் தீவிரம் :-)

Read More...

நோ கமெண்ட்ஸ்


இன்றைய தினமணியில் வந்த கார்ட்டூன்

Read More...

Thursday, November 23, 2006

33%

இரண்டு நாளா வரும் செய்தி..

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வகைசெய்யும் மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்வது என ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.

இந்த செய்தியை எங்கு படித்தாலும் மதனின் கார்ட்டூன் தான் நினைவிற்கு வரும். அந்த கார்ட்டூன் இப்போது உங்களுக்காக இங்கே. ( வேறு கார்ட்டூன்கள் இருந்தால் நாளை போடுகிறேன்.

Read More...

சிலை அரசியல்

மூன்று சிலை, மூன்று பாடல்கள்

சிலை 1: எம்.ஜி.ஆர்: முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., சிலையை பார்லி.,யில் வைப்பதில் நீடிக்கும் காலதாமதம் குறித்து பார்லிமென்ட்டில் பிரச்னை கிளப்ப அ.தி.மு.க., திட்டமிட்டுள் ளது. இதுதொடர்பாக அனைத்துக் கட்சி தலைவர்களையும் அ.தி. மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து ஆதரவு கேட்டுள்ளனர்.

சிலை 2: முரசொலி மாறன் : "பார்லிமென்ட் வளாகத்தில் மாறனுக்கு சிலை வைப்பதை நாட்டு மக்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார் கள். முரசொலி மாறனுக்கு சிலை வைத்தே தீர வேண்டும் என்று கருணாநிதிக்கு அவ்வளவு ஆசையாக இருந்தால், அண்ணா அறிவாலயத்தில் வைத்துக் கொள்ளட்டும்" - ஜெயலலிதா

"முரசொலி மாறனின் தகுதியை பற்றி யார் ஜெயலலிதாவின் சான்றிதழை கேட்டார்? முரசொலி மாறன் எத்தனை முறை நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்? எத்தனை முறை மத்திய மந்திரியாக இருநëதுள்ளார்? எத்தனை வெளிநாடுகளுக்கு சென்று இந்தியாவின் புகழை உயர்த்தி இருகëகிறார்? அதைப்பற்றி எல்லாம் ஜெயலலிதாவுக்கு விவரமாவது தெரியுமா? எதுவும் தெரியாமல் வெறும் காழ்ப்புணர்ச்சி ஒன்றின் காரணமாக அவருக்கு எப்படி சிலை வைக்கலாம் என்றா கேட்பது?" - டி.ஆர்.பாலு

சிலை 3: பெரியார் : ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் அருகில் பல ஆண்டுகளுக்கு முன் பெரியார் சிலை வைக்க இடம் ஒதுக்கப்பட்டது. இந்து பா.ஜ.க, முன்னணி அமைப்பு ஆகியவை கடும் கண்டனம் தெரிவித்தனர். இரண்டு நாட்களுக்கு முன் நள்ளிரவில் பெரியார் சிலை அமைக்கப்பட்டு, திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் இருக்கிறது. அடுத்த மாதம் திறப்பு விழா நடை பெற உள்ளது.


பாடல் 1:
கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூய தமிழ் சொல்லாகுமா
சுவையெல்லாம் இதழ் சிந்தும் சுவையாகுமா?
( கண்ணதாசன் )

பாடல் 2:
தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் அது சிலை தான்
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
( கண்ணதாசன் )

பாடல் 2:
கல்லெல்லாம் சிலை செஞ்சான் பல்லவ ராஜா
( படம் வா ராஜா வா )
( முழு பாடல் நினைவில் இல்லை மன்னிக்கவும் )

Read More...

இரண்டு கேள்வி, ஒரே பதில்

கலைஞர் பேட்டியிலிருந்து...

கேள்வி:- காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் கூட்டினார்கள். அதில் சட்ட மன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர் டி.சுதர்சனம், பேசும்பொழுது நாங்கள் ஒன்றும் சாமியார் மடம் நடத்தவில்லை; நூற்றாண்டு கண்ட கட்சி இது; எங்களுக்கும் மந்திரி சபையில் இடம்பெற வேண்டும் என்ற ஆசை உண்டு என்று கூறியிருக்கிறார்களே?

பதில்:- பேச்சுரிமைக்கு நான் மதிப்பளிப்பவன்.

கேள்வி:- காங்கிரசார் ஆசை நிறைவேறுமா?

பதில்:- எனக்கு தெரியாது.

Read More...

Wednesday, November 22, 2006

குற்றப்பத்திரிகை

'குற்றப்பத்திரிகை' படத்திற்கு எதிர்ப்பு கிளம்பியதால் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்ப்பட்டது அனைவரும் அறிந்ததே. தணிக்கை குழு திரையிட அனுமதி வழங்க மறுத்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி இந்த வழக்கை விசாரித்த்தார். இன்னிலையில் படம் வரும் 23-ந் தேதி ஐகோர்ட்டு நீதிபதிகள் முன்பு திரையிடப்படுகிறது.

குற்றப்பத்திரிகை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

படம் 1
படம் 2

Read More...

கூட்டணி மாறுகிறது ?

இன்று வந்த இரண்டு செய்திகள்

செய்தி 1: நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடரின்போது பிரச்சினைகளின் அடிப்படையில் மத்திய அரசுக்கு ஆதரவு தரப்படும் என அதிமுக தெரிவித்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை நெருங்க அதிமுக முயல்வது என்றும் எடுத்துக்கொள்ளலாம்.

செய்தி 2: மத்திய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் மதிமுக தொடர்ந்து நீடிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிக் கூட்டத்திற்கும் மதிமுகவுக்கும்காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

[ பழைய செய்தி: மதிமுக கூட்டணியில் நீடித்தால் திமுக விலகும் என முன்பு கருணாநிதி எச்சரிக்கை விடுத்தார் ]

Read More...

Tuesday, November 21, 2006

எனக்கு பிடித்த பாடல்.

சில நாட்களாக நான் இந்த பாடலை தான் முனுமுனுத்துக் கொண்டிருக்கிறேன.


படம் : தில்லானா மோகனாம்பாள்
குரல் : பி.சுசீலா ( உங்க குரலையும் பாடி பார்க்கலாம், யாரும் இல்லாத போது )
இசை :கே.வி.மஹாதேவன் ( நீங்க பாடும் போது, மனைவி பக்கத்தில் இருந்தால் நல்ல சவுண்ட் வரும் )
ராகம் : ஷண்முகப்ரியா ( இதெல்லாம் எதுக்கு உங்களுக்கு )

மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன .. ஸ்வாமி
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன
அழகர் மலை அழகா - இந்தச்
சிலை அழகா என்று
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

நவரசமும்... முகத்தில் நவரசமும்...
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவண்திருக்கும் இதழில் கனிரசமும்
மலர்ந்திருக்கும் முகத்தில் நவரசமும்
செக்கச் சிவண்திருக்கும் இதழில் கனிரசமும் கண்டு
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

எங்கிருந்தாலும் உன்னை நான் அறிவேன்
உன்னை என்னை அல்லால் வேறு யார் அறிவார்
பாவை என் பதம் காண நாணமா
உந்தன் பாட்டுக்கு நான் ஆட வேண்டாமா
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

நாதத்திலே தலைவன் குழல் கேட்டேன்
அந்த நாணத்திலே என்னை நான் மறந்தேன்
மோகத்திலே என்னை மூழ்ஹ்க வைத்து
ஒரு ஓரத்திலே நின்று கள்வனைப் போல்
மாலவா வேலவா மாயவா ஷண்முகா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

மானாட மலராட மதியாட நதியாட
மங்கை இவள் நடனமாட
வானாட மண்ணாட கொடியாட இடையாட
வஞ்சி இவள் கைகளாட
சுவையோடு நானாட எனை நாடி இது வேளை
விரைவினில் துணையாக ஓடி வருவாய்..
தூயனே மாலவா.. மாயனே வேலவா
மறைந்திருந்து பார்க்கும் மருமம் என்ன

தற்போது பல வலைப்பதிவாளர்கள் முனுமுனுக்கும் பாடல்
படம்: தங்கப்பதுமை ( பொன்ஸ் என்று குழப்பிக்க வேண்டாம்)
எழுதியவர்: பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

முகத்தில் முகம் பார்க்கலாம் - விரல்
நகத்தில் பவழத்தின் நிறம் பார்க்கலாம்! (முக)

வகுத்த கருங்குழலை மழைமுகி லெனச் சொன்னால்
மலரினை இதழோடு இணை சேர்க்கலாம் - என்முன்
வளைந்து இளந்தென்றலில் மிதந்து வரும் - கைகளில்
வளையல் இன்னிசை கேட்கலாம் - மானே உன் (முக)

இகத்திலிருக்கும் சுகம் எத்தனையானாலும்
இருவர்க்கும் பொதுவாக்கலாம் - அன்பே
அதன் எண்ணிக்கை விரிவாக்கலாம் - காதல்
அகத்தினிலே அலைமோதும் ஆசையிலே இன்பம்
ஆயிரம் உருவாக்கலாம் - இன்பம்
இளமை பொங்கும் அங்கம் சிந்தும் அழகில்
தங்கம் மங்கும் நிலையில் நின்று
தன்னை மறந்து எண்ணம் கலந்து
வண்ணத் தோகை மயிலெனச் சோலைதனில்
பொழுதெல்லாம் மகிழலாம்;
கலையெலாம் பழகலாம் - சதங்கையது
குலுங்கி நகைத்திட வரம்பு கடந்திடும்
குறும்பு படர்ந்திடும்

Read More...

பிராமணர்கள், பிராமணீய அரசியல்

உள்ளாட்சி தேர்தல் பற்றிய கூட்டத்தை பற்றி பத்ரி எழுதிய பதிவு . இதை தொடர்ந்து கலைஞர் முரசொலியில் 'பூணூல், பிராமனர்கள்' என்று சில கருத்துக்களை எழுதியிருந்தார். வைகோ இரண்டு நாட்கள் முன் அளித்த பேட்டி, மற்றும் கலைஞர் நேற்று அதற்கு அளித்த பதில்.
மினிமம் கியாரண்டி: ஜெ, சன் டிவி செய்திகள் மாதிரி இருக்கும்


19.11.06 அன்று வைகோ பேட்டியிலிருந்து..

பொதுவாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை தாங்கிக் கொள்ள வேண்டும். அண்மையில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் நிகழ்ந்த அத்துமீறல் மற்றும் அராஜகம் குறித்து பாரதீய வித்யாபவனில் நடைபெற்ற கூட்டத்தில் மூத்த அரசியல்வாதி செழியன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.

அதனை தாங்கி கொள்ள முடியாமல் முதல்வர் கருணாநிதி கடுமையாக தாக்கியுள்ளார். செழியன், இந்திரா காந்தி போன்ற தலைவர்கள் பாராட்டிய அரசியல்வாதி. சிறந்த நாடாளுமன்றவாதி, தனிமனித ஒழுக்கமிக்கவர். அவரை மிகவும் மோசமாக கருணாநிதி விமர்சித்துள்ளது கண்டிக்கத்தக்கது. உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் வரதராஜன் கூறியதை மேற்கோள்காட்டியே செழியன் பேசியுள்ளார். ஆனால் அதனை பொறுத்து கொள்ளும் மனப்பக்குவம் கருணாநிதி யிடம் இல்லை.

திமுக ஆட்சிக்கு வந்தபோதே ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டு, சர்வாதிகாரம் வலுப்பெறும் என்று கூறியிருந்தேன். அது உண்மைதான் என நிரூபிக்கும் வகையில் இப்போது நடந்துள்ளது. சர்வாதிகாரத்தை பின்பற்றிய பலர் தூள்தூளாகியிருக்கின்றனர். மேலும், அந்த கூட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த கருணாநிதி, பிராமண சமுதாயத்திற்கு எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார். ஒரு முதல்வராக இருப் பவர் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு எதிராக பேசியிருப்பது சரியல்ல. அண்ணா, பெரியார் போன்ற பெரியவர்களே பிராமணியத்தைதான் எதிர்த்தார்களே தவிர, பிராமணர்களை அல்ல. தேர்தலின் போதே மிருக ஜாதி சிறுத்தைகள் உலாவும் போது, சிங்கங்கள் உலாவக்கூடாதா என்றெல்லாம் பேசிய கருணாநிதி, மீண்டும் அதுபோல பேசியிருக்கிறார்.

பகுத்தறிவு பேசும் கருணாநிதி, பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களை கூறியுள்ளார். வெளியே பகுத்தறிவு பேசிவிட்டு, அறையை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது. திருக்குறளுக்கு உரை எழுதிய கருணாநிதிக்கு, குறள் கூறிய கருத்துக்களில் லட்சத்தின் ஒரு பங்குகூட பின்பற்ற முடியவில்லை.

கலைஞர் (கேள்வி பதில் அறிக்கை )

கேள்வி:- நீங்கள் பிராமணர் விரோதியென்றும் அவர்களின் தமிழ்த் தொண்டினைக் கூட மதிப்பவர் இல்லையென்றும், அதனால் உங்கள் தலைமையில் உள்ள ஆட்சியை எதிர்த்து அகற்றுவதையே லட்சியமாகக் கொண்டு, தங்களுக்கு விரோதமாக ஒரு `பூனை' கத்தி னாலும், அதைப் புலியாக உருவகப்படுத்தி தங்களையும், தங்கள் தலைமையில் உள்ள தி.மு.க.வையும் ஒழித்துக் கட்டுவதென்றும் அந்த இனத் தைச் சேர்ந்த சிலரும் அவர்களுக்குத் துணையாக ஒரு சில எட்டப்பர்களும் திட்டம் தீட்டிக் கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா?

பதில்:- இவற்றையெல்லாம் உலகப் புகழ்மிக்க உளவுத்துறை அமைத்து தெரிந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை. அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல, அவர்களின் நெஞ்சத்தில் நிறைந்துள்ள வஞ்சத்தை அவர்கள் நடத்தும் ஏடுகளைப் படித்தாலே எளிதில் புரிந்து கொள்ள முடிகிறதே!

ஒன்றை அவர்களும் சரி அவர்களால் ஏமாற்றப்பட இருக்கிற அல்லது ஏமாற்றப் படுகிறவர்களும்பபபசரி தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நானோபபஅல்லது என் தலைமையில்பபஇயங்கும் இக்கழகமோ, தமிழுக்கு, தமிழர்க்கு மக்கள் உரிமைகளுக்கு மதிப்பளிக்கிற எந்தபபதனிப் பட்ட பார்ப்பனரையும் வெறுத்ததுமில்லை, வெறுப்பதுமில்லை.

"தமிழ் செம்மொழி'' என நூறு ஆண்டுக்கு முன்பே முதல் குரல் கொடுத்த பரிதிமாற் கலைஞராம் சூரியநாராயண சாஸ்திரியாரின் பிறந்த வீட்டை அரசின் நினைவுச் சின்னமாக மாற்றிட திட்டம் வகுத்திருப்பதும், அவரது உருவம் பதித்த அஞ்சல் தலை வெளியிட முயற்சி மேற் கொண்டிருப்பதும், அவரது நூல்களை நாட்டுடைமையாக்கி அறிவித்ததும், இந்த அரசு தான்.

ஆம், என் தலைமையில் உள்ள கழக அரசுதான் அக்ர காரத்து அதிசய மனிதர் என அண்ணா புகழ்ந்த வ.ரா.வின் குடும்பத்திற்கு நிதி உதவி அளித்து சிறப்பித்ததும் இந்த அரசு தான். `கல்கி' யார் நூல் களை அரசுடைமையாக்கி, இருபது லட்ச ரூபாய் அரசு நிதி வழங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள தியாகிகள் மணி மண்டபத்தில் அன்றொரு நாள் செயின்ட் ஜார்ஜ் கோட்டை முகப்பில் கொடி மரத்தில் ஏறி தேசியக் கொடி பறக்கவிட்ட "ஆர்யா'' என்ற பார்ப்பன இளைஞனின் சிலையை அமைத்திருப்பது என் தலைமையிலான தி.மு.க. ஆட்சியல் தான். பத்தி ரிகை பிதாமகன் சாவிக்கு பெரு நிதி உதவி அளித்து பெருமைப் படுத்தியதும் தி.மு.க. அரசு தான்.

"ஆயிரம் தெய்வங்கள் உண் டென்று தேடி அலையும் அறிவிலிகாள்! பல்லாயிரம் வேதம் அறிவு ஒன்றே தெய்வ முண்டாமெனல் கேளீரோப'' என்று பாடிய கவி பாரதிக்கு சிலை அமைத்தது தி.மு.க. ஆட்சி தான். அந்தப் பாரதியைப் பற்றி "பைந்தமிழ் தேர்ப்பாகன், அவனொரு செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை! குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு, நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா, காடு கமழும் கற்பூரச் சொற்கோ! கற்பனை ஊற்றாம் கதையின் புதையல், திறம்பாட வந்த மறவன், புதிய அறம் பாட வந்த அறிஞன், நாட்டிற் படரும் சாதிப்படைக்கு மருந்து- என்றெல்லாம் பாடி வரும் எங்கள் பாவேந்தர் பாரதிதாசன்தான்.

எனவே தி.மு.க. ஏற்க மறுப்பது "பிராமணியம்'' என்ற "பார்ப்பனீய கொள்கை'' யைத்தான்!

நான் ''பாப்பாத்தி'' தான் என்று கோட்டைக் கொலு மண்டபத்திலே கொக்கரித் தவர்கள், எனக்கும் கருணா நிதிக்கும் நடப்பது பரம்பரை யுத்தம் என்று பட்டயம் படித்து அறை கூவல் விடுத்தவர்கள், வகுப்புத் துவேஷத்தைக் தூண் டாவதர்களென்றும், இனப் பகைக்கு எடுத்துகாட்டாக விளங்காதவர்கள்களென்றும், நம்பிக் கெடுவதற்கு, இனியும் இந்த நாட்டு மக்கள் தயாராக இருக்க மாட்டார்கள், இருக்க வும் கூடாது!

திராவிட இயக்கமெனும் வீரிய வித்தில் விளைந்தவர்கள் என்பதும் உண்மையானால், அவர்கள் தந்தை பெரியாரின் கருத்துக்களிலும், அறிஞர் அண்ணாவின் எழுத்துக் களிலும் இழையோடுகிற உண்மைகளை உணர்ந்து எழுச்சி நடை, இலட்சியபபபநடை போடுகிறவர்களாகவே இருப் பார்கள்.

மலையாள நாட்டில் மாவலிச் சக்கரவர்த்தி என் பான், மக்கள் நல ஆட்சி நடத்தினான், தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறான் என்பதைத் தாங்கிக் கொள்ள முடியாமல், "அய்யோ! இப்படி அவன் ஆட்சி தொடர்ந்து நடந்தால் பிறகு தேவாதி தேவர் களாம் பூசுரர்களின் ஆட்சி வருவதற்கே வழியில்லாமல் போய்விடுமே என்றும், சோர்ந்து போன சுரர் களாம் தேவர்கள் விஷ்ணுவைப் பிடித்து விபரீத சூழ்ச்சி செய்து மாவலி மன்னன் ஆட்சியை வீழ்த்தினார்கள் என்பது தான் "ஓணம்'' பண்டிகையின் பூர்வீகம் என்பார்களே அந்த மாவலிக் கதையின் மறு பதிப்பைத் தயாரிக்கத்தான் இங்கே மர்ம வேலைகள் மாயா ஜாலங்கள் மண் குதிரைப்பந்தய ஓட்டங்கள் மறையவர் குலதிலகங்கள் சிலரால் நடத்தப்படுகின்றன.

கயவர்கள் சூழ்ச்சிக்கு, காலம் காலமாக ஆட்பட்டு சரித்தி ரத்தில் களங்கச் சேற்றைப்பூசிக் கொண்டுள்ள தமிழினம்,

இனியாவது அவர்கள் ஏமாற்றுப் பேச்சில் வீழ்ந்து புதைந்து விடாமல் விழிப்புற்று எழுக! 1945 ஆம் ஆண்டு "குடியரசு'' அலுவலகத்தின் இருந்து நான் எழுதிய இந்தக் கவிதையைத் தக்க நேரம் இது எனக் கருதி உனக்கு நினை வூட்டுகின்றேன்.

சுண்டெலி வந்தென்று

சூரம் பூனை அடுப்பின்

அண்டையில் பதுங்க,

அரவமொன்றாடியோடக்

கண்ட கீரிப் பிள்ளை

கலங்கியே வியர்த்து நிற்க,

மண்டலத்தில் லில்லாஇம்

மாபெரும் வேடிக்கைகள்

வண்டமிழ் நாட்டில்

வந்தால்

வாகை சூடி வாழ்ந்திருந்து

சண்டைக்குச் சளைக்காத

சிங்கத் தமிழ்க்காளை யெல்லாம்

நண்டுக்குப் பயந்தொளிந்த

நரியைப் போல்-ஆரிய

வெண்டைக்காய் வீரரிடம்

வெற்றிகளைக் கொடுத்திடுவார்!

Read More...

Monday, November 20, 2006

இரண்டு பேட்டிகள்

சமிபத்தில் பார்த்த இரண்டு பேட்டிகள்.

1. 'டெவில்ஸ் அட்வகேட்'ல் கரண் தாப்பர் ராம்ஜெத் மலானியை... நீங்களே பாருங்களேன்.
http://www.ibnlive.com/news/devils-advocate-ram-jethmalani/26553-3.html

2. ரவி பெர்ணாட் குமுதம்.காமில் 'துக்ளக்' ஆசிரியர் சோ போட்டி ( வழக்கமான சோ பேட்டி )
http://www.kumudam.com/interviews.php?id=2&strid=584&stream=1

Read More...

Sunday, November 19, 2006

சென்னை வலைப்பதிவு சந்திப்பு படங்கள்

சென்னை வலைப்பதிவு சந்திப்பு நடந்துக்கொண்டிருக்கிறது, அதிலிருந்து சில பிரத்தியோக படங்கள் உங்கள் பார்வைக்கு.
டீ, காப்பி நன்றாக இருந்ததா ? என்ன பேசினார்கள் ?
என்று மற்றவர்கள் எழுதுவார்கள் நம்புகிறேன்.
அன்புடன்,
இட்லிவடை

நண்பர் பாலபாரதி கேட்டு கொண்டதால் படங்கள் எடுக்கப்படுகின்றன.அவர் அனுமதி அளித்த படம் இங்கே உங்கள் பார்வைக்கு :-)


செய்திகளை முந்தி தருவது தினந்தந்தி இட்லிவடை. இன்றைய செய்தி நாளைய வரலாறு

Read More...

Friday, November 17, 2006

கேப்டன் பற்றி திருமா

திருமாவின் அறிக்கை:

* பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்பட 4 பஞ்சாயத்துகளிலும் சிக்கல் இல்லாமல் தேர்தலை நடத்தி முதல்-அமைச்சர் கருணாநிதி வெற்றி கண்டுள்ளார். அவரது மனதில் ஏற்பட்ட மாற்றம்தான் இந்த பஞ்சாயத்துகளில் ஏற்பட்ட மாற்றத்திற்கும் காரணம். அரசு நினைத்தால் எவ்வளவு கடினமான, சிக்கலான பிரச்சினைகளையும் தீர்க்க முடியும் என்பதற்கு இவைகள் சாட்சி.

* இலங்கை தமிழ் மக்களை கருணாநிதி எதிராக பார்க்கவில்லை. ஆனால் விடுதலைபுலிகளுக்கும் கருணாநிதிக்கும் இடையே ஏதோ கசப்பு இருக்கிறது என்பதை ஏடுகள் மூலமாக தெரிந்து கொள்ள முடிகிறது. ஈழ தமிழர்கள் விசயத்தில் கருணாநிதியிடம் எதை எதிர்பார்த்தோமோ அதை சமீபத்தில் அவர் வெளியிட்ட அறிக்கை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார். இந்திய அரசாங்கத்தை அவரால் நேரடியாக இயக்க முடியும். மத்திய அரசுக்கு வழிகாட்டும் வலிமையை அவர் பெற்றுள்ளார். இந்திய அரசு தலையிட்டு இலங்கை தமிழர்களை காப்பாற்ற கருணாநிதி முயற்சித்தால் நிச்சயம் நடக்கும்.

* குறிப்பிட்ட ஒரு சமுதாய கட்சி என்று தி.மு.க. மீது யாரும் முத்திரை குத்த முடியாது. குறிப்பிட்ட சாதிக்கான கட்சி அல்லது குறிப்பிட்ட சாதிக்கா ரர்கள் அதிகாரம் செலுத்தும் கட்சி என்ற பெயர் தி.மு.க. ஆட்சிக்கு ஒரு போதும் ஏற்படாது.

* கடந்த சட்டசபை தேர்தலில் எங்கள் வாக்குகள் விஜயகாந்த் கட்சிக்கு போகவில்லை. தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வில் ஓரம் கட்டப்பட்டவர்கள் அவரது கட்சியில் சேர்ந்துள்ளார்கள். பண்ருட்டி ராமச்சந்திரனில் இருந்து சமீபத்தில் சேர்ந்த பொன்னுசாமி வரை அப்படித்தான்.

* கட்சி நடத்த முடியாதவர்கள், நாளு பேரை வைத்து மேய்க்க முடியாமல் செயலிழந்து போனவர்கள், அரசியலில் விணாய் போனவர்கள் இப்போது விஜயகாந்திடம் சேர்ந்து இருக்கிறார்கள்.

* விடுதலை சிறுத்தைகள் அமைப்பில் பொறுப்பில் இருந்தவர்கள் விலகி சேர்ந்தார்கள் என்று நிரூபிக்க முடியுமா?

( விஜயாந்த் திமுகாவில் கொஞ்சம் நாள் கழித்து சேர்ந்தால் என்ன நடக்கும் ?)

Read More...

Wednesday, November 15, 2006

கலைஞர் பேட்டி ( அ ) ஜெயலலிதாவிற்கு பதில்

திருக்குறள், கூட்டுறவு தேர்தல் குறித்து பதில்

கேள்வி:- அரசுப்பேரூந்துகளில் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் திருக்குறள் எழுதப்பட்டிருந்ததாகவும், இப்போது அந்த திருக்குறளை அழித்து விட்டு `கலைஞர் பொன் மொழி' எழுதப்பட்டிருப்பதாகவும் அதை எதிர்த்து ஒரு போராட்டம் என்றும் ஒரு சிலர் கூச்சல் எழுப்பியிருக்கிறார்களே?

பதில்: அளித்த வாக்குறுதிகளை அடுத்தடுத்து நிறை வேற்றி வரும் ஆட்சியின் சாதனைகளை மக்கள் மனதிலிருந்து திசை திருப்பி மறைப்பதற்காக வயிற்றெரிச்சல் வனிதாமணிகள் கிளப்பிவிடும் வதந்தி இது!

"எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு''

என்று கூறிய திருவள்ளுவரின் குறள் மொழிக்கு உண்மைப்பொருள் காண்பீரேல் தெளிவு பெறுவீர்!

"சாதி மத பேதம் தீது'' என்றும்- "நான்'' என்ற ஆணவம் கூடாது "நாம்'' என்ற பணிவு வேண்டும் என்றும் எழுதப்பட்டவைகளும் அரசுப்பேருந்துகளில் இடம்பெறுவது அவர்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியுமா என்ன?

வள்ளுவர்க்குக் கோட்டம்- வானுயர் சிலை, குமரி முனையில்! குறளோவியம் நூல், தமிழில் ஆங்கிலத்தில், மற்றும் குறளுக்கு உரை, இப்படி எத்தனையோ புகழாரங்களை திருக்குறளுக்கு அணிவித்த அடியேன் தான் "குறளை'' முதன் முதலாக அரசுப்பேருந்துகளில் 1968-ம் ஆண்டிலேயே இடம் பெறச்செய்தவன் என்பதை அப்போது அரசியலுக்கு வராத அம்மணியாரிடம் நினைவூட்டுவது நல்லது.

கே:வடலூர் வள்ளலார் சபையில் உருவவழிபாடு என்றும், அதனால் பிரச்சினை என்றும் அது பற்றி விசாரித்தறிய கழக அரசு பொன்னம்மாள் தலைமையில் ஆய்வுக்குழு ஒன்றை அமைத்திருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது பற்றி?

ப:- சிலை வணக்கம் கூடாது என்பதை செயல்படுத்திக்காட்டிய சிறந்த ஞானிகளில் ஒருவர் சீர்திருத்தச் செம்மல் வடலூர் வள்ளலார் என்பதால் அவர் மீது நமக்கு தனி மதிப்பும், மரியாதையும், பற்றும், பாசமும் உண்டு. அவர் வகுத்த அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை என்ற வழியை மாற்றுவது சரியல்ல. இதிலே மாற்று கருத்து உள்ளவர்களின் நடவடிக்கை நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இந்த நிலையில் அரசின் சார்பில் யாரையும் ஆய்வுக்குழுத்தலைவராக நியமிக்கவும் இல்லை. அப்படியொரு ஆய்வு குழு செயல்பட்டால் அதற்கும் அரசுக்கும் எந்தச்சம்பந்தமும் இல்லை.

கே:- கன மழை காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர்சாலை துண்டிக்கப்பட்டிருப்பதாகச் செய்தி வந்திருக்கிறதே?

ப:- நேற்றைய தினமே இது குறித்து முதல்-அமைச்சர் அலுவலகத்திலிருந்து தொடர்பு கொண்டு கோவை, நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர்களுடன், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடனும், நீலகிரி மாவட்ட அமைச்சர் தம்பி ராமச்சந்திரனுடனும் தொலைபேசியில் பேசி நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று நான் கூறியதன்பேரில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், 17 இடங்களில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதென்று, சாலை சரி செய்யப்படும் பணி நடைபெற்று வருவதாகவும் அதுவரை கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

லாரி விபத்தில் உயிரிழந்த கிளீனர் குடும்பத்துக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி உடனடியாக வழங்கிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கே:- 5000 ஆதி திராவிட பெண்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் சர்வோதய இயக்கத்தின் சார்பில் வழங்கப்பட்டது குறித்து இன்றைய நாளேடுகளில் செய்தி வந்திருப்பதைப் பார்த்தீர்களா?

ப:- 2006-ம் ஆண்டு தி.மு.க. தேர்தல் அறிக்கையிலே தெரிவித்த வாக்குறுதிகளுக்கேற்ப, தமிழ்நாட்டிலுள்ள நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு தரிசு நிலங்களை பண்படுத்தி இலவசமாக வழங்கும் திட்டம் செப்டம்பர் 17-ல் அனைத்து மாவட்டங்களிலும் முதற்கட்டமாக நடைபெற்று, தற்போது டிசம்பர் 17-ந்தேதி அன்று இரண்டாவது கட்டமாக அவ்வாறு நிலம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

இந்த நிலையில் இன்றைய தினம் தஞ்சையில் 5000 ஆதி திராவிடப்பெண்களுக்கு தலா ஒரு ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது பற்றிய செய்தியினை முழுவதுமாகப் படித்தேன். அந்தச் செய்தியிலே சர்வோதய இயக்கத்தலைவியும், உழவனின் நில உரிமை இயக்க பொதுச்செயலாளருமான கிருஷ்ணம்மாள் ஜெகநாதன் பேசும் போது, "நாங்கள் கூத்தூரில் வினோபாபாவே ஆசிரமம் அமைத்து உழவனின் நிலஉரிமை இயக்கத்தை தொடங்கி ஆதிதிராவிட மகளிர் முன்னேற்றத்துக்காக 38 ஆண்டுகளாக போராடி வருகின்றோம். கிராமப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் நிலமற்ற 10 ஆயிரம் மகளிருக்கு தலா ஒரு ஏக்கர் வீதம் நிலத்தைப்பிரித்து அளித்தோம்.

இதற்கும் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி பத்திரப்பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தார். தற்போதும் 1061 ஏக்கர் நிலம் வாங்க தாட்கோ மானியம் வழங்கவும், பத்திரப்பதிவு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களித்தும் முதல்-அமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார் என்று பேசியிருக்கிறார். இதையும் எண்ணிப்பார்த்தேன்.

இது போலவே மற்றொரு விவசாயிகள் பாதுகாப்பு இயக்கமான டாக்டர் அம்பேத்கர் மக்கள் சங்கத்தின் சார்பாக வாங்கப்பட்ட நிலங்களுக்கு பத்திரப்பதிவு விதி விலக்கு கோரி ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அனுப்பப்பட்ட கோப்பு கையெழுத்திடப்படாமல் கிடந்து தி.மு.க. தற்போது ஆட்சி பொறுப்புக்கு வந்தபிறகு அந்தக்கோப்பிலே நான் கையெழுத்திட்டு, அந்த சலுகையை வழங்கினேன் என்பதையும் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன்.

கே :தமிழகத்தில் கூட்டுறவுத் தேர்தல் நியாயமாக நடக்காது என்று ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டுள்ளாரே?

ப: ஓ! அதனால்தான் அவரது ஆட்சியில் கூட்டுறவு தேர்தலே நடத்தாமல் இருந்து விட்டாரோ? நியாய அநியாயங்களை சுட்டிக்காட்டி நல்ல தீர்ப்பு அளிப்பதற்கு நீதி மன்றங்கள் இருக்கும் போது, மக்கள் மன்ற உரிமைகளைத் தடுத்து நிறுத்தி ஜனநாயக அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தாமல் விட்டு விடுவது தான் இந்த "ஜனநாயகத்தாயின்'' அரசியல் அறவழி போலும்.

மேலும் 2001-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலின் போது முதல்-அமைச்சர் பொறுப்புக்கு வந்த ஒரு சில நாட்களுக்குள் கூட்டுறவு தேர்தலை நடத்துவேன் என்று ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதற்கு பிறகு ஐந்து ஆண்டுகள் ஆட்சியிலே இருந்த ஜெயலலிதா கூட்டுறவு தேர்தலையே நடத்தவில்லை.

அவரது ஆட்சிக்காலத்தில் ஐந்தாண்டுகாலம் கூட்டுறவு தேர்தலைப்பற்றி வாய்திறக்காமல் இருந்து விட்டு தற்போது தி.மு.க. ஆட்சியில் நடைபெற உள்ள கூட்டுறவுத் தேர்தலைப்பற்றி அறிக்கை விட அவருக்கு எந்தவிதத்தில் அருகதை உள்ளது என்பதை தமிழ்நாட்டு மக்கள்தான் எண்ணிப்பார்க்க வேண்டும்.

கே: நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை ஒட்டு மொத்தமாக ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டுமென்று ஒருவர் சொல்கிறாரே?

ப: நடந்து முடிந்த உள்ளாட்சி மன்றத்தேர்தல்கள் என்ன? அதற்கு முன்பு நடைபெற்ற பொதுத்தேர்தலைக்கூட ஒட்டுமொத்தமாக ரத்து செய்து விட்டு மறுதேர்தல் நடத்தினால் அவர்களுக்கு மகிழ்ச்சியாக தான் இருக்கும். வெற்றிவாய்ப்பை இழந்தாலும் பெட்டி நிரம்புமல்லவா!

கே: அரசு அதிகாரிகள் கடமையைச் செய்யும் போது, தடுப்பதும் குறுக்கிடுவதும் குற்றம் என்பதினால்தானே அப்படித்தடுப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படுகிறது?

ப:- அரசு அதிகாரிகள் சட்டப்படி தங்கள் கடமையைச் செய்தால் பிரச்சினையில்லை எல்லோருக்கும் உள்ள பொதுவான நியாயமும் சட்டமும் தனக்கு மட்டும் கிடையாது என்று வல்லடி வழக்காடினால் அதன் விளைவுகளை அவர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

Read More...

தமிழ் பட கவிதை

அச்சச்சோ
மறந்தேன் மெய் மறந்தேன்
கண்ணும் கண்ணும்
நெஞ்சிருக்கும் வரை
நெஞ்சில் ஜில் ஜில்
ஓ நெஞ்சே
இவன் யாரோ
பரட்டை என்ற அழகுசுந்தரம்
பருத்தி வீரன்
வீராசாமி
ஆச்சர்யம்
ஆச்சார்யா
அமிர்தம்
ஆழ்வார்
ஆர்யா
லெமன்
லயா
லீ
நினைத்தாலே
ஆடுபுலி ஆட்டம்
பை 2
ஆட்டம்
சதுரங்கம்
சிவாஜி
அற்புத தீவு
மாயக்கண்ணாடி
சிவப்பதிகாரம்
ரன்வே
முதல் கனவே
துள்ளல்
செங்காற்று
கிழக்கு கடற்கரை சாலை
அரண்
திருடி
முனி
முருகா
பீமா
தசாவதாரம்
நான் கடவுள்
பெரியார்
பிறப்பு
சயனைடு
சொடக்கு
சொல்லி அடிப்பேன்
இடியட்
சென்னை 600 028

இது கவிதை இல்லை. வரவிருக்கும் தமிழ் படங்களின் பெயர்கள் :-)

Read More...

Tuesday, November 14, 2006

குழந்தைகள் தின பிராத்தனை

நேற்று நொய்டவில் 'அடோப்'(Adobe) நிறுவன இயக்குனர் நரேஷ் குப்தாவின் மூன்று வயது மகன் ஆனந்தை மர்ம நபர்கள் இருவர் கடத்திச் சென்றனர்

ஆனந்த் வீட்டுக்கு அருகில் உள்ள "லோட்டஸ் வேலி' என்ற பள்ளியில் படித்து வருகிறான். தினமும் ஆனந்தை அவர்கள் வீட்டு வேலைக்கார பெண் பள்ளிக்கு அழைத்துச் செல்வார்.

வழக்கம் போல் நேற்றும் வேலைக்கார பெண், குழந்தை ஆனந்தை தூக்கிக் கொண்டு "15-ஏ' சாலை வழியாக பள்ளிக்கு சென்றுள்ளார் . காலை 8.50 மணியளவில் அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வேலைக்கார பெண்ணின் குறுக்கே வேகமாக வந்து அவள் கையில் இருந்த குழந்தையை பறித்துச் சென்று கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விட்டனர்.

பதட்டமடைந்த வேலைக்கார பெண் உடனடியாக நரேஷ் குப்தாவுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, நரேஷ் குப்தா, தனது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

அமெரிக்காவில் இருந்த நரேஷ் குப்தா நேற்று ஃபிளைட் பிடித்து இன்று காலை வந்து சேர்ந்தார். மீடியாக்களை கொஞ்சம் ஒதுங்கியே இருக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடைசியாக கிடைத்த தகவல்: கடத்தியவர்கள் நரேஷ் குப்தாவிடம் டெலிபோனில் பேசியுள்ளார்கள். எவ்வளவு பணம் கேட்டார்கள் என்று தகவல் கிடையாது.

இன்று குழைந்தைகள் தினம், இந்த பதிவை படித்த பின் ஆனந்திற்கு பிராத்தனை செய்யுங்கள்.

Read More...

தவறு இல்லை


[ ஹேமமாலினி ஆண்டி சொல்லிட்டாங்க, இப்போ என்ன பண்ணுவீங்க ? ]


நடிகைகள் தங்கள் அழகை காப்பாற்றிக்கொள்ள எவ்வளவோ சிரமப்படுகிறார்கள். உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொண்டு, கஷ்டப்பட்டு உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்கிறார்கள்.

இவ்வளவு கஷ்டப்பட்டு சாதித்த அழகை வெளிக்காட்டுவதில் தவறு ஏதும் இல்லை. அழகு என்பது, அடுத்தவர்கள் பார்த்து பாராட்டத்தானே? ஒரு நடிகைக்கு அழகான உடல் அமைப்புடன் கூடிய பிகர் இருக்குமானால், அதை வெளிக்காட்டுவதில் என்ன தவறு?

தடியான உடல் அமைப்புடன் கூடிய நடிகைகள், கவர்ச்சி என்ற பெயரில் உடலை காட்டினால் யார் பார்த்து ரசிப்பார்கள்? எனவே அழகான நடிகைகள் சினிமாவில் கவர்ச்சியை காட்டுவது தவறு அல்ல.

எனக்கு அழகு என்பது, இறைவன் தந்த பரிசு. நான் அதை ஜாக்கிரதையாக காப்பாற்றி வருகிறேன். தினமும் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றுக்காக 2 மணி நேரம் செலவிடுகிறேன்.

உடற்பயிற்சியால், தெளிவான சிந்தனை கிடைக்கிறது. திறந்த மனதுடன் இருப்பதன் மூலம், அழகை காப்பாற்றிக்கொள்ளலாம் என்று நடிகை ஹேமமாலினி கூறினார்.

Read More...

Monday, November 13, 2006

காளிமுத்து - ஜெ அறிக்கை (அ) கலைஞருக்கு பதில்)

முன்னாள் சபாநாயகர் காளிமுத்து இறைவன் அடி சேர்ந்து ஐந்து நாட்களில் அவரை வைத்து அரசியல் பண்ண தொடங்கிவிட்டார்கள். நேற்று கலைஞர் அறிக்கையை தொடர்ந்து ஜெ இன்று அதற்கு பதில் அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.
காளிமுத்து ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றேன்.
ஜெ அறிக்கை ..


அரசு பேரூந்துகளில் தொன்மையும், உண்மையும் வாய்ந்த திருக்குறளை அழித்து விட்டு கருணாநிதியின் எழுத்துக்களை ஏன் பொன் மொழிகள் என்ற பெயரில் எழுதுகிறீர்கள்ப இது ஒரு வரலாற்று பிழையாக இருக்கிறதேப ஒட்டு மொத்த தமிழ்ச்சமுதாயத்தையே சிறுமைப்படுத்தும் செயலாக இருக்கிறதே என்று அறிக்கை ஒன்று நான் வெளியிட்டிருந்தேன்.

அந்த அறிக்கைக்கு பதில் தராமல் திருவள்ளூவரை விட தானே உயர்ந்தவர் என்பது போன்று இன்னொரு அறிக்கை கருணாநிதி வெளியிட்டிருக்கிறார். திருக்குறளை விடுத்து ஏன் உங்கள் எழுத்துக்களை பேரூந்துகளில் எழுதுகிறீர்கள் என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் திசை மாற்றும் முயற்சியாக வேறு ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

"சட்டமன்றத்திற்கு நான் போகவில்லை என்றாலும், சட்டமன்ற நடவடிக்கைகளில் அன்றாடம் சொல்லப்படுகின்ற திருக்குறளில் என்ன குறளை அவைத்தலைவர் காளிமுத்து சொல்லுகிறார் என்று பார்ப்பேன். பெரும்பாலும் குறளுக்காக உரை என்னுடைய உரையாகவே இருக்கும்'' என்றும், இது தொடர்ந்து நிகழ்ந்து வந்த ஒன்று என்றும், அது எனக்கு தெரியவந்த போது அன்புச்சகோதரர் காளிமுத்துவை நான் மிரட்டியதாகச் சொல்லி இருக்கிறார் கருணாநிதி.

காளிமுத்து தி.மு.க.விற்கு சென்ற நிலையிலும், என்னைப்பற்றியும், என் தாயாரைப்பற்றியும் இழிவுப்படுத்திப் பேசியப்போதும், பற்றும் மாறாத பாசமும் கொண்டிருந்தேன். இது என் மனச்சாட்சிக்குத்தெரியும். அந்த கடவுளுக்குத்தெரியும். என்றைக்குமே காளிமுத்து வின் அத்தகைய பேச்சுகளுக்கும், எழுத்துக்களுக்கும் நான் பதில் சொன்னதே இல்லை.

அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்ட போது அவரை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்து உயர்ந்த மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்து முழு மருத்துவச்செலவையும் நானே ஏற்றுக்கொண்டேன். அதன் பின்னர் காளிமுத்து பூரண குணம் அடைந்து பின்னர் நடைபெற்ற பொதுக்குழுவில் "என் உயிரை காப்பாற்றிய தாய்'' என்று எனக்கு நன்றி தெரிவித்து கண்ணீர் மல்க நிகழ்த்திய உரையை நாடு அறியும்.

காளிமுத்துவின் தமிழ்ப்பேச்சை பல்வேறு சந்தர்ப்பங்களில் நான் கேட்டு ரசித்திருக்கிறேன். அவர் சட்டப்பேரவைத் தலைவர் ஆன பிறகு நான் கலந்து கொண்ட அரசு விழாக்களில் அவரை தலைமையேற்கச் செய்து, அவரது உரைகளைக் கேட்டு மகிழ்ந்திருக்கிறேன். ஏன் இன்னும் ஒரு படிமேலாக அவரை என்னுடைய அண்ணனாக மதித்திருக்கிறேன்.

இந்த நிலையில் கருணாநிதி எழுதிய திருக்குறள் உரை நூலை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்லுவது முழு கற்பனையாக இருக்கிறது.

காளிமுத்துவின் மன அழுத்தத்திற்கு தானே காரணம் என்ற பழி தன் மீது வந்துவிடுமோ என்று பயந்து அவருடைய நட்பைப்பற்றி புகழ்ந்துரைத்திருக்கிறார். நட்பைப்பற்றிப்பெருமை பேசும் இவர், உடல் நலம்தேறி வந்த நிலையில், காளிமுத்து மீது பொய்வழக்குப்போட்டு அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார். மதுரையில் இருந்த போது, அந்த வழக்கில் நிபந்தனை ஜாமீனில் கட்டாயமாக சென்னைக்கு வந்து லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனர் அலுவலகத்தில் தினசரி கையெழுத்திடச் செய்ததன் மூலம்தான் காளிமுத்து மிகுந்த மனவேதனைக்கு ஆளாகி மரணமடைந்தார் என்பதை நாடு அறியும்..

Read More...

தமிழ் நீதி மன்றம்

பத்ரி அவர்கள் நீதி மன்றங்களில் தமிழ் என்பதை பற்றி எழுதியுள்ளார். (இட்லிவடை பதிவில் கருணாநிதிக்கு, ராமதாஸ் புகழாரம் )

இந்த தலைப்பு தொடர்பாக துக்ளக்கில் வந்த 'எச்சரிக்கை' பகுதியிலிருந்து...

"நீதிமன்றங்களில் தமிழ் மட்டுமே... என்பதை உறுதி செய்து, அமல்படுத்த கலைஞரால்தான் முடியும்' – என்று ராமதாஸ் பேசினார்.கலைஞரோ, "நாம் அனைவரும் சேர்ந்தே அதைச் செய்வோம்' என்று கூறிவிட்டார். சாதாரணமாக, இலவசங்களிலிருந்து, தொழிற்பேட்டைகள் வரை பல விஷயங்களுக்கு கலைஞர் எல்லோரையும் சேர்த்துக் கொள்ள மாட்டார்; தயாநிதி மாறன் – முடிந்தால் ஸ்டாலின் என்பதோடு அதற்கான கூட்டு முயற்சி முடிந்துவிடும். ஆனால், காவிரி, முல்லைப் பெரியாறு போன்ற சிக்கலான பிரச்னைகளில், கலந்து பேசி முடிவெடுக்க அனைத்துக் கட்சியினரையும் அழைப்பார். இது சங்கடத்தில் பங்கு; அதை அவர் தாராளமாக வழங்குவார்.

இப்போது "நீதிமன்றத்தில் தமிழ்' என்பதிலும் அவர், "நாம் எல்லோரும் சேர்ந்து...' என்று சொன்னதிலிருந்தே, இது சிக்கலான விஷயம் என்று அவர் நினைப்பது புரிகிறது.

அந்த வரை நல்லதுதான். அவர் அவசரப்பட்டு, அதைச் செய்ய முனையப் போவதில்லை. அதனால்தான் அனைவருக்கும் அழைப்பு வந்திருக்கிறது. "நீதிமன்றத்தில் தமிழ்' என்பது, அவசர அவசரமாக நடந்து விடாது என்பது நல்ல செய்திதானே!

Read More...

pop-up விளம்பரம்

பாஸ்டன் பாலா பதிவில் "Idly - Vadai & DJ Thamilan" என்ற தலைப்பில் என் வலைப்பதிவிற்கு வந்தால் நிறைய 'Pop-up' விளம்பரம் வருகிறது "பெரிய மனசு பண்ணுப்பா" என்று சொல்லியிருந்தார். சுட்டிக்காடியதற்கு நன்றி

பாலாவிற்கு முன் வேறு சிலரும் இதை பின்னூட்டத்தில் சொல்லியிருந்தார்கள், அவர்களுக்கும் நன்றி.

இன்று சில மாற்றங்கள் செய்திதுள்ளேன். பார்த்துவிட்டு பின்னூட்டதில் இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறதா என்று சொல்லுங்கள். வாலு போய் கத்தி வந்த கதைமாதிரி ...

அன்புடன்,
இட்லிவடை

Read More...

காளிமுத்து - கலைஞர் அறிக்கை

என்னை அண்ணனாக ஏற்று மறைமுக அன்பு செலுத்தியவர் காளிமுத்து என்று நினைவு கூறுகிறார் கலைஞர். ( நன்றி தினத்தந்தி )

வளமான தமிழ்ப் புலமை

வற்றாத கற்பனையும், வளமான தமிழ்ப் புலமையும் கொண்ட தம்பி காளிமுத்து மறைந்துவிட்டார். நமக்கு எதிர்வரிசைக்கு சென்றார். இயற்கை எய்தினார் என்பதற்காக; மனிதநேயம் மறந்தோமில்லை. மறுகணமே இரங்கற் செய்தி வெளியிட்டோம்.

அரசியல் கட்சிகளிடையே இந்தப் பண்பாடு நிலைத்திட வேண்டும் என்று தான் நடுநிலையாளர்கள், நல்லோர் அனைவருமே தமிழகத்தில் விரும்புகின்றனர். நிலைத்திருக்கிறது நம்மிடையே அந்தப் பண்பாடு என்பதினால்தான் நினைத்திருக்கிறோம் இன்னமும்; அவர்களுக்கும் நமக்குமிடையே இருந்த நட்புணர்வை; தோழமையை; அதன் விளைவுதான் தம்பி காளிமுத்துவின் மறைவுக்காக நான் விடுத்த இரங்கல் அறிக்கை!

என் எழுத்து மீது காதல்

என்னிடமும், என் எழுத்துகளின் மீதும் காளிமுத்து கொண்டிருந்த `காதல்' அளவிட முடியாதது என்பேன். 2001-ல் ஜெயலலிதா ஆட்சிக்கு வருகிறார். அப்போது சபாநாயகராகப் பதவிப் பொறுப்பு தம்பி காளிமுத்துவுக்கு வழங்கப்படுகிறது. தி.மு.க. ஆட்சி தொடங்கிய பிறகு ஒவ்வொரு நாளும் காலையில் பேரவை கூடும் பொழுது; சபாநாயகர், ஒரு திருக்குறளைப் படித்து அவையில் அதற்குப் பொருளும் கூறுவார்.

என்னைப் பொருத்தவரையில் நான் அப்போது சட்டப்பேரவைக்குப் போவதில்லை. இருந்தாலும் ஒரு ஆசை - ஒவ்வொரு நாளும் அவைத் தலைவர் காளிமுத்து எந்த குறள் உரையைப் படிக்கிறார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் என்பதுதான் அந்த ஆசை! அதைத் தெரிந்து கொள்வதற்காக அவையில் நடைபெற்ற முதல் நாள் நிகழ்ச்சிகள் பற்றிய விவரக் குறிப்புகளை நமது சட்டமன்ற உறுப்பினர் மூலம் கொண்டு வரச் சொல்லிப் படிக்கத் தொடங்கினேன்.

குறளுக்கு பொருள் விளக்கம்

அவைத் தலைவராக காளிமுத்து வீற்றிருந்த அந்த ஐந்தாண்டு காலத்தில் மிகப் பெரும்பகுதி நாட்களில் அவர் என் குறள் உரையை படித்துத் தான் அவையில் பொருள் விளக்கம் தந்திருக்கிறார்.

``கருணாநிதி, குறளுக்கு எழுதிய உரையைத் தான் பேரவையில் நாள்தோறும் சபாநாயகர் காளிமுத்து படிக்கிறார் என்பது எப்படியோ ஜெயலலிதாவுக்குத் தெரிந்து அவர் காளிமுத்துவை அழைத்து மிரட்டிய பிறகு, ஜெயலலிதா ஆட்சி முடிவடைவதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரையில் அதாவது 2005-ம் ஆண்டு வரையில் காளிமுத்து `கலைஞர் உரை'யாம் என்னுரையை பயன்படுத்துவதை சில மாதங்கள் மட்டுமே நிறுத்திக் கொண்டார். இதுதான் நடந்த உண்மை.

அனுதாப செய்தி

தம்பி காளிமுத்து சபாநாயகராக இருந்த பேரவையில் விளக்கமë அளித்தது இந்த உரைதான். அதனால்தான் என் தமிழë மீதும், இலக்கிய ஆய்வின் மீதும் காதல் கொண்டவர் காளிமுத்து என்று சொன்னேன்- இப்போதும் சொல்கிறேன்.

மறைந்தவர்களின் குறை தவிர்த்து நிறையைப் போற்றுவதே மனித நேயப் பண்பு. அந்த பண்பினை நமது பண்பாளர் பழனிவேல்ராஜன் மறைநëத போதும், கண்மணி முரசொலி மாறன் மறைந்த போதும் ஒரு வரி அனுதாப செய்திகூட வெளியிட மறந்த அ.தி.மு.க. நண்பர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியாததுதான்.

பண்பு

நாம் கட்டிகë காக்கும் அந்தப் பண்பை உணர்த்திட தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் உள்ள வேறுபாட்டை வெளிப்படுத்த தம்பி காளிமுத்துவின் மூச்சல்லவா அடங்கியிருக்கிறது. அந்தோ; அந்தத் தமிழ் மூச்சு நின்றுவிட்டதே! மானசீகமாக என்னை அண்ணனாக ஏற்று மறைமுக அன்பு செலுத்திய அந்த மரகத மணிச் சுடர் மண்ணில் புதைந்து போனதே

Read More...

Sunday, November 12, 2006

போட்டுத்தாக்கு

"பெரியார்' படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று இளையராஜா எடுத்திருக்கும் முடிவு நூற்றுக்கு நூறு சரியானது. கோவில் கும்பாபிஷேகம், திருப்பணி செய்து முழுமையான பக்தனாக இருப்பவரை, இந்தப் படத்திற்கு இசையமைக்க அப்ரோச் செய்வதற்கு முன்பு இயக்குனர் யோசித்திருக்கலாம். பணத்திற்காகவும், விருதுக்காகவும் இந்தப் படத்தில் இசையமைப்பார் என்று நினைத்திருக்கலாம். ஆனால் இசைஞானி அதற்கெல்லாம் அப்பாற்பட்டவர் என்பதை நிரூபித்து விட்டார்... - எஸ்.வி.சேகர் ( ஜோக்குகளுக்கு எப்போதும் பஞ்சம் இல்லை )

""திருக்குறள் "காலத்தால் அழியாத பொன் மொழி. கருணாநிதியின் எழுத்தோ காலத்துக்கு காலம் மாறும் ஒரு சந்தர்ப்பவாதியின் பொய் மொழி. உண்மையான "பொன் மொழி' இருக்க, "பொய் மொழி' எதற்கு?'' - ஜெயலலிதா ( டி.ராஜேந்தரிடம் டியூஷன் எடுத்திருப்பார் போல )

அ.தி.மு.க.,வோ -ம.தி.மு.க.,வோ, அவை தி.மு.க.,வைப் பொறுத் தவரை, மிகப் பெரிய போட்டி கட்சியுமல்ல; எதிர் கட்சியுமல்ல... தி.மு. க.,வுக்கு நாம் தான் இலக்கு; இவ் வளவு அராஜகத்தையும் தாண்டி, கடவுள் நமக்கு வெற்றியை கொடுத்திருக்கிறார். - விஜயகாந்த் ( அடிச்சார் பார் சிக்ஸர் )

தமிழ்நாட்டில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் இல்லை - கலைஞர் ( உயர்த்துவதாக இருந்தால், ராமதாஸை கேட்டுவிட்டு செய்யவும் )

சேலத்தில் இருந்து சென்னை வரும் வழியில் ஓடும் ரயிலில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சூட்கேஸ் திருட்டுப் போனது. இதே பெட்டியில் பயணம் செய்த ரயில்வே அதிகாரியின் சூட்கேசும் திருட்டு போயுள்ளது. ( உள்ளே என்ன இருந்தது என்று நான் கேட்க மாட்டேன் )

போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜீப்புக்குள் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
போலீஸ்காரர்கள் அலறியடித்து ஓட்டம் ( பாம்பென்றால் போலீஸ் படையும் நடுங்கும் )

Read More...

பதிப்பகங்களும் நூலகங்களும்

இன்றைய தினமணி செய்தியில் - தமிழ் வளர்ச்சிக்காக பாடுபடுபவர் முதல்வர் கருணாநிதி. கடந்த ஆட்சியில் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலகங்களுக்கு 750 படிகள் பெற அனுமதி இருந்தது. அதை 1000 படிகளாக உயர்த்தி உத்தரவிட்டுள்ளார். தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை நூலகங்களுக்குத் தேர்வு செய்ய விரைவில் குழு அமைக்கப்படுமென பள்ளி கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளதாக வந்துள்ளது.

இன்று பல பதிப்பகங்கள் உங்களையும், என்னையே நம்பி இல்லை. அவை பல நூலகங்களை நம்பியே இருக்கிறது. 1200 பிரதிகள் ஒரு பதிப்பு. இதில் 50-60% நூலகங்க ஆர்டர்கள். மீதம் உள்ள 30-40% பிரதிகள் புத்தக கண்காட்சிகளில் விற்பனை ஆகிறது. 10% காம்பிளிமெண்டரி காப்பிகள்.

நூலகங்கள் இந்த புத்தகங்களை ஆர்டர் செய்யவில்லை என்றால் ஒரு பதிப்பில் 50% பதிப்பகத்தார் கொடவுன்களில் தங்கிவிடுகிறது. தெரியாத எழுதாளர் என்றால், அந்த பதிப்பில் காம்பிளிமெண்டரி பிரதிகள் போக, மீதம் உள்ள எல்லாம் கொடவுனில் தான் இருக்கிறது.

நூலகங்கள் ஒரு பதிப்பகத்தாரிடம் இவ்வளவு தான் வாங்கலாம் என்று சில விதிமுறை இருக்கிறது. அதனால் தான் ஒரே பதிப்பகம் நடத்துபவர்கள் வேறு சில பெயர்களிலும் பதிப்பகம் நடத்துகிறார்கள். முதல் பதிப்பில் வந்த புத்தகத்தை அடுத்த பதிப்பில் அட்டையும், தலைப்பையும் மாற்றி அடுத்த ஆர்டர்களுக்காக அனுப்பிவைக்கிறார்கள். நூலகங்கள் எப்படி நூல்களை தேர்வு செய்கிறார்கள் என்று ஆராய்ந்தால், உங்களுக்கு டாக்டர் பட்டமே கொடுக்கலாம்.

Read More...

Saturday, November 11, 2006

Condom - Condemn

இந்த பதிவு கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் தான்.


மினி உலகக்கோப்பை ஒளிபரப்பான போது நடுநடுவில் மந்திராபேடி "Time for a small commerial break" என்று சொன்ன போது, அடுத்த சேனல் மாற்றாதவர்களுக்கு DKT’s “XXX” நறுமண (ஸ்ட்ராபெரி, சாக்லேட், வாழைப்பழம் நறுமணங்களில்) காண்டோம் விளம்பரத்தை “What is your flavor of the night?” என்ற வாசகத்துடன் வந்ததை பார்த்திருக்கலாம் (பார்க்காதவர்கள் பார்த்தவர்களிடம் கேட்டு தெரிந்துக்கொள்ளவும் ).

இந்திய சென்சார் இந்த விளம்பரத்திற்கு கடும் அட்சேபம் தெரிவித்திரிக்கிறது. இந்திய சென்சார் போர்ட் சேர்மேன்(சேர் உமென்?) ஷர்மிலா டாகூர் "இந்த விளம்பரம் பதிமூன்று வயதுக்காரர்களை கவர்வதற்காக எடுத்திருக்கலாம் ஆனால் நிச்சயம் குழந்தைகளுக்கு ஏற்ற விளம்பரம் இல்லை" என்று கூறியிருக்கிறார். மேலும் நிச்சயம் இந்த விளம்பரத்தை ராத்திரி பதினோரு மணிக்கு பிறகு 'A' சான்றிதழுடன் போட வேண்டும் என்று வற்புறுத்தியும் இருக்கிறார். ஷர்மிலா டாகூர்.

ஆனால் DKT நிறுவனத்தின் மூத்த அதிகாரி "the flavored condoms were not meant to promote oral sex, but to encourage couples who do not like the smell of latex" என்று சொல்கிறார்.

6 மாதத்திற்கு முன்பு பத்திரிக்கையாளர் ஞாநி 'தீம்தரிகிட'வில் இவ்வாறு எழுதியிருந்தார்.

ஆண் பெண் உறவை சமத்துவத்தோடும் ஆரோக்கியமாகவும் பார்ப்பதற்கான மன முதிர்ச்சியைத் தரக்கூடிய சூழலை வீட்டுக்குள்ளும் பாடப் புத்தகங்களிலும் ஏற்படுத்தும் வேலைகளை முடுக்கி விடுவதை ஒரு புறமும், உடனடியான தேவைகளை பாதுகாப்பாக சந்திப்பதற்கான அறிவுரையையும் வசதிகளையும் தருவதை மறுபுறமும் மேற்கொள்வதே அடுத்த தலைமுறையின் எதிர்கால ஆரோக்கியத்துக்கு தேவைப்படுகிறது. ‘அய்யோ. என் குழந்தை பள்ளிக்குப் போகும்போது காண்டோம் எடுத்துச் செல்ல மறக்காதே என்று சொல்லி அனுப்பவா?’ என்று கலாச்சார சாமியாடிகளாக புலம்புவது அபத்தமானது. சொல்லி அனுப்பினால் ஒன்றும் பாவமில்லை. குழந்தைக்கு குண்டி கழுவக் கற்றுக் கொடுத்ததைப் போலத்தான் இதுவும். எத்தனை வயதானாலும் என் குழந்தைக்கு நான்தான் குண்டி கழுவிவிடுவேன் என்பது போன்ற அபத்தமே, (இளைஞர்களாகிவிட்ட தங்கள்) ‘குழந்தைகளின்‘ யோனிக்கும் லிங்கத்துக்கும் கவசமாகக் காலத்துக்கும் இருக்கப் பார்ப்பதுமாகும்.


சரி வெளிநாட்டில் வந்த நறுமண காண்டோம்(சுவிங்கம்:-) விளம்பரம் இங்கே: http://youtube.com/watch?v=Z0DINml2_5I

[ This ad has been done by a specialist, do not try it at your home ]

இது தொடர்பான செய்திகள்:

Times of India http://timesofindia.indiatimes.com/articleshow/299605.cms
IBNLive : http://www.ibnlive.com/news/censor-bitter-over-flavoured-condom-ad/25944-3.html

Read More...

இது என்ன ?

இந்த படம் என்ன ?

தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் சொல்லலாம்.

Read More...

Friday, November 10, 2006

செல்போன் - சில முக்கிய தகவல்கள்

* அஸினிடம் நான்கு செல்ஃபோன்கள் இருக்கின்றன. தெலுங்கு, மலையாளம், தமிழ் என்று தனித்தனியே வைத்திருக்கிறார். இது தவிர பர்சனல் போன் ஒன்று. இவருக்கு போன் செய்தால் எடுத்துப் பேசுவது இவரது அப்பா.

* கமலிடம் ஒரே ஒரு செல்ஃபோன். நெருக்கமானவர்கள் நம்பர் வந்தால் மட்டுமே எடுப்பார். மற்றபடி தொடர்பு கொள்ள வேண்டுமென்றால், அவரது பி.ஆர்.ஓ.விடம்தான் பேச வேண்டும்.


* விக்ரமிடம் இரண்டு செல்ஃபோன்கள். ஒன்று பர்சனல், மற்றொன்று அஃபிஷியல். பேசுவதைவிட எஸ்.எம்.எஸ். அனுப்பினால் பதில் வரும்.

* ரஜினியிடம்ஒரே ஒரு செல்ஃபோன். அந்த என் அவரது நெருங்கிய குடும்பத்தினருக்கும் சில நண்பர்களுக்கு மட்டுமே தெரியும். மற்றபடி அவரிடம் பேச வேண்டுமென்றால் அவரது அலுவலகத்தில் செய்தி சொல்ல வேண்டும். விருப்பப்பட்டால் அவரே உங்களை அழைப்பார்.

* விஜய்யிடம் இரண்டு செல்ஃபோன்கள் இருக்கின்றன. ஒன்று குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும். மற்றொன்று திரையுலகத்தினருக்கு அவரே போனை எடுப்பார். வணக்கம்ணா, சொல்லுங்கணா என்பார்.

* அடிக்கடி செல்ஃபோன்களை மாற்றுபவர் அஜித். அதில் பதிவு செய்யப்பட்ட பெயரர்களிலிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே பேசுவார். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் நிச்சயம் பதில் உண்டு.

* செல்ஃபோன் எண்களை அடிக்கடி மாற்றுவதில் த்ரிஷா சாதனை செய்துவிடுவார். லேட்டஸ்ட் ஹிட் பாடல்தான் ரிங்டோன். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அவரது அம்மா நம்மிடம் பேசுவார்.

* நீண்ட நாட்களாக ஒரே எண்ணை வைத்திருக்கிறார் ரீமாசென். மும்பை எண். யார் கூப்பிட்டாலும் எடுத்துப் பேசுவார். எஸ்.எம்.எஸ். அனுப்பினால் பதில் எஸ்.எம்.எஸ். சட்டென்று வந்தவிடும்.

* சிம்புவிடம் இரண்டு செல்ஃபோன்கள். ஒன்று தோழி நயன்தாராவுக்கும், நெருங்கிய நண்பர்களுக்கும். மற்றொன்று மற்றவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் அவர் ஃப்ரீயாய் இருக்கும் நேரம் அழைப்பார்.

* லேசில் ஃபோனை எடுக்கமாட்டார் தனுஷ். ஆனால் ஃபோனை வேறு யார் கையிலும் கொடுக்கமாட்டார். அவரே பேசுவார். பணிவாகப் பதிலளிப்பார்.

* பரத்தும் விஷாலும் அவர்களே செல்ஃபோனை எடுத்துப் பேசுவார்கள். "மிஸ்ட்கால்' வந்திருந்ததைப் பார்த்ததும் உடனே கூப்பிடுவார்கள்.

* செல்ஃபோன் என்னை அடிக்கடி மாற்றுவார் சூர்யா. திருமணத்துக்கு முன்பு அதிகமாய் செல்ஃபோன் பில் கட்டிய நடிகர் என்று சொல்லப்பட்டவர். தெரிந்தவர்கள் அழைத்தால் மட்டுமே ஹலோ சொல்வார். மற்றபடி அவர் மேனேஜர் மூலம்தான் தொடர்பு.

* செல்ஃபோன் எண்ணை அடிக்கடி மாற்றிவிடுவார் நயன்தாரா. யாருக்கம் நம்பர் தரமாட்டார். ஒருசிலருக்குத் தான் அந்த என் தெரியும். பேசவேண்டுமென்றால் மேனேஜரிடம்தான் பேசவேண்டும்.
நன்றி: குமுதம்

Read More...

Thursday, November 09, 2006

விஜயாந்துக்கு போட்டியாக...

கேப்டன் விஜயகாந்துக்கு போட்டியாக தமிழகத்தில் யாரும் இல்லை. ஆனால் ஆந்திராவில் ....படத்தை பார்த்துவிட்டு தெலுங்கில் சிரிக்கவும் :-)

Read More...

மோசமான ஐந்து தமிழ் வலைப்பதிவுகள்

நான்கு நாட்களுக்கு முன் இணையத்தின் தந்தை என்று போற்றப்படும் டிம் பெர்னர்ஸ் லீ (Sir Tim Berners-Lee) இணையம் ரொம்ப கேட்டு போச்சு என்று வருத்தப்பட்டுள்ளார். வலைப்பதிவு வந்த பின் இணையத்தில் நம்பகத்தன்மை கேள்விக்குறி ஆகிவிட்டது. அதேபோல் அவதூறான செய்திகளும் பெருகிவிட்டது என்று கூறியிருக்கிறார்.

சரி, தமிழ் வலைப்பதிவில் மிக மோசமான 5 வலைப்பதிவுகளை கொடுக்கவும்.

விதிமுறைகள்:
1. அனானிமஸ் பின்னூட்டங்கள் செல்லாத ஓட்டு என்று கருதப்படும்.
2. தமிழ்மணம், தேன்கூடு, கில்லி என்றாலும் செல்லாத ஓட்டு தான்.
3. நீங்கள் தேர்ந்தெடுக்கும் பதிவுகளின் URL கொடுக்க வேண்டும்.
3. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும்.
4. ஈ-மெயில் மூலமாகவும் வாக்கு பதிவு செய்யலாம்.
5. விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

முக்கிய குறிப்பு: உங்கள் பெயர் வெளிவராது, பயப்படாதீர்கள்

கடைசி செய்தி: இந்த வாக்குபதிவினால் சிலருக்கு தேவையில்லாத மனக் கசப்பு உண்டாக்கும் என்று நினைப்பதால் இந்த வாக்கு பதிவு ரத்து செய்யப்படுகிறது
அன்புடன்,
இட்லிவடை.

Read More...

Wednesday, November 08, 2006

FLASH : சதாம் தப்பித்தார்

தற்போது கிடைத்த தகவல். மேல் விவரங்களுக்கு இங்கு செல்லவும்

Read More...

FLASH: காளிமுத்து காலமானார்

அதிமுக அவை தலைவர் காளிமுத்து இன்று காலை மாரடைப்பால் காலமானார். முன்னாள் சட்டசபை சபாநாயகரும், அதிமுக அவை தலைவருமான காளிமுத்து சமீப காலமாக உடல் நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை அவர் சென்னை மருத்துவனையில் மாரடைப்பால் காலமானார்.
அவருடைய குடும்பத்திக்கு இட்லிவடையின் ஆழ்ந்த அனுதாபங்கள்.


காளிமுத்து பற்றி.. ( நன்றி தட்ஸ் தமிழ் )
மறைந்த முன்னாள் சபாநாயகர் காளிமுத்து 1942ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டம் (இப்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள) ராமுத்தேவன் பட்டியில் பிறந்தவர். இவரது தந்தை பெயரும் காளிமுத்துதான்.

எம்.ஏ., பி.எச்.டி படித்துள்ள காளிமுத்து மாணவப் பருவத்திலேயே சிறந்த பேச்சாளராக விளங்கினார்.

ஓச்டூடிட்தtடத பேச்சுத் திறமை காரணமாக பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரால் மேடை மணி என்று பாராட்டப்பட்டவர்.

ஆரம்பத்தில் இருந்தே திராவிட இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்த காளிமுத்து, இந்தி எதிர்ப்புப் போரிலும் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார்.

ஆரம்ப காலத்தில் திமுகவில் இருந்த காளிமுத்து முதல் முறையாக 1971ம் ஆண்டு சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார். பின்னர் எம்.ஜி.ஆர். அதிமுகவை ஆரம்பித்தபோது அதில் இணைந்தார்.

1977, 1980 ஆகிய தேர்தல்களில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றார். 1984ம் ஆண்டு மதுரை கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஆனார்.

எம்.ஜி.ஆரின் மிக நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்த காளிமுத்துவை அமைச்சராக்கி அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர். அவரது அமைச்சரவையில் நிரந்தர அமைச்சராகவும் இருந்தார். எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் உள்ளாட்சித் தறை, வேளாண்மைத் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பணியாற்றினார். அதிமுக துணைப் பொதுச் செயலாளராகவும் பதவி வகித்துள்ளார்.

எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் ஜானகி அணியில் இருந்த காளிமுத்து பின்னர் திமுகவுக்குத் திரும்பினார். அப்போது நடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் கடலாடி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார்.

அந்தத் தேர்தலில் சென்னை துறைமுகம் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். கடலாடியில் காளிமுத்துவுக்காக பிரச்சாரம் செய்த கருணாநிதி, ''தம்பி நீ கடலாடி வா.. துறைமுகத்தில் காத்திருக்கிறேன்'' என்று பேசினார். ஆனால், காளிமுத்து தோற்றார்.

திமுகவில் சில காலம் இருந்த காளிமுத்து பின்னர் மீண்டும் அதிமுகவுக்கு மாறினார்.

இம்முறை காளிமுத்துவுக்கு அதிமுகவில் முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் பொறுப்பில் அமர வைத்தார் ஜெயலலிதா. 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.

2001ம் ஆண்டு முதல் 2006 வரை அவர் சபாநாயகர் பொறுப்பை வகித்தார். சட்டசபை ஆயுட்காலம் மு¬டிவடையும் தருவாயில் அப்பொறுப்பிலிருந்து காளிமுத்துவை விலக்கி அதிமுகவின் அவைத் தலைவராக நியமித்து அழகு பார்த்தார் ஜெயலலிதா.

அதிமுக ஆட்சியை இழந்த பின்னர் காளிமுத்து மீது இரண்டு வழக்குகளை ஊழல் தடுப்புப் போலீஸார் பதிவு செய்தனர். எம்.எல்.ஏ. விடுதி வளாகத்தில் உள்ள இரண்டு கேண்டீன்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கியது தொடர்பான வழக்குகள் அவை.

அரசியலுக்கு அப்பாற்பட்டு நல்ல இலக்கியவாதியாகவும் தமிழ் ஆர்வலராகவும் திகழ்ந்தவர் காளிமுத்து. மிகச் சிறந்த பேச்சாளர். அவரது பேச்சுக்கு பெரும் ரசிகர் கூட்டமே இருந்தது. மேலும், உதாரணங்களைச் சொல்லிப் பேசுவதிலும் வல்லவர்.

''கருவாடு மீனாகாது, கறந்த பால் மடி புகாது'', ''கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் பிடிப்பானா'' என்பது உள்ளிட்ட அவர் சொல்லிய பல உதாரணங்கள் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகப் பிரியரான காளிமுத்து நூல்களைப் படிப்பதையே முக்கியப் பொழுதுபோக்காக கொண்டவர். அவரது வீட்டிலும் மிகப் பெரிய நூலகம் உள்ளது. 100க்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
ஜெயலலிதா அறிக்கை:


அ.தி.மு.க. அவைத் தலைவர் காளிமுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும் மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

முத்தமிழ் அறிஞர், மொழிப் போர்த்தியாகி, பேச்சிலும் மூச்சிலும் தமிழாக வாழ்ந்தவர், தலைமுறை பல கோடி கண்ட தமிழினத்தைச் சாடுவோருக்கு ஓங்காரக் காளியாக, தேனினும் இனிய தீந்தமிழ் தாய் மொழிப் பாவருக்கு ஓய்யார முத்தாக காளிமுத்து விளங்கினார்.

கண்ணான கழகத்துக் கொள்கைகளை தன் உயிர் மூச்சாய்க் கொண்டு மேடைகளில் முழங்கிய போர்வாள், அரசியலில் மொழிப் போராட்டக் காலந்தொட்டு லட்சியப் பய ணத்தில் மாறாத உறுதியோடு நடை போட்டவர்.

கழக அரசு பொறுப்பேற்றுக் கொண்ட நேரத்தில் அமைச்சுப் பணியிலும், பேரவைத்தலைவராகவும்தான் மேற்கொண்ட பணியினை செம்மையாக ஆற்றி தமிழ் கூறும் நல்லுலகிற்கு சேவை புரிந்துள்ளார்.

நம் கழகத்திற்கு வில்லாக வேலாகவும் அதன் வளர்ச்சிக்கு வித்தாக விதையாகவும், தனது வாழ் நாளின் இறுதி மூச்சு வரை கழகத்திற்காக அரும் பணியாற்றி வந்த அவரது இழப்பு கழகத்திற்கு ஈடு செய்ய இயலாததாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்றிலிருந்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும்.

8, 9, 10 ஆகிய 3 நாட்கள் கழக கொடிகள் அரை கம்பத்தில் பறக்க விடப்படும். 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.


கருணாநிதி இரங்கல்:

காளிமுத்துவின் மறைவுக்கு முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவப் பருவத்திலிருந்தே திராவிட இயக்கப் பற்றாளராக விளங்கியவர் காளிமுத்து. பின்னர் மொழிப் போரில் ஈடுபட்டு தியாகியாக மாறினார். எழுத்து பேச்சு ஆகியவற்றில் திறம் பெற்று விளங்கியவர்.

அமைச்சர், எம்.பி, சபாநாயகர் ஆகிய பதவிகளை ஏற்று செயல்பட்டவர். நட்புக்கும், நல்ல தோழமைக்கும் ஏற்றவராக அவர் விளங்கினார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த துயரத்தையும், இரங்கல்களையும் அவரது குடும்பத்திற்கு தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார்.


எம்.கிருஷ்ணசாமி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் எம்.கிருஷ்ணசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்து திடீர் மரணமடைந்த செய்தி அறிந்து பெரிதும் துயறுற்றேன். தமிழ்மொழி இலக்கியத்தை கற்றுணர்ந் தவர். அரசியலில் தான் சார்ந்துள்ள கட்சி யின் கருத்தை தெரிவிப்பதில் திறமையான பேச்சாளர். அமைச்சராகவும், சபாநாயக ராகவும் திறம்பட பணியாற்றியவர். அவரது மறைவு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது இழப்பால் துயருறும் குடும்பத்தினருக்கும், கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இல.கணேசன்
பிஜேபி மாநில தலைவர் இல. கணேசன் தனது இரங்கல் செய்தியில், முன்னாள் சபாநாயகர் கா. காளிமுத்து, ஒரு நல்ல பேச்சாளர், இலக்கியவாதி மட்டுமல்ல என்னுடைய நல்ல நண்பர். கட்சி எல்லையை கடந்து கண்ணியமான நட்பை அனைவரி டமும் பாராட்டியவர். சட்டசபையை கலகலப்பாக மட்டுமல்ல தமிழ் மணக்க நடத்தியவர். அவரின் இழப்பு அரசியல் உலகிற்கு மட்டுமல்லாமல் தமிழ் இலக்கிய உலகிற்கும் ஒரு பேரிழப்பு. அவரின் குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கி றேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மறைந்த அதிமுக அவைத் தலைவர் டாக்டர் காளிமுத்து அண்ணாவின் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு அரும்பணி ஆற்றியவர்.

எம்ஜிஆரால் நன்கு மதிக்கப் பட்டவர். அவரது அமைச்சர வையில் இடம் பெற்றவர். அமைச்ச ராகப் பொறுப்பேற்று தமிழ்நாட்டுக்குத் தொண்டு புரிந்தவர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், சட்டமன்ற தலைவராகவும் தொண்டாற்றியவர். மதுரை தந்த நல்லமுத்துக்களில் ஒருவராக இருந்தவர். அவரது மறைவு அவர் சார்ந்த கட்சிக்கு மட்டுமல் லாமல் தமிழ்நாட்டுக்கும், திராவிட இயக்கத்திற்கும் பேரிழப் பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், கட்சி தொண்டர் களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: தமிழுக்கு தொண்டு செய்த தூண்டா மணிவிளக்கு அனைந்து விட்டது. திராவிட இயக்கத்தின் சிங்கம் சாய்ந்து விட்டது. அருவி என தாவிவரும் தமிழ்ச் சொற்கள் கேட்பவரை காந்தமென ஈர்க்கும் மணிக்குரல் அவருக்கு நிகரான இன்னொரு சொற்பொழிவாளரை இதுகாரும் நான் கண்டதில்லை. இனி காணப்போவதும் இல்லை.

என் உயிர் நண்பனை இழந்தேன். தமிழகம் ஒரு உத்தம தமிழ் தொண்டனை இழந்தது. அதிமுக பகைக்கு அஞ்சாத ஒரு சேனாதிபதியை இழந்தது. அன்பால் அரவணைத்து பாதுகாத்த தலைவனை அவரது குடும்பம் இழந்தது.

சு.திருநாவுக்கரசர்
முன்னாள் மத்திய அமைச்சர் சு.திருநாவுக்கரசர் தனது இரங்கல் செய்தியில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத் திக்கொண்ட எம்ஜிஆர் காலத்தில் அமைச்சராகவும், பிறகு சபாநாயகராகவும் சிறப்பாக பணியாற்றிய அண்ணன் காளிமுத்து சிறந்த பேச்சாளர், மிகச்சிறந்த இலக்கியவாதி. அனைத்துக்கும் மேலாக நல்ல மனிதர். நயத்தகு நாகரிகம் நிறைந்தவர். சிறந்த பண்பாளர்.

அவரது இழப்பு தமிழ்த்தாய்க்கு மிகப்பெரிய இழப் பாகும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதா பத்தை தெரிவித்துக்கொள்கிறேன். தி.க. தலைவர் கி.வீரமணி, அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசன் ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Read More...

Tuesday, November 07, 2006

சதாம் அரசியல்உங்க வாக்கை சைடில போடுங்க :-)

Read More...

'தட்'ஸ் விஜயகாந்த்

....விஜயகாந்த் அறிமுகமாகும் காட்சியில் அவரைச் சுடுகிறான் ஒரு ரெளடி. அவரின் வயிற்றில் உள்ள தாம்பாளத்தில் படும் தோட்டா, ரிவர்ஸ் எடுத்து சுட்டவனையே வீழ்த்துகிறது. இந்தளவுக்கு ஆன பின், ஸ்ரீரங்கத்தையே ராமேஸ்வரம் என்று பேரரசு காட்டுவது பெரிய உறுத்தலா என்ன-?

- (தர்மபுரி) விகடன் விமர்சனம்

கீழே உள்ள படத்தை பார்த்து யாரும் சிரிக்க கூடாது. பாஸ்டன் பாலா இப்போது உங்களுக்கு சந்தோஷம் தானே :-).

குண்டு பட்ட இடத்தில் சட்டை கூட ஓட்டையாக வில்லை


Read More...

Monday, November 06, 2006

அதிமுகவில் இருந்து சரத்குமார் விலகினார்

அதிமுகவில் இருந்து நடிகர் சரத்குமார் விலகினார். கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுகவில் இருந்து அதிமுகவிற்கு சென்ற நடிகர் சரத்குமார், தற்போது அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். நடிகர் சங்கத்தில் வேலைப்பளு அதிகமாக உள்ளதால் அதிமுகவில் இருந்து விலகியதாக அவர் கூறியுள்ளார்.


அறிக்கை :

நான் என்னுடைய அரசியல் வாழ்வில் சில தேவையற்ற பிரச்னைகளின் விளைவால் கஷ்டமான முடிவுகளை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டேன். நான் திரையுலகில் இப்போதுள்ள நிலைக்கு உயர எனது ரசிகர்கள் மற்றும் தமிழக மக்களின் தொடர் ஆதரவே காரணம். நான் எனது திரை வாழ்வில்கூட சமுதாய நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பங்களிக்கவே விரும்பினேன். வறுமை, வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்கவும், மத நல்லிணக்கத்திற்காகவும் பாடுபடும்படி எனது ரசிகர்களை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது திரையுலக வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும் எனது மனசாட்சிப்படியே நான் முடிவுகளை எடுத்துள்ளேன். நான் கடந்த சட்டசபை தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கும், அதன் கூட்டணி வேட்பாளர்களுக்கும் பிரசாரம் செய்தேன். நான் எனது பணிகளை நேர்மையுடனும், திருப்தியுடனும் செய்து முடித்துள்ளேன். தற்போது எனது திரைப்பணிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைமைப் பொறுப்புக்கும் எனது முழுநேர உழைப்பு தேவைப்படுகிறது. இந்த சூழ்நிலையில் எனது கட்சிப் பொறுப்பை ராஜினாமா செய்து கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பி விட்டேன்.

நான் எனது தொழிலில் முழு கவனம் செலுத்தி மேலும் முன்னேற முடிவெடுத்துள்ளேன். திரைத்துறையின் நலனுக்காகவும் தமிழக மக்களின் நலனுக்காகவும் உழைக்க முடிவு செய்துள்ளேன்


பிகு1: நடிகர் சரத்குமார் தற்போது ஹாங்காங்கில் உள்ளார். அங்கிருந்தபடி இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் வரும் 12ம் தேதி சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு தனது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்களை அழைத்துப் பேசி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்வார் என்று தெரிகிறது.

பிகு2: அதிமுகவில் சேர்ந்தது: ஏப்ரல் 17, விலகியது நவம்பர் 6 ( மொத்தம் 203 நாட்கள் )

Update 7-Nov-06

அதிமுகவிலிருந்து விலகியதைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து அவர் நாடார் அமைப்பு களுடனும், முக்கிய பிரமுகர்களு டனும் கலந்து பேசி வருவதாக தெரிகிறது. விரைவில் அவர் ஒரு புதிய கட்சியை துவக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் காமராஜருக்கென்று ஒரு தனி மரியாதை இருப்பதால் அவருடைய பெயரில் கட்சியை துவக்குவது என்றும் அவர் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. வருகிற 12ந் தேதி ஹாங்காங்கில் இருந்து திரும்பியதும் ஆதரவாளர் களுடன் கலந்து பேசி இது குறித்து இறுதி முடிவெடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

Read More...