பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, October 31, 2006

சென்செக்ஸ் 13,000 தொட்டது.

சென்செக்ஸ் புள்ளிகள் தொடர்ந்து உயரத் துவங்கியுள்ளது. நேற்றைய நிலவரப்படி 13,024 ஆக இருந்த சென்செக்ஸ். இன்று காலை 51 புள்ளிகள் உயர்ந்து 13,075 ஆக இருந்தது.

30-நிறுவனப் பங்குகள் அடிப்படையில் கணிக்கப்படும் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் (சென்செக்ஸ்), முதல் முறையாக 13 ஆயிரம் புள்ளிகளைக் கடந்து நேற்று திங்கள்கிழமை புதிய சாதனை படைத்தது.

50-நிறுவனப் பங்குகள் அடிப்படையில் கணிக்கப்படும் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நேற்றைய நிலவரப்படி 29.75 புள்ளிகள் அதிகரித்து 3,769.10 புள்ளிகளாக உயர்ந்திருந்தது. இன்று மேலும் 6.85 புள்ளிகள் அதிகரித்து 3,774.95 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.

1000 mark, July 25, 1990
2000 mark, January 15, 1992
3000 mark, February 29, 1992
4000 mark, March 30, 1992
5000 mark, October 8, 1999
6000 mark, February 11, 2000
7000 mark, June 20, 2005
8000 mark, September 8, 2005
9000 mark, November 28, 2005
10,000 mark, February 7, 2006
11,000 mark, March 27, 2006
12,000 mark, April 20, 2006
13,000 mark, October 30, 2006

Read More...

தலித் அரசியல்

ராமதாஸ் பேச்சு

நாங்கள் சட்டசபை தலைவர் 2 துணை மேயர் பதவி கேட்டு ஜி.கே.மணி தி.மு.க.விடம் கடிதம் கொடுத்தார். அதற்கு எந்த பலனும் இல்லை. உடனே நான் வருத்தப்பட்டு கடிதம் எழுதினேன். இதைத் தொடர்ந்து சென்னை துணை மேயர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த வேட்பாளரைத்தான் போட வேண்டும் என்று கலைஞர் சொன்னார்.

யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று எங்கள் கட்சிக்கு அவர் யோசனை சொல்கிறார்கள். எங்கள் கட்சியில் அடி-உதைப்பட்டு சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க நினைத்தோம். அப்படியானால் உங்களுக்கு துணை மேயர் பதவி கிடையாது என்று கூறி விட்டனர். இவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும். பதவி கேட்கவில்லை. துணை தலைவர் பதவியையும் கேட்கவில்லை. சாதாரண துணை மேயர் பதவிதான் கேட்டோம் அதையும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.


ஆற்காடு வீராசாமி அறிக்கை:
சென்னை மாநகராட்சியின் துணைமேயர் பதவி வழங்குவதாக கூறிவிட்டு, பிறகு தி.மு.க. கை காட்டுபவரை தான் ஆக்க வேண்டுமென்று தி.மு.க. நிபந்தனை விதித்ததாக ராமதாஸ் கூறியிருக்கிறார். சென்னையில் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த காலத்திலிருந்து துணைமேயர் பதவிக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் துணை மேயர் பதவி வழங்குவது என்ற முடிவின்படி, தற்போதும் துணை மேயராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சத்தியபாமா, தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு, அது பத்திரிகைகளிலும் வெளிவந்த பிறகு, பா.ம.க.விற்கு துணை மேயர் பதவி வழங்கவில்லை என்று பா.ம.க. சார்பில் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அதன்பின்னர் தான், முதல்-அமைச்சர் கருணாநிதியே, பா.ம.க.வின் மனம் வருத்தப்படச் செய்யக்கூடாது என்பதற்காகவும், அதே நேரம் தாழ்த்தப்பட்ட மக்களது மனமும் புண்படக் கூடாது என்பதற்காகவும், ஏற்கனவே பத்திரிகைகள் வாயிலாக அறிவித்துவிட்ட நிலையிலும், சென்னை துணைமேயராக பா.ம.க. சார்பில் ஒருவரை நிறுத்திக்கொள்ளலாம் என்றும், பா.ம.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சாந்தலட்சுமி என்ற பட்டதாரி பெண்மணியே இருப்பதாகவும், அவரையே பா.ம.க. சார்பில் துணைமேயர் வேட்பாளராக நிறுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தோம். இதனை பா.ம.க. ஏற்கவில்லையே ஏன்?


கலைஞர் பதில்

இன்னொரு கட்சியில் அதுவும் குறிப்பாகக் கூட்டணிக் கட்சியில் சென்னை துணை மேயருக்கான வேட்பாளர் யார் என்பதை தி.மு.க. தலைவரே நிர்ணயிப்பதாப என்று பா.ம.க. நிறுவனத் தலைவர் டாக்டர் அய்யா ராமதாஸ் அவர்கள் கேட்டுள்ள கேள்வி மிகவும் நியாயமானது தான்.

அப்படி தோழமைக் கட்சி ஒன்றின் மீது நான் அதிகாரம் செலுத்திடவோ, ஒரு பதவி பெற்றுத் தரவோ உரிமை இருப்பதாக எண்ணி, அந்த முயற்சியில் நான் ஈடுபட்டிருந்தால், அது தவறு தான். ஆனால் நடந்தது என்ன என்பதை நான் விளக்கினால், மற்றொரு கட்சியின் வேட்பா ளர் பிரச்சினையில் நான் தலையிட்டதாகக் கூறப்படும் பழிச்சொல் நீங்கும் என்று நம்புகிறேன்.

சென்னை துணை மேயர் பதவிக்கு பா.ம.க. வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டுமென்று டாக்டர் அய்யா எனக்கு கடிதம் அனுப்பினார்.

அந்தப் பதவிக்கு தி.மு.க. சார்பில் சத்யபாபா என்ற ஒரு `தலித்' பெண்மணியை சென்னையிலே உள்ள மக்கள் தொகையில் கணிச மான பகுதியினர் ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள் என்ற அடிப்படை யில் ஏற்கனவே பத்திரிகை களில் அறிவித்து விட்ட காரணத்தால் அவரைத் திரும்பப் பெறுவதாகச் சொல்லும் போது, அந்த இடத்தில் வேறொரு "தலித்'' பெண்மணியை பா.ம.க. சார்பில் நிறுத்துவது தான் பொருத்தமாக இருக்கும் என்றும் பிரச்சினையும் வராது என்றும் யோசனை சொன்னேன்.

அதற்கு அவர்கள் தரப்பிலிருந்து அப்படியானால் துணை மேயர் பதவியே வேண்டாமென்ற பதில்தான் வந்தது. நடந்தது இப்படியிருக்க நான் ஒரு வேட்பாளரை பா.ம.க. மீது திணித்ததாக பழி கூறுவதில் ஒரு சிறிதளவும் உண்மை இல்லையென்று தெரிவித்துக் கொள்கிறேன்.


[ பழைய படம், புதிய கார்ட்டூன் :-) ]

Read More...

தேன் கூட்டை கலைப்பதா?

* பச்சை துரோகம் என்று குற்றம் சாட்டுவது கூட்டணி தர்மத்துக்கு உரியதா?
* தேன் கூட்டையே கலைப்பதா?
- அமைச்சர் ஆற்காடு வீராசாமி அறிக்கை

உள்ளாட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்த நேரத்திலேயே பா.ம.க. சார்பில் இரண்டு அறிக்கைகள் ஒன்றன்பின் ஒன்றாக வெளி வந்தது கண்டு, அதற்கு விளக்கமளிக்க வேண்டுமென்ற நல்ல எண்ணத்தோடு தி.மு.க. தலைவர் முதல்-அமைச்சர் கருணாநிதி நீண்டதோர் அறிக்கை விடுத்த பின்னரும், பா.ம.க.வின் நிறுவனத்தலைவர் ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்து தி.மு.க. துரோகம் செய்துவிட்டது என்றும், தி.மு.க.வில் தலைவர், பேராசிரியர் தவிர யாரும் சரியில்லை என்றும் கூறியுள்ள நிலையில், அறிக்கை போர் நடத்திட தயாராக இல்லை எனினும் ராமதாஸ் எழுப்பிய கேள்விகளுக்கு முறையான பதிலைக் கூறிட வேண்டுமென்பதால் தி.மு.க. பொருளாளர் என்ற முறையில் இந்த அறிக்கையினை வெளியிட விரும்புகின்றேன்.

உள்ளாட்சித் தேர்தல்களுக்காக, தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றபோது, பா.ம.க.வுடன் தான் 7 நாட்களுக்கு மேல் இரவென்றும், பகலென்றும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றது என்பதை என்னுடன் பேச்சுவார்த்தை நடத்திய கோ.க.மணி நன்கறிவார். பேச்சுவார்த்தை முடிவுற்று செல்கின்ற நேரத்தில் கூட முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் கோ.க.மணி திருப்தியுடன் செல்வதாகக் கூறிவிட்டுத் தான் சென்றார்.

சென்னை துணைமேயர்

சென்னை மாநகராட்சியின் துணைமேயர் பதவி வழங்குவதாக கூறிவிட்டு, பிறகு தி.மு.க. கை காட்டுபவரை தான் ஆக்க வேண்டுமென்று தி.மு.க. நிபந்தனை விதித்ததாக ராமதாஸ் கூறியிருக்கிறார். சென்னையில் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்த காலத்திலிருந்து துணைமேயர் பதவிக்கு, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவருக்குத் தான் துணை மேயர் பதவி வழங்குவது என்ற முடிவின்படி, தற்போதும் துணை மேயராக தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சத்தியபாமா, தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டு, அது பத்திரிகைகளிலும் வெளிவந்த பிறகு, பா.ம.க.விற்கு துணை மேயர் பதவி வழங்கவில்லை என்று பா.ம.க. சார்பில் கடிதம் மூலம் வலியுறுத்தப்பட்டது.

அதன்பின்னர் தான், முதல்-அமைச்சர் கருணாநிதியே, பா.ம.க.வின் மனம் வருத்தப்படச் செய்யக்கூடாது என்பதற்காகவும், அதே நேரம் தாழ்த்தப்பட்ட மக்களது மனமும் புண்படக் கூடாது என்பதற்காகவும், ஏற்கனவே பத்திரிகைகள் வாயிலாக அறிவித்துவிட்ட நிலையிலும், சென்னை துணைமேயராக பா.ம.க. சார்பில் ஒருவரை நிறுத்திக்கொள்ளலாம் என்றும், பா.ம.க. சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த சாந்தலட்சுமி என்ற பட்டதாரி பெண்மணியே இருப்பதாகவும், அவரையே பா.ம.க. சார்பில் துணைமேயர் வேட்பாளராக நிறுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தோம். இதனை பா.ம.க. ஏற்கவில்லையே ஏன்?

4 இடங்களில் பா.ம.க. வெற்றி

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மேயர் பதவிக்கு அடுத்து மாவட்ட ஊராட்சித்தலைவர் பதவி தான் பெரியது. அந்தப் பதவிக்கு மொத்தம் 29 இடங்களில் பா.ம.க.விற்கு 5 இடங்கள் வழங்கப்பட்டு, அதிலே 4 இடங்களில் பா.ம.க. வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றால் இது தான் தி.மு.க.வின் பச்சைத் துரோகமா?

விழுப்புரம் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களில் தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் 18 பேர்; பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் 8 பேர். தி.மு.க.வைச் சேர்ந்த 18 பேரும் வாக்களித்துத் தான் பா.ம.க. வேட்பாளர் அங்கே மாவட்ட ஊராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். இது தான் பச்சைத் துரோகமா?

கடலூர்-சேலம்

கடலூர் மாவட்டத்தில் 12 பேர் தி.மு.க.விலிருந்து மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பா.ம.க.விலிருந்து 5 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்ற போதிலும், கூட்டணி கட்டுப்பாட்டுடன் அங்கே நடந்து கொண்டு மாவட்ட ஊராட்சித் தலைவராக பா.ம.க.வைச் சேர்ந்த ஒருவர் வெற்றி பெற உதவி செய்திருக்கிறோம். இது தான் பச்சைத் துரோகமா?

சேலம் மாவட்டத்தில் 15 பேர் தி.மு.க. சார்பில் மாவட்ட ஊராட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தும், ஐந்து பேர் மட்டுமே பா.ம.க. சார்பில் வெற்றி பெற்றிருந்தும், அந்தக் கட்சியின் சார்பில் மாவட்ட ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உதவி செய்தது தான் தி.மு.க. அதற்கு கைமாறு தான் தி.மு.க. பச்சைத் துரோகம் செய்து விட்டது என்ற பட்டமா?

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 பேர் தி.மு.க. சார்பில் வெற்றி பெற்றிருந்தார்கள். காங்கிரஸ் சார்பில் 4 பேரும், பா.ம.க. சார்பில் ஒரே ஒருவரும் தான் வெற்றி பெற்றிருந்த நிலையிலும், அந்த மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி அந்தக் கட்சிக்கே வேண்டுமென்று வலியுறுத்தியதின் பேரில் அவ்வாறே வழங்க முன்வந்தோம். ஆனாலும் அங்கே பா.ம.க. தோற்றுவிட்டது என்பதால் ஒட்டுமொத்த தி.மு.க.வும் பச்சைத் துரோகம் செய்து விட்டதாக கூறுவதா? அதே காஞ்சீபுரம் நகராட்சியிலும், காஞ்சீபுரம் ஊராட்சி ஒன்றியத்திலும் தி.மு.க. வெற்றி பெற முடியாத நிலைமை ஏற்படுத்தப்பட்டதே, அதற்கு பா.ம.க. வின் பச்சைத் துரோகம் என்று நாங்கள் கூறினால், அது கூட்டணி தர்மமாகி விடுமா?

நகர் மன்றங்கள் என்ற அளவில் எடுத்துக் கொண்டால் கூட, மாதவரம், அம்பத்தூர், விருத்தாசலம், திண்டிவனம், வந்தவாசி, தாராபுரம், மறைமலைநகர் ஆகிய 7 நகராட்சி மன்றங்கள் பா.ம.க.விற்கு கிடைத்துள்ளன.

மாதவரம் நகராட்சி

மாதவரம் நகராட்சியில் மொத்தம் 30 உறுப்பினர்கள். இதில் தி.மு.க. 12 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், பா.ம.க. 1 இடத்திலும் வெற்றி பெற்ற நிலையில் அங்கே பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற்றிருக்கிறார். இது தான் பச்சைத் துரோகமா?

தாராபுரம் நகராட்சியில் தி.மு.க. உறுப்பினர்கள் 12 பேர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் 4 பேர். பா.ம.க.வைச் சேர்ந்தவர் ஒரேயொரு உறுப்பினர் தான். அவரை நகர்மன்றத் தலைவராகக் தி.மு.க.வை சேர்ந்த உறுப்பினர்கள் உதவி செய்தார்களே தவிர, பச்சைத் துரோகமோ, அயோக்கியத்தனமோ செய்யவில்லை.

அம்பத்தூர் நகராட்சி

அம்பத்தூர் நகராட்சியில் தி.மு.க.விற்கு 15 உறுப்பினர்கள்; பா.ம.க. 7 பேர். அங்கே பா.ம.க. வெற்றி பெற தி.மு.க.வின் 15 உறுப்பினர்களும் வாக்களித்திருக்கிறார்கள். இது தான் பச்சைத் துரோகமா?

விருத்தாசலம் நகராட்சியில் தி.மு.க. 12 பேர்; பா.ம.க. 5 பேர். அங்கே பா.ம.க. வேட்பாளர் வெற்றி பெற தி.மு.க. தான் உதவி செய்தது. இது தான் பச்சைத் துரோகமா?

திண்டிவனம் நகராட்சியில் தி.மு.க. 13 பேர்; பா.ம.க. 7 பேர். அங்கே பா.ம.க. வேட்பாளர், அவரும் தி.மு.க.விலே இருந்தவர், உறுப்பினர் தேர்தலின் போது பா.ம.க.விற்கு எதிராக நின்று வெற்றி பெற்றவர். அவரை பா.ம.க.வில் சேர்த்துக் கொண்டு, தலைவர் பதவிக்கு பா.ம.க. சார்பில் நிறுத்திய போதிலும், தி.மு.க.வில் உள்ள 13 பேர் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். இதுதான் பச்சைத் துரோகமா?

வந்தவாசி நகராட்சியில் தி.மு.க. 10 பேர், பா.ம.க. 3 பேர். அஙëகும் பா.ம.க. தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உதவிதான் செய்திருக்கிறோம். பச்சைத் துரோகம் செய்துவிடவில்லை.

தனது பேட்டியில் அவனியாபுரம் மூன்றாம் நிலை நகராட்சித் தலைவர் பதவியை பா.ம.க.விற்கு வழங்கவில்லை என்றும் டாக்டர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் குறை கூறியிருக்கிறார். அவனியாபுரத்தில் தி.மு.க. உறுப்பினர்கள் 8 பேர், காங்கிரஸ் உறுப்பினர்கள் 2 பேர், பா.ம.க. உறுப்பினர் ஒருவர் மட்டும்தான். அதுபோலவே ஜோலார்பேட்டை மூன்றாம் நிலை நகராட்சியில் தி.மு.க. 7 பேர், காங்கிரஸ் 3 பேர், அங்கே பா.ம.க.வை தோற்கடித்துவிட்டார்கள் என்றால் யார் என்ன செய்ய முடியும்?

கூட்டணி கடமையாகாது

தேர்தல், கூட்டணி என்று வருகிற நேரத்தில் தி.மு.க. பல இடங்களில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்த போதிலும், கழகக் கட்டுப்பாட்டிற்கு இணங்கித்தான் தோழமைக் கட்சி உறுப்பினர்களை பல இடங்களில் வெற்றி பெற செய்திருக்கின்றது. கழகக் கட்டுப்பாட்டை மீறியவர்கள் மீதெல்லாம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.

மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் மீதே நடவடிக்கை எடுக்க முன்வந்துள்ளது. இதற்கு மேலும் பச்சைத் துரோகம், யாரும் சரியாக இல்லை என்றெல்லாம் குற்றம் சுமத்திக் கொண்டே போனால் அது தோழமைக்குச் செய்கின்ற கடமையாகாது.

இது மாத்திரமல்ல; ஊராட்சி ஒன்றியத் தலைவர்களாக பா.ம.க.வைச் சேர்ந்தவர்கள் 28 பேரும், பேரூராட்சி மன்றத் தலைவர்களாக 14 பேரும், இன்றைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு வருவதற்கு காரணமாக இருந்தவர்கள் இந்தக் கூட்டணியிலே உள்ளவர்கள் தான் எனëகிறபோது, அதை பச்சைத் துரோகம் என்று செய்தியாளர்களிடம் குற்றம்சாட்டுவது தான் கூட்டணி தர்மத்திற்கு உரியதா?

தேன் கூட்டையே கலைப்பதா?

பெண்ணாத்தூர் பேரூராட்சியில் தி.மு.க.விற்கு 2 உறுப்பினர்கள், பா.ம.க.விற்கு 2 உறுப்பினர்கள், அ.தி.மு.க.விற்கு 5 உறுப்பினர்கள், சுயேச்சை 6 உறுப்பினர்கள். இங்கே பா.ம.க.விற்கு தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் தி.மு.க. எனëன செய்திட இயலும்? தனது 2 வாக்குகளைத் தான் அளிக்க முடியுமே தவிர, சுயேச்சை உறுப்பினர்களை எல்லாம் பா.ம.க.விற்கு வாக்களிக்கச் சொல்லி மிரட்டவா முடியும்?

கழகத் தலைவர் கருணாநிதி கூறியிருப்பதைப் போல இது போன்றதொரு தமிழகம் தழுவிய மிகப் பெரிய தேர்தலில் அங்கொனëறும் இங்கொன்றுமாக சில தவறுகள் எல்லா கட்சியிலும் நேரிடுவது இயல்புதான். அதற்காக ஒட்டுமொத்த தேன் கூட்டையே கலைப்பது போன்ற செயலில் ஈடுபடுவது சரியாகிவிடுமா?

ஆற்காடு வீராசாமி பேட்டி :

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது பற்றி பா.ம.க.குற்றச்சாட்டு கூறியுள்ளதே?

பதில்:- உள்ளாட்சி தேர்தலின் போது இட பங்கீடு குறித்து பாட்டாளி மக்கள் கட்சியுடன் 7 நாட்களுக்கு மேல் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தை முடிந்து திருப்திகரமாக இருந்தாக பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ஜி.கே.மணி கூறிவிட்டு சென்றார்.

கேள்வி:- தங்களுக்கு ஒதுக்கப்பட்டதில் 50 சதவீத இடங்களில் திமுக தங்களை தோற்கடித்து விட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:- பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 5 மாவட்ட ஊராட்சிகளில் 4-ல் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இது எப்படி 50 சதவீத தோல்வி ஆகும்? மாவட்ட ஊராட்சித் தலைவர் என்பது பெரிய பதவி. மாவட்டத்திற்கே அவர்தான் தலைவர். அந்தப் பொறுப்புகளில் 5 இடங்களைக் கொடுத்தோம். இது எப்படி 50 சதவீதம் ஆகும்?


கேள்வி:- பா.ம.க.விற்கு தி.மு.க. பச்சை துரோகம் செய்துவிட்டதாக டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளாரே?

பதில்:- தி.மு.க. யாருக்கும் துரோகம் செய்யவில்லை. அதுவும் பச்சை துரோகம் செய்ய வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்துக் கூட பார்க்கவில்லை, செய்யவுமில்லை. ஆங்காங்கே சில இடங்களில் எல்லாக் கட்சிகளிலும் சில தவறுகள் நடந்துள்ளன. அந்தத் தவறுகளுக்கெல்லாம் எல்லாக் கட்சிகளும் துரோகம் செய்திருக்கிறது என்று கூற தி.மு.க. தயாராக இல்லை.


கேள்வி:- பா.ம.க. மட்டுமல்லாமல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரும் கூட புகார் கூறியுள்ளார்களே?

பதில்:- அவர்கள் ஒரு சில குறைகளை தான் கூறியுள்ளார்கள். இது போன்று துரோகம் என்றோ, பச்சை துரோகம் என்றோ கூறவில்லை. இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் "தி.மு.க.வின் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் மிகச் சிறப்பாக நடந்து கொண்டார்கள். ஆனால், கீழ் மட்டத்திலே உள்ளவர்களால் ஒரு சில இடங்களில் நாங்கள் வெற்றி பெற முடியவில்லை'' என்று கூறியுள்ளார். மாநகராட்சி, மாவட்ட பஞ்சாயத்து அளவில் சரியாகத்தான் இருந்தது. கவுன்சிலர்கள் அளவில் தான் வெற்றி பெற முடியவில்லை.


கேள்வி: ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி எந்தெந்த கட்சிகளுக்கு எவ்வளவு சதவீதம் ஒதுக்குவதாக சொல்லி இருந்தீர்கள்.

பதில்:- சதவீதம் என்ற அடிப்படையில் அல்ல. மொத்தத்தில் ஒவ்வொரு கட்சிக்கும் எவ்வளவு இடம் என்று ஒதுக்கீடு செய்து கொண்டோம். மேயர் என்றால் காங்கிரசுக்கு 2 இடங்கள் என்றோம். அதை ஒதுக்கீடு செய்து விட்டோம். அதுபோல் மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி என்றால் காங்கிரசுக்கு 7, பா.ம.க.வுக்கு 5, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 3, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 என்று ஒதுக்கீடு செய்தோம்.

ஒதுக்கீடு செய்த இடத்தில் அந்தக் கட்சி கவுன்சிலர்கள் வெற்றி பெறவில்லை. அதனால் பா.ம.க.வுக்கு 5, காங்கிரசுக்கு 5, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு 1, இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 2 கேட்டார்கள். ஆனால் இவ்விரு இடங்களில் ஒரு இடத்தில் 28 கவுன்சிலர்களில் ஒரே ஒரு கவுன்சிலர்தான் வெற்றி பெற்றிருந்தார். அந்த இடத்தில் தி.மு.க.வும் வெற்றி பெறவில்லை. காங்கிரசும் வெற்றி பெற முடியவில்லை. போட்டி வேட்பாளர் ஒருவர் அந்த இடத்தில் வெற்றி பெற்று இருக்கிறார்.


கேள்வி:- சென்னை மாநகராட்சி துணை மேயர் நியமனத்தில் பா.ம.க. கவுன்சிலர்களில் நீங்கள் சொன்ன கவுன்சிலரைத்தான் நிறுத்த வேண்டும் என்று தி.மு.க. நிபந்தனை விதித்ததாக டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே?

பதில்:- நாங்கள் அப்படிச் சொல்லவில்லை. பா.ம.க.வுக்கு ஒரு துணை மேயர் பதவி வேண்டும் என்று கேட்டார்கள். மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில் இருந்து சென்னை மாநகராட்சியின் துணை மேயராக தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணைத்தான் தேர்ந்தெடுத்து இருக்கிறோம். ஏனென்றால் சென்னையில் 28 சதவீதம் தாழ்த்தப்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். அவர்களை மகிழ்விப்பதற்காக 1996-ம் ஆண்டு துணை மேயராக தாழ்த்தப்பட்ட இனத்தை சேர்ந்த பெண்ணை தேர்ந்தெடுத்தோம். அந்த வகையில் சென்னை துணை மேயராக துறைமுகம் பகுதியை சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன பெண்ணை அறிமுகம் செய்தோம்.

உடனே, தங்களுக்கு துணை மேயர் பதவி வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடிதம் எழுதினார். அந்தக் கடிதத்தை பார்த்த உடனே தி.மு.க. தலைவர் கருணாநிதி ஒரு நிமிடம் கூட யோசிக்காமல், பா.ம.க.வுக்கு துணை மேயர் பதவி கொடுப்பது என்று முடிவெடுத்தார். அப்படி கொடுக்கப்படுகின்ற துணை மேயர் பா.ம.க.வைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட இன பெண்ணாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடத்தில் கூறினோம். அதற்காக 45-வது வார்டில் அவர்கள் கட்சி சார்பில் வெற்றி பெற்ற எம்.காம். படித்த தாழ்த்தப்பட்ட பெண்ணை வேட்பாளராக அறிவியுங்கள் என்று சொன்னோம். அதை அவர்கள் ஏற்கவில்லை.


கேள்வி:- இப்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்க்க தோழமை கட்சியினர் கூட்டம் கூட்டப்படுமா?

பதில்:- தேவைபடும் போது தலைவர் கலைஞர் கூட்டுவார்.

கேள்வி:- மற்ற கட்சிகளுக்கு இடங்களை பகிர்ந்தளித்த குழுவின் தலைவர் என்ற முறையில், இடப்பகிர்வில் கலந்து கொண்டவர்களை நீங்கள் அழைத்துப் பேசுவீர்களா?

பதில்:- தேர்தல் முடிவுகள் எல்லாம் வெளிவந்து விட்டன. எந்தெந்த கட்சியில் யார்யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்ற பட்டியலும் எல்லா பத்திரிகைகளிலும் வெளிவந்திருக்கிறது. மறுபடியும் என்ன பேச்சு வார்த்தை நடத்துவது?

இதில் வேடிக்கை என்னவென்றால், டாக்டர் ராமதாஸ் கூறி இருப்பதைப் போல, தி.மு.க. திட்டமிட்டு துரோகம் அல்லது பச்சைத் துரோகம் செய்யவில்லை. ஒரு சில இடங்களில் தவறு நடந்துள்ளது. உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளியாக தொடங்கியதும் கலைஞர், நான் மற்றும் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் செய்திகளைக் கேட்டுக் கொண்டு இருந்தோம். நம்முடைய தோழமைக் கட்சி வேட்பாளர்கள் சில இடங்களில் தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு கலைஞர் ஆத்திரப்பட்டார்.

தலைமைக் கழகத்திற்கு தொடர்பு கொண்டு, யார் யார் அப்படி தவறு செய்தார்களோ அவர்களை உடனடியாக கட்சியில் இருந்து நீக்கி வைக்கும்படி அறிக்கை விடச் சொன்னார். தலைமைக் கழகமும் அறிக்கை வெளியிட்டது. டாக்டர் ராமதாஸ் அறிக்கை வெளியிடுவதற்கு முன்பே தி.மு.க.வினர் 18 பேர், ஒன்றிய, நகரச் செயலாளர்கள், போட்டி வேட்பாளர்கள், அதற்கு உடந்தையாக இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அத்தனை பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தவறு செய்தவர்களை தி.மு.க. தண்டிக்க முடியுமே தவிர, வேறு என்ன செய்ய முடியும்? இந்தத் தவறு எல்லாக் கட்சியிலும் நடந்திருக்கிறது. தி.மு.க. வில் மட்டும் தவறு நடக்கவில்லை.

Read More...

Monday, October 30, 2006

திமுக பச்சை துரோகம் - எதிர்க்கட்சியாக செயல்படுவோம் - ராமதாஸ்

* கூட்டணிக்கு தி.மு.க. துரோகம் - எதிர்க்கட்சியாக செயல்படுவோம்: டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு.

* அதிமுகவில் ஜெயலலிதா, சசிகலாவைத் தவிர அக்கட்சியில் அனைவருமே நல்லவர்கள். ஆனால் திமுகவில் கருணாநிதி, அன்பழகன் ஆகியோரை தவிர அனைவருமே மோசமானவர்கள்தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அறிக்கைக்கான பதில் கூட்டம் அல்ல. இது என்ன நடந்தது என்ற உண்மையை இரு கட்சித் தொண்டர்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இன்று நான் உங்களை சந்திக்கிறேன்.

கருணாநிதி தன் தோழமைக் கட்சியான பா.ம.வுக்கு, தி.மு.க. துரோகம் செய்ய நினைக்கவில்லை என்று கூறி உள்ளார். அப்படி நினைத்தால் 47 இடங்களில் 31 இடங்களில் பா.ம.க. வெற்றி பெற்று இருக்குமா? என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.

பா.ம.க.வுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த பேரூராட்சிகள் மொத்தம் 70. இதில் ஒரு பா.ம.க. கவுன்சிலரை கூட வெற்றி பெற விடாமல் பார்த்துக் கொள்ளப்பட்ட இடங்கள் 11. நாங்கள் போட்டியிட்ட இடங்கள் 28 இதில் வெற்றி பெற்றது 16. தோற்கடிக்கப்பட்ட இடங்கள் 12.

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட நகரசபைகள் 18. இதில் பா.ம.க. கவுன்சிலர் வெற்றி பெறக் கூடாது என்று 2 இடங்களில் பார்க்கப்பட்டது. நாங்கள் போட்டியிட்ட இடங்கள் 14. இதில் வென்ற இடங்கள் 7. நாங்கள் தோற்கடிக்கப்பட்ட இடங்கள் 7.

அங்கொன்றும், இங்கொன்றுமாக சில தவறுகள் நடந்து இருக்கலாம் என்று கருணாநிதி சொல்கிறார். ஆனால் நகரசபையில் 50 சதவீதம் தவறு நடந்துள்ளது. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் 60. இதில் ஒரு இடத்தில் கூட பா.ம.க. ஜெயிக்கக் கூடாது என்று 11 இடங்களில் பார்த்துக் கொள்ளப்பட்டது.

நாங்கள் போட்டியிட்டது 46. இதில் வெற்றி பெற்றது 29 இடங்கள். தோற்கடிக்கப்பட்ட இடங்கள் 17. எங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட பஞ்சாயத்து இடங்கள் 5. இதில் தி.மு.க.வினரால் தோல்வி அடைந்த இடம் ஒன்று.

நிலைமை இப்படி இருக்கும் போது அங்கொன்றும், இங்கொன்றுமாக தவறு நடந்தது என்று சொல்வதை எப்படி இலகுவாக, எளிதாக எடுத்துக் கொள்ள முடியும்?

எங்கள் மீது கருணாநிதி புகார் கூறி உள்ளார். காஞ்சீபுரத்தில் எங்கள் கட்சி உறுப்பினர் போட்டியிட்ட போது ஏ.கே.மூர்த்தி எம்.பி. தலையிட்டு அவரை நீக்கி உள்ளார்.

காஞ்சீபுரம் நகரசபையில் உள்கட்சி சண்டையால் தி.மு.க. தோற்றுப்போனது. எங்கள் கட்சி கவுன்சிலர்கள் 4 பேரும் வாக்களித்து உள்ளனர். தி.மு.க. செய்தது கூட்டணி தர்மத்தை மீறியது.

கலைஞரையும், பேராசிரியரையும் தவிர அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் கூட்டணி தர்மத்தை கிஞ்சித்தும் மதிக்கவில்லை. வேலூர் மாவட்டத்தில் காந்தி என்ற மாவட்ட செயலாளர் பா.ம.க.வை அந்த மாவட்டத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடவில்லை. ஆனால் பா.ம.க.வினர் வாக்களித்து 13 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது.

நாங்கள் துரோகம் செய்ய வில்லை. அவர்கள் "பச்சை துரோகம்'' செய்து இருக்கிறார்கள். தி.மு.க.வில் 3 எம்.எல்.ஏ.க்கள் மீது நடவடிக்கை என்று கூறி உள்ளனர். அவர்களில் காந்தி எப்படி சிக்கவில்லை என்று எங்களுக்கு தெரியவில்லை.

திண்டிவனத்தில் தி.மு.க.வில் ஒருவர் போட்டியிட்டார். அது எங்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டு. எனவே அவரை நீக்கி விட்டார்கள். சுயேட்சையாக போட்டியிட்ட அவர் வென்றார். நாங்கள் தோற்று விட்டோம்.

திண்டிவனம் எனது சொந்த ஊர் என்பதால் ஊருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த இடத்தை கேட்டேன். ஆனால் கடைசியில் அதை விடுதலை சிறுத்தைக்கு ஒதுக்கினார்கள்.

நான் கேட்டதும் விடுதலை சிறுத்தைகள் எங்களுக்கு அதை தந்து விட்டார்கள். பூபாலன் எங்களிடம் வந்தார். அவர் சுயேட்சையாக போட்டியிட்டாலும் தி.மு.க. என்பதால் நாங்கள் பார்த்தோம்.

தாழ்த்தப்பட்ட கவுன்சிலர்களை எங்களுக்கு வரவிடாமல் அவர்கள் பார்த்துக் கொண்டனர். திண்டிவனத்தை எங்களுக்கு தந்த விடுதலை சிறுத்தைகள் அதற்கு பதிலாக ஜெயங்கொண்டத்தை கேட்டனர். ஆனால் கொடுக்க வில்லை. 6 மேயர்களில் கடந்த தடவை எங்களுக்கு சேலத்தை தந்தனர். இந்த தடவையும் கேட்டோம் இல்லை என்று சொல்லிவிட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு 2 மேயர் பதவி கொடுத்தனர், 31 சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்று பெரிய கட்சியான எங்களுக்கு ஒரு மேயர் பதவியாவது தந்து இருக்க வேண்டும். ஆனால் தரவில்லை. என்று கூட்டணி கட்சிக்கு உத்தரவிடுவது கூட்டணி வரலாற்றில் கேட்டு அறியாத ஒன்று.

நாங்கள் சட்டசபை தலைவர் 2 துணை மேயர் பதவி கேட்டு ஜி.கே.மணி தி.மு.க.விடம் கடிதம் கொடுத்தார். அதற்கு எந்த பலனும் இல்லை. உடனே நான் வருத்தப்பட்டு கடிதம் எழுதினேன். இதைத் தொடர்ந்து சென்னை துணை மேயர் பதவியை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இந்த வேட்பாளரைத்தான் போட வேண்டும் என்று கலைஞர் சொன்னார்.

யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று எங்கள் கட்சிக்கு அவர் யோசனை சொல்கிறார்கள். எங்கள் கட்சியில் அடி-உதைப்பட்டு சிறை சென்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்க நினைத்தோம். அப்படியானால் உங்களுக்கு துணை மேயர் பதவி கிடையாது என்று கூறி விட்டனர். இவரைத்தான் வேட்பாளராக நிறுத்த வேண்டும். பதவி கேட்கவில்லை. துணை தலைவர் பதவியையும் கேட்கவில்லை. சாதாரண துணை மேயர் பதவிதான் கேட்டோம் அதையும் அவர்கள் ஒத்துக்கொள்ளவில்லை.

காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கு கோமதி என்ற தலித்பெண்ணை நிறுத்தினோம். அவரை மனுதாக்கல் செய்ய முன் மொழிய கூட தி.மு.க. ஒத்துழைக்கவில்லை. அவரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மனு செய்து வெற்றியும் பெற்றுள்ளார். அவர் மீது தி.மு.க. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மதுரை அவனியாபுரம் நகரசபை எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. தலித்சமூகத்தை சேர்ந்த எங்கள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் இளஞ்செழியன் 4 தடவை மு.க.அழகிரியை பார்த்து பேசி உள்ளார்.

சென்னையில் ஏதாவது சொல்வார்கள் அதெல்லாம் வேலைக்கு ஆகாது என்று மு.க.அழகிரி சொல்லி உள்ளார்.
இது சென்னை தி.மு.க. அல்ல மதுரை தி.மு.க. என்றும் மு.க.அழகிரி கூறி இருக்கிறார். 5-வது தடவையாக இளஞ்செழியன் மு.க.அழகிரியை பார்க்கச்சென்ற போது, பார்க்க கூட அனுமதிக்கவில்லை.

மதுரை மாநகராட்சியில் 72 வார்டுகள் உள்ளன. அதில் ஒரே ஒரு வார்டையாவது பா.ம.க.வுக்கு ஒதுக்க கோரி கெஞ்சினோம். ஆனால் ஒதுக்கவில்லை.

இதை மதுரை பொதுக்கூட்ட மேடையில் வைத்து கலைஞரிடம் கூறினேன். உங்களை ஒதுக்கியது தவறுதான் என்று கலைஞரே என்னிடம் கூறினார்.

தஞ்சை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அதை கோசிமணி மகன் அபகரித்துக்கொண்டார். இது அமைச்சர் கோசி மணிக்கு தெரியாமல் எப்படி நடந்தது? விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் ïனியன் எங்களுக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் தி.மு.க. அவை தலைவர் செஞ்சிமஸ்தான் எங்கள் கட்சிகாரர்களிடம் கணிசமான பணத்தை வாங்கி கொண்டனர். ஆனால் தி.மு.க. ஒன்றிய செயலாளர் அங்கு வெற்றி பெற்றுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயபிரகாஷ் ஓசூரில் போட்டியிட்டார். அவரிடமும் பணத்தை வாங்கிவிட்டு தி.மு.க.வினர் துரோகம் செய்து விட்டனர். எவ்வளவு பணம் வாங்கினார்கள் என்று நான் சொல்ல விரும்பவில்லை. பெங்களூர் வரை சென்று உறவினர்களிடம் பணம் புரட்டி கொடுத்த அவர் தற்கொலை மட்டும்தான் செய்யவில்லை. இதில் கிளைமாக்ஸ் என்னவென்றால் அ.தி.மு.க.வினரை தி.மு.க. வினரே அழைத்து வந்து தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து ஜெயிக்க வைத்துள்ளனர்.

இது துரோகம் என்று சொன்னால் கலைஞருக்கு கோபம் வருகிறது. இதை பச்சைத் துரோகம் என்று தானே சொல்ல வேண்டும். இவ்வளவு தவறுகளை நடத்தி விட்டு எங்கள் மீது குற்றம் சொல்கிறார்கள். இதை நான் எங்கே போய் சொல்வது.

இப்படி இருக்கும் போது தோழமை என்று சொல்லிக்கொள்வதில் என்ன அர்த்தம் என்று எனக்குத் தெரியவில்லை.
இதனால் கூட்டணியில் பிளவு ஏற்படும். தி.மு.க. ஆட்சியை ஆதரிக்க மாட்டோம் என்று அர்த்தம் இல்லை. தி.மு.க. ஆட்சிக்கு எங்களால் எந்த பாதகமும் வராது. தோழமை உணர்வோடு ஆதரிப்போம்.

தொடக்கத்தில் சொன்ன சொல்லை காப்பாற்றுவோம். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படுவோம். எதிரிக்கட்சி யாக செயல்படமாட்டோம். கூட்டணி என்பது பரஸ்பரம் விட்டுக் கொடுப்பதுதான். கலைஞரின் அறிக்கையால் நான் நொந்து நூலாகிப் போய்விட்டேன்.

நாங்கள் கூட்டணி தர்மத்தை மீறியது கிடையாது. பிரச்சினைகளின் அடிப்படையில் எங்கள் ஆதரவு இருக்கும். சட்டசபையிலும் இது எதிரொலிக்கும். இனி பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக பா.ம.க. செயலாற்றும். நாங்கள் தி.மு.க.வுடனும், அ.தி.மு.க.வுடனும் கூட்டணி அமைத்துள்ளோம். அ.தி.மு.க.வில் 2 பெண்கள்தான் சரி இல்லை. தொண்டர்கள் மிகவும் நல்லவர்கள்.

ஆனால் தி.மு.க.வில் கலைஞர், பேராசிரியரைத் தவிர...... இதுதான் நான் உணர்ந்து கொண்டது. எங்கள் கட்சி தொண்டர்களின் மனவேதனையின் வெளிப்பாடுதான் இது.

நாங்கள் எப்போதும் பொறுப்புள்ள எதிர்க்கட்சிதான். ஆனால் 2 கட்சிக்காரர்கள் "யார் ஊற்றி கொடுப்பது'' என்று சண்டை போட்ட நேரத்தில் நாங்கள் மக்கள் பிரச்சினை பற்றி கருத்தரங்கம் நடத்திக் கொண்டிருந்தோம்.

[ நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 30லிருந்து சுமார் 50 சதவிகித இடங்களில் திமுகவினர் தோற்கடித்து விட்டனர். இதே போல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச்சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பல இடங்களிலும் அவர்களை தோற்கடித்து விட்டார்கள். திமுக செய்த இந்த துரோகத்தை காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, சிபிஎம் வரதராஜன், சிபிஐ நல்லகண்ணு ஆகியோரும் கண்டித்த தோடு, கூட்டணி வரலாற்றில் இதுபோன்று நடந்தது இல்லை என்று தெரிவித்திருக்கிறார்கள் ]

Update: 31-Oct-2006 காங்கிரஸ் கட்சிக்கும் பாதிப்பு இருக்கிறது: கிருஷ்ணசாமி பேட்டி

முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டணி ஒற்றுமைக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்தார். உள்ளாட்சி தலைவர் பதவிக்கான பேச்சுவார்த்தை நல்லமுறையில் நடந்தது. ஆனால் அவருக்கும் தெரியாமல் ஒருசில இடங்களில் தி.மு.க.வினர் தவறு செய்து இருக்கிறார்கள். இது எங்கள் கவனத்துக்கு வந்து இருக் கிறது.

நடந்த தவறு காரணமாக காங்கிரஸ் கட்சிக்கும் ஒருசில இடங்களில் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்ட இடங்கள் எவை என்பது குறித்து முழு விவரங் களை சேகரித்து வருகிறோம். தவறுகளுக்கு யார் காரணம், என்ன காரணம் என்று தெரிந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி யோசிப்போம்.

பச்சை துரோகம் என்று டாக்டர் ராமதாஸ் கூறியது அவரது சொந்த கருத்து. அதுபற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.

டாக்டர் ராமதாஸ் அவரது கட்சி தொடர்பான விஷயங்களை கூறினாலும், கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. 5 வருடம் ஆதரவு தொடரும் என்று கூறி இருக்கிறார். எனவே தி.மு.க. கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லை

Read More...

5 சூப்பர் தமிழ் வலைப்பதிவுகள்

நீங்கள் விரும்பி படிக்கும் 5 சிறந்த வலைப்பதிவுகளை பின்னூட்டத்தில்
1.
2.
3.
4.
5.
என்று வரிசையாக கொடுக்கவும்.

விதிமுறைகள்:
1. அனானிமஸ் பின்னூட்டங்கள் செல்லாத ஓட்டு என்று கருதப்படும்.
2. தமிழ்மணம், தேன்கூடு, கில்லி என்றாலும் செல்லாத ஓட்டு தான்.
3. நீங்கள் தேர்வு செய்யும் வலைப்பதிவில் குறைந்தது 5 பதிவுகளாவது இருக்க வேண்டும்.
4. விதிமுறை அடிக்கடி அப்டேட் செய்யப்படும் :-)

Read More...

தி.மு.கவில் புயல் சின்னம்

அமைச்சராக பொங்கலூர் பழனிச்சாமி பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பதவி பிரமாணம் செய்துவைத்தார். பதவி ஏற்பு விழா நிகழ்ச்சி சுமார் 5 நிமிடத்தில் முடிவடைந்தது. பதவி ஏற்பு விழா நிகழ்ச்சியில் தி.மு.க. கூட்டணி கட்சியை சேர்ந்த காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் யாரும் அழைப்பு அனுப்பியும் கலந்து கொள்ளவில்லை.

ஊராட்சித் தேர்தலில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட பல தலைவர் பதவிகளை உடன்பாட்டை மீறி திமுகவினர் கைப்பற்றியதால் கூட்டணியில் உள்ள கட்சிகள் அனைத்தும் அதிருப்தியுடன் உள்ளனர். அதனால் தான் அவர்கள் புறக்கணித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

Read More...

Sunday, October 29, 2006

தி.மு.க. மீது ராமதாஸ் `திடீர்' தாக்கு

பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் 40 தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ராமதாஸ் கூறி உள்ளார். "தோழமைக் கட்சியான பா.ம.க.வுக்கு துரோகம் செய்து, பதவியில் அமர்ந்துவிட்ட தி.மு.க.வினர் பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்படும் நாள் எந்நாள்? என்று கொஞ்சம் டென்ஷன் ஆகியிருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

உள்ளாட்சி மன்றத் தலைவர்களுக்கான தேர்தல் ``திட்டமிட்டபடி'' நடந்து முடிந்திருக்கிறது. தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கென்று ஒதுக்கப்பட்ட பதவி இடங்களில் ஏறக்குறைய 40 தலைவர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

பா.ம.க.விடம் இருந்து இந்தப் பதவிகளைப் பறித்து வெற்றி பெற்றவர்கள் கூட்டணிக்குத் தலைமை தாங்கும் தி.மு.க.வை சேர்ந்தவர்கள். கூட்டணிக்குத் தலைமை தாங்கும் கட்சியைச் சேர்ந்தவர்களே, தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தலைவர் பதவிகளுக்கு திடீரென்று வேட்பாளர்களை நிறுத்தியது எப்படி? அப்படி திடீரென்று போட்டியிட்டவர்களும், அவர்களைப் பின்னால் இருந்து இயக்கியவர்களும் தி.மு.க. நிர்வாகிகளாக இருப்பது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது.

எப்படி சாத்தியம்?

மாவட்டத்தில் உள்ள அமைச்சர்களுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் தெரியாமல், அவர்களின் ஆசி இல்லாமல் இது நடந்திருக்க முடியாது. கட்டுப்பாடுள்ள கட்சி என்று சொல்லிக் கொள்ளும் தி.மு.க.வில் இது எப்படி சாத்தியமாகியிருக்கிறது? தலைமையும் அவர்களின் கீழ் இயங்கும் மாவட்டச் செயலாளர்களையும் மீறி, இது நடந்திருக்க முடியுமா என்ற கேள்வி விசுவரூபம் எடுத்திருக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்புதான் தி.மு.க. தலைவர் கருணாநிதி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறுவோர் பற்றி எச்சரித்து அறிக்கை வெளியிட்டார். ``கூட்டணிக்குத் துரோகம் செய்து, வெற்றி பெற்று பதவிக்கு வந்தாலும், அப்படி வந்த பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்பட்டு விடும் என்பதால் அதனை அற்ப சந்தோசம் என்றும் சொல்லலாம்'' என்று கூறியிருந்தார்.

அற்ப ஆயுளில்

தோழமைக் கட்சியான பா.ம.க.வுக்கு துரோகம் செய்து, பதவியில் அமர்ந்துவிட்ட தி.மு.க.வினர் பதவி அற்ப ஆயுளில் முடிக்கப்படும் நாள் எந்நாள்? அவர்களின் சந்தோசம் அற்ப சந்தோசமாக மாறும் காலம் எப்போது வரும்? என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த கேள்விகளுக்கெல்லாம் தி.மு.க. தலைமை என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை எல்லோரும் எதிர்பார்க்கிறார்கள், பொறுத்திருந்து பார்ப்போம்.பா.ம.க. தோற்கடிக்கப்பட்ட இடங்கள் பற்றி பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கை :-

மாவட்ட ஊராட்சியில் பா.ம.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 5 இடங்களில் தி.மு.க.வினால் தோற்கடிக்கப்பட்ட இடம் ஒன்று ஆகும். அது காஞ்சீபுரம் மாவட்ட ஊராட்சி ஆகும். நகராட்சிக்கு ஒதுக்கப்பட்ட 10 இடங்களில் பா.ம.க. ஆற்காடு, ஓசூர், சீர்காழி, சிதம்பரம் ஆகிய 4 இடங்களில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

மூன்றாம் நிலை நகராட்சியில் பா.ம.க.வுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் அவனியாபுரம், சோலார்பேட்டை, திருவேற்காடு ஆகிய மூன்று இடங்களில் பா.ம.க. தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஒதுக்கப்பட்ட 47 ஊராட்சி ஒன்றியத்தில் ஆர்.கே.பேட்டை, சித்தாமூர், சோழிங்கர், வாலாஜாபேட்டை, அரக்கோணம், கணியம்பாடி, துரிஞ்சாபுரம், ஒலக்கூர், நல்லூர், குத்தலாம், செப்பனார்கோவில், குடவாசல், நாமகிரிப்பேட்டை, காவேரிப்பட்டணம், அந்தியூர் ஆகிய 15 இடங்களில் பா.ம.க. தி.மு.க.வால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

பா.ம.க.வுக்கு 36 பேரூராட்சியை தி.மு.க. ஒதுக்கியது. இதில் இடைக்கழிநாடு, மாங்காடு, பள்ளிகொண்டா, கீழ்பெண்ணாத்தூர், திட்டக்குடி, வேப்பத்தூர், தரங்கம்பாடி, பொம்மிடி, பி.மேட்டுபாளையம், பெரிய அக்ரகாரம், ஆப்பக்கூடல், கொளத்துப்பாளையம், அம்மையாநாயக்கனூர், மானாமதுரை, நெற்குப்பை, சாம்பவர்வடகரை, ஆத்தூர் ஆகிய 17 இடங்களில் பா.ம.க. தோற்கடிக்கப்பட்டுள்ளது.


Deccan Cronicleல் வந்த செய்தி
The Hinduவில் வந்த செய்தி
[ ....CPI (M) State secretary N. Varadarajan said though the DMK's State leadership took sincere steps to end such violations, in Kanyakumari district, a "strange combination" of the Bharatiya Janata Party, the Congress and the DMK worked to defeat the DPA's official nominees. In some other areas, DMK men worked for the success of All-India Anna Dravida Munnetra Kazhagam candidates. ]

Read More...

Saturday, October 28, 2006

எந்த நியுஸ் சேனல் ?

நீங்கள் விரும்பி பார்க்கும் நியுஸ் சேனல் எது ?
உங்கள் ஓட்டுக்களை வலது பக்கம் போட்டு போங்க

Read More...

விஜயகாந்த் - ரஜினிகாந்த் - சோ பேட்டி

விஜயகாந்த் இடத்தில் ரஜினிகாந்த்?

தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்' என்ற தலைப்பில் ஒரு சிறப்புக் கூட்டம் சென்னை மியூசிக் அகாடமியில் கடந்த 24-ம் தேதியன்று நடைபெற இருந்தது. இந்தக் கூட்டத்தில் ‘துக்ளக்' ஆசிரியர் சோ, முன்னாள் காவல்துறை ஆணையாளர் வி.ஆர்.லட்சுமிநாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் ஆகியோர் பேசுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி மறுத்துவிட்டதால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதைவைத்து, ‘பேச்சு சுதந்திரத்தை தி.மு.க. அரசு நசுக்குகிறது' என்று விமர்சனங்கள் எழத் துவங்கியிருக்கும் நிலையில் சோ-வை சந்தித்து அதுபற்றியும் இன்றைய அரசியல் நிலவரம் பற்றியும் சில கேள்விகளை முன் வைத்தோம்.


"நீங்கள் பேசவிருந்த கூட்டத்தை போலீஸ் ரத்து செய்ததன் பின்னணி என்னவென்று நினைக்கிறீர்கள்?"

"ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் அதிகார துஷ்பிரயோகத்தின் வெளிப்பாடுதான். அந்தக் கூட்டத்தில் நாங்கள் பேசவிருந்த சப்ஜெக்ட் ‘தமிழ்நாட்டின் உள்ளாட்சித் தேர்தல்' என்பது. ஒருவேளை இந்த அரசாங்கத்தைப் பற்றியும், அண்மையில் சென்னை மாநகரில் நடந்து முடிந்த கேலிக்கூத்தான தேர்தல் முறையைப் பற்றியும் நாங்கள் கடுமையாகப் பேசக்கூடும் என்று நினைத்து அதிகாரத்தில் இருப்பவர்கள் அனுமதி மறுத்திருக்கலாம். ‘கூட்டத்துக்கு முறையான அனுமதி பெறவில்லை. குறைந்த கால அவகாசத்தில் அனுமதி கேட்கப்பட்டதால் தர முடியவில்லை' என்று போலீஸ் அதற்குக் காரணங்கள் சொல்லலாம். ஆனால் குறைந்த கால அவகாசத்தில் எத்தனையோ கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கெல்லாம் போலீஸ் அனுமதி கொடுத்திருக்கிறது. நாங்கள் பேசவிருந்த கூட்டத்தினால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காரணத்தைக்கூட போலீஸ் சொல்ல முடியாது. சென்னை மாநகராட்சிக்கான தேர்தல் நடைபெற்ற அன்று சட்டம்- ஒழுங்கு பாதிக்கப்பட்டதை விட மோசமான ஒரு பாதிப்பு அந்தக் கூட்டத்தால் வந்திருக்காது.''

"கூட்டத்தில் பேசவிருந்த சப்ஜெக்ட் பற்றிச் சொல்லமுடியுமா?''

"புதிதாகச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒட்டுமொத்த மக்களும் மீடியாக்களில் சென்னையில் நடந்தேறிய வன்முறை களைக் கண்கூடாகப் பார்த்தார்கள். இப்படியொரு மோசமான, அராஜகமான தேர்தல் வன்முறை புகழ்பெற்ற மாநிலமான பீகாரில்கூட அரங்கேறியிருக்காது. தி.மு.க-வின் கூட்டணிக் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சியினரே கொடூரமாகத் தாக்கப்பட்டார்கள். தேர்தல் நாளன்று சென்னையில் பல இடங்களில் காலை பத்து மணிக்கே ஓட்டுப்பதிவு முடிந்து விட்டது என்று அறிவித்தார்கள். ‘எப்படி முடிந்தது, நாங்கள்தான் இன்னும் ஓட்டே போட வில்லையே' என்று பொது மக்கள் கேட்க அஞ்சும் அளவுக்கு வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. அரசின் அத்தனை துறையினரும் ஆளும் கட்சியின் அங்கத்தினர்களாக அன்று அவதாரமெடுத்திருந்தார்கள். போலீஸ் துறை அன்று முற்றிலும் சீர்குலைந்து போனது. இந்த அரசின் மீதிருந்த தங்கள் அவநம்பிக்கையை மக்கள் தேவையான சமயத்தில் நிச்சயம் வெளிப்படுத்துவார்கள். இந்த மாதிரியான விஷயங்களைப் பற்றித்தான் அந்தக் கூட்டத்தில் பேசுவதாக இருந்தது.''

" ‘2001-ம் வருட அ.தி.மு.க. ஆட்சியில் சென்னை மாநகராட்சித் தேர்தலில் அரங்கேறாத வன்முறைக் காட்சிகளா...' என தி.மு.க. தரப்பில் பேசப்படுகிறதே?''

"அ.தி.மு.க. செய்த அதே தவறைச் செய்யத்தான் தி.மு.க. கூட்டணிக்கு மக்கள் ஓட்டுப் போட்டார்களா? அவர்கள் செய்வதைத்தான் நாங்களும் செய்தோம் என்று சொல்லத் தான் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததா? முந்தைய ஆட்சியில் நடந்த தவறுகளைச் சரிசெய்து அவை மீண்டும் நடைபெறாவண் ணம் ஆட்சி செய்வதுதான் நல்ல ஆட்சியாளர்களின் கடமை. என்னைக் கேட்டால் 2001-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி யில் நிகழ்ந்த மாநகராட்சித் தேர்தல் வன்முறையைவிட இப்போது அதிகமாகவும், மிகக் கொடூரமாகவும் நிகழ்த்தப்பட் டது என்பேன்.''

"தே.மு.தி.க. தலைவரைப் பற்றி ‘குடிகாரர்' என வர்ணித்து ஜெயலலிதா ஓர் அறிக்கை வெளியிட்டிருக்கிறாரே?''

"அது ரொம்பவும் தரம் தாழ்ந்த ஓர் அறிக்கை. அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது. இரண்டு முறை முதல்வராக இருந்த ஜெயலலிதா இப்படி ஒரு அறிக்கை வெளியிட்டது வருந்தத்தக்கது. அ.தி.மு.க-வும் விஜயகாந்த் கட்சியும் கூட்டணி வைத்துக் கொண்டால் நல்லது என்று நானே சொல்லியிருக்கிறேன். அதற்குக் காரணம் தமிழகத்தில் ஒரு பலமான எதிர்க்கட்சியாக இந்தக் கட்சிகள் செயல்பட்டால் தமிழகத்துக்கு நல்லது என்பதற்காகத்தான்.''

"ஜெயலலிதாவின் அதிரடி அறிக்கையால் விஜயகாந்தின் வளர்ச்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறதே?''

"ஜெயலலிதாவின் அறிக்கையால் விஜயகாந்துக்கு ஓட்டு வந்து விடாது, வராமலும் போகாது. இது ஓர் அரசியல் நிகழ்வு என்ற அளவில்தான் எடுத்துக் கொள்ளப்படும். பத்திரிகைகளில் விஜயகாந்த் பற்றிய செய்திகள், பேட்டிகள் பிரதானமாக வந்து கொண்டிருந்தாலும் அவருக்கு தமிழக அரசியலில் மூன்றாவது இடம்தான். அதைத்தாண்டி அவர் இப்போதே முன்னேறுவார் என்று சொல்ல முடியாது. ‘அரசியலில் விஜயகாந்துக்கு அபார வெற்றி. அவரைத் தமிழக மக்கள் பெருவாரியாக ஏற்றுக் கொண்டார்கள்' என்று நிலவும் கருத்துக்கு ஒரு விஷயம் சொல்கிறேன். கற்பனைக்காக இப்படி யோசியுங்கள்... விஜயகாந்த் இடத்தில் ரஜினிகாந்தை வைத்துப் பாருங்கள். அவர் ஒரே ஒரு இடத்தில் எம்.எல்.ஏ-வாக ஜெயித்து, பல இடங்களில் டெபாஸிட் இழந்து, உள்ளாட்சித் தேர்தலில் கணிசமான ஓட்டுக்களை வாங்கியிருந்தால் அவருக்கு அது மிகப்பெரிய வெற்றி என்று தமிழக மக்கள் சொல்லியிருப்பார்களா? சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்தான் அடுத்த முதல்வர் என்கிற அளவுக்கு இங்கே எதிர்பார்ப்பு இருந்தது. அப்படி விஜயகாந்துக்கு இல்லை. இரண்டு கழகங்களுக்கும் மாற்றாக அவரை மக்கள் நினைத்திருந்தால் அவர் இன்னும் பெரிய வெற்றிகளைப் பெற்றிருக்க வேண்டும். விஜயகாந்துக்கு இருக்கும் ஆதரவை ஜெயலலிதா மிகவும் குறைவாக மதிப்பிடக் கூடாது. அதே சமயம் விஜயகாந்த் கட்சியினர் தங்களுக்கு இருக்கும் ஆதரவு மிகப்பெரியது என்று கருதி விடக் கூடாது. இரண்டுமே தவறு.''

‘முறையாக அனுமதி பெறவில்லை...'

உள்ளாட்சித் தேர்தல் பற்றிய அரங்கக் கூட்டத்துக்கு ஏன் அனுமதி மறுக்கப்பட்டது என தென் சென்னையின் போலீஸ் இணை கமிஷனர் துரைராஜிடம் கேட்டோம். "அந்தக் கூட்டம் ரத்தானதுக்கு எந்த வகையிலும் காவல்துறை பொறுப்பில்லை என்பதைக் கூட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்பினரே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் ‘மழையின் காரணமாக கூட்டம் நடைபெறவில்லை' என்று அறிவித்தார்கள். அடுத்து அந்தக் கூட்டத்துக்கு அவர்கள் முறையாக அனுமதி பெறவில்லை. அனுமதி கேட்டு அவர்கள் கொடுத்த மனு உரிய காலத்தில் சம்பந்தப்பட்ட காவல்நிலையத்துக்கு வந்து சேரவில்லை. அவ்வளவுதான்'' என்றார்.

நன்றி: ஜூவி

Read More...

பத்திரிக்கை விஷமம்

இந்த வாரம் ராசி பலன்கள். பத்திரிக்கைகளில் இந்த மாதம்/வாரம் மேஷ ராசிகாரர்களுக்கு என்ன சொல்லியிருக்கிறார்கள் ?


மங்கையர் மலர்

உழைப்போம், உயர்வோம் என்று தன்முனைப்புடன் செயல்படும் மேஷ ராசி நேயர்களே! திருமணம் கூடும். கடன் தீரம். வழக்கில் வெற்றி கிட்டும். புதிய முயற்சி எதுவானாலும் அதில் நேரடி கவனம் தேவை. வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் வரும். 12.10.2006க்கு மேல் திடீர் தனயோகம் கிட்டும். 14.10.2006க்கு மேல் சிலருக்கு திடீர் திருமணம் கூடும். ஆடை அணிமணிகள் சேர்க்கை உண்டாகும். வீட்டில் விருந்து, விசேஷம் எனக் கலகலப்பாக இருக்கும். மனைவியின் உடல்நலனில் கவனம் செலுத்துக. 24.10.2006ல் நீண்ட கால கடன் தீரம். 27.10.2006க்கு மேல் சுபச்செலவுகள் வரும். 24.10.2006 நண்பகல் முதல் 26.10.2006 முன்னிரவு வரை சந்திராஷ்டமம். கவனம் தேவை.

பரிகாரம்: முருகப்பெருமானை வழிபடவும் கந்தசஷ்டிக் கவசம் பாராயணம் செய்க. இறையருள் கூடும். இன்னல் விலகும்.

குமுதம் ஜோதிடம்

வயிறு சம்பந்தப்பட்ட சிறுசிறு கோளாறுகளால் அவதியுற நேரலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றும். குடும்ப நிர்வாகச் செலவுகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்துவரும். என்றாலும் வருமானம் நன்றாக இருப்பதால் இந்தச் செலவுகளை எளிதில் சமாளித்து விடமுடியும். பெண்களால் தொல்லைகள் ஏற்பட சாத்தியக்கூறு உள்ளது. கெட்ட நண்பர்களின் சேர்க்கையும் வேதனை தருவதாக அமையக்கூடும். இந்த ராசிப் பெண்களின் திருமண முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உடன் பணியாற்றும் ஊழியர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் நீங்கும். மேலதிகாரிகளின் அதிருப்தி நீங்கும். பணியில் சலுகைகள் மறுக்கப்படக்கூடும். எனவே மனநிம்மதி இராது. தொழில்துறை அன்பர்களுக்குப் போட்டிகள் தொடர்ந்து அதிகரித்த நிலையிலேயே இருந்துவரும். என்றாலும் தொழில் பாதிக்கப்படாது. கூட்டாளிகளுடனும் கருத்து வேறுபாடுகள் தோன்றக்கூடும். இருப்பினும் தொழில் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. வர்த்தகத்துறையினருக்கு விற்பனையும், லாபமும் சீராக இருந்துவரும். பழைய பாக்கிகள் குறித்த நேரத்தில் வந்து சேரும். திரைப்படத்துறையினருக்குக் கிரகநிலைகள் அனுகூலமாக இல்லை. தொழிலில் தேக்கநிலை தென்படுகிறது. கெட்ட நண்பர்களின் சேர்க்கையும் தொழிலை பாதிக்கும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கைநழுவிப் போகக்கூடும். வருமானமும், வசதிகளும் குறையும். அரசியல்வாதிகளுக்கும் வருமானம் பாதிக்கப்படக்கூடும். மாணவமணிகளுக்கு மனத்தில் குழப்பங்கள் நிறைந்திருக்கும். எனவே பாடங்களில் மனம் ஈடுபட மறுக்கும். விவசாயத்துறை அன்பர்களுக்குத் தொழிலில் தேக்கமும், தடையும் ஏற்படும். வீண் அலைச்சல் அதிகரிக்கும். பெண்மணிகளுக்கு வருமானம் நல்லபடி நீடிக்கும். எனவே குடும்பத்தில் சூழ்நிலை நிம்மதி தரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்குப் பணியில் சலுகைகள் மறுக்கப்படக்கூடும்.

அறிவுரை : பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

பரிகாரம் : கீழ்க்கண்ட பாடலைத் தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் 16 முறை பாராயணம் செய்து வாருங்கள்.

மாலே! மாயப் பெருமானே!
மாமாயனே! என்றென்று
மாலேயறி மாலருளால்
மன்று குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழரிசைகாரர்
பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இன்பத்தும்
வல்லார்க் கில்லை பரிவதே.

கல்கி

இதுநாள் வரை 7-ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்த குருபகவான் 21.10.2006 முதல் 8=ஆம் இடத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். கடன், வழக்கு, பணி போன்ற தொல்லைகளை ஒழிப்பார். நீண்ட நாட்களாக முடிவு பெறாத எந்தக் காரியத்துக்கும் உடனடி தீர்வை அளிப்பார். திருமணத் தடையைப் போக்குவார். வராத நிலுவைகள் கைக்குக் கிடைக்கும்படி செய்வார். குழந்தைகள் வழியில் சுபகாரியங்கள் உண்டாகுவார். பணக்கஷ்டம் விலகும். வியாழந்தோறும் ராகவேந்தரர் சுவாமிக்கு(அ) குருபகவானுக்கு விளக்கு ஏற்றி வருவது நற்பலனை அதிகரிக்க வைக்கும். நினைத்தது கை கூடும்.

சத்தி விகடன்

பூவைப் போல வெள்ளை மனசும், புயலெனப் போராடும் குணமும் உடையவர்கள் நீங்கள். ராசியை நான்கு கிரகங்கள் பார்ப்பதால், திறமைகள் வெளிப்படும். மன உளைச்சல் அகலும். குடும்பத்தினருடன் நிலவி வந்த பனிப் போர் மறையும். பிள்ளைகளின் உடல் நலம் சீராகும். அவர்களை உற்சாகப்படுத்தி, அதிக மதிப்பெண்கள் பெற வைப்பீர்கள். அடுத்தடுத்து வந்த செலவுகள் இனி இருக்காது. முன் கோபம் அகலும். உறவினர்களைப் புரிந்து கொள்வீர்கள். பெண்ணுக்கு எதிர்பார்த்த வரன் அமையும். பூர்வீகச் சொத்து விவகாரங்களில் இனி நல்ல தீர்வு கிட்டும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

ராசிக்கு 11-ஆம் வீட்டில் ராகு இருப்பதால், பணப் புழக்கம் அதிகரிக்கும். தொண்டை வலி, வயிற்று வலி நீங்கும். பிரபலங்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். வருங்காலத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வீடு, வாகன வசதி பெருகும். அரசுக் காரியங்களில் அனுகூல மான நிலை காணப்படும். உடன் பிறந்தவர்கள் உதவு வர். புதியவர்களின் நட்புக் கிட்டும். ஆடை, ஆபரணம் சேரும். வெளிநாடு செல்ல இருந்த முட்டுக்கட்டைகள் நீங்கும்.

வியாபாரத்தில் பற்று-வரவு உயரும். வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசி, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்புத் தருவர். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். உத்தியோகத் தில் உங்களின் கடின உழைப்பை மேலதிகாரி புரிந்து கொள்வார். சம்பளம் உயரும். கணினித் துறையில் உள்ளவர்களுக்குப் புது வாய்ப்புகள் தேடி வரும். கன்னிப் பெண்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். மாணவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவர். புதிய பாதையில் பயணிக்கும் நேரம் இது.

சந்திராஷ்டம தேதிகள்: அக்-24-ஆம் தேதி நண்பகல் முதல் 25, 26 தேதிகளில் கவனம் தேவை.

ராசியான எண்கள்: 4,6.
அதிர்ஷ்ட நிறங்கள்: நீலம், ரோஸ்.
நல்ல நாட்கள்: அக்-28, 30, நவ-5.

பரிகாரம்: சக்கரத்தாழ்வாரை வணங்குங்கள். விஷ்ணு சஹஸ்ர நாமம் சொல்லுங்கள். விரும்பியது நடக்கும்.

Read More...

Friday, October 27, 2006

வெடிக்கிறார் விஜயகாந்த்!

இந்த வாரம் ஆனந்த விகடனில் வந்த பேட்டி...


... பயமும் பதற்றமும் வர்றப்போ, நிதானம் போயிடும்னு சொல்வாங்க. அதில் தி.மு.க - அ.தி.மு.க. இரண்டுமே விதி விலக்கில்லை!


மிக முக்கிய இரண்டு கழகங்களின் ஒரே இலக்காக இருக்கிறார் விஜயகாந்த்!

ஒரு பக்கம் ‘பாராட்டத்தக்க முன்னேற்றம்’ என்று பாராட்டுகிறார் கருணாநிதி. இன்னொரு பக்கம் மிகக் கடுமையான வார்த்தைகளால் தாக்குகிறார் ஜெயலலிதா. புதுக்கட்சி ஆரம்பித்த வேகத்தில், மூன்று தேர்தல்களைச் சந்தித்து நிமிர்ந்திருக்கிற உற்சாகம் தெரிகிறது தே.மு.தி.க. தலைவரிடம்.

உள்ளாட்சித் தேர்தலில் வென்ற வேட்பாளர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். "நமக்கு ஒரு பயிற்சி முகாம் இருக்கு. என்ன செய்யணும், எப்படிப் பழகணும், எப்படி நடந்துக் கணும்னு முதல்ல தெளி வாத் தெரிஞ்சுக்கிட்டு பொறுப்பை ஏத்துக்கணும்ப்பா!" என மனைவி பிரேமலதா சகிதம் நின்று வாழ்த்தி அனுப்புகிறார்.

அப்போதுதான் வெளியான ஜெயலலிதாவின் அனல் அறிக்கையின் நகல் தரப்பட, அதன் மேல் கண்களை ஓட்டுகிறவர், "ஒரு விஷயம் செய்ய மனசுல தெளிவு வேணும், தெம்பு வேணும், உண்மை வேணும்னு சொல்வாங்க. கூடவே, பொறுமையும் நிறைய வேணும் போல!" என்கிறார் சின்னப் புன்னகையுடன்.

"நான் ஆரோக்கியமான அரசியல் செய்ய ஆசைப்படுறேன். அதுக்கு மக்கள் தர்ற வரவேற்புதான், இந்த ஆரம்ப வெற்றிகள்.

விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ-வானது எங்களுக்கு முதல் விசிட்டிங் கார்டு. இப்போ உள்ளாட்சித் தேர்தலிலும் சொல்லிக்கிற மாதிரி வெற்றிகள்... நான் என் பாதையில் தெளிவா இருக்கேன்.

கலைஞர் திடீர்னு இப்போ என்னைப் பாராட்டுறார். ஒரு விஷயத்தைப் பல அர்த்தங்களில் சொல்றவர் அவர். முதலில், விஜயகாந்த் தலைவரே இல்லைன்னு சொன்னார்; அடுத்து என் கட்சியைப் பொருட்படுத்தவே இல்லைன்னார்; நான் திராவிடனே இல்லைன்னு சொன்னார். அவரே இப்போ ‘பாராட்டத்தக்க முன்னேற் றம்’னு சொல்றார். அவர் சொல்லலை, நாடு சொல்லவைக்குது. நான் அ.தி.மு.க. பக்கம் போயிடக் கூடாதுன்னு சொன்னாரான்னு தெரியலை. நான் இதெல்லாம் பெரிசா எடுத்துக்கிறதில்லை!"

"இடைத் தேர்தலைப் பார்க்கும் போது ஜெயலலிதாவின் வீழ்ச்சி... உங்களின் வளர்ச்சி... இரண்டும் கருணாநிதியின் மகிழ்ச்சியாகத் தெரிகிறதே? தி.மு.க-வையே நீங்கள் குறிவைத்துத் தாக்குவதால், அந்தக் கட்சிக்கான எதிர்ப்பு வாக்குகள் பிரிகின்றன. அது ஆளுங்கட்சிக்கே ஆதாயமாக அமைகிறதுன்னு ஒரு கணக்கு சொல்றாங்களே..?"

"எந்தக் கணக்கும் வேணாம் சார்! தி.மு.க - அ.தி.மு.க. இது ரெண்டு மேலேயும் மக்களுக்குச் சலிப்பா இருக்கு. மக்களுக்கு மட்டுமில்லை, அந்த கட்சிக்காரங்களுக்கே சலிப்பு வந்திருக்கு என்பதுதான் உண்மை.

நான் தனிக் கட்சி. அதனால், அவங்க குறைஞ்சுட்டாங்க, இவங்க கூடிட்டாங்கன்னு அதுக்குள்ளே போக விரும்பலை. இரண்டு கட்சிகளும் பிடிக்காமல்தானே நானே வந்தேன். பண்ருட்டி யார் சொன்னது மாதிரி, தே.மு.தி.க-தான் இந்தத் தேர்தலில் முதலிடம். ஏன்னா, நாங்க மட்டும்தான் தனி ஆள். மீதி எல்லாம் கூட்டணி பலம்!

என்னவோ கதை சொல்வாங்களே, ‘புலிக்குப் பயந்தவனெல்லாம் வந்து என்மேலே படுத்துக்க!’ன்னு... அப்படி பதவி, படை பலம் இருந்தும் பயம் போகாம, டிஸைன் டிஸைனா கூட்டணி வெச்சு, அடாவடி பண்ணி, அதிகார துஷ்பிரயோகம் பண்ணி ஜெயிக்கிறதெல்லாம் ஒரு வெற்றியா?

எங்க ஓட்டுக்களைப் பாருங்க. இந்த இரண்டு கட்சிகளுக்கும் மாற்று சக்தியா எங்களை மக்கள் வளர்த்துட்டு இருக்காங்க!"

"எடுத்த எடுப்பிலேயே மக்களின் வர வேற்பைச் சம்பாதித்த நீங்களே, ஓட்டு போடப் போகவில்லை. அந்த அளவுக்கு உங்களைக் கோபத்தில் தள்ளிய விஷயம் என்ன?"

"இப்போ நடந்ததுக்குப் பேர் தேர்தலா சார்?! எப்பவுமே ஆளுங்கட்சிக்காரங்க கலாட்டா பண்ணுவாங்க, கள்ள ஓட்டு போடுவாங்கன்னு தெரியும். ஆனா, இப்படிக் காலையில ஏழு, ஏழரை மணிக்கே பூத்களைக் கைப்பற்றி மற்ற கட்சி ஏஜென்ட்டு களை அடிச்சு உதைச்சு, பூத் அதிகாரிகளைப் பயமுறுத்தி, ஓட்டுப்போட வந்த மக்களையும் துரத்தியடிச்சு, அவங்களே எல்லா ஓட்டுக்களையும் போட்டுட்டு, போலிங் முடிஞ்சாச்சுன்னு இழுத்துப் பூட்டிட்டுப் போறாங்கன்னா, இதுக்குப் பேர் தேர்தலே இல்லை. அப்படியென்ன வெறி? அப்புற மென்ன ஜனநாயகம்?

‘தேர்தல் பாதை திருடர் பாதை!’ன்னு சிலர் சொல்வாங்களே, அப்படி ஒண்ணைக் கண் முன்னால் நிகழ்த் திக் காட்டிடுச்சு தி.மு.க. இதுவா அரசியல்?

காலையில் நான் வீட்டை விட்டுக் கிளம்பும்போதே, ரத்தம் சொட்டச் சொட்ட என் வீட் டுக்குத் தொண்டர் கள் ஓடி வர்றாங்க. துணிமணியெல்லாம் ரத்தம். எனக்குத் துடிக்குது சார். என்ன நம்பிக்கையில் இனி நல்ல வங்க அரசியலுக்கு வருவாங்க?

இவ்வளவு களேபரத்தில் நான் ஓட்டுப் போட வேண்டிய பூத்தை மட்டும் எந்தப் பிரச்னையும் இல்லாம வெச்சிருந்தாங்க. ஏன்னா, நான் ஓட்டு போடப் போகும்போது மொத்த மீடியாவும் என் பின்னால் வரும்ல... அங்கே ஏதாவது அசம்பாவிதம்னா, அது தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சுபோயிடும்ல. இதுவா ராஜ தந்திரம்? இது மகா கேவலம்!

முதல்ல கொஞ்சம் ஓட்டு மட்டும் மக்கள் போடுவாங்க... அப்புறம் அவங்களே எல்லா ஓட்டுக் களையும் போட்ருவாங்கன்னா, அப்புறம் ஓட்டுக்கு என்ன மதிப்பு? நான் ஓட்டுப் போட எந்நேரமும் வரலாம்னு என் பூத் மட்டும் பாதுகாப்பா இருந்ததே, அது என்னால் முடிஞ்ச ஒரு நல்ல காரியம்!"

"ஆளுங்கட்சி மீது இப்படிப்பட்ட குற்றச்சாட்டுகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் எழுவது வாடிக்கையான விஷயம்தான்னு சொல்றாங்களே..."

"அன்னிக்கு நடந்தது அத்தனையும் அநியாயம்! மனசாட்சின்னு ஒண்ணு இருந்தால், மறு தேர்தல் நடந்திருக்கணும். அப்படி, வரலாறு பார்க்காத வன்முறையோட நடந்த தேர்தல் இது.

எம்.ஜி.ஆர். முதல்வரா இருந்தப்போ, தி.மு.க. ஜெயிச்சிருக்கு. காமராஜர் ஆட்சியிலும் தி.மு.க. ஜெயிச்சிருக்கு. அது ஜனநாயகம். அது நிஜமான தேர்தல்!

தி.மு.க. தனியா இருந்தா பயப்படலாம். ஏழு கட்சிக் கூட்டணி இருந்தும் ஏன் இவ்வளவு பயம்? கறுப்பு பேன்ட் - வெள்ளைச் சட்டைன்னு அடியாள் கோஷ்டி போல யூனி ஃபார்ம் போட்டு அராஜகம் பண்ணி இருக்காங்களே! இப்போ உள்ளாட்சித் துறை அமைச்சரா இருக்கிற மு.க.ஸ்டாலின் இதுக்கு முன்னாடி எப்பவும் யூனிஃபார்ம் போல போட்டுட்டு இருந்த கலர் அது!" என்பவர், மீண்டும் கொந்தளிக்கிறார்.

"காலம் எல்லாத்தையும் புரட்டிப்போடும். கலைஞர் வயசாலும் அனுபவத்தாலும் பெரிய அரசியல்வாதி. அவரெல்லாம் பொறுப்புக்கு வந்த பிறகாச்சும் மக்களுக்கு நல்லது பண்ண இறங்கி வந்திருக்கணும். இப்படியெல்லாம் அந்தக் கட்சி கீழ்த்தரமாப் போய்த் தான் ஜெயிக்கணுமா?

வெற்றியோ தோல்வியோ, அது மக்கள் தர்ற தீர்ப்பு. அதுக்கு இங்கே முதலில் ஜனநாயகம் வேணும். முதல மைச்சர்னா, முதல் வேலைக்காரன்! முதல் பணக்காரன்னு அர்த்தம் கிடை யாது. என்னங்க இது... தமிழ்நாட்டில் வேற யாரும் அரசியல் பண்ணக் கூடாது, தொழில் பண்ணக் கூடாது, வியாபாரம் நடத்தக் கூடாது, கருத்து சொல்லக் கூடாதுன்னு இப்படியே ஒவ்வொரு பக்கமும் இறுக்கிக்கிட்டே, முறுக்கிக்கிட்டே போனாங்கன்னா எப்படி? எல்லாத்துக்கும் சேர்த்து மொத்தமா அனுபவிக்கப்போறாங்க... பாவம்!"

"ஏன் எதிர்க்கட்சிகள் இந்த விஷயத்தில் ஒன்று சேர்ந்து போராடவில்லை?"

"நான் கேட்டுட்டே இருக்கேன். அ.தி.மு.க -வும் கேட்கிறாங்க. ஆனா, அவங்க இவங்களைப் பற்றிப் புகார் சொல்றதையே முழு நேர வேலையா வெச்சிருக்கிறதால், அது எடு படலை.

மற்ற கட்சிகள் எல் லாம் கூட்டணின்னு கும்மியடிக்குதே!

காங்கிரஸ் நமக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த கட்சின்னு பேர். இப்போ அதோட நிலைமை என்ன? பதவி களைப் பங்கு பிரிக்கிற தில் மட்டும்தான் குறியா இருக்காங்க. கூச்சம் இல்லாம குரூப் போட் டோவுக்கு போஸ் கொடுக்கிறாங்க.

கம்யூனிஸ்ட்டுகள் மேல மரியாதை இருந்தது. அவங்களே போராட மாட்டேங்கி றாங்களே... அநியாயம்னு அறிக்கை விட்டுட்டு அறிவாலயத்தில் டீ குடிச்சுட்டு சமாதானமாகிடுறாங் களே... அவ்ளோதானா அவங்க புரட்சி, நேர்மை, நியாயமெல்லாம்?

வீதி வீதியா, வீடு வீடா போய், ‘ஓட்டு போட வாங்க’ன்னு கெஞ்சிக் கூப்பிட்டுட்டு, ஓட்டு போட வர்ற மக்கள் கழுத்தில் கத்தியை வெச்சாங்கள்ல... அதுக்கு எழுதுவாங்க பாருங்க ஒரு தீர்ப்பு!

அப்படி என்ன பதவி வெறி? இன்னும் என்ன வேணும்?

மத்திய அரசில் மந்திரிப் பதவிகள் வேணும், மாநில ஆட்சி முழுசா வேணும், மாநகராட்சிகளையும் தர மாட்டோம், கவுன்சிலர் போஸ்ட் வரைக்கும் வேற எவனும் வந்துடக் கூடாதா? இதனால, இருந்த கொஞ்ச நஞ்ச மரியாதையையும் மொத்தமா இழந்துட்டீங்க. வரலாறு உங்களை எப்படி எழுதப்போகுது பாருங்க!

‘தேர்தலில் நிக்கிறியா... பாடையில் ஏறிப் படுக்கணும்னு அவ்வளவு ஆசையா?’னு போலீஸ் அதிகாரிகளே கேட்டாங்களாம். இதுவாங்க அமைதிப் பூங்கா?

‘அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்’னு சொல்வாங்க. ஜனநாயகத்தை மொத்தமாக் கொன்னுட்டாங்க. ஆழமாக் குழி தோண்டிப் புதைச்சுட்டாங்க. இனி பாருங்க, தெய்வம் நின்னு கொல்லும். மக்கள்தான் என் தெய்வம்!"

"உங்க கட்சிக்காரங்க அடிவாங்குறாங்க, பாதிக்கப்படுறாங்க என்றால், அவர்களுக்கு நீங்கள் கொடுக்கிற தைரியம் என்ன?"

"என் ரசிகர்கள், கட்சிக்காரர்கள்னு மட்டும் இல்லே... எல்லோருக்கும் நான் சொல்லிக்க விரும்புற ஒரே விஷயம் இதுதான்... தி.மு.க- அ.தி.மு.க. அதோட கூட்டணிக் கட்சிகள்னு எல்லோரும் மாறி மாறிப் பண்ற அட்டூழியங்களுக்கு முடிவுகட்டியே ஆகணும்.

ஒரு வேலைக்காரனா நான் ரெடியா இருக்கேன். என் சொத்து அழிஞ்சாலும் நான் நிப்பேன். காலேஜ், கல்யாண மண்டபம் இதை ரெண்டையும் சொல்லிச் சொல்லி பூச்சாண்டி காட்டிப் பார்த்துட்டாங்க. காசுக்கு ஆசைப்பட்டால்தான் கவலை வரும். என் வீட்ல நாங்க நாலு பேரு சாப்பிட எவ்வளவு ஆகும், அது போதும்!"

"உங்களால் ‘முரசு’ சின்னத்தை உள்ளாட்சிக்கு வாங்க முடியலியே?"

"கேட்டோமே! அதைப் பற்றி பேசினாலே, கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடருவாங்களாம், பயமுறுத்து றாங்க!

இந்த சந்திரசேகர் யாரு? மந்திரி யோட சகலை. எல்லாத்திலும் அரசியல் பின்னணி! ஏங்க, சுப்ரீம் கோர்ட்டே சொல்லியும் முல்லை பெரியாறு அணையில் நீர் மட்டத்தை உயர்த்த முடியலியே... அந்த அரசு மேலே இவங்க கோர்ட் அவமதிப்பு வழக்கு போட வேண்டியதுதானே?

நாளைய தலைமுறைன்னு சொல்வோமே, அந்த இளைஞர் கூட்டம் இந்த அரசியல் பற்றி என்ன நினைப்பாங்க? அவங்களுக்கு ஜன நாயகம் மேல நம்பிக்கை போச்சுன்னா, அப்புறம் இந்த நாட்டை யாராலேயும் காப்பாத்த முடியாது. நான் என் தொண்டர்களை அசராமல் தட்டிக் கொடுத்துட்டே இருக்கேன். ஒரு அடி கூட பின்வாங்க மாட்டேன். இந்தத் தடவைதான் என் கோபம் உச்சத்துக்குப் போய், ‘யாருக்கு வேண்டும்னாலும் ஓட்டுப் போடுங்க. தி.மு.க-வுக்கு மட்டும் போட்டுடாதீங்க!’ன்னு சொன்னேன்.

இவ்வளவு வன்முறை நடக்குதுன்னு குற்றம் சொன்னா, ‘யார் யாரு அந்த ரவுடிகள்? லிஸ்ட்டைக் கொடு’ன்னு கேட்கிறாங்க. ஆட்சி, அதிகாரம், போலீஸ்னு எல்லாத்தையும் வெச்சுட்டு இருக்கிறவங்க பேசுற பேச்சா இது? அ.தி.மு.க. அளவுக்கு வன்முறை இல் லைன்னு சமாளிப்பு வேற. அப்போ வன்முறை நடந்ததுன்னு ஒப்புக்கிறாங்க! அப்புறம் எதுக்கு இந்த அரசாங்கம்? மக்களை முட்டாள்கள்னு முடிவே பண்ணிட்டாங்க!"

"போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் போய் புகார் கொடுத்தீங்களே?"

"ஆமா, போனேன்! ‘பார்க்கிறோம், கவனிக்கிறோம்னு சும்மா சொல்லாதீங்க. போலீஸ் மேல மக்கள் நம்பிக்கை இழந்தாச் சு’ன்னு சொல்லிட்டு வந்தேன். போலீஸ், வாத்தியார் இந்த ரெண்டு வர்க்கம் மேலேயும் நம்பிக்கை போச்சுன்னா, அந்தத் தேசமே குட்டிச் சுவராப் போயிடும்னு சொல்வாங்க.

தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் கேவலமா சண்டை போட்டுக்கிறாங்க. எப்போ பார்த்தாலும் போன ஆட்சி, இந்த ஆட்சி, கையெழுத்திடாத கோப்புகள்னு இதே பேச்சு. இது என்ன அரசாங்கமா, இல்லேன்னா ஒண்ணாங் கிளாஸ் பிள்ளைங்க நடத்துற தகராறா? அதான் போன ஆட்சியின் குறைகளைத் தெரிஞ்சுக்கிட்டு, அவங்களை வீட்டுக்கு அனுப்பி உங்களை உட்காரவெச்சாச்சே. இன்னும் ஏன் அதையே பேசிக்கிட்டு? இந்த முறை நீங்க ஆடுற ஆட்டத்துக்கு இன்னும் செமத்தியான தண்டனை தருவாங்க!

1972-ல் எம்.ஜி.ஆர். பிரியும்போது பார்த்த அதே கோபமான தி.மு.க-வை இப்போதான் நான் மறுபடி பார்க்கிறேன். எம்.ஜி.ஆர். ரசிகன்னு எவன் சிக்கினாலும் வெளுத்துக் கட்டினாங்க. மலை யாளின்னு யார் கிடைச்சாலும் புகுந்து அடிச்சாங்க அப்போ! இதோ இப்போ விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததும் அதே ஆட்டம் ஆரம்பிச்சுட்டாங்க! ஆளுங்கட்சிங்கிற பலத்தை வெச்சு பயத்தை மறைச்சுக்கப் பார்க்கிறாங்க. இவங்க ளோட வழியெல்லாம் வன்முறை இருக் குங்க!"

"எல்லாம் சரி, இப்போ இன்னும் மோசமா, ஜெயலலிதா உங்களைத் தாக்கி இருக்காங்களே. குடிகாரன் பேச்சு, சட்டசபைக்கே குடிபோதையுடன் வருபவர் அப்படின் னெல்லாம்..."

"மக்களே, பார்த்துக்குங்க..!

இவங்களை நம்பி இரண்டு தடவை ஆட்சியில் உட்கார வெச்சீங்க. எவ்வளவு நாகரிகமான பேச்சுன்னு பாருங்க. ஏங்க, நானா குளுகுளு ரூம்ல குடிச்சுட்டு இருக்கிறது? ஏதோ பக்கத்தில் உட்கார்ந்து ஊத்திக் கொடுத்த மாதிரி இருக்கே, இந்தப் பேச்சு!

அது என்னன்னா... பயமும் பதற்றமும் வர்றப்போ, நிதானம் போயிடும்னு சொல்வாங்க. அதில் தி.மு.க - அ.தி.மு.க. இரண்டுமே விதி விலக்கில்லை!"

Read More...

அப்சலுக்கு மரணதண்டனை பற்றி - அருந்ததி ராய்

'And His Life Should Become Extinct'

The Very Strange Story of the Attack on the Indian Parliament - ARUNDHATI ROY


If Afzal is hanged, we'll never know the answer to the real question: Who attacked the Indian Parliament? Was it the Lashkar-e-Toiba? The Jaish-e-Mohammed? Or does the answer lie somewhere deep in the secret heart of this country that we all live in and love and hate in our own beautiful, intricate, various, and thorny ways?

There ought to be a Parliamentary Inquiry into the December 13 attack on Parliament. While the inquiry is pending, Afzal's family in Sopore must be protected because they are vulnerable hostages in this bizarre story.

To hang Mohammed Afzal without knowing what really happened is a misdeed that will not easily be forgotten. Or forgiven. Nor should it be.
இந்த வாரம் அவுட்லுக்கில் வந்த கட்டுரை. முழுவதும் படிக்க இங்கே செல்லவும்...

இட்லிவடையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பு முடிவுகள்

Read More...

ரெய்டு !

முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். இன்று காலை முதல் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். முன்னாள் அதிமுக அமைச்சர் நயினார் நாகேந்திரன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். பாளையங்கோட்டை மகாராஜாபுரம், சென்னை, நாகர்கோவில் உட்பட அவருக்கு சொந்தமான 22 இடங்களிலும், அவரது உறவினர்கள் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை நடத்தி வருகிறது. மேலும் கோவை மற்றும் பல்லடத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் தாமோதரனின் வீட்டிலும், சூளூரில் உள்ள முன்னாள் அமைச்சர் வேலுச்சாமியின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

சோதனையிடப்பட்ட இடங்கள்

முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 22 இடங்களில் இன்று லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அந்த இடங்கள் விவரம் வருமாறு:-

1. பணகுடி அருகே தண்டையார் குளத்தில் உள்ள பூர்வீக வீடு.

2. நெல்லை மகாராஜ நகரில் உள்ள நயினார் நாகேந்திரன் வீடு.

3. நயினார் நாகேந்திரனின் பெற்றோர் வசிக்கும் நாகர்கோவிலில் உள்ள வீடு.

4. நெல்லை டவுனில் உள்ள நயினார் நாகேந்திரனின் அண்ணன் வீரபெருமாள் வீடு.

5. பாளை குலவணிகர் புரத்தில் உள்ள அவரது மாமனார் சண்முகம் வீடு.

6. குலவணிகர் புரத்தில் உள்ள மைத்துனர் சுப்பிரமணியம் வீடு.

7. அதே பகுதியில் உள்ள மற்றொரு மைத்துனர் வள்ளிகண்ணு வீடு.

8. மேலும் அதே பகுதியில் மற்றொரு மைத்துனர் சந்திரசேகர் வீடு.

9. குலவணிகர் புரத்தில் உள்ள மைத்துனருக்கு சொந்தமான மருந்துக்கடை.

10. நெல்லை சந்திப்பில் உள்ள நயினார் காம்ப்ளக்ஸ்.

11. நாகர்கோவிலில் உள்ள அவருக்கு சொந்தமான ஓட்டல்.

12. கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள அவரது நண்பர் வீடு.

13. சென்னையில் உள்ள நயினார் நாகேந்திரனின் வீடு

14. கேரளாவில் அவர் பங்கு தாரராக உள்ள ஒரு ஓட்டல்.

15. ஆந்திராவில் அவர் பங்குதாரராக உள்ள ஓட்டல்.

16. டெல்லியில் அவர் பங்குதாரராக உள்ள ஓட்டல்.

17. சென்னையில் உள்ள மற்றொரு கட்டிடம் இவை உள்பட 22 இடங்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது

Read More...

Thursday, October 26, 2006

ஒரு பிரமுகர் ஒரு உரையாடல்

இந்த தீபாவளி விடுமுறையில் என் பக்கத்தில் ஃபிளைட்டில் ஒருவர் உட்கார்ந்தார். அவரை பார்த்தவுடன், "அட இவரை எங்கோ பார்த்த மாதிரி.." என்று நினைப்பதற்குள் யார் என்று கண்டுபிடிக்க முடிந்தது. திமுகவில் நன்கு அறியப்பட்டவர்.

'வணக்கம்' என்று கூறி சில நிமிடங்களில் அரசியல் பேச்சுக்கு தாவினோம்

சில தகவல்கள்...

"வைகோ கூடிய சீக்கிரம் திமுக கூட்டணிக்கு வந்துவிடுவார். ஒரு சேனல் ஓப்பன் ஆகியிருக்கிறது"

"காங்கிரஸ் ரொம்ப அடம்பிடிக்கிறது, சீக்கிரமே கூட்டணியை விட்டு வெளியேரலாம்"

"திமுக, அதிமுக மேல் மட்டத்தில் தான் விரோதம், ஆனால் அடிமட்ட தொண்டர்கள் எல்லாம் ரொம்ப ஃபிரண்ட்லி"

"ஒரு ஓட்டுக்கு 2000/= தர வேண்டியிருக்கிறது"

வேறு சில விஷயங்கள் சொன்னர் அதை இங்கு பிரசுரிக்க முடியாது.

Read More...

வியாபாரிவியாபாரி’ படத்தில் சூர்யா, நமீதா - இந்த படத்திற்கு நல்ல கமெண்ட் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும். ( பரிசு - உங்கள் வலைப்பதிவுக்கு இலவச விளம்பரம் :-)

[ தீபாவளி படங்களில் - உங்கள் ஓட்டு யாருக்கு ? ஓட்டு போட ... ]

Read More...

Wednesday, October 25, 2006

ரஜினியின் அடுத்த படம் !

'லகே ரஹோ முன்னாபாய்' என்ற படத்தை பற்றி ஞாநி போன மாதம் ஆனந்த விகடனில் இவ்வாறு எழுதியிருந்தார்.

"சஞ்சய் தத் & அர்ஷத் ஜோடி போல தமிழில் முன்னாபாய்-2 செய்ய யார் இருக்கிறார்கள்? மறுபடியும் கமல் & பிரபு? அல்லது, ரஜினி & வடிவேலு? விஜய் & விவேக்? அஜீத் & ரமேஷ்கண்ணா? ம்ஹ¨ம்! என் சாய்ஸ்... ஸாரி, நல்ல தயாரிப்பாளர் கிடைத்தால் மட்டுமே சொல்லு என்கிறார் என் அருகே உட்கார்ந்திருக்கும் காந்தி!"


எனக்கு கிடைத்த தகவல் - தமிழில் ஜெமினி பிக்சர்ஸ் ரஜினியை அணுகியிருக்கிறார்கள். ரஜினியும் சிவாஜி முடித்த பின் இந்த படத்தை செய்யலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதற்கு முன் ஆந்திராவில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி நடித்து முடித்திடுவார். ( அதுவும் ஜெமினி பிக்சர்ஸ் ).

வசூல் ராஜா MBBSல் கையை சுட்டுக்கொண்டதனால் இந்த முறை ஜெமினி பிக்சர்ஸ் ரஜினியை அனுகியிருக்கிறார்கள்.

சரி இந்த படத்தில்
* ஹீரோயினாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் ( ஐஸ்வரியா ராய் என்றெல்லாம் ஜோக்கடிக்காதீர்கள் :-)
* தன் சகா சர்க்யூடாக யார் நடித்தால் நன்றாக இருக்கும் ?
* படத்தின் பெயர் என்னவாக இருக்கும் ?

Read More...

Wednesday, October 18, 2006

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

எல்லோருக்கும் என் இனிய அட்வான்ஸ் தீபாவளி & ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்.
தீபாவளியை முன்னிட்டு கடை மூடப்படுகிறது. 25-10-06 அன்று கடை மீண்டும் திறக்கப்படும் :-)

Read More...

நடிகை ராதிகா அதிமுகவிலிருந்து நீக்கம்!

டிகை ராதிகாவை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கி கட்சிப் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திமுகவிலிருந்து வெளியேறிய நடிகர் சரத்குமார், ஜெயலலிதாவை ஆண்டிப்பட்டியில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். அப்போது அவருடன் மனைவி ராதிகாவும் அதிமுகவில் சேர்ந்தார். இருவருக்கும் அப்போது ஜெயலலிதா அதிமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

ஆனால் சரத்குமாரின் கட்டாயத்தின் காரணமாகவே ராதிகா அவருடன் ஜெயலலிதாவை சந்தித்தார் என்று அப்போது கூறப்பட்டது. அதை நிரூபிப்பது போல சரத்குமாருடன் ஜெயலலிதாவை சந்தித்ததோடு சரி, அதன் பின்னர் அதிமுக தொடர்பான எந்த நிகழ்ச்சியிலும் ராதிகா கலந்து கொள்ளவில்லை.

மேலும், ராதிகாவின் ராடான் நிறுவனத்தின் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் சன் டிவியில் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தன. இந்த நிலையில் ராதிகாவை கட்சியிலிருந்து நீக்கி ஜெயலலிதா திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சியின் கொள்கை, கோட்பாடுகளுக்கு முரணாக நடந்து வரும் நடிகை ராதிகா, கட்சிக்கு அவப் பெயரை ஏற்படுத்தி விட்டார்.

எனவே இன்று முதல் ராதிகா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுகிறார். கட்சித் தொண்டர்கள் ராதிகாவுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

ராதிகாவுடன் அதிமுவினர் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று ஜெயலலிதா கூறியிருப்பது, அதிமுக உறுப்பினரான நடிகர் சரத்குமாருக்கும் பொருந்துமா என்பது தெரியவில்லை!
(செய்தி: தட்ஸ் தமிழ் )
(படம்: ரீசண்டா எடுத்த பழைய படம் :-)


Read More...

உள்ளாட்சி தேர்தல் நிலவரம்
கொஞ்சம் ஸ்லோவாக தான் அப்டேட் செய்யமுடிகிறது. மன்னிக்கவும்.

Read More...

Tuesday, October 17, 2006

மதுரை இடைத்தேர்தல் - கூட்டி கழித்து பார்த்தால்..

அதிமுகவிற்கு சரிவு, திமுக, தேமுதிகவிற்கு வளர்ச்சி


இதனால் தி.மு.க.-அ.தி.மு.க. இடையிலான ஓட்டு வித்தியாசம் அதிகமாகி விட்டது. அதே சமயத்தில் அ.தி.மு.க.வுக்கும் தே.மு.தி.க.வுக்கும் உள்ள ஓட்டு வித்தியாசம் குறைந்து விட்டது. அதாவது அ.தி.மு.க.வை விட தே.மு.தி.க. 2,515 ஓட்டு வித்தியாசத்தில்தான் 3-வது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Read More...

மதுரை தேர்தல் - ஜெ, கலைஞர, விஜயகாந்த் கருத்து

கலைஞர் பேட்டி - மதுரை மத்திய தொகுதியில் விஜயகாந்த் வளர்ச்சி பாராட்டத்தக்கது

மதுரை மத்திய தொகுதி தேர்தல் முடிவு எதிர்பார்த்தது தான் - ஜெயலலிதா அறிக்கை


கலைஞர் பேட்டி
கேள்வி:- மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்து இருக்கிறதே?

பதில்:- இது தி.மு.க. கூட்டணிக்கு கிடைத்த வெற்றி. தேர்தல் வாக்குறுதியை இந்த அரசு நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவிக்கவும், மேலும் நலன்களை பெருக்கி நாடு செழிக்க இந்த அரசு பாடுபடும் என்ற நம்பிக்கையிலும் வாக் காள பெருமக்கள் வழங்கிய பரிசாக இதை எண்ணி மகிழ்கிறோம்.

கே:- கடந்த முறையை விட அதிக ஓட்டுகள் கிடைத்து இருக்கிறதே?

ப:- 4 மாத ஆட்சியின் சாதனைக்கு மக்கள் அளித்துள்ள ஓட்டு இது. தேர்தல் முடிந்ததும் உதவிகளை எல்லாம் நிறுத்தி விடுவார்கள் என்று ஜெயலலிதா கூறியதை பொய்யாக்கும் வகையில் ஓட்டுகள் வழங்கப்பட்டு உள்ளது. மகத்தான வெற்றியை வழங்கி இருக்கிறார்கள்.

கே:- உள்ளாட்சி தேர்தல் முடிவு எப்படி இருக்கும்?

ப:- எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கும்.

கே:- உங்கள் சாதனைகளில் பெரிய சாதனையாக எந்த திட்டத்தை கருதுகிறீர்கள்?

ப:- ஒரு கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்கியதையும், ஏழை விவசாயிகளுக்கு தரிசு நிலம் வழங்கியதையும் சிறந்த சாதனை திட்டமாக கருதுகிறேன்.

கே:- விஜயகாந்த் கட்சி 2-வது இடத்தை பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறதே?

ப:- பாராட்டப்பட வேண்டிய முன்னேற்றம்.

கே:- உள்ளாட்சி அமைப்பு களுக்கும் கட்சி தாவல் தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

ப:- 2004-ம் ஆண்டு இதுபற்றி தேர்தல் ஆணையம் சொன்னது. ஆனால் ஜெயலலிதா கண்டு கொள்ளவில்லை. ஆட்சி மாறியவுடன் இப்போது அது பற்றி பேசுகிறார்.

கே:- பஞ்சாயத்து அமைப்புகளில் மாறுதல் தேவை என்று ராமதாஸ் சொல்லி இருக்கிறாரே?

ப:- நானும் இந்த கருத்தை சொல்லி வருகிறேன். காமராஜர் கால ஈரடுக்கு முறை சிறந்தது.

கே:- தி.மு.க. ஆட்சி நீடிக்காது என்று ஜெயலலிதா கூறுகிறாரே?

ப:- மதுரை மீனாட்சி அம்மனிடம் தான் கேட்க வேண்டும்.

கே:- பொய் வழக்கு போடுவதாக ஜெயலலிதா குற்றம் சாட்டி இருக்கிறாரே?

ப:- அது நீதி மன்றத்தில் தெரியும்.

கே:- அன்பழகனையும், ஆற்காடு வீராசாமியையும் சிக்குன் குனியா கொசு என்று ஜெயலலிதா கூறி இருக் கிறாரே?

ப:- அண்ணாவால் பேராசிரியர் பாராட்டப்பட்டவர் சுயமரியாதை உள்ளவர்களுக்கு இது தெரியும். நெடுஞ் செழியனையே உதிர்ந்த ரோமம் என்று சொன்னவர் தான் ஜெயலலிதா.

கே:- இலங்கை தமிழர் பிரச்சினை குறித்துப் பேச அனைத்து கட்சி குழுவை டெல்லிக்கு நீங்கள் அழைத்து செல்ல வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறி இருக்கிறாரே?

ப:- நான் அழைத்தால் எல்லோரும் வருவார்களா? அனைத்து கட்சியினரையும் அழைத்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அழைத்து செல்வேன்.

ஜெ - அறிக்கை

மதுரை மத்திய சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் முடிவு எதிர்பார்த்த ஒன்று தான். ஆளும் கட்சியான தி.மு.க. எல்லாவிதமான முறை கேடுகளையும் நிகழ்த்தி இந்த செயற்கையான வெற்றியை சாதித்து இருக்கிறது.

அ.தி.மு.க. இதைவிட பெரிய தோல்விகளை சந்தித்து இருக்கிறது. அவற்றில் இருந்து மீண்டு வந்து மகத்தான வெற்றி களை சாதித்து இருக்கிறது.

அரசியலில் வெற்றியும், தோல்வியும் நிரந்தரமானது அல்ல. தி.மு.க. பல தில்லு முல்லுகளை செய்து பெற்றி ருக்கும் இந்த போலியான வெற்றி நிரந்தரமானது அல்ல. அறிவிக்கப்பட்டுள்ள வாக்குகளின் எண்ணிக்கை உண்மையாக மக்கள் எண்ணத் தின் பிரதிபலிப்பு அல்ல.

"தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்- தர்மமே மறுபடியும் வெல்லும்!''

என்பதை மெய்ப்பிக்கும் வகையில் மக்களின் உண் மையான மன நிலையையும், விருப்பத்தையும் வெளிப் படுத்துவதற்கான ஜனநாயக ரீதியான வாய்ப்பு விரைவில் அமையும். அந்த நன்நாள் வரும் போது மக்கள் சக்தி வெல்லும். மக்கள் விருப்பப்படி மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி மலரும். இது நிச்சயம் நடக்கும்.

எனவே, அ.தி.மு.க. உடன் பிறப்புகள் எந்தவிதமான தொய்வும் இன்றி எப்போதும் போல் கழகப்பணியும், மக்கள் தொண்டும் ஆற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

விஜயகாந்த் அறிக்கை

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் சென்ற தேர்தலில் பெற்ற வாக்குகளை விட பாதிக்குமேல் கூடுதலாகப்பெற்று, வளர்ந்து வருகிற கட்சி என்பதை நிரூபித்துள்ளது. இதர பெரிய கட்சிகள் கூட்டணி சேர்ந்து இந்த தேர்தலில் போட்டியிட்டன.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்றும் போல் மக்களை நம்பி தனது தனித்தன்மையை நிலைநாட்டி உள்ளது.

ஆளும் கட்சியான தி.மு.க. கழகம், சாதி, மத கட்சிகள் உள்பட நாட்டில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் கூட்டணி சேர்த்து பணம், பலாத்காரம், பதவி ஆகியவற்றின் துணையோடு கள்ளஓட்டுகள் உள்பட வெகுவாகப்போட்டது. அதுதான் தி.மு.க.வுக்கு கிடைத்துள்ள தற்காலிக வெற்றியாகும்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் தமிழ்நாட்டில் தூய்மையான அரசிய கொண்டு வரவேண்டும் என்பதற்காக வாக்காளர்களை அச்சுறுத்தவோ, லஞ்சம் கொடுத்தோ, தவறான ஆசைகளை காட்டியோ, ஒவ்வாத அணுகுமுறைகளை பயன்படுத்தியோ இந்தத் தேர்தலில் வாக்கு கேட்க வில்லை. தேசியமுற்போக்கு திராவிட கழகத்திற்கு கிடைத்த வாக்குகள், அனைத்தும் ஆசாபாசங்களுக்கு உட்படாத நல்ல வாக்குகள். எங்கள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது எடுத்துக் காட்டுக்கிறது.

தவறான முறையில் பெற்ற வெற்றியை விட கண்ணியமான முறையில் பெரும் தோல்வி சிறந்தது என்பர் அரசியல் நோக்கர்கள். அதற்கொப்ப, கள்ளஓட்டுகள் மூலம் பெற்ற வெற்றியை விட, நல்லவாக்குகள் மூலம் கிடைத்த தோல்வியையும், மக்களை பொருத்தவரையில் மகத்தானவெற்றியே ஆகும்.

அடாவடி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, அறவழி அரசியலில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்ற உத்திரவாதத்தை மக்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது பற்றுக்கொண்டு, அராஜகத்துக்கும், அடக்குமுறைகளுக்கும், அதிகாரத்துக்கும், ஆட்படாமல் துணிந்து நின்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு வாக்களித்த தூய உள்ளங்களுக்கு எனது இதயமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.


Read More...

மதுரை தேர்தல் - திமுக வேட்பாளர் வெற்றி

மதுரை மத்திய தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் கவுஸ் பாட்சா 31085 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
( படம் உதவி: தினமலர் )

அதிமுக பெற்ற ஓட்டுகள் : 19909 ( அம்மாவிற்கு ராசியான '9' தை கவனியுங்க :-)

Read More...

Flash: மதுரை - ஓட்டு எண்ணிக்கை துவங்கியது - திமுக முன்னணி!

வலது பக்கம் பார்க்கவும்.
கவுஸ் பாட்சா முன்னிலை
ஜெயா டிவியிலும் திமுக முன்னணி :-)
கேப்டன் கலக்குகிறார்.

Read More...

Monday, October 16, 2006

இந்தியா-பாக் கிரிக்கெட்டை புறக்கணியுங்கள் - பால் தாக்கரே

இந்தியர்கள் அனைவரும் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை உணர்த்துவதற்காக இந்தியா}பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டியை புறக்கணிக்க வேண்டும் என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தற்போது நடைபெற்று வரும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி குறித்து அவரது கட்சி பத்திரிகையில் மேற்குறிப்பிட்டவாறு எழுதியுள்ளார்.

மேலும் அவர், நானும் கிரிக்கெட் ரசிகன்தான். அதற்காக நாட்டின் கவுரவத்தை விட்டுக் கொடுக்க முடியாது. பொதுமக்கள் இப்போட்டியை புற்க்கணித்து நாட்டின் கவுரவத்தை காப்பாற்ற வேண்டும்

ஹிந்து செய்தி: http://www.hindu.com/thehindu/holnus/007200610151820.htm

Read More...

முதலில் சட்டம், பிறகு இடஒதிக்கீடு - சுப்ரீம் கோர்ட்

முறையான சட்டம் இயற்றாமல் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தகூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இதில் முறையான சட்டம் இயற்றாமல் மத்திய அரசு இடஒதுக்கீட்டை அமல் படுத்த கூடாது என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இடஒதுக்கீடு செய்வதற்கான காரணம் மற்றும் பார்லிமென்ட் குழு அறிக்கையையும் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

More updates follow..

Read More...

நாடே பற்றி எரியும் - பரூக் அப்துல்லா

நாடாளுமன்றத் தாக்குதலில் தொடர்புடைய முகமது அப்சலுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால் நாடே பற்றி எரியும் என காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா பிபிசி-ஐபிஎன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறினார்.

முகமது அப்சலுக்கு வழங்கப்பட்டிருக்கும் தண்டனை மிக அதிகமானதாகும். நீங்கள் அவரைத் தூக்கிலிட விரும்பினால் அதைச் செய்யுங்கள், ஆனால் அதன்பிறகு நடப்பவைகளையும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அவருக்கு தூக்குத்தண்டனை விதித்த நீதிபதிகளின் உயிருக்கு உத்திரவாதம் இருக்காது. சில மோசமான நபர்கள் நீதிபதிகளைக் கொலை செய்வார்கள். அவர்களிடமிருந்து நாம் நீதிபதிகளைப் பாதுகாக்க வேண்டும்.

1980களின் தொடக்கத்தில் மக்பூல் பட்டுக்கு மரணதண்டனை விதித்த நீதிபதி நீலகாந்த் கஞ்சு சுட்டுக்கொல்லப்பட்டது போல் மீண்டும் ஒரு சம்பவம் நடக்க வேண்டாம்.

அப்சலின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் நாடே பற்றி எரியும். ஏனெனில் தீவிரவாதிகள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அது ஹிந்து-முஸ்லிம் உறவைப் பாதிக்கும். இந்தியாவில் இவை நடப்பதை நான் விரும்பவில்லை.

அப்சல் ஒன்றும் அறியாத அப்பாவி. நாடாளுமன்றத் தாக்குதலில் அவருக்கு நேரடியான தொடர்பு இல்லை. சரியான வழக்கறிஞர் கிடைத்திருந்தால் அவர் விடுதலையாகி இருப்பார். உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் தவறிழைக்கக் கூடியவர்களே. அப்ஸலுக்கு எதிராக போலீஸôர் தாக்கல் செய்த ஆவணங்கள் அனைத்தும் சரியானவை என்றும் கூற இயலாது.

முஷாரப் தனது நாட்டின் ராணுவ அதிகாரிகளேயே கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாமல் திணறிவருகிறார். அப்படியிருக்கும்போது இந்திய - பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை நடப்பது சாத்தியமில்லை என்றார் அப்துல்லா.

முழு பேட்டி பார்க்க/படிக்க இங்கே செல்லவும் : http://www.ibnlive.com/news/devils-advocate-farooq-abdullah/24055-3.html

அப்சலுக்கு ஆதரவு தெரிவித்த பரூக் அப்துல்லாவை கைது செய்யவேண்டும்: பாரதீய ஜனதா வற்புறுத்தல்

இதற்கு பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரி வித்து உள்ளது. காஷ்மீர் மாநில பாரதீய ஜனதா கட்சி கூட்டம் நடந்தது. அதில் பரூக் அப்துல்லா கருத்து நாட் டையே அச்சுறுத்துவதாக உள் ளது. நீதி மன்ற தீர்ப்பை அவமதிப்பதுடன் சட்டம்- ஒழுங்கு, ஜனநாயகத்தை சீல்குலைப்பதாகவும் உள்ளது. எனவே அவரை கைது செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

60 அடி நீளம், 3.75 கிலோ எடை: அப்சலுக்கு தூக்குக் கயிறு தயார்

இந்தத் தூக்குக் கயிற்றின் நீளம் 60 அடி. எடை 3.75 கிலோ. ஒரு கிலோ கயிறு ரூ.180 வீதம், கூடுதல் விற்பனை வரி, வாட் வரி சேர்த்து இக் கயிற்றின் விலை ரூ.1,820. மெழுகு பூசப்பட்ட "மணிலா' தூக்குக் கயிறுகள் தயாரிப்பதில் பக்ஸர் சிறைக்கு சிறந்த அனுபவமும், தேர்ச்சியும் உண்டு. தூக்கில் இடப்பட்டு தொங்கும் 80 கிலோ எடை வரையில் உள்ள மனிதர்களைத் தாங்கும் வலுப் படைத்தது இந்த தூக்குக் கயிறு.

Read More...

Sunday, October 15, 2006

ஜெ - பேட்டி

இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் சுமார் 62 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல், முதல் கட்ட வாக்குப்பதிவு 72 சதவீதமாக இருந்தது. இன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் சுமார் 62 முதல் 65 சதவீத வாக்குகள் பதிவாகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

ஜெ - பேட்டி

கேள்வி: நீங்கள் வன்முறையை தூண்டிவிட்டதாக முதல்- அமைச்சர் கருணாநிதி குற்றம்சாட்டி இருக்கிறாரே?

பதில்: அர்த்தமற்ற குற்றச்சாட்டு என்ன நடந்தது என்று பத்திரிகையாளர்களுக்கு தெரியும். தொலைக்காட்சியிலும் காட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் அறிவார்கள். என் மீது பழிபோடுவது சரியல்ல. இதை யாரும் ஏற்கமாட்டார்கள்.

கே: சட்டப்படி உங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்று கருணாநிதி கூறி இருக்கிறாரே?

ப: அவர் என்ன வழக்கு போட்டாலும் அதை சட்டப்படி சந்திக்க தயாராக இருக்கிறேன். ஏற்கனவே என் மீது அவர் தொடர்ந்த 12 வழக்குகளில் நான் நிரபராதி என்று கோர்ட்டு என்னை விடுவித்து இருக்கிறது. எந்த வழக்கு போட்டாலும் சந்திக்க தயார்.

ஒரு அறிக்கையை சுட்டிக்காட்டி கிரிமினல் வழக்கு போடப்போவதாக அவர் கூறுகிறார். இந்த நாட்டில் புராணகதையை உதாரணம் காட்டி பேசுவது வழக்கம் தான். அதை ஒரு உவமையாக எடுத்துக்கொள்ள வேண்டுமே தவிர . உண்மையாக எடுத்துக்கொள்ள கூடாது. இதற்காக கிரிமினல் வழக்கு தொடர்வது என்றால் யாரும் பேசமுடியாது.

நேற்று முன்தினம் நடந்த அராஜகம், வன்முறை இந்தியாவில் வேறுஎங்கும் நடைபெற்றதாக வரலாறு இல்லை. அதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. அந்த உண்மையை மறைப்பதற்காக முதல்-அமைச்சர் ஏதேதோ பேசுகிறார். 2001-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் வன்முறை சம்பவங்கள் நடந்ததாக அவர் கூறுகிறார். ஆனால் நேற்று முன்தினம் நடந்தது போன்ற சம்பவங்கள் அப்போது நடைபெற வில்லை.

அந்த தேர்தல் நடந்த போது நான் சட்டமன்ற உறுப்பினர், முதல்-அமைச்சர் போன்ற எந்த பதவியிலும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. கட்சி இருந்தது. அன்றைய சூழ்நிலையை இன்றைய நிலைக்கு ஒப்பிட்டு பேசுவது தவறு.

2001-ம் ஆண்டு மாநில தேர்தல் ஆணையாளராக இருந்தவர் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பாண்டியன். இவர் எனது ஆட்சியில் நியமிக்கப்பட்டவர் அல்ல. 14-2-2000 அன்று தி.மு.க. ஆட்சியில் நியமிக்கப்பட்டவர். 2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் அ.தி.மு.க.வினர் வன்முறையில் ஈடுபட்டு இருந்ததால் மு.க.ஸ்டாலின் எப்படி மேயராக தேர்ந் தெடுக்கப்பட்டு இருக்கிறார். இதற்கு கருணாநிதி பதில் சொல்ல தயாராப தான் செய்த தவறுகளை மூடி மறைக்க முடியாததால் இது போன்ற குற்றச்சாட்டுகளை கூறுகிறார்.

காவல் துறையினர் பார்த்துக் கொண்டு நின்றதாகவும் அவர்கள் முன்னிலையிலேயே குண்டர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் சிலபத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது.

ஆனால் காவல்துறை யினரையே குண்டர் போல் பயன்படுத்தி அடித்து நொறுக்கி இருக்கிறார்கள்.

கே: தவறாக நடந்து கொண்ட காவல்துறையினர் மீது என்ன முறையில் நடவடிக்கை எடுக்க வற்புறுத்துவீர்கள்?

பதில்: இப்போது எதுவும் செய்ய முடியாது என்றாலும் நீதிமன்றத்தை அணுகி இருக்கிறோம். மாநில தேர்தல் அதிகாரி சந்திரசேகரன், போலீஸ் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் லத்திகா சரண் மற்றும் சம்பந்தப்பட்ட காவல் துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று கோர இருக்கிறோம்.

இப்போது நீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை. நியாயம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

தி.மு.க. அரசு விரைவில் தூக்கி ஏறியப்படும். அ.தி.மு.க. மக்கள் ஆதரவுடன் மீண்டும் ஆட்சி அமைக்கும். அப்போது தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்போம். அந்த நாள் வெகுதொலைவில் இல்லை.

கே: விஜயகாந்த் தேர்தல் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறாரே?

ப: இந்திய கம்ïனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு, பாரதீய ஜனதா போன்ற கட்சிகளும் கண்டனம் தெரிவித்து உள்ளன. மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு நீதிமன்றத்தை அணுகி இருக்கிறது.

13-ந்தேதி சென்னையில் நடந்தது தேர்தலே அல்ல. மக்களை இதில் பங்கேற்க விடாமல் ரவுடிகளும், குண்டர்களும் அவர்களாகவே ஓட்டுபோட்டு இருக்கிறார்கள். எனவே 155 வார்டுகளிலும் மறுதேர்தல் நடத்த வேண்டும். ராணுவத்தின் பாதுகாப்புடன் தேர்தல் நடத்த வேண்டும்.

கே: 17 ஓட்டுசாவடிகளில் நடைபெறும் மறுவாக்குப்பதிவை நீங்கள் புறக்கணித்து வீட்டீர்களே?

ப: 155 வார்டுகளில் மறு தேர்தல் வேண்டும் என்பது தான் எங்கள் கோரிக்கை.

கே: தேர்தல் வன்முறையை தொடர்ந்து அரசியலில் அணி மாற்றம் வருமா?

ப: நிச்சயம் வரும். அதற்கான அறிகுறிகள் ஆரம்பித்து விட்டன.

கே: நரகாசுரன் வதம் பற்றி நீங்கள் அறிக்கையில் குறிப்பிட்டதற்காக வழக்கு தொடருவோம் என்று கருணாநிதி அறிவித்து இருக்கிறாரே? இது பற்றி உங்கள் கருத்து என்ன?

ப: கருணாநிதி இதுவரை எத்தனையோ முறை இது போன்ற உவமைகளை சொல்லி இருக்கிறார். நேற்று முன்தினம் அவரால் நடத்தப்பட்ட வன்முறை காரணமாக ஆட்சி செய்யும் தார்மீக உரிமையை அவரும், தி.மு.க.வும் இழந்து விட்டது. இதற்கு பொறுப்பு ஏற்று பதவி விலகவேண்டும். ஆனால் அப்படி எல்லாம் செய்வார் என்று நம்பமுடியாது.

கே: எ.ம்.எல்.ஏ.க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளார்ப

ப: நிறையபேர் கைதாகி இருக்கிறார்கள். சிலர் விடுதலையாகி இருக்கிறார்கள். சிலர் சிறையில் இருக்கிறார்கள். வசந்தா தவமணி என்ற அ.தி.மு.க. வேட்பாளர் இந்த சம்பவத்தை கண்டித்து சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். அவருக்கு ஆறுதல் சொல்லி வழக்கு மூலம் சந்திக்கலாம் என்று எடுத்து கூறி உண்ணாவிரதத்தை முடித்து வைத்து இருக்கிறேன்.

கே: அ.தி.மு.க.வை சேர்ந்த சிலர் சாயம் பூசி ஏமாற்றியதாக குறை கூறப்பட்டு இருக்கிறதே?

ப: அது தி.மு.க. நடத்திய நாடகமாக இருக்கலாம். அ.தி.மு.க. தொண்டர்கள் தாக்கப்பட்டு காயம் அடைந்து இருக்கிறார்கள். வட சென்னை மாவட்ட செயலாளர் சேகர்பாபு, தென் சென்னை மாவட்ட செயலாளர் கலைராஜன் ஆகியோரை போலீசாரே சுற்றி வளைத்து அடித்ததை தொலைக்காட்சியிலேயே பார்த்தோம். இது போன்ற எத்தனையோ பேர் தாக்கப்பட்டதை கொச்சைப்படுத்தி பேசுவது முறையல்ல.

வாக்குசாவடிகளில் பெண் அதிகாரிகளை தி.மு.க.வினர் ஆபாசமாக திட்டியதால் இனி தேர்தல் பணிக்கே போகமாட்டோம் என்று பல பெண் அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள். இதனால் கருணாநிதியின் சுயரூபம் தெரிந்துவிட்டது. இந்தியா முழுவதும் உண்மை புரிந்து விட்டது. இனி அவர் ஆயிரம் பேட்டிகள் கொடுத்தாலும், வழக்கு தொடர்ந்தாலும் மக்கள் நம்பமாட்டார்கள். அவருக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார்.

கே: அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

ப: இந்த ஆட்சியினர் காவல்துறையினரை குண்டர்படை போல் பயன்படுத்தியதை மக்களே நேரில் பார்த்து இருக்கிறார்கள். ஜனாதிபதிக்கு புகார் தந்தி கொடுத்தும் பயன் இல்லை. அவர் தன்னிச்சையாக எதுவும் செய்ய முடியாது. மாநில அரசை வீழ்த்த வேண்டும் என்றால் கவர்னர் பரிந்துரை செய்ய வேண்டும். இந்த ஆளுனர் அதை செய்வார் என்று எதிர்பார்க்க முடியாது. மத்திய அரச தமிழக அரசை நீக்க வேண்டும் என்றால் மந்திரி சபை கூட்டத்தில் முடிவு எடுக்க வேண்டும். அதிலும் இங்குள்ள கூட்டணி கட்சிகள் இருக்கின்றன. எனவே பிரதமருக்கோ, ஜனாதிபதிக்கோ நான் கடிதம் அனுப்பவில்லை.

மக்கள் நேரம் பார்த்து நல்ல முடிவு எடுப்பார்கள். இப்போது கடவுள்தான் தமிழகத்துக்கு வழிகாட்ட வேண்டும். தமிழக மக்கள் அப்பாவிகள். எனவே கடவுள் நல்லவழி காட்டுவார்.

கே: பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டு இருக்கிறார்களே?

ப: அதற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளேன்.

கே: தி.மு.க. வினர் தாக்கப்பபட்டுள்ளதாக கருணாநிதி கூறி இருக்கிறாரே?

ப: அப்படி கூறுவது நாடகம். அ.தி.மு.க.வினர்தான் அடிப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார்கள்.

கே: மக்கள் சக்தியை ஒன்று திரட்டி போராட்டம் நடத்துவீர்களா?

ப: மக்கள் சக்தியை திரட்ட வேண்டிய அவசியம் இல்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களே தூக்கி ஏறிவார்கள். அதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.

கே: அ.தி.மு.க. வேட்பாளர்கள் தி.மு.க.வில் சேர்ந்து இருக்கிறார்களே?

கட்சி தாவல் தடை சட்டம்

ப: ஏற்கனவே உள்ளாட்சி தேர்தலில் கட்சிதாவல் தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்றுகூறி இருக்கிறÚன். அப்படி கொண்டு வந்தால் எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் போல் பாதுகாப்பாக இருக்க முடியும். கட்சியை விட்டு தாவினால் பதவி பறிபோகும் என்ற பயம் இருக்கும்.

சென்னையில் 107-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் சியாமளா, 109-வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் மேரிடேனியல் ஆகியோர் தி.மு.க.வின் மிரட்டலுக்கு பயந்தும், உயிருக்கு பயந்தும், அந்த கட்சியில் சேர்ந்து இருக்கிறார்கள். தேர்தல் முன்பே இந்த நிலை என்றால் தேர்தல் முடிவுக்கு பிறகு என்ன நிலை ஏற்படும எனவேதான் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறேன்.

Read More...

Saturday, October 14, 2006

ஐயோ ! அநீதி !

அப்சலுக்கு மரணதண்டனை பற்றி துக்ளக்கில் வந்த தலையங்கம்....
( உங்க கருத்தை வலது பக்கம் இருக்கும் வாக்குபெட்டியில் போட்டு போங்க )


ஐயோ, பாவம்! ரொம்ப பரிதாபமாக இருக்கிறது. சட்டத்தின் பெயரால், ஒருவருக்கு இழைக்கப்படுகிற அநீதி, இந்த அளவிற்கா போகும்! இது என்ன ஜனநாயக நாடா? ஒரு மனிதனின் உயிர், இங்கே மண்ணுக்கு சமானமா? நினைத்தால், ஒருவன் உயிரை எடுத்து விடலாமா?


9 பேரை பலி கொண்ட, இந்திய பாராளுமன்றத் தாக்குதலை, திட்டமிட்டதற்காகவும், சதி வேலை செய்ததற்காகவும், முஹமது அஃப்ஸல் என்கிற தீவிரவாதி, கீழ் கோர்ட்களில் தண்டனை பெற்று, இப்போது சுப்ரீம் கோர்ட்டினாலும் "தூக்கு தண்டனை தான்' என்ற தீர்ப்பைப் பெற்றிருக்கிறான். இந்த மாதிரி அநியாயம் எங்காவது நடக்குமா? அட, கீழ்க் கோர்ட்கள் தான் தூக்கு தண்டனை கொடுத்தன என்றால், சுப்ரீம் கோர்ட்டாவது, விடுதலை அளித்திருக்க வேண்டாமா? கீழ் கோர்ட்டில் சொன்னதையே சுப்ரீம் கோர்ட்டும் சொன்னால், என்ன அர்த்தம்? நீதி செத்து விட்டது என்றுதானே அர்த்தம்?


அதனால்தான், அஃப்ஸல் ஆதரவாளர்கள் "அநீதி இழைக்கப்பட்டு விட்டது' என்கிறார்கள். அதுவும் எப்பேர்ப்பட்ட ஆதரவாளர்கள்! காஷ்மீரின் (காங்கிரஸ் கட்சி) முதல்வர், தூக்கு தண்டனை கூடாது என்கிறார். அறிவாளிகள் சொல்கிறார்கள். அப்புறம் என்ன? சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை, மூலையில் தூக்கிப் போட்டுவிட்டு, அஃப்ஸலுக்கு கருணை காட்ட வேண்டியது தானே! அஃப்ஸலின் குடும்பம் என்ன பாடுபடும், என்பதை நினைத்துப் பார்க்க வேண்டாமா? பாராளுமன்றத் தாக்குதலில் இறந்தவர்களின் குடும்பத்தினர் எல்லாம் அநாதைகளாகி விட்டனர் என்றால், அது தவிர்க்க முடியாதது.
அது காலத்தின் கோலம். ஆனால் அஃப்ஸல் குடும்பம் அப்படிப்பட்டதா?


அஃப்ஸல் என்ன சாதாரண மனிதனா? தீவிரவாதி, ஐயா! அதுவும் காஷ்மீர் தீவிரவாதி! அப்படிப்பட்டவனை தூக்கில் போட்டால், காஷ்மீர் கொந்தளிக்காதா? இப்போது காஷ்மீரில் அமைதி நிலவுகிறது; ஒரு நாளைக்கு 9 பேர் தான் கொல்லப்படுகிறார்கள்; இந்த சாந்தி மறைந்து விட வேண்டுமா? அட, அதுதான் போகட்டும் என்றால், மதச்சார்பின்மை என்ன ஆவது? அஃப்ஸலை
தூக்கிலிட்டால், அது அசல் மதவெறி அல்லவா?


அதனால்தான் ஜனாதிபதி கூட, அஃப்ஸல் குடும்பத்தின் மீது பரிதாபப்பட்டு, அவர்கள் கோரிக்கையை ஏற்று, அவர்களைச் சந்தித்திருக்கிறார். அதுதான் மனிதாபிமானம். இனிமேல் யாருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டாலும், அவர்கள் சென்று, ஜனாதிபதியைச் சந்தித்து, நேரிடையாகப் பேசி, கருணை கோரலாம். இது புதியதோர் புரட்சி மரபு! ஆனால் இதை வைத்துக்கொண்டு, அஃப்ஸல் கருணைக்காக மன்றாடுவதாக நினைத்து விடக்கூடாது. அவன் சுத்த வீரன். அவன் கருணை கேட்கவில்லை. அவனுடைய குடும்பத்தினர்தான் கேட்கிறார்கள்; அவர்கள் விவேகிகள்; சுப்ரீம் கோர்ட்டும் தூக்கு தண்டனையை ஊர்ஜிதம் செய்து விட்ட பிறகு, ஜனாதிபதியின் (மத்திய அரசின்) கருணைதான், அஃப்ஸலைக் காப்பாற்ற முடியும் என்பதை உணர்ந்த விவேகிகள். ஆக, வீரமும்,
விவேகமும் ஒன்று சேர்ந்த குடும்பம்! இதைவிட என்ன வேண்டும், மெய்சிலிர்த்து போவதற்கு?


பாராளுமன்றமாம்; அது தாக்கப்பட்டதாம்; பலர் செத்தார்களாம்; பல குடும்பங்கள் பரிதவித்தனவாம்! யாருக்கு வேண்டும் இந்த கண்ணீர்க் கதையெல்லாம்! அது முடிந்து போன கதை. இப்போதைய பிரச்னைகள் இரண்டுதான். ஒன்று – மதச்சார்பின்மை; இரண்டு – காஷ்மீர் கொந்தளிக்காமல் பார்த்துக் கொள்வது; கொசுறு தேவைப்பட்டால், இருக்கவே இருக்கிறது, மனித உரிமை!


ஆகையால், தேசப்பற்று மிக்க காங்கிரஸ் கட்சியின் காஷ்மீர் முதல்வரும், அறிவாளிகளும் சொல்வதுபோல, அஃப்ஸலுக்கு, அவன் கோராத கருணையைக் காட்டி, தூக்குத் தண்டனையை நிறுத்த வேண்டும். அப்படி யாரையாவது தூக்கில் போட்டுத்தான் தீர வேண்டும் என்றால் – பாராளுமன்றத் தாக்குதலில், உயிர் இழந்த பாதுகாப்பு வீரர்கள் புதைக்கப்பட்ட இடங்களைத் தோண்டி, அவர்களுடைய பிணங்களை எடுத்து, அவற்றை தூக்கில் போடட்டும். அப்போதுதான், தீவிரவாதிகளுக்கு தூக்குத் தண்டனை தருவதை ஆதரிக்கிற மதவெறியர்களுக்கு புத்தி வரும்.
( நன்றி: துக்ளக் )

Read More...

ஒரு...

இந்த வாரம் விகடனில் ஓ-பக்கங்களில் வந்த ஒரு..

ஒரு குழப்பம்

இயக்குநர் லிங்குசாமி: ‘‘உங்களுடைய இத்தனை வருஷ வாழ்க்கையில் என்னிக்காவது ஒரு கணம், ஒரு நிமிஷம், கடவுள் இருந்தாலும் இருப்பார்னு எப்பவாவது உங்களுக்குத் தோணியிருக்கா?’’

கருணாநிதி: ‘‘அந்த ஒரு கணம், என் வாழ்க்கையின் குறுக்கே வராததற்கு ஒருவேளை கடவுள்தான் காரணமோ?’’

ஒரு சிரிப்பு
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கொசுக்களை ஒழித்துக்கட்டுவோம் - விஜயகாந்த்

ஒரு கவலை

நாட்டில் வேலைக்குச் செல்லும் வயதில் இருப்போரில் 58 சதவிகிதம் பேருக்கு 2004-05-ம் ஆண்டில், வருடம் முழுவதும் ஒரு வேலையும் கிடைக்கவில்லை. வேலை இன்மைப் பிரச்னை கிராமங்களைவிட நகரங்களில் அதிகம்; ஆண்களை விட பெண்களுக்கு அதிகம் என்று இது பற்றிய ஆய்வு சொல்கிறது!

ஒரு மலர்ச் செண்டு

காகிதம் பொறுக்கும் சந்த்ராஜ் மெளரியாவுக்கு!

கருத்தரங்கில் பங்கேற்க பிரேசில் புறப்பட்டபோது, பிசினஸ் வகுப்பு டிக்கெட் இருந்தும் அவரை அனுமதிக்க மறுத்த அலிடாலியா ஏர்லைன்ஸ், இப்போது அவரிடம் மன்னிப்புக் கேட்டு நஷ்டஈட்டுச் சலுகை அளித்திருக்கிறது. இந்தியாவிலிருந்து உலகில் எந்த இடத்துக்கு வேண்டுமானாலும் ஒரு முறை சென்று திரும்புவதற்கான டிக்கெட்டை அவருக்கு இலவசமாகத் தருகிறது. சொகுசு வகுப்பில் என்றால் மூன்று பேருக்கு இலவசம். சாதா வகுப்பெனில், ஐந்து பேருக்கு! ‘சாதாவே போதும். அப்போதுதான் என்னுடன் குப்பை பொறுக்கும் சக தோழர்கள் நான்கு பேரை கூட்டிச் செல்ல முடியும்’ என்றிருக்கிறார் சந்த்ராஜ்!ஒரு குட்டு

திருமாவளவனுக்கு! முன்னர் தி.மு.க. கூட்டணியி லிருந்து விலகியபோது, அந்த அணி சார்பில் வென்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தவர், இப்போது அ.இ.அ.தி.மு.க. அணியிலிருந்து விலகியதும், அந்தக் கூட்டில் ஜெயித்த தன் கட்சியின் இரு எம்.எல்.ஏ-க்களையும் விலகச் சொல்வாரா என்று கேட்டதற்கு, அவர் தந்த பதிலுக்காக! அப்போது தங்கள் கட்சிச் சின்னத்தில் ஜெயிக்காமல் உதயசூரியன் சின்னத்தில் நின்று ஜெயித்ததால் விலகலாம். இப்போது, இரட்டை இலையில் நிற்காமல் சொந்தச் சின்னத்தில் ஜெயித்ததால், விலகத் தேவையில்லையாம்!

ஒரு அட்வைஸ்

‘அரசியலில் குதிப்பேன்.’ என்று அறிவித்திருக்கும் நடிகர் பிரபுவுக்கு. ‘ப்ளீஸ்... வேண்டாமே!’ஒரு புதிர்

அக்டோபர் 13, 15 தேதிகளில் தமிழகத்தில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. இதே போன்ற தேர்தல் 2001-ல் நடந்தபோது, எந்த ஊரில் 100-க்கு 62 பேர் ஓட்டு போட வில்லை?

1. சென்னை

2. கடையநல்லூர்

3. சின்னதாராபுரம்

படித்தவர்கள் அதிகம் இருக்கக்கூடிய சென்னை மாநகரில் தான். அதிலும், பெசன்ட் நகர் போன்ற மெத்தப் படித்தவர்கள் மிகுதியாக உள்ள வார்டில் 75 சதவிகிதம் பேர் ஓட்டுப் போடவில்லை. மிக அதிக வாக்குப்பதிவு கிராமங்களில்தான். கிராமப் பஞ்சாயத்துகளில் 65 சதவிகிதம் பேர் ஓட்டுப் போட்டார்கள். நகராட்சிகளில் 55 சதவிகிதம். சென்னை தவிர, இதர மாநகராட்சிகளில் 45 சதவிகிதம். சென்னையில் மட்டும் சுமார் 38 சதவிகிதம்தான். மற்ற நேரங்களில் தெருவிளக்கு, சாக்கடை, சொத்து வரி பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் வாசகர் கடிதம் எழுதி அங்கலாய்க்கிறவர்கள், ஓட்டுப் போடும் வாய்ப்பை அலட்சியப்படுத்துவது ஏன்?

Read More...

உள்ளாட்சி தேர்தல் - செய்திகள், படங்கள்

* வழக்கமாக சில ஓட்டு சாவடிகளில் கள்ள ஓட்டு போடுவார்கள். அதுவும், மதியத்திற்கு பின் தான் கள்ள ஓட்டு போடுவார்கள். ஆனால் நேற்று காலை 7 மணிக்கு ஓட்டு பதிவு தொடங்கியதுமே கள்ள ஓட்டு போட தொடங்கிவிட்டார்கள்.
காலை 10 மணிக்கு சாலிகிராமத்தில் உள்ள எனது வார்டு ஓட்டு சாவடிக்கு சென்றேன். அங்கு நடந்த சம்பவத்தை பார்த்த பின் எனக்கு ஓட்டுப் போட மனம் இல்லை. இதனால் ஓட்டுப் போடாமல் திரும்பிவிட்டேன். - விஜயகாந்த்

* 130-வது வார்டு தேர்தலை ரத்து செய்ய வேண்டும்
`மற்ற கட்சி ஏஜெண்டுகளை விரட்டி விட்டு தி.மு.க.வினரே ஓட்டுப்போட்டனர்'
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

* "என் ஓட்டை யாரோ போட்டு விட்டார்கள்" சுப்பிரமணியசுவாமி வேதனை

* அதிகாரிகள், போலீசாரை உள்ளே வைத்து வாக்குச்சாவடிக்கு பொதுமக்கள் பூட்டு போட்டனர் சினிமாவை மிஞ்சும் காட்சிகள் அரங்கேற்றம்

* அ.தி.மு.க. அலுவலகத்தில் கூடிய விஜயகாந்த் கட்சி தொண்டர்கள்
வேட்பாளரும் ரத்த காயத்துடன் வந்தார்

* வாக்குச் சாவடிக்குள் அதிரடியாக புகுந்து ஓட்டுப் பெட்டியை தூக்கிச் சென்று கிணற்றுக்குள் போட்டனர் மதுராந்தகம் அருகே வன்முறை

* சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்யக்கோரி அ.தி.மு.க. வழக்கு
பதில் தருமாறு தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு உத்தரவு.

* அ.தி.மு.க. கூட்டணி சதி ஆலோசனையின் வெளிப்பாடே தேர்தல் வன்முறை கருணாநிதி அறிக்கை.

* சென்னை மாநகராட்சிக்கு ராணுவத்தை வரவழைத்து மறுதேர்தல் நடத்தவேண்டும்
ஜெயலலிதா பேட்டி

* வன்முறையை தூண்டிவிட்டதாக ஜெயலலிதா மீது வழக்கு தொடர வேண்டும்
தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க. புகார்.

கீழே படங்கள் பார்க்க

Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting


Photobucket - Video and Image Hosting
Photobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image HostingPhotobucket - Video and Image Hosting
Read More...

Friday, October 13, 2006

உள்ளாட்சி தேர்தல் - அட்டகாசம், வன்முறை, கள்ள ஓட்டு

சென்னை மாநகராட்சிக்கு இன்று நடைபெற்ற தேர்தலில் வன்முறையும், அராஜகமும் நடைபெற்றது. பல இடங்களில் குண்டர்களின் துணை யுடன் கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக புகார்கள் வந்துள்ளன. வாக்காளர்கள் அடித்து விரட்டப் பட்டதாகவும், வேட்பாளர்கள் தாக் கப்பட்டதாகவும் குற்றச் சாட்டுக்கள் எழுந்துள்ளன.

* டிவி நிருபருக்கு அடிஉதை

* உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக படுகொலை மறு தேர்தல் நடத்த வேண்டும், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஜெயலலிதா

* வேட்பாளர்களை துரத்தி விட்டு கள்ள ஓட்டு தேர்தலை ரத்து செய்க விஜயகாந்த் ஆவேசம

* மாநகராட்சி தேர்தலில் இன்று நடை பெற்ற வன்முறை சம்பவங்களை கண்டித்து போலீஸ் கமிஷனரிடம் முறையிட சென்ற தேமுதிக தொண்டர்களை போலீசார் தடியடி சென்று கலைத்தனர். போலீஸ் தடியடியில் பலர் காயமடைந்தார்கள்.

* மாநகராட்சி தேர்தலை ரத்து செய்க ஜனாதிபதி, கவர்னருக்கு வைகோ கடிதம்

* உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தோல்விக்கான காரணத்தை அவர் தேடத் தொடங்கிவிட்டார் - கலைஞர்

* மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை - பிஜேபி புறக்கணிப்புசென்னை உட்பட நான்கு மாநகராட்சிகள், 45 நகராட்சிகள், 23 மூன்றாம் நிலை நகராட்சிகள், 281 பேரூராட்சிகள், 195 ஒன்றியங்களில் முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. சென்னை மாநக ராட்சிக்கு நடை பெற்ற தேர்தலில் பெரும்பாலான இடங்களில் வன் முறை நிகழ்ந்தது. கள்ள ஓட்டுக்கள் போடப்பட்டதாக புகார்கள் கூறப் பட்டுள்ளன.


ராயபுரம் எக்ஸ்பிரஸ் சாலை, மீன்வளத்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாக அதிமுகவினர் புகார் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது. அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீசார் திரண்டு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்கள்.

ஜாபர்கான்பேட்டை கங்கை அம்மன் கோயில் தெரு, வி.எஸ்.என்.கார்டன் ராகவன் காலனி ஆகிய இடங்களில் உள்ள 15 வாக்குச்சாவடிகளில், திமுகவினர் கள்ள ஓட்டு போட முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதிமுக வேட்பாளர் கடும்பாடி அவர்களை தடுத்தபோது அவருக்கு அடிஉதை விழுந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் அதிரடிப்படை யினர் அந்த இடத்திற்கு வந்ததும் அவரை தாக்கிய கும்பல் ஓடி விட்டது. இதை எதிர்த்து அதிமுகவினர் மறியலில் ஈடுபட முயன்றபோது போலீசார் அவர்களை கைது செய்தனர். செம்பியம் போலீஸ் நிலையம் அருகே 51வது வட்டத்தில் 20 பேர் கொண்ட ஒரு கும்பல் நுழைந்து பொதுமக்களை அச்சுறுத்தி கள்ள ஓட்டு போட்டதாக அதிமுக உறுப்பினர் ஆசாத் புகார் தெரிவித்துள்ளார். அந்த இடத்திற்கு அதிரடிப்படை யினர் வந்ததும் அவர்கள் ஓடி விட்டனர். அயனாவரம் சாலவாயல்சாலை வாக்குச்சாவடிக்கு கள்ள ஓட்டு போட வந்த ஒரு கும்பலை வாக்குச்சாவடி யில் இருந்த ஏஜெண்டுகள் தடுத்தனர். தகவல் அறிந்து போலீசார் அந்த இடத்திற்கு வந்ததும் அந்த கும்பல் ஓட்டம் பிடித்தது.

டிவி நிருபருக்கு அடிஉதை
ஜி.என்.செட்டி சாலை செவிடர், குருடர் பள்ளி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடப்படுவதாக தகவல் கிடைத்ததும் அதனை படம் பிடிக்க சென்ற தனியார் டிவி நிருபர் மற்றும் கேமராமேன் தாக்கப்பட்டனர். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்தார். அவர் தற்போது மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிந்தாதிரிப்பேட்டை பல்லவன் சாலை, முனீஸ்வரன் கோயில் அருகே உள்ள வாக்குச்சாவடியில் அதிமுக வேட்பாளர் நாகமணி மற்றும் அவரது ஏஜெண்ட் குணசேகர் ஆகியோர், திமுகவினர் கள்ள ஓட்டு போடுவதாக கூறி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

வடபழனி நூறடி ரோடு, ராம் தியேட்டர் எதிரேயுள்ள வாக்குச்சாவடி களிலும் கள்ள ஓட்டு போடப்பட்ட தாக புகார்கள் தெரிவிக்கப்பட்டன. ராயபேட்டை பீட்டர்ஸ் காலனி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்ற 4 பேரை போலீசார் பிடித்துச் சென்றனர். திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் எதிரேயும் இது போன்ற முறைகேடு கள் நடந்ததாக கூறப்படுகிறது.

ஆயிரம் விளக்கு பகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் ஒரு கும்பல் உள்ளே புகுந்து வாக்குச்சீட்டுக்களை கைப்பற்ற முயன்றபோது அங்கிருந்த அதிகாரிகள், தாங்கள் தேர்தல் பணியில் ஈடுபட முடியாது என்று கூறியதையடுத்து காவல்துறை அதிகாரிகள் சமாதானப்படுத்தி னார்கள்.

அதே பகுதியில் நூல் நிலைய வாக்குச்சாவடியில் இன்று காலை 8.30 மணிக்கு ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட முயற்சி செய்ததாக சுயேட்சை வேட்பாளர் லதா என்கிற பிளாரன்ஸ் புகார் தெரிவித்துள்ளார். வாக்கு போட வந்த பொதுமக்களை அந்த கும்பல் விரட்டியடித்ததாகவும் இதில் சுஜாதா என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கோபாலபுரத்தில் ஒரு பள்ளியில் உள்ள வாக்குச்சாவடியில் கதவை பூட்டி விட்டு ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


தண்டையார்பேட்டையில் 7வது வட்டத்தில் அதிமுக சார்பில் பெண் வேட்பாளர் துளசியும், பாமக சார்பில் பத்மாவும் போட்டியிடுகிறார்கள். இன்று காலை 9.30 மணிக்கு சேணியம்மன் கோயில் தெருவில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போடுவதாக கேள்விப்பட்டு துளசி அவரது கணவர் ஏழுமலை மற்றும் சில அதிமுகவினர் அங்கு விரைந்தனர்.

அவர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது. துளசியின் முதுகில் பெஞ்ச் வந்து விழுந்ததால் காயமடைந்தார். அவரது கணவர் ஏழுமலை மற்றும் சிலருக்கு கத்திவெட்டு விழுந்தது. இதில் ஏழுமலைக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்கள் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றனர்.

இதை தொடர்ந்து துளசி தலைமை யில் சுமார் 200 பேர் தண்டையார் பேட்டை காவல் நிலையத்திற்கு சென்று முற்றுகையிட்டு கள்ள ஓட்டை தடுக்கும்படி கோஷம் எழுப்பினார்கள். காவல் நிலையத்திற்கு வெளியே மறியல் செய்ய முற்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ராஜேந்திரன், உதவி கமிஷனர் முரளி ஆகியோர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று தடியடி நடத்தி மறியல் செய்ய முயன்றவர்களை கலைந்து போக செய்தனர்.

இதே போன்று 15வது வட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் ராயபுரம் பகுதி செயலாளர் கட்பீஸ் பழனியை எதிர்த்து அதிமுக சார்பில் ராமஜெயம் போட்டியிடுகிறார். கள்ள ஓட்டு போடுவதாக தகவல் கிடைத்ததும் 10 மணியளவில் ராமஜெயம் தண்டையார்பேட்டை காவல் நிலையத்திற்கு தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு அவர்கள் மறியலில் ஈடுபட முயன்ற போது போலீசார் அவர்களிடம் பேசி கலைந்து போக செய்தனர். 8வது வட்டத்தில் திமுக பகுதி செயலாளர் டன்லப் ரவியை எதிர்த்து அதிமுக சார்பில் சந்தானம் போட்டியிடுகிறார்.

இங்குள்ள காரனேஷன் நகர் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டு போடு வதற்காக வரிசையில் நின்றிருந்த பொதுமக்கள் மீது சிலர் சோடா பாட்டில்களை வீசி விரட்டி அடித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தெரிய வந்ததும், சந்தானம் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றபோது அவர்கள் மீதும் சோடா பாட்டில்கள் மற்றும் கற்கள் வீசப்பட்டன. இந்த சம்பவத்தில் அதிமுக வேட்பாளர் சந்தானம், நேதாஜி கணேசன் ஆகியோருக்கு உள்காயம் ஏற்பட்டது. இச்சம்பவத்தால் அப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

வண்ணாரப்பேட்டை, கொருக்குப் பேட்டை, தண்டையார் பேட்டை ஆகிய இடங்களில் கள்ள ஓட்டு போட முயன்றவர்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களால் அப்பகுதி களில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. பொதுமக்களிடையே அச்சம் காணப்பட்டது.


உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக படுகொலை மறு தேர்தல் நடத்த வேண்டும், பொது மக்களுக்கு பாதுகாப்பு இல்லை - ஜெயலலிதா

சென்னை மாநகரத்தில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை. நான் வருவதற்கு முன்பு இதே வாக்குச் சாவடியில் காலை 7.30 மணிக்கு திமுக குண்டர்கள் இந்த வாக்குச்சாவடியை கைப்பற்றி வாக்களித்திருக்கிறார்கள்.

இதே போல் சென்னை நகரில் எல்லா வாக்குச்சாவடிகளையும் குண்டர்கள் துணையுடன் திமுகவினர் கைப்பற்றி பொது மக்களை வாக்களிக்க விடாமல் அவர்களே ஓட்டுப் போட்டிருக் கிறார்கள். சென்னை முழுவதுமே இத்தகைய நிலைமை உள்ளது. இது குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர், இணை ஆணையர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்தால், அப்படி எதுவுமே, எங்குமே நடைபெறவில்லை என்றும், தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகிறது என்றும் கூறுகிறார்கள்.

எல்லா இடங்களிலும் பதட்டமும், பீதியும் நிலவுகிறது. எந்தப்பகுதியிலும் அதிமுக வேட்பாளர்களே வாக்குச் சாவடிக்கு அருகே செல்ல முடியாத பயங்கரமான சூழ்நிலை இருக்கிறது. இதனால் அவர்கள் அதிமுக தலைமைக்கழகத்தில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். எழும்பூர் மதிமுக வேட்பாளர்கள் குண்டர்களால் வெட்டப்பட்டு, மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக்கிறார். சென்னை மாநகரம் முழுவதும் அதிமுக வேட்பாளர்கள்மற்றும் கூட்டணி கட்சியின் வேட்பாளர்களின் உயிர்களுக்கும் பாதுகாப்பு இல்லை.

எனவே சென்னை உயர்நீதி மன்றத்தில் புகார் தெரிவித் திருக் கிறோம். அதிமுக வழக்கறிஞர்கள் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு சென்று வழக்கு தொடர்ந்திருக் கிறார்கள். இந்த தேர்தல் ஜனநாயக படுகொலை, கேளிக்கூத்தாக உள்ளது. எனவே உடனடியாக இந்த தேர்தலை நிறுத்த வேண்டும்.

மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும். அப்படி தேர்தல் நடத்தும் போது தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக போலீசை பயன்படுத்தக் கூடாது. எல்லைப்பாதுகாப்பு படை, துணை ராணுவம் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் உத்தரவிட வேண்டும் என்று கேட்டு கொள்ளவிருக்கிறோம்.

147வது வார்டில் திமுக குண்டர்கள் புகுந்து வாக்குப்பெட்டியை எடுத்து வந்து நடுத்தெருவில் வைத்து நிதானமாக கள்ள ஓட்டு போட்டிருக் கிறார்கள். அதிமுக கையும், களவுமாக பிடித்து அந்த வாக்குப்பெட்டியை எடுத்து வந்து என்னிடம் காட்டுவதாக சொல்லியிருக்கிறார்கள்.

கேள்வி: தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறினீர்களா?
பதில்: மதுரை மத்திய தொகுதியில் இதே போல வன்முறை அராஜகத்தை செய்ய திமுகவினர் திட்டமிட்டி ருந்தார்கள். தலைமை தேர்தல் ஆணையத்திடம் இது குறித்து புகார் செய்தோம்.

அவர்கள் நடவடிக்கை எடுத்ததால் தேர்தல் அங்கு அமைதியாக நடைபெற்றது. ஆனால் இப்போது நடைபெறும் தேர்தலை மாநில தேர்தல் ஆணையம் நடத்துகிறது. இந்த ஆணையம் முதல்வர் கருணாநிதியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. எனவே இங்கு புகார் செய்தால் எந்த பயனும் இல்லை. இந்த தேர்தல் ஆணையரும் அதிகாரிகளும் ஆளுங்கட்சியின் கைக்கூலிகளாக செயல்படுகிறார்கள். அதனால் தான் நாங்கள் கோர்ட்டுக்கு செல்கிறோம்.


வேட்பாளர்களை துரத்தி விட்டு கள்ள ஓட்டு தேர்தலை ரத்து செய்க விஜயகாந்த் ஆவேசம்

தேமுதிக தலைவர் விஜயகாந்த், இன்று காலை 11 மணி அளவில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் வந்தனர்.

தேமுதிக தொண்டர்கள் நடத்திய மறியல் போராட்ட நிகழ்ச்சிகள் குறித்து செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பத்திரிகையாளர்கள், புகைப் படக்காரர்கள் ஆகியோர் கமிஷனர் அலுவலகத்திற்கு செல்ல முயன்றனர். அப்போது போலீசார் கெடுபிடி செய்து அவர்களை தடுத்து நிறுத்தி தள்ள முற்பட்டனர்.

இதனால் பத்திரிகையாளர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உதவி கமஷனர் ராஜா தலையிட்டு சமாதானம் செய்தார். பின்னர் பத்திகையாளர்கள், புகைப்படக்காரர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டார்கள்.
போலீஸ் கமிஷனர் லத்திகாசரணை, விஜயகாந்த் அரை மணி நேரம் சந்தித்து பேசிய பிறகு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:

ஏற்கனவே நாங்கள் இந்த தேர்தலில் திமுகவினர் கள்ள ஓட்டு போடவும், வன்முறையை கட்டவிழ்த்து விடவும் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று கூறினோம். அதைப்போலவே இன்று காலை 7 மணி முதல் திமுகவினர் ரவுடிகள் உதவியோடு பல வாக்குச்சாவடிகளில் நுழைந்து கள்ள ஓட்டு போட்டிருக்கிறார்கள். பல வாக்குச்சாவடிகளில் வேட்பாளர் களையும், அவர்களது ஏஜெண்டு களையும் துரத்தி விட்டு, இது போன்ற செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

மக்கள் வரிப்பணமும், எங்கள் உழைப்பும், காவல் துறையினரின் உழைப்பும் வீணாகி விட்டது. எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும். நான் வாக்குப்போடுவதற்காக செல்ல ஏற்பாடு செய்திருந்தேன். ஆனால் இவ்வளவு கலவரத்திற்கு பின்னர் ஓட்டு போட சென்றால் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தது என்று சில தொலைக்காட்சி காட்டக்கூடும்.

ஆகவே இந்த தேர்தலில் நான் ஓட்டு போடவில்லை. இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு மறு தேர்தல் நடத்த வேண்டும். தமிழக தேர்தல் ஆணை யத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. தலைமை தேர்தல் ஆணையமே இந்த தேர்தலை நடத்த வேண்டும். தமிழக காவல்துறை மீது நம்பிக்கை இல்லை. ஆகவே துணை ராணுவத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
கே: தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்வீர்களா?
ப: ஏற்கனவே பல துறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே புகார் செய்வதில் பிரயோஜனம் இல்லை. சிறையில் இருந்த ரவுடிகள் பலர் பரோலில் வந்திருக்கிறார்கள். (அவர்களின் படத்தை பத்திரிகையாளர்களிடம் காட்டுகிறார்) அவர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப் பட்டிருக்கிறார்கள்.

ஒரு வாக்குச்சாவடியில் வாக்குச்சீட்டு களை வன்முறை கும்பல் எடுத்துச் சென்றுள்ளது. அதில் ஒரு கட்டு கீழே விழுந்தது. அந்த கட்டில் உள்ள வாக்குச்சீட்டுகளில் காங்கிரஸ் சின்னமான கைச்சின்னம் குத்தப்பட்டிருக்கிறது. (வாக்குச் சீட்டுகளை பத்திரிகை யாளர்களிடம் காட்டுகிறார்).

உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் என்று நாங்கள் சொல்ல வில்லை. இப்படி நடத்துவதற்கு தேர்தலை நடத்தாமலே இருந்திருக்கலாம். கடந்த ஆட்சியில் அராஜகம் நடந்தது என்றால், இவர்களும் ஏன் அராஜகத்தில் இறங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். உங்கள் கட்சித் தொண்டர்கள் போலீஸ் தடியடி யில் தாக்கப்பட்டது குறித்து போலீஸ் கமிஷனரிடம் தெரிவித்தீர்களா என்று கேட்டனர்.

இது பற்றி நான் கேட்டபோது, சில பேர் மறியலில் ஈடுபட்டார்கள் என்று தெரிவித்தார்கள். அவர்களை அப்புறப்படுத்துங்கள் என்று கூறினேன். உங்கள் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள் என்று தெரியாது என்று கமிஷனர் கூறியதாக விஜயகாந்த் கூறினார்.

மேலும் இந்த வன்முறை குறித்து அவரிடம் கூறியபோது, தங்களுக்கும் தகவல் வந்திருப்பதாகவும், அது குறித்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால் அவரது பதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் விஜயகாந்த் கூறினார்.

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள் அதுதான் இப்போது நடைபெற்றுள்ளது. ஆண்டவன் பார்த்து கொள்வான். இது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறாமல் மக்கள் துணையோடு தடுப்பேன், அதில் வெற்றி பெறுவேன்


மாநகராட்சி தேர்தலை ரத்து செய்க ஜனாதிபதி, கவர்னருக்கு வைகோ கோரிக்கை

ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு வைகோ அனுப்பியுள்ள ஒரு கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக் கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று துவங்கியது. திமுக நிர்வாகிகள் சென்னை மாநகராட்சி தேர்தலில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.

அதிமுக, மதிமுக வேட்பாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ஏஜெண்ட்கள் விரட்டியடிக்கப் பட்டனர். வாக்குச்சாவடிகளுக்குள் வாக்காளர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
ஆளுங்கட்சிக்கு ஆதரவான குண்டர்கள் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியுள்ளனர். பரோலில் வந்த கைதிகள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக, மதிமுக வேட்பாளர்களின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது. 81வது வட்ட மதிமுக வேட்பாளர் கடுமையாக தாக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார். அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

எனவே எங்கள் கூட்டணியின் வேட்பாளர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க தக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். ஜனநாயகத்தை பாதுகாக்க ஜனாதிபதி உடனடியாக தலையிட்டு சென்னை மாநகராட்சி தேர்தலை ரத்து செய்து நேர்மையாகவும், சுதந்திர மாகவும் மறுதேர்தல் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வைகோ அந்த மனுவில் கூறியிருக்கிறார். தமிழக கவர்னருக்கும் இந்த கடிதத்தின் நகலை அவர் அனுப்பி இருக்கிறார்.

கலைஞர் பேட்டி
கேள்வி: தமிழகம் முழுவதும் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்தீர் களே, இந்த தேர்தலில் திமுக அணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?

பதில்: உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

கே: திமுகவினர் கள்ளஓட்டுப் போடுவதாக முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு கூறியுள்ளாரே?

ப: தோல்விக்கான காரணத்தை அவர் தேடத் தொடங்கிவிட்டார்.
இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறினார். முன்னதாக, மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் மனைவி பிரியாவுடன் சென்று அதேபள்ளி வாக்குச் சாவடியில் வாக்களித்தார்.

மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை - பிஜேபி புறக்கணிப்பு

சென்னை மாநகராட்சி தேர்தலில் வாக்குப்பதிவு ஆரம்பிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ஆளும் கூட்டணி யினரால் வன்முறை கட்டவிழ்க்கப் பட்டு வாக்குப்பதிவு ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் ஆளும் கட்சி யினரால் கைப்பற்றப்பட்டு பிஜேபி மற்றும் மாற்றுக் கட்சி ஏஜெண்டுகள் அடித்து விரட்டப்பட்டுள்ளனர். பல இடங்களில் அசல் வாக்குச் சீட்டுகள் தெருவில் இருந்து கண்டு எடுக்கப் பட்டுள்ளன.

தேர்தல் அதிகாரிகளும், காவல் துறையினரும் பிஜேபி மற்றும் எதிர் கட்சிகளின் புகார்களுக்கு செவி மடுக் காத நிலையில் முறையாக நடக்காத இந்த தேர்தலை பிஜேபி கட்சி புறக் கணிக்கிறது. ஆளும் கட்சியின் அராஜகத்தை கண்டித்து இந்த தேர்தல் களத்தில் இருந்து பிஜேபி முழுமையாக விலகி விடுகிறது என அறிவிக்கி றோம். முறையான மறு தேர்தல் நடத்த கோரிக்கை விடுகிறோம்.

எங்கள் கட்சியினர் மீது நடந்த வன் முறை அராஜகத்தின் முழு தகவலும் தெருவில் கண்டெடுக்கப் பட்ட அசல் வாக்குச்சீட்டின் நகலும் இணைக் கப்பட்டுள்ளது என்று பிஜேபி மாநில பொதுச் செயலாளர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
( படம் உதவி: தினமலர் )

Read More...