பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Tuesday, September 05, 2006

Blogger Beta ஒரு எச்சரிக்கை

சமிபத்தில் Blogger தங்கள் Beta சேவையை தொடங்கியிருந்தார்கள். சரி ஏதாவது புதுசாக இருக்கும் என்ற எண்ணத்தில் "Migrate Idlyvadai to Beta Blogger" என்று ஓரத்தில் தெரிந்த ஒரு லிங்கை கிளிக் செய்தேன். அவ்வளவுதான், "Please Wait, you are now migrating to beta" என்று வந்தது. அரை மணி நேரம் என் வலைப்பதிவு வேலை செய்யவில்லை.
பின்பு, "Congratulations! you have now migrated to Blogger Beta, Enjoy" என்று வந்தது.

எனக்கு கீழ் கண்ட நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.

1. எனது template பகுதியில் தமிழில் இருக்கும் பகுதிகள் புச்சியாக மாறியிருந்தது. (நான் முன்பு ஒரு நகல் எடுத்து வைத்திருந்தால் பிழைத்தேன்)

2. பின்னூட்டமிட்டவர்களின் பெயர்கள், கிளிக் செய்தால் தான் யார் என்று கண்டுபிடிக்க முடியும்.

2. செய்தியோடை பிசகியியது. (புதிதாக ஏதோ 'Self' என்று சேர்த்திருக்கிறார்கள்). அதனால் என் வலைப்பதிவு தற்போது தமிழ்மணத்தில் தெரிவதில்லை. ( சந்தோஷம் தானே ?)

அதனால் இதை படிக்கும் அன்பர்கள், இந்த நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவும். யாரும் Betaக்கு மாறாதீர்கள்.

பிளாகருக்கு எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்.

பிகு:
1. இந்த பதிவு கூட தமிழ்மணத்தில் தெரியாது, யாராவது இதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். நன்றி

2. தேன்கூட்டில் ஒழுங்காக வேலை செய்கிறது.


6 Comments:

Anonymous said...

இந்தாள் கில்லியிலே எல்லாம் போய் எழுதறான் என்று யாராச்சும் ப்ளாகரிடம் போட்டுக் கொடுத்திருப்பார்களோ? :-)

IdlyVadai said...

ஐயோ நான் நினைச்சேன் நீங்க சொல்லிட்டீங்க

Anonymous said...

உம்ம கில்லி ஆர்டிகிள் சூப்பர் ஓய்!

வல்லிசிம்ஹன் said...

இதே கதையை முன்பே சொல்லி இருக்கலாமே ஐயா. அநியாயமாய் 71 போஸ்ட்ஸ் போச்சு.

குதிரைகள் ஓடியாச்சு. லாயத்தை
மூட வேண்டும் கதைதான்.

Mohan Madwachar said...

உபயோகமான தகவல்
http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்ற
வாருங்கள்.
www.leomohan.net
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com

Mohan Madwachar said...

உபயோகமான தகவல்
http://www.muthamilmantram.com/ சேருங்கள் நன்றாக உள்ளது. நேரம் கிடைத்தால் என் வலைதளங்களுக்கு சென்று
வாருங்கள்.
http://tamilamuhdu.blogspot.com
http://leomohan.blogspot.com
www.leomohan.net