பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 27, 2006

விழுப்புரத்தில் சிறுத்தைகள் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உடன் பாட்டில் சிக்கல் எதுவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.

அதிமுகவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்மாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில்:அதிமுக தலைமையிலான ஜன நாயக மக்கள் கூட்டணியில் விடு தலைச் சிறுத்தைகள் நான்கு சதவீத இடத்தை பெற்று உடன்பாடு செய் துள்ளது. மாவட்ட அளவில் அதிமுக பொறுப்பாளர்களுடன் எமது தோழர்கள் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டது. அதனை சில ஊடகங்கள் ஊதி, பெருக்கி குழப்பதை ஏற்படுத்தி உள்ளன. அதிமுகவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு அடிப்படையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் போட்டி யிடுகிறது.

அதிமுகவுடன் பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்ட ஒரு சில மாவட்டங்களில் அவற்றை சரி செய்து இணக்கமுடன் செயல்படு வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவுடன் ஒத்து ழைப்பு நல்கிட வேண்டுகிறேன்.


Update:
விழுப்புரம் மாவட்டத்தில் அதிருப்தி எதிரொலி தனித்துப்போட்டியிட சிறுத்தைகள் முடிவு
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை. விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் தமிழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டி யிடுவதாக அறிவித்துள்ளார்.

1 Comment:

சிவபாலன் said...

இப்படி ஒரு குழப்பமா? ம்ம்ம்ம்ம்ம்