பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 23, 2006

விஜயகாந்துக்கு முரசு கிடைக்குமா ?

தே.மு.தி.க-வுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும் போலிருக்கிறது. என்னதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 8.38% ஓட்டுகளைப் பெற்றிருந்த போதிலும் விஜயகாந்த் மட்டுமே எம்.எல்.ஏ-வானார். அதைத் தொடர்ந்து, மத்திய தேர்தல் கமிஷனிடம் கட்சிக்கு அங்கீகாரம் கேட்டு மனு கொடுத்திருந்தனர். ஆனால், ‘4% ஒட்டுகள் வாங்கினாலே போதும். அந்தக் கட்சியை அங்கீகரிக்கலாம். ஆனால், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ஜெயித்தால்தான் அங்கீகாரம் அளிக்க முடியும்’ என மத்திய தேர்தல் கமிஷன் சொன்னதாம். இதற்கு தே.மு.தி.க-வினர் விளக்கம் கொடுக்க, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து டெல்லியில் நடக்கிறது. நிலைமை இப்படியிருக்கும்போது, திடீரென மாநிலத் தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துவிட்டது. இதனால் தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகக் களத்தில் குதிக்குமா இல்லை சுயேச்சையாகவே களமிறங்குமா என்பது புரியாத நிலை. சுயேச்சை என்றாலும் ஒரு சிக்கல். ஏனென்றால் பஞ்சாயத்துத் தேர்தலுக்கென அறிவிக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்களில் முரசு இல்லை. ( 70 சின்னங்கள் பட்டியலுக்கு கடைசியில் பார்க்கவும் )

கடந்த தேர்தலில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் சுயேச்சையாகத்தான் போட்டியிட்டோம். அப்போது எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அது போல சுயேச்சையாகத்தான் எங்கள் கட்சி போட்டியிட இருக்கிறது. இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

ஆனால் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்கவிடாமல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்கள் பட்டியலில் இருந்து முரசு சின்னத்தையே அகற்றிவிட்டனர். ஆனால் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரி உள்ளேன். இது குறித்து ஓரிரு நாட்களில் தகவல் தருவதாக தேர்தல் கமிஷனர் அறிவித்து உள்ளார்.

மத்திய தொகுதி இடைத்தேர்தலுக்கு முரசு சின்னம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டே உடனடியாக அறிவித்துள்ளது. இதனை தள்ளி வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு வாரகாலத்திற்குள் அரசின் நலத்திட்டங்களை அறிவித்து விட்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே நலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் அது தொடர்ந்து நடக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மத்திய தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது என்று கூறி அதற்கு முன்பே வெளியான எனது பேரரசு படத்தின் போஸ்டர்களை கிழிக்க சொல்கிறார்கள். என்னுடைய படமும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வெளிவந்துவிட்டது. அதன்பிறகு போஸ்டர்களை மட்டும் எப்படி கிழிக்கலாம். என்று விஜயகாந்த கூறியுள்ளார்

- * -

70 சின்னங்கள் பட்டியல்

கழுத்துக் கச்சு (கழுத்தில் கட்டும் டை), கொதி கெண்டி (கிண்ணம்), அரை கச்சை (பெல்ட்), குலையுடன் கூடிய தென்னை மரம், உடுக்கை, அரிக்கேன், உலக உருண்டை, வைரம், மறை திருக்கி, அடையாளக் குறி, கிட்டார், முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி,

புட்டி, நீளக்குவளை, ஊஞ்சல், கத்தி, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேற் சட்டை, கோப்பு அடுக்கும் அலமாரி, மத்தளம், முள் கரண்டி, கேஸ் சிலிண்டெர்,

மகளிர் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு, துப்பாக்கி, ஹாக்கி மட்டையும் பந்தும், தீப்பெட்டி, கைப்பை, கரண்டி, தண்ணீர் குழாய், உலாவிற்கான தடி.

பதக்கம், கம்ப்யூட்டர், மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், டிஷ் ஆண்டெனா, பேருந்து, கேரம் போர்டு, மேசை மின்விசிறி, கோப்ரையும் தட்டும், பளு தூக்கும் கருவி, சட்டை, சட்டை பட்டி,

ரயில் தண்டவாளம், பெண்களின் மேலங்கி, முழுக்கால் சட்டை, பிளேடு, சிறு பெட்டி, மட்டை, இரட்டை நாதஸ்வரம், கைபம்பு, மை எழுது கோல், சாய்வு மேசை, மர இருக்கை, புத்தகம், தீபம்

Update: 24/Sep/2006 : Update:
மாநில தேர்தல் ஆணையம் பதில் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், "தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க இயலாது'' என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

1 Comment:

IdlyVadai said...

Update:
மாநில தேர்தல் ஆணையம் பதில் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், "தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க இயலாது'' என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.