பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, September 25, 2006

உள்ளாட்சித் தேர்தல்: திருச்சியில் பாமக தனித்துப் போட்டி

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள பாமக, திருச்சி மாநகராட்சி பகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக கூறியுள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கேசவ ராமலிங்கம் திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

''எங்களுக்கு திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. அமைச்சர் கே.என். நேரு பாமகவினரை நடத்திய விதம் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்சியில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் எங்கள் கட்சிக்கு 10 வார்டுகளை ஒதுக்க கோரினோம். ஆனால், அவர்கள் ஒரே ஒரு வார்டை மட்டும் தருவதாக கூறினர். அதுவும், பேச்சுவார்த்தைய இழுத்தடித்து ஒரு வார்டை ஒதுக்கினர். இதையடுத்து, நாங்கள் தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்'' என்றார்.
( தகவல் : தினமலர், தினமணி )

3 Comments:

Anonymous said...

The java appalet used to design the template in your blog is not allowing the viewer to enter in your sight
Please check up and correct it

The error reads as:
The browser does not allow tha java applet to open the blog

IdlyVadai said...

Thanks for comments. I checked in other systems and it works. Can you check your browser settings and you need to enable Java applets.

ENNAR said...

இதை கேட்க ராமலிங்கத்தை பார்த்தேன் காணவில்லை விசாரிக்கிறேன். உண்மையில் திருச்சிமாநகரில் அவர்களுக்கு அதிக வாக்காளர்கள் இல்லை தான். ராமலிங்கம் எனது வீட்டிற்கு பக்கத்தில் தான் உள்ளார்.