பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 21, 2006

வைகோ குற்றச்சாட்டு - ஜெ பேட்டி

உள்ளாட்சி முறையில் மாற்றம்; கூட்டணி கட்சிகளை தி.மு.க. ஏமாற்றி விட்டது: வைகோ குற்றச்சாட்டு:

உள்ளாட்சி தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுகிறது. பழைய முறை இருந்தால் தி.மு.க.வுக்கு சரிவு ஏற்படும் என்பதற்காக புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர் தலிலும் அது போல நிலை ஏற்படும் என்பதற்காகவும், நெருக்கடியான அரசியல் சூழ்நிலை உருவாகும் என்ப தற்காகவும் உள்ளாட்சி அமைப்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதில் வேதனை என்ன வென்றால் தி.மு.க.கூட்டணி கட்சிகளுக்கு கூட தெரியா மல் இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதை வெளியே சொல்ல முடியா மல் கூட்டணி கட்சிகள் புழுக்கத்தில் இருக் கின்றன. அவர்களுக்கு ஜால்ரா அடிக் கின்றனர்.

இந்த புதிய முறையால் ஆளும் கட்சி தவிர எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும்.ஆளுங்கட்சியினர் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். உள்ளாட்சி அமைப்பின் புதிய முறைக்கு பா.ம.க. கம்ïனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த புதிய தேர்தல் முறை தி.மு.க.வின் தந்திரமும், சூழ்ச்சியான நடவ டிக்கை ஆகும்.


அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 11.40 மணிக்கு முடிந்தது. இதையடுத்து ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


ஜெ பேட்டி


கேள்வி:- இன்று நடந்த கூட்டத்தில் முக்கியத்துவம் என்ன?

பதில்:- மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு அ.தி.மு.க. தலைமையி லான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இடம் பெற் றுள்ள தோழமை கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்தித்து பேசினோம்.

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் உள் ளாட்சித் தேர்தலிலும் பெரு மளவு வெற்றி பெற அயராது பாடுபடுவது என்றும் இதற்கு கூட்டணி கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்குவது என்றும் தீர்மானித் துள்ளோம்.

9 பேர் கொண்ட குழுவை அ.தி.மு.க. சார்பில் நான் அமைத்துள்ளேன். அது போல தோழமை கட்சி களிலும் தனித் தனியாக குழு அமைப்பார்கள். இந்த குழுவினர் சந்தித்து இடப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

கே:-தேர்தலுக்கு மிக குறுகிய காலம் தான் உள்ளது. இடப் பங்கீடு பேச்சு எப்போது முடியும்?

ப:- எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பேசி முடிப்பார்கள்.

கே:- தேர்தல் பிரசாரத் திட்டம் எப்படி இருக்கும்?

ப:- இன்றைய தி.மு.க. அரசில் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. கடந்த 4 மாதங் களாக சிக்குன் குனியா நோய் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திரும்ப, திரும்ப நான் சுட்டிக் காட்டிய பிறகும், எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்ட பிறகும் அப்படி எதுவும் இல்லை என்று முதல்-அமைச்சரே சாதித்தார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், தமிழ்நாட்டில் சிக்குன் குனியா இல்லை என்று சட்ட சபையில் பேசி பதிவு செய்தார்.

தொடர்ந்து மக்கள் அவதிப் படும் இந்த உண்மையை நான் வெளிப்படுத்தி வந்தேன். சில நாட்களுக்கு முன்பு சிக் குன் குனியாவுக்கு 150 பேர் பலியானதாக கூறி னேன். அதற்கு பதில் அளித்த ஆற்காடு வீராசாமி எனது அறிக்கை உண்மை இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை. 150 பேர் பலியாகி இருந்தால் அவர்கள் பெயர் பட்டியலை வெளியிட தயாரா என்று சவால் விட்டார்.

நானும் அவர் சவாலை ஏற்றுக் கொண்டேன். நான் விவரம் சேகரித்த போது 232 பேர் சிக்குன் குனியா வுக்கு இறந்திருப்பது தெரிய வந்தது. 232 பேரின் பெயர், விலாசத்தை நான் வெளி யிட்டேன்.

காலையில் நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மேலும் 6 பேர் இறந்ததாக தகவல் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரை சிக்குன் குனியா நோய்க்கு 238 பேர் பலியாகி உள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இத்தனை காலம் பிர தான எதிர்க்கட்சியாக இருக் கும் அ.தி.மு.க. அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கும் படியும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் படியும் திரும்ப திரும்ப சொன்னோம். அதற்கு கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

ஒருவர் கூட சாகவில்லை என்றனர். இறந்தவர்கள் பெயர் பட்டியலை வெளியிட தயாராப என்று சவால் விட்ட னர். உடனே நான் பட்டியல் வெளியிட்டு நிரூபித்தேன். அதன் பிறகும் சிக்குன் குனியா வால் பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றுகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குகு நன்றாகத் தெரியும். சமீபத்தில் திடீரென்று கலெக்டர்கள் மாநாட்டை கூட்டினார்கள். அதில் சிக்குன் குனியாவை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்றனர்.

இப்போது எல்லா பொறுப்பையும் கலெக்டர்கள் தலையில் கட்டி விட்டனர். தி.மு.க. கூட்டணி தலைவர் கள் கூட்டத்தில் சிக்குன் குனி யாவை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்கப் போவதாக தீர்மானம் போட்டுள்ளனர். 4 மாதம் கழித்து மிக தாமதமாக இப்போது சிக்குன் குனியா இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். இது தாமதமான நடவடிக்கை. இப்போதாவது தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல் மக்களை காப்பாற்ற அரசு முன்வரவேண்டும்.

ஆஸ்பத்திரிகளில் இந்த நோய்க்கான மருந்துகள் இல்லை. எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வில்லை. தி.மு.க. அரசு மிகவும் அலட்சியமாக பாராமுகமாக இருந்து விட்டது. இது மன் னிக்க முடியாத மக்கள் விரோத நடவடிக்கை.

இதை தேர்தலில் மக்களிடம் எடுத்துக் சொல்வோம். தொடர்ந்து ஒவ்வொரு விஷ யத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். துணை நகரம் பிரச்சினையில் 44 கிராம மக்கள் எங்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி கழகம் பிரச்சினையில் மத்திய அரசின் தவறான முடிவை தி.மு.க. அங்கீகரித்தது. பிறகு எனது முயற்சியால் அதை வாபஸ் பெற்றனர். புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு விடப் படும் என்றனர். ஆனால் பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி விட்டுள்ளனர்.

இலவச டி.வி. வழங்குவதாக சொன்னார்கள். அதை தி.மு.க.வினருக்கே வழங்கு கிறார்கள்.

ஒரு ஊரில் 100 குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு டி.வி. கொடுப்பதாக அறிவித்து விட்டு 60 முதல் 65 பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். இப்படி மோசடி நடந்துள்ளது.

பல டி.வி.க்கள் வேலை செய்யவில்லை. படமே பார்க்க இயலவில்லை. விலை உயர்ந்த வெளிநாட்டு டி.வி.க்களை பணக்காரர்கள் வைத்து இருந்தாலும் "ஸ்டெபிலைசர்'' வைத்து இருப்பார்கள். தகுந்த கருவிகளை பொருத்தினால்தான் மின்னல் தாக்குதல்களை அவை தாங்கும்.

மின்னல் தாக்குவதில் இருந்து பாதுகாக்க "சென்சார்'' என்ற கருவியை பொருத்தி இருப்பார்கள். அந்த கருவி விலை ரூ. 6 ஆயிரம். அப்படிப் பட்ட கருவியை டி.வி.யில் பொருத்தியா கொடுக்கிறீர்கள்? வெறும் டப்பா பெட்டியைத்தான் கொடுக்கிறீர்கள்.

இவை 10 நாள் வேலை செய்தாலே அதிகம்தான். கிராமங்களில் வயல் வெளிகளில்இருக்கும் வீடுகளில் ஒரு முறை மின்னல் தாக்கினால்போதும். இப்போதே பல டி.வி. பெட்டிகளில் விளக்கு மட்டுமே எரிவதாக சொல்கிறார்கள். சில இடங்களில் அதுவும் இல்லை.

தேர்தல் வாக்குறுதியில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். அது அப்படியே மாறி பல குட்டி கர்ணங்கள் அடித்து உருமாறி விட்டது.

ஒரு ஏக்கராகவும் இருக்கலாம். 50 செண்ட் ஆகவும் இருக்கலாம். 30 செண்ட் ஆகவும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் இருக்கலாம் அங்கு சிகிச்சை பெறுபவர் களில் 80 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்த ஏழை மக்கள். அங்குள்ள விசேஷ, உயர்ந்த தரமான மருந்துகளும் சிகிச்சைகளும் நவீன கருவிக

ளும் ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கிறது. தினமும் 5 ஆயிரம் வெளிநோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

2 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஆரம்பத்தில் பிரான்சு கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருந்த போது ஏழைகளுக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. 1954-ல் புதுச்சேரியை பிரான்சு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அப்போது பிரதமர் நேருவுடன் பிரான்சு தூதர் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதில், "எந்த நோக்கத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டதோ அதற்காகவே தொடர்ந்து செயல் படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது ஒரு குடும்பத்தின் தனி லாபத்துக்காக தன்னாட்சி அமைப்பாக இதை ஆக்கப் பார்ப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இப்படி எத்தனையோ மக்கள் விரோத நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதை மக்கள் மத்தியில் சொல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கேட்போம்.

கே:- உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்களே மேயர் மற்றும், நகரசபை தலைவர்களை தேர்வு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கட்சித்தாவல் தடை சட்டம்

ப:-உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமான தேவை "கட்சித் தாவல் தடை சட்டம்'' பழைய முறையில் மேயர் நகரசபை தலைவர்களை தேர்வு செய்ய மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டனர்.தற்போது அதை மாற்றி விட்டனர்.

இதை ஆட்சேபித்தால், அவர்கள் சொல்வது, எம்.எல்.ஏ.க்களை மக்கள் தேர்வு செய்கிறார்கள். முதல்-அமைச்சரை எம்.எல்.ஏ.க்கள் தானே தேர்வு செய்கிறார்கள் என்கிறார்கள்.

பிரதமரை மக்கள் நேரடியாக தேர்வு செய்வதில்லை என்கிறார்கள். ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் இதை ஏற்றுக் கொண்டாலும் முக்கியமான ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. எம்.பி.க்கள் ஆனாலும் சரி எம்.எல்.ஏ.க்கள் ஆனாலும் சரி அவர்களுக்கு மிகவும் இறுக்கமான கட்சித்தாவல் தடை சட்டம் உள்ளது.

எம்.பி.யோ, எம்.எல்.ஏ.யோ ஒரு கட்சியில் இருந்து தேர்வு பெற்று விட்டு, மற்ற கட்சிக்கு மாறினால், பதவி இழந்து விடுகிறார்கள். அந்த சட்டம் தெளிவாக உள்ளது. அதில் எந்த ஓட்டையும் இல்லை.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தாவல் தடை சட்டம் இல்லை. எந்த கவுன்சிலர் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இதை பயன்படுத்திக் கொள்ளவே முக்கியமான தலைமை பதவிகளுக்கு மக்களே நேரடியாக ஓட்டுப் போடும் முறையை ரத்து செய்து விட்டனர்.

கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 18-ந்தேதி நடக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தலைவர்களை தேர்வு செய்யும் நாள் 28-ந்தேதி என்கிறார்கள்.

இதற்கு ஏன் 10 நாள் இடைவெளிப முன்பெல்லாம் 2 நாள் அல்லது 3 நாள் தான் இடைவெளி இருக்கும். 10 நாள் இடைவெளி கொடுத்து இருப்பதன் நோக்கம்-குதிரை பேரம் பேசுவது.

எந்த கட்சியில் அதிகம் கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அவர்களை இழுப்பது, ஆசைகாட்டுவது, மிரட்டுவது போன்ற முறைகேடுகளை நடத்த வாய்ப்பாக வசதியாக இடைவெளி வழங்கி உள்ளனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளது போல உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வர வேண்டும். நேரடியாக முக்கியமான பதவிகளுக்கு மக்கள் ஓட்டுப் போடும் முறையை ரத்துசெய்ததற்கு காரணம் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்பதால் தான்.

சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும். எனவே தான் கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளனர்.

கே:- கோப்புகள் தேங்கி இருப்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீர்மானம் போட்டுள்ளதே?

ப:-எத்தனை வெள்ளை அறிக்கை வேண்டுமானாலும் வெளியிடலாம். எனெனில் அரசு தி.மு.க.கையில் உள்ளது. கோப்புகள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வளவு பொய்யும் சொல்லாம்.

கடந்த 5 ஆண்டில் ஒரு முன் மாதிரி ஆட்சியை அ.தி.மு.க. தந்தது.

ஒரு முதலமைச்சருக்கு சராசரியாக எல்லா துறைகளில் இருந்தும் வாரத்திற்கு 250-லிருந்து 500 கோப்புகள் வரை வரும். அப்படியானால் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் அதாவது 2001 முதல் 2006 வரை குறைந்தபட்சம் 60 அயிரம் கோப்புகள் என்னிடம் வந்து அவற்றில் பெரும்பாலானவற்றை நான் பார்த்து ஆணைகள் வழங்கியதால் தான் எனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அத்தனை மக்கள் நலப்பணிகளும்,பொதுப் பணிகளும் நிறைவேற் றப்பட்டன என்பதை சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இப்போதைய அரசு நிர்வாகத்தில் மக்கள் பணிக்கு செலவிடும் நேரத்தை விட என்னைப் பற்றிகுறை கூற அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

கே:-மதுரை எம்.எல்.ஏ. சண்முகம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப:- எந்நன்றி கொன் றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.

கே:- கட்சியில் இருந்து சண்முகத்தை நீக்குவீர்களா?

ப:- இப்போதைக்கு நான் சொன்னதே பதில். இது ஒரு டிரெயிலர். போக, போக பார்ப்பீர்கள்.

0 Comments: