பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, September 23, 2006

ஒசாமா பின்லேடன் மரணம்?

ஒசாமா பின் லாடன் டைபாய்டு நோயால் இறந்ததாக பிரெஞ்சு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் நோய் காரணமாக ஆகஸ்ட் 23ம் தேதி இறந்ததாக அது மேலும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் டைபாய்டு காய்ச்சலில் இறந்துவிட்டதாக பிரெஞ்ச் உளவுத்துறை வெளியிட்ட தகவலை சவூதி அரேபியா நம்புவதாக பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

செப்.21ம் தேதி வெளியான இத்தகவல், பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக், பிரதமர் டாமினிக் டி வேல்பின், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக 'லீஸ்ட் ரிபப்ளிகன்' என்ற பிரெஞ்ச் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சில நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சவூதி அரேபியாவும் இதனை உறுதிப்படுத்துவதாக இப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பின் லேடன் கடந்த வருடம் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட டைபாய்டு காய்ச்சலால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இறந்துவிட்டதாக சவூதி அரேபியாவுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிய ராய்ட்டர் செய்தி நிறுவனம் பிரான்ஸ் அரசை தொடர்புகொண்டது. ஆனால் பிரான்ஸ் அரசு கருத்து கூற மறுத்துவிட்டது. இதுகுறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தலிபான் அமைப்பினர் கடந்த 2001ம் ஆண்டு வரை ஆப்கன் நாட்டை ஆட்சி செய்தனர். அதுவரை பின்லேடன் ஆப்கன் நாட்டில் தங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த அரசு அமெரிக்க கூட்டு படையினரால் தூக்கி எறியப்பட்டபோது, பின் லேடன் ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லைப்பகுதியிலுள்ள குகைப்பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

ஒசாமா பின்லேடன் பேசிய வீடியோ கேசட் கடைசியாக 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒலிநாடாக்களில் பெரும்பாலானவை தரம் குறைந்ததாகவே இருந்தன.

CNN-IBN செய்தி
Reuters செய்தி
Kaleej Times செய்தி

7 Comments:

balachandar muruganantham said...

அமெரிக்கா எதைத்தான் ஒற்றுக்கொண்டுள்ளது. ஒசாமாவை அவர்கள் கொள்ளவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள் என்னவோ. அப்பொழுது தான் ஒசாமாவை கொன்று விட்டதாக மார்த்தட்டிக்கொள்ளலாமென்று நிணைத்திருப்பார்கள். அதனால் தான் மறுத்துள்ளனர் என்று நான் கருதுகிறேன்

நன்றி
பாலச்சந்தர் முருகானந்தம்
எனது தமிழ் பக்கங்கள் - www.balachandar.net/pakkangal
தமிழ்ப் பதிவுகள் - www.tamilblogs.com

Sivabalan said...

செய்திக்கு நன்றி.

டெப்ளேட் நல்லாயிருக்கு.. ஆனா லோட் அகுவதற்கு நேரம் எடுக்கிறது..

Anonymous said...

America wants know about Binladen where he is, so they just spread the unbelivable news.

lollu-sabha said...

ஒசாமா பின்லேடன் உண்மையிலேயே இறந்து இருந்தால் நாம் எல்லோருக்கும் மகிழ்ச்சி தானே..

lollu-sabha.blogpsot.com

Anonymous said...

அமெரிக்காவுக்கு ஒசாமா இருந்தாலும் பிரச்னை, இறந்தாலும் பிரச்னை! இறந்தா என்ன பிரச்னைங்கிறிங்களா? ஒசாமாவை பிடிக்கப்போறோம்ங்கிற காரணத்தை சொல்லித்தானே இன்னமும் ஆப்கானிஸ்தான்ல கேம்ப் அடிச்சுருக்காங்க. ஒசாமா இறந்துட்டாருன்னா இவங்க கூடாரத்தை காலி பண்ணியாகணுமே!

லக்கிலுக் said...

ஏற்கனவே பலமுறை பிடல் காஸ்ட்ரோவை இதுமாதிரியே கொன்றவர்கள் தானே அமெரிக்கர்கள்?

Anonymous said...

செத்த பாம்ப அடிச்சு கொன்னா என்ன அதுவா செத்த என்ன, பெரிய வித்தியாசம் இருக்காது.