பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 29, 2006

நல்ல தம்பியாக இருக்க முயற்சி செய்தேன - திருமா பேட்டி

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நீங்கள் விலக காரணம் என்ன?

பதில் :- சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. எந்த வாக்குவாதமும், பிடிவாதமும் செய்யாமல் 4 சதவீத இடத்தை ஏற்றுக்கொண்டோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. திட்டமிட்டு மனு தாக்கல் செய்தது. எந்த அறிவிப்பும் இல்லாமல் எங்கள் இடங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டன. இது பற்றி அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து பேச முயற்சி செய்த போது வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசியதும். களப்பணி ஆற்றியதும் அ.தி.மு.க. தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதோடு பாப்பாரப்பட்டி, கீரிபட்டி போன்ற ஊராட்சிகள் தேர்தல் பிரச்சினையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அரசுக்கு பாராட்டு தெரிவித்து சட்டமன்றத்தில் நாங்கள் பேசியது அ.தி.மு.க.வுக்கு நெருடல் ஏற்படுத்தி இருக்கும். இந்த 2 காரணங்களால் அவர்கள் எங்களை வெளியேற்ற நெருக்கடி கொடுத்து இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை அரசியலில் அனாதை ஆக்க நடந்த சதியை முறியடித்து தி.மு.க. அணியில் சேர்ந்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த அரசியல் ஆதாயமும் இல்லை.

கேள்வி:- கடந்த முறை தி.மு.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். இந்த முறை அ.தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்று இருக்கும் உங்கள் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்வார்களா?

பதில் :- கடந்த முறை நான் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதனால் சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் போன்றே செயல்படும் நிலைமை இருந்தது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுயேச்சை சின்னமான மணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால் எங்கள் 2 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத்தில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வழக்கம் போல் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

கேள்வி:- இப்போது தி.மு.க. உங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவீர்களா?

பதில் :- இல்லை. தீபம் அல்லது கைக்கெடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவோம். தீபம் சின்னத்தை விஜயகாந்த் கட்சியும் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு ஒதுக்குவது என்பதை தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

கேள்வி :- சகோதரர் திருமாவளவன் எங்கு இருந்தாலும் வாழ்க என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே ?

பதில் :- அக்கறைக்கு மிகுந்த நன்றி. நல்ல தம்பியாக இருக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால் அவரை தொண்டர்கள் சந்திக்க, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திக்க எளிமையான வழிமுறைகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டுகிறேன்.

கேள்வி :- தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?

பதில் :- தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். மதுரை மத்திய தொகுதியிலும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மற்றொரு எம்.எல்.ஏ. எங்கே?

அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விடுதலை சிறுத்தைகள் எல்.எல்.ஏ.க்கள் 2 பேரில் ஒருவரான ரவிக்குமார் மட்டும் உடன் இருந்தார். மற்றொரு எம்.எல்.ஏ.வான செல்வம் அங்கு இல்லை.

இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, " செல்வம் எம்.எல்.ஏ. கடந்த 3 நாட்களாக வெளியூரில் இருக்கிறார். அதனால் தான் வரவில்லை. வேறு பிரச்சினை எதுவும் கிடையாது'' என்று திருமாவளவன் கூறினார்.

ஜெ அறிக்கை, இல.கணேசன் அறிக்கை

3 Comments:

வலைஞன் said...

இன்று தான் IE யில் சரியாக தெரிகிறது. இப்போது ஒரு சிறு பிரச்சினை. கார்ட்டூன் அகலம் அதிகமானதால் sidebar கீழே போய்விட்டது. (சிறிய திரைகளுக்கு மட்டும் இந்தப் பிரச்சினை இருக்கக்கூடும்.)

IdlyVadai said...

நன்றி வலைஞன். நீங்கள் சொல்லுவது சரி. Resolution பிரச்சனை என்றி நினைக்கிறேன்.

வலைஞன் said...

பயர்பாக்சில் 800x600 reslolution லேயே சரியாக அழகாக தெரிகிறது.
மேலும் IE யில் post left padding இல்லாமல் இருக்கிறது. ஆனால் பயர்பாக்சில் அதுவும் சரியாகவே இருக்கிறது.