பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 22, 2006

ஜெ கூட்டணி - இன்று மாலை பட்டியல்

அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடுபவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்தது.

இடப்பங்கீட்டு குழுவினரான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி ஆகியோர் இன்று அதிமுக தலைமை நிலையத்தில் 2ஆம் நாளாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இந்த குழுவினர் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு திரும்பினர். மீண்டும் அதிமுக இடப்பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேசிய எல்.கணேசன், "பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடைபெற்று சுமூகமாக முடிந்தது. எவ்வளவு இடங்கள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய இடங்களுக்கான பங்கீடு குறித்து பேசப்பட்டது. இன்று பிற்பகல் விடுதலைச்சிறுத்தைகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இன்று மாலை அதிமுக தரப்பிலிருந்து பட்டியல் வெளியிடப்படும்' என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்துவும் பங்கேற்றார். பின்னர் விடுதலைச்சிறுத்தைகளின் பிரதிநிதிகள் அதிமுக பேச்சுவார்த்தை குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மற்ற அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் பட்டியல் வெளியிட அதிமுக தலைமை தீவிரமாக உள்ளது.

0 Comments: