பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, September 21, 2006

உள்ளாட்சித் தேர்தல் !

தமிழகத்தில் வரும் அக்டோபர் 13 மற்றும் 15ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலி நடைபெறவுள்ளது. சென்னை, கோவை, சேலம், நெல்லை மாநகராட்சிகள் முதல் கட்டத்திலும், மதுரை, திருச்சி மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத்திலும் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 466 பேர்பவேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.


சட்டசபை தேர்தலைப் போலவே உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய, வரும் 27ம் தேதி கடைசி நாள். மிக குறுகிய கால அவகாசமே உள்ளதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக சுறுசுறுப்படைந்துள்ளன.

தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு, "முரசு' சின்னம் ஒதுக்க வேண்டும்,'' என்று தமிழக தேர்தல் கமிஷனரை சந்தித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை தலைமை கழக நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன், மீனவர் பிரிவுச் செயலர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் மதுசூதனன், அமைப்பு செயலர் ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், தளவாய் சுந்தரம், தேர்தல் பிரிவு இணைச் செயலர் பாலகங்கா, அமைப்பு செயலர் கருப்பசாமி, திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., பதர் சயீத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தாகுதிப் பங்கீடு தொடர்பாக, தங்களது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்த 6 பேர் கொண்ட குழுவை தி.மு.க அமைத்துள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ச.விடுதலை விரும்பி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் செலவு செய்ய வேண்டிய தொகை விவரம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரம் -

சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு - 3750
சிற்றூராட்சித் தலைவர் பதவிக்குப் 15,000
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் 37,500
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் 75000

அ.தி.மு.க.வுடன் பங்கீடு செய்வது குறித்து குழு ஒன்றை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அமைத்து உள்ளார். இந்த குழுவில் அவைத் தலைவர் எல்.கணேசன் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., சத்யா, அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர் டி.கே. சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு செல்வாக்கு உள்ள அனைத்து இடங்களிலும் வேட்பாளரை தேர்வு செய்து போட்டியிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட வாரியாக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயகாந்திடம் ஒப்படைக்கப்படும். இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. போட்டியிடும். அதிகமான இடங்களை எங்கள் கட்சி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க. 2-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று தே.மு.தி.க மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல் அக்டோபர் 13 மற்றும் 15-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.

அக்டோபர் 13-ந் தேதி, 45 நகராட்சிகளுக்கும், அக்டோபர் 15-ந் தேதி 57 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.


13-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நகராட்சிகள் விவரம்:-

கோவை மாவட்டம்:- மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி.
கடலூர் மாவட்டம்:- நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம்.
தர்மபுரி மாவட்டம்:- தர்மபுரி.
திண்டுக்கல் மாவட்டம்:- கொடைக்கானல்.
ஈரோடு மாவட்டம்:- தாராபுரம், சத்தியமங்கலம்.
காஞ்சி மாவட்டம்:- காஞ்சீபுரம், மதுராந்தகம்.
கன்னியாகுமரி மாவட்டம்:- கொளச்சல், குழித்தலை
கரூர் மாவட்டம்:- கரூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்:- ஒசூர்
மதுரை மாவட்டம்:- மேலூர்
நாகை மாவட்டம்:- நாகப்பட்டினம்.
நாமக்கல் மாவட்டம்:- குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு.
புதுக்கோட்டை மாவட்டம்:- புதுக்கோட்டை.
ராமநாதபுரம் மாவட்டம்:- ராமநாதபுரம்.
சேலம் மாவட்டம்:- ஆத்தூர்.
சிவகங்கை மாவட்டம்:- சிவகங்கை
தஞ்சை மாவட்டம்:- கும்பகோணம், தஞ்சாவூர்.
நீலகரி மாவட்டம்:- குன்னூர், உதகமண்டலம்.
தேனி மாவட்டம்:- பெரியகுளம், தேனி-அல்லிநகரம்.
திருவண்ணாமலை மாவட்டம்:- திருவண்ணமலை.
தூத்துக்குடி மாவட்டம்:- தூத்துக்குடி.
திருச்சி மாவட்டம்:- துறையூர்.
திருவள்ளூர் மாவட்டம்:- திருவள்ளூர்.
திருவாரூர்:- கூத்தாநல்லூர், மன்னார்குடி.
வேலூர் மாவட்டம்:- அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், வாலாஜாபேட்டை.
விழுப்புரம் மாவட்டம்:- விழுப்புரம்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர்.

15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நகராட்சிகள் விவரம்:-

கோவை மாவட்டம்:- திருப்பூர், உடுமலை.
கடலூர் மாவட்டம்:- சிதம்பரம், கடலூர்.
திண்டுக்கல் மாவட்டம்:- திண்டுக்கல், பழநி.
ஈரோடு மாவட்டம்:- பவானி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம்.
காஞ்சி மாவட்டம்:- ஆலந்தூர், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம்.
கன்னியாகுமரி மாவட்டம்:- நாகர்கோவில், பத்மனாபபுரம்.
கரூர் மாவட்டம்:- குளித்தலை.
கிருஷ்ணகிரி மாவட்டம்:- கிருஷ்ணகிரி.
மதுரை மாவட்டம்:- திருமங்கலம், உசிலம்பட்டி
நாகப்பட்டினம் மாவட்டம்:- மயிலாடுதுறை, சீர்காழி.
நாமக்கல் மாவட்டம்:- நாமக்கல்.
புதுக்கோட்டை:- அறந்தாங்கி.
ராமநாதபுரம்:- பரமக்குடி.
சேலம் மாவட்டம்:- இடைப்பாடி, மேட்டூர்.
சிவகங்கை மாவட்டம்:- தேவக்கோட்டை, காரைக்குடி.
தஞ்சை மாவட்டம்:- பட்டுக்கோட்டை.
தேனி மாவட்டம்:- போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம்.
திருவண்ணாமலை மாவட்டம்:- ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி.
தூத்துக்குடி மாவட்டம்:- கோவில்பட்டி.
திருச்சி மாவட்டம்:- மணப்பாறை.
திருநெல்வேலி மாவட்டம்:- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி.
திருவள்ளூர் மாவட்டம்:- அம்பத்தூர், ஆவடி, கத்திவாக்கம், மாதவரம், திருவொற்றியூர்.
திருவாரூர் மாவட்டம்:- திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.
வேலூர் மாவட்டம்:- ஆம்பூர், குடியாத்தம், திருப்பத்தூர், வாணியம்பாடி.
விழுப்புரம் மாவட்டம்:- திண்டிவனம்.
விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.

0 Comments: