பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 20, 2006

சோனியாவுக்கு "வந்தே மாதரம்' பாடத் தெரியாதா? அல்லது பிடிக்காதா?

சோனியாவுக்கு "வந்தே மாதரம்' பாடத் தெரியாதா? அல்லது பிடிக்காதா?
– எஸ். குருமூர்த்தி

"வந்தே மாதரம்' என்று பாரத அன்னையை வணங்கிப் பாடுவது, இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு விரோதமானது – என்று இஸ்லாமிய பிரிவினைவாதிகளும், வகுப்புவாதிகளும் பிரச்சாரம் செய்த பிறகும், இஸ்லாமியக் குழந்தைகளை அப்பாடலை பாடவிட மாட்டோம் என்று பல இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயம் செய்த பிறகும் கூட, லட்சக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் "வந்தே மாதரம்' பாடியிருக்கிறார்கள். அவர்கள் பாடியது மட்டுமல்லாமல், அப்படி அவர்கள் பாடிய செய்திகளை, ஃபோட்டோக்களுடன் பெருமையாக வெளியிட்டிருக்கின்றன பல இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள்.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல், "வந்தே மாதரம்' கட்டாயம் எல்லோரும் பாட வேண்டும் – என்று குஜராத் அரசு கட்டளை பிறப்பிக்கவில்லை. ஆனாலும் அம்மாநிலத்தில் 99 சதவிகிதம் இஸ்லாமிய
குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் எல்லாக் குழந்தைகளும் "வந்தே மாதரம்' உற்சாகத்துடன் பாடினார்கள் என்கிற செய்தி வெளிவந்தது. அந்தப் பள்ளியை நடத்தும் முஸ்லிம் நிர்வாகிகள், "வந்தே மாதரம் பாடலை பாடுவதில் எந்தவித தயக்கமும் எங்கள் குழந்தைகளுக்கு இல்லை' – என்று பெருமையுடன் கூறினர்.

எந்த இஸ்லாமிய இயக்கங்கள், சமய அமைப்புகள், தலைவர்கள் – இந்த "வந்தே மாதரம்' கீதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களோ, அவர்கள் தங்கள் சமூகத்தில் தனிப்பட்டவர்கள் எவருக்கும் இப்பாடலைப் பாடுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை உணர, இந்த செய்திகள் உதவினால் அது அவர்களுக்கும், அவர்கள்
சமூகத்திற்கும், சரியான கருத்துக்களை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்
– என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

சென்னையில் காலை 11 மணி வெயிலில், கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் கடற்கரையில் காந்தி சிலை அருகே "வந்தே மாதரம்' பாடினார்கள். தமிழக அரசு, இந்த நிகழ்ச்சிக்கு எந்த விதமான உதவியும் செய்யாதது மட்டுமல்லாமல், "குழந்தைகளுக்கு நிழல் தரும் பந்தல் போடக் கூடாது; மைக் வைத்துக் கொள்ளக் கூடாது' என்று அவர்களை சுடும் வெயிலில் "வந்தே மாதரம்' பாட வைத்தது. 75 வயது தாண்டிய என்னுடைய நண்பர் ஐராவதம் மகாதேவன், ""வேளச்சேரியிலிருந்து வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "வந்தே மாதரம்' பாடினேன்'' என்று டெலிஃபோனில் பேசினார்.

மேலும் ""அப்படிப் பாடும்போது 1942ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' என்று பள்ளிக்கூடத்தில் கோஷமிட்டு ஆசிரியரிடம் "பளார் பளார்' என்று நான் அடி
வாங்கியது ஞாபகத்திற்கு வந்தது'' என்று தழுதழுக்கும் குரலில் கூறினார் மகாதேவன். ஆக, அன்று அந்நிய அரசு எப்படி "வந்தே மாதரம்' பாடுவதற்கு எதிராக இருந்ததோ, அதே போல் இன்று பல சிறுபான்மை இயக்கங்களும் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதைத்தான் – 1942ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' எதிர்ப்பும், 2006ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' எதிர்ப்பும் காட்டுகிறது.

ஆக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் ஜாதி, மதம், பிரதேசம், மொழி போன்ற எல்லா பிரிவினைகளையும் மீறி, 1896ஆம் ஆண்டு
ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தா காங்கிரஸ் சபையில், முதல் முறையாகப் பாடிய "வந்தே மாதரம்' கீதத்தை உற்சாகத்துடன் பாடியிருக்கிறார்கள்.

பல முஸ்லிம் அறிஞர்களும், தலைவர்களும், சில இஸ்லாமிய சமுதாய
இயக்கங்களும் "வந்தே மாதரம்' பாடக் கூடாது என்று கூறியிருப்பது தவறு என்று வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர். முதலில் அவசரப்பட்டு "வந்தே மாதர'த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீக்கிய மத உச்சஸ்தாபமான "குருத்வாரா' பிரபந்தக் கமிட்டியும், தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு "வந்தே மாதரம்' கீதத்தை பாடுவதற்கு ஆதரவு தெரிவித்தது.

"வந்தே மாதரம்' பாடுவதை எதிர்த்த இஸ்லாமிய இயக்கங்களும், தலைவர்களும், இனியாவது அவர்களுடைய அந்த நிலை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் அப்படிப் பேசுவதும் செயல்படுவதும், விடுதலைப் போராட்டத்தின் போது அப்படி நடந்து நாட்டைப் பிளந்த இஸ்லாமிய பிரிவினைவாதிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படி செய்து விடுமோ – என்று அவர்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.

நாட்டின் மீது அபிமானம் கொண்ட இஸ்லாமிய அறிஞர்களும், தலைவர்களும், மற்ற சமுதாய மக்களின் இதயத்தில் தமது சமுதாயம் நல்ல இடம் பெற வேண்டும் என்று நினைக்கும் இஸ்லாமிய அன்பர்களும், "வந்தே மாதரம்' போன்ற நாட்டுப்பற்று
சம்பந்தப்பட்ட விஷயங்களில் இஸ்லாமிய வகுப்புவாதிகள் மதவெறியைக் கலக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் "வந்தே மாதரம்' பாடப்பட்டது – இப்போதைய காங்கிரஸ் தலைமையில் நடக்கும் அரசாங்கத்தின் ஆணையால்தான். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய "வந்தே மாதரம்' பாடும் நிகழ்ச்சியில் – சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. "உடல்நிலை சரியில்லை' என்று கூறி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தப்பித்திருக்கிறார் சோனியா. இது வெட்கக்கேடான செயல். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தலைகுனியும்படி செய்திருக்கிறார் சோனியா.

"வந்தே மாதரம்' பாடத் தெரியாது என்று அவர் கூச்சப்பட்டு வரவில்லை என்றால், அதற்காக அவரை மன்னிக்கலாம். ஆனால் "வந்தே மாதரம்' பாடப் பிடிக்காமல் அவர் வரவில்லை என்றால், இந்த நாட்டில் அவர் வாடகைக்கு ரூம் எடுத்திருக்கும் அரசியல் தலைவராக இருக்கிறார் – பாரத அன்னையை, தனது அன்னையாக ஏற்ற பாரத குடிமகளாக அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
நன்றி: துக்ளக்

1 Comment:

Sunny said...

It shows, they are also Indians... they really not making problems... it seems some other people want advertisement on this issue.