பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 08, 2006

ஓ.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ண்ன் வீடுகளில் சோதனை

இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் இன்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தேனி மாவட்டம் பெரிய குளம் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை அப்படியே இருக்க செய்து கதவை பூட்டி விட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் வருமான வரித்துறையின் இன்னொரு பிரிவினர் பெரியகுளம் மூன்றாந்தலில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வீட்டிலும் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்திலும் மூன்றாவதாக ஒரு குழுவினர் சோதனை நடத்தினர். மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனை நடைபெறும் வீடுகள், அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அண்ணாநகர், தபால் தந்தி நகர், எல்லீஸ்நகர் ஆகிய 3 இடங்களில் வீடுகளும், அலுவலகங்களும் உள்ளன. ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், தஸ்தா வேஜுகள், கணக்கில் காட்டப் படாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நகை-பணம் சிக்கியதாக தெரிகிறது. மேலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ஒரே நாளில் ஓ.பன்னீர் செல்வம்-அனிதா ராதா கிருஷ்ணன் வீடுகளில் நடக்கும் இந்த சோதனையால் மதுரை-தேனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

0 Comments: