பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, September 06, 2006

வைகோவை நீக்க தயாரா? ஜெக்கு காங் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி :

வைகோ மூலமாக விடு தலைப்புலிகளுடன் ஜெய லலிதா தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என்று சிதம்பரத்தில் நான் பேசினேன். 2 நாட்கள் அமைதியாக இருந்த ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு சென்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பழைய சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக பேசிய வைகோவை பொடா சட்டத் தில் கைது செய்து சிறையில் அடைத்தார். ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும். என்று கூறினார். இப்போதும் வைகோ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா வைகோவை கண்டித்தாராப ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால் அமைதி காத்துக்கொண்டு இருக்கிறார்.

வைகோவை அன்பு சகோதரர் என்று சொல்கிறார். வயதில் மூத்த அவரை அப்படி சொல்லட்டும். ஆனால் 83 வயது நிரம்பிய கலைஞரை அழகு சுந்தரம் என்று கேலி செய்திருக்கிறார். இது சரியா?

இன்று விடுதலைப்புலி களை ஆதரிக்கும் வைகோவை இவர் தடுக்காதது ஏன்? இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு விடுதலைப்புலி பிரதிநிதிகளை ஜெயலலிதா சந்தித்து பேசினார். ஆனால் இதுவரை அதுபற்றி எந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவர் தமிழ்நாட்டுக்கு வருவது பாதுகாப்பு இல்லை என்று கருதித்தான் அவருடன் ஒரே மேடையில் பேசும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜெயலலிதா புறக்கணித்தார் என்று சட்டசபையிலேயே தம்பித்துரை பேசி இருக்கிறார். ராஜீவ் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நீங்கள் முன்பே தெரிந்திருந்தால் அதனை தடுக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை.

இதையெல்லாம் ஆராயும்போதுதான் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கான பதிலை எப்போது சொல்வீர்கள்.

உங்கள் ஆதரவுடன் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்த டைரக்டர் பாரதி ராஜாவும் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித் திருக்கிறார். அதற்கும் பதில் சொல்ல வேண்டும். 2004-ல் வைகோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஒரு இடத்தில் கூட விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசவில்லை. ஆனால் இப்பேது பேசுவது உங்கள் ஆதரவால்தானா? நீங்களும் தீவிரவாதத்துக்கு துணைபோகிறீர்களாப விடுதலைப்புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பதாக கூறும் வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்க தயாரா?

பா.ம.க. எங்களுடன் உறவு வைத்திருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்கள். விரப்பமொய்லியை ராமதாஸ் குறைகூறி இருக்கிறார். அது தவறு.

ம.தி.மு.க.வை மத்திய கூட்டணியில் இருக்கும்படி நாங்கள் வற்புறுத்தவில்லை. இங்குள்ள அவர்கள் நடவடிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்போம்.

0 Comments: