1. நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்கள் எவ்வளவு கேவலமாக ஆகி விட்டார்கள் ? - தந்தை பெரியார், வாழ்க்கை துணை நலம் புத்தகத்தில், 1938 ஆம் பதிப்பு
2. திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள், எப்படிப் பெண் ஆள வேண்டும் என்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமரமக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே அல்லாமல் அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது... எனவே பெண்ணடிமை ஒழிய, திருமணம் முறை ஒழுந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தத் திருமண ஒழிந்தே ஆக வேண்டும். - தந்தை பெரியார், உயர் எண்ணங்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு
3. பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. .... புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். - தந்தை பெரியார், குடிஅரசு கட்டுரை, 1.3.1931 பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கும் கட்டை உடைத்தெரிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும் நிர்பந்ததிற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது! - தந்தை பெரியார் - சமுதாய சீர்திருத்தம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.
4. கேள்வி: பெண்கள் புருஷர்கள் என்றைக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் ?
பதில்: கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள். - தந்தை பெரியார் - குடிஅரசு 29.10.1933. விடுதலை வெளியிட்ட தந்தை பெரியார் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்.
5. இந்தக் 'கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே கணவன் - மனைவி என்ற உறவும் பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது - தந்தை பெரியார் - பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு - விடுதலை 26.6.1973
6. கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப் பெண்.. .இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி ? மார்பைக் கையில் திருகினால் அது வந்து விடுமா ? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும், எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றி கொள்ளுமா ? அதில் 'பாஸ்பரஸ்' இருக்குமா இந்த மூடநம்பிக்கை கற்பனையானது. என்ன பயனைக் கொடுக்கிறது ? .. இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா ? அவள், புத்தியின் பெருமையா ? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா ? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா ? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்று அறிவு வேண்டாமா ? - தந்தை பெரியார் - சேலத்தில் 22.7.1951 அன்று பேசியது. விடுதலை 28.7.1951
7. கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமுகக் கொடுமையும் அழிய வேண்டும். ... எந்த காரணத்திற்கு ஆனாலும் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு ஆசை, காதல், காமம், நட்பு நேசம், மோசம், விரகம் முதலியவைகளை பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ முற்றும் முன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறுது கூட உரிமையோ கிடையாது என்று சொல்கிறோம். இன்னும் சிறுது வெளிப்படையாய் தைரியமாய் இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவையெல்லாம் ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்கு பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்தென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்று தான் சொல்ல வேண்டும். .... பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப் பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணம் அடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூல காரணமாக இருக்கின்றது. .....பெண்கள் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கின்றோம். - தந்தை பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்?' - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.
8. ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும் - தந்தை பெரியார் - குடியரசு 8.2.1931 - தந்தை பெரியார் அறிவுரை 100 நூலிலிருந்து.
நன்றி: துக்ளக் 12.11.2005
பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை
Friday, September 01, 2006
தந்தை பெரியார் கருத்துக்கள் டாப் டென்+8
Posted by IdlyVadai at 9/01/2006 11:08:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
25 Comments:
இவ்வளவு புரட்சி கருத்துக்களை இந்த மனிதர் சொல்லி இருக்கிறார் என்பது ஆச்சர்யமாக உள்ளது....
பொது வேண்டுகோள்
தமிழ் மணம், மணம் வீசவில்லை.
வரவர அழுகல் நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டது
சில மேன்மைக்குரிய பதிவாளர்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் கடித்துக் குதறிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்கள் நினைக்கும் அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - அதாவது அவர்கள் மொழியில் பூஜை, புனஸ்காரம் என்று இருப்பவர்கள் அந்த சமூகத்தில் 10% பேர்கள்தான்
மற்றவர்கள் எல்லாம் (90%) நன்றாகப் படித்து நல்ல வேலைகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள்
அரசு படிப்பதற்கு, வேலைகளுக்கு என்று கோட்டா வைத்து அவர்களை ஓரங்கட்டியபோதும் அவர்கள் உள்
நாட்டிலும், வெளிநாட்டிலும் சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்
அதனால் ஒட்டு மொத்தமாக அந்த சமூகத்தைச் சாடுவதில், குப்பைகளைக் கொட்டுவதில் எந்தப் பயனும் இல்லை
சூரியனைப் பார்த்து நாய் குறைப்பதைப் போன்றதாகும் அப்படிப்பட்ட செயல்கள்
முதலில் எழுதுபவர்கள் தங்களுடைய நிலைமையை உணரவேண்டும்
அவர்கள் மீது குப்பைகளை கொட்டும் அதிகாரத்தை இவர்களுக்கு யார் கொடுத்தார்கள்?
அதற்குத் தமிழ் மணம்தான் கிடைத்ததா?
வேறு ஊடகங்களே இல்லையா?
பெரியார் மீது இவர்களுக்குக் காதலென்றால் - அவருடைய கருத்துக்களை மக்களுக்குக் கொண்டு போகவேண்டு மென்றால் - அதை மட்டும் எழுதட்டும்
இப்படிக் காறி உமிழ்ந்துகொண்டே இருப்பதற்கும்,
தொண்டை வரண்டு போகும் அளவிற்கு விடாது குறைப்பதற்கும்தான் பெரியார் இவர்களுக்குச் சொல்லிக் கொடுத்துவிட்டுப்போனாரா?
இப்படி இவர்கள் தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தால் என்னைப் போன்ற பெரியார் கொள்கையில் பிடிப்பு உள்ளவர்களும், அந்த இயக்கத்தை விட்டு விலக நேரிடும்
படித்து, நல்ல நிறுவனங்களில் வேலை பார்க்கும் இவர்கள் இப்படித் தமிழ் மணத்தில் கத்தி (ச்) சண்டை போட்டுக்கொண்டிருப்பது இவர்களுடைய நிறுவன உயர் அதிகாரிகளுக்குத் தெரியுமா?
தங்கள் புகைப்படம், அலுவலக முகவரியுடன் தங்கள் எழுத்துக்களைப் பதிவு செய்யும் தைரியம் இவர்களுக்கு ஏன் இல்லை?
அந்த துணிச்சலைப் பெரியார் இவர்களுக்குக் கொடுத்துவிட்டுப் போகவில்லையா?
ஆகவே இவர்கள் திருந்த வேண்டும்!
இவர்களின் ஆபாச எழுத்துக்கள் தமிழ் மணத்தில் தடை செய்யப்பட வேண்டும்
இல்லை என்றால் கண்ணியமாக எழுத & படிக்க விரும்பும் வாசகர்கள் தமிழ் மணத்தை இவர்களுக்குப் பட்டா
போட்டுக் கொடுத்து விட்டு வேறு ஊடகங்களுக்குப் போக வேண்டியதுதான்
எந்த சமூகத்திற்குத்தான் தன் சாதிப்பெருமை இல்லை?
மருத்துவர் அய்யா கட்சிக்காரர்கள் வன்னியரைத்தவிர மற்றவர்கள் அன்னியர் என்கிறார்களே - அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு,
கொங்கு வேளாளர் பேரவை, முக்குலத்தோர் பேரவை என்று மாவட்டத்திற்கு ஒரு சாதி , இனச் சங்கம் தலை துக்க்கிக் கொடி பிடித்துக் கொண்டு இருக்கவில்லையா? அவர்களை எதிர்த்து எழுதும் துணிவு உண்டா இவர்களுக்கு.
ஆகவே சாதி இனச் சண்டைகள் நமக்கு வேண்டாம் (வலைப் பதிவாளர்களுக்கு) எழுத்தாளன் என்றாலே எல்லோருக்கும் பொதுவானவன். ஆகவே சாதிகளை மறந்து மனிதர்களை நேசிப்போம்
மனிதநேயத்தோடு மட்டும் இருப்போம்
இனிமேலாவது அறிஞர் திரு.C.N.அண்ணாதுரை அவர்கள் சொல்லிக்கொடுத்த கண்ணியத்தோடு அனைவரும் எழுதுவோம்!
இவர்கள் திருந்தவில்லை என்றால் - தமிழ் மணம், ஆபாச எழுத்துக்களுக்குப் பதிலடியாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகளைக் கட்டிகொண்டு தொடர்ந்து வேடிக்கை பார்க்கும் என்றால் தமிழ் மணத்தை விட்டு வெளியேறுவோம்
நான் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவனல்ல - அதை
நினைவில் வைத்துக்கொண்டு முதல்வரியில் இருந்து
மீண்டுமொரு முறை அனைவரும் படியுங்கள்
வாழ்க தமிழ்!
வளர்க தமிழர்கள்!
தமிழ்நேசன்
( Copy to Tamil Bloggers for information)
//ஆகவே சாதி இனச் சண்டைகள் நமக்கு வேண்டாம்//
இது பார்ப்பனர்களுக்கு உரைக்க வேண்டுமே. எந்த பார்ப்பானாவது இதுவரை நாமெல்லோரும் சமம் என்று சொல்லியிருக்கிறானா?
இந்த இட்லி வடை பார்ப்பான்கள் உட்பட.
தந்தை பெரியாரின் கருத்துக்களை தொகுத்து வழங்கியதற்கு நன்றி.
தமிழ்நேசன் அவர்களுக்கு வணக்கம். இங்கு பெரியார் தாசன்களாக காட்டிக்கொண்டு பார்பனீயத்தை விமர்சனம் செய்துகொண்டுள்ள எம்மைபோன்றவர்கள் எல்லாம்" சூரியனைப் பார்த்து குறைக்கும் நாய்களாகவே" வைத்துக்கொள்வோம்.
"தமிழ்"நேசனான நீங்கள் இங்கு எங்களுக்கு கூறியது போல் சிதம்பரம் தில்லைமூவாயிரங்களிடம் சென்று "அய்யா தமிழ்ல கோவிலுக்குள்ள பாடவிடுங்கோளேன்" அப்படின்னு சொல்லிப்பாருங்கோ.அப்புரம் புரியும் உங்களுக்கு இங்கு எதற்காக எங்களை போன்ற வரட்டுத்தவக்களைகள் கத்திக்கொண்டுள்ளன என்று.
பார்பனீசம் என்பது வெரும் பூஜை புனஸ்காரத்தில் மட்டும் தான் உள்ளது என்பது நீங்கள் சொல்லித்தான் தெரிந்துகொண்டேன். மிக்க நன்றி.
இட்லிவடையாரே - நன்றி.
//குமாரசாமி said...
அதற்குத் தமிழ் மணம்தான் கிடைத்ததா?
வேறு ஊடகங்களே இல்லையா?//
அதானே,
தினமனி, தினமலர், விகடன், கல்கி எல்லாம் வேற எதுக்கு இருக்கு? ;-)
Tamil nesan,
your letter is really a sensible and with high values,
atleast let them realize otherwise
let them bark like dogs.
am in london, i see many British brahmins in ISKcon temples,
( they live like a brahminical way of life)
so realy brahmin is not a caste but qualification,
can be achieved by any body by good deeds.
நானறிந்தவரையில் காஞ்சிபிலிம்ஸ் உம் திரு அவர்களும் பார்ப்பனீயத்தை மட்டுமே எதிர்க்கிறார்கள். ஆனால் பெயர் சொல்லிக்கொள்ளாத என்னைப் போன்றவர்கள் பார்ப்பனர்களை குறிவைத்து தரக்குறைவான தனிமனித தாக்குதல் நடத்துகிறார்கள். இதனால் நல்ல பல பகுத்தறிவு கருத்துக்கள் கொச்சைப் படுத்தப் படுகின்றன. பார்ப்பனர்களிலும் கூட்டத்தை விட்டு வெளிவர இருக்கும் சிலரை பயமுறுத்துகின்றனர். நாசிச கொள்கையாக பார்ப்பனர்களை பூண்டோடு கொன்றுவிடமுடியாது. அவர்களை நம் வழிக்கு மாற்றுவதிலேயே சமுதாய முன்னேற்றம் காண முடியும். அத்தகைய fence sitterகளுக்கு comfort feeling தர வேண்டும். பெரியார் சொன்னது: பார்ப்பனீயத்தை எதிர்ப்பதே, பார்ப்பனர்களை அல்ல.. இதை தமது இராசாசியுடனான நட்பினால் எடுத்துக் காட்டியுள்ளார்.
இன்று மாலை சென்னையில் நடைபெறும் வலைப்பதிவாளர் மாநாட்டுக்கு எங்கள் அனானி முன்னேற்றக் கழகத்தின் சார்பாக மயிலை வட்டச் செயலாளர் அனானி அன்வர் பெருந்திரளான தொண்டர்களுடன் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.
மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்
ஆவேச அனானி அண்ணன் அண்ணாமலை
அமைந்தகரை
அமைப்பாளர்
அனானி முன்னேற்றக் கழகம்
இன்றைய கார்ட்டூன் பகுதி அப்பேட் செய்துள்ளேன்.
Have a long weekend :-)
அன்புடன்,
இட்லிவடை
ம்.... இப்படித்தான் copy & paste செய்யும்போது அரைகுறையாக செய்தால் அர்த்தம் அனர்த்தமாகும், இது இட்லி வடைக்கு கைவந்த கலை என்பது 49.5% என்ற பதிவில் கனிமொழி எழுதியதை எப்படி தகிடுதத்தமாக பயன்படுத்தியபோதே நன்றாக தெரியவந்தது, ஓரிரு வரிகளை வெட்டி ஒட்டும்போது முன் பின்னுள்ள வரிகள், சொல்ல வந்த சூழல் இவைகள் எல்லாம் கணக்கில் சேர்க்கவேண்டும், இல்லையென்றால் வரிகளில் அவர்கள் சொல்ல வந்த அர்த்தமும் வரிகளின் அர்த்தமும் வேறுபடும்...
இப்போ கீழே ஒரு சுட்டி கொடுத்திருக்கேன், அது அரைகுறையா copy & paste செய்ததல்ல, முழுசா copy & paste செய்தது....
கற்பு பற்றி பெரியார்
குழலி நன்றி :-)
நன்றிக்கு நன்றி இட்லிவடை, உங்களை மாதிரி 10 ஆளுங்க இருந்தா என்னை மாதிரி ஒரு ஆளு கூடவா இல்லாமலிருப்பாங்க.....
குழலி - இந்த பதிவு முன்பு ஒரு முறை துக்ளகில் வந்தது, அதை டைப் அடித்து வைத்தேன். எந்த துக்ளக் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். இன்று மாலை ஒரு 'நன்றி துக்ளக்..." என்று அப்டேட் செய்கிறேன்.
//இன்று மாலை ஒரு 'நன்றி துக்ளக்..." என்று அப்டேட் செய்கிறேன்.
//
ஓ இது துக்ளக் சரக்கா? ஆனாலும் இட்லிவடை 49.5% ல அந்த கலக்கு கலக்கியிருந்திங்களா... அதனால் துக்ளக்குக்கும் இட்லிவடைக்கும் வித்தியாசம் தெரியாம போயிடுச்சி இட்லிவடை அப்பவே துக்ளக் ரேஞ்சுக்கு போயிட்டிங்க :-)
குழலி இது கொஞ்சம் ஓவர். அப்புறம் ஆண்டுவிழா நடத்த வேண்டியிருக்கும்.
குமாரசாமியை வழிமொழிகிறேன்.
பெரியாரு எங்கயோ வெளிக்கி (சீ) வெளிநாட்டுக்கு போயிருந்தப்ப ட்ரஸ் இல்லாத கும்பலோட சகவாசம் வச்சிருந்தத முன்னே ஒரு தபா படிச்சிருக்கேன் - போட்டோ கூட போட்டு இருந்தாக.. பாசறை கண்மணி யாராவது வந்து அது இன்னா மேட்டருன்னு சொன்னா தமிழ்நாடு முன்னேறும்.
காப்பி பேஸ்ட் செய்வதில் குழலி அவர்களும் அவசரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அவர் சுட்டிய பெரியாரின் பேச்சு ஒரு திருமண விழாவில் பேசியது. அங்கு போய் மணப்பெண்ணிடம் கள்ள புருஷன் வைத்துக் கொள் என்று சொன்னால் அவரை அங்கேயே கட்டி வைத்து உதைக்க மாட்டார்களா?
மேலும் பெரியார் சொன்ன டிஸ்க்ளைமர் (குழலி இதை தடித்த எழுத்தில் கொடுத்துள்ளார்) அப்பா குதிருக்குள் இல்லை என்ற வகையில், தன்னை யாராவது முன்பு பேசியதற்காக எங்காவது கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களே என்பதால் கொடுக்கப்பட்டது.
அதே பதிவில் ரோசா வசந்த் இட்ட இந்தப் பின்னூட்டத்துக்கு குழலி பதிலே அளிக்கவில்லை.
"At 4:44 PM, ROSAVASANTH said…
//இப்படிச் சொல்லுவதன் மூலம் ஆண்களைப் போலவே பெண்களும் ஒழுக்க ஈனமாக இருக்க வேண்டுமென்று போதிப்பதாகக் கொள்ளக்கூடாது. பெண்களைப் போலவே ஆண்களும், ஒழுக்கமாக இருக்கச் செய்வதற்கு என்னென்ன செய்யவேண்டுமோ அவற்றை எல்லாம் சட்டமோ, சமுதாயமோ செய்ய வேண்டும்.//
தடித்த எழுத்துக்களில் காரணமாக தந்துள்ளீர்கள். சரி, இப்படி சொன்ன பெரியார், 'பெண் ஏன் அடிமையானாள்?' நூலில் பலதாரா மணம் உள்ளிட்ட பல 'ஒழுக்கக் கேடுகளுக்கு' சார்பாக எழுதியுள்ளாரே? ஆண்களுக்கு சொல்லப்படும் அத்தனையும் (பல தாரம், பலருடன் உறவு) பெண்களுக்கும் பொருந்தும் என்று முடித்திருப்பாரே? அதை எப்படி எடுத்துக் கொள்வது.
இந்த உரை ஒரு கூட்டத்தில், அதில் பங்குகொள்ளும் கேட்பவர்களை மனதில் வைத்து பேசியது. ஆனால் நூல் என்பது தன் கருத்துக்களை எந்த வாசக சமரசமுமின்றி எழுதப்படுவது. இதில் எதை பெரியாரின் பார்வையாக எடுத்துக் கொள்வது.
(பெரியாரின் பார்வை எதுவாக இருந்தாலும், நாம் அதை எப்படி எடுத்து கொள்வது, நமது பார்வையை எப்படி உருவாக்கி கொள்வது என்பது வேறு விஷயம்.)
இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை பெரியார் பற்றிய எனது இப்பதிவில் பின்னூட்டமாக இடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/09/blog-post.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த பதிவு முன்பு ஒரு முறை துக்ளகில் வந்தது. அதை டைப் அடித்து வைத்தேன்.//
அப்டியே, 'விடுதலை' யில் இந்துத்துவா, பிராமணியம் குறித்து வீரமணி எழுதுறதையும் டைப் அடித்து போடுங்க.;-)
Viswamitra's article in Thinnai on what E Ve Ramasamy Nayakkan said about KARPPU.
-------------------------------------
அன்னை குஷ்புவும், தந்தை ஈ வெ ராவும் - சில சமன்பாடுகள்
--------------------------------------------------
குஷ்புவை செருப்பாலடிப்போம், குஷ்புவை விளக்குமாற்றால் அடிப்போம், குஷ்புவை தமிழ்நாட்டை விட்டே துரத்துவோம், தமிழ்ப் பெண்களின் கற்பைக் களங்கப் படுத்திய குஷ்புவே ஒழிக, .... இவை போன்ற, இதை விடக் கடுமையான ஆபாசமான கணைகள் , தாக்குதல்கள் குஷ்புவின் மீது தொடர்ந்து தமிழ் நாடு முழுவதும், திருமா வளவன் மற்றும் ராமதாசின் கட்சிக் கும்பல்களால் தொடுக்கப் படுகின்றன. தமிழ் நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் குஷ்புவின் மீது வழக்குத் தொடுக்கப் பட்டுள்ளன. அட, அப்படியென்ன குஷ்பூ சொல்லி விட்டார்?
"ஆண்கள் தங்கள் மனைவிகள் கன்னித்தன்மையோடு திருமணம் வரை இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது"
"பெண்கள் திருமணத்திற்கு முன்பே உடல் உறவு வைத்துக் கொள்வதில் தவறில்லை ஆனால் நோய் வராமல் பாதுகாப்பாக இருந்து கொள்ள வேண்டும்"
இதைச் சொன்னது யார்? குஷ்பு
குஷ்பு என்பவர் யார், எங்கு இதைச் சொன்னார் ?
ஒரு நடிகை. தனது பார்த்த தொழில் காரணமாக அதில் உள்ள சூழ்நிலைகள், சூழ்ச்சிகள், நிர்ப்பந்தம் காரணமாக, தனது வருமானத்தின் ஆதாரமாக பல ஆண்களுடன் பழக நேர்ந்தவர். அவர் தொழில், அவரது அனுபவத்தில் எது சரியென்று அவருக்குப் படுகிறதோ, அதை அவரது கருத்தாக செக்ஸ் சம்பந்தமான கணக்கெடுப்பை வருடா வருடம் வெளியிட்டு தனது பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு பத்திரிகைக்கு அளித்துள்ளார்.
பொதுவாக நடிகைகள் சொல்லும் உபதேசங்களையோ, கருத்துக்களையோ மக்கள் யாரும் வேதவாக்காக எடுத்துக் கொண்டு அதையே பின்பற்ற முயல்வதில்லை. இதே போன்ற கருத்துக்களை கமலஹாசன் உட்பட பல நடிகர் நடிகைகளும், கவிதாயினிகளும் இதற்கு முன்பே சொல்லியுள்ளார்கள். அப்படி ஒரு நடிகை தன் கருத்தைச் சொல்லுவதால் தமிழ் பெண்களின் கற்பும், மானமும் பறி போய் விடுமானால், ஒரு குஷ்பூ தெரிவித்த கருத்தைக் கேட்டு அதன்படி தமிழ் நாட்டுப் பெண்கள் நடக்க ஆரம்பித்து விடுவார்களேயானால், கண்ணகி பிறந்த தமிழ்நாட்டிற்கு ஒரு நடிகையின் கருத்தினால் மட்டுமே களங்கம் ஏற்பட்டு விடுமானால், அது என்ன கற்பாக, என்ன பாரம்பரியமாக இருக்க முடியும்? அப்படிப் பட்ட பலவீனமான பண்பாடா தமிழ்ர் பண்பாடு? ஒரு குஷ்பூவின் அறிக்கையினால் தமிழ் நாட்டுப் பெண்கள் அனைவருக்கும் களங்கம் ஏற்படும் என்று இவர்கள் சொல்வார்களேயாயின் இவர்கள் அல்லவோ தமிழ் நாட்டுப் பெண்களைக் கேவலப்படுத்துவதாக ஆகிறது?
குஷ்பு ஒரு நடிகை என்ற அளவில் தனக்குத் தோன்றிய, தனது அனுபவத்தின் படி ஒரு கருத்தைச் சொல்லியுள்ளார். அதை ஏற்கவில்லையெனில், இவர்களும் அதே பத்திரிகைக்கோ, பிற பத்திரிகைக்கோ, தாங்களும் ஒரு பேட்டி கொடுத்து ஐயா, அப்படியாகப் பட்ட கருத்து தவறு என்று சொல்லிவிட்டுப் போயிருக்கலாம், அல்லது இன்னும் ஒரு படி மேலே போய், கற்பின் முக்கியத்துவத்தை தமிழ் நாட்டுப் பெண்களுக்கு இவர்கள் கட்சி கூட்டங்கள் போட்டு பாடம் எடுத்திருக்கலாம், அல்லது கற்புக் காப்புக்களை வாங்கி இலவசமாக விநியோகித்திருக்கலாம். அதை விட்டு, விட்டு ஏன் இந்த வெறிக்கூச்சல் ? ஏன் இந்த ரவுடித்தனம்? ஏன் இந்த அடவாடித்தனம்? ஏன் இந்த அராஜகம்?
இப்பொழுது குஷ்புவை எதிர்ப்பவர்களில் முண்ணனியில் இருப்பவர்கள் ராமதாஸ¤ம், திருமாவளவனும். இவர்கள் தங்களை ஈ வெ ராவின் சீடர்கள் என்று அறிவித்துக் கொண்டவர்கள். ஈ வெ ராவின் சிலைக்கு பிறந்தநாளுக்கும், திவசத்திற்கும் சென்று சிலையுயர ரோஜா மாலை அணிவிப்பவர்கள். ஈ வெ ராவைப் பழித்தவர்களைச் சும்மா விடாதவர்கள். அப்படியாகப் பட்ட சீடர்கள் கூறுகிறார்கள், ஈ வெ ரா கற்பில் ஆணும் பெண்ணும் சமம் என்று மட்டும்தான் சொன்னாராம். என்ன சீடர்கள் இவர்கள்? தங்கள் குரு என்ன சொன்னார் என்பது கூடத் தெரியவில்லையா அல்லது தெரியாதது போல் நடிக்கிறார்களா? போகட்டும் சந்தேகத்தின் பலனை இவர்களுக்குக் கொடுத்து, இவர்களுக்கு உண்மையில் ஈ வெ ரா என்ன சொன்னார்? எதைப் போதித்தார்? எதை எழுதினார் என்பதை சற்றே நினைவு படுத்தலாம். பின்வரும் பாராக்காள் ஈ வெ ரா கற்பைப் பற்றியும், ராமதாசும், திருமாவும், கருணாநிதியும் தலையில் வைத்துக் கூத்தாடும் கண்ணகி குறித்தும், கற்பைப் போதித்த திருவள்ளுவர் குறித்தும் பல்வேறு கால கட்டங்களில் கூறியவை.
------------------------------------------------------------------------------
ஈ வெ ரா கற்பை, திருமணத்தைப் பற்றி விடுதலையில் எழுதியது:
இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால் "கலியாணம்' என்பதையே சட்ட விரோதமாக ஆக்க வேண்டும். இந்தக் ‘கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தான், கணவன் - மனைவி என்ற உறவும், பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது. இந்தக் கலியாண முறை இருப்பதால்தானே குழந்தை குட்டிகள் - அவற்றுக்குச் சொத்துகள் சம்பாதிப்பது - அதுவும் எதைச் செய்தாவது சம்பாதிப்பது என்ற சமுதாய ஒழுக்கக் கேடுகள் எல்லாம் ஏற்படுகின்றன. இந்தக் கல்யாண முறையை இந்த நாட்டில் ஏற்படுத்தியதே பார்ப்பான்தான். சாஸ்திரங்களில் சூத்திரனுக்கு கல்யாண முறையே இல்லையே!
தொல்காப்பியத்திலே கூறப்பட்டு இருக்கிறதே ‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்ப' என்று இருக்கிறதே. "மேலோர் இவர்க்கும் புணர்த்த கரணம் கீழோர்க் காதிய கரணமும் உண்டே' என்றும் தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் இருந்ததெல்லாம், சூத்திரர்களுக்குத் திருமணம் என்ற அமைப்பே இல்லாதிருந்தது என்பதுதான் தெளிவாகத் தெரிகிறது.
பெரும் பகுதி மக்களைச் சூத்திரனாக்க உடலுழைப்புக்காரனாக்க எப்படிப் பார்ப்பான் சாத்திரங்கள் செய்தானோ அதைப் போலத்தான் பெண்களை அடிமையாக்க ‘கலியாணம்' என்ற முறையும் ஏற்படுத்தப்பட்டது.
இந்த நாட்டிலே ஒரு பெண்ணானவள் பதிவிரதையாக இருக்க வேண்டும் என்றால், அவள் எவ்வளவுக்கு எவ்வளவு அடிமை உணர்வோடு இருக்கிறாளோ, அவ்வளவுக்கு அவ்வளவு அவள் உயர்ந்த பதிவிரதையாகப் பாவிக்கப்படுகிறாள். இதைத்தான், நமது இதிகாசங்களும் புராணங்களும் சாஸ்திரங்களும் வலியுறுத்துகின்றன.
வள்ளுவனிலிருந்து ஒவ்வொரு பெரிய மனிதனும் பெண்ணை அடிமைப் பொருளாகத்தான் கருதியிருக்கிறானே தவிர, ஆண்களோடு சரிசமானமான உரிமையுடையவர்களாகக் கூறவில்லையே. ஆணும் பெண்ணும் சம உரிமை இல்லாத உலகில் சுதந்திரத்தைப் பற்றிப் பேச எவனுக்கு யோக்கியதை இருக்கிறது?
முஸ்லிமை எடுத்துக்கொண்டால், பெண்களை உலகத்தைக் கூடப் பார்க்க விட மாட்டேன் என்கிறானே! முகத்தை மூடி அல்லவா சாலையில் நடமாட விடுகிறான். இதை விடக் கொடுமை உலகில் ஒன்று இருக்க முடியுமா?
நம் நாட்டு யோக்கியதைதான் என்ன? ஏழு வயதிலேயே பெண்களைக் கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அன்றைக்கு இரவே சாந்தி முகூர்த்தம் வைத்து விடுவானே.
பெண்களுக்காவது உணர்ச்சி வர வேண்டாமா? சிங்காரிப்பது - ஜோடித்துக் கொள்வது - சினிமாவுக்குப் போவது என்பதோடு இருந்தால் போதுமா? தாங்களும் சம உரிமை உடையவர்கள் என்ற உணர்ச்சி வர வேண்டாமா?
"நான் 1932இல் ஜெர்மனி சென்றிருந்தேன். அப்போது ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். அந்த வீட்டுக்காரர்களை விசாரித்தேன். அவர்கள் தங்களை, "Proposed Husband and Wife" என்கிறார்கள். அப்படி என்றால், என்ன அர்த்தம்? என்று கேட்டேன். "நாங்கள் உண்மையான கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொள்ள நாங்கள் பயிற்சி பெறுகிறோம்.'' என்றார்கள். "எவ்வளவு காலமாக' என்று கேட்டேன். "எட்டு மாதமாக' என்கிறார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? அந்த நாடு முன்னேறுமா? "பதிவிரதம்' பேசி பெண்களை அடிமையாக்கும் இந்த நாடு முன்னேறுமா?
'விடுதலை' 28.6.1973
நமது மக்கள் 100க்கு 80 பேர் தற்குறிகள். நம் பெண்கள் 100க்கு 90 பேர் தற்குறிகள். இந்தப் பெண்களுக்கு உள்ள 'கற்பு' என்கின்ற ஒரு காட்டுமிராண்டித்தனமான விலங்கு 100க்கு 90 பெண்களை மிருகக் கன்றுகளாகவே ஆக்கிவிட்டன.
ஈ வெ ரா கண்ணகியைப் பற்றி கூறியது:
கண்ணகி சினிமாவை பார்த்தேன். அதன் பிறகு அந்தக் கதையைப் பார்த்தேன். பழந் தமிழர் பெருமைக்கு இந்தக் கதையா ஆதாரம் என்கின்ற ஆத்திரம்தான் வந்தது. இதைப் போன்ற முட்டாள்தனமான கதை ஆரியப் புராணங்கள் ஆகியவற்றிலும் இல்லை என்பது எனது அபிப்பிராயம். இந்தக் கதை ஓர் இலக்கியமாக இருப்பது தமிழர்களின் மானக்கேடுதான்.
எனவே, தமிழ்நாட்டின் பழந்தமிழ் மக்களின் புத்திக்கும், நடைக்கும், ஒழுக்கத்துக்கும், ஆட்சி முறைக்கும், வீரத்திற்கும் இந்த இலக்கியங்கள் எடுத்துக்காட்டாக ஆகுமா என்று உங்களைக் கேட்கிறேன். இது எந்த விதத்தில் ஆரியர் புளுகையும் முட்டாள்தனத்தையும்விட குறைந்து இருக்கிறது என்று கேட்கிறோம்
ஈ வெ ரா திருவள்ளுவரைப் பற்றி எழுதியது: http://www.thinnai.com/pl0311042.html
---------------------------------------------------------------------------------
படித்துவிட்டீர்களா? ஆக திருமணம் என்பது ஒழிக்கப் படவேண்டிய ஒரு சடங்கு என்கிறார் ஈ வெ ரா. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம் ஆனால் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்கிறார் ஈ வெ ரா. பதிவிரதம் என்பதும் கற்பு என்பதும் ஒரு நாட்டை முன்னேற்றாது என்கிறார் ஈ வெ ரா. இதைத்தானே குஷ்வும் சொன்னார். பெண்கள் திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வதில் ஏதும் தவறில்லை ஆனால் நோய் வரமால பாதுகாப்பாக இருந்து கொள்ளுங்கள் என்கிறார் குஷ்பு. அவருக்கு செருப்படி, ஈ வெ ராவுக்கு ரோஜா மாலையா? என்னையா இது நியாயம்?
குஷ்புவாவது கற்பு பற்றி ஏதும் கருத்துத் தெரிவிக்கவில்லை ஆனால் ஈ வெ ராவோ கற்பு என்பதே ஒரு காட்டுமிராண்டித்தனம் என்கிறார். ஏற்கனவே தமிழ் மொழி ஒரு காட்டுமிராண்டி பாஷை என்று சொன்னவர்தான் இந்த புண்ணியவான்.
இதையெல்லாம் ஈ வெ ரா சொல்லவே இல்லை என்று ராமதாசும், திருமாவும் இன்னும் மறுக்கப் போகிறார்களா? குஷ்புவாவது ஒரு சாதாரண நடிகை. அவர் சொல்லை யாரும் பொருட்படுத்தப் போவதில்லை. அவர் பின்னால் யாரும் செல்லப் போவதில்லை. ஆனால் ஈ வெ ரா யார்? தமிழர்களின் தந்தையல்லவா? தமிழ்ர்களின் பெரியார் அல்லவா? அவர் வாழ்க்கைப் பாடமாக வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் கொள்கைகள் புத்தகங்களாகவும், பிரச்சாரங்களாகவும் தமிழ் நாடு முழுவதும் பரப்பபடுகிற்து அல்லவா? அவருக்கு தெருவுக்குத் தெரு, முக்குக்கு முக்கு சிலை வைக்கப் பட்டுள்ளது அல்லவா? அவர் பின்னால் பல திராவிட இயக்கங்கள் செல்கின்றன அல்லவா? ஈ வெ ரா தமிழர்களின் பகுத்தறிவுப் பகலவன் அல்லவா? அவர் சொன்னால் அது தமிழகத்தை மிகவும் பாதிக்கும் அல்லவா? ஒரு கருத்தை ஒரு ஈ வெ ரா சொல்வதற்கும்? ஒரு பெரியார் சொல்வதற்கும் ? ஒரு பகுத்தறிவுப் பகலவன் சொல்வதற்கும், ஒரு தமிழர்களின் தந்தை சொல்வதற்கும், ஒரு சாதாரண நடிகை சொல்வதற்கும் பெருத்த வித்தியாசம் உண்டல்லவா? எது அதிக பாதிப்பை ஏற்படுத்த வல்லது? எது அதிக களங்கத்தை ஏற்படுத்தக் கூடியது? யார் சொல்வதற்கு அதிக வலு இருக்கும்? மதிப்பு இருக்கும்?
ஆக ஈ வெ ராமசாமி நாயக்கர் சொன்னதற்கு குஷ்பு சொன்னதை விட பல மடங்கு மதிப்பும், மரியாதையும், செல்வாக்கும் உண்டு. அப்படி இருக்கும் பொழுது இந்தப் பண்பாட்டுக் காவலர்கள், தமிழர் மானத்தைக் காக்க அவதரித்தவர்கள், கண்ணகி பிறந்த பூமியின் மானத்தைக் காக்க உறுதி பூண்டவர்கள் யாரை முதலில் எதிர்த்திருக்க வேண்டும்? யாருக்கு முதலில் செருப்படி கொடுத்திருக்க வேண்டும்? யாரை முதலில் விளக்குமாற்றால் அடித்து விட்டு பின்னர் குஷ்புவிடம் வந்திருக்க வேண்டும். அப்படி செருப்பாலடிப்பதையும், விளக்குமாற்றால் கடவுள் சிலைகளை அடிப்பதையும் தமிழ் நாட்டுக்கு ஒரு கலாச்சாரமாகவே அறிமுகப் படுத்தியது இந்த ஈ வெ ராதானே? ஒரு வேளை இது வரை ஈ வெ ரா சொன்னது என்ன என்பது தெரியாததனால் இவர்கள் ஒரு அறியாமையினால் ஈ வெ ராவின் சிலைகள் மீதோ, அவரது வாரிசுகள் மீதோ, அவர்கள் புத்தகங்களின் மீதோ தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கக் கூடும். இப்பொழுது தெரிந்து கொண்டு விட்டார்கள் அல்லவா? தமிழர்களின் மானத்தை, தமிழ் பெண்களின் கற்பை களங்கப் படுத்திய ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும் ஒரு கை பார்த்து விட்டுத்தான் பண்பாட்டுக் காவலர்கள் ஓய்வார்கள் என்று நம்புவோமாக. இனிமேல் தங்களை ஒரு பொழுது ஈ வெ ராவின் சீடர்கள் என்று அழைத்துக் கொள்ள மாட்டார்கள் என்று நம்புவோமாக, இனிமேல் ஈ வெ ரா சிலைக்கு செருப்பு மாலையை அன்றி வேறு மாலை அணிவிக்க மாட்டார்கள் என்று நம்புவோமாக. கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் அல்லவா? இனி ஈ
வெ ரா இருக்கும் திசை பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார்கள். தமிழ் நாட்டுப் பெண்களைக் களங்கப் படுத்துவது ஈ வெ ராவாக இருந்தால் என்ன குஷ்புவாக இருந்தால் என்ன? யாராலும் தமிழின விரோதிகள்தானே. ராமதாஸ¤ம் திருமாவும் இனி சும்மா விட மாட்டார்கள் ஈ வெ ராவையும் அவர் தம் கொள்கைகளையும், சீடர்களையும். ஒரு கை பார்த்து விட்டுத்தான் ஓய்வார்கள் என்று நாம் நம்புவோமாக.
மாறாக ஈ வெ ராவின் சீடர்கள் என்று தங்களை அறிவித்துக் கொண்டு தமிழ் நாட்டை ஆட்சி செய்து வரும் திராவிடக் கட்சியினர் ஏன் இந்த விஷயத்தில் மொளனமாக உள்ளனர்? அவர்களுக்கு ஈ வெ ராவின் கொள்கைகளை ராமதாஸ¤ம், திருமாவும் எதிர்ப்பதில் உடன் பாடு உள்ளதா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிவுடன் உலகுக்கு அறிவித்த வீராங்கனை, கொள்கையின் கலங்கரை விளக்கம் குஷ்பூ அவர்களின் மீது வீசப்படும் தாக்குதல்களை ஏன் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள்? இவர்கள் உண்மையிலேயே ஈ வெ ரா சீடர்கள்தானா? வெகுண்டு எழுந்திருக்க வேண்டாமா கருணாநிதியும், ஜெயலலிதாவும் போட்டி போட்டுக் கொண்டு? ஏன் இந்த மொளனம், ஓ ஒருவேளை இவர்களுக்கும் ஈ வெ ரா என்ன சொன்னார் என்று தெரியாமல் போயிருக்கலாம், இப்பொழுதுதான் அறிவித்து விட்டோமே, இனிமேலாவது, ஈ வெ ராவின் கொள்கைகளை எதிர்க்கும் ராமதாசுடன், ஈ வெ ராவின் உண்மையான வாரிசுகளான தங்கள் கட்சிக்கு இனிமேல் ஒட்டோ உறவோ கிடையாது என்று துணிந்து அறிவிப்பாரா? ஈ வெ ராவின் கொள்கைகளை துணிந்து இந்த உலகத்திற்கு எடுத்துச் சொன்ன குஷ்புவை உடனடியாகத் தமிழர்களின் அன்னை என்று அறிவிப்பார்கள் என்று நம்புவோமாக. அன்னைக் குஷ்புவுக்கு ஏற்கனவே ஒரு மறத்தமிழன் கட்டியுள்ள கோவிலுக்கு அரசாங்கத்தின் சார்பில் ஒரு குடமுழுக்கும் நடத்துவார்கள் என்றும் நம்புவோமாக.
என்ன செய்யப் போகிறார்கள் ஈ வெ ராவின் சீடர்களும், பண்பாட்டுக் காப்பாளர்களும்?
பெரியார் என்ன மத பீடாதிபதியா?
அவர் என்ன புதிய மடத்தியா கட்டினாரு. சிந்திங்கடாதானே சொன்னாரு. அவர் சொன்னதை லெட்டர் பை லெட்டர் கடைபிடிக்கனும், அதுக்கு அடுத்த கட்ட சிந்தனைகளை தப்புனு சொன்னிங்கனா மக்களே நீங்க புதிய பிராமணியம் படைக்கிறங்க. பிராமணியம் மற்ற கருத்துகளை எதிர்த்தது. வேதங்களை தாண்டி சிந்தனைகள் அபச்சாரமாக்கப் பட்டது. இல்லாவிடில் அவை பிராமணீய திரிபுக்கு உள்ளாக்கப்பட்டது.
இப்ப திராவிட குஞ்சுகள் பேசறதை பார்த்தா பிராமணியம் என்ற வார்த்தையை திராவிடம் என்கிற வார்த்தையால மாற்றி பிராமணியத்தின் சாயல் கொண்டு வளருது. பெரியார் சொன்னது சுயமரியாதையோட இருங்க, சொந்தமா சிந்திங்கனு. சுயமரியாதைங்கறது நமக்கு கிடைக்கனுங்கறது மட்டுமில்ல அடுத்தவனுக்கும் கொடுக்கனும. அதுதான் பண்பாடு. அடுத்தவன் சானி வீசறான்னா ,பதிலுக்கு நாம அத பண்ணலாமா? அழுக்காவது நம்ப கையும் தானே.
அடுத்தவர் படுக்கையறை என்றைக்கும் விவாத பொருளல்ல. உன் வீட்டை பார். அதைக் காப்பாத்து. அதனாலதான் கற்புங்கறத வச்சி அடுத்தவளை ஆராய்ச்சி பண்ணாதே.அது காட்டுமிராண்டித் தனமினு சொல்லியிருப்பாரு. யோசிங்க மக்களே
புதிய பிளாகருக்கு மாற்றியதால் சில பிரச்சினைகள் இருக்கிறது.
//குழலி இது கொஞ்சம் ஓவர். அப்புறம் ஆண்டுவிழா நடத்த வேண்டியிருக்கும்//
Thala,
This is too much. I think you are going over board. 3 post on this silly matter?
Post a Comment