பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, September 29, 2006

நல்ல தம்பியாக இருக்க முயற்சி செய்தேன - திருமா பேட்டி

கேள்வி:- அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து நீங்கள் விலக காரணம் என்ன?

பதில் :- சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட தொகுதிகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் உள்ளாட்சி தேர்தலில் இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று அ.தி.மு.க. தரப்பில் கூறப்பட்டது. எந்த வாக்குவாதமும், பிடிவாதமும் செய்யாமல் 4 சதவீத இடத்தை ஏற்றுக்கொண்டோம்.

எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் எல்லாம் அ.தி.மு.க. திட்டமிட்டு மனு தாக்கல் செய்தது. எந்த அறிவிப்பும் இல்லாமல் எங்கள் இடங்கள் எல்லாம் பிடுங்கப்பட்டன. இது பற்றி அ.தி.மு.க. தலைவர் ஜெயலலிதாவை சந்தித்து பேச முயற்சி செய்த போது வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக நாங்கள் பேசியதும். களப்பணி ஆற்றியதும் அ.தி.மு.க. தலைமைக்கு சங்கடத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அதோடு பாப்பாரப்பட்டி, கீரிபட்டி போன்ற ஊராட்சிகள் தேர்தல் பிரச்சினையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அரசுக்கு பாராட்டு தெரிவித்து சட்டமன்றத்தில் நாங்கள் பேசியது அ.தி.மு.க.வுக்கு நெருடல் ஏற்படுத்தி இருக்கும். இந்த 2 காரணங்களால் அவர்கள் எங்களை வெளியேற்ற நெருக்கடி கொடுத்து இருக்கலாம் என்று நாங்கள் நினைக்கிறோம். எங்களை அரசியலில் அனாதை ஆக்க நடந்த சதியை முறியடித்து தி.மு.க. அணியில் சேர்ந்தோம். இதில் எந்த உள்நோக்கமும் இல்லை. எந்த அரசியல் ஆதாயமும் இல்லை.

கேள்வி:- கடந்த முறை தி.மு.க.வுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தீர்கள். இந்த முறை அ.தி.மு.க. ஆதரவோடு வெற்றி பெற்று இருக்கும் உங்கள் கட்சியை சேர்ந்த 2 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்வார்களா?

பதில் :- கடந்த முறை நான் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அதனால் சட்டமன்றத்தில் தி.மு.க. உறுப்பினர் போன்றே செயல்படும் நிலைமை இருந்தது. ஆனால் இந்த முறை அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் சுயேச்சை சின்னமான மணி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளோம். அதனால் எங்கள் 2 எம்.எல்.ஏ.க்களும் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சட்டமன்றத்தில் எங்கள் எம்.எல்.ஏ.க்கள் வழக்கம் போல் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

கேள்வி:- இப்போது தி.மு.க. உங்களுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் தி.மு.க. சின்னத்தில் போட்டியிடுவீர்களா?

பதில் :- இல்லை. தீபம் அல்லது கைக்கெடிகாரம் சின்னத்தில் போட்டியிடுவோம். தீபம் சின்னத்தை விஜயகாந்த் கட்சியும் கேட்டு இருக்கிறார்கள். ஆனால் யாருக்கு ஒதுக்குவது என்பதை தேர்தல் அதிகாரிகள் முடிவு செய்வார்கள்.

கேள்வி :- சகோதரர் திருமாவளவன் எங்கு இருந்தாலும் வாழ்க என்று ஜெயலலிதா கூறியுள்ளாரே ?

பதில் :- அக்கறைக்கு மிகுந்த நன்றி. நல்ல தம்பியாக இருக்க முயற்சி செய்தேன். ஆனால் முடியவில்லை. அவருக்கு எனது வேண்டுகோள் என்னவென்றால் அவரை தொண்டர்கள் சந்திக்க, கூட்டணி கட்சி தலைவர்கள் சந்திக்க எளிமையான வழிமுறைகளை ஏற்படுத்தி கொள்ள வேண்டுகிறேன்.

கேள்வி :- தேர்தல் பிரசாரம் செய்வீர்களா?

பதில் :- தி.மு.க. கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன். மதுரை மத்திய தொகுதியிலும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் சேர்ந்து பிரசாரம் செய்வேன். இந்த தேர்தலில் தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்.

மற்றொரு எம்.எல்.ஏ. எங்கே?

அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது விடுதலை சிறுத்தைகள் எல்.எல்.ஏ.க்கள் 2 பேரில் ஒருவரான ரவிக்குமார் மட்டும் உடன் இருந்தார். மற்றொரு எம்.எல்.ஏ.வான செல்வம் அங்கு இல்லை.

இது பற்றி நிருபர்கள் கேட்ட போது, " செல்வம் எம்.எல்.ஏ. கடந்த 3 நாட்களாக வெளியூரில் இருக்கிறார். அதனால் தான் வரவில்லை. வேறு பிரச்சினை எதுவும் கிடையாது'' என்று திருமாவளவன் கூறினார்.

ஜெ அறிக்கை, இல.கணேசன் அறிக்கை

Read More...

Thursday, September 28, 2006

இன்றைய வலைப்பதிவு மெனு

புதிய பகுதி, வலது பக்கம் பார்க்கவும் :-)

Read More...

Wednesday, September 27, 2006

Flash: விடுதலை சிறுத்தைகள் திமுகவுடன் கூட்டு !

அதிமுக அணியிலிருந்து விடுதலைச் சிறுத்தைகள் விலகல்; திமுகவுடன் கூட்டு

அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பு அறிவித்துள்ளது. மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிடப் போவதாகவும் அக்கட்சி அறிவித்துள்ளது.

சன் டிவியில்:
* ஜெ என்னை அவமதித்தார் - திருமா.
* முன்பே வந்திருக்க வேண்டும் - மு.க

சிறுத்தைகளுக்கு விடுதலை ! ( சன் டிவி விடியோ காட்சி.. ( சுமார் தான் கண்டுக்காதீங்க )ஜெயா டிவியில்:
மாயாவி 3D தொடரை பார்க்க உதவும் 3D மாயக்கண்ணாடியுன் விலை 6.50 மட்டுமே... என்று ஓடிக்கொண்டிருக்கிறது


திருமாவின் அவதாரங்கள் பார்க்க : http://oosi.blogspot.com/2006/09/photo.htmlUpdate 28-Sep-2006:

திருமா பேட்டி :

அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு 4 சதவீதம் இடப் பங்கீடு ஒதுக்கப்பட்டது. எங்களுக்கு சாதகமான இடங்களில் கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று கேட்டு கொண்ட நிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டேன்.

ஒரு சில மாவட்டங்களில் எனது கட்சி நிர்வாகிகள் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தனர். நான் அவர் களிடம் பேசி கூட்டணியின் முடிவுபடி போட்டியிட வேண்டும். தனியாக போட்டியிடக்கூடாது என எச்சரித்தேன்.

இதற்கிடையே அ.தி.மு.க. வினர் எங்களுக்கு ஒதுக்கப் பட்ட இடங்களில் மனுதாக்கல் செய்தனர். இதனால் கூட்டணி கட்சிகளுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டது.

இது பற்றி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் `அம்மா'விடம் தெரிவிக்க முயற்சி செய்தேன். நேற்று முன்தினம் முதல் அவரை சந்திக்க கட்சியின் மூத்த நிர்வாகிகளிடம் தொடர்பு கொண்டேன்.

கூட்டணியில் எந்த மாற்றமும் இல்லை. எனது கட்சி நிர்வாகிகள் சிலர் எடுத்த நடவடிக்கையால் ஏற்பட்ட பிரச்சினையை தீர்த்துவிட்டேன். இது பற்றி அம்மாவிடம் பேச வேண்டும் என்று அவர்களிடம் தெரிவித்தேன். ஆனால் எந்த பதிலும் வரவில்லை.

இந்த நிலையில் சென்னை உள்பட அனைத்து மாவட்டங் களிலும் எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் அ.தி.மு.க.வினர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் மீண்டும் அவர்களிடம் தொடர்பு கொண்டு பேசி னேன். போயஸ் கார்டன் முன்பு நானும் எனது எம்.எல்.ஏ.க்களும் அம்மாவை சந்திக்க காத்திருந்தோம். தங்களை சந்திக்க வேண்டும் என்று ஒரு கடிதம் எழுதி அனுப்பி இருந்தேன். ஆனால் அதற்கும் எந்த பதிலும் வரவில்லை.

பல மணி நேரம் காத்திருந்து அவமானப்பட்டேன். கடைசி நேரத்திலாவது கூப் பிடுவார்கள் என எதிர் பார்த் தேன். ஆனால் அழைப்பு வரவில்லை.

பின்னர் அங்கிருந்து கொண்டே அ.தி.மு.க. கூட்டணியில் நாங்கள் தொடர்ந்து இருக்கிறோம் என்று பத்திரிகைகளுக்கு அறிக்கை கொடுத்தேன். அதன்பிறகும் அவர் என்னை அழைக்கவில்லை. இதனால் மனவேதனையுடன் அங்கிருந்து புறப்பட்டு வந்தேன்.

48 மணி நேரமாக ஜெய லலிதாவுடன் பேச முயற்சி செய்தேன். அ.தி.மு.க. மூத்த நிர்வாகி களிடம் இருந்தும் எந்த பதில் வராததால் ஏமாற்றத்துடன் திரும்பினேன். அதன்பிறகு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்தேன்


திமுக கூட்டணி தலைவர்கள் ரியாக்ஷன்

சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம்: தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான கூட்டணி திமுக தலைமையிலான கூட்டணிதான் என்பதை உணர்ந்து எங்கள் கூட்டணிக்கு வந்த திருமாவளவனை வரவேற்கிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: ரொம்பவும் மகிழ்ச்சி. தேர்தல் முடிந்ததும் வருமாறு அழைப்பு விடுத்தேன். அதிமுக கூட்டணியில் யாரும் இருக்க முடியாது. கறிவேப்பிலை போல் பயன்படுத்துவார்கள். தேர்தலுக்குப் பின் மதிக்கும் மனப்பக்குவம் இருக்காது. திருமாவளவன் வந்தது தாமதம்தான் என்றாலும் மகிழ்ச்சி.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் தா.பாண்டியன்:திருமாவளவன் திமுக கூட்டணிக்கு வந்ததை வரவேற்கிறேன்.

ஜெ அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சகோதரர் திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழ்க. சகோதரி என்ற முறையில் அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இதுதான்: ""ஆத்திரமும் அவசரமும் அரசியலில் என்றும் பலன் தராது''.

திருமாவளவன் அணி மாறியது சந்தர்ப்பவாதம் - இல.கணேசன

ஒரு அணியில் இருக்கும் போது அந்த அணியின் தலைவரை புகழ்ந்து பேசுவதும், எதிர் அணி தலைவரை பற்றி இழிவாக பேசுவதும், பின்னர் திடீர் என்று அணி மாறி வேறு அணியில் சேர்ந்து அந்த அணி தலைவரை புகழ்ந்து பேசுவதும், முன்பு ஏற்றுக்கொண்ட தலைவரை பற்றி தரக்குறைவாக பேசுவதையும் மக்கள் சகித்துக்கொள்ள மாட்டார்கள்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் திடீர் என்று தி.மு.க. அணிக்கு மாறி இருப்பது சந்தர்ப்ப வாதம். மக்கள் இதற்கு சரியான பதில் அளிப்பார்கள். இது அரசியல் நாகரீகம் கிடையாது.

Read More...

விழுப்புரத்தில் சிறுத்தைகள் தனித்து போட்டி

உள்ளாட்சி தேர்தலில் அதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உடன் பாட்டில் சிக்கல் எதுவும் இல்லை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.

அதிமுகவுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்மாறு தனது கட்சியினரை அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார். இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகளின் பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் வெளியிட் டுள்ள அறிக்கையில்:அதிமுக தலைமையிலான ஜன நாயக மக்கள் கூட்டணியில் விடு தலைச் சிறுத்தைகள் நான்கு சதவீத இடத்தை பெற்று உடன்பாடு செய் துள்ளது. மாவட்ட அளவில் அதிமுக பொறுப்பாளர்களுடன் எமது தோழர்கள் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் போன்ற ஒரு சில மாவட்டங்களில் பேச்சுவார்த்தையில் தேக்கம் ஏற்பட்டது. அதனை சில ஊடகங்கள் ஊதி, பெருக்கி குழப்பதை ஏற்படுத்தி உள்ளன. அதிமுகவுடன் செய்து கொண்டுள்ள உடன்பாடு அடிப்படையிலேயே விடுதலைச் சிறுத்தைகள் போட்டி யிடுகிறது.

அதிமுகவுடன் பேச்சு வார்த்தையில் சிக்கல் ஏற்பட்ட ஒரு சில மாவட்டங்களில் அவற்றை சரி செய்து இணக்கமுடன் செயல்படு வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே விடுதலைச் சிறுத்தைகள் அதிமுகவுடன் ஒத்து ழைப்பு நல்கிட வேண்டுகிறேன்.


Update:
விழுப்புரம் மாவட்டத்தில் அதிருப்தி எதிரொலி தனித்துப்போட்டியிட சிறுத்தைகள் முடிவு
பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் இல்லை. விடுதலை சிறுத்தைகள் செய்தி தொடர்பாளர் தமிழேந்தி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் தனித்து போட்டி யிடுவதாக அறிவித்துள்ளார்.

Read More...

மதுரை யாருக்கு ? ஆகா கிளம்பிட்டாங்கயா !

மதுரை இடைத்தேர்தல் யாருக்கு ? ஜூவி சர்வே :-) ஆகா கிளம்பிட்டாங்கயா! கிளம்பிட்டாங்கயா !
Madurai Opinion poll results

Photobucket - Video and Image Hosting

உதவி: ஜூவி

Read More...

Tuesday, September 26, 2006

தி.மு.க. கூட்டணி இடப்பங்கீடு முழு விபரம்

மாநகராட்சி மேயர் பதவி (6)

திமுக 4, காங்கிரஸ் 2

முதல்நிலை நகராட்சி (102)

திமுக 52, காங்கிரஸ் 25, பாமக 12, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 8, இந்திய கம்யூனிஸ்ட் 5

மூன்றாம் நிலை நகராட்சி (50)

திமுக 23, காங்கிரஸ் 13, பாமக 6 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4, இந்திய கம்யூனிஸ்ட் 4

ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவி (385)

திமுக 185, காங்கிரஸ் 95, பாமக 60, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 25, இந்திய கம்யூனிஸ்ட் 20

மாவட்ட ஊராட்சித் தலைவர் பதவி (29)

திமுக 12, காங்கிரஸ் 7, பாமக 5, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 3, இந்திய கம்யூனிஸ்ட் 2

பேரூராட்சி தலைவர் பதவி (561)

திமுக 284, காங்கிரஸ் 134, பாமக 70, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 45, இந்திய கம்யூனிஸ்ட் 28

தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், தமிழ் மாநில தேசிய லீக், அகில இந்திய பார்வர்டு பிளாக் (வல்லரசு பிரிவு), எம்.ஜி.ஆர். கழகம், உழவர் உழைப்பாளர் கட்சி, புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகளுக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்படும்.

நன்றி: மாலைமலர், தினமணி

Read More...

Monday, September 25, 2006

அரசியல் அவியல்

கலைஞர் கேள்வி பதில் அறிக்கை:

1. சிக்-குன்-குனியா நோய் காரணமாக இறந்தவர்களின் பட்டியலை ஜெயலலிதா கொடுத்ததாகவும் அதற்கு அரசு சார்பில் முறையான பதில் சொல்லப்படவில்லை என்றும் திரும்பத் திரும்ப ஜெயலலிதா அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறாரே?

ஜெயலலிதாவின் பட்டியலில் சிக்-குன்-குனியா நோயால் இறந்தவர்கள் என்று குறிப்பிட்டிருப்பவர்களில் ஒருவரான திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்த ராமசாமி என்பவர் இன்னமும் உயிரோடு தான் இருக்கிறார். கோவை பேரூரைச் சேர்ந்த குப்புசாமி செட்டியார் இப்போதும் உயிரோடு தான் இருக்கிறார். கோவை மருதூரைச் சேர்ந்த காரணி அம்மாள், சேலம் அய்யம்பெருமாள், மகாலிங்கம் ஆகியோரும் இன்னும் உயிரோடு தான் இருக்கின்றனர். சேலம் மாவட்டத்தில் தங்கவேல், திண்டுக்கல் மாவட்டத்தில் மவுனஜோதி, பழனியம்மாள், நாராயணசாமி ஆகிய நான்கு பேரும் இறந்து ஆண்டுக்கணக்கில் ஆகிறது. ஆனால், தற்போது சிக்-குன்-குனியாவால் இறந்ததாக ஜெயலலிதா கூறியிருக்கிறார். இதுபோன்று தூக்குப் போட்டு தற்கொலை, விஷம் அருந்தி தற்கொலை, கொலை, விபத்தில் இறந்தவர்களை சிக்-குன்-குனியா நோய் காரணமாக இறந்ததாக ஜெயலலிதா கூறியுள்ளார். "தன் நெஞ்சறிவது பொய்யற்க' என்று வள்ளுவர் சொன்னதை மறந்து நடந்து கொண்டால், "தன் நெஞ்சே தன்னைச் சுடும்.' இறந்தவர்கள் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறவில்லையே என்று கேட்டுள்ளார். சிக்-குன்-குனியா நோயால் யாராவது இறந்தால் தானே அவர்கள் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூற முடியும். ஜெயலலிதாவின் அறிக்கையை நம்பி உயிரோடு இருப்பவர்களின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறி அவமானப்படுவதா. ஜெயாவின் ஆட்சியில் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டினி காரணமாக சாகிறோம் என்று கடிதம் எழுதிவிட்டு செத்தார்களே. அவர்களில் எத்தனை பேருடைய வீட்டுக்கு ஜெயலலிதா சென்றார்.


2. உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு முரசு சின்னம் கிடைக்க விடாமல் தி.மு.க., தான் தடுத்து விட்டதைப் போல ஒரு பிரசாரம் திட்டமிட்டு செய்யப்படுகிறதே?

தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட ஆறு தேசிய கட்சிகள், நான்கு மாநில கட்சிகளுக்கு மத்திய தேர்தல் கமிஷன் ஏற்கனவே தேர்தல் சின்னங்களை ஒதுக்கியுள்ளது. அந்த சின்னங்களே உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அந்த கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களைத் தவிர உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அனைவரும் சுயேச்சை வேட்பாளர்களாகவே கருதப்படுவர். சுயேச்சை வேட்பாளர்களுக்கென 35 சின்னங்கள் கொண்ட பட்டியலில் முரசு சின்னம் இடம்பெறவில்லை. தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு அதே நேரத்தில் இன்னும் முறைப்படி அங்கீகாரம் பெறாத கட்சியாக தே.மு.தி.க., இருப்பதால் அந்த கட்சி கேட்கும் சின்னத்திற்கு அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை. இதில், தி.மு.க.,விற்கு எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. தி.மு.க., மீது தேவையில்லாமல் திட்டமிட்டு கூறப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

3. கச்சத்தீவு பிரச்னையில் நீங்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியது பற்றி ஜெயலலிதா குறை கூறியிருக்கிறாரே?

கடிதம் எழுதாமல் இருந்தால் அதைப்பற்றி முதல்வர் மூன்று மாதமாகியும் பிரதமருக்கு கடிதம் எழுதியது உண்டா என்று அறிக்கை விடுவார்.

திமுக- கம்யூ. உடன்பாடு
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் இட பகிர்வு குறித்து திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும், திமுகவுக்கும் இடையே இன்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. காங்கிரசும், பாமகவும் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன. இன்று மாலை திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் இடங்கள் பற்றிய இறுதிப் பட்டியல் வெளி யாகும் என்று தெரிகிறது.

டெல்லியிலிருந்து காங். தலைவர்கள் திரும்பினர் சுமுகத்தீர்வு ஏற்பட்டது கிருஷ்ணசாமி, வாசன் பேட்டி


தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக தமிழக காங்கிரஸ் தலைவர்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டிற்கு சுமுகமாக தீர்வு ஏற்பட்டிருப்பதாக காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை தொடர்ந்து, அவசரமாக நேற்று புதுடெல்லிக்கு புறப்பட்டுச்சென்ற காங்கிரஸ் தலைவர்கள் இன்று விமானம் மூலம் சென்னை திரும்பினார்கள்.

இலவச கலர் "டிவி', தரிசு நிலம் வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் மீறி அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும் - திருமா

எங்களுக்கு போதுமான இடங்கள் கிடைக்கவில்லை என்றாலும் அ.தி.மு.க., ஒதுக்கிய நான்கு சதவீதம் திருப்தி அளிக்கிறது. கூட்டணி வெற்றிக்கு பாடுபடுவோம். இலவச கலர் "டிவி', தரிசு நிலம் வழங்கியிருந்தாலும் அதையெல்லாம் மீறி உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெறும். எங்கு இருந்தாலும் நாங்கள் உண்மையாக உழைப்போம். சென்னையில் எங்களுக்கு 7 வார்டுகள் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக கேட்டுள்ளோம் " - திருமாவளவன்

கார்த்திக் நீக்கம்

பார்வர்டு பிளாக் கட்சியின் தமிழக தலைவரும், பொதுச் செயலாளருமான நடிகர் கார்த்திக் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் அவர் நீக்கப்படுவதாக கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. ( இப்போது கட்சியில் ஒருவர் தான் இருக்கிறார் :-)

Read More...

உள்ளாட்சித் தேர்தல்: திருச்சியில் பாமக தனித்துப் போட்டி

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் உள்ள பாமக, திருச்சி மாநகராட்சி பகுதியில் தனித்துப் போட்டியிடுவதாக கூறியுள்ளது.

இத்தகவலை அக்கட்சியின் மாநில துணைத் தலைவர் கேசவ ராமலிங்கம் திருச்சியில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

''எங்களுக்கு திருச்சி மாநகராட்சிப் பகுதியில் நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. அமைச்சர் கே.என். நேரு பாமகவினரை நடத்திய விதம் எங்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இதையடுத்து, திருச்சியில் மாநகரப் பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளோம்.

மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் எங்கள் கட்சிக்கு 10 வார்டுகளை ஒதுக்க கோரினோம். ஆனால், அவர்கள் ஒரே ஒரு வார்டை மட்டும் தருவதாக கூறினர். அதுவும், பேச்சுவார்த்தைய இழுத்தடித்து ஒரு வார்டை ஒதுக்கினர். இதையடுத்து, நாங்கள் தனித்துப் போட்டியிடும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்'' என்றார்.
( தகவல் : தினமலர், தினமணி )

Read More...

நடிகை பத்மினி மாரடைப்பால் மரணம்

நாட்டியப் பேரொளி என திரையுலக ரசிகர்களால் அழைக்கப்பட்ட பழம் பெரும் நடிகை பத்மினி மாரடைப்பால் நேற்று இரவு சென்னையில் காலமானார். பழம் பெரும் நடிகை பத்மினி. இவரது மகன் ஆனந்த் அமெரிக்காவில் வசித்து வருகிறார். அமெரிக்காவில் இருந்த நடிகை பத்மினி, கடந்த மாதம் அங்கிருந்து சென்னைக்கு வந்தார். பின்னர் எம்.ஜி.ஆர்., நடித்த நாடோடி மன்னன் படம் மீண்டும் திரையிடப்பட்டதற்கான விழா சென்னையில் நடந்தது. இதில், பத்மினி கலந்து கொண்டார்.
ஏராளமான தமிழ்படங்களிலும் இந்தி உள்பட பல்வேறு மொழி படங்களிலும் நடித்து சினிமா உலகில் தனக்கென்று தனி இடத்தைப்பிடித்தவர் நடிகை பத்மினி.

சென்னையில் வசித்து வரும் நடிகை பத்மினி, கடந்த சில நாட்களாக உடல் நலம் இல்லாமல் இருந்தார்.

முதல் அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று முன் தினம் சென்னையில் நடைபெற்ற பாராட்டு விழாவுக்கு நடிகை பத்மினி சக்கர நாற்காலியில் வந்தார். அப்போது அவருக்கு திடீர் என்று மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசெல்லப்பட்டார்.

இந்த நிலையில் நடிகை பத்மினிக்கு நேற்று இரவு திடீர் என்று மாரடைப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக நடிகை பத்மினியின் உடல் நிலை மேலும் மோசம் அடைந்தது.

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஆனாலும் சிகிச்சை பலன் அளிக்காமல் நடிகை பத்மினி மரணம் அடைந்தார்.

நடிகை பத்மினி வாழ்க்கை குறிப்பு

மறைந்த நடிகை பத்மினி திரைவானில் `நாட்டிய பேரொளி'யாக பிரகாசித்தவர்.

திருவாங்கூர் சகோதரிகள்

தமிழ் திரை உலகம் கண்ட மிக சிறந்த நடிகைகளில் நடிகை பத்மினியும் ஒருவர். நடிகை பத்மினியும், அவரது சகோதரி லலிதாவும், திருவாங்கூர் சகோதரிகள் என புகழ் பெற்று விளங்கினார்கள். 1948-ம் ஆண்டு இருவரும் நாட்டிய நட்சத்திரங்களாக சினிமா உலகுக்கு அறிமுகம் ஆனார்கள். அதன்பிறகு 3 ஆண்டு காலத்துக்கு லலிதா, பத்மினி நடனம் இல்லாத படமே இல்லை என்று கூறும் அளவுக்கு ஒவ்வொரு படத்திலும் அவர்களுடைய நடனம் இடம் பெற்றது.

நடிகை பத்மினி 1951-ம் ஆண்டு வெளியான ஏழை படும்பாடு படத்தில் முதல் முறையாக நடித்தார். சிவாஜி கணேசனின் இரண்டாவது படமான `பணம்' படத்தில் அவருக்கு ஜோடியாக பத்மினி நடித்தார்.

`தூக்கு தூக்கி' படத்தில் இருவரும் மீண்டும் ஜோடியாக சேர்ந்து நடித்தனர். படம் அபாரமாக வெற்றி பெற்றது. அதன்பிறகு எதிர்பாராதது `அமர தீபம், மங்கையர் திலகம், புதையல், காவேரி, மரகதம், உத்தமபுத்திரன், இருமலர்கள், வியட்நாம் வீடு, தில்லானா மோகனாம்பாள் பல வெற்றி படங்களில் சிவாஜி கணேசனுடன் பத்மினி நடித்தார்.

இதேபோல பட உலகில் முன்னணியில் இருந்த எம்.ஜி.ஆருடனும் பல படங்களில் சேர்ந்து நடித்தார். இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி படங்கள் உள்பட 250-க்கும் அதிகமான படங்களில் பத்மினி நடித்து உள்ளார்.

நடிகை பத்மினி தனது 4 -வது வயதிலேயே பரதநாட்டியம் கற்றவர். 10-வது வயதில் அவரது அரங்கேற்றம் நடந்தது. அதன்பிறகு அவர் இந்தியா முழுவதும், பல்வேறு இடங்களில் நடன நிகழ்ச்சிகள் நடத்தி, `நாட்டிய பேரொளி' என்ற பட்டம் பெற்றவர்.

1961-ம் ஆண்டு அவர் டாக்டர் கே.டி.ராமச்சந்திரனை மணந்தார். அதன்பின் பட உலகில் இருந்து விலகி இருந்தார். ஆனாலும், அமெரிக்காவில் தங்கி இருந்தபோது, நாட்டிய பள்ளி நடத்தி வந்தார். கணவரின் மறைவுக்கு பிறகு மீண்டும் சென்னை திரும்பிய நடிகை பத்மினி ஒருசில படங்களில் நடித்தார்

பத்மினி படங்கள் : தில்லானா மோகனாம்பாள் படங்கள்
Payan(Hindi) படங்கள்

அவருக்கு கண்ணீர் அஞ்சலிகள்

Read More...

Sunday, September 24, 2006

அ.தி.மு.க கூட்டணி பங்கீடு அறிவிப்பு

ம.தி.மு.க.,விற்கு 17.5% சதவீதம்
விடுதலை சிறுத்தைகளுக்கு 4% சதவீதம்

அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா, இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அ.தி.மு.க., தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் எந்தெந்த இடங்களில் போட்டியிடுவது என்பதை தீர்மானிக்க, இம்மாதம் 13 மற்றும் 15ம் தேதிகளில் நடைபெற்ற பங்கீட்டு குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ம.தி.மு.க., 17.5 சதவீத இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி நான்கு சதவீத இடங்களிலும் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக், இந்திய தேசிய லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, மதச்சார்பற்ற ஜனதா தளம், சமூக நீதிக்கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், இந்திய குடியரசு கட்சி, கிறிஸ்தவ முன்னேற்றக் கழகம், சிறுபான்மை ஐக்கிய பேரவை ஆகிய கட்சிகளுக்கு உரிய பங்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

Read More...

Saturday, September 23, 2006

விஜயகாந்துக்கு முரசு கிடைக்குமா ?

தே.மு.தி.க-வுக்கு முரசு சின்னம் கிடைப்பதில் சிக்கல் வரும் போலிருக்கிறது. என்னதான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 8.38% ஓட்டுகளைப் பெற்றிருந்த போதிலும் விஜயகாந்த் மட்டுமே எம்.எல்.ஏ-வானார். அதைத் தொடர்ந்து, மத்திய தேர்தல் கமிஷனிடம் கட்சிக்கு அங்கீகாரம் கேட்டு மனு கொடுத்திருந்தனர். ஆனால், ‘4% ஒட்டுகள் வாங்கினாலே போதும். அந்தக் கட்சியை அங்கீகரிக்கலாம். ஆனால், இரண்டு எம்.எல்.ஏ-க்கள் ஜெயித்தால்தான் அங்கீகாரம் அளிக்க முடியும்’ என மத்திய தேர்தல் கமிஷன் சொன்னதாம். இதற்கு தே.மு.தி.க-வினர் விளக்கம் கொடுக்க, இது தொடர்பான விசாரணை தொடர்ந்து டெல்லியில் நடக்கிறது. நிலைமை இப்படியிருக்கும்போது, திடீரென மாநிலத் தேர்தல் கமிஷன் தேர்தலை அறிவித்துவிட்டது. இதனால் தே.மு.தி.க. அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகக் களத்தில் குதிக்குமா இல்லை சுயேச்சையாகவே களமிறங்குமா என்பது புரியாத நிலை. சுயேச்சை என்றாலும் ஒரு சிக்கல். ஏனென்றால் பஞ்சாயத்துத் தேர்தலுக்கென அறிவிக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்களில் முரசு இல்லை. ( 70 சின்னங்கள் பட்டியலுக்கு கடைசியில் பார்க்கவும் )

கடந்த தேர்தலில் தே.மு.தி.க. கட்சியின் சார்பில் சுயேச்சையாகத்தான் போட்டியிட்டோம். அப்போது எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த முறையும் அது போல சுயேச்சையாகத்தான் எங்கள் கட்சி போட்டியிட இருக்கிறது. இடைத்தேர்தலில் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் கொடுக்கவேண்டும் என்று கேட்டிருக்கிறோம்.

ஆனால் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் கிடைக்கவிடாமல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டு செயல்படுகிறது. சுயேச்சை வேட்பாளர்களின் சின்னங்கள் பட்டியலில் இருந்து முரசு சின்னத்தையே அகற்றிவிட்டனர். ஆனால் எங்கள் கட்சிக்கு முரசு சின்னம் ஒதுக்கவேண்டும் என்று தேர்தல் கமிஷனிடம் கோரி உள்ளேன். இது குறித்து ஓரிரு நாட்களில் தகவல் தருவதாக தேர்தல் கமிஷனர் அறிவித்து உள்ளார்.

மத்திய தொகுதி இடைத்தேர்தலுக்கு முரசு சின்னம் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழக அரசு உள்ளாட்சி தேர்தலை திட்டமிட்டே உடனடியாக அறிவித்துள்ளது. இதனை தள்ளி வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஒரு வாரகாலத்திற்குள் அரசின் நலத்திட்டங்களை அறிவித்து விட்டு தேர்தல் அறிவிப்புக்கு முன்பே நலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டு விட்டதாகவும் அது தொடர்ந்து நடக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆனால் மத்திய தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு வந்து விட்டது என்று கூறி அதற்கு முன்பே வெளியான எனது பேரரசு படத்தின் போஸ்டர்களை கிழிக்க சொல்கிறார்கள். என்னுடைய படமும் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வெளிவந்துவிட்டது. அதன்பிறகு போஸ்டர்களை மட்டும் எப்படி கிழிக்கலாம். என்று விஜயகாந்த கூறியுள்ளார்

- * -

70 சின்னங்கள் பட்டியல்

கழுத்துக் கச்சு (கழுத்தில் கட்டும் டை), கொதி கெண்டி (கிண்ணம்), அரை கச்சை (பெல்ட்), குலையுடன் கூடிய தென்னை மரம், உடுக்கை, அரிக்கேன், உலக உருண்டை, வைரம், மறை திருக்கி, அடையாளக் குறி, கிட்டார், முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி,

புட்டி, நீளக்குவளை, ஊஞ்சல், கத்தி, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, மேற் சட்டை, கோப்பு அடுக்கும் அலமாரி, மத்தளம், முள் கரண்டி, கேஸ் சிலிண்டெர்,

மகளிர் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு, துப்பாக்கி, ஹாக்கி மட்டையும் பந்தும், தீப்பெட்டி, கைப்பை, கரண்டி, தண்ணீர் குழாய், உலாவிற்கான தடி.

பதக்கம், கம்ப்யூட்டர், மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், டிஷ் ஆண்டெனா, பேருந்து, கேரம் போர்டு, மேசை மின்விசிறி, கோப்ரையும் தட்டும், பளு தூக்கும் கருவி, சட்டை, சட்டை பட்டி,

ரயில் தண்டவாளம், பெண்களின் மேலங்கி, முழுக்கால் சட்டை, பிளேடு, சிறு பெட்டி, மட்டை, இரட்டை நாதஸ்வரம், கைபம்பு, மை எழுது கோல், சாய்வு மேசை, மர இருக்கை, புத்தகம், தீபம்

Update: 24/Sep/2006 : Update:
மாநில தேர்தல் ஆணையம் பதில் அனுப்பி உள்ளது. அந்த கடிதத்தில், "தே.மு.தி.க. வேட்பாளர்களுக்கு முரசு சின்னம் ஒதுக்க இயலாது'' என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

Read More...

ஒசாமா பின்லேடன் மரணம்?

ஒசாமா பின் லாடன் டைபாய்டு நோயால் இறந்ததாக பிரெஞ்சு பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அவர் நோய் காரணமாக ஆகஸ்ட் 23ம் தேதி இறந்ததாக அது மேலும் தெரிவித்துள்ளது. ஆனால் இந்த தகவலை அமெரிக்கா மறுத்துள்ளது.

அல்-காய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின் லேடன் டைபாய்டு காய்ச்சலில் இறந்துவிட்டதாக பிரெஞ்ச் உளவுத்துறை வெளியிட்ட தகவலை சவூதி அரேபியா நம்புவதாக பிரான்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

செப்.21ம் தேதி வெளியான இத்தகவல், பிரான்ஸ் அதிபர் ஜாக்ஸ் சிராக், பிரதமர் டாமினிக் டி வேல்பின், பிரான்ஸ் உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக 'லீஸ்ட் ரிபப்ளிகன்' என்ற பிரெஞ்ச் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சில நம்பகமான தகவல்களின் அடிப்படையில் சவூதி அரேபியாவும் இதனை உறுதிப்படுத்துவதாக இப்பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பின் லேடன் கடந்த வருடம் பாகிஸ்தானில் தங்கியிருந்தபோது, அவருக்கு ஏற்பட்ட டைபாய்டு காய்ச்சலால் பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு, 2006ம் ஆண்டு ஆகஸ்ட் 23ம் தேதி இறந்துவிட்டதாக சவூதி அரேபியாவுக்கு கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக அப்பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிய ராய்ட்டர் செய்தி நிறுவனம் பிரான்ஸ் அரசை தொடர்புகொண்டது. ஆனால் பிரான்ஸ் அரசு கருத்து கூற மறுத்துவிட்டது. இதுகுறித்து தங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பாகிஸ்தான் நாட்டு உள்துறை அமைச்சர் கூறியுள்ளார்.

தலிபான் அமைப்பினர் கடந்த 2001ம் ஆண்டு வரை ஆப்கன் நாட்டை ஆட்சி செய்தனர். அதுவரை பின்லேடன் ஆப்கன் நாட்டில் தங்கியிருந்தார். அதன் பின்னர் அந்த அரசு அமெரிக்க கூட்டு படையினரால் தூக்கி எறியப்பட்டபோது, பின் லேடன் ஆப்கன் மற்றும் பாகிஸ்தான் நாட்டு எல்லைப்பகுதியிலுள்ள குகைப்பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டதாக அமெரிக்கா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

ஒசாமா பின்லேடன் பேசிய வீடியோ கேசட் கடைசியாக 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அதன் பின்னர் வெளியிடப்பட்ட ஒலிநாடாக்களில் பெரும்பாலானவை தரம் குறைந்ததாகவே இருந்தன.

CNN-IBN செய்தி
Reuters செய்தி
Kaleej Times செய்தி

Read More...

பத்திரிக்கை விஷமம் - புதிய பகுதி

கேள்வி பதில் பகுதி என்பது எல்லா பத்திரிக்கைகளிலும் ஒரு பகுதியாக வருகிறது. ஏன் கலைஞர் கூட சில சமயம் தன் அறிக்கைகளை கேள்வி-பதில் ஸ்டைலில் தான் வெளியிடுவார்.

இந்த வாரம் சில பத்திரிக்கையில் வந்த (சுவாரசியமான?) கேள்விகளை உங்களுக்கு கொடுத்துள்ளேன். பதில்களை அந்தந்த பத்திரிக்கையில் படிக்கவும் :-)

1. கல்யாணம் ஆகிவிட்டால் ஹீரோயின்கள் ஏன் 'குடும்பப் பெண்கள்' ஆகிவிடுகிறார்கள் ? நடிப்பதை ஏன் நிறுத்திவிடுகிறார்கள் ? தொடர்ந்து நடித்தால் என்ன ? ( ஞாநி, ஓ-பக்கங்கள், ஆனந்த விகடன் )

2. தாடி, மீசை வைத்தவர் முத்தமிடுவதற்கும், மழுங்க மழித்தவர் முத்தமிடுவதற்கும் வித்தியாசம் இருக்குமா ? ( பெண்களிடம் கேட்க வேண்டிய கேள்வி என நழுவ வேண்டாம்) ( ஹாய் மதன், ஆனந்த விகடன் )

3. மக்கு என்றால் தெரியும், ப்ளாஸ்திரி என்றாலும் தெரியும், அது என்னங்க மக்கு பிளாஸ்திரி ( அரசு பதில்கள், குமுதம் )

4. சமீபத்தில் சென்னை வந்த ஜனாதிபதி அப்துல் கலாம், மாணவர்களிடையே பேசுகையில், பொறியாளராக, மருத்துவராக, ஆசிரியராக விரும்புவோர் கையை உயர்த்தலாம்' என்ற போது, மகிழ்ச்சியோடு கை உயர்த்திய மாணவர்கள், அடுத்து 'அரசியல்வாதியாக விரும்புவோர் கையை உயர்த்தலாம்' என்ற போது ஒரு மாணவர் கூட கை உயர்த்தாதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?
( கேள்வி பதில் பகுதி, துக்ளக் )

5. 'ஒரு முதல்வர் ஆற்ற வேண்டிய பணி, முடிதிருத்தும் கடையைத் திறந்து வைப்பது' என்ற மிகப்பெரிய முன்னுதாரணத்தை கருணாநிதி ஏற்படுத்தியிருப்பதாக ஜெ பேசியிருக்கிறாரே ( தராசு பதில்கள், கல்கி )

6. வி.ஐ.பி-களுக்கு சிறப்பு தரிசனம் சரிதானா ? ( சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், சக்தி விகடன் )

7. அர்ச்சனை செய்யும்போது, தேங்காய் அழுகி விட்டால் கெடுதல் ஏற்படுமா? வேறு தேங்காய் வாங்கி அர்ச்சனை செய்யலாமா? ( ஸ்ரீவேணுகோபாலன் பதில்கள், குமுதம் பக்தி )

8. "புதிதாக ஏற்றுமதித் தொழிலில் இறங்கப்போகிறேன். என்னென்ன பொருட்களுக்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகமாக இருக்கிறது?" ( நாணய விகடன் )

9. "எனக்கு வயது 50. கடந்த ஒன்றரை வருடமாக, எனக்கு எந்நேரமும் பூச்சி கத்துவதுபோல சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கிறது. இதுவரை பல ஈ.என்.டீ., மற்றும் பொது நல மருத்துவர்களை சந்தித்து விட்டேன். எல்லோருமே ‘உங்களுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை’ என்றுதான் சொல்கிறார்கள். இதற்கு ஒரு தீர்வு சொல்வீர்களா?" ( டாக்டர் பதில்கள், அவள் விகடன் )

Read More...

Friday, September 22, 2006

ஜெ கூட்டணி - இன்று மாலை பட்டியல்

அதிமுக தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணி சார்பில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி யிடுபவர்களின் பட்டியல் இன்று மாலை வெளியிடப்பட உள்ளது. மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், மூவேந்தர் முன்னணி கழகம் ஆகிய கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று முடிந்தது.

இடப்பங்கீட்டு குழுவினரான எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், மல்லை சத்யா, திருப்பூர் துரைசாமி ஆகியோர் இன்று அதிமுக தலைமை நிலையத்தில் 2ஆம் நாளாக பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இந்த குழுவினர் போயஸ் கார்டன் சென்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தி விட்டு திரும்பினர். மீண்டும் அதிமுக இடப்பங்கீட்டு குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் பேசிய எல்.கணேசன், "பேச்சுவார்த்தை திருப்திகரமாக நடைபெற்று சுமூகமாக முடிந்தது. எவ்வளவு இடங்கள் என்று உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய இடங்களுக்கான பங்கீடு குறித்து பேசப்பட்டது. இன்று பிற்பகல் விடுதலைச்சிறுத்தைகள் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு இன்று மாலை அதிமுக தரப்பிலிருந்து பட்டியல் வெளியிடப்படும்' என்று கூறினார்.

இந்த பேச்சுவார்த்தையின் போது மூவேந்தர் முன்னணி கழகத்தின் பொதுச் செயலாளர் இசக்கிமுத்துவும் பங்கேற்றார். பின்னர் விடுதலைச்சிறுத்தைகளின் பிரதிநிதிகள் அதிமுக பேச்சுவார்த்தை குழுவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். மற்ற அமைப்புகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி இன்று மாலைக்குள் பட்டியல் வெளியிட அதிமுக தலைமை தீவிரமாக உள்ளது.

Read More...

திமுக கூட்டணி இட ஒதுக்கீடு 23 இறுதி செய்யப்படும்

மனுத் தாக்கலுக்கு இன்னும் 4 தினங்களே உள்ள காரணத்தால் இடப்பங்கீட்டையும் வேட்பாளர் தேர்வையும் விரைந்து முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எல்லா கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ளன. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு இடங்களை ஒதுக்குவது சனிக்கிழமை (செப்.23) இறுதி செய்யப்படும்.

மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவிகளை தங் களுக் குள் எப்படி பங்கீட்டுக் கொ ள்வது என்பதை உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு முடிவு செய்து கொள்ளலாம் என்று கூட்டத்தில் தீர் மானிக்கப்பட்டது. ஒவ்வொரு மாநகராட்சி மற் றும் நகரசபைகளிலும் யார், யாருக்கு எத்தனை உறுப்பினர்கள் கிடைத்துள்ளனர் என்ற எண்ணிக்கையைப் பொறுத்து மேயர் மற்றும் நகரசபை தலைவர் பதவியை பங்கீட்டுக்கொள்ள தி.மு.க. கூட்டணி தலைவர்கள் சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

எனவே தி.மு.க. கூட்ட ணியில் உள்ள கட்சிகளுக்கு மேயர், மற்றும் நகரசபை தலைவர் பதவி இடங்கள் எத்தனை இடம் கிடைக்கும் என்ற தெளிவான விபரம் ஓட்டு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரிய வரும். தலைவர் பதவி யாருக்கு என்ற சர்ச்சையை இப்போதே கிளப்பி தேவை இல்லாமல் விவாதிக்க வேண்டாம் என்ற அடிப்படையில் இந்த முடிவுக்கு தி.மு.க. கூட்டணி தலைவர்கள் வந்துள்ளனர். ஒவ்வொரு நகர சபையிலும் யாருக்கு அதிக இடம் கிடைக்கிறதோ, அதற்கு ஏற்ப தலைவர் பதவியை பங் கீட்டுக் கொள்ளலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ், பா.ம.க. கட்சியினர் தலா 2 மாநகராட்சிகளில் அதிக கவுன்சிலர்களை நிறுத்த வாய்ப்பளிக்கும்படி கேட்டுள்ளனர். ஆனால் தி.மு.க. சுமார் 65 சதவீத உள்ளாட்சி அமைப்பு களில் போட்டியிட நினைக்கிறது. எனவே காங்கி ரஸ், பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சி களுக்கு கேட்கும் இடங்கள் கிடைக்குமாப என்பதில் கேள் விக்குறி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியில் பல கோஷ்டிகள் அவர்கள் தங்களுக்குள் ஒரு முடிவுக்கு வருவதற்கே பல நாட்களாகி விடும் சூழ்நிலை உள்ளது.

Read More...

Thursday, September 21, 2006

வைகோ குற்றச்சாட்டு - ஜெ பேட்டி

உள்ளாட்சி முறையில் மாற்றம்; கூட்டணி கட்சிகளை தி.மு.க. ஏமாற்றி விட்டது: வைகோ குற்றச்சாட்டு:

உள்ளாட்சி தேர்தல் புதிய முறையில் நடத்தப்படுகிறது. பழைய முறை இருந்தால் தி.மு.க.வுக்கு சரிவு ஏற்படும் என்பதற்காக புதிய முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மெஜாரிட்டி கிடைக்காமல் பாதிப்பு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர் தலிலும் அது போல நிலை ஏற்படும் என்பதற்காகவும், நெருக்கடியான அரசியல் சூழ்நிலை உருவாகும் என்ப தற்காகவும் உள்ளாட்சி அமைப்பில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

இதில் வேதனை என்ன வென்றால் தி.மு.க.கூட்டணி கட்சிகளுக்கு கூட தெரியா மல் இந்த அறிவிப்பு வெளி யிடப்பட்டுள்ளது. இதை வெளியே சொல்ல முடியா மல் கூட்டணி கட்சிகள் புழுக்கத்தில் இருக் கின்றன. அவர்களுக்கு ஜால்ரா அடிக் கின்றனர்.

இந்த புதிய முறையால் ஆளும் கட்சி தவிர எல்லோருக்கும் பாதிப்பு ஏற்படும்.ஆளுங்கட்சியினர் பணத்தை வைத்து தேர்தலை சந்திக்க தயாராக உள்ளனர். உள்ளாட்சி அமைப்பின் புதிய முறைக்கு பா.ம.க. கம்ïனிஸ்டுகள் கண்டனம் தெரிவிக்கவில்லை. இந்த புதிய தேர்தல் முறை தி.மு.க.வின் தந்திரமும், சூழ்ச்சியான நடவ டிக்கை ஆகும்.


அ.தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் 11.40 மணிக்கு முடிந்தது. இதையடுத்து ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


ஜெ பேட்டி


கேள்வி:- இன்று நடந்த கூட்டத்தில் முக்கியத்துவம் என்ன?

பதில்:- மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிட்ட பிறகு அ.தி.மு.க. தலைமையி லான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இடம் பெற் றுள்ள தோழமை கட்சிகளின் தலைவர்கள் இன்று சந்தித்து பேசினோம்.

மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தலிலும் உள் ளாட்சித் தேர்தலிலும் பெரு மளவு வெற்றி பெற அயராது பாடுபடுவது என்றும் இதற்கு கூட்டணி கட்சியினர் முழு ஒத்துழைப்பு நல்குவது என்றும் தீர்மானித் துள்ளோம்.

9 பேர் கொண்ட குழுவை அ.தி.மு.க. சார்பில் நான் அமைத்துள்ளேன். அது போல தோழமை கட்சி களிலும் தனித் தனியாக குழு அமைப்பார்கள். இந்த குழுவினர் சந்தித்து இடப் பங்கீடு தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்துவார்கள்.

கே:-தேர்தலுக்கு மிக குறுகிய காலம் தான் உள்ளது. இடப் பங்கீடு பேச்சு எப்போது முடியும்?

ப:- எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் பேசி முடிப்பார்கள்.

கே:- தேர்தல் பிரசாரத் திட்டம் எப்படி இருக்கும்?

ப:- இன்றைய தி.மு.க. அரசில் மக்கள் விரோத நடவடிக்கைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. கடந்த 4 மாதங் களாக சிக்குன் குனியா நோய் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

திரும்ப, திரும்ப நான் சுட்டிக் காட்டிய பிறகும், எல்லா பத்திரிகைகளும் செய்தி வெளியிட்ட பிறகும் அப்படி எதுவும் இல்லை என்று முதல்-அமைச்சரே சாதித்தார். சம்பந்தப்பட்ட துறை அமைச்சரும், தமிழ்நாட்டில் சிக்குன் குனியா இல்லை என்று சட்ட சபையில் பேசி பதிவு செய்தார்.

தொடர்ந்து மக்கள் அவதிப் படும் இந்த உண்மையை நான் வெளிப்படுத்தி வந்தேன். சில நாட்களுக்கு முன்பு சிக் குன் குனியாவுக்கு 150 பேர் பலியானதாக கூறி னேன். அதற்கு பதில் அளித்த ஆற்காடு வீராசாமி எனது அறிக்கை உண்மை இல்லை அப்படி எதுவும் நடக்கவில்லை. 150 பேர் பலியாகி இருந்தால் அவர்கள் பெயர் பட்டியலை வெளியிட தயாரா என்று சவால் விட்டார்.

நானும் அவர் சவாலை ஏற்றுக் கொண்டேன். நான் விவரம் சேகரித்த போது 232 பேர் சிக்குன் குனியா வுக்கு இறந்திருப்பது தெரிய வந்தது. 232 பேரின் பெயர், விலாசத்தை நான் வெளி யிட்டேன்.

காலையில் நான் அறிக்கை வெளியிட்ட பிறகு மேலும் 6 பேர் இறந்ததாக தகவல் கிடைத்தது. எனக்கு தெரிந்தவரை சிக்குன் குனியா நோய்க்கு 238 பேர் பலியாகி உள்ளனர். லட்சக் கணக்கான மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.

இத்தனை காலம் பிர தான எதிர்க்கட்சியாக இருக் கும் அ.தி.மு.க. அரசின் கவனத்துக்கு கொண்டு வந்து நடவடிக்கை எடுக்கும் படியும், பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றும் படியும் திரும்ப திரும்ப சொன்னோம். அதற்கு கேலியும் கிண்டலும் செய்தார்கள்.

ஒருவர் கூட சாகவில்லை என்றனர். இறந்தவர்கள் பெயர் பட்டியலை வெளியிட தயாராப என்று சவால் விட்ட னர். உடனே நான் பட்டியல் வெளியிட்டு நிரூபித்தேன். அதன் பிறகும் சிக்குன் குனியா வால் பாதிப்பு இல்லை என்கிறார்கள்.

அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றுகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்பது மக்களுக்குகு நன்றாகத் தெரியும். சமீபத்தில் திடீரென்று கலெக்டர்கள் மாநாட்டை கூட்டினார்கள். அதில் சிக்குன் குனியாவை தடுக்க நடவடிக்கை எடுங்கள் என்றனர்.

இப்போது எல்லா பொறுப்பையும் கலெக்டர்கள் தலையில் கட்டி விட்டனர். தி.மு.க. கூட்டணி தலைவர் கள் கூட்டத்தில் சிக்குன் குனி யாவை கட்டுப்படுத்த நடவ டிக்கை எடுக்கப் போவதாக தீர்மானம் போட்டுள்ளனர். 4 மாதம் கழித்து மிக தாமதமாக இப்போது சிக்குன் குனியா இருப்பதை ஒத்துக் கொண்டுள்ளனர். இது தாமதமான நடவடிக்கை. இப்போதாவது தீர்மானம் நிறைவேற்றுவதோடு நின்று விடாமல் மக்களை காப்பாற்ற அரசு முன்வரவேண்டும்.

ஆஸ்பத்திரிகளில் இந்த நோய்க்கான மருந்துகள் இல்லை. எப்படிப்பட்ட சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட வில்லை. தி.மு.க. அரசு மிகவும் அலட்சியமாக பாராமுகமாக இருந்து விட்டது. இது மன் னிக்க முடியாத மக்கள் விரோத நடவடிக்கை.

இதை தேர்தலில் மக்களிடம் எடுத்துக் சொல்வோம். தொடர்ந்து ஒவ்வொரு விஷ யத்திலும் மக்களை ஏமாற்றி வருகிறார்கள். துணை நகரம் பிரச்சினையில் 44 கிராம மக்கள் எங்களால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

நெய்வேலி நிலக்கரி கழகம் பிரச்சினையில் மத்திய அரசின் தவறான முடிவை தி.மு.க. அங்கீகரித்தது. பிறகு எனது முயற்சியால் அதை வாபஸ் பெற்றனர். புதிய பேருந்துகள் மக்கள் பயன்பாட்டுக்கு விடப் படும் என்றனர். ஆனால் பழைய பேருந்துகளுக்கு வர்ணம் பூசி விட்டுள்ளனர்.

இலவச டி.வி. வழங்குவதாக சொன்னார்கள். அதை தி.மு.க.வினருக்கே வழங்கு கிறார்கள்.

ஒரு ஊரில் 100 குடும்பங்கள் இருந்தால் அவர்களுக்கு டி.வி. கொடுப்பதாக அறிவித்து விட்டு 60 முதல் 65 பேருக்கு மட்டுமே கொடுக்கிறார்கள். இப்படி மோசடி நடந்துள்ளது.

பல டி.வி.க்கள் வேலை செய்யவில்லை. படமே பார்க்க இயலவில்லை. விலை உயர்ந்த வெளிநாட்டு டி.வி.க்களை பணக்காரர்கள் வைத்து இருந்தாலும் "ஸ்டெபிலைசர்'' வைத்து இருப்பார்கள். தகுந்த கருவிகளை பொருத்தினால்தான் மின்னல் தாக்குதல்களை அவை தாங்கும்.

மின்னல் தாக்குவதில் இருந்து பாதுகாக்க "சென்சார்'' என்ற கருவியை பொருத்தி இருப்பார்கள். அந்த கருவி விலை ரூ. 6 ஆயிரம். அப்படிப் பட்ட கருவியை டி.வி.யில் பொருத்தியா கொடுக்கிறீர்கள்? வெறும் டப்பா பெட்டியைத்தான் கொடுக்கிறீர்கள்.

இவை 10 நாள் வேலை செய்தாலே அதிகம்தான். கிராமங்களில் வயல் வெளிகளில்இருக்கும் வீடுகளில் ஒரு முறை மின்னல் தாக்கினால்போதும். இப்போதே பல டி.வி. பெட்டிகளில் விளக்கு மட்டுமே எரிவதாக சொல்கிறார்கள். சில இடங்களில் அதுவும் இல்லை.

தேர்தல் வாக்குறுதியில் ஏழைகளுக்கு 2 ஏக்கர் இலவச நிலம் கொடுப்பதாக சொன்னார்கள். அது அப்படியே மாறி பல குட்டி கர்ணங்கள் அடித்து உருமாறி விட்டது.

ஒரு ஏக்கராகவும் இருக்கலாம். 50 செண்ட் ஆகவும் இருக்கலாம். 30 செண்ட் ஆகவும் இருக்கலாம் என்று சொல்கிறார்கள். மக்களை ஏமாளிகள் என்று நினைக்கிறார்கள். ஆனால் மக்கள் ஏமாறமாட்டார்கள்.

ஜிப்மர் மருத்துவமனை புதுச்சேரியில் இருக்கலாம் அங்கு சிகிச்சை பெறுபவர் களில் 80 சதவீதம் பேர் தமிழகத்தை சேர்ந்த ஏழை மக்கள். அங்குள்ள விசேஷ, உயர்ந்த தரமான மருந்துகளும் சிகிச்சைகளும் நவீன கருவிக

ளும் ஏழைகளுக்கு இலவசமாக கிடைக்கிறது. தினமும் 5 ஆயிரம் வெளிநோயாளிகள் அங்கு சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

2 ஆயிரம் பேர் உள்நோயாளிகளாக உள்ளனர். ஆரம்பத்தில் பிரான்சு கட்டுப்பாட்டில் புதுச்சேரி இருந்த போது ஏழைகளுக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டது. 1954-ல் புதுச்சேரியை பிரான்சு இந்தியாவிடம் ஒப்படைத்தது.

அப்போது பிரதமர் நேருவுடன் பிரான்சு தூதர் ஒரு ஒப்பந்தம் போட்டார். அதில், "எந்த நோக்கத்துக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரி கட்டப்பட்டதோ அதற்காகவே தொடர்ந்து செயல் படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் இப்போது ஒரு குடும்பத்தின் தனி லாபத்துக்காக தன்னாட்சி அமைப்பாக இதை ஆக்கப் பார்ப்பது மிகவும் கண்டனத்துக்குரியது. இப்படி எத்தனையோ மக்கள் விரோத நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. இதை மக்கள் மத்தியில் சொல்லி உள்ளாட்சி தேர்தலில் ஆதரவு கேட்போம்.

கே:- உள்ளாட்சித் தேர்தலில் கவுன்சிலர்களே மேயர் மற்றும், நகரசபை தலைவர்களை தேர்வு செய்வது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கட்சித்தாவல் தடை சட்டம்

ப:-உள்ளாட்சித் தேர்தலில் முக்கியமான தேவை "கட்சித் தாவல் தடை சட்டம்'' பழைய முறையில் மேயர் நகரசபை தலைவர்களை தேர்வு செய்ய மக்களே நேரடியாக ஓட்டுப் போட்டனர்.தற்போது அதை மாற்றி விட்டனர்.

இதை ஆட்சேபித்தால், அவர்கள் சொல்வது, எம்.எல்.ஏ.க்களை மக்கள் தேர்வு செய்கிறார்கள். முதல்-அமைச்சரை எம்.எல்.ஏ.க்கள் தானே தேர்வு செய்கிறார்கள் என்கிறார்கள்.

பிரதமரை மக்கள் நேரடியாக தேர்வு செய்வதில்லை என்கிறார்கள். ஒரு வாதத்துக்கு வேண்டுமானால் இதை ஏற்றுக் கொண்டாலும் முக்கியமான ஒரு உண்மையை மறந்து விடக்கூடாது. எம்.பி.க்கள் ஆனாலும் சரி எம்.எல்.ஏ.க்கள் ஆனாலும் சரி அவர்களுக்கு மிகவும் இறுக்கமான கட்சித்தாவல் தடை சட்டம் உள்ளது.

எம்.பி.யோ, எம்.எல்.ஏ.யோ ஒரு கட்சியில் இருந்து தேர்வு பெற்று விட்டு, மற்ற கட்சிக்கு மாறினால், பதவி இழந்து விடுகிறார்கள். அந்த சட்டம் தெளிவாக உள்ளது. அதில் எந்த ஓட்டையும் இல்லை.

ஆனால் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி தாவல் தடை சட்டம் இல்லை. எந்த கவுன்சிலர் எப்போது வேண்டுமானாலும் மாறலாம். இதை பயன்படுத்திக் கொள்ளவே முக்கியமான தலைமை பதவிகளுக்கு மக்களே நேரடியாக ஓட்டுப் போடும் முறையை ரத்து செய்து விட்டனர்.

கவுன்சிலர்கள் தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை 18-ந்தேதி நடக்கிறது. ஆனால் உள்ளாட்சித் தலைவர்களை தேர்வு செய்யும் நாள் 28-ந்தேதி என்கிறார்கள்.

இதற்கு ஏன் 10 நாள் இடைவெளிப முன்பெல்லாம் 2 நாள் அல்லது 3 நாள் தான் இடைவெளி இருக்கும். 10 நாள் இடைவெளி கொடுத்து இருப்பதன் நோக்கம்-குதிரை பேரம் பேசுவது.

எந்த கட்சியில் அதிகம் கவுன்சிலர்கள் இருக்கிறார்களோ அவர்களை இழுப்பது, ஆசைகாட்டுவது, மிரட்டுவது போன்ற முறைகேடுகளை நடத்த வாய்ப்பாக வசதியாக இடைவெளி வழங்கி உள்ளனர்.இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கிறேன்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு உள்ளது போல உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்சி தாவல் தடை சட்டம் கொண்டு வர வேண்டும். நேரடியாக முக்கியமான பதவிகளுக்கு மக்கள் ஓட்டுப் போடும் முறையை ரத்துசெய்ததற்கு காரணம் எளிதில் அ.தி.மு.க. வெற்றி பெற்று விடும் என்பதால் தான்.

சென்னை மாநகராட்சிக்கு மேயர் தேர்தல் நடந்தால் அ.தி.மு.க. வெற்றி பெறும். எனவே தான் கவுன்சிலர்களே மேயரை தேர்வு செய்யும் முறையை கொண்டு வந்துள்ளனர்.

கே:- கோப்புகள் தேங்கி இருப்பது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் தீர்மானம் போட்டுள்ளதே?

ப:-எத்தனை வெள்ளை அறிக்கை வேண்டுமானாலும் வெளியிடலாம். எனெனில் அரசு தி.மு.க.கையில் உள்ளது. கோப்புகள் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. எவ்வளவு பொய்யும் சொல்லாம்.

கடந்த 5 ஆண்டில் ஒரு முன் மாதிரி ஆட்சியை அ.தி.மு.க. தந்தது.

ஒரு முதலமைச்சருக்கு சராசரியாக எல்லா துறைகளில் இருந்தும் வாரத்திற்கு 250-லிருந்து 500 கோப்புகள் வரை வரும். அப்படியானால் ஐந்தாண்டு கால ஆட்சிக் காலத்தில் அதாவது 2001 முதல் 2006 வரை குறைந்தபட்சம் 60 அயிரம் கோப்புகள் என்னிடம் வந்து அவற்றில் பெரும்பாலானவற்றை நான் பார்த்து ஆணைகள் வழங்கியதால் தான் எனது ஐந்தாண்டு கால ஆட்சியில் அத்தனை மக்கள் நலப்பணிகளும்,பொதுப் பணிகளும் நிறைவேற் றப்பட்டன என்பதை சுட்டுக் காட்ட விரும்புகிறேன்.

இப்போதைய அரசு நிர்வாகத்தில் மக்கள் பணிக்கு செலவிடும் நேரத்தை விட என்னைப் பற்றிகுறை கூற அதிக நேரம் செலவிடுகிறார்கள்.

கே:-மதுரை எம்.எல்.ஏ. சண்முகம் பற்றி என்ன சொல்கிறீர்கள்?

ப:- எந்நன்றி கொன் றாருக்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்நன்றி கொன்ற மகர்க்கு.

கே:- கட்சியில் இருந்து சண்முகத்தை நீக்குவீர்களா?

ப:- இப்போதைக்கு நான் சொன்னதே பதில். இது ஒரு டிரெயிலர். போக, போக பார்ப்பீர்கள்.

Read More...

உள்ளாட்சித் தேர்தல் !

தமிழகத்தில் வரும் அக்டோபர் 13 மற்றும் 15ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தலி நடைபெறவுள்ளது. சென்னை, கோவை, சேலம், நெல்லை மாநகராட்சிகள் முதல் கட்டத்திலும், மதுரை, திருச்சி மாநகராட்சிகள் இரண்டாம் கட்டத்திலும் தேர்தலை சந்திக்கின்றன. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் நேற்று தொடங்கியது. முதல் நாளில் 466 பேர்பவேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.


சட்டசபை தேர்தலைப் போலவே உள்ளாட்சி தேர்தலிலும், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., ஆகிய கட்சிகளிடையே மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய, வரும் 27ம் தேதி கடைசி நாள். மிக குறுகிய கால அவகாசமே உள்ளதால் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை முடிவு செய்வதற்காக சுறுசுறுப்படைந்துள்ளன.

தமிழகத்தில் நடக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தே.மு.தி.க.,வுக்கு, "முரசு' சின்னம் ஒதுக்க வேண்டும்,'' என்று தமிழக தேர்தல் கமிஷனரை சந்தித்து தே.மு.தி.க., நிர்வாகிகள் கோரிக்கை விடுத்தனர்.

உள்ளாட்சி தேர்தல் குறித்து சென்னை தலைமை கழக நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். ஒன்றிய, நகர மற்றும் மாவட்ட வாரியாக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டவும் மாவட்ட நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க., தலைமையிலான ஜனநாயக மக்கள் கூட்டணியில் இடம் பெற்றுள்ள தோழமைக் கட்சிகளுடன் இடப்பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த அ.தி.மு.க., சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், அ.தி.மு.க., தேர்தல் பிரிவு செயலர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலர் செங்கோட்டையன், மீனவர் பிரிவுச் செயலர் ஜெயக்குமார், எம்.ஜி.ஆர்., மன்ற செயலர் மதுசூதனன், அமைப்பு செயலர் ஈ.வெ.கி.சுலோசனா சம்பத், தளவாய் சுந்தரம், தேர்தல் பிரிவு இணைச் செயலர் பாலகங்கா, அமைப்பு செயலர் கருப்பசாமி, திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ., பதர் சயீத் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தாகுதிப் பங்கீடு தொடர்பாக, தங்களது ஜனநாயக முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்த 6 பேர் கொண்ட குழுவை தி.மு.க அமைத்துள்ளது. மின்சாரத் துறை அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி குழுவுக்குத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அமைச்சர்கள் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம், க.பொன்முடி, மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா மற்றும் ச.விடுதலை விரும்பி ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் கட்சி சார்பில், மாநில தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கட்சியின் மூத்த தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சி கூட்டத்தில் பேசவேண்டியது பற்றி இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் செலவு செய்ய வேண்டிய தொகை விவரம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள விவரம் -

சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு - 3750
சிற்றூராட்சித் தலைவர் பதவிக்குப் 15,000
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்குப் 37,500
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்குப் 75000

அ.தி.மு.க.வுடன் பங்கீடு செய்வது குறித்து குழு ஒன்றை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ அமைத்து உள்ளார். இந்த குழுவில் அவைத் தலைவர் எல்.கணேசன் எம்.பி., துணைப் பொதுச் செயலாளர்கள் செஞ்சி ராமச்சந்திரன் எம்.பி., சத்யா, அரசியல் ஆலோசனைக்குழு செயலாளர் திருப்பூர் துரைசாமி, தேர்தல் பணி செயலாளர் டி.கே. சுப்பிரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு செல்வாக்கு உள்ள அனைத்து இடங்களிலும் வேட்பாளரை தேர்வு செய்து போட்டியிடுவது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. மாவட்ட வாரியாக வேட்பாளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு கட்சி தலைவர் விஜயகாந்திடம் ஒப்படைக்கப்படும். இந்த பட்டியல் இறுதி செய்யப்பட்டு வருகிற 23-ந்தேதி (சனிக்கிழமை) வெளியிடப்படும். உள்ளாட்சி தேர்தலில் அனைத்து இடங்களிலும் தே.மு.தி.க. போட்டியிடும். அதிகமான இடங்களை எங்கள் கட்சி கைப்பற்றும். உள்ளாட்சி தேர்தலுக்குப் பிறகு தே.மு.தி.க. 2-வது பெரிய கட்சியாக உருவெடுக்கும் என்று தே.மு.தி.க மாநில கொள்கை பரப்பு செயலாளர் சந்திரகுமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் மாநகராட்சிகள், நகராட்சிகள், மூன்றாம் நிலை நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கான சாதாரண தேர்தல் அக்டோபர் 13 மற்றும் 15-ந் தேதிகளில் 2 கட்டமாக நடைபெறுகிறது.

அக்டோபர் 13-ந் தேதி, 45 நகராட்சிகளுக்கும், அக்டோபர் 15-ந் தேதி 57 நகராட்சிகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.


13-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நகராட்சிகள் விவரம்:-

கோவை மாவட்டம்:- மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி.
கடலூர் மாவட்டம்:- நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம்.
தர்மபுரி மாவட்டம்:- தர்மபுரி.
திண்டுக்கல் மாவட்டம்:- கொடைக்கானல்.
ஈரோடு மாவட்டம்:- தாராபுரம், சத்தியமங்கலம்.
காஞ்சி மாவட்டம்:- காஞ்சீபுரம், மதுராந்தகம்.
கன்னியாகுமரி மாவட்டம்:- கொளச்சல், குழித்தலை
கரூர் மாவட்டம்:- கரூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம்:- ஒசூர்
மதுரை மாவட்டம்:- மேலூர்
நாகை மாவட்டம்:- நாகப்பட்டினம்.
நாமக்கல் மாவட்டம்:- குமாரபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு.
புதுக்கோட்டை மாவட்டம்:- புதுக்கோட்டை.
ராமநாதபுரம் மாவட்டம்:- ராமநாதபுரம்.
சேலம் மாவட்டம்:- ஆத்தூர்.
சிவகங்கை மாவட்டம்:- சிவகங்கை
தஞ்சை மாவட்டம்:- கும்பகோணம், தஞ்சாவூர்.
நீலகரி மாவட்டம்:- குன்னூர், உதகமண்டலம்.
தேனி மாவட்டம்:- பெரியகுளம், தேனி-அல்லிநகரம்.
திருவண்ணாமலை மாவட்டம்:- திருவண்ணமலை.
தூத்துக்குடி மாவட்டம்:- தூத்துக்குடி.
திருச்சி மாவட்டம்:- துறையூர்.
திருவள்ளூர் மாவட்டம்:- திருவள்ளூர்.
திருவாரூர்:- கூத்தாநல்லூர், மன்னார்குடி.
வேலூர் மாவட்டம்:- அரக்கோணம், ஆற்காடு, ராணிப்பேட்டை, வேலூர், வாலாஜாபேட்டை.
விழுப்புரம் மாவட்டம்:- விழுப்புரம்.
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டை, சிவகாசி, விருதுநகர்.

15-ந் தேதி உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள நகராட்சிகள் விவரம்:-

கோவை மாவட்டம்:- திருப்பூர், உடுமலை.
கடலூர் மாவட்டம்:- சிதம்பரம், கடலூர்.
திண்டுக்கல் மாவட்டம்:- திண்டுக்கல், பழநி.
ஈரோடு மாவட்டம்:- பவானி, ஈரோடு, கோபிசெட்டிப்பாளையம்.
காஞ்சி மாவட்டம்:- ஆலந்தூர், செங்கல்பட்டு, பல்லாவரம், தாம்பரம்.
கன்னியாகுமரி மாவட்டம்:- நாகர்கோவில், பத்மனாபபுரம்.
கரூர் மாவட்டம்:- குளித்தலை.
கிருஷ்ணகிரி மாவட்டம்:- கிருஷ்ணகிரி.
மதுரை மாவட்டம்:- திருமங்கலம், உசிலம்பட்டி
நாகப்பட்டினம் மாவட்டம்:- மயிலாடுதுறை, சீர்காழி.
நாமக்கல் மாவட்டம்:- நாமக்கல்.
புதுக்கோட்டை:- அறந்தாங்கி.
ராமநாதபுரம்:- பரமக்குடி.
சேலம் மாவட்டம்:- இடைப்பாடி, மேட்டூர்.
சிவகங்கை மாவட்டம்:- தேவக்கோட்டை, காரைக்குடி.
தஞ்சை மாவட்டம்:- பட்டுக்கோட்டை.
தேனி மாவட்டம்:- போடிநாயக்கனூர், சின்னமனூர், கம்பம்.
திருவண்ணாமலை மாவட்டம்:- ஆரணி, திருவத்திபுரம், வந்தவாசி.
தூத்துக்குடி மாவட்டம்:- கோவில்பட்டி.
திருச்சி மாவட்டம்:- மணப்பாறை.
திருநெல்வேலி மாவட்டம்:- கடையநல்லூர், புளியங்குடி, சங்கரன்கோவில், செங்கோட்டை, தென்காசி.
திருவள்ளூர் மாவட்டம்:- அம்பத்தூர், ஆவடி, கத்திவாக்கம், மாதவரம், திருவொற்றியூர்.
திருவாரூர் மாவட்டம்:- திருத்துறைப்பூண்டி, திருவாரூர்.
வேலூர் மாவட்டம்:- ஆம்பூர், குடியாத்தம், திருப்பத்தூர், வாணியம்பாடி.
விழுப்புரம் மாவட்டம்:- திண்டிவனம்.
விருதுநகர் மாவட்டம்:- ராஜபாளையம், சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர்.

Read More...

Wednesday, September 20, 2006

இரண்டு கட்டுரைகள்

முன்பு ரோசாவசந்த் "நாறும் பாரதம்" என்று ஒரு பதிவு எழுதியிருந்தார். இந்த மாதம் ஃபிரண்ட்லைனில் (Frontline) India's Shame என்று கவர் ஸ்டோரி போட்டிருக்கிறார்கள்.
சுட்டிகள்:
India's shame
Caste stranglehold
Out in the open
Part of the system
Bengal's record
Interview: Martin Macwan
In denial mode
Captured live


அதே போல் போன வார அவுட்லுக்கில் IIMல் படித்தாலும் SC/STக்கு சம்பளம் கம்மிதான் என்று கட்டுரை வந்திருக்கிறது. சுட்டி கீழே...
The Pay is Gross

Read More...

சோனியாவுக்கு "வந்தே மாதரம்' பாடத் தெரியாதா? அல்லது பிடிக்காதா?

சோனியாவுக்கு "வந்தே மாதரம்' பாடத் தெரியாதா? அல்லது பிடிக்காதா?
– எஸ். குருமூர்த்தி

"வந்தே மாதரம்' என்று பாரத அன்னையை வணங்கிப் பாடுவது, இஸ்லாமிய மத நம்பிக்கைகளுக்கு விரோதமானது – என்று இஸ்லாமிய பிரிவினைவாதிகளும், வகுப்புவாதிகளும் பிரச்சாரம் செய்த பிறகும், இஸ்லாமியக் குழந்தைகளை அப்பாடலை பாடவிட மாட்டோம் என்று பல இஸ்லாமிய இயக்கங்கள் கட்டாயம் செய்த பிறகும் கூட, லட்சக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் "வந்தே மாதரம்' பாடியிருக்கிறார்கள். அவர்கள் பாடியது மட்டுமல்லாமல், அப்படி அவர்கள் பாடிய செய்திகளை, ஃபோட்டோக்களுடன் பெருமையாக வெளியிட்டிருக்கின்றன பல இஸ்லாமிய பள்ளிக்கூடங்கள்.

பா.ஜ.க. ஆட்சி நடக்கும் மற்ற மாநிலங்களைப் போல் இல்லாமல், "வந்தே மாதரம்' கட்டாயம் எல்லோரும் பாட வேண்டும் – என்று குஜராத் அரசு கட்டளை பிறப்பிக்கவில்லை. ஆனாலும் அம்மாநிலத்தில் 99 சதவிகிதம் இஸ்லாமிய
குழந்தைகள் படிக்கும் ஒரு பள்ளியில் எல்லாக் குழந்தைகளும் "வந்தே மாதரம்' உற்சாகத்துடன் பாடினார்கள் என்கிற செய்தி வெளிவந்தது. அந்தப் பள்ளியை நடத்தும் முஸ்லிம் நிர்வாகிகள், "வந்தே மாதரம் பாடலை பாடுவதில் எந்தவித தயக்கமும் எங்கள் குழந்தைகளுக்கு இல்லை' – என்று பெருமையுடன் கூறினர்.

எந்த இஸ்லாமிய இயக்கங்கள், சமய அமைப்புகள், தலைவர்கள் – இந்த "வந்தே மாதரம்' கீதத்துக்கு எதிராகக் குரல் கொடுத்தார்களோ, அவர்கள் தங்கள் சமூகத்தில் தனிப்பட்டவர்கள் எவருக்கும் இப்பாடலைப் பாடுவதில் ஆட்சேபனை இல்லை என்பதை உணர, இந்த செய்திகள் உதவினால் அது அவர்களுக்கும், அவர்கள்
சமூகத்திற்கும், சரியான கருத்துக்களை ஏற்படுத்துவதற்கு உதவியாக இருக்கும்
– என்பதில் சந்தேகமே இருக்க முடியாது.

சென்னையில் காலை 11 மணி வெயிலில், கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் கடற்கரையில் காந்தி சிலை அருகே "வந்தே மாதரம்' பாடினார்கள். தமிழக அரசு, இந்த நிகழ்ச்சிக்கு எந்த விதமான உதவியும் செய்யாதது மட்டுமல்லாமல், "குழந்தைகளுக்கு நிழல் தரும் பந்தல் போடக் கூடாது; மைக் வைத்துக் கொள்ளக் கூடாது' என்று அவர்களை சுடும் வெயிலில் "வந்தே மாதரம்' பாட வைத்தது. 75 வயது தாண்டிய என்னுடைய நண்பர் ஐராவதம் மகாதேவன், ""வேளச்சேரியிலிருந்து வந்து அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு "வந்தே மாதரம்' பாடினேன்'' என்று டெலிஃபோனில் பேசினார்.

மேலும் ""அப்படிப் பாடும்போது 1942ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' என்று பள்ளிக்கூடத்தில் கோஷமிட்டு ஆசிரியரிடம் "பளார் பளார்' என்று நான் அடி
வாங்கியது ஞாபகத்திற்கு வந்தது'' என்று தழுதழுக்கும் குரலில் கூறினார் மகாதேவன். ஆக, அன்று அந்நிய அரசு எப்படி "வந்தே மாதரம்' பாடுவதற்கு எதிராக இருந்ததோ, அதே போல் இன்று பல சிறுபான்மை இயக்கங்களும் அமைப்புகளும் தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதைத்தான் – 1942ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' எதிர்ப்பும், 2006ஆம் ஆண்டு "வந்தே மாதரம்' எதிர்ப்பும் காட்டுகிறது.

ஆக, நாடு முழுவதும் கோடிக்கணக்கான மாணவர்களும், மாணவிகளும் ஜாதி, மதம், பிரதேசம், மொழி போன்ற எல்லா பிரிவினைகளையும் மீறி, 1896ஆம் ஆண்டு
ரவீந்திரநாத் தாகூர் கல்கத்தா காங்கிரஸ் சபையில், முதல் முறையாகப் பாடிய "வந்தே மாதரம்' கீதத்தை உற்சாகத்துடன் பாடியிருக்கிறார்கள்.

பல முஸ்லிம் அறிஞர்களும், தலைவர்களும், சில இஸ்லாமிய சமுதாய
இயக்கங்களும் "வந்தே மாதரம்' பாடக் கூடாது என்று கூறியிருப்பது தவறு என்று வன்மையாகக் கண்டித்திருக்கின்றனர். முதலில் அவசரப்பட்டு "வந்தே மாதர'த்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சீக்கிய மத உச்சஸ்தாபமான "குருத்வாரா' பிரபந்தக் கமிட்டியும், தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு "வந்தே மாதரம்' கீதத்தை பாடுவதற்கு ஆதரவு தெரிவித்தது.

"வந்தே மாதரம்' பாடுவதை எதிர்த்த இஸ்லாமிய இயக்கங்களும், தலைவர்களும், இனியாவது அவர்களுடைய அந்த நிலை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டும். அவர்கள் அப்படிப் பேசுவதும் செயல்படுவதும், விடுதலைப் போராட்டத்தின் போது அப்படி நடந்து நாட்டைப் பிளந்த இஸ்லாமிய பிரிவினைவாதிகளுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்படி செய்து விடுமோ – என்று அவர்கள் ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும்.

நாட்டின் மீது அபிமானம் கொண்ட இஸ்லாமிய அறிஞர்களும், தலைவர்களும், மற்ற சமுதாய மக்களின் இதயத்தில் தமது சமுதாயம் நல்ல இடம் பெற வேண்டும் என்று நினைக்கும் இஸ்லாமிய அன்பர்களும், "வந்தே மாதரம்' போன்ற நாட்டுப்பற்று
சம்பந்தப்பட்ட விஷயங்களில் இஸ்லாமிய வகுப்புவாதிகள் மதவெறியைக் கலக்காமல் இருக்க ஆவன செய்ய வேண்டும்.

2006ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி நாடு முழுவதும் "வந்தே மாதரம்' பாடப்பட்டது – இப்போதைய காங்கிரஸ் தலைமையில் நடக்கும் அரசாங்கத்தின் ஆணையால்தான். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நடத்திய "வந்தே மாதரம்' பாடும் நிகழ்ச்சியில் – சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. "உடல்நிலை சரியில்லை' என்று கூறி, அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் தப்பித்திருக்கிறார் சோனியா. இது வெட்கக்கேடான செயல். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியை தலைகுனியும்படி செய்திருக்கிறார் சோனியா.

"வந்தே மாதரம்' பாடத் தெரியாது என்று அவர் கூச்சப்பட்டு வரவில்லை என்றால், அதற்காக அவரை மன்னிக்கலாம். ஆனால் "வந்தே மாதரம்' பாடப் பிடிக்காமல் அவர் வரவில்லை என்றால், இந்த நாட்டில் அவர் வாடகைக்கு ரூம் எடுத்திருக்கும் அரசியல் தலைவராக இருக்கிறார் – பாரத அன்னையை, தனது அன்னையாக ஏற்ற பாரத குடிமகளாக அவர் இன்னும் பக்குவப்படவில்லை என்று தான் அர்த்தம் கொள்ள வேண்டும்.
நன்றி: துக்ளக்

Read More...

Wednesday, September 13, 2006

இட்லிவடை மாற்றங்கள்

நண்பர்களே,

இட்லிவடை Blogger betaக்கு மாற்றி வழிக்கி விழுந்தது உங்களுக்கு தெரிந்திருக்கலாம். சில நாட்களுக்கு முன் அதில் உள்ள பிரச்சனைகள் பற்றி எழுதியிருந்தேன்.

மேலும் சில பிரச்சனைகள்:
1. Users who have switched to Blogger in beta will not be able to login to comment on blogs that have not switched. ie., After switching you can’t post comments on an unswitched blog.அதாவது இட்லிவடை மற்ற (betaக்கு மாறாத) வலைப்பதிவுகளில் பின்னூட்டம் கொடுக்க முடியாது . Commenting using the “anonymous” or “other” options will still work.

2. படங்கள் upload செய்வதில் பிரச்சனை இருக்கிறது.

3. 'Blogger Beta' தேன்கூட்டில் பிரச்சனையில்லாமல் வேலை செய்கிறது.

தமிழ்மணத்தில் beta Blogger செய்தியோடை (validator.w3.org) பிழை என்று சொல்லுகிறது. அதனால் உங்கள் பதிவுகள் தமிழ்மணத்தில் தெரியாது. இதற்கு தீர்வு எப்போது என்று தெரியவில்லை. தமிழ்மணத்தில் செய்தியோடை நிரல் atom.xml என்பதற்கு பதிலாக http://beta.blogger.com/feeds/5996041/posts/summary/?alt=rss என்று மாற்றினால் பிரச்சனை இருக்காது என்று நினைக்கிறேன். நிர்வாகிகள் மாற்றுவார்களா ?

4. Blogger Betaவில் 'Edit HTML' என்ற புது வசதி இருக்கிறது. அது சில சமயம் சரியாக வேலை செய்வதில்லை.

5. Flickr, AudioBlogger, YouTube போன்ற சேவைகள் Betaவுடன் வேலை செய்யவில்லை.

மேலும் விவரங்களுக்கு
http://knownissues.blogspot.com/
http://bloggerstatusforrealbeta.blogspot.com/index.html

***** ----- *****

இட்லிவடையில் சில மற்றங்கள் கொண்டுவரலாம் என்று நினைக்கிறேன். இட்லிவடையில் என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்று பின்னூட்டத்தில் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன்.

அன்புடன்,
இட்லிவடை

Read More...

Tuesday, September 12, 2006

ஜெ - பேட்டி

கேள்வி: விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று சொல்லி இருக்கிறீர்களே?

பதில்:- பொதுவாக சொல்லி இருக்கிறேன். ஆருடமாக சொல்லவில்லை. விரைவில் சட்டசபை தேர்தல் வந்தால் நல்லதுதானே.

கே:- சென்னையில் இருந்து ஆயுதம் கடத்தப்பட்டது கடந்த ஆட்சியில் என்று டி.ஜி.பி. சொல்லி இருக்கிறாரே?

ப:- முதல்-அமைச்சர் பதில் சொல்ல முடியாததால் போலீஸ் டி.ஜி.பி., தலைமை செயலாளர், உள்துறை செயலாளர் போன்றோரை வைத்து அறிக்கை விட வைக்கிறார். இது வெட்க கேடானது. தேவைப்பட்டால் அமைச்சர்களை வைத்து பதில் சொல்லலாம். அதை விட்டு அதிகாரிகளை வைத்து அறிக்கை விடுவது கண்ட னத்துக்குரியது.

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு ராக்கெட்டுகள் அனுப்பட்டது இப்போது தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு நான் கண்டனம் தெரிவித்தேன். இந்த சம்பவத்தால் இந்திய அளவில் கருணாநிதிக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இதனால் எனது ஆட்சியில்இது நடந்ததாக என் மீது பழி போட நினைக்கிறார். அதற்காக அதிகாரிகளை வைத்து இதை சொல்ல சொல்கிறார். எனது ஆட்சியில் இது நடைபெற வில்லை.

அப்படி நடைபெற்று இருந்தால் 5 ஆண்டு ஆட்சி காலத்தில் எனக்கு தெரியாமல் இருந்திருக்காது. எனது ஆட்சி யில் இப்படிப்பட்ட சம்பவம் எதுவும் நடைபெற வில்லை.

கே:- முனீர்கோடா மீது நீங்கள் நடவடிக்கை எடுத்ததை கருணாநிதி குறை சொல்லி இருக்கிறாரே?

ப: இது பற்றி பேச அவருக்கு தகுதி இல்லை. மதானி என்ற தீவிரவாதி 1998-ல் கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக கைது செய்யப்பட்டார். அவரை விடுவிக்க பல விதத்தில் எனக்கு நெருக்கடி வந்தது. மத்திய அரசு குறிப்பாக காங்கிரஸ் அவரை விடுவிக்க முயற்சி செய்தது. ஆனால் அதை நான் ஏற்கவில்லை.

மதானி பல முறை ஜாமீனில் வெளிவர முயன்றும் கோர்ட்டு அனுமதிக்கவில்லை. நான் முதல்-அமைச்சராக இருந்த போது மதானி கோவை மத்திய சிறை வளாகத்தில் தான் இருக்க வேண்டும் என்று நான் வகித்து வந்த உள்துறை மூலம் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

சிறுபான்மை பிரிவை சேர்ந்த முனீர்கோடாவை அவர் மீது நம்பிக்கை வைத்து உள்துறை செயலாளராக்கியது நான் தான். ஆனால் அவர் உள்துறை பிறப்பித்த ஆணைக்கு எதிராக, மதானி கோவை சிறை வளாகத்தை விட்டு வெளியே வரலாம் என்று ஒரு ஆணையை எனக்கும், தலைமை செயலாளருக்கும் தெரியாமல் பிறப்பித்தார்.

இது போல மதானிக்கு ஜாமீன் வழங்கக்கூடாது என்று அரசு ஆட்சேபனை தெரிவித்தது.

ஆனால் ஆட்சேபனை இல்லை என்றும், மதானி சென்னை வருவதற்கு எதுவா கவும் உத்தரவை எனக்கும், தலைமை செயலாளருக்கும் தெரியாமல் பிறப் பித்தார். இது மதானியை தப்ப வைக்கும் முயற்சி. இதன் காரணமாகவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அவரை சஸ்பெண்டு செய்தது போதாதது. டிஸ்மிஸ் செய்து இருக்க வேண்டும்.

தேச துரோகியான முனீர் கோடாவின் பின்னணியில் தான் கருணாநிதி தலைமையில் ஆட்சி நடக்கிறது.

கே: காஞ்சி மடாதிபதியை கைது செய்த பிரேம்குமார் சஸ்பெண்டு செய்யப்பட்டு இருக்கிறாரே?

ப: காஞ்சீபுரத்தில் சங்கர ராமன் கொலை வழக்கை சிறப்பாக புலன் விசாரணை செய்த பிரேம்குமாரை இன் றைய முதல்வர் கருணாநிதி சஸ்பெண்டு செய்து இருக் கிறார். இதுபோல தா.கிருஷ் ணன் கொலை வழக்கில் அழகிரியை கைது செய்த மாரிமுத்துவும் சஸ்பெண்டு செய்யப்பட்டு 2 நேர்மையான அதிகாரிகளும் நடுத்தெருவில் நிற்கிறார்கள்.

கே: விடுதலைப்புலிகளை நீங்கள் எதிர்க்கிறீர்களா?

ப: இலங்கை தமிழர்கள் சம உரிமை பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். இலங்கை தமிழர் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண வேண்டும் என்பது எங்கள் விருப்பம். ஆனால் பயங்கரவாதம், தீவிரவாதம், வன்முறை ஆகியவற்றை அ.தி.மு.க. எதிர்க்கிறது. விடுதலைப்புலிகள் இயக்கம் ஒரு தீவிரவாத இயக்கம். அதை இப்போதும் நாங்கள் எதிர்க்கிறோம்.

விடுதலைப்புலிகளுக்கு தடை விதிக்க நான்தான் காரணம். ஆனால் முதல்- அமைச்சர் கருணாநிதி விடு தலைப்புலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது விவாதிக் கப்பட வேண்டிய விஷயம் என்று சட்டசபையில் சொல்லி இருக்கிறார். இதற்கு அவரிடம் தான் நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும்

Read More...

Monday, September 11, 2006

சூர்யா-ஜோதிகா திருமணம் - வாழ்த்துக்கள்

* சூர்யா-ஜோதிகா திருமணம் சென்னை அடையாறு பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது.

* சிவகுமார் தாலியை ஒரு தட்டில் வைத்து எடுத்துச் சென்றார். அதை மேடை முன்பு அமர்ந்து இருந்த முதல்-அமைச்சர் கருணாநிதி தொட்டு ஆசீர்வாதம் செய்தார்.

* முதல்-அமைச்சர் கருணாநிதி காலில் விழுந்து வணங்கி வாழ்த்து பெற்றனர். சூர்யா, ஜோதிகா இருவருக்கும் கருணாநிதி தனித்தனி பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார். சூர்யாவின் கையை பிடித்து முத்தமிட்டு கன்னத்தை தட்டிக் கொடுத்தார்.

* நடிகர் சங்க தலைவர் சரத்குமார், நடிகர்கள் கமலஹாசன், சத்யராஜ், பிரபு, அஜித்குமார், நடிகை மனோரமா, ராதிகா, இசை அமைப்பாளர் இளையராஜா உள்பட ஏராளமான திரை உலக பிரமுகர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

* மத்திய மந்திரிகள் தயாநிதிமாறன், ஜி.கே.வாசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு உள்பட முக்கிய பிரமுகர்களும் மணமக்களை வாழ்த்தினார்கள்.

சூரியா, ஜோதிகாவிற்கு வாழ்த்துக்கள்!
( படம் உதவி: மாலைமலர் )

Read More...

Friday, September 08, 2006

மகாராஷ்டிராவில் குண்டு வெடிப்பு

மகாராஷ்டிராவில் இன்று நடந்த குண்டு வெடிப்பில் 25 பேர் பலியானார்கள். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.மகாராஷ்டிராவில் நாசிக் மாவட்டத்தில் மாலேகான் பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டு வெடித்தது. இதில் ஒரு குண்டு மானி மசூதி அருகே வெடித்துள்ளது. வெள்ளிகிழமை தொழுகை முடிந்தபின் இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. அடுத்த முஷாய்ரா சவுக் பகுதியில் ஒரு குண்டு வெடிப்பும், பாஜு கானா பகுதியில் 2 குண்டுகளும் வெடித்தது. இதில் 25 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து மகாராஷ்டிரா முழுவதும் உஷார் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. மாலேகான் பகுதியில் மொபைல் போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. 8 போலீஸ் குழு சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாசிக் மாவட்ட துணை கலெக்டர் புனேயிலிருந்து சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளார். கடந்த ஜுலை 11ம் தேதி ரயில் நிலையங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பின் பீதி அடங்காத நிலையில் நாசிக்கில் அடுத்தடுத்து 4 இடங்களில் குண்டு வெடித்தது மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது நிலவரப்படி 25 பேர் மரணம். 100 பேர் காயம்

NTDV

CNN-IBN

Read More...

ஓ.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ண்ன் வீடுகளில் சோதனை

இன்று காலை முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரது வீடுகளில் இன்று ஒரே நேரத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

தேனி மாவட்டம் பெரிய குளம் வடக்கு அக்ரஹாரத்தில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் வீட்டிற்கு இன்று காலை 7.30 மணி அளவில் திடீரென வருமான வரித்துறை அதிகாரிகள் வந்தனர். அவர்கள் வீட்டில் இருந்தவர்களை அப்படியே இருக்க செய்து கதவை பூட்டி விட்டு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் வருமான வரித்துறையின் இன்னொரு பிரிவினர் பெரியகுளம் மூன்றாந்தலில் உள்ள ஓ.பன்னீர் செல்வத்தின் தம்பி ஓ.ராஜா வீட்டிலும் புகுந்து சோதனையில் ஈடுபட்டனர். மேலும் தேனி-பெரியகுளம் சாலையில் உள்ள ஓ.பன்னீர் செல்வம் அலுவலகத்திலும் மூன்றாவதாக ஒரு குழுவினர் சோதனை நடத்தினர். மூன்று இடங்களிலும் ஒரே நேரத்தில் அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

சோதனை நடைபெறும் வீடுகள், அலுவலகம் முன்பு போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டு உள்ளது.

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மதுரை அண்ணாநகர், தபால் தந்தி நகர், எல்லீஸ்நகர் ஆகிய 3 இடங்களில் வீடுகளும், அலுவலகங்களும் உள்ளன. ஓ.பன்னீர் செல்வம் வீட்டில் சோதனை நடந்த அதே நேரத்தில் தான் அனிதா ராதாகிருஷ்ணன் வீடுகளிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.


இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள், தஸ்தா வேஜுகள், கணக்கில் காட்டப் படாமல் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த நகை-பணம் சிக்கியதாக தெரிகிறது. மேலும் சோதனை தொடர்ந்து நடைபெற்று கொண்டு இருக்கிறது.

ஒரே நாளில் ஓ.பன்னீர் செல்வம்-அனிதா ராதா கிருஷ்ணன் வீடுகளில் நடக்கும் இந்த சோதனையால் மதுரை-தேனியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Read More...

Wednesday, September 06, 2006

வைகோவை நீக்க தயாரா? ஜெக்கு காங் கேள்வி

தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி :

வைகோ மூலமாக விடு தலைப்புலிகளுடன் ஜெய லலிதா தொடர்பு வைத்திருப்பதாக சந்தேகம் ஏற்படுகிறது என்று சிதம்பரத்தில் நான் பேசினேன். 2 நாட்கள் அமைதியாக இருந்த ஜெயலலிதா ஆண்டிப்பட்டிக்கு சென்று நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் பழைய சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறார்.

அவர் ஆட்சியில் இருந்தபோது விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக பேசிய வைகோவை பொடா சட்டத் தில் கைது செய்து சிறையில் அடைத்தார். ம.தி.மு.க.வை தடை செய்ய வேண்டும். என்று கூறினார். இப்போதும் வைகோ விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக கூறுகிறார். ஆனால் ஜெயலலிதா வைகோவை கண்டித்தாராப ஆட்சியில் இருக்கும் போது ஜெயலலிதா விடுதலைப் புலிகளை எதிர்ப்பதாக தன்னை விளம்பரப்படுத்திக் கொண்டார். இப்போது ஆட்சியில் இல்லை. ஆனால் அமைதி காத்துக்கொண்டு இருக்கிறார்.

வைகோவை அன்பு சகோதரர் என்று சொல்கிறார். வயதில் மூத்த அவரை அப்படி சொல்லட்டும். ஆனால் 83 வயது நிரம்பிய கலைஞரை அழகு சுந்தரம் என்று கேலி செய்திருக்கிறார். இது சரியா?

இன்று விடுதலைப்புலி களை ஆதரிக்கும் வைகோவை இவர் தடுக்காதது ஏன்? இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு விடுதலைப்புலி பிரதிநிதிகளை ஜெயலலிதா சந்தித்து பேசினார். ஆனால் இதுவரை அதுபற்றி எந்த விளக்கமும் அவர் அளிக்கவில்லை. நான் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை.

ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட போது அவர் தமிழ்நாட்டுக்கு வருவது பாதுகாப்பு இல்லை என்று கருதித்தான் அவருடன் ஒரே மேடையில் பேசும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமல் ஜெயலலிதா புறக்கணித்தார் என்று சட்டசபையிலேயே தம்பித்துரை பேசி இருக்கிறார். ராஜீவ் உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதை நீங்கள் முன்பே தெரிந்திருந்தால் அதனை தடுக்கும் முயற்சியில் ஏன் ஈடுபடவில்லை.

இதையெல்லாம் ஆராயும்போதுதான் உங்கள் மீது சந்தேகம் ஏற்படுகிறது. இதற்கான பதிலை எப்போது சொல்வீர்கள்.

உங்கள் ஆதரவுடன் நெய்வேலியில் உண்ணாவிரதம் இருந்த டைரக்டர் பாரதி ராஜாவும் இலங்கை சென்று பிரபாகரனை சந்தித் திருக்கிறார். அதற்கும் பதில் சொல்ல வேண்டும். 2004-ல் வைகோ காங்கிரஸ் கூட்டணியில் இருந்த போது ஒரு இடத்தில் கூட விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசவில்லை. ஆனால் இப்பேது பேசுவது உங்கள் ஆதரவால்தானா? நீங்களும் தீவிரவாதத்துக்கு துணைபோகிறீர்களாப விடுதலைப்புலிகளுடன் உங்களுக்கு தொடர்பு இல்லை என்றால் அதற்கு ஆதரவு கொடுப்பதாக கூறும் வைகோவை அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலக்க தயாரா?

பா.ம.க. எங்களுடன் உறவு வைத்திருக்கும் போது விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசவில்லை. தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் பேசுகிறார்கள். விரப்பமொய்லியை ராமதாஸ் குறைகூறி இருக்கிறார். அது தவறு.

ம.தி.மு.க.வை மத்திய கூட்டணியில் இருக்கும்படி நாங்கள் வற்புறுத்தவில்லை. இங்குள்ள அவர்கள் நடவடிக்கையை மேலிடத்துக்கு தெரிவிப்போம்.

Read More...

Tuesday, September 05, 2006

Blogger Beta ஒரு எச்சரிக்கை

சமிபத்தில் Blogger தங்கள் Beta சேவையை தொடங்கியிருந்தார்கள். சரி ஏதாவது புதுசாக இருக்கும் என்ற எண்ணத்தில் "Migrate Idlyvadai to Beta Blogger" என்று ஓரத்தில் தெரிந்த ஒரு லிங்கை கிளிக் செய்தேன். அவ்வளவுதான், "Please Wait, you are now migrating to beta" என்று வந்தது. அரை மணி நேரம் என் வலைப்பதிவு வேலை செய்யவில்லை.
பின்பு, "Congratulations! you have now migrated to Blogger Beta, Enjoy" என்று வந்தது.

எனக்கு கீழ் கண்ட நல்ல விஷயங்கள் நடந்துள்ளது.

1. எனது template பகுதியில் தமிழில் இருக்கும் பகுதிகள் புச்சியாக மாறியிருந்தது. (நான் முன்பு ஒரு நகல் எடுத்து வைத்திருந்தால் பிழைத்தேன்)

2. பின்னூட்டமிட்டவர்களின் பெயர்கள், கிளிக் செய்தால் தான் யார் என்று கண்டுபிடிக்க முடியும்.

2. செய்தியோடை பிசகியியது. (புதிதாக ஏதோ 'Self' என்று சேர்த்திருக்கிறார்கள்). அதனால் என் வலைப்பதிவு தற்போது தமிழ்மணத்தில் தெரிவதில்லை. ( சந்தோஷம் தானே ?)

அதனால் இதை படிக்கும் அன்பர்கள், இந்த நல்ல விஷயத்தை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லவும். யாரும் Betaக்கு மாறாதீர்கள்.

பிளாகருக்கு எழுதியிருக்கிறேன். பார்க்கலாம்.

பிகு:
1. இந்த பதிவு கூட தமிழ்மணத்தில் தெரியாது, யாராவது இதை மற்றவர்களுக்கு எடுத்து சொல்லுங்கள். நன்றி

2. தேன்கூட்டில் ஒழுங்காக வேலை செய்கிறது.


Read More...

கில்லிக்கு அழிவு காலம் !

கில்லிக்கு அழிவு காலம் தொடங்கிவிட்டது ;-).
பின்ன ? இந்த மாதம் விருந்தினராக இட்லிவடை எழுதியதை போட்டிருக்கிறார்கள்.
படிக்க: http://gilli.in/2006/09/05/september-guest-column-by-idly-vadai/

பிரகாஷ் மற்றும் பாஸ்டன் பாலாவிற்கு என் நன்றிகள்.

அன்புடன்,
இட்லிவடை

Read More...

Friday, September 01, 2006

தந்தை பெரியார் கருத்துக்கள் டாப் டென்+8

1. நாசமாகப் போகிற கற்பு, கற்பு என்று சொல்லி, நம் பெண்கள் எவ்வளவு கேவலமாக ஆகி விட்டார்கள் ? - தந்தை பெரியார், வாழ்க்கை துணை நலம் புத்தகத்தில், 1938 ஆம் பதிப்பு

2. திருமணம் என்பது மனிதத் தன்மைக்காக ஏற்படவில்லை. மனிதன் பெண்களை அடிமை கொள்ளவே ஏற்பட்டது. உலகில் கற்பு, காதல் என்பன போன்ற வார்த்தைகள், எப்படிப் பெண் ஆள வேண்டும் என்று ஏற்படுத்தி பயன்படுத்தப்பட்டு வருகின்றனவோ அது போலவேதான் ஒழுக்கம் என்னும் வார்த்தையும் எளியோரையும் பாமரமக்களையும் ஏமாற்றி, மற்றவர்கள் வாழப் பயன்படுத்தி வரும் ஒரு சூழ்ச்சி ஆயுதமே அல்லாமல் அதில் உண்மையோ சத்தோ ஒன்றுமே கிடையாது... எனவே பெண்ணடிமை ஒழிய, திருமணம் முறை ஒழுந்தாக வேண்டும். அதோடு மட்டுமல்ல மனிதன் சுதந்திர மனிதனாக இருக்க வேண்டும் என்றாலும், இந்தத் திருமண ஒழிந்தே ஆக வேண்டும். - தந்தை பெரியார், உயர் எண்ணங்கள், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

3. பெண்கள் கர்ப்பமாவது அசம்பாவிதமாய் இருப்பதுடன் பெண்களின் சுதந்திர வாழ்வுக்கும் இந்த கர்ப்பமானது பெரிய இடையூறாயிருக்கிறது. .... புருஷன் தனக்கு இஷ்டமான பெண்ணை மணந்து கொள்வதற்கும், பெண்சாதி ஒரு புருஷனைத் தவிர வேறு எந்தக் காரணம் கொண்டும் மணந்து கொள்ள முடியாததற்கும், இக்குழந்தைகளைப் பெறுவதே பெருத்த தடையாய் இருக்கிறது... இதுவரை கூறி வந்தவைகளாலும், இன்னும் பல காரியங்களாலும், பெண்கள் கர்ப்பத் தடையை அனுசரிக்க வேண்டியது அவசியமாகும். - தந்தை பெரியார், குடிஅரசு கட்டுரை, 1.3.1931 பெண்கள் அடிமை நீங்க வேண்டுமானால், முதலாவதாக அவர்களை கற்பு என்னும் சங்கிலியால் கட்டிப்போட்டிருக்கும் கட்டை உடைத்தெரிய வேண்டும். கட்டுப்பாட்டிற்காகவும் நிர்பந்ததிற்காகவும் கற்பு ஒருக்காலும் கூடாது! கூடாது! - தந்தை பெரியார் - சமுதாய சீர்திருத்தம் - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.

4. கேள்வி: பெண்கள் புருஷர்கள் என்றைக்கு சுதந்திரம் கொடுப்பார்கள் ?
பதில்: கற்பு என்கின்ற வார்த்தையும், விபச்சார தோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலை அடைய முடியும். இன்று பெண்களிடம் புருஷர்கள் முழு விடுதலையும் பெற்றிருப்பதற்கு காரணம், ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும் அடியோடு ஒழித்து விட்டதாலேயே, சட்டப்படி முழு விடுதலையும் பெற்றிருக்கிறார்கள். - தந்தை பெரியார் - குடிஅரசு 29.10.1933. விடுதலை வெளியிட்ட தந்தை பெரியார் 125 ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்.

5. இந்தக் 'கலியாணம்' என்ற அமைப்பு முறை இருப்பதால்தானே கணவன் - மனைவி என்ற உறவும் பெண் அடிமைத் தன்மையும் உருவாகிறது - தந்தை பெரியார் - பெங்களூரில் நிகழ்த்திய சொற்பொழிவு - விடுதலை 26.6.1973

6. கோவலன் ஒழுக்கமற்றவன்; தாசி ஒழுக்கமற்றவள்; கண்ணகி மடப் பெண்.. .இந்த அம்மாளுக்குக் கோபம் வந்ததும், தன் மார்பைத் திருகி எறிகிறாள். இது என்ன புத்தி ? மார்பைக் கையில் திருகினால் அது வந்து விடுமா ? இந்தப்படி நடந்த சங்கதியும், அனுபவமும் சிலப்பதிகாரம் தவிர வேறு எதிலும், எங்கும் காணக் கிடைக்கவில்லை. அந்தப்படி திருகிப் பிடுங்கின மார்பை வீசி எறிந்தால், அது நெருப்புப் பற்றி கொள்ளுமா ? அதில் 'பாஸ்பரஸ்' இருக்குமா இந்த மூடநம்பிக்கை கற்பனையானது. என்ன பயனைக் கொடுக்கிறது ? .. இதுதான் கண்ணகியின் கற்பின் பெருமையா ? அவள், புத்தியின் பெருமையா ? அக்கினி பகவானுக்குப் புத்தி வேண்டாமா ? ஒரு பெண் பிள்ளை முட்டாள்தனமாக உளறினால் நிரபராதிகளைச் சுடலாமா ? ஒரு பட்டணத்தைக் கொளுத்தலாமா என்று அறிவு வேண்டாமா ? - தந்தை பெரியார் - சேலத்தில் 22.7.1951 அன்று பேசியது. விடுதலை 28.7.1951

7. கற்புக்காக மனத்துள் தோன்றும் உண்மை அன்பை, காதலை மறைத்துக் கொண்டு, காதலும், அன்பும் இல்லாதவனுடன் இருக்க வேண்டும் என்கின்ற சமுகக் கொடுமையும் அழிய வேண்டும். ... எந்த காரணத்திற்கு ஆனாலும் ஒரு ஆணின் அல்லது ஒரு பெண்ணின் அன்பு ஆசை, காதல், காமம், நட்பு நேசம், மோசம், விரகம் முதலியவைகளை பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ முற்றும் முன்றாமவர்கள் யாராயினும் பேசுவதற்கோ, நிர்ணயிப்பதற்கோ, நிர்பந்திப்பதற்கோ சிறுது கூட உரிமையோ கிடையாது என்று சொல்கிறோம். இன்னும் சிறுது வெளிப்படையாய் தைரியமாய் இயற்கையையும், சுதந்திரத்தையும், சுபாவத்தையும், அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால், இவையெல்லாம் ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும் தனக்கு பிடித்த பலகாரக் கடையில் பலகாரம் வாங்குவது போலவும், அவனுடைய தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும் திருப்தியையும் மாத்திரமே சேர்ந்தென்றும், இவற்றுள் மற்றவர்கள் பிரவேசிப்பது அதிகப் பிரசங்கித்தனமும், அனாவசியமாய் ஆதிக்கம் செலுத்துவதுமாகும் என்று தான் சொல்ல வேண்டும். .... பெண்கள் வியாதியஸ்தர்கள் ஆவதற்கும், சீக்கிரம் கிழப் பருவம் அடைவதற்கும், ஆயுள் குறைவதற்கும், அகால மரணம் அடைவதற்கும் கர்ப்பம் என்பதே மூல காரணமாக இருக்கின்றது. .....பெண்கள் விடுதலைக்கும் சுயேச்சைக்கும் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பிள்ளை பெறுவது என்பதை நிறுத்த வேண்டும் என்று நாம் சொல்கின்றோம். - தந்தை பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்?' - பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீடு.


8. ஆண் இரண்டு வைப்பாட்டிகளை வைத்துக் கொண்டால் பெண்கள் மூன்று ஆசை நாயகர்களை வைத்துக் கொள்ள முற்பட வேண்டும் - தந்தை பெரியார் - குடியரசு 8.2.1931 - தந்தை பெரியார் அறிவுரை 100 நூலிலிருந்து.

நன்றி: துக்ளக் 12.11.2005

Read More...