பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, August 30, 2006

சபாஷ் குஷ்பு !

நடிகர் சத்யராஜ் நடிக்கும் "பெரியார்'' படத்தை டைரக்டர் ஞானராஜசேகரன் எடுத்து வருகிறார். இந்த படத்தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி கொடுத்துள்ளது. பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் மீண்டும் எடுத்துச் சொல்ல இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது

இந்த படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜுக்கு ஜோடியாக நாகம்மை வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். சத்யராஜ்-ஜோதிர்மயி சம்பந் தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.

அடுத்து பெரியார் 2-வது திருமணம் செய்த மணியம்மை வாழ்க்கை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மணியம்மை வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் ஞானராஜசேகரன் தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு நடிகையின் முகத்தையும் கம்ப்ïட்டர் மூலம் தொகுத்து மணியம்மை முகத் துடன் ஒப்பிட்டுப் பார்த் தார்.

அப்போது மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு முகம் ஏற்றதாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்? இதை நாம் அனுமதிக்கலாமா?'' என்றார். ( தயவு செய்து யாரும் சிரிக்க கூடாது )

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், "மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார். ( இதற்கும் யாரும் சிரிக்க கூடாது )

பா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காரணமாக மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபற்றி குஷ்பு ஆவேசமாக பேசியது:

கற்பு பற்றி முன்பு நான் சொன்ன விதத்தை -அர்த் தத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. எனவே தான் புரியாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.

இப்போதும் அப்படித் தான் தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அதை எல்லாம் விட்டு, விட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும் தான் பிரச்சினை என்பது போல பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசி இருக்கிறார்.

பா.ம.க. எம்.எல்.ஏ.க்கு வேறு வேலை எதுவும் இல்லையா? அதனால்தான் என்னைப்பற்றி பிரச்சினையை கிளப்புகிறார். அவருக்கு வேறு பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம்.

பெரியார் படத்தைப் பொறுத்தவரை நான் மணியம்மை வேடத்தில் நடிக்கத்தான் போகிறேன். அதற்கு தயாராகி வருகிறேன். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன். ஒரு போது பின்வாங்க மாட்டேன்.

நான் தமிழ்நாட்டின் மருமகள். எனவே மணியம்மை வேடத்தில் நடிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம் எனக்குத் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நான் நினைக்கி றேன்.

நடிப்புக்காக நான் பல பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் மணியம்மை வேடத்தில் நடிப்பதை பெரிய பரிசாக கருதி மகிழ்கிறேன்.

எந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் சரி மணி யம்மையாக நிச்சயம் நான் நடித்தே தீருவேன். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.

சர்ச்சைகளை கிளப்பி விடு வதன் மூலம் படைப்பாளி களை கட்டிப் போட முடியாது. என் தேர்வை பிரச்சினை ஆக்குவது தேவையற்றது. எந்த ஒரு கேரக்டரிலும் நடிப்பையும் திறமையையும் தான் பார்க்க வேண்டும்.

ஒரு பெரிய தலைவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை. இதற்காக நான் நிறைய "ஹோம்-ஒர்க்'' செய்துள்ளேன். அக்டோபர் மாதம் தொடங்கும் சூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

எனக்கு எதிர்ப்பு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி இனி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.

அவர்கள் என்ன பேச ஆசைப்படுகிறார்களோ பேசி விட்டுப்போகட்டும் நான் மணியம்மை கேரக்டரில் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்.

மணியம்மை வேடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்த மாக இருப்பதாக சத்ய ராஜூம், டைரக்டர் ஞான ராஜசேகரனும் தெளிவுபட கூறி விட்டனர். எனவே எதிர்ப்பு வருகிறது என்பதற் காக நான் பயந்து ஓடி விட மாட்டேன். மேலும் நான் கோழை அல்ல. மூலையில் முடங்கி அழ மாட்டேன்.

ஒவ்வொரு சமயமும் என்னை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நான் துணிச்சலுடன் எதிர் கொள்கிறேன். இது என்னை முன்பை விட வலுவாக்கு கிறது.

கடந்த ஆண்டு (2005) செப்டம்பர் 24-ந் தேதி நான் சொன்ன கருத்துக்காக பிரச்சினை உருவானது. இப்போது ஓராண்டு ஆகி விட்டது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட திட்டமிட்டுள்ளேன்.

எனக்கு இப்போது ஏற்பட்டி ருக்கும் பிரச்சினையை நானே எதிர்கொள்வேன். டைரக்டர் அனுமதித்தால் மணி யம்மை கதாபாத்திரத்தில் சொந்த குரலில்பேசவும் விரும்புகிறேன். ( சபாஷ் )

23 Comments:

லக்கிலுக் said...

இட்லிவடை பலமுறை சொல்லிவிட்டேன்.... எப்போதும் டுடே கார்ட்டூனில் துக்ளக் கார்ட்டூன் போட்டிருப்பதில் இருந்தே உங்கள் நோக்கம் தெளிவாகிறது.... நடத்துங்க... நடத்துங்க....

ஜயராமன் said...

நடிகை குஷ்பு அவர்கள் சொல்வது விதண்டாவாதமாக எனக்கு தோன்றுகிறது.

ஈ.வே.ரா அவர்கள் ஒரு over hyped சாதாரண அரசியல்வாதி என்பது என் தனிப்பட்ட அபிப்ராயம். ஆனாலும், அவரை புனித பசுவாக கருதும் பல காட்டுமிராண்டிகளுக்கு (அதாவது திராவிடர்களுக்கு...) குஷ்பு முதலான 'விவகாரமான' நடிகை இந்த பாத்திரத்தை ஏற்பது மனதை இடரத்தான் செய்யும். அந்த கதையையும் காட்சியையும் பார்க்கும்போது நமக்கு அந்த நடிகையின் பின்புலமும் இடறிக்கொண்டே இருக்கும்.

உதாரணமாக, குஷ்பு ராமாயணத்தில் சீதையாக நடித்தாலும் எனக்கு மனது இடறத்தான் செய்யும். அதே அளவுகோளை மற்றவரகளும் கொண்டிருப்பது ஞாயமானதுதான்.

குஷ்பு பொதுஜனங்களின் எண்ணத்தை சரியாக (இந்த தடவையும்..) புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.

தங்கள் பதிவுக்கு நன்றி

Anonymous said...

எல்லாரும் இப்படி தான் இருப்பேன் உன்னால முடிஞ்சத பார்த்துக்கோன்னு சொல்லனும்.அப்படி செஞ்சா தான் இவனுக ரவுடித்தனத்தை நிறுத்த முடியும்.

dondu(#11168674346665545885) said...

பெரியார் சொன்னதைத்தானே குஷ்புவும் சொன்னார், டோண்டு ராகவனும் சொன்னான்?

பகுத்தறிவுவாதிகள் ஏன் இவ்வளவு எரிச்சல் கொள்ள வேண்டும்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

கார்த்திக் பிரபு said...

nalla pdhivu..

Anonymous said...

//ஆனாலும், அவரை புனித பசுவாக கருதும் பல காட்டுமிராண்டிகளுக்கு (அதாவது திராவிடர்களுக்கு...) ///

வந்தேறிகளுக்கு (அதாவது ஆரியர்களுக்கு) எப்போதும் வாய்க்கொழுப்பு அதிகம் தான் :-)

லிவிங் ஸ்மைல் said...

// சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்? இதை நாம் அனுமதிக்கலாமா?'' என்றார். ( தயவு செய்து யாரும் சிரிக்க கூடாது )

விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், "மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார். ( இதற்கும் யாரும் சிரிக்க கூடாது )//

but, அடக்க முடியல...!!!

IdlyVadai said...

//உதாரணமாக, குஷ்பு ராமாயணத்தில் சீதையாக நடித்தாலும் எனக்கு மனது இடறத்தான் செய்யும்.//

ஜயராமன் - ஒரு சின்னக்கதை... ஒரு முனிவரும் சில சீடர்களும் ஊர்விட்டு ஊர் போகின்ற பொழுது ஒரு ஆற்றைக் கடக்க முயல்கையில் ஒரு அழகான இளம் பெண் ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருக்க முனிவர் அதைக் கண்டுவிட்டார். சீடர்களுக்கும் அந்தப் பெண்ணைக்காட்டி ஆலோசனை செய்து ஒரு மனிதாபிமான அடிப்படையில் அப்பெண்ணைக் காப்பாற்ற முடிவு செய்து.... அவளைக் காப்பாற்றி ஊரும் சேர்த்தனர்.

முனிவரும் சீடர்களும் தங்கள் பயணம் முடித்து தங்கள் வாழிடம் வந்தும் சீடனில் ஒருவன் ஏதோ சிந்தித்தபடி இருக்க... முனிவர் அவனை அணுகிக் கேட்டிருக்கிறார் உனக்கு என்னப்பா நடந்தது என்று... அதற்கு அவன்... இல்ல ஆற்றில் விழுந்த அந்தப் பெண்ணைக் காப்பாற்றியது தவறா சரியா என்று யோசித்துக் கொண்டிருக்கின்றேன் என்று... அதற்கு முனிவர் சொன்னாராம்... நாங்கள் அவளை அவலத்தில் இருந்து மீட்டதோடு மறந்துவிட்டோம்.. நீதான் இன்னும் அவளை உன் மனதுக்குள் சுமந்து கொண்டிருக்கிறாய்... பத்திரமாய் இறக்கி வைக்க முயல் என்று.....!

Anonymous said...

லிவிங் ஸ்மைல் - neenga thirai-kathai ezuthi, adhai direct-um panni....mudhal thirunangai director- appadi-nnu peru edukkalam.....

pannunga, pannunga....nalla pannunga....

Anonymous said...

konjam, chatini, sambar venum........changeukku kara chatini will be appreciated.

ஜயராமன் said...

இ.வ ஐயா,

///ஜயராமன் - ஒரு சின்னக்கதை... //

கதைக்கு மிக்க நன்றி. கதை நன்றாக இருந்தது. பலமுறை தெரிந்திருந்தாலும் எப்போதும் புதுமையாகவே இருக்கிறது. தாம் செய்த ஒரு ஒவ்வாத செயலை மனிதன் சதா நினைத்துக்கொண்டிருக்க கூடாது என்பதே அந்த கதையின் தெளிவு (எனக்கு புரிந்த வரையில்). மேலும், தன் மன விகாரங்களே தன் எண்ணங்களில் பிரதிபலிக்கின்றன என்பதும் அதன் உட்பொருள்.

ஆனால், நான் சொல்லவந்த விஷயம் யதார்த்தமான ஒரு மன ஆறுதல் பற்றிய ஒரு விஷயம். நம் மனதில் ஒரு மதிப்பான விஷயத்தை ஒரு மதிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதுதான்.

தாங்கள் அதற்கு ஒப்பவில்லை என்று புரிகிறது. தங்கள் கருத்தை மதிக்கிறேன். அதனால், என் நிலை மாறவில்லை.

நன்றி

ஜயராமன் said...

க.க ஐயா,

தந்தை அவர்கள் சொன்னதை அப்படியே வழிபற்றும் சீடன் நான்.

எப்படியோ, நாம் தமிழர்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகள் என்று தாங்கள் ஒப்புக்கொண்டதற்கு மிக்க நன்றி.

தந்தையின் ஆத்மா சாந்தி அடையும்.

நன்றி

ரவி said...

ஜெயராமன், ஆயிரம்தான் இருந்தாலும் காட்டுமிராண்டிங்கன்னு நீங்க சொல்லி இருக்க கூடாது.

உங்களை ஆயிரம்தான் நாங்க சொன்னாலும், பொறுமை எருமையை விட பெரியதுன்னு தெரியாதா உங்களுக்கு..

Anonymous said...

//உங்களை ஆயிரம்தான் நாங்க சொன்னாலும், பொறுமை எருமையை விட பெரியதுன்னு தெரியாதா உங்களுக்கு.. //

பொறுமை எருமையை விட பெரியதென்று எருமைக்குத் தெரியாதே?

Anonymous said...

//but, அடக்க முடியல...!!! //

உங்க ஆபிஸ்லே டாய்லெட்டே இல்லியா?

Anonymous said...

//பகுத்தறிவுவாதிகள் ஏன் இவ்வளவு எரிச்சல் கொள்ள வேண்டும்?//

அதுதானே? நல்லா சொன்னீங்க தலைவரே.

ஜெயலலிதாவைப் பற்றியோ சோவைப் பற்றியோ ராஜாஜியைப் பற்றியோ ஏதாவது சொன்னால் நாங்கள் தானே எரிச்சல் கொள்ளுவோம்.

குஷ்புவைப் பற்றி ஏதாவது சொன்னால் மட்டும் பகுத்தறிவு வாதிகளுக்கு ஏன் எரிச்சல் வருகிறது.

எரிச்சல் - எங்களுக்கு மட்டுமே சொந்தமான பிறப்புரிமை.

மாவீரன் டோண்டு ரசிகர் மன்றம்
திருவல்லிக்கேணி அக்ரஹாரம்

ஜயராமன் said...

ரவி ஐயா,

தங்கள் கருத்து சரிதான். காட்டுமிராண்டி என்று சொல்வது சரியான மரியாதைக்குறிய வார்த்தை அல்ல.

நான் சொன்னது நம் தந்தை அவர்கள் நம் தமிழர்களுக்கு எல்லாம் கொடுத்த அடைமொழி அல்லவா? அதை நான் வெறுமனே சுட்டித்தான் காட்டினேன்.

காட்டுமிராண்டிகள் என்று அவர் சொன்ன கருத்தை நாம் எல்லாம் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று பலப்பல வருடிகள் நமக்கு பல முறை சொன்ன பிறகும் தங்களுக்கு இந்த வார்த்தை ஆட்சேபகரமாய் இருப்பது சரியல்ல.

சரியான பகுத்தறிவு பாசறையில் படித்த மறத்தமிழர்களான நாம் உண்மையை உணர்ந்து நம் நிலையை சரியாக எடுத்துச்சொன்ன எல்லா பெரியோருக்கும் நன்றி உடையவராய் இருப்போம்.

நன்றி

Anonymous said...

Let PMK make a movie on Periyar with Ramadoss as Periyar.Let DPI
make a film with Thirumavalavan
as Periyar.Perhaps they may choose
a male to play the role of Maniammai as no actress will
fit in their critrion of 'chaste'
woman.

Thamil said...

ஆனால், நான் சொல்லவந்த விஷயம் யதார்த்தமான ஒரு மன ஆறுதல் பற்றிய ஒரு விஷயம். நம் மனதில் ஒரு மதிப்பான விஷயத்தை ஒரு மதிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதுதான்."

ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து, ஜயாவின் வாழ்வைபடமாக நடிக்க வேண்டும் என்பது செவாலியர் சிவாஜியின் வாழ்க்கலட்சியம், அதை நாம் அலட்சியப்படுத்தலாமா?

Muse (# 01429798200730556938) said...

ஸபாஷ் குஷ்பூ !!

தங்களின் மன உறுதி வெற்றி பெற வேண்டும். அதுவே பெண்மையின் வெற்றிக்கு அடையாளம். வருங்கால தமிழ் பெண்டிருக்கு கிடைக்கவிருக்கும் சுதந்திரத்திற்கான வரவேற்பு மணி !!

மரியாதைக்குரிய குஷ்பு அவர்களின் தீரம் மீண்டும் நிறுவப்பெற்றிருக்கிறது. அவர்கள் நடிக்கவே முடியாது போனாலும் என் மரியாதைகளும், வாழ்த்துக்களும் எப்போதும் அவர் பக்கம் உண்டு.

Anonymous said...

ஆன்டிக கூடி மடம் கட்டுராங்களாம்...
சொல்லவேயில்ல..

இப்பாடிக்கு,
குஷ்பு ஆன்டி.
குஷ்பு ரசிகர்.

பாலசந்தர் கணேசன். said...

"நம் மனதில் ஒரு மதிப்பான விஷயத்தை ஒரு மதிப்பாக நடத்தப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமானதுதான்."

Above point from Jeyaraman can not be denied.

saleem said...

Kushboo she sexy crazy