பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 21, 2006

போட்டுத்தாக்கு

சென்னையில் நடந்த ராஜிவ் பிறந்த நாள் விழாவில் காங்கிரசில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நட்வர் சிங் திடீரென தோன்றியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைவர்கள் யாரும் முகம் கொடுத்து பேசாததால் நட்வர் சிங் வருத்தத்துடன் வெளியேறினார். - முகத்தில் எண்ணை வழிந்தது என்று சொல்லுங்கள்.

"எதிர்க்கட்சி உறுப்பினர்களை, "உட்கார், நீ, வா, போ' என்றெல்லாம் அதட்டி சபை தலைவருக்கான அடிப்படை தகுதி கூட இல்லாமல் இருந்து வருகிறார்,' - ஜெயலலிதா - தைரியமான சபாநாயகர் தான்.

"என்னை ஒருமுறை (ஆட்சியில்) உட்கார வைத்து விட்டால், 15 கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அசைக்க முடியாது,'' - விஜயகாந்த். - பார்த்து Fevicol விளம்பரத்துக்கு உபயோகபடுத்திவிடுவார்கள்.

திமுக அரசின் 100 நாள் சாதனைகளை பாராட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். - மந்திரி பதவி கொடுக்காததும் ஒரு சாதனைதான்.

ம.தி.மு.க.,வில் இருந்து 30 பேர் சேர்ந்தாலும், தங்கள் கட்சியில் மூன்று ஆயிரம் பேர் சேர்ந்ததாக சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். ம.தி.மு.க., எங்கே இருக்கிறது என சில பைத்தியக்காரர்கள் கேட்டனர். அவர்கள் குற்றாலத்திற்கு வந்து குளிக்கட்டும். இங்கு மூலிகை கலந்த தண்ணீர் விழுவதால் இதில் குளித்தாலாவது பைத்தியம் தெளிகிறதா என பார்ப்போம்.. - வைகோ - சமிபத்தில் ஜூவிக்கு அளித்த போட்டிக்கு முன் நீங்க குளிச்சீங்க என்று பேச்சிக்கொள்கிறார்கள்.

நான் தி.மு.க.,வில் இருந்தபோது ஜெயலலிதாவை, "அம்மா' என்று அழைப் பது பற்றி விமர்சனம் செய்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவரோடு பழகிய பின், "அம்மா' என்ற வார்த் தைக்கு பூரண அர்த்தம் உடையவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. அவருக்குப் பிரதமர் ஆக முழுத் தகுதி இருக்கு. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அம்மா மாதிரி தொண்டர்களிடம் பாசம் கொண்ட தலைவராக இங்கே வேறு யாரையும் பார்க்க முடியாது... - சரத்குமார் - சாமியே சரணம் ஐயப்பா

இன்று உண்மை கலைஞனுக்கு மரியாதை குறைந்து வருகிறது. மகாநதி, அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை கொடுத்த கமலஹாசன் இன்று காமெடி படம் கொடுக்க காரணம் என்ன? மக்கள் தான். அரிய கலைஞன் ஒருவனை இந்த மக்கள் காமெடியனாக மாற்றி விட்டனர். அவரை இப்படி மாற்றி விட்டு, ரஜினியை எதிர்பார்த்து கிடக்கின்றனர். இப்படி இருந்தால் சினிமாவின் நிலை இன்னும் தாழ்ந்து தான் போகும்... - கங்கை அமரன் - நல்ல கண்டுபிடிப்பு.

சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிக்கன்; வெளியில் இருக்கும் மக்களுக்கு, சிக்-குன்-குனியா; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. - ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத். - காமெடி நல்லா வருது. அவ்வளவுதான்.

1 Comment:

Unknown said...

போட்டுத் தாக்கு !!