பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 07, 2006

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு - கருணாநிதி எச்சரிக்கை

விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை - கருணாநிதி எச்சரிக்கை

இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.

சமீபத்தில் திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியது குறித்து பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்துள்ளது விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தடை இருக்கும்வரையில் அதை மீறக்கூடாது. அவ்வாறு மீறி இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்பட நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசு கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் பேரணி நடத்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். அப்பேரணியில் 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்துகொண்டனர்.

பதற்றமான சூழ்நிலை ஏற்படுமளவுக்கு பேரணியில் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

செய்தி உதவி: தினமணி

13 Comments:

Anonymous said...

our support is growing. we are very very happy . aha. aha.
we are trying to give black money to cho. aha aha aha

ENNAR said...

கலைஞரா சொன்னார் ஆச்சரியமாக இருக்கே

G.Ragavan said...

ம்ம்ம்ம்...

காத்து said...

பாவம் கலைஞர் அவரால் வேற என்ன சொல்லமுடியும்.... வளமைபோல பேரணி போராட்டத்துக்கு அனுமதியை வளங்கிவிட்டு பேசமல் கண்டும் காணாதவர் போல இருந்தார்... சொந்த கூட்டணியை சேர்ந்த ஞான சேகரன் கேட்க்கும் போது வேற என்ன மாதிரி பதில் சொல்ல வேணும்...

இந்திய பிரிவினை நடவடிக்கைகளில் இறங்கினால்த்தான் நடவடிக்கை... சும்மா கோரிக்கைகள் வைத்தால் அல்ல...எண்று கலைஞர் ஆளமாக ஒண்றை சொல்லி இருக்கிறார்...

ஒருகாலத்தில் பிரிவினை வேண்டி குரல் எழுப்பியவர்களில் கலைஞரும் ஒருவர்... அவருக்கு தெரியும் அதன் எல்லை எது என்பது..

Anonymous said...

புலிகள் மீதான இந்தியத் தடை சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது: முதல்வர் கலைஞர் : mayooresan மயூரேசன்

They are begging...

unarvukal said...

இது என்ன பெரிய விடயம், இது தான் இந்தியக் "கூட்டாட்சி" என்றழைக்கப்படும் ஒற்றையாட்சியின் குறைபாடு. பெரும்பாலான மாநில மக்களின் குரலைக் கூட மத்திய அரசு தனது இரும்புக்கரத்தால் திருக முடியும், ஏதாவதொரு சட்டத்தைப் போட்டுப் பல கோடிமக்களின் வாய்க்குப் பூட்டுப் போடமுடியும். விரும்பியோ, விரும்பாவிட்டாலும் பெரும்பான்மை தமிழரல்லாதவர்களால் இயற்றப்பட்ட தமிழெதிப்புச் சட்டங்களுக்கும் தமிழர்கள் ஒழுக வேண்டும்.

உதாரணமாக நாளைக்கு தமிழ் தமிழ்நாட்டில் ஆட்சி மொழியல்ல, இந்தி பாவனையை அதிகரிக்க வேண்டுமென ஹிந்தியன் பாராளுமன்றம் சட்டமியற்றினால், முதலமைச்சர் என்ற முறையில் அதையும் நடைமுறைப் படுத்த வேண்டிய கட்டாயம் கருணாநிதிக்குண்டு. கருணாநிதியைக் குற்றம் சாட்டும் முன்பு இந்தத் தடைச்சட்டத்தின் சூத்திரதாரிகள் யாரென்று பார்த்தால், பூணூலின் கட்டுப்பாட்டிலுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சுத் தானென்பது எல்லோருக்கும் தெரியும், பூணூல் சூத்திரதாரிகள் தான் இந்தியாவின் Anti Tamil/Anti Dravida வெளிவிவகாரக் கொள்கையை வகுப்பவர்கள். South Block பூணூலால் இறுக்கி வரிந்து கட்டப்பட்டிருக்கும் வரை இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கைகள் ஈழத்தமிழர்களுக்கு எதிரானதாகத் தானிருக்கும், கருணாநிதிக்கும் வெல்லவும் முடியாத, விழுங்கவும் முடியாத நிலை தான்.


கருணாநிதியின் கொள்கையற்ற குடும்ப அரசியலை உலகத்தமிழர்கள் யாவரும் அறிவர் ஆனால் இந்த விடயத்தில் இதில் கருணாநிதியை அந்தளவுக்குக் குறைசொல்ல முடியாது, அவர் ஒரு சூழ்நிலைக் கைதி மாதிரி. தன்னுடைய சொந்த நிலைப்பாட்டை வெளிப்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் மத்திய அரசின் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கடமை அவருக்குண்டு. அல்லது அவரின் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் ஹிந்தியன்களின் ஆட்சிக்கலைப்பு என்ற கத்தி விழும். Anti Tamil பார்ப்பனப் பத்திரிகைகளும், பார்ப்பான்களின் வலைப்பூக்களும் அதை வைத்து Field day கொண்டாடி விடுவார்கள். பார்ப்பாத்தியின் ஆட்சியின் போது மட்டும், என்ன ஊழலாக இருந்தாலும் பார்ப்பான்கள் அடக்கி வாசிப்பார்கள்.

Anti Tamil பார்ப்பனர்களின் ஆதிக்கம் தமிழகப்பத்திரிகைகளில் மட்டுமல்ல, வலைப்பூக்களிலும் அதிகம், அவர்கள் தான் முஸ்லீம்களுக்கும் தமிழர்களுக்கும் சிண்டு முடித்து விடுவதற்காக ஈழத்தில் தமிழர்களுக்கும், முஸ்லீம்களுக்குமுள்ள மனத்தாபத்தை வலைப்பூக்களில் ஊதிப்பெருதாக்கி நாரதர் வேலை பார்க்கிறார்கள். இப்பொழுது கருணாநிதி முதலமைச்சர் என்ற முறையில் மத்திய அரசின் சட்டத்தைப் பற்றிக் கூறிய விடய்த்தைப் பெரிதாக்கி, கருணாநிதி இப்படிக் கூறியதால் முழுத் தமிழகமும், ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கும் எதிர்ப்பு என்றது போன்ற மாயையை ஏற்படுத்த முனைகிறார்கள்.

இதையே கருணாநிதி, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு தெரிவித்திருந்திருந்தால் கருணாநிதியை Anti Indian ஆக்கி, பயங்கரவாத ஆதரவாளராக்கி, சில நூறு தமிழர்களின் இந்த அமைதியான ஊர்வலத்தைப் பயங்கரவாதமாக்கி, தமிழகத்தில் பயங்கரவாதம் தலைதூக்கி விட்டதென்றெல்லாம் பம்மாத்து விட்டுப் பல சிந்தனைகளில், சிந்தனைகளை உருவி விட்டிருப்பார்கள் Anti Tamil பார்ப்பான்கள். என்று தான் தமிழர்களின் முதுகில் குத்துவதை இவர்கள் நிறுத்துவார்கள் என்பது அந்தக் கோணேசருக்குத் தான் வெளிச்சம்.

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2068

Haranprasanna said...

He will explain what he told and will further explain his 'explanation' and finally say, Jayalalitha was supporting LTTE long back and I have the proof for it. No use.

வெற்றி said...

இட்லி,
தினமணி நாளிதழில் கூறியபடி கலைஞர் சொல்லவில்லை. தினமணி அவர் சொல்ல வந்த கருத்தைப் புரிந்து கொள்ளாமல் சொல்கிறதா அல்லது கலைஞர் மீது சேற்றை வீச வேண்டும் என்பதற்காக இப்படி அவர் சொன்னதை திரித்து எழுதுகிறதா தெரியவில்லை.
கலைஞர் சொன்னது இதுதான்:

-------------------------------
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான இந்தியத் தடை விதிக்கப்பட்டது சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது என்று தமிழ்நாடு முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி கருத்துத் தெரிவித்துள்ளார்.


தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கட்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் இது தொடர்பாக ஒரு பிரச்சனையை எழுப்பி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த 1 ஆம் நாள் விடுதலைப் புலிகளை ஆதரித்து "புரட்சிகர இளைஞர் முன்னணி' என்ற அமைப்பு ஆர்ப்பாட்டம், பேரணி நடத்தியது.

அந்த அமைப்பினர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பியதோடு, விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால் இந்தியா துண்டு, துண்டாக சிதறுண்டு போகும் என்று அவர்கள் பேசியதாக கூறினார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை இருக்கும் நேரத்தில் இத்தகைய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு எப்படி அனுமதிக்கப்பட்டது என்றும், ம.தி.மு.க. நகர செயலாளர் உட்பட இதில் பலர் பங்கேற்றிருக்கிறார்கள். அவர்களுடைய செயல் அமைதிப் பூங்காவாக உள்ள தமிழகத்தில் மீண்டும் விச வித்தை தூவுவது போல இருக்கிறது.

எனவே இதன் மீது அரசு உரிய நடவடிக்கை எடுத்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். இதன் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பாரா என கேட்டார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கலைஞர் கருணாநிதி கூறியதாவது:

"புரட்சிகர இளைஞர் முன்னணி" என்ற அமைப்பினர் ஈழ மக்களை கொன்று குவிக்கும் சிங்கள இனவெறி அரசை கண்டித்து அந்த அமைப்பை சேர்ந்த அனந்தகிருஸ்ணன் என்பவர் தலைமையில் பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நடத்த அனுமதி கோரினர்.

அவர்கள் திருப்பத்தூர் பிரதான சாலையில் வராமல் நகரின் ஒதுக்குப்புறமான சாலைகளின் வழியாக ஊர்வலமாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து 150 பெண்கள் உட்பட சுமார் 400 பேர் அனந்தகிருஸ்ணன் தலைமையில் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதில் இந்த அமைப்பை தவிர மற்ற சில அமைப்புகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதன் விளைவாக அங்கு எந்தவித பதட்டமும் இல்லை. நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட அதிகாரிகள் எனக்கு தகவல் அனுப்பியுள்ளனர். இந்த அளவோடு நம்முடைய அனுதாபத்தை, நம்முடைய மனோநிலையை ஈழத்தில் உள்ள சிங்களவருக்கும், இந்திய அரசுக்கும் சொல்லக் கூடிய அளவிற்கு அமைந்தால் அது ஏற்கத்தக்கதுதான். அவை எதிர்க்கத்தக்கவை என்று கொள்ள முடியாது.

தமிழர்கள் பக்கத்திலேயே கொல்லப்படுவதை, சீரழிவதை நம்மால் தாங்கிக் கொள்ள இயலாது. அதற்கு பரிகாரம் என்ன? வன்முறைக்கு வன்முறை பதிலாகாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கிளர்ச்சியில் ஈடுபடுவது அனுதாபத்தை வெளிப்படுத்து வதற்குத்தான். அதற்காகத்தான் இந்த பேரணி. ஆனால் நிலைமை வேறு மாதிரி திரும்பினால் இந்த அரசு வேடிக்கை பார்க்காது.

இந்திய இறையாண்மைக்கும், ஒற்றுமைக்கும் விரோதமாக யார் செயல்பட்டாலும் அரசு சும்மா விடாது.

விடுதலைப் புலிகளுக்கு இங்கு தடை விதிக்கப்பட்டது. தடை சரியா, அல்லவா என்பது விவாதத்திற் குரியது. தடை உள்ளவரை அதற்கு அடங்கித்தான் செயல்பட வேண்டும். அதை மீறினால் ஏற்படும் விளைவுகளை ஏற்றுத்தான் ஆக வேண்டும் என்றார் கலைஞர் மு.கருணாநிதி.

[நன்றி : புதினம்]
---------------------------
ஆக கலைஞர் சொன்னது என்னவெனில் இந்திய ஒற்றுமைப்பாட்டுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கெதிராகத் தான் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்க் கூறியிருந்தார். புலிகளை ஆதரிப்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் கூறவில்லை. அத்துடன், புலிகளையோ ஈழத்தமிழர்களையோ ஆதரிப்பதென்பது இந்திய ஒற்றுமைப்பாட்டை எதிர்ப்பது ஆகாது என்பதும் கலைஞருக்கு நன்றாகத் தெரியும்.

Anonymous said...

'உணர்வுகள்',டேய், திருந்துங்கடா.

Anonymous said...

கலைஞர் சொன்னது கருணாநிதிக்ேகு புரியாது. பாவம் தமிழர்கள்.

Amar said...

அது சரி, இத்தா பெரிய தமிழ்நாட்டில் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்ககூடிய கூட்டம் வேறும் 400 பேர்தானா?

அப்புறம், புலி எதிர்ப்பு ஏன் ஈழதமிழர்களுக்கு எதிரான் ஒன்றாக கருதபடுகிறது?

புலிகள் ஈழதமிழர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று எடுத்துகொள்ள இயலுமா?

Anonymous said...

'உணர்வுகள்',டேய், திருந்துங்கடா.

Jay said...

//புலிகள் மீதான இந்தியத் தடை சரியா அல்லவா என்பது விவாதத்திற்குரியது: முதல்வர் கலைஞர் : mayooresan மயூரேசன் //
சந்தடி சாக்கில யாரோ ஒரு நசப்பய என் பெயரை மிஸ் யூஸ் பண்ணி அனானியாக பின்னூட்டம் இட்டுள்ளான்!!! முள்ளந்தண்டில்லாத பயல்!!!

கருனாநிதி எம்ஜிஆர் வித்தயாசம் ஈழத்தமிழருக்கு நன்கு தெரியும்!!