பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, August 07, 2006

நட்வர்சிங் டிராமா ( பாகம் 2 )

ஈராக்கில் சதாம்உசேன் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உணவுக்கு எண்ணை வழங்கும் திட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் பங்கு பெற்று ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. ( நட்வர் சிங் டிராமா )

இது தொடர்பாக நீதிபதி பதக் தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. பிரதமர் அதை வெளியிடுவதற்கு முன்பே அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியே கசிந்துவிட்டன. அதில் நட்வர்சிங் குற்றவாளி என்று கூறப்பட்டு இருந்தது.

பாராளுமன்றத்துக்கு தெரி விக்காத நிலையில் ரகசியத்தை கசிய விட்டதற்காக பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர நட்வர்சிங்கும், பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தனர்.

அதன்படி இன்று பாராளு மன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.

பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப நட்வர்சிங் நோட்டீஸ் கொடுத்திருப்பது ஒழுங்கீன நடவடிக்கை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுபோல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் நட்வர்சிங் சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விபரம் குறித்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் நட்வர்சிங் காங்கிரசில் இருந்து நீக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இன்று பாராளுமன்றம் கூடியபோது ஏற்பட்ட அமளி துமளி காரணமாக சபையின் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.

Updates follow...

0 Comments: