‘‘நாங்கள் இன்னமும் குஷ்புவை நடிக்க வைப்பது பற்றி ஒரு முடிவுக்கு வரவில்லை. பேசிக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த விஷயம் ஏன் இவ்வளவு தூரம் பெரிதாகிறது என்று தெரியவில்லை. சட்டசபையில் விவாதித்து பற்றி கூட எனக்குத் தெரியாது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. என்றாலும் இந்த விஷயத்தில் அமைச்சரின் பதில் சரியான தாகத்தான் இருக்கிறது. அதையேதான் நானும் உங்களுக்கு பதிலாக சொல்ல விரும்புகிறேன். மற்றபடி எந்தப் பிரச்னை யும் இன்றி பெரியார் படம் எடுத்து முடிக்கப்படும்’’ - பெரியார் படத்தின் இயக்குநர் ஞானராஜ சேகரன்
ஒருத்தனுக்கு ஒருத்தி என்று வாழும் தமிழக பண்பாட்டை குஷ்பு ஏற்கனவே இழிவு படுத் தினார். தமிழக பெண் களின் கற்பை கொச்சைப்படுத்தினார். எந்த பெண்ணாவது கற் போடு இருக்கிறார்களாப திருமணத்துக்கு முன் வேறு ஆணுடன் உறவு வைக்காத பெண் உண்டா என்றெல்லாம் கேவலப்படுத்தினார்.
கண்ணகி பிறந்த மண் இது. இங்கு வாழும் வீரம் செறிந்த என் தமிழச்சிகளை மோசமாக சித்தரித்த குஷ்பு பெரியார் படத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. எனவே தான் சட்டமன்றத்தில் எதிர்த்தேன்.
பெரியார் படத்துக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி கொடுக்கிறது. அது தமிழர்களின் வரிப்பணம். குஷ் புவுக்கு சம்பளமாக போவதை அனுமதிக்க முடியாது.
பெரியார் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய மகத்தான தலைவர். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தார். தீண்டாமை, மூட நம்பிக்கைகளை வேரறுக்க கிளர்ச்சி செய்தார்.
அவர் வாழ்க்கையை படமாக்குவதை அனைத்து கட்சியினரும் வரவேற்றோம். அந்தப் படம் வருங்கால இளைய தலைமுறையினருக்கு ஒரு பாடமாக அமையும் என்று சந்தோஷப்பட்டோம். அந்த படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்றதும் அதிர்ச்சியாகிப் போனோம். நூற்றுக் கணக்கான படங் கள் வருகிறது. அவற்றில் யாரெல்லாமோ நடிக்கிறார்கள். அது பற்றி கவலைப்படவில்லை. ஆனால் பெரியார் படத்தில் மணியம்மையாக நடிக்க தகுதி வேண்டும்.
திருமணத்துக்கு முன்பு வேறு ஆணுடன் தொடர்பு வைத்துக் கொள்ளலாம் என்று பேசியவரா அதில் நடிப்பதுப புறநானூற்று பெண்கள் வாழ்ந்த மண்ணில் வீரத் தாய் வேலு நாச்சியார் வாழ்ந்த மண்ணில் மும்பையில் இருந்து சம்பளத்துக்கு நடிக்க வந்த குஷ்பு ஆணவத்தோடு தமிழ் கலாசாரத்தை கொச் சைப்படுத்தியது மன்னிக்க முடியாதது.
தவறாக பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காமல் நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது என்று கூறி சக நடிகைகளையும் வக்காளத்துக்கு அழைத்து வந்து வம்பு செய்தார். அவருக்கு பெண் அமைப்பினர் தாமாகவே ஆவேசப்பட்டு துடைப்பம் காட்டினர்.
ஆபாசம், தொடை, தொப்புள் காட்டி நடித்தததை தவிர குஷ்பு வேறு என்ன புரட்சி செய்தார். மணியம்மையாக நடிக்க எந்த வகையில் இவர் பொருத்தமானவர்.
மணியம்மை அனாதை குழந்தைகளை தன் குழந்தையாக பாவித்து வளர்த்தவர். பெண் அடிமைத்தனத்தை வேரறுக்க வாழ்க்கை தியாகம் நிறைந்தது. போராட்டங்கள் நடத்தியவர் சிறைச்சாலைகளில் அடைப் பட்டவர். வீதிக்கு வந்து போராடியவர். அவரோடு குஷ்புவை ஒப்பிட முடியுமா? அவர் தியாகம் பற்றி எதுவுமே தெரியாத குஷ்புக்கு அந்த பாத்திரம் எப்படி பொருத்தமாகும்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை இல்லையாப என்று கேட்டுள்ளார். டாக்டர் ராமதாஸ் வழிகாட்டுதலில் மக்கள் பணிக்காக எங்களை அர்ப்பணித்துள்ளோம். எண்ணற்ற போராட்டங்களை அவர் தலைமையில் நடத்தி உள்ளோம். எங்களைப் பற்றி மக்களுக்கு தெரியும். குஷ்புக்கு தெரியவாய்ப்பில்லை.
காசுக்காக நடிக்க வந்தவர். திமிரோடும் ஆணவத்தோடும் அகம்பாவத்தோடும் பேசு வதை வேடிக்கை பார்க்க மாட்டோம். நாவை அடக்கி பேச வேண்டும். நக்கல், கிண்டல், கேலி, எல்லாம் சினிமா வில் வைத்துக் கொள்ளுங்கள்.
குஷ்பு போன்றோருக்கு விவசாயம் எப்படி நடக்கிறது. உண்ணும் உணவு பூமிக்கு அடியில் விளைகிறதாப மேலே விளைகிறதாப பலாப்பழம் மரத்தில் காய்க்கிறதாப நிலத் தின் கீழ்காய்க்கிறதாப என் றெல்லாம் தெரியாது. எங்களை சீண்ட வேண்டாம். - பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் ‘‘ஏங்க, நான் இருபத்தைந்து வருஷமா சினிமாவில் நடிச்சுக்கிட்டிருக்கேன். எனக்கு நானே ‘பெரியார்’ படத்தில் ரெக்கமென்டேஷன் செய்துக்க முடியல. கொள்கை அடிப்படையில் நான் நாத்திகவாதி. அதற்காகத்தான் எனக்கு வாய்ப்புக் கிடைத்ததா என்றால் அதுவும் இல்லை.
படத்தை இயக்கும் ஞானராஜசேகரன், ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி. ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே இந்தப் படத்தை எடுக்க ஒவ்வொரு கட்டமாக யோசித்து வைத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் அவர். இத்தனை வருஷமா நடிச்சுக்கிட்டிருக்கிற எனக்கே ஏதோ புதுமுகத் தேர்வு மாதிரி, என் புகைப்படங்களின் பல ‘போஸ்’களை அனுப்பச் சொல்லி நான்கு வருடத்திற்கு முன்பே அதை கம்ப்யூட்டரில் போட்டுப் பார்த்து, தந்தை பெரியாரின் பல வயதுப் படங்களுடன் எனது முகச்சாயலை ஒப்பிட்டுப் பார்த்து, ஓரளவுக்காவது பொருந்துகிறதா என ஆராய்ந்துதான், எனக்கு வாய்ப்புக் கொடுத்திருக்கிறார். இது யாருக்குத் தெரியும்?
அதேபோன்று பெரியாருடன், காந்தி, ராஜாஜி எல்லாம் வருகிறார்கள். அவர்களையும் அப்படித்தான் மிகுந்த சிரமத்துடன் தேர்வு செய்தார். ராஜாஜியாகத் தேர்வானவரின் ஒப்பனை படத்தைப் பார்த்து ராஜாஜி குடும்பத்தாரே வியந்திருக்கிறார்கள். இப்படி முக அமைப்பு மட்டுமின்றி, அதற்கேற்ற நடிப்பாற்றலும் இருந்தால்தான் அவர்களைத் தேர்வு செய்வார். அதுதான் நடக்கிறது.
அதேபோன்றுதான் நடிகை குஷ்புவின் தேர்வும். அவரைவிடச் சிறந்தவர் என யாரைக் கூறுகிறார்களோ அந்த நடிகையைக் கூறட்டுமே. குஷ்பு உலகத் தரத்தில் போற்றக்கூடிய ஒரு சிறந்த நடிகை. பல படங்களில் என்னுடன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். அவரைப் பற்றி நன்றாகத் தெரியும். ஒருவரது கொள்கை, கருத்து என்பது வேறாக இருக்கலாம். நடிப்பில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. ‘தந்தை பெரியார்’ படம் என்பது, ஒரு வரலாற்றுப் படம். அப்படி இருக்கும்போது, அதில் நடிப்பை மட்டுமே பார்க்கணும். மணியம்மை பாத்திரத்திற்கு பலரின் புகைப்படத்தைத் தேர்வு செய்து, ஆராய்ந்து இறுதி முடிவாகத்தான் குஷ்பு தேர்வாகியுள்ளார். நூற்றுக்கு நூறு சதவிகிதம் அவர், அந்த வேடத்திற்கு மிகப் பொருத்தமானவர்தான்.
இதைத் தெரிந்துகொள்ளாமல், சர்ச்சைக்குள்ளாக்குவது வேண்டாத ஒரு விஷயம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு வாழ்க்கைப் படத்தை, உயிரோட்டத்துடன் பார்க்க வேண்டிய எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும். அதைத்தான் பார்க்கணும். இதுதான் என் கருத்து!’’ - நடிகர் சத்யராஜ்
‘தந்தை பெரியார்,’ படத்திற்கு அரசு நிதியுதவி செய்திருப்பது மகிழ்ச்சியான செய்தி. அந்தப் படத்தை இளைய தலைமுறையினர் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவரது வாழ்க்கை, அனைத்துத் தமிழர்களுக்கும் பாடமாக அமையும். இதில் மாற்றுக் கருத்தே இல்லை. இந்த நிலையில், படப்பிடிப்பு தொடங்கும் முன்னதாகவே இதனை சர்ச்சைகளுக்குள் சிக்க வைப்பது நல்லதல்ல.
ஆற்றல் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் நடிக்கட்டும். ஆனால், ஒரு மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கின்ற திரைப்படத்தில் சிக்கலுக்குரிய ஒருவரைத் திட்டமிட்டே நடிகையாகத் திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாகவே உள்ளது.
குஷ்பு நடிப்பதற்கு தமிழக மக்களிடையே இயல்பாக எதிர்ப்புக் கிளம்பினால், அது ‘தந்தை பெரியார்’ திரைப்படத்திற்குக் களங்கமாக அமையும். எனவே, அவற்றைத் தவிர்த்துக் கொள்வது நல்லது. தமிழக அரசுதான் இதுகுறித்துத் தீர்மானிக்க வேண்டும்!’’ - விடுதலைச்சிறுத்தைகள் பொதுச் செயளாலர் திருமாவளவன்
‘‘என்ன சொல்வது? நான் அப்போது சொன்ன கருத்தைத்தான் இப்போதும் சொல்வேன். கற்பு பற்றி நான் சொன்ன விதத்தை_அர்த்தத்தை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொண்டிருந்தால் என்னை எதிர்த்திருக்கமாட்டார்கள். புரிந்துகொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. அதனால்தான் அப்படிச் செய்தார்கள். உண்மையிலேயே தூங்குபவர்களை எழுப்பிவிடலாம். தூங்குபவர்கள் போல் நடிப்பவர்களை எழுப்பவே முடியாது.
இப்போதும் அப்படித்தான். தமிழகத்தில் மக்கள் பிரச்னையாக எவ்வளவோ உள்ளது. அவற்றையெல்லாம் விட்டுவிட்டு, குஷ்பு ‘பெரியார்’ படத்தில் மணியம்மையாக நடிப்பது மட்டும்தான் பிரச்னை என்பதுபோல், பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார். அவர் போன்ற பா.ம.க. எம்.எல்.ஏ.க்களுக்கு வேறு வேலை ஏதும் இல்லை போலும்! அதுதான் என் பிரச்னையை எடுத்துப் பேசுகிறார்கள். அவருக்குத் தமிழ்நாட்டிலுள்ள மற்ற பிரச்னைகள் பற்றிய கவலையே இல்லை என்றுதான் கூறுவேன்.
வேறு என்ன சொல்வது? ‘பெரியார்’ படத்தைப் பொறுத்தவரைக்கும் நான் மணியம்மையாக நடிக்கத்தான் போகிறேன். என்னவிதமான எதிர்ப்பு வந்தாலும் சரி. பின்வாங்கவே மாட்டேன். கட்டாயம் நடிப்பேன்!’’ - நடிகை குஷ்பு.
அடடே கார்ட்டூன் : மதி, தினமணி
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Thursday, August 31, 2006
'பெரியார்' கருத்துக்கள்
Posted by IdlyVadai at 8/31/2006 01:38:00 PM 25 comments
Wednesday, August 30, 2006
பன்றிகள் ஜாக்கிரதை
திண்டுக்கல்லில் பஸ்நிலையம் அருகே மெயின் ரோட்டில் பெரியார் சிலை உள்ளது. விநாயகர் சதுர்த்தி அன்று சிலர் இந்த சிலைக்கு விபூதி பட்டை பூசியும், ஊதுபத்தி கொளுத்தியும் வழிபட்டனர்.
இதை அறிந்ததும் தி.க.வினர் மத்தியில் பரபரப்பு ஏற்படடது. பெரியார் சிலை அவமதிப்பை கண்டித்து திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அவமதிப்பில் ஈடுபட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இந்த சம்பவம் சட்டசபையிலும் எதிரொலித்தது. விவாதத்துக்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் கருணாநிதி பேசுகையில்,
திண்டுக்கல்லில் திராவிட தலைவர், பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சிலைக்கு மட்டுமல்லாமல் அவரது கொள்கை, லட்சியங்கள், குறிக்கோளுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் சிலர் செய்துள்ள சேட்டை குறித்து பத்திரிகைகளில் செய்தி மற்றும் படம் வந்துள்ளது.
அது விஷமிகளின் வேலை என்று காவல்துறை சொன்னதை சிவபுண்ணியம் ஏற்றுக் கொள்ளாமல் கண்டித்து இருக்கிறார். காவல்துறை இன்னும் வேகமாக, அக்கறையோடு, ஆர்வத்தோடு செயல்பட்டு அந்த காரியத்தை செய்தவர்கள் யார் என்றாலும், அவர்களைக் கைது செய்து குற்றவாளிக் கூண்டில் ஏற்ற கடமைப்பட்டு இருக்கிறது. அதற்கான உத்தரவு சம்பந்தப்பட்ட காவல்துறைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.
அங்கே இருக்கும் தலைமைக் காவலருக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும் அது குறித்து எச்சரிக்கையும் கூறப்பட்டு உள்ளது. அவர்கள் விஷமிகளாக இருக்க முடியாது, வேறு யாராகவோதான் இருக்க முடியும் என்று சிவபுண்ணியம் கூறினார். பெரியாருக்கு இதுபோன்ற இழிவை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றவர், நிச்சயமாக நன்றி உள்ள தமிழனாக இருக்க மாட்டான்.
அதுமட்டுமல்ல, அவன் பன்றி குணம் படைத்த மனிதனாகத்தான் இருக்க வேண்டும். பன்றிகள்தான் இந்த வேலையைச் செய்யும். அதைத்தான் அவன் செய்திருக்கிறான். பன்றிகளை இப்படி தெருவில் நடமாடவிடக் கூடாது. காவல்துறை கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும்.
சில கேள்விகள்:
1. ஒரு முதலமைச்சர் இப்படி பன்றிகள் என்று சொல்லலாமா ? அதுவும் சட்டசபையில். இதனால் ப்ளு கிராஸ் இவர் மேல் கேஸ் போடுமா ?
2. பகுத்தறிவு சிங்கங்களுக்கு அது ஒரு சிலை என்று தெரியாதா ?
3. இவர்கள் முன்பு சிலைகளுக்கு செருப்பு மாலை போடும் போது ஏன் இந்த கோபம் வரவில்லை ?
4. பன்றிகள் நடமாட்டத்தால் மூளைக்காய்ச்சல் வருகிறது என்பது உண்மையா ?
Posted by IdlyVadai at 8/30/2006 02:42:00 PM 74 comments
சபாஷ் குஷ்பு !
நடிகர் சத்யராஜ் நடிக்கும் "பெரியார்'' படத்தை டைரக்டர் ஞானராஜசேகரன் எடுத்து வருகிறார். இந்த படத்தயாரிப்புக்கு தமிழக அரசு ரூ.95 லட்சம் நிதி உதவி கொடுத்துள்ளது. பெரியாரின் சமூக சீர்திருத்த கருத்துக்களை மக்களிடம் மீண்டும் எடுத்துச் சொல்ல இது ஒரு வாய்ப்பாக கருதப்படுகிறது
இந்த படத்தில் பெரியார் வேடத்தில் நடிக்கும் சத்யராஜுக்கு ஜோடியாக நாகம்மை வேடத்தில் ஜோதிர்மயி நடித்துள்ளார். சத்யராஜ்-ஜோதிர்மயி சம்பந் தப்பட்ட காட்சிகள் பெரும்பாலும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன.
அடுத்து பெரியார் 2-வது திருமணம் செய்த மணியம்மை வாழ்க்கை தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது. மணியம்மை வேடத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என்று டைரக்டர் ஞானராஜசேகரன் தீவிரமாக ஆய்வு செய்தார். ஒவ்வொரு நடிகையின் முகத்தையும் கம்ப்ïட்டர் மூலம் தொகுத்து மணியம்மை முகத் துடன் ஒப்பிட்டுப் பார்த் தார்.
அப்போது மணியம்மை வேடத்துக்கு நடிகை குஷ்பு முகம் ஏற்றதாக இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து கடந்த வாரம் மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதையடுத்து மணியம்மை வேடத்தில் நடிக்க குஷ்பு சில ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில் மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சட்ட சபையில் பேசிய பா.ம.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் இது பற்றி கூறுகையில், "தமிழ் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கேவலப்படுத்தி பேசிய ஒரு நடிகை எப்படி மணியம்மை வேடத்தில் நடிக்கலாம்? இதை நாம் அனுமதிக்கலாமா?'' என்றார். ( தயவு செய்து யாரும் சிரிக்க கூடாது )
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் இது தொடர்பாக கூறுகையில், "மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள பெரியார் படத்தில் சிக்கலுக்குரிய ஒரு நடிகையை திணிப்பது ஏதோ உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. குஷ்பு நடிக்க மக்களிடம் எதிர்ப்பு கிளம்பினால் அது ஒரு களங்கமாக மாறிவிடும். எனவே இதை தவிர்ப்பது நல்லது'' என்றார். ( இதற்கும் யாரும் சிரிக்க கூடாது )
பா.ம.க.,விடுதலைச் சிறுத்தைகள் எதிர்ப்பு காரணமாக மணியம்மை வேடத்தில் குஷ்பு நடிப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபற்றி குஷ்பு ஆவேசமாக பேசியது:
கற்பு பற்றி முன்பு நான் சொன்ன விதத்தை -அர்த் தத்தை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. புரிந்து கொள்ள இயலாத அவசர புத்தி அவர்களுக்கு. எனவே தான் புரியாமல் என்னை எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள்.
இப்போதும் அப்படித் தான் தமிழ்நாட்டில் மக்கள் பிரச்சினை எவ்வளவோ உள்ளது. அதை எல்லாம் விட்டு, விட்டு குஷ்பு மணியம்மை வேடத்தில் நடிப்பது மட்டும் தான் பிரச்சினை என்பது போல பா.ம.க. எம்.எல்.ஏ. சட்டசபையில் பேசி இருக்கிறார்.
பா.ம.க. எம்.எல்.ஏ.க்கு வேறு வேலை எதுவும் இல்லையா? அதனால்தான் என்னைப்பற்றி பிரச்சினையை கிளப்புகிறார். அவருக்கு வேறு பிரச்சினைகள் பற்றி கவலை இல்லை என்றுதானே அர்த்தம்.
பெரியார் படத்தைப் பொறுத்தவரை நான் மணியம்மை வேடத்தில் நடிக்கத்தான் போகிறேன். அதற்கு தயாராகி வருகிறேன். எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும் சரி, நான் நடித்தே தீருவேன். ஒரு போது பின்வாங்க மாட்டேன்.
நான் தமிழ்நாட்டின் மருமகள். எனவே மணியம்மை வேடத்தில் நடிக்க எனக்கு முழு உரிமை இருக்கிறது. இந்த வேடத்தில் நடிப்பதன் மூலம் எனக்குத் தமிழ்நாட்டில் ஒரு அங்கீகாரம் கிடைத்து இருப்பதாக நான் நினைக்கி றேன்.
நடிப்புக்காக நான் பல பரிசுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் மணியம்மை வேடத்தில் நடிப்பதை பெரிய பரிசாக கருதி மகிழ்கிறேன்.
எந்த கேரக்டரில் நடிக்க வேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். யார் எதிர்த்தாலும் சரி மணி யம்மையாக நிச்சயம் நான் நடித்தே தீருவேன். இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
சர்ச்சைகளை கிளப்பி விடு வதன் மூலம் படைப்பாளி களை கட்டிப் போட முடியாது. என் தேர்வை பிரச்சினை ஆக்குவது தேவையற்றது. எந்த ஒரு கேரக்டரிலும் நடிப்பையும் திறமையையும் தான் பார்க்க வேண்டும்.
ஒரு பெரிய தலைவர் வாழ்க்கை வரலாறு படத்தில் நான் நடிப்பது இதுதான் முதல் தடவை. இதற்காக நான் நிறைய "ஹோம்-ஒர்க்'' செய்துள்ளேன். அக்டோபர் மாதம் தொடங்கும் சூட்டிங்கை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு எதிர்ப்பு வருவதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. அவர்களுக்கு பதில் சொல்லி இனி என் நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை.
அவர்கள் என்ன பேச ஆசைப்படுகிறார்களோ பேசி விட்டுப்போகட்டும் நான் மணியம்மை கேரக்டரில் என் முழு கவனத்தையும் செலுத்தப் போகிறேன்.
மணியம்மை வேடத்துக்கு நான் 100 சதவீதம் பொருத்த மாக இருப்பதாக சத்ய ராஜூம், டைரக்டர் ஞான ராஜசேகரனும் தெளிவுபட கூறி விட்டனர். எனவே எதிர்ப்பு வருகிறது என்பதற் காக நான் பயந்து ஓடி விட மாட்டேன். மேலும் நான் கோழை அல்ல. மூலையில் முடங்கி அழ மாட்டேன்.
ஒவ்வொரு சமயமும் என்னை பிரச்சினைக்குள் சிக்க வைக்கிறார்கள். அவை ஒவ்வொன்றையும் நான் துணிச்சலுடன் எதிர் கொள்கிறேன். இது என்னை முன்பை விட வலுவாக்கு கிறது.
கடந்த ஆண்டு (2005) செப்டம்பர் 24-ந் தேதி நான் சொன்ன கருத்துக்காக பிரச்சினை உருவானது. இப்போது ஓராண்டு ஆகி விட்டது. இந்த ஓராண்டு நிறைவை கொண்டாட திட்டமிட்டுள்ளேன்.
எனக்கு இப்போது ஏற்பட்டி ருக்கும் பிரச்சினையை நானே எதிர்கொள்வேன். டைரக்டர் அனுமதித்தால் மணி யம்மை கதாபாத்திரத்தில் சொந்த குரலில்பேசவும் விரும்புகிறேன். ( சபாஷ் )
Posted by IdlyVadai at 8/30/2006 12:27:00 PM 23 comments
Monday, August 21, 2006
போட்டுத்தாக்கு
சென்னையில் நடந்த ராஜிவ் பிறந்த நாள் விழாவில் காங்கிரசில் இருந்து "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நட்வர் சிங் திடீரென தோன்றியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. தலைவர்கள் யாரும் முகம் கொடுத்து பேசாததால் நட்வர் சிங் வருத்தத்துடன் வெளியேறினார். - முகத்தில் எண்ணை வழிந்தது என்று சொல்லுங்கள்.
"எதிர்க்கட்சி உறுப்பினர்களை, "உட்கார், நீ, வா, போ' என்றெல்லாம் அதட்டி சபை தலைவருக்கான அடிப்படை தகுதி கூட இல்லாமல் இருந்து வருகிறார்,' - ஜெயலலிதா - தைரியமான சபாநாயகர் தான்.
"என்னை ஒருமுறை (ஆட்சியில்) உட்கார வைத்து விட்டால், 15 கட்சிகள் கூட்டணி சேர்ந்தாலும் அசைக்க முடியாது,'' - விஜயகாந்த். - பார்த்து Fevicol விளம்பரத்துக்கு உபயோகபடுத்திவிடுவார்கள்.
திமுக அரசின் 100 நாள் சாதனைகளை பாராட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். - மந்திரி பதவி கொடுக்காததும் ஒரு சாதனைதான்.
ம.தி.மு.க.,வில் இருந்து 30 பேர் சேர்ந்தாலும், தங்கள் கட்சியில் மூன்று ஆயிரம் பேர் சேர்ந்ததாக சிலர் பொய் பிரசாரம் செய்கின்றனர். ம.தி.மு.க., எங்கே இருக்கிறது என சில பைத்தியக்காரர்கள் கேட்டனர். அவர்கள் குற்றாலத்திற்கு வந்து குளிக்கட்டும். இங்கு மூலிகை கலந்த தண்ணீர் விழுவதால் இதில் குளித்தாலாவது பைத்தியம் தெளிகிறதா என பார்ப்போம்.. - வைகோ - சமிபத்தில் ஜூவிக்கு அளித்த போட்டிக்கு முன் நீங்க குளிச்சீங்க என்று பேச்சிக்கொள்கிறார்கள்.
நான் தி.மு.க.,வில் இருந்தபோது ஜெயலலிதாவை, "அம்மா' என்று அழைப் பது பற்றி விமர்சனம் செய்தது ஞாபகம் இருக்கிறது. ஆனால், அவரோடு பழகிய பின், "அம்மா' என்ற வார்த் தைக்கு பூரண அர்த்தம் உடையவர் ஜெயலலிதா. அவருக்குத் தெரியாத விஷயங்களே கிடையாது. அவருக்குப் பிரதமர் ஆக முழுத் தகுதி இருக்கு. இதை நான் மிகையாகச் சொல்லவில்லை. அம்மா மாதிரி தொண்டர்களிடம் பாசம் கொண்ட தலைவராக இங்கே வேறு யாரையும் பார்க்க முடியாது... - சரத்குமார் - சாமியே சரணம் ஐயப்பா
இன்று உண்மை கலைஞனுக்கு மரியாதை குறைந்து வருகிறது. மகாநதி, அன்பே சிவம் போன்ற அருமையான படங்களை கொடுத்த கமலஹாசன் இன்று காமெடி படம் கொடுக்க காரணம் என்ன? மக்கள் தான். அரிய கலைஞன் ஒருவனை இந்த மக்கள் காமெடியனாக மாற்றி விட்டனர். அவரை இப்படி மாற்றி விட்டு, ரஜினியை எதிர்பார்த்து கிடக்கின்றனர். இப்படி இருந்தால் சினிமாவின் நிலை இன்னும் தாழ்ந்து தான் போகும்... - கங்கை அமரன் - நல்ல கண்டுபிடிப்பு.
சிறையில் இருக்கும் கைதிகளுக்கு சிக்கன்; வெளியில் இருக்கும் மக்களுக்கு, சிக்-குன்-குனியா; சிரிப்பதா அழுவதா தெரியவில்லை. - ம.தி.மு.க.,வின் கொள்கை பரப்புச் செயலர் நாஞ்சில் சம்பத். - காமெடி நல்லா வருது. அவ்வளவுதான்.
Posted by IdlyVadai at 8/21/2006 01:37:00 PM 1 comments
Wednesday, August 09, 2006
காங். கட்சியிலிருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட
காங்கிரஸ் கட்சியில் இருந்து நட்வர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கேரள முன்னாள் முதல்வர் அந்தோணி தலைமையில் நடந்த ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. விளக்கம் கேட்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது. பதக் கமிட்டி அறிக்கை வெளியானது குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் நட்வர் சிங் பிரதமர் மன்மோகன் சிங் மீது உரிமை மீறல் பிரச்னை கொண்டு வந்தார். இதனையடுத்து காங்கிரஸ் கட்சியில் இருந்து நட்வர் சிங் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் . மேலும் ஈராக் எண்ணெய்க்கு உணவு திட்டத்தில் ஒப்பந்த்ததை பெற ஈராக் அமைச்சருக்கு கடிதம் எழுதியதாக நட்வர் சிங் கூறியது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
Posted by IdlyVadai at 8/09/2006 12:29:00 AM 1 comments
Monday, August 07, 2006
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவு - கருணாநிதி எச்சரிக்கை
விடுதலைப்புலிகளுக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை - கருணாநிதி எச்சரிக்கை
இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவளிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி சட்டப்பேரவையில் திங்கட்கிழமை எச்சரிக்கை விடுத்தார்.
சமீபத்தில் திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணியினர் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக ஊர்வலம் நடத்தியது குறித்து பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, மத்திய அரசு விடுதலைப்புலிகளுக்கு தடை விதித்துள்ளது விவாதத்துக்குரியதாக இருந்தாலும், தடை இருக்கும்வரையில் அதை மீறக்கூடாது. அவ்வாறு மீறி இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கும் எதிராகச் செயல்பட நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அப்பாவித் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசு கண்டிக்கும் வகையில் திருப்பத்தூரில் பேரணி நடத்த புரட்சிகர இளைஞர் முன்னணியினர் அனுமதி கேட்டிருந்தனர். அப்பேரணியில் 150 பெண்கள் உட்பட 400 பேர் கலந்துகொண்டனர்.
பதற்றமான சூழ்நிலை ஏற்படுமளவுக்கு பேரணியில் எதுவும் நடைபெறவில்லை என மாவட்ட நிர்வாகம் அரசுக்கு அளித்த அறிக்கையில் கூறியுள்ளது என முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
செய்தி உதவி: தினமணி
Posted by IdlyVadai at 8/07/2006 04:03:00 PM 13 comments
நட்வர்சிங் டிராமா ( பாகம் 2 )
ஈராக்கில் சதாம்உசேன் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட உணவுக்கு எண்ணை வழங்கும் திட்டத்தில் முன்னாள் மத்திய மந்திரி நட்வர்சிங் பங்கு பெற்று ஊழல் செய்ததாக புகார் கூறப்பட்டது. ( நட்வர் சிங் டிராமா )
இது தொடர்பாக நீதிபதி பதக் தலைமையிலான விசாரணை கமிஷன் விசாரணை நடத்தி பிரதமரிடம் அறிக்கை தாக்கல் செய்தது. பிரதமர் அதை வெளியிடுவதற்கு முன்பே அறிக்கையில் உள்ள தகவல்கள் வெளியே கசிந்துவிட்டன. அதில் நட்வர்சிங் குற்றவாளி என்று கூறப்பட்டு இருந்தது.
பாராளுமன்றத்துக்கு தெரி விக்காத நிலையில் ரகசியத்தை கசிய விட்டதற்காக பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வர நட்வர்சிங்கும், பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகளும் முடிவு செய்தனர்.
அதன்படி இன்று பாராளு மன்றத்தில் பாரதீய ஜனதா கூட்டணி கட்சிகள் சார்பில் பிரதமர் மன்மோகன்சிங் உரிமை மீறல் நோட்டீஸ் தாக்கல் செய்யப்பட்டது.
பிரதமர் மீது உரிமை மீறல் பிரச்சினை எழுப்ப நட்வர்சிங் நோட்டீஸ் கொடுத்திருப்பது ஒழுங்கீன நடவடிக்கை என்று நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபோல காங்கிரஸ் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நட்வர்சிங் சமாஜ்வாடி எம்.பி. அமர்சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த விபரம் குறித்தும் காங்கிரஸ் மேலிடத்துக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனால் நட்வர்சிங் காங்கிரசில் இருந்து நீக்கப்படலாம் என்று அதிகாரப்பூர்வமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று பாராளுமன்றம் கூடியபோது ஏற்பட்ட அமளி துமளி காரணமாக சபையின் நடவடிக்கைகள் இன்று பிற்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டன.
Updates follow...
Posted by IdlyVadai at 8/07/2006 12:06:00 PM 0 comments
Friday, August 04, 2006
மினி வலைப்பதிவாளர் சந்திப்பு - followup
டோண்டு பதிவில் 'என்றென்றும் அன்புடன் பாலா' பின்னூட்டம் ....
"முக்கியாமான விஷயம், "இட்லி வடை யார்? அவர் எங்கிருந்து எழுதுகிறார்?" என்று ஒரு சின்ன விவாதம் நடந்தது ! சமீப காலமாக இலக்கியவாதியாக மலர்ந்திருக்கும் பினாத்தலார், ஐகாரஸ் தான் இட்லிவடை என்ற தன் சந்தேகம் தற்போது தீர்ந்து விட்டது என்று கூறினார் :) இட்லி வடையின் நகைச்சுவை/அரசியல் பதிவுகளுக்கு நிறைய வாசகர்கள் இருப்பது அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டது :) இட்லிவடை 'சென்னை ஆசாமி தான்' என்று பெரும்பாலார் கருதினர் (இட்லிவடை தான் சொல்ல வேண்டும் ;-))"
ஆமாம் நான் சென்னையில் தான் இருக்கிறேன். ஆனால் அமெரிக்க நேரத்தில் வேலை செய்கிறேன் :-). In fact, நீங்க மழைக்கு உள்ளே ஓடிவந்த வந்து உட்கார்ந்த போது, நான் பக்கத்து சீட்டில் காப்பி குடித்துக்கொண்டிருந்தேன். ஜிப்பா போட்ட ஒருவர் ( அவர் லிப்ஸ்டிக்கும் போட்டுக்கொண்டிருந்தார் என்பது வேறு விஷயம் ) என்ன பார்த்து சிரிக்க கூட சிரித்தார். என்ன நான் சொல்லுவது சரியா ?
Posted by IdlyVadai at 8/04/2006 03:01:00 PM 6 comments
Thursday, August 03, 2006
நண்பர்கள் தினம்
"இறைவா நண்பர்களிடமிருந்து என்னைக் காப்பாற்று. பகைவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்" - தத்துவ ஞாநி ஜக்குபாய்
Posted by IdlyVadai at 8/03/2006 01:08:00 PM 12 comments
ஜூவி பற்றி நான் சென்னது உண்மையல்ல - வைகோ
ஜூ.வி.கைமாறியதாக நான் சொன்னது உண்மையல்ல! உணர்ந்து விட்டேன்... வருந்துகிறேன்!"
தமிழக சட்ட மன்றத் தேர்தலின்போது பத்திரிகைகளிலும், அரசியல் மேடைகளிலும் அதிகம் பேசப்பட்ட பெயர் வைகோ..! இவரைச் சுற்றி கிளம்பியவை ஏகப்பட்ட சர்ச்சைகள்... இவர் கிளப்பியதும் ஏகப்பட்ட சர்ச்சைகள்..
தேர்தல் அலையெல்லாம் ஓய்ந்து, எதிர்க்கட்சி அணியில் இருந்தபடி தனது அடுத்தகட்ட அரசியல் நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாயிருக்கும் வைகோ, இதோ ஜூ.வி-யைச் சந்திக்கிறார்-
ஜூ.வி-யை மையப்படுத்தி, தேர்தலின்போது அவர் பேசிய பேச்சுதானே நம் முதல் கேள்வியாக இருக்க முடியும்!
"சொல்லுங்க வைகோ சார்... ‘ஜூனியர் விகடன், மாறன் குடும்பத்துக்குக் கைமாறி விட்டது’ என்றும் ‘விலை போய்விட்டது’ என்றும் தேர்தலுக்கு சில நாட்கள் முன்னால் நீங்க சொன்னீங்க... உங்க மேலே மிகுந்த மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கவங்க- குறிப்பா எங்க வாசகர்கள், ‘வைகோ வாயிலிருந்தா இப்படியொரு பொய்!’னு எந்தளவுக்கு அதிர்ச்சியும் வருத்தமும் அடைஞ்சாங்க, தெரியுமா?"
"அப்படி பேசினதுக்கு நான் இப்ப ரொம்ப வருத்தப் படுறேன். அதுக்கு முன்னாடி ஒரு விஷயம்... இப்படிப் பேசணும்னு நான் திட்டமிட்டு பேசலை. ‘பொய்’னு சொல்றீங்களே... அந்தப் பொய்யிலேயே இரண்டு வகை இருக்கு. ஒண்ணு, யாரையாவது ஒழிச்சுக் கட்டணும்னு முடிவு பண்ணி, தீய நோக்கத்தோட சொல்லப்படுவது... சொல்றது அபாண்டமானதுனு தெரிஞ்சே சொல்றது. இன்னொரு வகை, கேள்விப்படுகிற ஒரு விஷயம் உண்மையாக இருக்குமோ என்று நம்பி, அதை வெளியில சொல்றது. ரெண்டுக்கும் வித்தியாசம் இருக்கு.
ஜூ.வி. பற்றி அப்போது நான் பேசியது இரண்டாவது வகை! அப்படிப் பேசிய ஒருசில நாட்களிலேயே, ஜூ.வி-யோ, விகடன் நிறுவனமோ யார் கைக்கும் மாறவில்லை என்பதும், அப்படி கைமாறிவிட்டதாக நான் நம்ப வைக்கப் பட்டேன் என்பதும் தெரிய வந்தது. தவறான ஒரு விஷயத்தை, உண்மைனு நம்பி சொன்னதற்காக நான் இப்பவும் ரொம்ப ஃபீல் பண்றேன்!"
"சரி, அந்த சூழ்நிலைதான் என்ன?"
"அந்த சமயத்தில், அடுத்தடுத்து என்னைக் குறிவச்சு, ‘டேமேஜ்’ செய்கிற மாதிரியான செய்திகள் ஜூ.வி-யில் தொடர்ந்து வந்தது. ‘ஏதோ ஒரு நோக்கத்தோடுதான் இப்படி நம்மைக் குறிவைக்கிறார்களோ’னு நினைக்கிற நிலைக்கு நான் தள்ளப்பட்டேன்.
என் தாயார் பாவம்... அவங்க என்ன செய்வாங்க? அவங்க பேட்டியை எடுத்து நீங்க வெளியிட்ட பிறகு, அவங்க மனசு ரொம்ப பாதிச்சுப் போச்சு. அவங்களுக்கு ஏற்கெனவே பி.பி., ஷுகர் இருக்கு. உண்மையில சொல்றேன்... எங்க ஊர்க்காரங்க எல்லாம் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னு விருப்பப்பட்டதைப் பார்த்து, எங்க அம்மாவும் நான் அ.தி.மு.க. கூட்டணிக்குப் போகணும்னுதான் நினைச்சாங்க... அதைத்தான் என்னிடம் சொன்னாங்க! ‘நம்ம மகன் எவ்வளவு காலம் தி.மு.க-வுக்காகப் பாடுபட்டான்..! ஆனா, அவங்க எப்படியெல்லாம் இவனை நசுக்கறாங்க’னு வருத்தம் அம்மாவுக்கு இருந்தது. அதேசமயம், ‘தி.மு.க அணியை விட்டு மாறிப்போனால் மதிப்புக் குறைவு வராதா?’னு என் கட்சிக்காரங்களோட நான் காரில் விவாதிச்சுக்கிட்டு வந்ததை, கூடவே வந்த அவங்க அமைதியா காதுகொடுத்துக் கேட்டிருக்காங்க. அதை வச்சு, ‘ஆயிரம் பிரச்னைகள் இருந்தாலும், நம்ம பையன் இப்போதைக்கு தி.மு.க. அணியில இருக்கறதுதான் சரினு நினைக்கிறான் போலிருக்கு’னு அவங்க நினைச்சிட்டாங்க. உங்க நிருபர் வந்து பார்த்தபோது, அந்த அடிப்படையில்தான் சில விஷயங் களைச் சொல்லியிருக்காங்க.
கட்சியில் தொண்ணூத்து ஒன்பது சதவிகிதம் பேர் அ.தி.மு.க. அணிக்குப் போவதைத்தான் விரும்பறாங்கனு தெரிஞ்ச பிறகுதான் அந்த முடிவை எடுத்தேன். ஆனா, அதன்மூலம் வந்த விமரிசனங்களும், காயங்களும் எனக்கு மட்டும்தான்! கூட்டணித் தொடர்பாக மனப் போராட்டமும் மன அழுத்தமும் இருந்த சமயத்தில்தான், ஜூ.வி-யில் என் தாயாரோட பேட்டி வந்து, ரொம்ப பாதிக்கப்பட்டேன். அந்த வருத்தம், கோபம் இருக்கும்போது, நிதானமா யோசிச்சுச் செயல்படக் கூடிய நிலை இல்லைதானே?
ஆனா, 'தாயின் சொல்லை மீறி வைகோ ஒரு முடிவு எடுத்தார்' அப்படிங்கிற மாதிரியான தவறான பார்வை உங்க பேட்டியால ஏற்பட்டுப் போச்சு. மேலும், நீங்க வெளியிட்ட அந்தப் பேட்டியை தி.மு.க. முகாமில் இருந்தவங்க தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கப் பார்த்தாங்க. இதனாலெல்லாம் எங்கம்மா ரொம்ப வருத்தத்துல ஆழ்ந்துட்டாங்க.
எங்க அம்மா விஷயத்தில் ஜூ.வி. மீது ரொம்ப மனக்கோபத்திலும் வருத்ததிலும் இருந்தேன் என்பது உண்மை. அந்த நேரத்துல, ‘இந்த மாதிரி வாங்கிட்டாங்க’னு எங்ககிட்டே சிலர் சொன்னவுடனே, அதை அப்படியே நம்பி சொல்லிட்டேன். அப்படி நான் சொல்லியிருக்கக் கூடாது. அப்படி நான் பேசியிருக்கக் கூடாது! அப்பவே அது தவறுனு தெரிஞ்சுகிட்டேன்.
அப்படி நான் பேசிய அந்த நாளில் சிவகாசியில் இருந்தேன். அன்னிக்கு மதியம், ‘அண்ணே... தெரியுமாண்ணே... ஜூ.வி. கைமாறிடுச்சாம்... சன் டி.வி-காரங்க வாங்கிட்டாங்களாம். தி.மு.க. ஏராளமான இடங்களில் ஜெயிக்கப் போகுதுனு கணிப்பு வருதாம்’னு என்கிட்டே வந்து சிலர் சொன்னாங்க. ‘ஜூ.வி. கருத்துக்கணிப்பின் அப்படி ஒரு முடிவால், தேர்தல் முடிவில் பெரிய பாதிப்பு இருக்குமே... நாம இதை ‘டிஃப்யூஸ்’ பண்ணணுமே’னு யோசிச்சுக்கிட்டே இருந்தேன். அன்னிக்கு மதியமே என்னை ரொம்ப பாதிக்கிற மாதிரி இன்னொரு விஷயமும் கேள்விப்பட்டேன். ‘வைகோவை முடிச்சிருங்க... தீத்துருங்க’னு செல்போன் கிராஸ் டாக் பற்றிய ஒரு செய்தி வந்து சேர்ந்தது. இந்தத் தகவலால் நான் ரொம்பவே ‘டிஸ்டர்ப்’ ஆகிட்டேன். இதை வெளியில் சொல்றதா, வேண்டாமானு மனப் போராாட்டத்தில் இருந்துட்டு... கடைசியா அன்னிக்கு ராத்திரி நடந்த பொதுக்கூட்டத்துல ‘என் உயிருக்கு ஆபத்து’ங்கிற செய்தியைச் சொல்லிட்டு, ஜூ.வி. பத்தியும் பேசினேன். இதான் பேக்கிரவுண்ட்.
ஆனா, நான் பேசினது சரியுமில்ல... நியாயமுமில்லை. ‘தேர்தல்ல தோத்தா தோத்துட்டுப் போறோம். ஒரு நிறுவனத்தைக் களங்கப்படுத்தற மாதிரி சொல்லியிருக்கக் கூடாது’ என்கிற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு."
சிறிது நேர அமைதிக்குப் பிறகு, அரசியல் கேள்விகளை எடுத்து வைத்தோம். தனது மேடைத் தமிழில் பதில்களை முழங்கத் துவங்கினார் வைகோ.
"மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில், இப்போதும் ம.தி.மு.க. பங்கு வகிக்கிறதா?"
"நிச்சயமாக! ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இந்த நிமிடம் வரை அங்கத்தினர்களாக இருக்கிறோம். ஆனால், தி.மு.க-தான் தனது செல்வாக்கை வைத்து, எப்படியாவது எங்கள் இயக்கத்தைக் கூட்டணியிலிருந்து வெளியேற்றிவிட வேண்டும் என்று பாடாய்ப் படுகிறது. வெளியில் தெரியாத வண்ணம் மத்திய அரசுக்குப் பலவிதமான மிரட்டல்களை விட்டுக் கொண்டுதான் இருக்கிறது, தி.மு.க.! சட்டமன்ற தேர்தலுக்குப் பின்னர், எதற்கு பிரதமருக்கும் சோனியா காந்திக்கும் வீண் சங்கடம் என நினைத்து, ‘கூட்டணியிலிருந்து ம.தி.மு.க. வெளியேறுகிறது’ என்று கடிதத்தையும் தயார் செய்து விட்டேன். அதை அனுப்புவதற்கு முன் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தொலைபேசியில் விஷயத்தைச் சொன்னேன்.
அதற்கு, ‘மிஸ்டர் வைகோ! நீங்கள் தயாரித்து வைத்திருக்கும் கடிதத்துக்கு எந்தத் தேவையும் இல்லை. நீங்கள் கூட்டணியை விட்டு வெளியில் போகக்கூடாது’ என்றார் பிரதமர். அவர் பிரதமர் என்பதையெல்லாம் தாண்டி எனது மதிப்புக்குரிய தலைவர். அவரது உணர்வுகளுக்கு எப்போதுமே மதிப்பளிப்பவன். அதனாலேயே அந்த சமயத்தில் அமைதியாகி விட்டேன்.
தேர்தல் முடிந்தது... தனி மெஜாரிட்டி இல்லாத ஆட்சியை இங்கே கலைஞர் அமைத்தார். அதன்பிறகு, டெல்லியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ‘ம.தி.மு.க-வை இந்தக் கூட்டத்துக்கு அழைத்தால், நாங்கள் அதைப் புறக்கணிப்போம்’ என்று பிரதமரை ‘பிளாக்மெயில்’ செய்திருக்கிறார்கள் தி.மு.க-வினர்.
இது தெரிந்ததுமே ‘இதற்கு மேலும் நாங்கள் கூட்டணியில் நீடிக்கத்தான் வேண்டுமா?’ என்று பிரதமரிடம் கேட்டேன். ‘காலம்தான் இதையெல்லாம் சரிசெய்யும். நீங்கள் எனக்காக இந்த விஷயத்தில் பொறுத்துக்கொள்ள வேண்டும்’ என்றார் பிரதமர். அதனால் அப்போதும் நான் பொறுமை காத்தேன்.
பிறகு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் எம்.பி-க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ளும்படி எங்களுக்குத் தொடர்ந்து அழைப்பு வருகிறது. எங்கள் கட்சி கலந்துகொண்டபடிதான் இருக்கிறது."
"சமீபத்தில் பிரதமரைச் சந்தித்து ஈழப் பிரச்னை குறித்து விரிவாகப் பேசியதாக செய்திகள் வந்ததே..?"
"நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரதமரை நேரில் சந்தித்தேன். உணர்ச்சிக் கொந்தளிப்போடு வெகுநேரம் பேசினேன். ‘சிங்கள அரசின் சார்பாக இந்தியாவுக்கு வரும் பிரதிநிதிகளை நீங்கள் சந்திக்கிறீர்கள். அதேபோல், ஈழத்தின் தமிழ் எம்.பி-க்களையும் சந்திக்க வேண்டும். அவர்களை புலிகளின் ஆதரவாளர்கள் என்ற கண்கொண்டு பார்த்து, ஒரேயடியாக ஒதுக்குவது, இலங்கையில் அமைதி திரும்புவதற்குத் தடையாக இருக்கும். அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள். அவர்களோடு நீங்கள் ஒருமுறை பேசிவிட்டால் தமிழர்களின் உண்மை நிலவரம் உங்களுக்குப் புரிந்து விடும்’ என்று பிரதமரிடம் சொன்னேன். ‘பாதுகாப்பு அமைச்சகத்திடம் விவாதித்துவிட்டு ஈழத்தமிழ் பிரதிநிதிகளைக் கட்டாயம் சந்திக்கிறேன்’ என்றார் பிரதமர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ‘இனி இலங்கை அரசுக்கு எந்தவித ஆயுத சப்ளையையும் இந்திய அரசு செய்யாது’ என்று ஒரு கொள்கைப்பிரகடனம் செய்யப் பட்டது. ஆனால், அண்மையில் இலங்கைக்கு இந்திய அரசு ராடார் போன்ற சில சாதனங்களை அளித்து உதவி இருக்கிறது. இவற்றின் உதவியுடன் அப்பாவித் தமிழர்களை அல்லவா இலங்கை அரசு கொன்று குவிக்கிறது என்று பிரதமரிடம் முறையிட்டேன். உடனே, ‘நாம் கொடுத்த ஆயுதங்கள் தமிழர்களின் உயிர்போக்க பயன் படுமானால், அதை இந்தியா அனுமதிக்காது. இதற்கு ஒரு தீர்வை அல்லது உடனடி உத்தரவை இலங்கை அரசுக்கு இந்தியா பிறப்பிக்கும். இனி ஈழத் தமிழர் பிரச்னையில் இந்தியா கூடுதல் கவனம் காட்டும்’ என்று சொன்னார் பிரதமர்."
"ம.தி.மு.க-விலிருந்து தொடர்ந்து பலர் தி.மு.க-வுக்கு மாறி வருவதாக செய்திகளில் பார்க்கிறோமே..?"
"இது தி.மு.க-வினர் ஏற்படுத்துகிற மாயை! அண்மையில் அண்ணன் கலைஞர் அவர்கள் டெல்லிக்குப் போயிருந்தபோது, பத்திரிகையாளர்களின் ஒரு கேள்விக்கு, ‘ம.தி.மு.க-வா... அப்படி ஒரு கட்சி இருக்கிறதா?’ என்றார் எகத்தாளமாக! அவரேதான், இங்கே வந்து ‘ஏராளமான ம.தி.மு.க-வினர் தி.மு.க-வில் சேர்ந்தார்கள்’ என்று கும்பலோடு நின்று போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறார். எங்கள் கட்சியிலேயே இல்லாதவர்கள், எப்போதோ இருந்து செயலற்று விலகியவர்கள் ஆகியோரையெல்லாம் ம.தி.மு.க. என்று காட்டி, கூடவே தி.மு.க-வினரையும் கலந்து நிறுத்தி, போஸ் கொடுக்கிறார் அண்ணன் கலைஞர். தான் வலுவோடு இருக்கும்போதே எப்படியாவது ம.தி.மு.க-வை அழித்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு முயல்கிறார்."
"ஒருவேளை, நீங்கள் தி.மு.க. கூட்டணியிலேயே நீடித்திருந்தால், தி.மு.க. அறுதிப் பெரும்பான்மையோடு சட்டசபைக்குள் நுழைந்திருக்கும் என்று நினைக் கிறீர்களா?"
(கடகடவென ஒரு சிரிப்பு) "உண்மையில், அ.தி.மு.க. அணி பெருவாரியான இடங்களில் வென்று தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று நான் உறுதியாக நம்பினேன். இது நான் அந்த அணியில் இடம்பெற்றதால் சொல்லும் கணிப்பு அல்ல! தி.மு.க-வினர் போட்டியிட்ட தொகுதிகளில் கோடிக்கணக்கில் பணத்தை வாரி இறைத்தார்கள். இதுதான் கடைசிக் கட்டத்தில் நூறு, ஐந்நூறு ஓட்டுகளில் நிலவரத்தை மாற்றியிருக்கிறது.
பணம் மட்டும் விளையாடியிருக்காவிட்டால், முடிவுகள் இப்படி இருந்திருக்காது. எங்கள் கட்சியில் இருந்து மட்டுமே பதினைந்து எம்.எல்.ஏ-க்கள் வரை கிடைத்திருப்பார்கள். உள்ளாட்சித் தேர்தல் வரும்போது பாருங்கள். எங்கள் கூட்டணியின் பலம் என்னவென்பது பளிச்சென்று தெரியும்."
"சிறுதாவூர் நில விஷயத்தில், ஜெயலலிதாவின் பெயர் அடிபடுவது குறித்து?"
"இது கலைஞருக்கே உரிய பழிவாங்கல் நடவடிக்கை. சிறுதாவூரில் அறிஞர் அண்ணா காலத்தில் நிலம் அளிக்கப்பட்டது தலித்களுக்கு மட்டுமே அல்ல. அதில் ஒரு முஸ்லிம் மற்றும் வேற்று சாதியினரும் இருந்திருக்கிறார்கள். அந்தக் காலத்தில் யாராலுமே கவனிக்கப்படாத, குறிப்பிடத்தக்க அளவு மதிப்பு இல்லாத பகுதி அது. கிடைத்த சொற்ப பணத்துக்கு அந்த நிலத்தை அவர்கள் விற்றிருக்கிறார்கள். சாமானியர்களில் தொடங்கி, பெரிய வி.ஐ.பி-க்கள் வரை அவற்றை வாங்கி இருக்கிறார்கள்.
அதிலும்கூட, ‘தலித்களின் நிலம்’ என்று சர்ச்சை கிளப்பப்படும் இடத்தில் அந்த பங்களா இல்லை. அதையும் தாண்டி, ஜெயலலிதா அந்த பங்களாவின் உரிமையாளரும் அல்ல! அதனால்தான், ‘மடியில் கனமில்லை. எனக்குப் பயமும் இல்லை’ என்று சொல்லி, விசாரணை கமிஷனை வரவேற்று அறிக்கை கொடுத்திருக்கிறார்.
இவ்வளவு தூரம் பேசுகின்ற அண்ணன் கலைஞர், ‘அறிவாலயமும் முரசொலி அலுவலகமும் அமைந்திருப்பது பஞ்சமி நிலத்தில்தான்’ என்ற சர்ச்சைக்கு ஏன் ஒரு விசாரணை கமிஷன் வைக்கக் கூடாது?"
"நீங்களும் ஒரு எம்.எல்.ஏ-வாக சட்டசபைக்குள் போயிருந்தால், அரசியல் களம் இன்னும் சூடாகியிருக்குமே?"
"இதை சகோதரி ஜெயலலிதா அவர்களும் என்னிடத்தில் கேட்டார். ‘எப்படியும் நீங்கள்தான் முதலமைச்சராக வரப் போகிறீர்கள் என்று உறுதியாக நினைத்திருந்தேன், மேடம். நீங்கள் முதல்வர் என்றால், அங்கே கேள்வி கேட்க எனக்கு என்ன தேவை இருக்கப் போகிறது. அதனால்தான் நான் போட்டியிடவில்லை’ என்று சொன்னேன். நான் போகாவிட்டால் என்ன... என் கட்சியின் ஆறு எம்.எல்.ஏ-க்களும் தி.மு.க. அரசின் ஒவ்வொரு தவறையும் மக்களுக்கு வெளிச்சமிட்டுக்கொண்டே இருப்பார்கள்!"
நன்றி: ஜூனியர் விகடன்
படம் : தேர்தல் போது வைகோ ஆடிய டான்ஸ் :-)
Posted by IdlyVadai at 8/03/2006 10:20:00 AM 26 comments
Wednesday, August 02, 2006
கலைஞர் பேட்டி - விஜயகாந்துக்கு சவால்
கேள்வி:- "மைனாரிட்டி தி.மு.க. அரசு'' என்று அ.தி.மு.க. தலைவி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கிறாரே?
பதில்:- அதற்குத்தான் நிதி அமைச்சர் பேராசிரியர் சட்ட மன்றத்திலேயே சுடச்சுடப் பதில் கொடுத்து தெம்பும் திராணியும் இருந்தால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாருங்கள் பார்க்க லாம் என்று அறை கூவல் விடுத்திருக்கிறாரே.
கே:- தி.மு.க. தலைவர்களில் சில பேர் இந்தி படிக்காததால்தான், டெல்லியில் மந்திரி பதவி கிடைக்கும் வாய்ப்பை இழந்ததாகப் புலம்புகிறார்கள் என்று விஜயகாந்த் பேசியிருக்கிறாரே?
ப:- அப்படியானால் இப் போது மத்திய அமைச்சரவையில் இருக்கும் தமிழ்நாட்டுக்காரர்கள் அனைவரும் இந்தி படித்தவர்கள் என்று அவர் நிரூபிக்கத் தயாராக இருக்கிறாரா? வளர வேண்டிய ஒருவர் "புலம்புகிறார்கள்'' போன்ற வசைமொழிகளை தவிர்ப்பது நல்லது.
கே:- ஏழை விவசாயிக்கு தி.மு.க. ஆட்சி 2 ஏக்கர் தரிசு நிலம் தருவதாக அறிவித்திருப் பது உள்ளாட்சி தேர்தலுக் காகத்தான் என்று விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?
ப:- வழங்காமலிருந்தால் வாக்குறுதி என்ன ஆயிற்று என்று கேட்பார்கள். வழங்கத் தொடங்குகிறோம் என்றதும் "எல்லாம் தேர்தலுக்காக'' என்கிறார்கள். பரவாயில்லை. அரசியல் அரிச்சுவடியில் "தேர்வு'' ஆகி விட்டார்கள்.
கே:- தமிழக அரசால் புதிதாக வழங்கப்படவுள்ள வண்ண தொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்கிறாரே ஜெயலலிதா?
ப:- வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவுடன், அது போலியான திட்டம் என்றும், நிறைவேற்ற இயலா தென்றும், தி.மு.க. மக்களை ஏமாற்றுகின்றது என்றும் ஊருக்கு ஊர் பிரசாரம் செய்தார். தேர்தல் முடிந்த பிறகு நாம் அந்த திட்டத்தை அமுல்படுத்த முன் வராமல் இருந்திருந்தால் பார்த்தீர்களாப தி.மு.க. ஏமாற்றி விட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள், நிறைவேற்ற முன்வரவில்லை என்று கூறியிருப்பார். ஆனால் தி.மு.க. அரசு அதற்கான திட்டங்களை இரண்டரை மாதங்களில் தீட்டி நிறைவேற்ற முன்வந்ததும் வேறு என்னதான் சொல்ல முடியும்?
தொலைக்காட்சி பெட்டிகள் தரமாக இருக்காது என்று இப்போதே அது எப்படியிருக்கும் என்று தெரியாத நிலையில் அறிக்கை விட்டுள்ளார். சர்வதேச ஒப்பந்தப் புள்ளி கோரப்படும் என்று சொல்லியிருப்பதை வைத்துக் கொண்டு எதற்காக சர்வதேச ஒப்பந்தப்புள்ளி என்கிறார். சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோராமல் இருந்திருந்தால் ஏன் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரவில்லை என்பார்.
கே:- ஏன் 21 அங்குலம் கலர் டி.வி. வழங்கவில்லை, 14 அங்குல டி.வி.தானே வழங்குகிறீர்கள் என்று புகார் கூறுகிறாரே ஜெயலலிதா?
ப:- 21 அங்குல டி.வி. வழங்குவதாக எங்கே எப்போது நாம் சொன்னோம்? வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் வழங்குவதாகத்தான் சொன்னோம். தற்போது வழங்கப்போகிறோம். 21 அங்குல டி.வி. வழங்கினால் ஏன் 42 அங்குல டி.வி. வழங்கவில்லை என்பார். வழங்கப்படும் தொலைக்காட்சி பெட்டிகளுக்கு இரண்டாண்டு உத்தரவாதம் உண்டு. ஏழை நடுத்தர வகுப்பு மக்களுக்குத்தான் இந்த தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படவுள்ளன. குடிசை வீட்டில் வாழ்பவர்கள் 14 அங்குல தொலைக்காட்சி பெட்டிகளைத்தான் வீட்டிலே வைத்து பார்க்க முடியும். ஜெயலலிதா போல மாளிகையிலே இருப்போருக்குத்தான் 21 அங்குல டி.வி. வேண்டும்.
கே:- திருமண நிதி உதவித்திட்டத்திற்காக 50 கோடி ரூபாய்தான் ஒதுக்கப் பட்டுள்ளது என்று அறிக்கை விடுத்திருக்கிறாரே ஜெயலலிதா?
ப:- ஏழை பெண்கள் திருமண நிதி உதவித்திட்டத்திற்கே மூடு விழா நடத்தியவர். எந்த முகத்தை வைத்துக் கொண்டு அத்திட்டத்திற்கு நிதி உதவி போதுமானதாக இல்லை என்கிறாரோ?
கே:- பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை ஜெயலலிதா ஆட்சியை விட தி.மு.க. அரசு குறைத்து விட்டதாக ஜெயலலிதா அறிக்கை விடுத்துள்ளாரே?
ப:- பேரவையிலே பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தை இந்த அரசு கைவிட்டு விட்டதாக ஜெயலலிதா பேசினார். நிதியமைச்சர் பேராசிரியர் குறுக்கிட்டு அந்த திட்டம் கைவிடப்படவில்லை, தொடருகிறது என்று பதில் அளித்தார். தற்போது அந்த திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்துவிட்டதாக அறிக்கை விடுத்துள்ளார். இதுவும் உண்மை அல்ல.
Posted by IdlyVadai at 8/02/2006 06:40:00 PM 15 comments
Tuesday, August 01, 2006
கதாநாயகனே வில்லனாக மாறும் காலம் வரும்-வைகோ
தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு என்று எதிர்க்கட்சி தலை வர் ஜெயலலிதா பேசியதும் துள்ளி குதிக்கிறார்கள். தி.மு.க. அரசு கூட்டணி மந்திரி சபை அமைக்கவில்லையாப அப் படியானால் வெறும் 93 இடங்களை பெற்று ஆட்சி யில் இருக்கும் தி.மு.க. அரசு மைனாரிட்டி அரசு தானே. இந்த உண்மைகளை சொன்னால் ஏன் கோபம் வருகி றது?
118 தொகுதிகளில் நீங்கள் வெற்றி பெற்று இருந்தால் மைனாரிட்டி அரசு என்று நாங்கள் சொல்ல போவதில்லை. 93 எம்.எல்.ஏ.க்களுடன் தள்ளாடி கொண்டிருக்கும் தி.மு.க. சர்க்கார் 5 ஆண்டுகளுக்கு நீடிக்காது. எப்போது கவிழும் என்று நான் ஆரூடம் கணிக்கபோவதில்லை. தி.மு.க. தேர்தல் அறிக் கையை கதாநாயகன் என்று வர்ணித்தார்கள். கதாநாயகனே வில்லனாக மாறப் போகும் காலம் விரைவில் வரும்.
காங்கிரஸ் இல்லா விட்டால் முதுகெலும்பு நொறுங்கி இருக்கும். காங்கிரசை வைத்து தான் உங்களுக்கு வாழ்வு. 15 எம்.பி.க்களை வைத்து கொண்டு நீங்கள் மட்டும் 7 மந்திரி பதவி வாங்கினீர்கள். தமிழ்நாட்டு மந்திரி சபையில் காங்கிரசை சேர்த்தீர்களா, மந்திரி சபை யில் இடம் பெறுங்கள் என்று சோனியாவை வற் புறுத்தவாவது செய்தீர்களாப இல்லையே. கூட்டணி கட்சி களுக்கு நாமம் போட்ட சர்க் கார். இப்படி எங்களுக்கு பட்டை நாமம் போட்டு விட் டார்களே என்று உங் கள் கூட்டணி கட்சிகள் புலம் புகின்றன.
இந்தியாவில் பெரிய கட்சி காங்கிரஸ், ஆட்சி பொறுப்பில் இருக்கும் கட்சி. சுயமரியாதையை விட்டு விட்டு எங்களுக்கு மந்திரி பதவி தாருங்கள் என்று கேட்பார்களா?
அவர்கள் உங்களை புரிந்து கொண்டார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று உன்னிப்பாக பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா தன்னந் தனியாக உங்கள் அம்புகளை சந்தித்து அத்தனை பேருக்கும் பதில் சொல்கிறார். கடந்த முறை 5 ஆண்டு காலம் நீங்கள் சட்ட மன்றத்துக்குள்ளேயே நுழையவில்லையே. இப் போது துணிச்சலாக வரும் ஜெயலலிதாவை வர விட கூடாது என்று திட்டமிடு கிறீர்கள். கொச்சையாக பேசு கிறீர்கள். அதுதான் உங்கள் பண்பாடு.
ம.தி.மு.க. என்றாவது மாபெரும் சக்தியாக உருவெ டுத்து வரும். எனவே அதிகா ரத்தில் இருக்கும் போதே அழித்து விட வேண்டும் என்று நினைக்கிறீர்கள். இந்த இயக் கம் ஆயிரம் காலத்து பயிர். இது வாழையடி வாழையாக வளரும். இதை யாராலும் அழிக்க முடியாது. நான் நிரந்தரமானவன் அல்ல. ஆனால் இந்த இயக்கம் நிரந்தர மானது.
அண்ணா உருவாக்கிய தி.மு.க. அருமையான இயக் கம். லட்சக்கணக்கான லட்சிய வீரர்கள் இருக்கிறார்கள். ஆனால் அதை ஒரு குடும்ப சொத்தாக மாற்றுவதை எதிர்க் கிறோம். திராவிட இயக்கத்தில் ஒரு குடும்பத்துக்கு எதிராக தொடங்கிய தர்மயுத்தம் இன்றும்
தொடர்கிறது.நாங்கள் அழுத்தமான கொள்கைகாரர்கள். பகுத் தறிவு கொள்கையில் நம் பிக்கை இருக்கிறது. எங்கள் லட்சியம்-கொள்கைகள் நிரந் தரமானது.
தமிழர்களுக்கு எதிராக இந்தியா-இலங்கை கூட்டு ஒப்பந்தம் போட முயற்சித்த போது எதிர்த்து கருத்து சொன்னீர்களா?
இலங்கையில் போர் மூளும், நாங்கள் யுத்த களத்தில் தமி ழர் களுக்கு பக்க பலமாக இருப்போம். தமிழகத்தில் இலங்கை தமிழர்களுக்கு ஆதர வாக தமிழர்களை திரட்டுவோம். சட்டசபை தேர்தல் எப் போதும் வரலாம். நமக் கொன்று ஒரு காலம் வரும். ம.தி.மு.க.வினர் சட்டமன்ற நாற்காலிகளை அலங்கரிக்கும் நாள் வரும்.
Posted by IdlyVadai at 8/01/2006 12:58:00 PM 7 comments