சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:-
மைனாரிட்டி தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கை முழுவதும் படித்து பார்த்தேன். அதில் நல்ல விஷயங்கள் இருக்கிறதா? என்றும் அரும்பாடுபட்டு தேடினேன். நல்ல கருத்துக்கள் இருந்தால் அவர்களை பாராட்டலாம் என்று முயற்சி செய்தேன். ஆனால் பாராட்டும்படி பட்ஜெட்டில் எதுவுமில்லை என்பது கசப்பான உண்மை ஆகும்.
தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்வதை இந்த பட்ஜெட் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. நன்மை தருவது போன்று மாயமான தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். தமிழ் நாட்டின் முன்னேற்றத்திற்கு விரோதமான பட்ஜெட் இது.
தீபாவளி காலத்தில் வாண வேடிக்கை காட்டுவது போல பட்ஜெட் அமைந்துள்ளது. வாண வேடிக்கையின் போது வானத்தில் இருந்து பல வண்ணங்களில் சிதறும் ஒளி மத்தாப்புகள் சிறிது நேரத்தில் சாம்பலாகி மண்ணில் விழுந்து விடும் இதை தூரத்தில் இருந்து பார்க்கும் போது அழகாக இருக்கும். பறக்கும் மின்மினி பூச்சி போல இந்த பட்ஜெட் அமைந்துள்ளது.
போலி ஆவணம் மூலம் தயாரித்தது போல இந்த நிதிநிலை அறிக்கை உள்ளது.
கடந்த தி.மு.க. ஆட்சியில் நிதிநிலை நெருக்கடி ஏற்பட்டது. அதே போல தமிழ்நாட்டில் மீண்டும் நிதிநிலை நெருக்கடி ஏற்பட போகிறது. ஜனவரி 2006-ல் தாக்கல் செய்த இடைநிலை அறிக்கையில் வருவாய் பற்றாக்குறை ரூ.207.27 கோடியாக இருந்தது. தற்போது ரூ.1,129.23 கோடி உயர்ந்துள்ளது.
அப்போது அமைச்சர் பொன்முடி குறுக்கிட்டு பேச எழுந்தார். (அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர். அவர்களை உட்காரும்படி சபாநாயகர் எச்சரித்தார்.)
அமைச்சர் பொன்முடி:- எதிர்க்கட்சி தலைவர் ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். சர்ச்பாÖர்க் காண்வெண்டில் படித்த அவருக்கு கணக்கு கூட தெரியவில்லை என்பதை நான் எதிர்பார்க்கவில்லை. சட்டசபையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சத்தம் போடுவது, கூச்சலிடுவது, மிரட்டுவது போன்ற செயல்களை செய்வது சரியல்ல.
(இதற்கு அ.தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து எழுந்து நின்று கூச்சல் போட்டனர்)
ஜெயலலிதா:- நான் பிளஸ்-2 தேர்வில் கணக்கு பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கி இருக்கிறேன். அதனால் நான் நிச்சயமாக கணக்கில் `வீக்' இல்லை. 103 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மைனாரிட்டி தி.மு.க. அரசை மைனாரிட்டி என்று சொல்லாமல் என்ன சொல்வது.
அமைச்சர் அன்பழகன்:- மைனாரிட்டி அரசு என்றால் அதை நிலைநாட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இந்த அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். அது இல்லாத வரை இது மெஜாரிட்டி அரசுதான்.
சபாநாயகர்:- அடுத்த சப்ஜெட்டுக்கு போங்கள். (ஜெயலலிதாவை பார்த்து)
ஜெயலலிதா:- அவர்கள் சொல்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
(அப்போது இந்திய கம்ïனிஸ்டு உறுப்பினர் சிவ புண்ணியம் பேச எழுந்தார். அதற்கு அ.தி.மு.க. உறுப்பினர் கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவரை பேச அனுமதிக்க கூடாது என்றனர்).
சிவபுண்ணியம்:- (இந்திய கம்ïனிஸ்டு) அ.தி.மு.க.மைனா ரிட்டியாக இருக்கின்ற கார ணத்தால் தான் முன்னால் இருக்கிறீர்கள் தி.மு.க. அர சுக்கு வெளியே இருந்து கம் ïனிஸ்டு கட்சிகள், காங் கிரஸ், பா.ம.க. ஆகியவை ஆதரவு கொடுத்து இருக் கிறது. அதனால் இது மைனா ரிட்டி அரசு அல்ல.
அமைச்சர் அன்பழகன்:- இந்த அரசு மைனாரிட்டி அரசு என்று சொல்கிறார்கள். ஆளும் கட்சியினர் கருத்தை ஏற்க மாட்டோம் என்று வாதம் வைக்கிறார்கள். அவர்கள் இதை விட மைனாரிட்டியாக இருந்து கொண்டு இப்படி சொல்லக்கூடாது.
ஜெயலலிதா:- எங்களை நாங்கள் ஏன் சொல்ல வேண்டும். 63 சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதனால் தான் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கிறோம். தி.மு.க.வில் 95 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். ஏன் கோபம் வருகிறது.
அமைச்சர் பொன்முடி:- கடந்த காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்த போது குறுக்கீடு செய்தனர். நீங்கள் குறுக்கீடு செய்யக்கூடாது என்று கூறினீர்கள். அதே முன் உதாரணத்தின் அடிப் படையில் நாங்கள் இப்போது சொல்கிறோம்.
(அப்போது அ.தி.மு.க. உறுப்பினர்கள் கைகளை நீட்டி பேசினார்கள்).
பொன்முடி:- எனக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதில் சொல்லட்டும் கைகளை காட்டி மிரட்டுவது சரியல்ல. இந்த அரசு பெரும்பான்மையான அரசு. 163 உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுள்ள அரசு பெரும்பான்மை அரசுதானே. அரசியல் அமைப்பு சட்டம் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஜெயலலிதா:- எங்கள் ஆட்சி காலத்தில் அன்பழகன் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அவருக்கு உரிய மரியாதை கொடுத்து பேச அனுமதித்தோம். ஆனால் இன்று என்னை பேச முடியாத படி அச்சுறுத்துகிறார்கள். யாருக்கும் எதற்கும் என் னால் பதில் சொல்ல முடி யும். எனது ஆட்சியில் திறம்பட செயல்பட்டதன் மூலம் நிதி நெருக்கடி இல் லாமல் பொருளாதார முன் னேற்றத்தை கண்டு கம்பீரமாக நின்றது. அதை 2 மாதத்தில் தி.மு.க. ஆட்சி கெடுத்து தலைக்கீழாக மாற்றி விட்டது. மீண்டும் நிதி நெருக்கடி தி.மு.க. ஆட்சியில் ஏற்பட போகிறது.
பொன்முடி: பேசக்கூடிய வார்த்தைகள் உணர்ச்சிகளை உருவாக்காமல் இருந்தால் நாங்களும் இந்த அவைக்கு பெருமை சேர்ப்போம்.
ஜெயலலிதா: இந்த நிதிநிலை அறிக்கையில் மொத்த கடன் பற்றி சம்பந்தம் இல்லாமல் கூறப்பட்டுள்ளது. மொத்த வருவாய் வரவுகள் தி.மு.க. ஆட்சியில் அபாயகரமாக இருந்தது. அவற்றை எனது ஆட்சியில் கட்டுப்படுத்தினேன். 2006-07-ல் மொத்த வருவாய் ரூ. 38,478 கோடியாக குறிப் பிடப்பட்டுள்ளது. வருவாய் வரவுகளை அதிகமாக மதிப்பீடு செய்தும், வருவாய் செலவுகளை குறைவாக மதிப்பீடு செய்தும் இந்த அரசு தங்களையே ஏமாற்றி கொள்கிறது.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: ஆயத்தீர்வை வருவாய் கடந்த ஆட்சியில் சரியாக வசூலிக்கப்படவில்ல. இந்த ஆட்சியில் முழுமையாக வசூலிக்கப்படும்.
அமைச்சர் அன்பழகன்: 100 சதவீதம் பற்றாகுறை யிருப்பதாக கூறுகிறார். சமூக நலனை பாதுகாக்க இந்த பற்றாக்குறை பெரிய விஷயம் அல்ல. நாட்டுக்காக எங்களை நாங்களே ஏமாற்றிக்கொள்ள தயாராக இருக்கிறோம்.
ஜெயலலிதா: இந்த பற்றாகுறை அதிகமாக இருக்கிறது.
அன்பழகன்: ரூ. 28 ஆயிரம் கோடி கடன்களை நாங்கள் விட்டுச்சென்றோம். நீங்கள் ரூ. 56 ஆயிரம் கோடிக்கு கடன் களை வைத்து விட்டு சென்றீர்கள் பெரிய கடன் சுமையை நாங்கள் எதிர் கொள்கிறோம்.
ஜெயலலிதா: நாங்கள் கடன்களை பெற்று பல் வேறு நலத்திட்டங்களை மேற் கொண்டோம்.
பொன்முடி: நாங்கள் பெருந்தன்மையோடு செயல்படுகிறோம். நீங்கள் வீட்டுச்சென்ற சுமையை நாங்கள் பெரிதுபடுத்த வில்லை.
ஜெயலலிதா: கடன் தள்ளுபடி செய்ததில் நாங்கள் வழங்கிய ரூ.400 கோடியை சேர்ந்ததா இல்லையா?
அமைச்சர் அன்பழகன்: இந்த அரசு விவசாயிகளுக்கு ரூ. 6,800 கோடி கடன் தள்ளுடி செய்தது.
ஜெயலலிதா: என் சிந்தனையில் உதித்ததை பேசி இருக்கிறேன். யாரும் எழுதி தரவில்லை.
முதல்-அமைச்சர் கருணாநிதி:-அப்படியானால் அம்மையார் இதுவரை சொந்தக் கருத்துக்களை கூறவில்லை என்று கூறுகிறாரா? இதுவரை யாரோ எழுதிக் கொடுத்தததை ஒப்புக் கொள்கிறாரா?
ஜெயலலிதா:- கடந்த முறை சில குறிப்புகள் வைத்து பேசினேன். ஆளும் கட்சி குறுக்கீடுகள் இருந்ததால் எனது சிந்தனை ஓட்டம் தடைபட்டது. பதில் சொல்லும் திறமை எப்போதும் எனக்கு உண்டு.
கருணாநிதி:- எதற்கும் பதில் அளிக்க கூடிய இயற்கையான மொழிவளம், உடல் வலிமை எனக்கு உண்டு.
ஜெயலலிதா:- முதல்- அமைச்சர் என் பேச்சை கேட்டு திணறவில்லை என்கிறார். தேர்தல் வாக்குறுதியை அளித்து மக்களை சந்தித்த போது மக்கள் முன்பு திக்குமுக்காடி திணறி போனார்.
கருணாநிதி:- எதிர்க்கட்சி தலைவர் ரூ. 1,600 கோடி கடனை தள்ளுபடி செய்ததாக கூறினார். அதற்கு நிதி அமைச்சர் பதில் அளித்தார். அந்த பதிலுக்கு அம்மையார் எந்த விளக்கமும் அளிக்காமல் வேறு பிரச்சினைக்கு சென்று விட்டார்.
ஜெயலலிதா:- நான் எதை பார்த்தும் நழுவவில்லை. மெட்ரோரெயில் திட்டத்தை விட மோனோ ரெயில் திட்டம் தான் சிறப்பானது. அதனால்தான் அதை நாங்கள் நிறைவேற்ற திட்டமிட்டோம். நிறைவேற்றக்கூடிய திட்டம் தான் மோனோரெயில் திட்டம். எனவே அதை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கடந்த ஆட்சியில் தரிசு நில மேம்பாட்டு திட்டத்தை நாங்கள் கொண்டு வந்தோம். ஆனால் முதல்வரும் பல்வேறு கட்சி தலைவர்களும் அதை புரிந்து கொள்ளாமல் மனம் போன போக்கில் பேசியிருக்கிறார்கள். அதன்பிறகு அவர் பேசிய சில வார்த்தைகளுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதற்கு அ.தி.மு.க.வினரும் எதிர்ப்புதெரிவித்தனர். இதனால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.
அமைச்சர் வீரபாண்டிஆறுமுகம்: அவை மரபு இல்லாத வார்த்தைகளை எதிர்கட்சி தலைவர் பேசுகிறார். இது போன்ற முன் உதாரணங்கள் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும். (மீண்டும் அ.தி.மு.க. -தி.மு.க. உறுப்பினர் கள் ஒருவருக்கொருவர் எதிராக கோஷமிட்டனர்)
பீட்டர் அல்போன்ஸ்:- 6 கோடி மக்கள் சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள். அவர்களை குறை சொல்லும் வகையில் வார்த்தைகளை பயன்படுத்துவது மரபு அல்ல.
கோவிந்தசாமி(மா.கம்ïனிஸ்டு), ஜி.கே.மணி (பா.ம.க.), சிவப்புண்ணியம்(இந்திய கம்ïனிஸ்டு) ஆகியோர் இதே கருத்தை வலியுறுத்தி பேசினார்கள்.
பொன்முடி:- உணர்வுகளை தூண்டும் வகையில் பேசக்கூடாது என்று கடந்த ஆட்சியில் சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினர் பேசி இருக்கிறார்கள். இதை கடைபிடித்தால் நல்லது. (மீண்டும் கூச்சல்குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகர் எதிர்கட்சி தலைவர் பேசிய வார்த்தைகளை நீக்கியதாக அறிவித்தார்)
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா கடந்த ஆட்சியில் கொண்டுவரப்பட்ட நில மேம்பாட்டுதிட்டம் பற்றி விளக்கி பேசினார். அப்போது ஏழைகளுக்கு 2 ஏக்கர் நிலம் திட்டம் நிறைவேற்ற முடியாது என்று குறிப்பிட்டார்.
இதற்கு அமைச்சர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பொன்முடி, பெரியசாமி ஆகியோர் விளக்கம் அளித்தனர். காரசார வாக்குவாதம் நடந்தது.
மேலும் ஜெயலலிதா பேசும் போது, அரசு ஊழியர்கள் நீக்கப்பட்டது. ஒரு தாய் குழந்தைக்கு கொடுத்த கசப்பு மருந்து என்று குறிப்பிட்டார். இது குறித்து ஜெயலலிதாவுக்கு அமைச்சர் அன்பழகன் இடையே கடும்வாக்குவாதம் நடந்தது.
பின்னர் சபாநாயகர் பேசும் போது, "நீங்கள் 1 மணி 46 நிமிடம் பேசியிருக்கிறீர்கள் பேச்சை சீக்கிரம் முடிக்க வேண்டும்'' என்று கூறினார். அப்போது ஜெயலலிதா சபாநாயகரிடம் வாக்குவாதம் செய்தார்.
தொடர்ந்து பேசிய ஜெயலலிதா கடந்த ஆட்சியில் நாங்கள் 50 லட்சம் ஏக்கர் நிலம் இருப்பதாக சொல்லவில்லை. தரிசு நிலங்களை பல்வேறு நிறுவனங்கள் மூலம் பயன்படுத்தி கொடுப்பதற்காகத்தான் சொன்னோம். 3.5 லட்சம் ஏக்கர் தரிசி நிலம் மட்டும் தான் உள்ளது. இதை நான் பல முறை சொல்லியும் தி.மு.க., கம்ïனிஸ்டு, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் இதை ஏற்காமல் அதை குற்றச்சாட்டை கூறுகிறார்கள்.
முதல்-அமைச்சர் கருணாநிதி: அம்மையார், கம்ïனிஸ்டு, பா.ம.க., காங்கிரஸ் உள்ளிட்டவர்களை ஏமாற்றுபவர்கள் என்று குறிப்பிடுகிறார். அவர்கள் அப்படி ஏமாற்றுபவர்கள் அல்ல. நான் ஏமாளியும் அல்ல.என்பதை சொல்லிக்கொள்கிறேன். எவ்வளவு நிலம் இருந்தாலும் அதை பங்குவைத்து கொடுப்போம்.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Monday, July 31, 2006
ஜெ vs கலைஞர் - சட்டசபை விவாதம்
Posted by IdlyVadai at 7/31/2006 06:35:00 PM 4 comments
Wednesday, July 26, 2006
தேன்கூடு போட்டி ( ஆறுதல் பரிசு ) பதிவு
மரணம் பற்றி தேன்கூடு வலைதிரட்டி ஒரு போட்டி அறிவித்தது பலருக்குத் தெரிந்திருக்கலாம். அதில் கலந்துகொள்ளலாம் என்றால் கடைசித் தேதி முடிவடைந்து விட்டது. சரி, விஷயத்திற்கு வருவோம். அடுத்தவாரம் வெள்ளிக்கிழமை இந்த உலகம் அழியப்போகிறது என்றால் தமிழ் வலைப்பதிவுகளின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் ? இதோ சில சாம்பிள்கள்...
( ஏதோ ஆறுதல் பரிசுக்காவது சிபாரிசு செய்யுங்கள் )
1. தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம்:
உலகம் அழியும் முன் என்னை யாராவது தமிழ்மண நட்சத்திரமாக கூப்பிடுவார்களா என்ற நப்பாசையில் ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை யாராவது மெயில் போட்டிருக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டேயிருந்தேன். தீடீர் என்று மதியிடமிருந்து அழைப்பு வந்தது. எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. என்ன எழுதப்போகிறேன் என்றும் தெரியவில்லை. ஆனால் நான் என்ன எழுதினாலும் எப்படியும் 'வருக வருக', 'நட்சத்திர வாழ்த்துக்கள்', 'இந்த வாரம் கலக்குங்க' போன்ற பின்னூட்டங்களைப் போடுவீர்கள் என்று தெரியும். இந்த அரிய வாய்ப்பைக் கொடுத்த மதி மற்றும் காசிக்கு நன்றி. பின்னூட்டம் இடுபவர்களுக்கு அட்வான்ஸ் நன்றி. என்னுடைய நட்சத்திர வார முடிவில் உலகம் அழிய போகிறது என்று நினைத்தால் சந்தோஷமாக இருக்கிறது.
2. சொர்க்கத்தில் இட்லி ஒதுக்கீடு - பத்ரி
இன்று வந்த ஹிந்து செய்தி இங்கே மற்றும் தினமணிச் செய்தி இங்கே.
இட்லி ஒதுக்கீடுக்கான செலவு என்று சொல்லியிருக்கிறார்கள். 'செலவு' என்று சொல்வதைவிட 'முதலீடு' என்று சொல்வது தான் சரி. ஒரு SC/ST இட்லி சாப்பிட ஆகும் செலவு ஒரு நாளைக்கு ரூ. 10.25; அதே ஒரு மாதத்திற்கு ரூ. 307.50 மட்டும். அதே போல் OBC க்கு ஒரு நாளைக்கு இட்லி சாப்பிட ஆகும் செலவு ரூ. 11.34; ஒரு மாதத்திற்கு ரூ. 340.20 தான். SC/ST, OBC மாணவனுக்கு இட்லியோடு கெட்டிச் சட்னி உண்டா இல்லையா என்பது தான் வித்தியாசம். இதற்கு ஏன் இவ்வளவு போராட்டம் என்று தெரியவில்லை. இனியாவது மாணவர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடலாம். இன்னமும் ஒரு கேள்வி பாக்கியிருக்கிறது. அது creamy layer தொடர்பானது. அதற்கு என் முந்தைய பதிவுகளையும் பார்த்தால் ஓரளவு உங்களுக்குக் குழப்பம் வரும்.
உலகம் அழிந்து அடுத்தமுறை ஆதாம் ஏவாள் தோன்றும் பொழுது இட்லி ஒதுக்கீடு பற்றி ஒழுங்காகச் சிந்திக்காவிட்டால் இதே போல் நான் பல பதிவுகள் எழுத வேண்டிவரும். உலகம் அழிந்த பின் சொர்க்கத்தில்/நரகத்தில் எப்படி இட்லி ஒதுக்கீடு இருக்கிறது என்று பார்த்த பிறகு இது தொடர்பான அடுத்தப் பதிவு போடுகிறேன்.
இட்லி பற்றாக்குறை தீர்வதற்கு எனக்குத் தோன்றும் சில யோசனைகள்:
1) கொஞ்சமாக இட்லி நிறைய சாம்பார் போடலாம்.
2) இட்லியுடன் இரண்டு வடை சேர்த்துப் பரிமாறலாம்.
3) இட்லிக்குப் பதிலாக பொங்கல் கொடுக்கலாம்.
4). இட்லிக்குப் பதில் குட்டி(மினி) இட்லி கொடுக்கலாம்.
5) இட்லிக்கான மானியத்தை ஒரேயடியாக நிறுத்தவேண்டும்.
வலைப்பதிவுலகில் இருக்கும் ஹோட்டல் சரக்குமாஸ்டர்கள், ஆப்பக்கடை ஆயாக்களிடமிருந்து இன்னும் யோசனைகள் இருந்தால் அறிய ஆவலாக இருக்கிறேன்.
இட்லி ஒதுக்கீடு பற்றிய என் முந்தைய பதிவுகள்: பதிவு 1 | பதிவு 2 | பதிவு 3 | பதிவு 4 | பதிவு 5 | பதிவு 6 | பதிவு 7 | பதிவு 8 | பதிவு 9 | பதிவு 10....
3. இந்தப் பதிவை யார் ஆரம்பித்தது என்று தெரியவில்லை
உலகம் அழிய போகிறது என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். அதனால் போன முறை ஆறு விளையாடியது போல் மீண்டும் ஒரு விளையாட்டு இது. நிச்சயம் மூளைக்கு வேலை இல்லை; அதனால் யாரும் பயப்பட வேண்டாம். உலகம் அழிந்து விட்டால் நமக்கு யார் 'பத்து' பண்ணப் போகிறார்கள். அதனால் ஒரு பத்து விளையாட்டு.
நீங்கள் இந்தப் பத்து தலைப்புகளில் எழுதலாம்:
1. செய்த தப்புகள் 10 (வாசகனை நெகிழ்விக்கிறேன் என்று செய்யாத தவறுகளை எல்லாம் யாரும் அடுக்கக்கூடாது.)
2. சொன்ன பொய்கள் 10 ( தமிழார்வத்தில்தான் வலைப்பதிகிறேன் என்றுசொல்வது, தனக்குத் தானே நட்சத்திரக் குத்து இட்டுக்கொள்வதெல்லாம் எல்லோருக்கும் தெரிந்த பொய்தான் என்பதால் கணக்கில் சேராது.)
3. எழுதிய மோசமான 10 பதிவுகள் (பத்துக்குள் அடங்காதே என்று மலைப்பவர்கள் 'இந்த மாதத்தில்' என்று முன்னால் சேர்த்துக்கொள்ளலாம்.)
4. படித்த மோசமான 10 பதிவுகள் ( தமிழ்மணம் சுட்டியைக் கொடுக்கக் கூடாது )
5. நீங்கள் டாவ் அடித்த 10 பெண்கள் பெயர் (உங்களை திரும்ப யாருமே டாவடிக்கவில்லை என்பதில் பிரச்சினை இல்லை.)
6. உங்களை அடித்த பத்து பேர் (தர்ம அடியில் பேர் தெரியாது என்பது எல்லோருக்கும் தெரியும்.)
7. உங்களை நீங்களே பாராட்டி எழுதிகொண்ட அநாநி பின்னூட்டங்கள் 10
8. அடுத்தவர் பதிவில் அநாநியாக நீங்கள் திட்டிய பின்னூட்டங்கள் 10
9. அழைக்க விரும்பும் உங்களுக்கு பிடிக்காதவர்கள் 10 பேர்
10. அழைக்க விரும்பும் உங்களுக்கு மிகவும் பிடிக்காதவர்கள் 10 பேர்
4. சென்னை வலைப்பதிவாளர் சந்திப்பு - டோண்டு
இன்னும் ஒரு வாரத்தில் உலகம் அழிய போகிறது என்று நேற்று நண்பர் ஜோசப் தொலைப்பேசியில் தெரிவித்தார். அதனால் நமது ஆஸ்தான இடமான 'நியூ உட்லாண்ட்ஸ்'ல் ஒரு வலைப்பதிவு சந்திப்பு ஏற்பாடு செய்திருக்கிறேன். வழக்கம்போல் போலி டோண்டு என்ற வக்கிரம் பிடித்த மிருகத்தை இந்த ஒரு வாரத்திற்குள்ளாவது ஒழிப்பது பற்றிப் பேசி ஒரு முடிவெடுக்க எல்லோரும் வரவேண்டும். இந்தச் சந்திப்புக்கு வரும் எல்லோரும் போண்டா தான் சாப்பிட வேண்டும். நான் மட்டும் தான் மசால் தோசை, பாசந்தி சாப்பிடுவேன். பில்லை எல்லோரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளால் எல்லாம் நல்லபடியாக முடியும்.
பிகு: பின்னூட்டத்தில் அனானிமஸ் ஆப்ஷனை எடுக்காதவர்கள் இந்தச் சந்திப்புக்கு வந்தால் அவர்களுக்கு போண்டா கிடையாது.
5. தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு - உஷா
அன்புள்ள தமிழ் மணம் நிர்வாகிகளுக்கு,
தமிழ் மணம், வெறும் பதிவுகளின் திரட்டி அல்ல, இதற்கென்று சில சட்டத்திட்டங்கள், வரைமுறைகள் உண்டு என்பதை சமீபத்தில் படித்து ஆனந்தப்பட்டேன் (துள்ளிக் குதிக்க முடியவில்லை; கால் சுண்டுவிரலில் சுளுக்கு.) தமிழ்ப் பற்று உள்ளப் பதிவுகளுக்கு என் ஆதரவு எப்போதும் உண்டு. சமீபத்தில் ஒருப் பதிவில் ஜாதி பற்றி ஒருவர் எழுதியிருக்கிறார் (இவர் பதிவின் டெம்ப்லேட் நன்றாக இருக்கும் அதனால் அவர்ப் பதிவுகளை விரும்பி வேடிக்கைப் பார்ப்பேன்.). ஆனால் அந்த பதிவிற்கு ஏன் காசி தடைவிதிக்கவில்லை என்று தெரியவில்லை. மற்றவர்கள் எல்லோரும் சாதி என்று எழுதும் போது அந்த நபர் மட்டும் ஜாதி என்று சுத்த தமிழில் எழுதாதது எனக்கு மிக்க வருத்தமாக இருந்தது. அதில் இது சரி இல்லை, அது சரியில்லை என்று ஏன் குத்தம் கண்டுப்பிடிக்க வேண்டும்? இதே கேள்வி என்னை நானே இன்று கேட்டுகொண்டேன். இருந்தாலும் இந்த மூன்றுவருட இணையக் குப்பைகொட்டலில் எனக்கென்று ஒரு இமேஜ் இருக்கிறது. அதனால் தான் இந்த பதிவு.
உலகம் அழிய இன்னும் ஒரு வாரமே இருக்கிறது என்பதால் இந்த பதிவை படித்துவிட்டு தமிழ்மண நிர்வாகிகள் யாரும் விலக வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
6. தமிழ்மண நிர்வாகி
இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. அதனால் என் குடும்பத்துடன் குற்றாலம் சென்று எல்லாவற்றையும் தலைமுழுகப் போகிறேன். உஷா எழுதியதற்கும் நான் தமிழ்மண நிர்வாகிப் பொறுப்பிலிருந்து விலகுவதற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது. (அப்பா நிம்மதி :-)
7. திரும்பி பார்க்கிறேன் - ஜோசப்
என் அலுவலகத்துக்கு லோன் எடுக்க ஒருவர் வந்தார். அவர் வீடு கட்ட 100 கோடிக்கு லோன் கேட்டார். இது மாதிரி சமயங்களில் நான் என் மேலதிகாரியிடம் ஆலோசிப்பது வழக்கம். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அந்த நபரைச் சந்தித்தேன். அப்போது 100 கோடி லோன் பற்றி திரும்பவும் கேட்டார்.
நான் அவரிடம் "சார் காப்பியா, டீயா?" என்றேன்.
அவர் ஐந்து நிமிடம் யோசித்துவிட்டு "காப்பி வித்தவுட் ஷுகர்" என்றார்.
"நான் உடனே அவருக்கு லோன் கிடையாது என்று சொல்லிவிட்டேன். அவர் திகைத்துப் போய் என்னைப் பார்த்தார்.
அவர் "வித்தவுட் ஷுகர்" என்றவுடன் நிச்சயம் அவருக்கு டயாபடீஸ் இருக்கும் என்று தீர்மானித்தேன். அதனால் அந்த 100 கோடி அவர் மருத்துவச் செலவுக்கு என்று முடிவு செய்தேன்.
தொடரும்..
(G.Ragavan பின்னூட்டம் இல்லாமல் 'திரும்பிப் பார்க்கிறேன்' இருக்கக் கூடாது என்பதால்...)
G.Ragavan said..
ஜோசப் சார், உங்கள் அனுபவம் எங்களுக்குப் பாடம். தொடருங்கள்...
8. பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன் - பி.கே.சிவகுமார்
உலகம் அழியும் முன் கடைசியாக நேற்று தெருவில் ஒரு ரூபாய்க்குக் கடலை வாங்கினேன். சாப்பிட்ட பின் கடலை மடித்த பேப்பரில் 'அட்லாண்டிக்குக்கு அப்பால்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனக் குறிப்புகள் வெளியாகியுள்ளன. அவற்றைக் கீழே தந்துள்ளேன்.
கடலை மடித்துக் கொடுத்த வியாபாரிக்கு நன்றி.
9. சாகா வரம் பெரும் வலைப்பதிவுகள் - அன்னியலோகம்
அடுத்த வாரம் உலகம் அழிய போகிறது என்று கவலை வேண்டாம். இந்த ஸ்கிரிப்டை உங்கள் வலைப்பதிவில் சேர்த்துவிட்டால் போதும் உங்கள் வலைப்பதிவு அழியவே அழியாது. இந்த வசதி பிளாகர் உபயோகிப்பவர்களுக்கு மட்டும் தான் தற்போது வேலை செய்யும். [ இட்லிவடை பதிவு ஏன் வேலை செய்யவில்லை என்று தெரியவில்லை ]
10. பல்லவியும் சரணமும்(இன்றே கடைசி) - என்றென்றும் அன்புடன் பாலா
சில பழைய மரணம் பற்றிய பாடல்களின் சரணங்கள் கீழே. பல்லவியையும், (முடிந்தால் திரைப்படத்தையும்) கண்டு பிடியுங்களேன்! விடைகள் நாளைய பதிவில்!!! தேவையிருந்தால் மட்டுமே!
ஒருவர் பின்னூட்டமிடும்போது, 4 அல்லது 5 சரணங்களுக்கான பல்லவிகளை மட்டும் பதியவும், அவருக்கு எல்லாவற்றுக்கும் விடை தெரிந்திருந்தாலும் கூட :-)) ஏனெனில், மற்றவர்களும் சாவதற்குள் சற்று முயன்று பார்க்கட்டுமே!!!
1. பேசினோம் என்பதே தாய்மொழியாம்
மறந்தோம் என்பதே நித்திரையாம்
மரணம் என்பதே முடிவுரையாம்
2. மாசற்ற அன்புக்கு
மரணம் உண்டோ?
மதிகெட்டு வந்தாயோ
வஞ்சகப் பாம்பே!
என் பழைய நினைவுகளிலிருந்து சுரண்டி எடுத்துப் பதித்ததால், சொற்தவறுகள் இருக்கலாம்! மன்னிக்கவும், திருத்தவும்!
என்றென்றும் அன்புடன்
பாலா
11. பஜகோவிந்தம் - குமரன்
பஜகோவிந்தம் 28 ஆம் பாடல் மற்றும் 21 பாடல் படித்தால் மரணம் பற்றி ஒரு தெளிவு பிறக்கும்.
சுகத: க்ரியதே ராமாபோக:
பஸ்சாதந்த சரீரே ரோக:
யத்யபி லோகே மரணம் சரணம்
ததபி ந முஞ்சதி பாபாசரணம்
யத்யபி லோகே மரணம் சரணம் அதாவது இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் மட்டுமே ஒரே கதி என்பதை அறிந்திருக்க வேண்டும்.
21 ஆம் பாடலில்
புனரபி ஜனனம் புனரபி மரணம்
புனரபி ஜனனி ஜடரே சயனம்
இஹ சம்சாரே பஹு துஸ்தாரே
க்ருபயா பாரே பாஹி முராரே
புனரபி ஜனனம் - மீண்டும் ஒரு முறை பிறப்பு; புனரபி மரணம் - மீண்டும் ஒரு முறை இறப்பு என்று கூறியிருக்கிறார்.
அதனால் எல்லோரும் (நாம சங்கீர்த்தனம்)பஜனை பண்ணுங்கள்.
12. சில நேரங்களில் சில மனிதர்கள் - காசி
உலகம் அழிய போகும் இத்தருணத்தில் தமிழ் இணைய உலகில் என் அனுபவம் பற்றி எங்காவது எழுதிவைக்கலாம் என்று எண்ணம். இது என் அனுபவம் என்று சொல்லுவதா, எனக்குப் பாடம் என்று சொல்லுவதா என்று தெரியவில்லை. இணையத்தில் தமிழ் வலைப்பதிவுகளை படித்தபோது பல நண்பர்கள் கிடைத்தார்கள். தமிழ்மணம் உருவாக்கிய போது மேலும் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பிறகு சில பதிவுகளை நீக்கினேன். பல நண்பர்கள் பகைவர்கள் ஆனார்கள். பிறகு சில சட்டதிட்டங்களைக் கொண்டுவந்த போது மேலும் பல பகைவர்கள் கிடைத்தார்கள். பலர் என்னை மறைமுகமாகத் தாக்கினார்கள். சிலர் நேர்மையான கருத்துவைக்கிறேன் என்று நேரிடையாக. தேன்கூடாக இருந்த தமிழ் மனங்கள் கண்கூடாகத் சிதறிவிட்டதுதான் தமிழ்மணம் உருவாக்கி நான் கண்ட பலன்.
பாகம் 1, பாகம் 2, ...
13. நேற்று கிடைத்த லிங்க்ஸ் - பாஸ்டன் பாலா -
அடுத்த வாரம் உலகம் அழிவை பற்றி கூகிளில் தேடும் போது கிடைத்த ஏழு சுட்டிகள்
1. bsubra.wordpress.com
2. bsubra.gather.com
3. etamil.vox.com
4. boston.metblogs.com
5. gilli.in
6. snapjudge.blogspot.com
7. bioscope.blogspot.com
14. மரணம் for dummies - குசும்பன்
காட்சி 1
இடம்: பூலோகம்
ஒருவர்: ககாகிகீசசாசீச்சீ?
இன்னொருவர்: அப்படீங்கறேளா பாசு? எப்படி யார் சொன்னாலும் கடிந்து கொண்டு கடிதம் போட்டவர்களுக்கு நன்றி. மக்கமக்க சொக்கரிக்க திக்கா.
ஒரு: ஜும்பரபிம்பரதுங்கரதிக்கா. முக்கா ரொக்கா தக்க பிக்க.
இன்: தத்தக்கா பித்தக்கா.
ஒரு: மரணத்தைவிட இப்படி வலைப்பதியறதே பெட்டர்ங்கறீங்களா?
இன்: ஆமாம், மத்தவங்களை சாவடிக்கலாமே.
( கலர் அடித்து கை வலிக்கிறது )
15. எமனின் பாசக்கயிறை - ரோசாவசந்த்
உலகம் அழியப்போகும் செய்தி கிடைத்தும் இந்திய இராணுவம் என்னத்தைக் கிழித்துக்கொண்டிருந்தது என்று தெரியவில்லை.
நேரமின்மையால் இன்று முதல் கெட்டவார்த்தைகள் பேசுவதை விட்டுவிடுகிறேன். பல வலைப்பதிவாளர்கள் எழுதி முடித்துவிட்டாலும் கூட வயிற்று எரிச்சல் அடங்குமென்று தோன்றாததால் சாவகாசமாக எழுத நினைத்ததை சவசவ என்றிருந்தாலும் பரவாயில்லை என்று உடனடியாக எழுதவேண்டியதாகி விட்டது. எல்லோரும் இறக்கவேண்டும் என்பது துயரமான செய்தி என்றாலும் அதில் சில வாழவே தகுதியில்லாத, நாற்றமடிக்கும் எண்ணம் கொண்ட பிறவிகளும் சேர்ந்தே இறப்பார்கள் என்பதில் ஆறுதல் அடைவதிலும் எனக்குத் தடையெதுவும் இல்லை.
எப்படி இருந்தாலும் எல்லோருடைய மரணத்திற்கும் ஜல்லியடிக்கும் எமன் பொறுப்பேற்க வேண்டும். இல்லையென்றால் அறுத்துவிடுவேன், பாசக்கயிறை.
16. வலைப்பதிவு ரௌண்ட அப் - ரஜினி ராம்கி
சென்னைவீதி முழுதும் பீதி ( சிலருக்குப் பேதி )இன்னமும் நிரம்பியே கிடக்கிறது. வுட்லேண்ட்ஸ் ஹோட்டல் சுத்தமாகக் காலி. டோண்டு மனது வைத்தால் நடக்கும்.
தென்தமிழ்நாட்டுக்கு இந்தப் பக்கமும் அமெரிக்காவுக்கு அந்தப் பக்கமும் கடைசி வரை எனக்குப் பெண் கிடைக்கவே இல்லை. கல்யாணம் வேண்டாம் என்றே காலம் கடத்தி விட்டேன். ஒரு வேளை தப்போ?
பதித்த நானூறு பதிவுகளில் தலைவருக்குப் போட்ட பதிவுகளை விட ராமதாசுக்குப் போட்ட பதிவுகளே அதிகம். ஜோன்ஸ் ரோடு முழுதும் தலைவர் பேனர் கட்டினால் போகும் வழிக்காவது புண்ணியம் என்று லேட்டாகத்தான் புரிந்திருக்கிறது.
17. கில்லி: பிரகாஷ் ஸ்பெஷல்
Prakash's blog
வலைப்பதிவு உலகம் முழுதும் block செய்யப்படப்போவதைக் கண்டித்து எழுதுகிறார் பிரகாஷ் (link).
No comments
Prakash's blog
பாதிக்கும் மேல் எப்படி மலரும் நினைவுகளை வைத்தே பதிவுகளை ஓட்டினேன் என்று தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இகாரஸ் (link).
No comments
தனக்குப் பிடித்த பெண் எழுத்தாளர் பற்றி பிரகாஷ் படத்துடன் விவரிக்கிறார் இங்கே
No comments
Prakash's blog
தான் எத்தனையோ முயன்றும் உலகம் அழிவதற்குமுன் தன்னை ஒரு எழுத்தாளனாக சுமதியிடம் நிரூபிக்கமுடியாமல் பத்திரிகை உலகமும் நண்பர்களும் தன்னைப் பழிவாங்கியதைப் பகிர்ந்துகொண்டு நெகிழவைக்கிறார் பிரகாஷ் (link).
No comments
Prakash's blog
அடுத்த வாரம் கடைசிக்கடைசியான நாள் என்பதால், கில்லி முழுக்க என் பதிவுகள் என்று கில்லி வைரஸ் பரப்புகிறார் பிரகாஷ்...
No comments
18. நான் யார் - இட்லிவடை
உலகம் அழியும் நாளும் வந்தே விட்டது. தொடங்கிய நாள் முதல் இன்று வரை கலாய்ப்பு, கலாசல் போன்ற வார்த்தைகளுக்குப் பொருளே அறிந்து கொள்ள முடியவில்லை.
இனியும் நான் யார் என்பதைச் சொல்லாமல் விட்டால் என்னாலும் நிம்மதியாக இருக்க முடியாது. இட்லிவடையின்மேல் எச்சில் துப்பியவர்களும் இனி துப்ப நினைப்பவர்களும், தான் துப்பியது யார்மேல் பட்டது என்ற உண்மையை அறியாமலே உலகமும் தானும் அழிவதை விரும்பமாட்டார்கள். எனவே வெள்ளிக்கிழமைதான் உலகம் அழியப்போகிறது; அதனால் சனிக்கிழமை நான் யார் என்பதை அறிவிக்கிறேன். அந்தப் பதிவு [இங்கே]
"அடுத்த வாரம் கடைசி.. தமிழ்மணம் விற்பனைக்கு. The package includes, domain name and administrators. kindly contact... " என்று தமிழ்மணத்திற்கு மேல் ஓடிக்கொண்டிருக்கிறது.
Posted by IdlyVadai at 7/26/2006 02:49:00 PM 72 comments
Labels: நகைச்சுவை
Friday, July 21, 2006
மும்பை குண்டுவெடிப்பு - சோ,குருமூர்த்தி
This is war, Mr Prime Minister, not just a crime
Last week, Jihadi terrorists blasted running trains in Mumbai, killing some 200 innocent commuters returning home and almost killed another 700, who were injured. This was on Tuesday. The next day, Wednesday, Lebanese terror outfit Hezbollah captured two Israeli soldiers. Israel is a tiny dot on this earth while India is a huge country in land and people. See how the two countries responded to the attacks on them.
By Friday, that is, within a couple of days, Israel struck back, extinguished over 50 Lebanese in air strikes, and almost destroyed Beirut airport in the next 72 hours. At stake for Israel were two Israeli soldiers, who are armed combatants, not unarmed innocents, like Mumbai commuters.
In 48 hours, wilting under Israeli attack Lebanon had begun crying before the United Nations for a ceasefire. The US President refused to calm Israel and asked Lebanon to stop cross border terror!
See, in contrast, what India, seen as an emerging super power, does when over a thousand innocents are roasted and injured on its soil by terror from across its borders.
Look at the chronology. Terrorists mass slaughter innocent commuters en masse on Tuesday evening. The next day Prime Minister swears that 'terror will not cow us down', the usual rhetoric.
On Thursday, he is confused as to what to do next. Finally, on Friday he summons enough courage and declares that the blasts were engineered by "elements across the border".
He asserts that unless supported from outside, terrorists "could not hit with such effect." Thus, it takes 72 hours for the Prime Minister to hint who the criminals are and who harboured them. But in just 48 hours Israel had brought Lebanon, which had harboured Hezbollah Jihadis, to its knees.
Terror has attacked India hundred times and more, not for the first time. This time around, governments in Delhi and Mumbai had clear information about the terrorists who were about to strike Mumbai. They even knew which indigenous Islamic outfits were to provide logistic support. The only thing they did not know was the exact time and place of strike in Mumbai.
Thus, the Prime Minister must have known on Tuesday itself that it was a cross border terror attack. Yet, he did not say so till Friday. Why? Only he can explain. The National Security Advisor told the Indian Cabinet on Friday that it was Lashker-e-Toiba, the Pakistan-sponsored terror outfit, which bombed and snuffed out or injured over a thousand in Mumbai.
Not that the terrorists attacked from hundreds of miles away, from Islamabad, he said. And added that home grown Jihadis and a terror outfit, the Students Islamic Movement of India (SIMI) - which is certified by some seculars in India as secular - had provided logistic support.
That evening the Prime Minister charged that Pakistan was involved in the terror, but three precious days were lost by then. The Pakistan Foreign Minister seized this opportunity and almost said that the blast was because the Kashmir issue was hanging without resolution!
Had the Prime Minister told the truth on Wednesday, he could not have said what he had said. And finally, the Prime Minister of this vast and powerful nation just calls off the peace talk with Pakistan.
In contrast, Israel is murdering Lebanon for capturing two Israeli combatants and crushing it to cry before the world!
But, fortunately, the Manmohan Singh's charge against Pakistan for promoting cross border terror came ahead of the proud claim of the LeT cousin, Laskher-e-Qahar, that it had carried out the strike!
Secular India's debate on terror ignores that Jihad is war against infidels, not a crime under the Penal Code. The Jihadis believe that they operate under a higher law. So, normal laws are inadequate to counter the Jihadis.
Special laws, even draconian ones, have to be put in place, to contain terror. Even this can do only part of the job. The other part will have to be handled by war. But shockingly - yes, it is shocking - secular India feels anti-terror laws are anti-minority. Nothing is more anti-minority than equating, by implication, minority to terror.
But secular India has convinced many among the minorities that anti-terror laws are against them!
This is what makes terror a subject of crime instead of the target of war. This sets human rights against anti-terror laws. Result, it just costs hundreds and hundreds of human lives to preserve the human rights of terrorists!
So, Mr Prime Minister, it is not a crime you are handling, but war. Pot-bellied police and over-crowded courts are not meant to handle wars of this kind. Israel understands it and so the US too sides with it. We cannot act differently with the very same Jihadis, whom Israel is handling by war methods.
Tail piece: The media adds, at the Friday Cabinet meeting, a senior, but almost senile, minister told the Cabinet that it was not Jihadis, but, RSS - yes RSS - which bombed the trains and killed the innocent commuters!
Why? Just to give a bad name to Muslims! Of course, the Prime Minister kept quiet as he does on most issues. But imagine how the Pakistan PR machine would take advantage of such frivolous charge by a senior minister.
Courtesy: The New Indian Express.
இஸ்ரேலும், இந்தியாவும்!
மும்பை ரயில்களில் வைக்கப்பட்ட ஏழு தொடர் வெடிகுண்டுகள், 183 பேரை பலி வாங்கியிருக்கிறது; இந்த எண்ணிக்கை மேலும் உயரலாம். லஸ்கர்இதொய்பா என்கிற இஸ்லாமிய அடிப்படைவாத இயக்கம்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று தீர்மானிக்க நிறையவே இடம் இருப்பதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. இந்த சம்பவங்களுக்கு சற்று முன்பாக காஷ்மீரில் சில இடங்களில் நடந்த எறி குண்டு தாக்குதல்களில் அப்பாவி சுற்றுலாப் பிரஜைகள் பலியானார்கள். இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என்பதும் போலீஸாரின் சந்தேகம்.
இந்த அராஜகங்கள் நடந்த உடன், வழக்கம் போல நடக்கிற சடங்குகள் நடந்தேறின. பிரதமரும், சோனியா காந்தியும் ஆஸ்பத்திரிக்கு விஜயம்; மேலும் சில அரசியல் தலைவர்களும் ஆஸ்பத்திரிகளுக்குச் சென்று ஆறுதல் கூறினார்கள்; போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாக அறிவிக்கப்பட்டது; "மண்டியிட மாட்டோம்' என்று பிரதமர் பிரகடனம் செய்தார்; பாகிஸ்தானில் இருக்கிற தீவிரவாத பயிற்சி முகாம்கள் மூடப்பட வேண்டும் என்றும், எல்லை கடந்த தீவிரவாதம் நிறுத்தப்பட வேண்டும் என்றும் இந்திய அரசு வலியுறுத்தியது; "மதக் கலவரத்தை தூண்டுவதே, தீவிரவாதிகளின் நோக்கம்' என்று கூறி, அதற்கு இடம் கொடுத்துவிடக் கூடாது என்று நாட்டு மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
ஆக, சம்பிரதாயப்படி செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து முடித்தாகி விட்டது. இனி தீவிரவாதிகளின் அடுத்த ரத்த வெறியாட்டம் நடக்கிற வரையில், வேறு வேலைகளை கவனிக்கலாம். இடையில் சில அறிவாளிகள், "ஏன் இந்த மும்பை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது?' என்று ஆராய்ந்து, பத்திரிகைகளில் கட்டுரை எழுதுவார்கள்; இது இந்தச் சடங்குகளின் இறுதிப்
பகுதி என்பதால், இது நடக்கும் என்று எதிர்பார்க்க வேண்டியதுதான்.
இந்த அறிவாளிகள், இடதுசாரி சிந்தனை உடைய "ஸெக்யுலர்சாரிகளாக'த்தான் இருப்பார்கள். இவர்கள் ஆய்வு நடத்தி, "மும்பை குண்டு வெடிப்புக்குக் காரணம், அயோத்தி பாபர் மசூதி இடிப்பே' என்று கண்டுபிடிப்பார்கள். பதினைந்து ஆண்டுகளாக நடந்து வருகிற இஸ்லாமிய தீவிரவாதிகளின் கொலைகாரச் செயல்களுக்கெல்லாம் இதுவே பொதுக் காரணம்; இன்னும் பதினைந்து ஆண்டுகள் ஆனாலும் இதுவே காரணமாக இருக்கும். இது அவ்வப்போது,
அறிவாளிகளின் அலசல்களினாலும், அரசியல்வாதிகளின் பிரச்சாரங்களினாலும் வலியுறுத்தப்படும்.
அயோத்தி, இப்படி காலத்தால் அழியாத காரணமாக இருந்து, இஸ்லாமிய தீவிரவாதத்தை நியாயப்படுத்தும் என்றால் – மொகலாய மன்னர்கள் காலத்திலும், பிரிவினை காலத்திலும் நடந்தேறிய அக்கிரமங்களும் கூட, ஹிந்துக்களின் கோபத்திற்குக் காரணமாக இருக்கலாமே! ஆக, ஒரு அநீதி, பல அக்கிரமங்களை நியாயப்படுத்தும் என்கிற ஸெக்யுலர்சாரிகளின் வறட்டுவாதம், விபரீதமான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்.
நடந்துள்ள அராஜகத்திற்குக் காரணம் தேடி அலைவது, அந்த அட்டூழியத்தை நியாயப்படுத்துவதில்தான் முடியும். அதை விடுத்து, தீவிரவாதம் நசுக்கி, பொசுக்கப்பட வேண்டியது என்ற ஒரே உறுதியை மனதில் கொண்டு, அரசு செயல்பட வேண்டும். தீவிரவாதிகளுக்கு சங்கடங்களையும், அவர்களுக்கு உதவுகிற பலருக்கு அச்சத்தையும், உளவுத் துறை துப்பறிவதற்கு பல வசதிகளையும், போலீஸ் தக்க சமயத்தில் நடவடிக்கை எடுக்க வாய்ப்புகளையும் – உருவாக்கித் தருகிற "பொடா' போன்ற சட்டம் அவசியத் தேவை என்பதை, மத்திய அரசு உணரவேண்டும்.
"பொடா இருந்திருந்தால், இந்த அராஜகம் தடுக்கப்பட்டிருக்குமா?' என்று கேட்பதில் அர்த்தமில்லை. "பீனல் கோட்' இருப்பதால், கொலை, கொள்ளை, திருட்டு எல்லாம் தடுக்கப்படவில்லை என்பதால், அந்த கிரிமினல் சட்டம் ஒதுக்கப்பட வேண்டியவைதானா?
பொடா இல்லாமல் இருக்கிற நிலையை விட, பொடா இருக்கிற நிலை, தீவிரவாதிகள் செயல்பாட்டுக்கு சில தடைகளை ஏற்படுத்தும்; டெலிஃபோன் பேச்சுக்களை ஒட்டுக் கேட்பது; சந்தேகத்தின் பேரிலேயே சிலரை சிறைப்படுத்துவது; தீவிரவாதிகளுக்கு உதவுகிறவர்களை கண்காணிப்பது... போன்ற பல நடவடிக்கைகளுக்கு உதவுகிற சட்டம் அவசியமான தேவை. அம்மாதிரி சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படலாம் என்பது உண்மையே. துஷ்பிரயோகம்
நடக்கும்போது அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதுதான் இதற்கு தீர்வே தவிர; சட்டத்தையே தண்டித்து தூக்கில் போடுவது அல்ல விமோசனம். அப்படி பார்க்கத் தொடங்கினால் நாட்டில் எந்த சட்டமுமே இருக்க முடியாது.
இது ஒருபுறமிருக்க, பாகிஸ்தானுடன் நல்லுறவு என்ற பெயரில், நமது பலவீனத்தை பறைசாற்றும் வேலையை நிறுத்த வேண்டும். பாகிஸ்தான், தீவிரவாத முகாம்களை மூடி, தாவூத் இப்ராஹிம் போன்றவர்களை வெளியேற்றி, தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நாட்டிலிருந்து செயல்பட முடியாது என்ற நிலையை தோற்றுவிக்கிற வரையில், அதனுடன் என்ன பேச்சுவார்த்தை வேண்டிக் கிடக்கிறது? அதே போல, காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை என்றால், அது அவர்கள் ஆயுதங்களை கீழே போட்டு, இனி வன்முறை கிடையாது என்ற தீர்மானத்தைச் செய்கிற வரையில், அர்த்தமற்ற முயற்சி.
உண்மை என்ன? நாம் தீவிரவாதிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்கிறோம். பாகிஸ்தானிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறோம். உள்ளூர் தீவிரவாதிகளிடம், அஹிம்ஸாவாத போதனைகளை செய்து கொண்டிருக்கிறோம். இதைவிட கையாலாகாத்தனம் வேறு இருக்க முடியாது.
நமது அரசினுடைய நெஞ்சில் உரமில்லை; ஆகையால் அது எடுக்கும் நடவடிக்கைகளில் நேர்மைத் திறன் இல்லை. மனித உரிமையாளர்களின் கூச்சல்களை பொருட்படுத்தாமல், அறிவாளிகளின் அயோத்தி ஆய்வுகளைப் பற்றிக் கவலைப்படாமல், பத்திரிகை உலகின் பிரச்சாரத்தை நினைத்து தயங்காமல், பொடாவை விட உக்ரம் அதிகமுள்ள சட்டத்தைக் கொண்டு வர வேண்டும். ஒருவன், தீவிரவாதியுடன் தொடர்பு உள்ளவன் என்று சற்று சந்தேகம் வந்தாலே, அவன் உள்ளே போக வேண்டியதுதான் என்ற நிலைமை வர வேண்டும். சந்தேகத்திற்கு உள்ளானவர்களின் டெலிஃபோன் பேச்சுக்கள் ஒட்டுக் கேட்கப்பட வேண்டும். அடிப்படை உரிமை பறி போகிறது என்ற கோஷங்கள் பற்றி கவலைப்படாமல், கண்காணிப்புகள் நடக்க வேண்டும்.
காஷ்மீர் தீவிரவாதிகள் என்கௌன்டர் என்ற பெயரிலோ அல்லது வேறு வகையிலோ திட்டமிடப்பட்டு தீர்த்துக் கட்டப்பட வேண்டும். போலீஸாருடன் ஒத்துழைக்க மறுப்பவர்களுக்கு சிறைவாசம்தான் என்பது தெளிவாக்கப்பட வேண்டும். "தீவிரவாத சகவாசம் உள்ளவரையில், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது' என்று அறிவிக்கப்பட வேண்டும். பங்களாதேஷில் இயங்குகிற பயிற்சி முகாம்கள் மூடப்படாத நிலையில், அந்த நாட்டினுடன் நட்புறவு
என்பது அர்த்தமற்றது; பங்களாதேஷிலிருந்து வருகிற அகதிகளும் தடுக்கப்பட வேண்டும்; ஏற்கெனவே வந்தவர்களும் திருப்பி அனுப்பப்பட வேண்டும். ஆயுதங்களை கீழே போட்டு, அமைதி வழிமுறைகளை மேற்கொள்ளாத இயக்கங்கள் தடை செய்யப்பட்டு, அவற்றுடன் எந்தவித பேச்சு வார்த்தையும் கிடையாது என்று அறிவிக்கப்பட வேண்டும்.
சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற சில குறிப்பிட்ட தினங்களில் மட்டும் பாதுகாப்பு மும்முரப்படுத்தப்பட்டால் போதும் – என்ற தவறான அணுகுமுறை கைவிடப்பட வேண்டும்; இன்று ரயிலில் குண்டு வைத்தவர்கள், நாளை கோவில்களிலோ, பள்ளிகளிலோ, ஆஸ்பத்திரிகளிலோ கூட அதைச் செய்யலாம் என்பதால், மக்கள் அதிகம் புழங்குகிற
எல்லா இடங்களிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக "தீவிரவாதத்தை ஒழித்துக் கட்டுவதில் எந்த தயக்கமும் இனி கிடையாது' என்ற தீர்மானம் பறைசாற்றப்பட வேண்டும்.
இஸ்ரேலியன் ஒருவன், பாலஸ்தீனிய தீவிரவாதிகளால் கொல்லப்பட்டால், பாலஸ்தீனர்கள் பத்து பேரை இஸ்ரேல் தீர்த்துக் கட்டுகிறது; அதனால்தான், இஸ்ரேலையே அழித்துவிட நினைக்கிற பகைவர்கள் நாலாபக்கமும் இருந்தும், இஸ்ரேல் இன்னும் தலைதூக்கி நிற்கிறது. இஸ்ரேல் நம்மில் பத்தில் ஒரு பங்கு கூட இல்லை; அவர்களுக்கு இருக்கிற மன உறுதியில்,
நமது ஆட்சியாளர்களுக்கு, பத்தில் ஒரு பங்காவது தோன்றாத வரையில், தீவிரவாதத்தை எதிர்கொள்கிற தகுதி நமக்குக் கிட்டாது.
Posted by IdlyVadai at 7/21/2006 02:39:00 PM 18 comments
Thursday, July 20, 2006
ஜெ அறிக்கை
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எனது 17-7-06 ஆம் தேதியிட்ட அறிக்கையில் சட்டமன்றப்பேரவையில் முதல் -அமைச்சர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இருக்கைகள் மாற்றி அமைத்திருப்பது சம்பந்தமாக எனது கருத்தை வெளியிட்டு இருந்தேன். அதற்கு கருணாநிதி பத்திரிகையாளர்கள் நேற்று சந்தித்த போது உண்மைக்குப் புறம்பான, அரசு ஆவணங் களுக்கு மாறான சில தகவல் களைத் தெரிவித்திருக்கிறார்.
அதைப் போலவே, சட்ட மன்றப் பேரவைத் தலைவரும் சில முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி இருக்கின்றார். 2 பேரும் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசு ஆவணங்களுக்கு எதிரானதாகும்.
தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ராணிமேரி கல்லூரி இடத்தை முதலில் தேர்ந்தெடுத்ததற்கும், பிறகு கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழக வளாகத்தை ஒட்டி இடத்தை தேர்ந்தெடுத்ததற்கும் நான் யாரை, எந்த எதிர்க்கட்சி தலைவரை கலந்து கொண்டு முடிவு எடுத்தேன் என்று கேட் டிருக்கிறார்.
சட்டமன்றத்தில் ராணிமேரி கல்லூரி வளாகத்தில் தலைமைச் செயலகம் கட்ட இருப்பது பற்றியும், அந்த சந்தர்ப்பத்தில் மேற்படி கல்லூரி எங்கு இயங்க வேண்டும், எப்படி இயங்க இருக்கிறது என்பதையும் நான் சட்டமன்றத்தில் தெளிவுப் படுத்தினேன். பல உறுப்பினர்கள் அந்த விவாதத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். சட்டமன்ற உறுப்பினராக இருந்தும், சட்டசபைக்கு வராமலேயே இருந்த கருணாநிதி, குறைந்த பட்சம் மேற்படி சட்டமன்ற நடவடிக்கைகளைப் பற்றி பத்திரிகைகளைப் படித்தாவது தெரிந்து கொண்டு இருக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகில் கோட்டூர்புரத்தில் தலைமைச் செயலகம் கட்டலாம் என்று அரசு தீர்மானத்தையும் பலமுறை நான் சட்ட மன்றத்தில் தெரிவித்து இருக்கின்றேன்.
நான் முதல்-அமைச்சராக இருந்த போது தலைமைச் செயலகம் புதிய இடத்தில் அமைப்பது குறித்துப் பல முறை அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்பட்டு பின்பு சட்டமன்றத்திலேயே வெளிப் படையாக விவாதிக்கப்பட்டது. ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், கருணாநிதி மத்திய அரசினுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி முட்டுக்கட்டைப் போட்டதால் அத்திட்டம் நிறை வேற்றப்படவில்லை.
சசிகலா சட்டசபைக்கு வந்தது குறித்து பல ஆண்டுகள் கழித்து ஒரு கேள்வி எழுப்பி இருக்கிறார். இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டவர் தற்சமயம் அவர் கட்சியில் இருக்கும் சேடப்பட்டி முத்தையாதான் காரணம். அப்போதைய சட்டமன்றப் பேரவைத் தலை வராக இருந்தவர் அவர்தான்.
அன்றைய தினம் சட்ட சபைக்குள் வந்து அமர்வதை சசிகலாவும் விரும்பவில்லை. எனக்கும், அதில் உடன்பாடு இல்லை. ஆனால் அது ஒரு பொது நிகழ்ச்சி என்பதால் அதில் தவறில்லை என்று வற் புறுத்தி அழைத்தவர் சேடப் பட்டி முத்தையா. சட்டமன் றத்திற்குள் சசிகலா வந்து அமர வேண்டும் என்றால், அவரை தேர்தலில் நிற்க வைத்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கச் செய்து சட்ட மன்றத்தில் அவரை அமர வைக்க என்னால் நிச்சயம் முடியும்.
சட்டப் பேரவையில் இருக்கைகள் இடமாற்றம் என்பது ஒரு சாதாரண விஷயம் என்று கருணாநிதி சொல்லி இருக்கிறார். அதாவது, சட்டமன்ற சம்பிரதாயங்கள், சட்டமன்ற மரபுகள், நடைமுறை பழக்க வழக்கங்கள், இவை எல்லாம் அவருக்கு மிகச்சாதாரணமாகத்தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவருக்கான அறை சிறியதாக உள்ளது என்றும், இன்னும் பெரிய அறையை எனக்கு ஒதுக்கித் தர வேண்டும் என்றும் நான் கேட்டதாக கருணாநிதி கூறி யிருக்கிறார். அத்தகைய எந்தக் கோரிக்கையையும் நான் வைக்க வில்லை.
அ.தி.மு.க. கொறடா இது தொடர்பாக வைத்த கோரிக்கையை நான் வாபஸ் பெறுகிறேன். எங்களுக்கு பெரிய அறை தேவை இல்லை.
சபாநாயகர் இருக்கைகளை இடமாற்றம் செய்வது தனது தனிப்பட்ட அதிகாரம் என்றும், அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்க முடியாது என்றும், அவர் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் நிலைப்பாட்டை கண்டு நான் பரிதாபப்படுகின்றேன். காரணம் உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள், அளித்துள்ள பல்வேறு தீர்ப்புகளில், சட்ட விதிகளுக்கு மாறாக மிகப்பெரிய தனிப்பட்ட அதிகாரம் ஏதும் பேரவைத் தலைவருக்கு இல்லை என்று மிகவும் விவரமாகத் தெளிவுப்படுத்தப்பட்டு உள்ளது.
தனது அதிகாரத்தைப் பற்றிய வரைமுறைகளையும், இது சம்பந்தமான நீதிமன்ற தீர்ப்புகளையும், சட்டமன்ற கூட்டத்தொடர் இம்மாதம் 22- ஆம் தேதி ஆரம்பிப்பதற்கு முன்பாக அவர் கேட்டுத் தெரிந்து கொள்வது நல்லது.
சட்டப் பேரவைத் தலைவர், பத்திரிகையாளர்கள் மத்தியில் கைகலப்பு ஏற்படாமல் தவிர்க்க இருக்கைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இப்படிச்சொன்னவர், சில வரலாற்று உண்மைகளை மறந்திருக்கிறார் அல்லது மறைத்திருக்கின்றார். கருணாநிதி முதல்- அமைச்சராக இருந்த போது சட்டமன்றத்தில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது செருப்பு வீச்சுவதும் நான் இதற்கு முன்பு 1989-ல் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது என் மீது காட்டு மிராண்டித்தனமான தாக்குதல் நடத்தியதும் தி.மு.க.வினர்தான். அப்போதும் கருணாநிதியின் ஆட்சிதான். ஆக தி.மு.க.விற்கு எதிர்தரப்பில் உள்ள நாங்கள்தான் பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். இதுதான் வரலாற்று உண்மை.
எந்தவிதத் தாக்குதலுக்குமம் நானோ அல்லது கழக சட்டமன்ற உறுப்பினர்களோ கவலைப்படவில்லை. எனவே எங்களுக்கு மூலை முடுக்கு இடங்கள் தேவையில்லை. எதையும் நேரி டையாகவே எதிர்கொள்ளும் தைரியம் எங்களுக்கு உள்ளது என் பதையும் சட்டமன்றப் பேர வைத் தலைவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவைகளை எல்லாம் கருணாநிதி மற்றும் ஆவுடையப்பன் ஆகிய இருவரும் இனியாவது புரிந்து கொண்டு சட்ட மன்ற மரபுகளையும், நெறி முறைகளையும் கடைபிடிப்பது நல்லது.
Posted by IdlyVadai at 7/20/2006 03:56:00 PM 3 comments
ஸ்டேடஸ் மீட்டிங்
Posted by IdlyVadai at 7/20/2006 01:03:00 PM 3 comments
Wednesday, July 19, 2006
கலைஞர் பேட்டி - வாஸ்து, சிவாஜி சிலை...
கேள்வி:- வாஸ்து முறைப்படி சட்டசபை இருக்கைகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதா?
பதில்:- இவ்வளவு நாள் என்னிடம் பழகிக் கொண்டு இப்படி கேட்கலாமா?
கே:- அதற்கான அவசியம் ஏற்பட்டதால் கேட்கிறோம்.
ப:- சபாநாயகரிடம் கேளுங்கள்.
கே:- எதிர்க்கட்சி தலைவரை ஆலோசிக்காமல் அவை யில் இருக்கைகள் மாற்றப் பட்டுள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளாரே?
ப:- சென்னை கோட்டையை ராணி மேரி கல்லூரிக்கு மாற்ற நடவடிக்கை எடுத்தார்கள். அப்போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் அவர் ஆலோசனை நடத்தினார்.
பின்னர் கோட்டையை அண்ணா பல்கலைக்கழக வளாகத்துக்கு மாற்ற பூமி பூஜை போட்ட போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் கேட்டார். அவரது தோழி சசிகலாவை துணை சபாநாய கர் இருக்கையில் உட்கார வைத்த போது எந்த எதிர்க்கட்சி தலைவரிடம் ஆலோசனை நடத்தினார்.
பெரிய பெரிய விஷயங்களைப் பற்றிதான் சிந்தனை செய்ய வேண்டும். சிறிய சாதா ரண விஷயங்களை தவிர்க்க வேண்டும்.
கே:- மதிப்பு கூட்டு வரி அமல்படுத்தப்படுமா?
ப:- பட்ஜெட்டில் எதிர்பாருங்கள். இப்போது சொல்ல முடியாது.
கே:- சிவாஜி சிலை அதே இடத்தில் நிறுவப்படுமா?
ப:- சிவாஜி நடிக்க வரும் போதும் பிரச்சினைதான் இப்போதும் பிரச்சினைதான். நல்லதே நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். வேறு சில இடங்களை பார்த்தோம்.
என்ஜினீயரிடம் கேட்டபோது சிலையை ரம்பத்தினால் வெட்டிதான் எடுக்க வேண்டும் என்று கூறினார். கண்ணகி சிலையை அறுத்து எடுத்தபோது யாரும் கேட்கவில்லை. ஆனால் சிவாஜிக்கு குடும்பத்தினர் இருக்கிறார்கள். சிலையை சிதைத்தால் "சென்டிமென்ட்" ஆக பாதிக்கும் என்று நினைப்பார்கள்.கே:- சிவாஜி சிலை காந்தி சிலையை மறைக்கிறதா?
ப:- ராதாகிருஷ்ணன் சாலையில் நின்று பார்த்தால் தெரியும். நிச்சயமாக காந்தி சிலையை மறைக்கவில்லை. கண் உடையவர்கள் யாருக்கும் உண்மை தெரியும்.
கே:- அமைச்சரவை கூட்டம் நடக்கும் பழைய அறை எதற்கு பயன்படுத்தப்படும்?
ப:- வெளிநாட்டு பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள் சந்திப்பு இங்கு நடைபெறும். முதல்வர் `சேம்பர்' ஆவணங்களை பார்க்கவும், அரசு அலுவலர்கள், மத்திய மந்திரிகளை சந்திக்கவும் பயன் படுத்தப்படும்.
நன்றி: கார்ட்டூன் மதி, தினமணி
Posted by IdlyVadai at 7/19/2006 02:06:00 PM 5 comments
Tuesday, July 18, 2006
blogspot working ?
என் வீட்டுக்கு ஏர்டெல் நிறுவனத்திலிருந்து ஒருவர் இன்று மாலை வந்து எல்லா இணைப்புக்களும் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு போனார். அவர் என்ன செய்தார் என்று தெரியவில்லை ஆனால் அவர் சென்ற பிறகு இந்தியாவில் எல்லா இடங்களிலும் blogspot.com வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது. அவருக்கு தமிழ் வலைப்பதிவாளர்களின் சார்பில் நன்றி
படம்: சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் - த்ரிஷா ,ரிச்சா பலோட
Posted by IdlyVadai at 7/18/2006 06:58:00 PM 1 comments
குங்குமத்தில் - லிவிங் ஸ்மைல் வித்யா
இந்த வார குங்குமத்தில் நம்ம லிவிங் ஸ்மைல வித்யா வலைப்பதிவு பற்றி எழுதியிருக்கிறார்.
பக்கம் 1
பக்கம் 2
Posted by IdlyVadai at 7/18/2006 03:23:00 PM 4 comments
blogspot.com செய்திகள்
financialexpress - Blogs, websites go blank
N SHIVAPRIYA & HARSIMRAN SINGH
MUMBAI, JULY 17: Millions of domestic internet users could not access some of the world’s most popular blogs like geocities.com, blogspot.com and typepad.com, as the government ordered a blackout of around 18 sites for publishing content that was ‘anti-national’ and ‘against public interest’.
Blogging, particularly on fanatic and religious websites, had surged soon after the Mumbai bomb blasts on July 11. Over 25% of India’s 38 million internet users are active bloggers. Currently, there are over 120 million bloggers worldwide and multiplying at the rate of about 10 million per month. The number is expected to cross 160 million in 2006.
ISPs are believed to have been asked to block sites like bloodspot.com, hinduhumanrights.org, hinduuni-ty.org and clickatell.com, besides frontline blogs like the Google-owned blogsp-ot.com. Deepak Maheshwari, secretary of ISP Association of India said: “We have received a letter from DoT, asking us to block around 18 URLs.”
Though the communication, dated July 13, by the telcom department to ISPs lists specific pages/ websites, several ISPs have blocked all blogs because they were not equipped to filter specific pages. This could be because all websites hosted on blogspot.com, for instance, have the same IP address.
Blackout in Cyber space
• hinduunity.org
• hinduhumanrights.org
• princesskimberley.com
• bloodspot.com
• dalitstan.org
• clickatell.com
• blogspot.com
• geocities.com
• typepad.com
Reliance was among the first to restrict access to these sites on Friday. By Monday, other ISPs including Videsh Sanchar Nigam Ltd and Bharat Sanchar Nigam Ltd (which have the largest number of internet subscribers) also followed suit. Interestingly, Sify, also among the top ISPs, said it had not received any formal intimation from the DoT to block any website or blogs.
The move invited a strong reaction from the online community with a number of posts springing up all over the Internet. As per law, pornographic websites and websites containing inflammatory material promoting hate, violence or and terrorism, can be blocked.
link: http://www.financialexpress.com/fe_full_story.php?content_id=134366
Hindustan Times: 12 sites on Govt gag list
he government has instructed Internet Service Providers (ISPs) to block 12 websites. The order has come in the wake of the Mumbai bomb blasts, and these websites are perceived to be anti-India. Unfortunately, one of these is blogger or blogspot.com, a Google affiliated site which hosts millions of blogs worldwide.
Sources in the government said that a circular was issued by the Home Affairs Ministry three days back asking the Ministry of Information and Technology to block the 12 websites which posted content maligning India. Hundreds of netizens tried unsuccessfully to log on to blogger.com on Monday. These bloggers exchanged flash messages to discover that none of them were being able to log on to the website.
Officials defended the decision saying, "We would like those people to come forward who access these (the 12) radical websites and please explain to us what are they missing from their lives in the absence of these sites."
Link: http://www.hindustantimes.com/news/181_1746690,000600010001.htm
Business Standard: Govt cracks down on websites, blogs
The Government of India's Department of Telecom has asked Internet Service Providers to shut down some 20 'objectionable' websites and blogs. The order was received by the legal departments in some ISPs, whose spokespersons Business Standard spoke to. The notice is believed to have gone out on Friday last week.
The DoT is of the opinion that some of these sites were being used by banned organisations to transmit messages to their colleagues. Blog entries cannot be tracked as easily as email. The sites that were asked to be blocked include hindunity.og and exposingtheleft.blogspot.com. All ISPs do not seem to have implemented the ban uniformly, yet. Bloggers in India meanwhile complained that they were having problems accessing popular blogs on the Google owned blogspot. There are some 150 ISPs in India.
Access to all blogs and websites hosted on the following servers is currently blocked in India.
xxx.blogspot.com/
xxx.typepad.com/
xxx.blogs.com/
www.geocities.com/xxx
Here is a list of ISPs blocking Blogger - Tata Indicom, Spectranet, Reliance Powersurfer, Airtel, MTNL, Sify, Exatt, Primus, In2cable, Iqara, Pacenet and Hathway.
Link: http://www.business-standard.com/common/storypage_c.php?leftnm=11&bKeyFlag=IN&autono=3095
Indian Express: Post 7/11, Govt targets ‘extreme’ websites, bloggers on the blink
SULAKSHANA GUPTA / Pragya Singh
MUMBAI, NEW DELHI, JULY 17:The fast-growing community of online bloggers has borne the brunt of the government’s decision to block some 20 websites in a post-Mumbai show of force. Some of the websites that have been blocked are Dalitstan.org, Clickatell.com, Hinduhumanrights.org and Hinduunity.com.
But the most harried Internet users were the bloggers, who couldn’t access Blogspot.com, Typepad.com or Geocities.com pages. Sources in ISPs in Delhi as well as Mumbai confirmed that the one blog government has asked them to block is Princesskimberly.blogspot.com. ( Mirrored here )
It seems the order posed technical problems, resulting in a blanket ban on all blogs. ‘‘You cannot block a single page on blogspot.com, which is why all of them are getting blocked,’’ said Neha Viswanathan, Regional Editor, South Asia, Globalvoicesonline.org from London.
The Indian order was issued on July 13, sources in the Ministry of Telecom confirmed, though the Computer Emergency Response Team (India), part of a global cyber-security network set up three years ago, did not announce the bans officially.
Only sources in several ISPs such as Spectranet and Airtel confirmed that they had received the site-blocking order. R Grewal, a spokesperson for Spectranet confirmed: ‘‘We received a list of over 20 websites to block from the Department of Telecom, and this (Blogspot.com) was one of them.’’
Apparently, all the websites blocked are said to express “extreme religious views.”
MTNL officials said they were handed a 22-page document detailing the sites to block a month ago. “It came from the National Informatics Centre (NIC). It was the first time that they had done something of this nature,’’ says RH Sharma, sub-divisional engineer for MTNL in Delhi.
Government sources confirmed late in the evening that some websites have been blocked based on police reports that they were fuelling hatred. They denied that the Mumbai blasts had anything to do with censorship and that security checks on the blocked sites were on since before the terrorist attacks.
IndiaTimes: DoT casts a cloud on bloggers' paradise
MUMBAI/DELHI: The central government, reeling under fierce criticism of its response to the Mumbai blasts, has struck a blow at the online community by issuing orders to block blogs across the country.
The Department of Telecommunications has sent a notice to internet service providers (ISPs) to block around 17-18 websites on the internet. DoT usually sends such notices of censorship only when it finds objectionable, anti-national content or anything against public interest on these websites.
Experts believe that the government’s sudden move is aimed at thwarting the use of blogs (online journals) and websites by terrorists and their supporters. Blogspot, a Google-owned site, is among those blocked by this government measure.
However, among the apparently ‘anti-national’ sites blocked by this policy are those like the MumbaiHelp blogspot, which was a lifeline for people post the Tuesday blasts in Mumbai, giving information about critical numbers to contact and details about the dead and injured.
To compound the absurdity, it’s still possible to get onto this site — but only by logging on through www.pkblogs.com, a site set up by Pakistani bloggers to get around the blog ban that their government had put in place after the Danish cartoons episode. In short, thanks to this new policy, a blog to help the victims of a possibly Pakistan-inspired attack can only be accessed through a Pakistani site!
Peter Griffin, one of the founders of the MumbaiHelp blog, points out that the government’s policy is particularly futile, given the explosion of the blog universe. “Apart from free blogs like blogspot, which is what the government seems to be targeting now, there are also private blogs that anyone can put on their site, and the blogs being run by media organisations like CNN and the Guardian. Is the government going to shut them all down? It would probably be simpler for them to decide to close off the whole Internet and then only allow selected sites the way China seems to be doing. Is this really the way India wants to go?”
Deepak Maheshwary, secretary of the Internet Service Provider Association of India (ISPAI) confirmed that most of the ISPs have received the DoT notice and have blocked these websites. He also added that some ISPs have not received the notice, but may get it today, and will also be blocking these websites. He refused to give the names of the blocked sites.
The DoT had sent this notice to all ISPs on Friday, and some of the ISPs have started blocking these websites. While it could not be confirmed from the ISPs whether they have blocked these sites, internet users were not able to get through to certain websites.
The process followed for blocking is as follows: The Computer Emergency Response Team (CERT-In) reports on the presence of websites or content that is anti-national or against public interest to DoT. DoT then issues a notice to all ISPs — more than 100 across the country — to block these websites.
Over the past six years, DoT has blocked more than 100 websites. Generally, a DoT notice has one or two names of websites to be blocked. This time around the notice had more than 17 names.
The online community has already started debating and criticising the government’s decision to block blogs. The online community also claims that some of the ISPs have started blocking the whole domain Blogspot. If the domain name is blocked by the ISPs than none of the websites on that domain can be accessed by subscribers. For instance, if the domain name like Blogspot or Typepad are blocked, then all the blogs on these domains cannot be accessed.
Sources say that sometimes when the government gives a particular website or URL address to be blocked, it cannot be done unless the domain name is blocked. This is why some of the ISPs have blocked access to all websites hosted by one provider.
Many of the ISPs could not be contacted for comment on the issue. When contacted, Sify officials vehemently denied that they had received any notice from DoT to block any site. They also denied that they have blocked any sites. According to sources, the rationale for blocking these websites and blogs is to prevent foreign terrorists from communicating with the cell networks in India.
NDTV: Bloggers criticise jamming of blog sites
The major blog sites including blogspot.com, a site meant to set up new blogs, have been jammed in the last couple of days.
It isn't clear who has blocked these popular sites but unconfirmed reports say the Department of Telecom has issued orders to Internet service providers to block the websites.
There have been angry responses to the blocking of several blogs in India.
The order came from the Department of Information Technology, which handles cyber security reportedly on the advice of intelligence agencies.
Angry response
"All blogs on blogspot.com have been blocked by our Ministry of Communication. All of our blogs are visible to people outside India, but we can't view our own blogs or other blogs at blogspot.com from within India," said Aparna Muralidhar, Bangalore.
"It is not ok. Personal sites should not be stopped. It doesn't make sense," said Ishita from Delhi.
"There is a lot of propaganda about blogs being used for spreading political views but for people who are not part of it, it is very frustrating to not get through to sites that are private," she added.
However, there's yet no official word from either the telecom minister or the home ministry on the order which was apparently passed on Friday.
Some more links :
A forum - Bloggers Collective
A Wiki (I-heart-wikis) - Bloggers Against Censorship
From the Wiki:
- List of ISPs that seem to have blocked blogger
- Protests By Bloggers - Listing of Blogposts about the ban
- Quotes by Bloggers
- Bypassing The Ban
- Press Coverage of The Ban
Posted by IdlyVadai at 7/18/2006 08:44:00 AM 6 comments
Monday, July 17, 2006
blogspot.com
தேன்கூடு போட்டிக்கு அனுப்பிவைக்க தகுந்த பெயர் :-)
என்னால் முடிந்தது 'ஏர்டெல்'க்கு போன் போட்டு ஒரு மணிநேரம் பேசினேன். பிறகு ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு ticket ஒன்றை ஓப்பன் செய்துள்ளேன். பார்க்கலாம்.
எப்படியோ கொஞ்ச நாட்களுக்கு எல்லோருக்கும் கொஞ்சம் நிம்மதி. அப்பாடா
rediff: Are Internet Service Providers blocking blogs?
More Updates follow..
பிளாக்ஸ்பாட் படிக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்கு இதோ ஒரு வழி
நீங்கள் செய்ய வேண்டியது
1. இந்த Tor என்னும் மென்பொருளை இந்த இடத்திலிருந்து http://www.vidalia-project.net/dist/vidalia-bundle-0.1.1.22-0.0.7.exe டவுன்லோட் செய்யவும்.
2. செய்முறை விளக்கத்தை ஒழுங்காக படிக்கவும் http://tor.eff.org/docs/tor-doc-win32.html.en
3. கீழே உங்கள் உங்கள் கணிணியில் (P) பச்சையில் தெரிந்தால் எல்லாம் சுபம். நீங்கள் blogspot.com எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்க்கலாம். என்ன கொஞ்சம் மெதுவாக இருக்கும்.
ஏதாவது பிரச்சனை இருந்தால் செல்லுங்கள் :-)
Posted by IdlyVadai at 7/17/2006 10:09:00 PM 13 comments
Friday, July 14, 2006
மார்டன் அல்ஜீப்ரா
எனக்கு அல்ஜீப்ரா என்றால் ரொம்ப பிடிக்கும். அதனால் என்னை கணக்கு ராமானுஜம் என்று நினைத்துவிடாதீர்கள்!.
யாராவது expand (a + b)2 என்ன என்றால் டக்கென்று a2 + 2ab + b2 சொல்லிவிடுவோம். அதே போல் (a + b)3 என்றால் இன்னும் கொஞ்சம் யோசித்துவிட்டு a3 + 3a2b + 3ab2 + b3 . இது எப்படி வருகிறது என்றால்
(a + b)3 = (a+b)2(a+b) = (a2 + 2ab + b2)(a + b) அதாவது
a2 + 2ab + b2
a + b
____________________
a3 + 2a2b + ab2
a2b + 2ab2 + b3
_____________________
a3 + 3a2b + 3ab2 + b3
_____________________
(a + b)4 என்றால் டென்ஷன் ஆகிவிடுவோம். கவலைப்படாதீர்கள்.
என் பழைய கணக்கு புத்தகத்தை நேற்று பார்த்த போது (a + b)n க்கு சுலபமாக விடை எழுதியிருந்தேன். நீங்களும் உங்கள் குழந்தைகளுக்கு இதை சொல்லித்தரலாமே ?
சுலபமான வழி இங்கே
Posted by IdlyVadai at 7/14/2006 12:38:00 PM 28 comments
வித்யாவுக்கு வாழ்த்துக்கள் !
‘அரவாணி’ என்றதும் உங்களுக்கு என்ன நினைவுக்கு வருகிறது?
அடிக்கும் நிறத்தில் உடையணிந்துகொண்டு, கையைத் தட்டி பாட்டுப் பாடி காசு பறிக்கிற கூட்டம்.. நாணி, கோணி நெளியும் மனிதர்கள்.. இவைதானே? ஆனால், இந்த அடையாளங்கள் எதுவுமின்றி, நம்முள் ஒருவராக, வாழ்ந்து வருபவர்தான், ‘லிவிங் ஸ்மைல்’ வித்யா.
‘லிவிங் ஸ்மைல்’? உருவத்தில் ஆணாகவும் உணர்வு களில் பெண்ணாகவும் பிறந்து, அந்த பாலின குழப்பங் களுடனே வளர்ந்து, சோகங்கள் மட்டுமே சொந்தமாகிப் போனாலும், தன் பெயரிலாவது புன்னகை வாழட்டுமே என்று அவர் சேர்த்துக் கொண்ட பட்டப் பெயர்தான் ‘லிவிங் ஸ்மைல்’.
வித்யா ஒரு எம்.ஏ. பட்டதாரி. சமூகத்தின் கேலி, கிண்டல், அவமானம், புறக்கணிப்பு அனைத்தையும் சகித்து.. அந்த சகிப்புத்தன்மை என்கிற ஆயுதத்தின் மூலமே ஒரு பெரிய அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறார் அவர்.
ஆம்! நீதிமன்றம் ஏறி நியாயம் கேட்காமலே.. பேனர்கள் ஏந்தி போராடாமலே.. கத்தியின்றி, சத்தமின்றி, பெரும் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். மதுரையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் வித்யா, அங்கேயே ஒரு ‘லேடீஸ்’ ஹாஸ்டலில் மற்ற பெண்களுடனும் தங்கியிருக்கிறார்! அரவாணிகள் என்றாலே விரட்டியடிக்கும் சமூகத்தில், அவருக்கு இதை விடவும் மிகப்பெரிய அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்?
யதார்த்தத்தின் போக்கிலேயே தானும் சென்று, கொஞ்சம் கொஞ்சமாக தனக்கான அடையாளத்தைப் பெற்று வரும் அவரது இயல்பு, மற்ற அரவாணிகளிடம் இருந்து அவரை வேறுபடுத்திக் காட்ட.. அதற்காகவே அவரை சந்தித்தோம்.
மதுரை, அரசரடியில் உள்ள ‘தமிழ்நாடு தியாசபிகல் செமினரி’ வளாகத்தில் இருக்கிற பண்டித ரமாபாய் பெண்கள் விடுதியில், ஒரு ஞாயிறு மதியப் பொழுதில் தனக்கும் தன் அறைத் தோழிக்குமாக மதிய உணவு வாங்கிக்கொண்டு திரும்பியவர், நம்மைப் பார்த்ததும் தோழமையுடன் புன்னகைத்து வரவேற்றார்.
முரட்டு ஜீன்ஸ்.. எளிமையான காட்டன் டாப்ஸ்.. சின்ன கிளிப்புக்குள் அடங்காமல் பறந்த கூந்தலில் மருதாணியின் பழுப்பு நிறம் ஏறியிருக்க, மஞ்சள் குளித்த முகம் பின்மதிய வெயிலில் மினுமினுத்தது. சிரிக்கும்போது எட்டிப் பார்க்கும் சிங்கப் பற்கள் முகத்துக்குக் களை சேர்க்க, 24 வயதிலும் ஒரு பள்ளிச் சிறுமி போன்ற மிரட்சி.. கண்களில் நிரந்தரமாக!
‘‘உங்களைப் பத்தி சொல்லுங்க வித்யா..’’ என்றதும் ஒரு வெறுமையான சிரிப்புடன் துவங்கினார்.
‘‘திருச்சிதான் சொந்த ஊர். எல்லாரையும் போலதான் நானும் ஒரு இயல்பான குடும்பத்துல மூணாவதா பொறந்தேன். ரெண்டு அக்கா.. கல்யாணமாயிடுச்சு! ஒரு தங்கச்சி, எட்டாவது படிக்குது. நான் ஆணா பொறந்தாலும், சின்ன வயசுலயே பெண்மைக்கான உணர்வுகள், விருப்பங்கள் எனக்குள்ள மெலிதா இருந்தது. அக்காக்களோட ட்ரெஸ்ஸை அறைக்குள்ள இருக்கும்போது போட்டுப் பார்க்கிறது, எப்பவும் பொம்பளைப் புள்ளைங்க கூடவே செப்புச் சாமான் வச்சு வெளையாடறதுனு இருப்பேன். வீட்டுல திட்டு வாங்க. ஆனாலும், ஸ்கூல் ஃபைனல் முடிக்கிற வரை எனக்கு இதனால பிரச்னை எதுவும் இல்ல.
காலேஜ் போனதும்தான் ரொம்ப பாதிக்கப்பட்டேன். ‘பெண்ணாக இருக்கணும்’கிற என்னோட உணர்வுப் போராட்டம் ஒரு பக்கம்.. என் நடை, உடை, செய்கை களைப் பார்த்து சக மாணவர்கள் பண்ற கேலியும் கிண்டலும் தந்த மனஉளைச்சல் இன்னொரு பக்கம்னு ரொம்ப துடிச்சுப் போயிட்டேன். அந்த நிலையிலயும் நான் பி.எஸ்சி. பாஸ் பண்ணினேன்னா, எனக்கு படிப்பு மேல இருந்த ஆர்வம்தான் அதுக்குக் காரணம்.
இயல்புலயே நான் கொஞ்சம் ரிசர்வ்டு டைப். எனக் குள்ள எழுந்த குழப்பங்கள், என்னை இன்னும் ஒதுங்க வச்சது. தனிமையை அதிகமா நாட ஆரம்பிச்சேன். அதுக்கு எனக்கு துணையாக இருந்தது புத்தகங்களும் நாடகங்களும்தான். என்னோட வலிகளுக்கான வடிகாலா அது ரெண்டும்தான் இருந்தது’’ - தெளிவாகப் பேசிக் கொண்டே போன வித்யா, இந்தக் குழப்பங்களுக்கு இடை யிலேயே எம்.ஏ., மொழியியலும் படித்திருக்கிறார்.
‘‘கல்லூரி நாட்கள்ல ‘ஆண் உருவத்துல இருந்துக் கிட்டு, பெண்ணா வெளிப்படறதனாலதானே இந்த மரண அவஸ்தை? பெண்ணாவே மாறிட்டா என்ன?’ங்கிற எண்ணமும் ஆர்வமும் தீவிரமாச்சு. ‘கஷ்டமோ, நஷ்டமோ.. அது நம்ம குடும்பத்தை பாதிக்கவேண்டாம். நாமளே எதிர்கொள்ளலாம்’னு முடிவு பண்ணித்தான் எம்.ஏ முடிச்சதும் வீட்டுல சொல்லிக்காம, சென்னைக்கு கிளம்பிட்டேன்.
சென்னையில எனக்குத் தெரிஞ்ச அரவாணிகள்கிட்ட என் ஆசையைச் சொன்னேன்.. அவங்க ‘பாம்பே, பூனா மாதிரி நகரங்கள்லதான் இதுக்கான ஆபரேஷன் பண்றாங்க! ஆனா, அதுக்கு நிறைய செலவாகும்’னு சொன்னாங்க. ஆனாலும், எம்.ஏ வரைக்கும் நான் படிச்சிருக்கறதால ஏதாவது வேலை பார்த்து சம்பாதிச்சு எப்பிடியாவது ஆபரேஷன் பண்ணிக்கணும்ங்கிற வெறியோட பூனாவுக்குப் போய் இறங்கினேன். ஆனா, பூனாவுல நான் சந்திச்ச அந்த உலகம் ரொம்பவும் பயங்கரமானது.. வேதனைமிக்கது..’’ என்றவரின் கண்களில் அந்த கோரத்தின் தாக்கம் தெரிந்தது. அவரே தொடரட்டும் என அமைதியாகக் காத்திருந்தோம்.
‘‘அங்கே அரவாணிகளோட மெயின் பிசினஸ் ‘கடை கேக்குறது’ (பிச்சையெடுப்பது)தான். ‘நான் படிச்சிருக் கேன்.. ஏதாவது வேலை பார்த்து, சம்பாதிக்கப் போறேன்’னு சொன்னதும், ஏதோ நான் சொல்லக் கூடாததை சொல்லிட்ட மாதிரி நக்கலா சிரிச்சாங்க, அங்கே நான் சந்திச்ச அரவாணிங்க. இருந்தாலும் அதையெல்லாம் கண்டுக்காம, டிரெயின்ல கீ-செயின், மொபைல் கவர் மாதிரி பொருட்களை விக்க ஆரம்பிச்சேன். ஆனா, கடைசியில அவங்களோட ஏளனச் சிரிப்புதான் ஜெயிச்சது. ஒருத்தரும் எங்கிட்ட ஒரு பொருள்கூட வாங்கல. வாங்காதது மட்டுமில்ல, கேலி பண்ணி கேவலப்படுத்தினாங்க.
‘எங்க பேச்சைக் கேக்காம வியாபாரத்துக்குப் போனேல்ல.. பார்த்தியா, என்ன ஆச்சு?’ அப்டீனு சொல்லி, அங்கேயிருந்த அரவாணிகள் என்னை சிறுமைப்படுத்துனாங்க. உழைக்கணும்னு கிளம்பி, இப்படி ஃபெயிலியர் ஆகிட்டதால, ஒரு தப்பான முன்னுதாரணமா ஆகிட்டோமேனு ரொம்ப வருத்தப்பட்டேன். வேற வழியே தெரியாம, கடைசியா நானும் ‘கடை கேக்க’த் தொடங்கினேன்!’’ - இதைச் சொல்லும்போது, குரல் மிகவும் கமறி, கலங்கிய கண்களை மறைக்க தலை கவிழ்ந்து, அவமானத்தால் முகம் சிவக்க.. குறுகிப் போனார் வித்யா. சில வினாடிகள் கழித்துத் தொடர்ந்தார்..
‘‘பிச்சையெடுக்கிறது எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா? இருந்தாலும், என் தோற்றத்துனால நான் தினம் தினம் சந்திக்கற அவமானத்தை நினைச்சு, ‘கொஞ்ச நாள்தானே!’னு சமாதானத்தோட, அந்த ஈனத் தொழிலைச் செஞ்சேன். தொடர்ந்து ஏழு மாசம் கடை கேட்டதில ஆபரேஷனுக்கு தேவையான பணம் கிடைச்சிடுச்சு. அதுக்கப்புறமா பூனாவுலயே ஆபரேஷன் பண்ணிக்கிட்டேன்!’’ என்றவர், பெண்ணாக மாறும் தனது கனவு நனவானதும் சொந்த மண்ணுக்கே போய் உழைத்துச் சம்பாதிக்கிற ஆசையில் மதுரை வந்திருக்கிறார்.
‘‘இங்கே வந்து ஒவ்வொரு இடமா வேலை கேட்டு ஏறி இறங்கினேன். என்னோட தோற்றத்துல வித்தியாசம் கண்டுபிடிக்க முடியாத அவங்க, என் சர்டிஃபிகேட்ஸ்ல ‘பாலினம்: ஆண்’னு எழுதியிருந்ததைப் பார்த்ததும், அப்படியே பின்வாங்கினாங்க. என் முழுக் கதையையும் சொல்லி, ‘நான் ஒழுங்கா வேலை பார்த்து, கெளரவமா வாழ விரும்பறேன்’னு சொன்னாலுமே, ஏத்துக்கறதுக்கு தயாரா இல்ல. அவங்களையும் குற்றம் சொல்ல முடியாது. அவங்க நிலையில நான் இருந்திருந்தாலுமே அப்படித்தான் நடந்திருப்பேனோ என்னவோ? அதனால பொறுமையா முயற்சி செஞ்சேன்.
கடைசியா, என் வார்த்தைகளை நம்பின இந்த கம்பெனிக் காரங்கதான் இன்டர்வியூ வச்சு என்னை தேர்ந்தெடுத்து, ‘இ.டி.பீ. அசிஸ்டன்ட்’ வேலை கொடுத்திருக்காங்க. கெளரவமான வாழ்க்கை கிடைச்சிருக்கு. ஒவ்வொரு மாசமும் நான்கு இலக்க சம்பளம் வாங்கும்போது ‘இது கனவா, நனவா’னுதான் பிரமிப்பா இருக்கு!’’ - அவர் முகத்தில் கவலை ரேகை மறைந்து, பிரகாசம் தெரிகிறது.
‘‘சரி, இந்த லேடீஸ் ஹாஸ்டல்ல எப்படி சேர்ந்தீங்க?’’ என்றோம்.
‘‘அதுக்கும் நான் பொறுமையைத்தான் ஆயுதமா எடுத்துக் கிட்டேன். இங்கேகூட முதல்ல என்னை அனுமதிக்கவே யோசிச்சாங்க. அப்புறம், எங்க மேனேஜர் கொடுத்திருந்த சிபாரிசு லெட்டரைப் பார்த்துதான் கொஞ்சம் தயக்கத் தோடவே ஏத்துக்கிட்டாங்க. இது எதையுமே நான் தப்பா நினைக்கல. பெண்கள் பாதுகாப்பா தங்கற இடத்துல, என்னை.. அதுவும் முன்னே பின்னே தெரியாம எப்படி அனுமதிப்பாங்க?
முதல்ல, இங்கே ஹாஸ்டலை ஒட்டியிருக்கற கெஸ்ட் ரூமைத்தான் எனக்கு ஒதுக்கினாங்க.. ஆனா, கொஞ்ச நாள்லயே, நாகரிகமான என்னோட நடவடிக்கைகளைப் பார்த்துட்டு, மெயின் ஹாஸ்டல்லயே எனக்கு இடம் ஒதுக்கினாங்க. அதை எனக்குக் கிடைச்ச பெரிய வெற்றியா என் மனசு கொண்டாடிச்சு. இப்ப, நானும் அவங்கள்ல ஒருத்தியா தங்கியிருக்கறேன். பாதுகாப்பான சூழல்ல, கெளரவமா இருக்கறேன்ற நினைப்பே எனக்கு இன்னொரு பிறப்பு கிடைச்ச மாதிரி இருக்கு! இந்த அங்கீகாரத்துக்காகத்தானே நான் இத்தனை நாள் தவமிருந்தேன்!’’ - என்று சொல்கையில் கண்கள் பளீரிடுகின்றன வித்யாவுக்கு.
அரவாணிகளுக்காக, அவர்களின் முன்னேற்றத்துக்காக நிறைய செய்ய வேண்டும் என்கிற தாகம் நிறை யவே இருக்கிறது வித்யாவுக்கு.
‘‘ ‘ஆண்’, ‘பெண்’ மாதிரி நாங் களும் ஒரு ‘பாலினம்’னு மக்களை புரிஞ்சுக்க வைக்கறதுதான் என்னோட கனவு.. லட்சியம் எல்லாம்! முதல்ல ஒரு வக்கீல் மூலமா என் சான்றிதழ்கள்ல பாலின பெயரை சட்டப்பூர்வமா மாத்திட்டு, அப்புறம் பாங்க் அக்கவுன்ட், டிரைவிங் லைசன்ஸ்னு ஒவ்வொண்ணா முன்னேறணும்! அப்பதான் எனக்குப் பின்னால வர்ற அரவாணிகளுக்கு நான் ஒரு நல்ல முன்னுதாரணமா இருக்க முடியும். குழப்பத்தோட வர்ற இளம் அரவாணிகளுக்கு கவுன்சிலிங் கொடுத்து, வேலைவாய்ப்புக்கு உதவணும். இதையெல்லாம் கண்டிப்பா நான் சாதிப்பேன்கிற நம்பிக்கை இருக்கு. ஏன்னா, சமூகத்தோட கேலி, கிண்டல்களால மனசொடிஞ்சு போய் பிச்சை எடுத்து திரியற சராசரி அரவாணி இல்ல நான்.. ஆயிரத்துல ஒருத்தி.. அபூர்வமான பிறவி!’’ - உற்சாகமாக முடிக்கிறார்.
கேலிப் பார்வைகளை ஆச்சர்யப் பார்வைகளாக மாற்றிக் காட்டிய வித்யாவின் வெற்றிக்குக் காரணம்.. அந்த ஏளனப் பேச்சுக்களை எப்போதும் அவர் ஞாபகத்தில் வைத்திருப்பதும், அவை ஜெயித்துவிடக் கூடாது என்பதற்கு அவர் எடுத்துக் கொள்கிற முயற்சியும் கவனமும்தான் என்பது புரிகிறது! அவருக்கு மட்டு
நன்றி: ஆனந்த விகடன்.
Posted by IdlyVadai at 7/14/2006 07:39:00 AM 20 comments
Thursday, July 13, 2006
பிள்ளையாரும் தமிழ்மண நிர்வாகமும்
பிள்ளையார்: தமிழ்மண நிர்வாகியாக கூப்பிட்டு இருக்காங்க
குரங்கு: 'பிள்ளையார் பிடிக்க குரங்காகிப் போன' கதையாக ஆகிவிடபோகிறது. ஜாக்கிரதை
Posted by IdlyVadai at 7/13/2006 07:23:00 PM 19 comments
Wednesday, July 12, 2006
பிரதமர் மன்மோகன் சிங் உரை
இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது. தொடர்ச்சியாக நடந்த குண்டு வெடிப்புகளில் இருந்து மீண்டு ஸ்ரீநகர் மற்றும் மும்பை நகர மக்கள் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியிருப்பதன் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது, என பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். மும்பை தொடர் குண்டு வெடிப்பை அடுத்து பிரதமர் மன்மோகன் சிங் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: தொடர் குண்டு வெடிப்பு நடந்த மறுநாளே மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் மாமூல் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். அவர்களுக்கு நான் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது என்பது இதன்மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாம் வல்லமை உள்ளவர்கள் என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் அரசு தேவையான உதவிகளைச் செய்யும். ஒருங்கிணைந்த இந்தியாவின் அடையாளச் சின்னமாக மும்பை மீண்டும் எழுந்து நிற்கும். மீண்டும் ஒரு முறை சொல்கிறேன் இந்தியாவை யாரும் மண்டியிடச் செய்ய முடியாது. இந்தியாவின் முன்னேற்றப் பாதையில் யாரும் குறுக்கே வர முடியாது. நாட்டின் பொருளாதார சக்கரம் தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருக்கும். இந்தியா தொடர்ந்து மேலான நிலைமையை அடையும். உலக அரங்கில் நிமிர்ந்து நிற்கும். மும்பை மற்றும் ஸ்ரீநகர் மக்கள் மீண்டும் தீவிரவாதத்தின் ரணத்தை தாங்கியுள்ளனர். இந்த துயரமான நேரத்தில் நாடே அவர்களின் பக்கம் இருக்கும். நமது நாட்டின் எதிரிகள் நமது அமைதி மற்றும் வளர்ச்சியை சீர்குலைக்க முற்படுவது இது முதல் முறையல்ல. இதுபோன்ற நேரங்களில் இந்தியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நிற்பர் என்பதை அந்த தீய சக்திகள் இன்னும் உணர்ந்து கொள்ளவில்லை. துயர சம்பவத்தை எதிர்கொள்வதில் போலீசார், பாதுகாப்புப் படையினர், ரயில்வே அலுவலர்கள், தீயணைப்பு படையினர், மருத்துவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் இதர பலர் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். அவர்களை நான் மனதார பாராட்டுகிறேன். இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தேவையான உதவிகளை அரசு செய்யும். இந்த தீவிரவாத சவால்களை எதிர்கொள்ள என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதையெல்லாம் அரசு செய்யும். தீவிரவாதத்திற்கு எதிரான இந்த போரில் நாம் வெற்றி பெறுவோம். நம்முடைய மன உறுதியை யாராலும் சீர்குலைக்க முடியாது. சகோதர, சகோதரிகளாகிய நீங்கள் தொடர்ந்து அமைதியாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். வதந்திகளை நம்ப வேண்டாம். நம்மை யாரும் பிரித்து ஆள அனுமதிக்கக் கூடாது. நமது ஒற்றுமையில் தான் நமது பலம் உள்ளது. ஒரே மக்களாக, ஒரே நாடாக நாம் இணைந்து நிற்போம். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
Posted by IdlyVadai at 7/12/2006 11:06:00 PM 5 comments
குண்டுவெடிப்பு செய்திகள்..
சபாஷ் மும்பை
மும்பையில் குண்டு வெடித்த 3 மணி நேரத்தில் இயல்பு நிலை திரும்பியது. மும்பையில் நேற்று மாலை 6 மணி முதல் 6.30 மணிக்குள் 8 இடங்களில் ரெயிலில் குண்டு வெடித்தது. இதனால் மும்பை நகரம் முழுவதும் பெரும் பீதியும் பதட்டமும் நிலவியது. புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விட்டன.
ரெயில் பயணிகள் நடுவழியில் தவித்தனர். அதே சமயம் குண்டு வெடிப்பில் பலியானவர்களை மீட்பதிலும் காயம் அடைந்தவர்களை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பதிலும் மற்ற பயணிகள் ஈடுபட்டனர்.
ரெயில்வே போலீசாரும் மருத்துவ குழுவினரும் வரும் வரை காத்திராமல் பயணிகளும் அருகில் வசித்த பொது மக்களும் ஓடி வந்து காயம் அடைந்தவர்களை தூக்கிக்கொண்டு அருகில் இருந்த ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர்.
தண்டவாளத்தில் ஆங்காங்கே சிதறìக் கிடந்த உடல்களையும் சேகரித்து ரெயில் நிலையங்களுக்கு கொண்டு வந்தனர்.
ரெயில் பயணிகள் பலர் ரெயில்வே போலீசார் மீது புகார் கூறினார்கள். குண்டு வெடித்ததும் உதவிக்கு உடன டியாக ரெயில்வே போலீசார் வரவில்லை. ரெயில் நிலையங்களில் போலீஸ் பாதுகாப்பே இல்லாமல் இருந்தது என்று ஆவேசத்துடன் கூறினார்கள்.
குண்டு வெடித்த போது மும்பையில் பலத்த மழை பெய்ததால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது.
செல்போன்கள் செயல் இழந்ததால் காயம் அடைந்த பயணிகள் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த னர். வீடுகளில் இருந்தவர்களும் வெளியில் சென்ற தங்களது உறவினர்கள் கதி என்ன என்பதை அறிய முடியாமல் பதட்டம் அடைந்தனர்.
இதே போல் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மும்பையில் வசிக்கும் தங்களது உறவினர்களுடன் தொடர்பு கொள்ள முடியவில்லை.
இதற்கிடையே குண்டு வெடித்த தகவல் கிடைத்ததும் ரெயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து வந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினார்கள்.
3 மணி நேரத்தில் நிலைமை சீரடைந்தது. குண்டு வெடிப்பில் சேதம் அடைந்த ரெயில் பெட்டிகள் ஆங்காங்கே தனியாக கழற்றி விடப்பட்டது. மீண்டும் 9.45 மணி அளவில் ரெயில்கள் ஓட ஆரம்பித்தன.
இரவு 9.55 மணிக்கு விரார்-வசாய் இடையே முதலாவது ரெயில் ஓடத் தொடங்கியது. அடுத்து 10.45 மணிக்கு சர்ச்கேட்-பந்தரா இடையேயும் 11.05 மணிக்கு கோரேகான்-போரேவிலி இடையேயும் 11.30 மணிக்கு பந்தரா-அந்தேரி இடையே துறைமுகம் மார்க்கத்திலும் ரெயில்கள் இயக்கப்பட்டன.
அதுவரை ரெயில் நிலையங்களில் தவித்த பயணி கள் நள்ளிரவில் வெகு நேரம் கழித்து வீடு திரும்பி னார்கன்.
இன்று காலை மும்பை நகரம் சகஜ நிலைக்கு திரும்பியது. பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. மின்சார ரெயில்களும் வழக்கம் போல் ஓடின.
தொலை தூரங்களில் உள்ள அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்பவர்கள், வழக்கம் போல் மின்சார ரெயில்களில் ஏறிச் சென்றனர்.
வர்த்தக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்பட்டன. சாலையோரத்தில் மக்கள் எல்லோருக்கும் தண்ணீர், உணவு கொடுத்து அசத்தினார்கள். சபாஷ் மும்பை.
பிரதமர் மன்மோகன் சிங் இன்று இரவு தூர்தர்ஷனில் உரை
பிரதமர் மன்மோகன் சிங் இன்று தூர்தர்ஷனில் நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.இந்த வார இறுதியில் பிரதமர் மும்பை வரவிருப்பதாகவும், மும்பை நிலவரத்தை அவர் தீவிரமாக கண்காணித்து வருவதாகவும் அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மும்பையில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக அவர் இன்று இரவு தூர்தர்ஷனில் உரையாற்ற உள்ளார்.
தீவிரவாதிகள் குறித்து முக்கிய தடயம்
* மும்பை குண்டு வெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகள் பற்றி சில தடயங்கள் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நாசிக், அவுரங்காபாத் உட்பட பல நகரங்களுக்கு புலனாய்வு பிரிவினர் விரைந்துள்ளனர். மேலும் மாஹிம், மாதுங்கா பகுதியில் பென்சில் வெடிகுண்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தடவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தில் லஷ்கர்}இ}தொய்பா மற்றும் சிமி என்னும் இஸ்லாமிய மாணவர் இயக்கம் ஆகியவற்றின் கைவரிசை இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
* இந்தியாவில் மத வெறியை தூண்டி விட்டு அதனால் ஏற்படும் வன்முறையில் ரத்தம் குடிக்கும் நரியாக பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் சதிச் செயல்களை பல தடவை இந்திய உளவுத்துறை தொடக்கத்திலேயே கண்டு பிடித்து அழித்துள்ளது. ஆனால் இந்த தடவை உளவுத்துறை கண்ணில் தீவிரவாதிகள் மண்ணை தூவி விட்டு நாசவேலையை அரங்கேற்றி விட்டனர்.
எல்லாம் நடந்து முடிந்த பிறகு உளவுத் துறையினர் இப்போது தான் சுறு சுறுப்பாகி உள்ளனர். குண்டு வெடிப்பு ஸ்டைலைப் பார்த்து விட்டு, இது லஷ்கர்-இ-தொய்பா கைவரிசை தான் என்ற முடிவுக்கு அவர்கள் வந் துள்ளனர். தடயவியல் ரிப் போர்ட் வந்ததும் அடுத் தடுத்து உண்மை களை கண்டு பிடிக்கப் போவதாக உள வுத்துறை அதிகாரிகள் கூறி உள்ளனர்.
முதல் கட்ட ஆய்வில், அல்- கொய்தா வகுத்து கொடுத்த திட்டத்தை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் உள்ளூர் சிமி (இந்திய இஸ்லாமிய மாணவர்கள் இயக்கம்) ஆதரவாளர்கள் துணையுடன் நிறைவேற்றி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நோக்கமே வர்த்தக தலைநகரான மும்பையை சீர்குலைப்பதுதான். அதற்கு சிமி ஆதரவாளர்கள் உதவி இருக்கிறார்கள்.
மும்பையில் சிமி இயக்கத்தினர் ஏராளமானோர் இருக்கின்றனர். அவர்கள் தான் ரெயில் பெட்டிகளில் குண்டுகளை கொண்டு போய் வைத்துள்ளதாக உளவுத்துறையினர் சந்தேகிக்கிறார்கள்.
பிவாண்டியில் நடந்த மத கலவரம், பால் தாக்கரே மனைவி சிலை விவகாரத்தால் நடந்த சம்பவங்கள் தான் குண்டு வெடிப்புக்கு முக்கிய காரணங்கள் இருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. ஆனால் இதை உளவுத்துறை மறுத்துள்ளது. இந்த தொடர் குண்டு வெடிப்பு பல மாதங்களாக திட்ட மிட்டு நடந்துள்ளது என்று அறிவித்துள்ளனர்.
* மும்பையில் உள்ள காட்கோபர் பகுதியில் வசித்து வருபவர் சந்தீப்சிங். சிட்டி பைனான்சில் பணியாற்றிய இவர் தற்போது வேறு வேலை தேடி வருகிறார்.
நேற்று இவர் வேலை தேடுவதற்காக சர்ச்கேட் பகுதிக்கு சென்றிருந்தார். மாலை 5.30 மணிக்கு சர்ச்கேட் ரெயில் நிலையத்துக்கு சந்தீப்சிங் சென்றார். அப்போது ரெயில் நிலைய வாசலில் நின்றிருந்த 3 பேரை அவர் தற்செயலாகப்பார்த்தார்.
அந்த 3 பேரும் தங்களுக்குள் ஏரோ தீவிரமாக விசாரித்தப்படி நின்றனர். சந்தீப்சிங் அவர்களை நெருங்கி கடந்த போது, "பரிசை (வெடிகுண்டு) நாம் வைக்கலாம்'' என்ற வார்த்தை காதில் விழுந்துள்ளது. மேலும் அந்த 3 பேரில் ஒருவன், மற்றவர்களிடம், "சார் நான் பார்சல் டிரெயினை விட்டுவிட்டேன், மலாடு டிரெயினை நான் எப்படியும் பிடிச்சுடுவேன்'' என்று கூறி இருக்கிறான். இதை கேட்ட சந்தீப்சிங் அதை சீரியசாக எடுத்துக்கொள்ளாமல் சென்றுவிட்டார்.
இரவு 7 மணிக்கு வீட்டுக்கு போய் சேர்ந்த சந்தீப்சிங், மும்பை ரெயில்களில் 8 இடங்களில் தொடர் குண்டுகள் வெடித் ததை டி.வி.யில் பார்த்து அதிர்ந்தார். அப்போது தான் அவருக்கு சர்ச்ரோடு ரெயில் நிலையத்தில 3 பேர் நின்று தீவிரமாக பேசியது நினைவுக்கு வந்தது.
அவர்கள் மூவரின் நடை, உடை மற்றும் கையில் வைத் திருந்த பொருட்களை ஞாபகப் படுத்தி பார்த்த சந்தீப்சிங் அதிர்ச்சியில் உறைந்து போனார். அவர்கள் 3 பேரும் குண்டு வைத்த தீவிரவாதிகள் என்பதை உணர்ந்தார்.
இது குறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீ சாரும், தீவிரவாதிகள் தடுப்பு பிரிவினரும், உளவு பிரிவினரும் சந்தீப்சிங்கிடம் விசாரணை நடத்தினார்கள்.
சந்தீப்சிங் நேரில் பார்த்த 3 தீவிரவாதிகளில் 2 பேர் நீண்டதாடி வைத்து இருந்தனர். பதான்ரக உடை அணிந்து இருந்தனர்.
மூவர் கையிலும் 3 பெரிய பொட்டலங்கள் இருந்தன. கிப்ட் பேப்பர் போட்டு அவை சுற்றப்பட்டு இருந்தன. அந்த பார்சலுடன் அவர்கள் ரெயில்களில் ஏறி உள்ளனர்.
சந்தீப்சிங் சொன்ன தகவல்களை போலீசார் பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் தீவிரவாதிகள் உருவப்படம் வரையப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் யார் என்று மும்பை போலீஸ் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில் சந்தீப்சிங் கொடுத்த தகவல்கள் மூலம் தீவிரமாக உளவுத்துறை துப்பு துலக்கி வருகிறது.
உயிரிழந்தவர் - 190, காயம்மடைந்தவர் - 625
மும்பையில் நேற்று மாலை நடந்த ரயில் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 190 பேர் உயிரிழந்தனர். மேலும், 625 பேர் காயமடைந்தனர்.
Posted by IdlyVadai at 7/12/2006 06:34:00 PM 1 comments
பொதுவாழ்வில் விஜயகாந்த்
திருச்சியில் நடந்த தீ விபத்து பகுதியைப் பார்வையிடச் சென்ற நடிகர் விஜயகாந்த், கூட்டத்தைப் பார்த்து டென்ஷன் ஆகி, அவர்களை கட்டுப்படுத்தாமல் தேமே என்று நின்றிருந்த தனது உதவியாளரை பொதுமக்கள் முன்னிலையில் பளார் பளார் என அறைந்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியில் முகாமிட்டுள்ள விஜயகாந்த், தர்மபுரி படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். ஸ்ரீரங்கம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இந் நிலையில் நேற்று திருச்சியில் ஒரு இடத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இதில் பல குடிசைகள் எரிந்து போயின. இதையடுத்து அந்தப் பகுதிக்குச் சென்று மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காக மாலையில் அங்கு சென்றார் விஜயகாந்த்.
விஜயகாந்த்தைப் பார்த்ததும் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கூட்டமாக கூடி விஜயகாந்த்தை முற்றுகையிட்டு தங்களது கவலைகளைத் தெரிவித்தனர்.
பல பெண்கள் கண்ணீர் விட்டு அழுதபடி நீங்கள்தான் உதவி செய்ய வேண்டும் என்று கோரினர். சிலர் விஜயகாந்த்தின் கையைப் பிடித்து இழுத்து அழுது புலம்பினர்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால், விஜயகாந்த் ஒரு கட்டத்தில் டென்ஷன் ஆகி விட்டார்.
கூட்டத்தைக் கட்டுப்படுத்தாமல் அமைதியாக நின்று கொண்டிருந்த தனது உதவியாளரைப் பார்த்த விஜயகாந்த் கோபத்துடன் அவரை பளார், பளார் என அறைந்தார். பின்னர் அடி வாங்கிய உதவியாளர் கோபத்துடன், பொதுமக்களை போங்கய்யா அந்தப் பக்கம் என்று தள்ளி விட்டார்.
விஜயகாந்த்தும் முகத்தை கோபமாக வைத்துக் கொண்டு பார்க்கலாம், பார்க்கலாம் என்று கூறியவாறு அந்த இடத்திலிருந்து அகன்றார்.
போகும்போது கூட உதவியாளரை அவர் விடவில்லை. திட்டியபடியே போனார்.
நண்பரை அடிப்பது தவறல்ல நடிகர் விஜயகாந்த் விளக்கம் ( நன்றி தினமலர் )
ஸ்ரீரங்கம் தீ விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் கூறச்சென்ற தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூட்ட நெரிசலை சரிசெய்யாத தன்னுடைய உதவியாளரை அடித்து விட்டார். இதனால், எழுந்துள்ள சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் அடிவாங்கிய உதவியாளரை பத்திரிகையாளர் முன் அறிமுகப்படுத்தினார்.
தே.மு.தி.க., தலைவரும், நடிகருமான விஜயகாந்த் நடிக்கும் "தர்மபுரி' படத்தின் படப்பிடிப்பு ஸ்ரீரங்கத்தில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன் உள்ள தெருவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 16 வீடுகள் தீயில் எரிந்து நாசமாயின.
இதையறிந்த நடிகர் விஜயகாந்த் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு, தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தாத தன்னுடைய உதவியாளரை அறைந்து விட்டார். இந்த விஷயம் சில மீடியாக்களில் வெளியாயின.
கரூர் மாவட்ட அ.தி.மு.க.,வினர் இரண்டாயிரம் பேர் தே.மு.தி.க.,வில் இணைப்பு விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், பங்கேற்ற பத்திரிகையாளர்கள் முன், தன்னால் அடிக்கப்பட்ட உதவியாளரை அறிமுகப்படுத்தி விஜயகாந்த் கூறியதாவது:நான், இப்ராகிம், இவர் எல்லாரும் ஆரம்பம் முதலே ஒன்றாக இருந்து வருகிறோம். அவர்களை நான் அடிப்பதும், அவர்கள் என்னை அடிப்பதும் வழக்கமாக நடப்பது. இதில், பெரிதுபடுத்த ஒன்றுமில்லை. இப்போது நான் தலைவராகி விட்டதால், அவர்கள் என்னை அடிப்பதில்லை. இப்படியாவது என்னை "டிவி'யில் காட்டுகின்றனரே என்று நினைக்கும் போது சந்தோஷமாக உள்ளது. இதையே தேர்தலுக்கு முன்னர் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.இவ்வாறு விஜயகாந்த் "அடி' விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து பேசினார்
Posted by IdlyVadai at 7/12/2006 07:51:00 AM 19 comments
Rajdeep bombs Indian Hearts
“These pictures are now being beamed on all CNN networks all over the world. Indians all over the world watching CNN are now watching CNN-IBN. This is the power of CNN-IBN” - Rajdeep Sardesai, CNN-IBN
Posted by IdlyVadai at 7/12/2006 01:11:00 AM 14 comments
Tuesday, July 11, 2006
மும்பை தொடர் குண்டுவெடிப்பு
மும்பையில் ரயில் நிலையங்களில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. முதலில் கர் பகுதியில் ஓடும் மின்சார ரயிலில் குண்டு வெடித்தது. 2வதாக மிரா சாலை ரயில்நிலையத்திலும், 3வதாக மாதுங்கா ரயில் நிலையத்திலும் குண்டு வெடித்தது. 4வதாக ஜோகேஸ்வரி ரயில் நிலையத்தில் குண்டு வெடித்துள்ளது. 5வதாக போரிவில்லி பகுதியில் குண்டு வெடித்துள்ளது. மாலை 6.09 மணிக்கு முதல் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அனைத்து ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. உள்ளூர் தொலைப்பேசி தொடர்புகள் பாதிக்கப்பட்டுள்ளது. எல்லா குண்டு வெடிப்பு சம்பவங்களும் மும்பையின் மேற்கு பகுதியில் நடந்துள்ளது.
IBNLive
NDTV
update 1: 8:10pm - குண்டுவெடிப்பு 7 ஆக உயர்ந்துள்ளது, 60+ மரணம், பலர் காயம்
Mumbai Helpline Number: 022-22005388
Update 2: 8:20pm - 80 பேர் மரணம், 400 பேர் காயம்
Update 3: 9:45pm : I am in the process of getting the exact information. Before getting full information, it is not correct for the govt to disclose anything. We would take precautions but not a national alert. - Shivraj Patil, Home Minister
The series of blast in Jammu and Kashmir and Mumbai are shocking and cowardly attempts. My heart reaches out to all those affected by these blasts... Citizens of Mumbai have faced terror more than 10 years ago. I urge the people to stay calm, not believe rumours and carry on with their activities. - PM Statement
Our priority is to ensure that nothing untoward takes place as a result of the blast - Police Commissioner A N Roy
12 bodies recovered from Borivili and three from Khar stations - Police Commissioner A N Roy
Terror attacks planned - Home Ministry
No link between Mumbai, Srinagar blasts - Home Secretary
MUMBAI HELPLINE: (022) 22005388
COOPER HOSP: 26207254, 26207256
HINDUJA HOSP: 24451515, 24452222
Update: 9:50 - லல்லு மும்பை செல்கிறார், சோனியா அதிர்ச்சி, பாக் அதிபர் முஷ்ரப் கண்டித்துள்ளார்.
Update: 10:00pm : குண்டுவெடிப்பு படங்கள் ( NDTV வழியாக )
Update 10:10pm: - * மக்கள் பதட்டம் அடைய வேண்டாம் அமைச்சர் பாட்டீல் வேண்டுகோள்.
* சீரழிந்து விட்டது உள்நாட்டு பாதுகாப்பு மத்திய அரசு மீது அத்வானி பாய்ச்சல - மும்பையில் குண்டு வெடிப்பு நடந்த இடங்களைப் பார்வையிடவும், குண்டு வெடிப்பால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறவும் அத்வானியும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங்கும்மும்பை செல்கின்றனர்.
* தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த டி.ஜி.பி.,க்கு முதல்வர் கருணாநிதி நேரடி உத்தரவு
* டில்லி மெட்ரோ ரயில்நிலையங்களில் அபாய அறிவிப்பு
மும்பை குண்டு வெடிப்பு : பிரதமருடன் உள்துறை அமைச்சர் அவசர ஆலோசனை
* குண்டு வெடிப்பு சம்பவம் குறித்து விசரணை மேற்கொள்ளப்படும் - முதல்வர் விலாஷ்ராவ் தேஷ்முக் - இறந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50000 ரூபாயயுள் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.
Update 10:20pm - மும்பையில் செல்போன் இணைப்புகள் துண்டிக்கப்பட்டன.மேலும் தகவல்கள் பெற ஹெல்ப்லைன் 22005388 என்ற எண்ணுக்கும் , விசாரணைக்கு 131, 3061763 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கபட்டுள்ளது.
Update 10:30pm: 8 குண்டுவெடிப்பு என்று செய்தி.
Update 12/7/06 - 12:45am - மும்பை குண்டு வெடிப்பு : பாதிக்கப்பட்டவர்களை சோனியா, சிவராஜ் பாட்டீல், லாலு நேரில் பார்த்து ஆறுதல்.
தகவல் + உதவிக்கு இங்கு செல்லவும்
Messages from kith & Kin
Update 6:45am - தீவிரவாதிகளை கட்டுப்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசு முழுமையாக தோல்வி அடைந்து விட்டது என்பதையே மும்பை தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் காட்டுகிறது. இதுபோன்ற தீவிரவாத சம்பவங்களை கட்டுப்படுத்த உறுதியான, கண்டிப்பான சட்டங்களை கொண்டு வர வேண்டும். மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தீவிரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகள் விஷயத்தில் மென்மையான அணுகுமுறையை பின்பற்றுகிறது. மேலும், அவர்களுடன் நட்பும் காட்டி வருகிறது. - உமா பாரதி.
Posted by IdlyVadai at 7/11/2006 08:17:00 PM 31 comments
Monday, July 10, 2006
ஜெ பேட்டி - கேபிள் டிவி, எய்ம்ஸ், தயாநிதி, 3rd அணி...
கே: கேபிள் டிவி சட்டம் கடந்த ஏப்ரல் 24ந் தேதியே மாநில அரசுக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாக கூறப்படுகிறதே?
ப: ஆம். அப்போது நான் தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தேன்.
கே: கேபிள் டிவி சட்டம், உழவர் பாதுகாப்பு திட்டம், மோனோ ரெயில் திட்டம் வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?
ப: இது பற்றி என்னை கேட்பதை விட மக்களிடம் கருத்து கேட்டால் அவர்கள் தெளிவாக சொல்வார்கள். கேபிள் டிவி சட்டத்தை நான் கொண்டு வந்ததற்கு என்ன காரணம் என்பதை நன்கு அறிவீர்கள். இந்தியாவிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் சென்னையில் மட்டும் செட்டாப் பாக்ஸ் முறை அமுல்படுத்தப்பட்டது. இது சென்னை மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி. ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கேபிள் டிவி கொண்டு வருவதை முறியடிக்கவே இந்தச் சட்டத்தை கொண்டு வந்தோம்.
இந்தியாவில் உள்ள எல்லாப் பகுதி மக்களையும் போல சென்னை மக்களும் தாங்கள் விரும்புகின்ற சேனலை பார்ப்பதற்காக கொண்டு வந்த இந்தச் சட்டத்தை வாபஸ் பெற்றதன் மூலம் கருணாநிதிக்கு எப்போதும் குடும்ப நலம்தான் முக்கியம்; மக்கள் நலன் முக்கியம் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகி உள்ளது. தமிழக கவர்னரும் கருணாநிதி சொற்படி ஆடும் கைப்பாவை ஆகியிருக்கிறார்.
சென்னையை பொறுத்தவரை மெட்ரோ ரெயில் திட்டம் உகந்தது அல்ல. மோனோ ரெயில் திட்டம்தான் சென்னைக்கு உகந்த சரியான திட்டமாகும். இது பற்றி ஆதாரத்துடன் இன்னொரு நாள் விரிவாகச் சொல்கிறேன். உழவர் பாதுகாப்பு திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து இன்று விரிவான அறிக்கை கொடுத் திருக்கிறேன். இந்த திட்டத்தை ரத்து செய்ததன் மூலம் விவசாயிகளை பழி தீர்த்திருக் கிறார். அவர்களுக்கு மன்னிக்க முடியாத துரோகம் செய்திருக்கிறார்.
கே: எய்ம்ஸ் இயக்குனர் வேணு கோபால் நீக்கம் தொடர்பாக என்ன கூறுகிறீர்கள்?
ப: இதற்கு கோர்ட் தடையாணை வழங்கியுள்ளது. இது நாட்டிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ள விவகாரமாகும்.
கே: இதனால் அன்புமணியை பதவியிலிருந்து நீக்க வலியுறுத்துவீர்களா?
ப: இந்தியா போன்ற மாபெரும் நாட்டின் மத்திய அமைச்சரவையில் கேபினட் மந்திரியாக இருப்பதற்கு தகுதியில்லாதவர் அன்புமணி. வயது ரீதியாகவோ, அனுபவ ரீதியாகவோ தகுதியற்றவர். போதிய அறிவோ, பக்குவமோ, தன்மையோ இல்லாதவர். அவரை நீக்கினால் நாட்டுக்கு நல்லது.
ஆனால் அவரை நீக்குவதற்கு உரிய அதிகாரம் பிரதமருக்கு உள்ளதா என்று தெரியவில்லை.
கே: மத்திய அமைச்சர்கள் தயாநிதி மாறனும், அன்புமணியும் சொந்த ஆதாயம் கருதி செயல்படுவதாக கூறப்படுகிறதே?
ப: தயாநிதி இந்த நாட்டின் அமைச்சர் என்பதைவிட தமிழக அமைச்சர் போலவே செயல்படுகிறார்.
தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தான் அதிக நாட்கள் அவர் இருக்கிறார்.
சென்னையைத் தவிர வேறு மாநிலங்கள் இருப்பதாக அவருக்கு தெரியவில்லை.
இந்தியாவிற்கான அமைச்சர் என்ற உணர்வே அவருக்கு இல்லை. அது பற்றி அவருக்கு விளங்கவும் இல்லை.
கே: என்எல்சி பிரச்சனையில் பங்கு விற்பனையை மத்திய அரசு வாபஸ் பெற்றதற்கு கருணாநிதியின் வேகமான நடவடிக்கைதான் காரணம் என்று கூறுகிறார்களே?
ப: நான் ஏற்கனவே இது குறித்து தெளிவாக சொல்லியிருக்கிறேன். என்.எல்.சி. தொழிலாளர்களின் ஒற்றுமைக்கும், உறுதிப்பாட்டிற்கும் கிடைத்த வெற்றிதான் இது.
கே: திமுகவின் நடவடிக்கை காரணமாக பிரதமர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறதே?
ப: இது குறித்து பிரதமரிடம் தான் கேட்க வேண்டும். அவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்கு எப்படி தெரியும்.
கே: என்.எல்.சி. பிரச்சனையில் மத்திய அரசுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா?
ப: இது போன்ற யூகமான கேள்வி களுக்கு பதில் அளிக்க விரும்பவில்லை.
கே: நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற உள்ள எம்ஜிஆர் சிலை திறப்பு நிகழ்ச்சிக்கு செல்வீர்களா?
ப: நாடாளுமன்ற வளாகத்தில் வைக்க எம்ஜிஆர் சிலையை தயாரித்து அனுப்பி வைத்துள்ளோம். அதனை ஜனாதிபதி திறப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. ஆனால் அது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் இல்லை.
கே: தமிழகத்தில் மின்சார வெட்டு இருப்பதாக சொல்லப்படுகிறதே?
ப: ஆமாம். அறிவிக்கப்படாத மின்வெட்டு பல்வேறு பகுதிகளில் உள்ளது. இதனால் மக்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். மோசமான நிர்வாகத்துக்கு இது இன்னும் ஓர் அடையாளம்.
கே: உள்ளாட்சி தேர்தலில் புதிய கூட்டணி எதுவும் வருமா?
ப: ஏற்கனவே உள்ள கூட்டணி தொடரும். புதிய கட்சிகள் வந்தால் பரிசீலிப்போம்.
கே: அதிமுகவில் மாவட்ட செயலாளர்கள் பலரை மாற்றுகிறீர்களே, இந்த மாற்றம் தொடருமா?
ப: அதிமுகவை சீரமைக்கும் பணியை படிப்படியாக செய்து வருகிறேன்.
கே: 3வது அணி குறித்த முயற்சி எந்த அளவில் உள்ளது?
ப: இது குறித்து மற்றவர்களைத் தான் கேட்க வேண்டும். இப்போது 3வது அணி குறித்து எனக்கு எந்த அவசரமும் இல்லை, எந்த அவசியமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Posted by IdlyVadai at 7/10/2006 04:15:00 PM 0 comments