பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, June 29, 2006

நாங்க செய்யலை, ஆனா வருத்தப்படுகிறோம்

இன்று பல்வேறு நாளிதழ்களில் வந்த செய்திகள்

The Hindu
* We did not own up to killing: LTTE

* A confession of complicity: Anand Sharma

* An attempt to soften India's attitude" - Kaarthikeyan

* An insult to India: Swamy

* What Balasingham should understand - Hindu Editorial

தினமணி
* புலிகள் "வருத்தம்' அர்த்தமற்றது: நீதிபதி ஜெயின்

தினமலர்
* புலிகளுக்கு மன்னிப்பு வழங்கக்கூடாது* காங்கிரஸ் எம்.பி., ஆவேசம்

Read More...

Wednesday, June 28, 2006

ராஜீவ் படுகொலை - புலிகள் வருத்தம்

ராஜீவ் காந்தி படுகொலைக்கு விடுதலைப் புலிகள் இயக்கம் ""ஆழ்ந்த வருத்தம்'' தெரிவித்துள்ளது.

இந்தியாவுடன் ""புதிய உறவுக்கு'' அது அழைப்பு விடுத்துள்ளது. இதன் மூலம், இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இந்தியா ""செயலூக்கமான பங்காற்ற'' முடியும் என்றும் அது தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சிந்தாந்தவாதியான ஆன்டன் பாலசிங்கம், என்டிடிவி தொலைக்காட்சி சேனலுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

1991 மே 21-ம் தேதி பெண் மனித வெடிகுண்டால் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது, ""மாபெரும் வரலாற்று சோகம்'' என்று அவர் கூறியுள்ளார்.

அவரது பேட்டி வருமாறு:

அந்த சம்பவத்தைப் பொறுத்தவரையில்... அது ஒரு பெரும் சோகம்... மாபெரும் வரலாற்று சோகம்... அதற்காக நாங்கள் ஆழ்ந்த வருத்தம் தெரிவிக்கிறோம்.

கடந்த காலத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு பெருந்தன்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்று இந்திய அரசையும், இந்திய மக்களையும் அழைக்கிறோம்... மாறுபட்ட கண்ணோட்டத்தில் இனப் பிரச்சினையை அணுகுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

எந்தச் சூழ்நிலையிலும் இந்திய அரசின் நலன்களுக்கு எதிராக நாங்கள் செயல்பட மாட்டோம் என்று உறுதி அளித்துள்ளோம்.

இந்திய அரசுடன் புதிய நல்லிணக்கத்தை, புதிய உறவை ஏற்படுத்திக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.

கடந்த காலத்தை ஒதுக்கி வைத்து விட்டு, புதிய அணுகுமுறையைப் பின்பற்றினால், இலங்கை இனப் பூசலுக்குத் தீர்வு காண்பதற்கு, இந்தியா ஆக்கபூர்வமான பங்காற்ற வாய்ப்புள்ளது.

இவ்வாறு பாலசிங்கம் பேட்டியில் கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளின் பங்கை, பிரபாகரனுக்கு மிகவும் நெருக்கமான பாலசிங்கம் போன்ற புலிகள் அமைப்பின் உயர் தலைவர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டிருப்பது இதுவே முதல் முறை.

ராஜீவ் காந்தி படுகொலையில் தங்களுக்குள்ள தொடர்பை ஆரம்பத்தில் புலிகள் கடுமையாக மறுத்து வந்தனர். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என இந்திய புலனாய்வு அமைப்புகள் நிரூபித்த பிறகே அவர்கள் தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.

ஆனந்த் சர்மா: இது பற்றி, இந்திய அரசு சார்பில் உடனடியாக கருத்து தெரிவித்து, வெளியுறவுத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மா என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

புலிகள் இழைத்த கொடிய குற்றத்தை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள். பாலசிங்கத்தின் கூற்று, ராஜீவ் காந்தி படுகொலையில் புலிகளுக்கு உள்ள தொடர்பை வெளிப்படுத்தும் ஒப்புதல் வாக்குமூலம். படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்பது கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லோரும் நன்கறிந்த உண்மை என்றார் ஆனந்த் சர்மா.

நன்றி: தினமணி

தொடர்புடைய மற்ற சுட்டிகள்
தினத்தந்தி - மாபெரும் துயர சம்பவம் என்று வருத்தம்
ராஜீவை கொன்றதாக முதல்முறையாக
விடுதலைப்புலிகள் ஒப்புதல்

The Hindu - Rajiv assassination "deeply regretted'': LTTE

NDTV - LTTE regrets Rajiv assassination: Anton

New Indian Express - LTTE 'deeply regrets' Rajiv Gandhi's assassination

Read More...

Saturday, June 24, 2006

கண்ணாடி

Read More...

Friday, June 23, 2006

உஷார்! மீண்டும் வருகிறது, புலி ஆதரவு !

23/06/06 துக்ளக் தலையங்கம்


விடுதலைப் புலி ஆதரவுப் பிரச்சாரம் மீண்டும் தமிழகத்தில் தலைதூக்கி இருக்கிறது. நடக்கத் தொடங்கியிருப்பது, விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தேடுகிற வேலையே தவிர, இலங்கைத் தமிழர்களுக்கு நியாயம் காண்கிற முயற்சி அல்ல என்பதை, தமிழக மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். புலிகள் இலங்கையில் தங்களை பலப்படுத்திக் கொள்ள, அமைதிப் பேச்சுவார்த்தை காலத்தை (நாம் எதிர்பார்த்த மாதிரியே) பயன்படுத்திக் கொண்டார்கள். அந்த கட்டத்தில், அவ்வப்போது நிகழ்ந்து கொண்டிருந்த அவர்களுடைய அத்துமீறல்கள், இப்போது அராஜகங்களாக
உருவெடுத்து விட்டன. இவர்களுடைய சமீபத்திய கோரதாண்டவம், இலங்கையில் 60க்கும் மேற்பட்ட அப்பாவிகளை பலி வாங்கியது. இதற்கு முன் இலங்கை ராணுவ தளபதியை அவர்கள் தாக்கினார்கள். இதற்கெல்லாம் பதிலடியாக இலங்கை ராணுவம், விடுதலைப் புலி முகாம்கள் மீது தாக்குதல்களை நடத்தியது; நடத்துகிறது.




ஒரு அரசு வேறு எப்படிச் செயல்பட முடியும்? ஒரு தீவிரவாதக் கூட்டம், தலைவிரித்து ஆடி, அட்டூழியத்தைப் பொழிகிறபோது, வேடிக்கை பார்ப்பது ஒரு அரசின் வேலை அல்ல; அவர்களை ஒடுக்க, கடுமையான தாக்குதலை மேற்கொள்வது அரசின் கடமை. இதைத்தான் இலங்கை அரசு செய்தது.



இதை தமிழகத்தில் கூட்டம் போட்டுக் கண்டிப்பவர்கள், விடுதலைப் புலிகளின் கொடுமைகளைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. அவர்கள் தமிழ்த் தலைவர்களை எல்லாம் கொன்று போட்டதையோ; தங்களுக்கு உதவ முன்வராத அப்பாவித் தமிழர்களைக் கொன்று குவித்ததையோ; தமிழ்ச் சிறுவர்களை பலவந்தமாக அவர்களுடைய குடும்பங்களிலிருந்து பிரித்து, இலங்கை ராணுவத்துக்கு எதிராக கேடயமாகப் பயன்படுத்துவதையோ; தமிழர்களை மிரட்டி "வரி' என்ற பெயரில் பணம் பிடுங்குவதையோ – இங்கே பிரச்சாரக் கூட்டங்களை நடத்துகிறவர்கள் கண்டிக்கவில்லை.

"அகதிகள் நிலை அவலமல்லவா?' என்று கேட்கலாம். உண்மை; அகதிகளின் நிலை அனுதாபத்திற்குரியது. ஆனால் அப்படி அகதிகள் உருவாவதில், விடுதலைப் புலிகளின் பங்கு சாதாரணமானதா? அதை ஏன் சொல்வதில்லை, இங்கே கண்ணீர் சிந்தி கூட்டம் போடுகிறவர்கள்? இவர்கள் விடுதலைப் புலி பிரச்சாரகர்கள்; வன்முறை ஆதரவாளர்கள்; தீவிரவாதிகளின் நண்பர்கள் – அதனால்தான், ராஜீவ் காந்தி கொலை உட்பட, புலிகளின் கடந்த கால அட்டூழியங்களையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை; இன்றைய அராஜகங்களையும் கண்டிப்பதில்லை.




ஆகையால் இங்கே நடப்பது இலங்கைத் தமிழர் ஆதரவு கூட்டங்கள் அல்ல; விடுதலைப் புலிகள் பிரச்சாரக் கூட்டங்களே! அதைப் பற்றி எந்த சந்தேகமும் யாருக்கும் இருக்க வேண்டாம் என்ற எண்ணத்தினால்தானோ என்னவோ – ம.தி.மு.க. தலைவர் வைகோ, மதுரை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், விடுதலைப் புலிகளை மிகவும் பாராட்டி, அவர்களுடைய செயல்களை நியாயப்படுத்தி இருக்கிறார்.


"மத்திய அரசின் நிலை எதுவோ, அதுவே எங்கள் நிலை' என்று, வரவேற்க வேண்டிய வகையில் கூறிய தமிழக முதல்வரை, திருமாவளவன் கண்டித்திருக்கிறார்; அதை துரோகம் என்கிறார்!


இந்த விடுதலைப் புலி ஆதரவாளர்கள், சென்ற சில வருடங்களாக இப்படிப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தத் தயங்கினார்கள்; பொடா போயிற்று; விடுதலைப் புலிகள் தமிழகத்தில் இடம் தேட முயற்சிப்பதை கடுமையாகத் தடுத்த ஜெயலலிதா அரசு வீழ்ந்தது; இவர்களுக்குத் துணிவு வந்து விட்டது; கூட்டம் போட்டு, புலி ஆதரவு பிரச்சாரம் செய்யத் தொடங்கி விட்டார்கள்.

தி.மு.க. அரசு இதை அலட்சியப்படுத்தக் கூடாது. வன்முறையை ஆதரிக்கிறவர்களின் தொடர்புகளைக் கண்டறிந்து, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெயலலிதாவிற்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது; அ.தி.மு.க.வின் நண்பர்களாக, தன்னுடன் கைகோர்த்து நின்ற வைகோவும், திருமாவளவனும், மற்றொரு கைகொண்டு விடுதலைப் புலிகளுடன் கைகோர்த்து நிற்க முனைந்து விட்டார்கள் என்பதை உணர்ந்து – ஒன்று அவர்கள் சகவாசத்தை உதற வேண்டும்; அல்லது குறைந்தபட்சம், இந்த விவகாரத்தில் சந்தேகமற தனது நிலையை தெளிவுபடுத்தி, அது புலி ஆதரவாளர்கள் நிலையிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை அவர் தெளிவாக்க வேண்டும்.

அனைவருக்கும் ஒரு சொல் : விடுதலைப் புலிகள், இந்தியாவின் எதிரிகள். இந்நினைவகற்றாதீர்!


நன்றி: துக்ளக் 23/06/06




சு.ப.தமிழ்ச்செல்வன் பேட்டி

அமைதிக்கான கனவுகளைக் கழுவில் ஏற்றிவிட்டு மறுபடி ஆரம்பித்துவிட்டது ஆயுதங்களின் கோரத் தாண்டவம். குழந்தைகளின் கண்முன்னே தாய்மார்கள் பாலியல் வன்முறை செய்யப்படும் பெரும் துயரம், பிறப்புறுப்பில் வெடி வைத்துக் கொல்லப்படும் குரூரம், எப்போது ஷெல் வந்துவிழுமோ என பதுங்கு குழிகளில் பயந்து தவிக்கிற அவலம்... யுத்தத்தின் கொடூரமான இருட்டு ஈழத்தைச் சூழ்ந்திருக்கிறது.

ஒரு பக்கம் சிங்கள ராணுவம் வெறித்தனமான தாக்குதலைக் கட்ட-விழ்த்துவிட, புலிகளும் இன்னொரு ‘ஓயாத அலை’களுக்கு ஆக்ரோஷமாகத் தயாராகிறார்கள். இந்த நெருக்கடியான நிலையில், கிளிநொச்சியில் இருக்கும் விடுதலைப் புலிகளின் தலைமை அலுவலகத்தில், ஆலோசனையில் இருந்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் அளித்த பேட்டியிலிருந்து...

‘‘நான்காண்டு கால அமைதி முயற்சிகள் குலைந்து மீண்டும் யுத்த சூழல் உருவாக யார் காரணம்?’’

‘‘சிங்கள அரசாங்கமும், சிங்கள இனவாதிகளுமே காரணம். 2002-ல் ஈழத்தில் ஆக்கிரமித்திருந்த சிங்கள ராணுவத்தை முறியடித்து பல ராணுவ வெற்றிகளை புலிகள் ஈட்டிய போது, இலங்கை அரசு அடி பணிந்து பேச்சுவார்த்தைக்கு வந்தது. நார்-வேயின் அனு-சரணையோடும் சர்வதேச சமூகத்--தின் ஆதரவோடும் இரு தரப்பும் ஏற்றுக்-கொண்டு உருவாக்கப்பட்ட விஷயம்-தான் யுத்த நிறுத்த உடன்படிக்கை.

அப்படி இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயங்களை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறியதுதான் இப்போது உருவாகியிருக்கும் வன்முறைச் சூழலுக்குக் காரணம். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக எமது மக்கள் கொன்று அழிக்கப்பட்டும், சொந்த நிலத்திலிருந்து விலகி, அகதிகளாக்கப்பட்ட அவல நிலையிலும் இருக்கிறார்கள். அவர்களை மீண்டும் சொந்த நிலங்களில் குடியமர்த்தி, அங்கிருந்து ராணுவத்தை விலக்க வேண்டும் என்பது பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம். அதை இன்று வரை இலங்கை அரசு செய்யவில்லை. இன்னொன்று, துணைக் குழுக்களிடம் இருந்து ஆயுதங்கள் களையப்பட வேண்டும் என்பது. ஆயுதங்களைக் களைவதற்குப் பதிலாக, அவர்களுக்கு இன்னும் இன்னும் புதிய ஆயுதங்களைக் கொடுத்து, தமிழர் பகுதிகளில் வன்முறையை ஏவிவிடுகிறது அரசு. இம்மாதிரி நம்பிக்கைத் துரோகங்கள்-தான் இன்றைய வன்முறைச் சூழலுக்கு மிக முக்கியக் காரணம்.’’

‘‘அநுராதபுரத்தில், பேருந்தில் சென்ற 64 பேர் கண்ணிவெடியில் சிக்கிச் சிதறியதற்குப் புலிகள்தான் காரணம் என்று இலங்கை அரசு குற்றம் சுமத்தியிருக்கிறதே?’’

‘‘சிங்கள இனவாதிகள் தமிழர்களுக்கு மட்டுமல்ல, சிங்கள மக்களுக்குமே எதிரானவர்கள். தங்களுடைய சொந்த இனத்துக்குள்ளேயே எத்தனையோ கொலைகளை நிகழ்த்தியவர்கள்தான் அவர்கள். ஜே.வி.பி-யினுடைய கிளர்ச்சி காலகட்டங்களிலேயே ஆயிரக்கணக் கான சிங்கள மக்களை தென்னிலங்கை வீதிகளிலேயே ரப்பர் டயர் போட்டுக் கொளுத்தியவர்கள் அவர்கள். அதுபோலவே சர்வதேச அரங்கில் ஏற்பட்டு வரும் நல்லெண்ண மாற்றங்களை இல்லாதொழிக்கவும், ஒஸ்லோ பேச்சில் புலிகள் தமது நிலையைத் தெளிவுபடுத்திப் பேச்சுக்களை வெற்றிகரமாக முடித்து வந்ததைக் கொச்சைப் படுத்தும் நோக்கத்துடனும், துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, இப்படிப்பட்ட தாக்குதல்களை நடத்தி புலிகள் மீது பழி போடுகின்றனர். பேருந்து தாக்குதல் பற்றி விசாரணைகளை மேற்கொண்டு குற்றவாளி களைக் கண்டுபிடிக்குமாறு நாம் பகிரங்கமாக வேண்டியிருக்கிறோம். அத்துடன், அந்தப் படுகொலைக்குக் கடுமையான கண்டனத்தையும் மறுப்பையும் வெளியிட்டிருக்கிறோம். அடித்துச் சொல்கிறோம்... அப்பாவி சிங்களர்கள் கொல்லப்பட்டதற்கு இலங்கை அரசின் சதிச்செயலே காரணம்!’’

‘‘முழு அளவிலான ஒரு போருக்குப் புலிகளே இப்போது தயாராக இல்லை. அப்படித் தயாரானால், இலங்கை அரசுடன் சேர்ந்து புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அமெரிக்கா ஈடுபடும் என்கிறார்களே?’’

‘‘நாங்கள் உண்மையான போராளிகள். எமது தேசத்தையும் மக்களையும் எல்லா வகையிலும் பாதுகாக்கவும், அவர்களின் வாழ்வுரிமையை உறுதிசெய்யவும் எப்போதும் முழு அளவில் தயா-ராகவே இருக்கிறோம். எமது தாயக மண்ணை மீட்டெடுத்து, எமது மக்களுக்குச் சுதந்திர வாழ்வைப் பெற்றுக் கொடுப்பதே விடுதலைப் புலிகளின் லட்சியம். இதில் வெளியார்களின் தலையீட்டை எமது மக்களோ, எமது அமைப்போ, எமது தலைமைப் பீடமோ ஒருபோதும் அனுமதிக்காது. புரிந்துகொள்ளுங்கள்... நாங்கள் எந்த நாட்டுக்கும், இனத்-துக்கும் எதிரானவர்கள் அல்ல. எமது சொந்தத் தாயகத்தில் பூர்விக-மாக வாழ்ந்த மண்ணில், சகல உரிமைகளையும் பெற்றுப் பிற தேசங்களில் மக்கள் எப்படி வாழ்-கிறார்களோ அப்படி ஒரு வாழ்வை உறுதி செய்யவே போராடு கிறோம்.

அமெரிக்கா உட்பட அது எந்த நாடாக இருந்தாலும் சரி, தமிழர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தைப் புரிந்து ஏற்றுக்-கொண்டு அங்கீகரிப்பதுதான் பொருத்தமாக இருக்கும். மற்றபடி, இதில் தலையீடு செய்து பலவீனப்படுத்த முனைவார்கள் என்று நாங்கள் நினைக்கவில்லை.’’

‘‘ஐரோப்பிய யூனியனும் இப்போது விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக அறிவித்து தடைசெய்திருக்கிறார்களே? இதை எப்படி எதிர்கொள்ளப் போகி-றீர்கள்?’’

‘‘இலங்கை அரசாங்கம் தனது ராஜதந்திர அழுத்தங்களையும், பொய்யான பிரசாரங்-களையும் பயன்படுத்தித் தவறான வழியில் ஐரோப்பிய யூனியனையும் இன்னும் பல நாடுகளையும் இப்படியான அறிவிப்பை செய்யத் தூண்டியிருக்கிறார்கள். இது தவறானது. ஒரு தலைப்பட்சமானது. இந்த அநீதியான தீர்ப்புகளுக்கும், தடைகளுக்கும் எதிராக அந்தந்த நாடுகளில் வாழும் ஈழ மக்கள் தங்கள் குரல்களை எழுப்பி, உணர்வு களை வெளிப்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். இந்த நாடுகள் வெகு விரைவில் உண்மையை அறிந்துகொண்டு, தங்களுடைய நிலைப்பாடுகளில் மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.’’

‘‘இந்தியாவிடம் நீங்கள் என்ன எதிர்-பார்க்கிறீர்கள்?’’

‘‘இந்தியா உட்பட எல்லா நாடுகளும் தமிழர்-களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டுமென்பதே எமது மக்களுடைய விருப்பமும், எமது விருப்பமும் ஆகும். இந்தியாவைப் பொறுத்த வரை, தனது அயல்நாடொன்றில் இனப் படு-கொலைகள் நடக்கிறபோது, பாதிக்கப்படும் இனத்துக்குத் தார்மிக ஆதரவைக் கொடுத்-திருக்கிறது. பாலஸ்தீனப் போராட்-டத்தை ஆதரித்ததைப் போல, நேபாளத்தில் மன்னராட்சிக்கு எதிராக நடந்த ஜனநாயகக் கிளர்ச்சியை ஆதரித்ததைப் போல எமது மக்களின் தார்மிகப் போராட்டத்தையும் அபி-லாஷைகளையும் புரிந்துகொண்டு, இந்தியா தனது ஆதரவை வெளிப்படுத்த-வேண்டும் என்பதுதான் எமது விருப்பம்.’’

‘‘தற்போது ஏற்பட்டுள்ள சூழலில் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் பங்கு பெறுவீர்களா, அல்லது யுத்தம்-தானா?’’

‘‘யுத்த நிறுத்த உடன்பாடு தற்போது கேள்விக்குறியான நிலையில்தான் உள்ளது. எம்மைப் பொறுத்தவரையில், நாங்கள் இந்த உடன்பாட்டை முறித்துக் கொண்டு யுத்தத்துக்குச் செல்ல விரும்ப வில்லை. இருந்தாலும், சிங்கள அரசு இப்போது எங்கள் மக்கள் மீது பெரிய-தொரு இனப் படுகொலையையும் வன்முறையையும் கட்டவிழ்த்து விட்டுள் ளது. புலிகளின் முக்கிய தளங்களையும் மக்களின் குடியிருப்புகளையும் சிங்கள ராணுவம் தொடர்ந்து தாக்க முயற்சித்து வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த ஒரு தற்காப்பு யுத்தத்தைத் தொடங்க வேண்டிய நிர்ப்பந்தத்துக்குத் தள்ளப்-பட்டுள்ளோம்.

நான் உங்களிடம் கேட்டுக்கொள்வ தெல்லாம் ஒன்றுதான்... சொந்த மண்ணிலேயே நிம்மதி இழந்து, நிர்க்கதியாக நிற்க வேண்டிய கொடுமையான சூழலில் இருக்கும் எம் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ளுங்கள். எமது கனவு, லட்சியம், வேட்கை எல்லாம் எம் மண்ணின் விடுதலை. மரண பயமற்று மக்கள் நடமாடும் தமிழ் ஈழம்!’’

நன்றி: ஆனந்த விகடன் 2/7/06



கல்கி தலையங்கம் - 2/7/2006
அனுராதபுரம் கண்ணிவெடி கொடூரத்துக்குத் தாங்கள் பொறுப்பல்ல என்கிறார்கள் விடுதலைப் புலிகள். சின்ன குழந்தைகூட இதை நம்பாது! புலிகள் தலைவர் பிரபாகரன், தமது வன்முறைப் போக்கை உறுத்தலின்றி ஒப்புக் கொண்டவர். பத்திரிகையாளர் கூட்டம் கூட்டியே பிரகடனப்படுத்தியவர்.

இந்நிலையில், இலங்கை அரசுக்கு, புலிகள் மீது ராணுவத் தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழி என்ன இருக்க முடியும்? ஒரு பாவமும் அறியாத பொது மக்கள் பலியாகிறபோது அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. மேலும் வேதனையான விஷயம், இலங்கை ராணுவமும் ஈழத் தமிழர்களுக்குக் கொடுமைகள் இழைப்பதாக
வெளிவரும் செய்திகள்! எனினும், இப்பழிவாங்கும் உணர்வு, புலிகளின் முதல் தூண்டுதலாலும் மூடப் பிடிவாதத்தினாலும் விளைவதுதான் என்பதை மறுக்க முடியாது.

எத்தனையோ முறை பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட போதிலும், புலிகள் தங்கள் வறட்டுப் பிடிவாத நிலையிலிருந்து இறங்கத்
தயாராயில்லை. பேச்சு வார்த்தைகள் முறிந்து போயின. அல்லது தோல்வியுற்றன.

பேச்சுவார்த்தை காலகட்டத்தை ஒரு சாதகமான இடைவெளியாகப் பயன்படுத்திக் கொண்டு புலிகள் தாங்கள் இழந்த இடத்தை மீட்டார்கள்; அல்லது புதிய தாக்குதல்களை நடத்த தங்களை மேலும் ஸ்திரப்படுத்திக் கொண்டார்கள்.

இலங்கையில் அமைதி திரும்ப பாடுபட்ட நார்வே அமைதிக் குழுவே வெறுத்துப் போய்விடும் அளவுக்கு, புலிகளின் இந்த நாடகம் தொடர்ந்து, சமீபத்திய அனுராதபுர கொடூர நிகழ்வில் ஓர் உச்சகட்டத்தைத் தொட்டிருக்கிறது.

ஒரு பக்கம் இலங்கைத் தமிழர்களின் துயர் பெருகிக்
கொண்டிருக்கிறது. மற்றொரு பக்கம் தமிழக மீனவர்கள்
பாதுகாப்பின்றித் தவிக்கிறார்கள். இன்னொரு புறத்தில், இலங்கை அகதிகள் வரவு இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் எதிர்காலத்தில் வேறு பல சிக்கல்கள் விளையும்.

ஐரோப்பிய யூனியன் நாடுகள், விடுதலைப் புலிகளைத் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவித்ததைத் தொடர்ந்து,
அவ்வியக்கத்துக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. ஐரோப்பா வாழ் இலங்கைத் தமிழர்களிடமிருந்து கிட்டிய, அல்லது பலவந்தமாக வசூலிக்கப்பட்ட பொருளாதார உதவி (வரி?!) பெறப்படுவது கடினமாகியிருக்கிறது. இயலாமை, புலிகளின் கோபத்தைத் தூண்டி மேலும் வன்முறையில் ஈடுபடச் செய்யும். அதே நேரத்தில், பொருளாதார நெருக்கடியினால் அவர்கள் நிலை பலவீனப்படவும் செய்யும்.

இத்தருணத்தை, இலங்கை அரசும் ஈழத் தமிழர் நலனில் அக்கறை கொண்ட இந்தியா போன்ற தோழமை நாடுகளும் முறையாகப் பயன்படுத்திக் கொண்டு அமைதித் தீர்வுக்கு ஆக்கபூர்வமாக முயற்சி செய்வது நல்லது.

ஆனால், தமிழகத்து அரசியல் கட்சிகள் சில, முதல்வர் கருணாநிதி தலைமையில் ஒன்றுகூடி, தீர்மானம் நிறைவேற்றியிருப்பதுபோல்
மத்திய அரசு இலங்கைப் பிரச்னையில் உட்புகுந்து செயலாற்ற முடியாது.

இலங்கை மக்களின் துயரைப் போக்குங்கள் என்று இலங்கை அரசுக்கு மற்றொரு தீர்மானம் மூலம் அறிவுறுத்துவதால் மட்டுமே பிரச்னை எவ்வாறு தீரும்? பிரச்னையின் முளையும் வேரும் விடுதலைப்
புலிகள்தான் என்னும்போது, இந்திய அரசு செய்யக் கூடியது என்ன? ராஜீவ் காந்தியைப் படுகொலை செய்த, இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கத் தலைவர்களுடன் அமர்ந்து பேச்சுவார்த்தையா நடத்த முடியும்? அது இயலாத காரியம்.

ஆனால் தமிழகத்தில் ஈழத் தமிழர் நலனுக்காக குரல் கொடுத்துவரும் கட்சிகளும் அதன் தலைவர்கள் பலரும் புலிகள் இயக்கத்தின்
அனுதாபிகள் என்று அறியப்பட்டவர்கள். இந்தத் தலைவர்கள்
விடுதலைப் புலிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களை இலங்கை அரசுடன் முறையான பேச்சு வார்த்தைக்கு அழைப்பதுடன், தனி தமிழ் ஈழ
பிடிவாதத்தைக் கைவிடும்படியும் வலியுறுத்த வேண்டும். கண்ணீரில்
மிதக்கும் ஈழத் தமிழர்களின் துயர் தீர்க்க இவர்கள் தான் பாடுபட வேண்டும். மத்திய அரசும் இவர்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று யோசிக்க வேண்டும். பிரச்னையின் ஆணிவேரைக் கண்டுகொள்ளாமல் ஒதுக்கிவிட்டு, மேம்போக்காக தீர்மானங்கள் மட்டும் நிறைவேற்றுவதில் ஒரு பிரயோஜனமுமில்லை.

நன்றி: கல்கி

Read More...

Thursday, June 22, 2006

ஜெ பேட்டி

கேள்வி:- மத்தியில் 3-வது அணி அமையும் என்று கூறப்படுகிறதே? அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நான் ஏற்கனவே இது பற்றி பேசியிருக்கிறேன். 3-வது அணி உருவாவது வரவேற்கத்தக்கது. இதுபற்றி முக்கிய தலைவர்கள் பலர் என்னிடம் பேசி இருக்கிறார்கள்.

கே:- அவர்கள் யார் என்று சொல்ல முடியுமா?

ப:- அதைப்பற்றி இப்போது சொல்ல முடியாது. தேவைப்படும்போது அவர்களே மீண்டும் வந்து பேசுவார்கள். 3-வது அணி அமைவது நாட்டுக்கு நல்லது. நிச்சயம் 3-வது அணி அமையும்.

கே:- ஆசிரியர் பயிற்சி பள்ளி தொடங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாகவும் அது பற்றி விசாரிக்க முதல்-அமைச்சர் கருணாநிதி குழு அமைக்க உத்தரவிட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளதே?

ப:- எங்கள் ஆட்சி காலத்தில் எந்த தவறும் நடைபெறவில்லை. எப்படி வேண்டுமானாலும் விசாரித்து கொள்ளட்டும். தூய்மையான ஊழலற்ற ஆட்சி நடத்தினோம்.

கே:- உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி எப்படி அமையும்?

ப:- சட்டசபை தேர்தலில் அமைக்கப்பட்ட கூட்டணி தொடருகிறது. வேறு யாரும் வந்தால் அவர்களை சேர்ப்பது பற்றி பரிசீலிப்போம்.

கே:- மாவட்டந்தோறும் கட்சி நிர்வாகிகளை சந்திப்பீர்களா?

ப:- தேர்தல் முடிந்து ஒரு மாதம்தான் ஆகிறது. பின்னர் அதைப்பற்றி யோசிக்கலாம்.

கே:- அ.தி.மு.க.வில் மாற்றங்கள் இருக்குமா?

ப:- பத்திரிகைகளில் வரும் செய்திகளை வைத்து எந்த கருத்தும் சொல்ல முடியாது. இப்போதுதான் தேர்தல் முடிந்து இருக்கிறது.

கே:- தி.மு.க. ஆட்சி எப்படி இருக்கிறது?

ப:- இந்த ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீரழிந்து விட்டது. தினமும் கொலை- கொள்ளை நடக்கிறது. எங்கு பார்த்தாலும் வன்முறை அராஜகம் தலைவிரித்தாடுகிறது. யாருக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை நிலவுகிறது. பொதுமக்கள் புகார் கொடுத்தால் அதை ஏற்பதில்லை. ஆளுங்கட்சியினரை பாதுகாப்பதில்தான் போலீசார் அக்கறை காட்டுகிறார்கள். அப்பாவி மக்கள் கொடுக்கும் புகாரை ஏற்று வழக்கு கூட பதிவு செய்வது இல்லை.

கே:- சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டதை எதிர்த்து போராட்டம் நடத்துவீர்களா?

ப:- தேவைப்படும்போது போராட்டம் நடத்துவோம்.

கே:- மு.க. ஸ்டாலினை கொலை செய்ய முயற்சி நடந்ததாக செய்திகள் வெளியானதே?

ப:- அந்த சம்பவம் நம்பக்கூடியதாக இல்லை. பல பத்திரிகைகளும் இதை எழுதியிருக்கின்றன. இதைப்பற்றி பேசினால் மக்களே எள்ளி நகையாடுகிறார்கள்.

கே:- இந்த சம்பவம் தொடர்பாக தி.மு.க.வினரிடமே விசாரணை நடத்தப்படுகிறதே?

ப:- ஒரு சம்பவமே நடைபெறாதபோது என்ன விசாரணை நடத்துகிறார்கள் என்று தெரியவில்லை. அவருக்கு `இசட்' பாதுகாப்பு வேண்டும் என்றால் நேரடியாக கொடுக்க வேண்டியதுதானே. அதற்கு ஏன் இந்த நாடகம் நடத்த வேண்டும்.

கே:- விலைவாசி உயர்ந்து வருகிறதே?

ப:- எல்லா பொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது. குறிப்பாக கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. இந்த தொழிலில் 10 லட்சம் பேர் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

மணல்- ஜல்லி ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. எங்கள் ஆட்சி காலத்தில் 2 ïனிட் மணல் 626 ரூபாய். வெளியில் 800 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

இப்போது ஒரு ïனிட் மணல் 2500 ரூபாய் முதல் 3500 ரூபாய் வரை விற்கப்படுகிறது. ஜல்லி ஒரு ïனிட் எங்கள் ஆட்சியில் ரூ.1000 முதல் ரூ.1200 வரை இருந்தது. இன்று ரூ.2 ஆயிரம் வரை விற்கப்படுகிறது.

சிமெண்ட் மூட்டை விலையும் உயர்ந்து இருக்கிறது. இதனால் தனியார் கட்டிட வேலைகளும், அரசு கட்டிட வேலைகளும் நடைபெறவில்லை. இதனால் 10 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இல்லாமல் அவதிப்படுகிறார்கள்.

ஆனால் அரசு இதுபற்றி அக்கறைப்படவில்லை. தினசரி மணல் கொள்ளை நடைபெறுகிறது. அரசே இதை ஊக்குவிக்கிறது.

கே:- பர்னாலா மீண்டும் கவர்னராகி இருக்கிறாரே?

ப:- எதிர்பார்த்ததுதான்.

கே:- நீங்கள் நிறைவேற்றிய கேபிள் டி.வி. சட்டம் கவர்னர் கையெழுத்தாகாமல் அப்படியே இருக்கிறதே?

ப:- மக்களே இதை புரிந்து கொள்வார்கள்.

கே:- 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதில் பல்வேறு புகார்கள் கூறப்படுகிறதே?

ப:- 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதாக சொன்னார்கள். ஆனால் பெரும்பாலான இடங்களில் ஆளுங்கட்சியினர் இதை கடத்தி விற்பதாகவும் அமைச்சர்களே உடந்தையாக இருப்பதாகவும் பல இடங்களில் இருந்து புகார்கள் வருகின்றன.

2 ரூபாய்க்கு சாப்பிட முடியாத அரிசியை போடுவதாகவும் 5 ரூபாய், 6 ரூபாய் கொடுத்தால்தான் நல்ல அரிசி வழங்குவதாகவும் பல இடங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. மொத்தத்தில் இது மக்களை ஏமாற்றும் வேலை.

கே:- தி.மு.க. அரசு பழி வாங்கும் வகையில் நடவடிக்கை எடுத்து இருக்கிறதா?

ப:- பழிவாங்க மாட்டோம் என்று சொல்லி விட்டு, பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல் காரியமாக எனக்கு கொடுத்த பாதுகாப்பை குறைத்து விட்டார்கள். இன்னும் எவ்வளவோ இருக்கிறது. அதை விரிவாக பேச விரும்பவில்லை.

முதல்- அமைச்சர் அளவுக்கு எனக்கும் பாதுகாப்பு கொடுப்பதாக கூறுவது உண்மையல்ல. எனக்கு இருக்கும் மிரட்டல்கள் அச்சுறுத்தல்கள் வேறு. ஆனால் இன்றைய முதல்-அமைச்சர் ஏற்கனவே விடுதலைப்புலிகள், வீரப்பன் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட பல்வேறு அமைப்புகளுக்கு நண்பர். என்றாலும் அவருக்கு தேசிய பாதுகாப்பு படை பாதுகாப்பு போடப்பட்டு இருக்கிறது.

ஆனால் நான் மக்கள் நலன் கருதி தீவிரவாத அமைப்புகளை இரும்பு கரம் கொண்டு அடக்கினேன். எனக்கு தீவிரவாதிகளிடம் இருந்து வரும் மிரட்டல்கள், அச்சுறுத்தல்களுடன் அவரை ஒப்பிட்டு பேசுவது தவறு. யாரையும் பழி வாங்கமாட்டோம் என்று அறிவித்து விட்டு பழி வாங்கும் நடவடிக்கைகள்தான் எடுத்து வருகிறார்கள்.

இதை விட டெல்டா மாவட்ட விவசாயிகள் தற்போது மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். குறுவை சாகுபடி தொடங்க வேண்டிய நேரம். கூட்டுறவு கடன்களை தள்ளுபடி செய்து விட்டதாக அறிவித்தார்கள். ரூ.1000 கோடிக்கு புதிய கடன் வழங்கப்படும் என்று அறிவித்தார்கள். சட்டசபையில் நான் இது பற்றி கேட்டபோது, தள்ளுபடி செய்யப்பட்ட ரூ.7000 கோடி பணத்தை வழங்க ஏற்பாடு செய்து விட்டதாக கூறினார்கள். ஆனால் கூட்டுறவு வங்கிகளுக்கு இதுவரை பணம் வந்து சேரவில்லை.

இதனால் விவசாயிகளுக்கு புதிய கடன் கிடைக்கவில்லை. தேர்தல் வாக்குறுதியை நம்பிய மக்கள் இப்போது ஏமாந்து விட்டார்கள். புதிய கடன் வழங்க அரசு ரூ.106 கோடிதான் பட்டுவாடா செய்யப்பட்டு இருப்பதாக தெரிகிறது. ஆனால் ரூ.1000 முதல் ரூ.1200 கோடி வரை புதிய கடன் வழங்க வேண்டும். ஒட்டு மொத்தமாக ரூ.1000 கோடி புதிய கடன் வழங்கப்படும் என்று இந்த அரசு அறிவித்தது.

அதை தஞ்சை மாவட்டத்துக்கு கொடுப்பதா? டெல்டா மாவட்டங்களுக்கு கொடுப்பதா? தமிழ்நாடு முழுவதும் வழங்குவதா? என்ற குழப்பம் அதிகாரிகளிடம் உள்ளது. காரணம் இந்த அரசு சரியான அறிவுரைகளை வழங்கவில்லை. மொத்தத்தில் அப்பாவி விவசாயிகள் ஏமாந்து விட்டார்கள்.

இந்த ஆட்சியில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Read More...

Tuesday, June 20, 2006

தனித்து போட்டி - இளங்கோவன்

மத்தியில் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பது குறித்து விவாதம் நடந்து வருகிறது.

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. இந்த கருத்தை சோனியாகாந்தியிடம் முறையிட்டு அவர் எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம்.

உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் 80 சதவீதம் இடங்களில் வெற்றி பெற்று வலுவான கட்சி என்பதை நிரூபிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமைய வேண்டும் என்பது நம்முடைய இயக்கத்தின் கொள்கை. அதில் நம்பிக்கையும் உண்டு. அந்த நம்பிக்கை என்றாவது ஒரு நாள் நிறைவேறும். இதற்காக இளைஞர்கள் போராட வேண்டும். இன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ள இளைஞர்களின் கையில் தான்காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி உள்ளது.

கட்சியில் கருத்து வேறுபாடு இருக்கலாம். ஆனால் கட்சியின் வளர்ச்சிக்கு இது தடையாக இருக்க கூடாது. - ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

இன்றைய தங்கம் விலை : 1 பவுன் (8 கிராம்) 6,440.00
இன்றைய வானிலை : வெயில் வாட்டி எடுக்கும்;

Read More...

Friday, June 16, 2006

அர்ச்சகர் வீரமணி

Read More...

கால்பந்து

Read More...

Monday, June 12, 2006

இளமையில் கல்


‘இளமையில் கல்’லுன்னு இதைத் தான் சொன்னங்களா?
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினம - ஜூன் 12


கடைசி செய்தி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து ஜெயலலிதா-வைகோ ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருக்கிறார்கள்

Read More...

Thursday, June 08, 2006

கண்ணகியும் கரடி பொம்மையும்

இந்த வார ஆனந்த விகடனில்..

... ஒரு ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கைகளை அடுத்த ஆட்சி மாற்றாமல் தடுக் கவும் நெறிமுறைகள் தேவைப்படுகின்றன. லாட்டரி சீட்டு ஒழிப்பு, மது, மணல் விற்பனையை அரசே மேற்கொண்டது, ஆசிரியர் இட மாற்றத்துக்கு கவுன்சிலிங் போன்ற நடவடிக்கைகள் மாற்றப்பட வேண்டியவை அல்ல.

எதை மாற்றினாலும் மாற்றா விட்டாலும், ஒரு விஷயத்தில் மாற்று நடவடிக்கை எடுத்தே தீருவது என்று பிடிவாதமாக இருக்கிறார் கருணாநிதி. அகற்றப்பட்ட கண்ணகி சிலையை மறுபடி யும் நிறுவுவதுதான் அது.

ஜெயலலிதா ஆட்சியின்போது, கண்ணகி சிலை அங்கிருந்து காணாமல் போனது ஏன் என்பது, எவ்வளவு விமர்சனங்கள் வந்தா லும் கருணாநிதி ஏன் மஞ்சள் சால்வையை அகற்றுவதில்லை என்கிற மர்மத்துக்கு நிகரானது. இரண்டுக்கும் காரணம் வாஸ்து, மூட நம்பிக்கை, மருத்துவம் என்றெல் லாம் ஊகிக்கலாமே தவிர, புதிர் முடிச்சை அவிழ்க்கவே முடியாது.

உணர்ச்சிவசப்படாமல் பார்த்தால்... கண்ணகியின் சிறப்புகளாகக் கூறப்படும் இரண்டும் சிறப்புகளே அல்ல என்பது என் உறுதியான கருத்து. கற்புக்கரசி, நீதி கேட்டு அரசனோடே போராடியவள் என்கிற இரண்டிலும் பசையில்லை. வேறு பெண்ணை நாடிப் போய்விட்டு, தன்னை பத்தாண்டுகளுக்கு மேலாகப் பிரிந்து வாழ்ந்த கோவலனைச் சகித்துக்கொண்டு, அவன் திரும்ப வந்ததும் ஏற்றுக்கொண்டதும், அதுவரை இன்னொரு ஆணின் துணையை நாடாமல் இருந்ததும்தான் கற்பு என்று கற்பிக்கப்படும் என்றால், அதை ஏற்பதற்கில்லை! அது, கோவலன் போன்ற ஆண்களுக்கே வசதியான ஒருதலைக் கற்பு. கண்ணகியின் நிலையை இன்று நாம் ஏற்பதானால், ஏழு ஆண்டுகளுக்கு மேல் பிரிந்து வாழ்ந்த தம்பதியின் திருமணம் ரத்து செய்யப்படக்கூடியது என்கிற இன்றைய சட்டப் பிரிவையே நீக்கவேண்டி வரும்!

அடுத்து, அரசனுக்கெதிராக கண்ணகி போராடிய விஷயம்... தனக்கு அநீதி செய்த கணவ னுக்கு நீதி கேட்டுப் போராடிய பேதமைத்தனம் அது. கோவலனை தவறாகக் கொன்ற தில் துளியும் சம்பந்தமில்லாத மதுரை மக்களை எரித்த கண்ணகியின் செயலும்கூட, எங்கோ ஏற்பட்ட வேதனையை வேறெங்கோ வெளிப்படுத்துகிற இயலாமைதான்! இதையெல்லாம் பார்க்கும்போது, இன்றைய கால கட்டத்தில் ஏராளமான சோதனைகளுடன் பல சவால் களையும் சந்திக்கவேண்டியுள்ள பெண்களுக்கு கண்ணகியை முன்னுதாரணம் காட்டுவது எப்படிச் சரியாகும்?

சில குழந்தைகள், பெரியவர்களான பிறகும்கூட தூங்கும்போது ஒரு பழைய ‘டெடி பேர்’ கரடி பொம்மையைப் பக்கத்திலேயே வைத்திருப்பார்கள். இன்று ஆள்பவர்களுக்குக் கண்ணகி அப்படித்தான்!

நன்றி: ஓ-பக்கங்கள், ஆனந்த விகடன்


ஜூவியில்... கண்ணகி’ விழாவில் தழுதழுத்த கருணாநிதி...
..... கண்ணகி சிலை அகற்றப்பட்ட நாளில் இருந்து நடந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் தேதிவாரியாகப் பட்டியல் போட்டு, சிலையை அகற்றியதை எதிர்த்து யார் யாரெல்லாம் குரல் கொடுத்தார்கள் என்று பேசி முடித்துவிட்டு, அடுத்து அவர் தொட்டது- ‘ஆனந்த விகடன்’ இதழை! கண்ணகி பற்றி பத்திரிகையாளர் ஞாநி தன் கருத்தாக எழுதி விகடனில் வெளியான கட்டுரையைக் கையில் எடுத்தவர்,

‘‘கரடி பொம்மைக்கும் கண்ணகி சிலைக்கும் என்ன வித்தியாசம் என்று எழுதியிருக்கிறார்கள். தமிழா! நீ இன்னும் தமிழ்நாட்டில் உயிரோடுதான் இருக்கிறாயா? இதைக் கேட்பதற்காக என் ஆட்சியின் செங்கோல் பறிக்கப்பட்டாலும், எனக்குக் கவலையில்லை. தமிழனுடைய உணர்ச்சியைத் தட்டிவிடும் வேலை இனியும் வேண்டாம். இது... அதிகாரத்திலே ஏதோ அமர்ந்துவிட்ட காரணத்தால்; கடந்த ஆட்சிக் காலத்தைப் போல ஆணவக் குரல் அல்ல. அடக்கமான குரல்தான், வேண்டுகோள் குரல்தான்’’ என்று சொன்னார் கருணாநிதி. இந்த விஷயத்தைப் பேசத் துவங்கியதுமே மிகவும் உணர்ச்சிவசப்பட்ட கருணாநிதியின் நா தழுதழுத்துப் போனது (மறுநாள், 4-ம் தேதி காலையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள விகடன் அச்சக அலுவலக வாசலில் குவிந்த தி.மு.க-வினர், அங்கே விகடனுக்கு எதிராகக் கோஷமிட்டதோடு, விகடன் இதழ்களையும் தீவைத்துக் கொளுத்தினார்கள். போலீஸார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். தமிழகம் முழுக்கவே பரவலாக விகடனுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன).

( நன்றி: ஜூனியர் விகடன் )

சில கார்ட்டூன்கள் - நன்றி குமுதம், தினமணி

Read More...

Tuesday, June 06, 2006

666

( நன்றி தினமலர்)
என்ன சும்மா இருக்கீங்க பின்னூட்டத்தில் விளையாட ஆரம்பிக்கலாம்.
( யார் 6வது பின்னூட்டம் என்று பார்க்கலாம், நிச்சயமாக பரிசு கிடையாது )

From IBN-Live

bullet The fear of the number 666 is called hexakosioihexekontahexaphobia.
bullet Prominent hexakosioihexekontahexaphobics include the late Ronald Reagan and Nancy Reagan. In 1989, when they moved to the former president's final home in the Bel Air section of Los Angeles, they had the address of 666 St. Cloud Road changed to 668.
bullet When Intel introduced the 666 MHz Pentium III in 1999, they decided to market it as the Pentium III 667 claiming that since the actual speed was 666.666 MHz, therefore 667 was the more accurate approximation.
bullet The US Highway 666, “the Highway of the Beast”, was renumbered in 2003 after controversy over the supposed reference to the Biblical beast, which also made the road signs a common target for theft.
bullet The number 666 is a simple sum and difference of the first three 6th powers:

666 = 16 - 26 + 36

bullet It is also equal to the sum of its digits plus the cubes of its digits:

666 = 6 + 6 + 6 + 6³ + 6³ + 6³

bullet The sum of the squares of the first 7 primes is 666:

666 = 2² + 3² + 5² + 7² + 11² + 13² + 17²

Read More...

No கூட்டணி - விஜயகாந்த்

காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர், சென்னை கேயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. அலுவலகத்தில் கட்சித் தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் அந்த கட்சியில் சேர்ந்தனர். விஜயகாந்த் பேசியது

"பதவிக்கு ஆசைப்பட்டு யாரும் தே.மு.தி.க.வில் சேர வேண்டாம். மக்களுக்காக உழைப்பவர்களுக்கு நிச்சயம் எங்கள் கட்சியில் உரிய மரியாதை வழங்கப்படும். சுய விளம்பரத்துக்காகவும், ஆதாயம் பெறும் எண்ணத்து டனும் உள்ளவர்களுக்கு இந்த கட்சியில் இடம் இல்லை.

சட்டசபை தேர்தலில் தே.மு. தி.க. கூட்டணி அமைத்து போட்டியிடும் என்று பலர் பேசினார்கள். ஆனால் யாருடனும் கூட் டணி வேண்டாம் என்று நாம் முடிவு செய்தோம். பல்வேறு நெருக்கடிகள் இருந் தாலும் எடுத்த முடிவில் இருந்து மாறாமல் தனித்து போட்டியிட்டோம்.

27 லட்சம் ஓட்டுகள் தே.மு. தி.க.வுக்கு கிடைத்தது. மாற்று கட்சிகள் அதிர்ச்சி அடையும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் நமது வேட்பாளர்கள் கணிசமான ஓட்டுகளைப் பெற்று கடும் போட்டியாக இருந்தனர். மக்கள் கணிசமான வாக்குகளை வழங்கி தே.மு.தி.க.வை அங்கீகரித் திருக்கிறார்கள்.

இனி வரும் தேர்தல்களில் முக்கிய இடம் வகிக்கும் அளவுக்கு தே.மு.தி.க. வளர்ச்சி அடைந்திருக்கிறது. தினமும் ஆயிரக்கணக்கான புதிய உறுப்பினர்கள் இங்கு வந்து சேருவதைப் பார்க்கும்போது, இந்த கட்சி மீது மக்கள் வைத்துள்ள ஆழமான நம்பிக்கையை உணர முடிகிறது. தமிழக தேர்தலில் தே.மு.தி.க.வின் வளர்ச்சிக்கு உங்கள் அனைவருடைய ஒத்துழைப்பும் அவசியம்.

நடைபெறும் அனைத்து தேர்தல்களிலும் தே.மு.தி.க. முக்கிய அங்கம் வகிக்கும் நிலை வர வேண்டும். அந்த அளவு கட்சி உயர அதை பலப் படுத்துவதற்கு ஒவ்வொருவரும் முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்திலும், புதுச்சேரியிலும் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தே.மு.தி.க. யாருடனும் கூட்டணி அமைத்து போட்டியிடும் எண்ணம் இல்லை. தனித்து போட்டியிடவே விரும்புகிறது. உங்கள் ஒத்துழைப்பு முழுமையாக இருந்தால் வெற்றி இலக்கை நாம் எளிதாக எட்ட முடியும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான் வந்தால்தான் கட்சி நடக்கும் என்று எண்ணி சும்மா இருக்க கூடாது.

மக்களின் நன்மதிப்பை பெற தே.மு.தி.க. தொண்டர்களும், நிர்வாகிகளும் கடுமையாக உழைக்க வேண்டும். புதியவர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும்."

Read More...

Monday, June 05, 2006

கூட்டணி ? கிலோ என்ன விலை ?


முதல் அமைச்சர் கருணாநிதி இன்று டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் சந்தித்தார். அவருக்கு கருணாநிதி பொன்னாடை அணிவித்து பூங்கொத்து கொடுத்தார்(அதை சோனியா காந்தி காதில் வைத்துக்கொண்டார்). 30 நிமிடங்கள் அவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது மத்திய மந்திரி தயாநிதிமாறன் உடன் இருந்தார்( போட்டோவிற்கு போஸ் கொடுத்துக்கொண்டு பிஸியாக இருந்தார்).

கலைஞர் பேட்டி:

கேள்வி:- தமிழ்நாட்டில் காங்கிரஸ், தி.மு.க.வுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சியில் பங்கு பெறுவது பற்றி பேச்சு நடத்தப்பட்டதா?

கருணாநிதி:- நானோ காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியோ தி.மு.க. ஆட்சியில் காங்கிரஸ் பங்கு பெறுவது குறித்து எந்தவித பேச்சு வார்த்தையும் நடத்தவில்லை.

தயாநிதிமாறன்:- தேர்தலுக்கு முன்பே இது குறித்து பேசி முடிவு செய்யப்பட்டு விட்டது. எனவே தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றி எதுவும் பேசவில்லை.

கே:- வைகோ தலைமையிலான ம.தி.மு.க. ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக் கிறதாப இல்லையாப என்பது குறித்து சோனியாவிடம் பேசினீர்களா?

கருணாநிதி:- அது கூட்டணியில் எங்கே இருக்கிறது?

கே:- அதிகாரப்பூர்வமாக இதுபற்றி அறிவிக்கவில்லையே?

கருணாநிதி:- பத்திரிகையாளர்களாகிய நீங்கள் சாதுர்யமானவர்கள். அதை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் தெரிவித்த அரசியல்வாதி (வைகோ) பற்றி நீங்கள் பேசவில்லை.

கே:- நாங்குனேரியில் சிறப்பு பொருளாதார ஏற்றுமதி மண்டலம் அமைக்கப்படுமா?

கருணாநிதி:- அதை அமைப்பதற்கு தேவையான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. தமிழ்நாட்டில் வழங்க திட்டமிட்டுள்ள இலவச கலர் டி.வி. இங்கு தான் தயாரிக்கப்பட இருக்கின்றன.


இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங்கை அவரது வீட்டில் கருணாநிதி சந்திக்கிறார். ( பெரிய பூங்கொத்து அவருக்கும் கொடுக்கப்படும் என்று டெல்லி வட்டாரங்கள் பேசிக்கொள்கிறது ). அப்போது அரசியல் நிலவரம், வளர்ச்சி திட்டங்கள், மத்திய அரசின் ஒத்துழைப்பு குறித்து பேசுகிறார்.

மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி மாளிகைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி செல்கிறார். அங்கு ஜனாதிபதி அப்துல் கலாமை சந்தித்து பேசுகிறார்.

Update 6/6/6

ஆட்சியில் பங்கு கேட்பது பற்றி சோனியா முடிவு செய்வார்: தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

கேள்வி:- தி.மு.க.அமைச்சரவையில் காங்கிரஸ் சேருவது பற்றி முடிவு எடுக்கப்பட்டு விட்டதா?

பதில்:- இது பற்றி மேலிடத்திற்கு தகவல் போய் இருக்கிறது. சோனியா காந்தி தான் முடிவு செய்வார். இந்த விவகாரத்தில் சுவரொட்டிகள் மற்றும் பத்திரிகைகள் தெரிவித்த கருத்துகள் அனைத்தும் அவரது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. ஏற்கனவே வீரப்பமொய்லி நிபந்தனையற்ற ஆதரவு கொடுப்பதாக தெரிவித்து இருந்தார்.

கேள்வி:- காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரிகள் சத்தியமூர்த்திபவனுக்கு வருவது இல்லையே?

பதில்:- மத்திய மந்திரிகள் சென்னையில் இருக்கும் போது சத்தியமூர்த்திபவனுக்கு வருவார்கள்.

கேள்வி:- மத்திய அரசின் சாதனைகளை ஐக்கிய முற்போக்கு கூட்டணி சாதனை என்கிறார்கள், ஆனால் தமிழக அரசின் சாதனைகளை தி.மு.க.வின் சாதனை என்று குறிப்பிடுகிறார்களே?

பதில்:- அப்படி ஏதாவது இருந்தால் கவனத்தில் கொள்வோம்.

கேள்வி:- தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் குற்றங்கள் பெருகி வருகிறதே?

பதில்:- சட்டம்-ஒழுங்கு நல்ல முறையில் நிலைநாட்டப்படுகிறது. அம்பத்தூர் கொலையில் குற்றவாளி 2 நாட்களில் கைது செய்யப்பட்டு இருக்கிறாரே?

கேள்வி:- காமராஜரும், கருணாநிதியும் ஒரு கொடியில் பூத்த இருமலர்கள் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தமிழருவிமணியன் பேசியிருக்கிறாரே?

பதில்:- 2 பேரும் ஏழை மக்களுக்காக பாடுபட்ட தலைவர்கள் தான்.

கேள்வி:- விஜயகாந்த் கட்சி ஆரம்பித்து தனித்து நின்று அதிக வாக்குகளை பெற்று இருக்கிறாரே? காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா?

பதில்:- காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி சேருகிறதோ அந்த கூட்டணி தான் வெற்றி பெற்று இருக்கிறது என்பது சரித்திரம். காங்கிரசுக்கு எப்போதும் தனிப்பட்ட செல்வாக்கு உண்டு. தொடர்ந்து எங்கள் கட்சியை பலப்படுத்திக்கொண்டு இருக்கிறோம்.

உள்ளாட்சி தேர்தலிலும் இதே கூட்டணி தொடரும், இதே வெற்றியை பெறுவோம்.

கேள்வி:- உள்ளாட்சி தேர்தலில் சென்னை மேயர் பதவியை காங்கிரஸ் கேட்குமா?

பதில்:- தேர்தலின் போது பார்ப்போம்.

Read More...

Friday, June 02, 2006

இம்சை மனுக்கள் இரண்டு

நடிகர் வடிவேலு நடித்த "இம்சை அரசன் 23-ம் புலிகேசி'' படத்தில் குதிரை காட்சிகள் அமைந்த காட்சியையும் சேர்த்து திரையிட அனுமதிக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.




மதிமுக பொதுச் செயலாளர் வைகோவால், மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆபத்து உள்ளதால் அவர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு தர வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கிடம் திமுக எம்.பிக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்

Read More...

படிக்கும் PDF

உங்களுக்கு ஏற்கனவே இதை பற்றி தெரிந்திருக்கலாம். தெரியாதவர்கள் இதை செய்து பார்க்கலாம்.

ஏதாவது ஒரு PDF கோப்பை திறந்து Ctrl+shift+b விசைகளை ஒரே நேரத்தில் அழுத்தவும். உங்களுக்கு முழு கோப்பையும் படித்துக் காண்பிக்கப்படும்.

[ Ctrl+shift+v - to hear the page
Ctrl+shift+c - to resume
Ctrl+shift+e - to stop ]

Read More...

ராகுல்மகாஜன் கவலைக்கிடம், செயலாளர் உயிர் இழந்தார்

பிரமோத் மகாஜன் சமீபத்தில் தனது சொந்த தம்பியாலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பிரமோத் மகாஜன் இழப்பிற்கு பிறகு ராகுல்மகாஜனுக்கு பாரதீய ஜனதாவில் முக்கிய பொறுப்பு வழங்க திட்டமிட்டு இருந்தனர்.

3 நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடந்த பாரதீய ஜனதா நிர்வாக குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ராகுல் டெல்லி வந்திருந்தார். அவருடன் நீண்ட கால குடும்ப நண்பரும், அவருடைய செயலாளருமான விவேக் மைத்ராவும் சென்றார். பின்னர் இருவரும் டெல்லியிலேயே தங்கி இருந்தனர்.

இந்த நிலையில் இருவரும் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் வயிற்று வலியால் துடி துடித்தனர். உடனே அவர்களை டெல்லியில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வரும் வழியிலேயே மைத்ரா இறந்து விட்டார்.

ராகுல் மகாஜன் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரு கின்றனர். அவருடைய நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக உறவினர் ஒருவர் தெரிவித்தார்.

இரவு அவர்கள் இருவரும் ஒரே வகை உணவை சாப்பிட்டனர். அதில் விஷத் தன்மை இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். அந்த உணவு கெட்டு போய் விஷமாக மாறி இருந்ததாப அல்லது யாராவது விஷத்தை கலந்து சாப்பிட்டார்களா? என்பது தெரியவில்லை. ஆனால் இந்த உணவை எங்கு வைத்து சாப்பிட்டார்? என்ற விவரங்கள் எதையும் வெளியே தெரிவிக்கவில்லை.

ராகுல் மகாஜன் நேற்று இரவு நண்பர்களுடன் சேர்ந்து விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக தெரிய வந்துள்ளது. ராகுல் மகாஜன் மது அருந்தி உள்ளார். அதில் யாரோ விஷத்தை கலந்து இருக்கலாம் என்று சந்தே கிக்கப்படுகிறது.

டெல்லி வசந்தவிகார் போலீசார் இது குறித்து விசாரித்து வருகின்றனர். ராகுல் மகாஜனின் மாமாவும், மராட்டிய மாநில முன்னாள் துணை முதல்-மந்திரியுமான கோபிநாத் முண்டே மற்றும் உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்துள்ளனர்.

ராகுல் உடல்நிலை குறித்து டாக்டர்கள் எந்த தகவலையும் வெளியிட மறுத்து விட்டனர். உயிர் காக்கும் கருவிகள் துணையுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் நடந்த இடத்தில் வெள்ளை பவுடர் கண்டெடுக்க பட்டுள்ளதாக போலிஸ் தெரிவித்திருக்கிறது.

பிகு: நேற்றோடு பிரமோத் மகாஜன் இறந்து ஒரு மாதம் ஆகிறது.

NDTV, IBNLive செய்திகள்

Read More...

Thursday, June 01, 2006

111 & 143

முன்பு விரக்தியில் "அப்துல் கலாமிற்கு ஒரு கடிதம்" என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். சுப்ரிம் கோர்ட் வைத்த குட்டில் இந்த தடவை கலாம் கொஞ்சம் யோசித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

இரண்டு நாட்கள் முன் ஆதாயம் பெறும் பதவி தொடர்பாக பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை, ஜனாதிபதி அப்துல் கலாம் மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார் என்ற செய்தி படித்த பின் நிஜமாகவே மனநிறைவு ஏற்ப்பட்டது.

* எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களாக பதவி வகித்து வருபவர்கள், ஆதாயம் பெறும் மற்றொரு பதவி வகிக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, நடிகை ஜெயா பச்சனின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. எலக்ஷன் கமிஷன் மிக வேகமாக நடவடிக்கை எடுத்தது.

* இரட்டைப்பதவி விவகாரத்தை தொடர்ந்து சோனியாகாந்தி, எம்.பி. பதவியுடன் தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் ரேபரேலி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். எலக்ஷன் கமிஷன் வேடிக்கை பார்த்தது. சோனியா தியாகியானார். ஜனநாயகத்துக்கு செலவு வைத்தார்.

* பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் மொத்தம் 56 பதவிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. அதில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வகித்து வந்த தேசிய ஆலோசனை கவுன்சில் தலைவர் பதவியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு தானே இந்த மசோதா.

* நாடு முழுவதும் பல எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் பதவி இழக்கும் ஆபத்து ஏற்பட்டதால், இந்த இரட்டைப்பதவி விவகாரம் இந்திய அரசியலை உலுக்கியது. ஆதாயம் பெறும் இரட்டைப்பதவி வகித்து வருபவர்களில் பலர், மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரி கட்சிகளை சேர்ந்தவர்கள். பெட்ரோல் விலை உயர்வுக்கு ஸ்ட்ரைக் செய்வது தான் இவர்களுக்கு முக்கியம்.


* இந்த நிலையில், ஆதாயம் பெறும் பதவி விவகாரத்தில் இருந்து தப்புவதற்காக சில பதவிகளுக்கு விலக்கு அளித்து பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடந்த கூட்டத்தொடரின்போது சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. எல்லாம் ஒரு நம்பிக்கைதான்

* கடந்த 25-ந்தேதி அன்று இந்த மசோதா ஜனாதிபதிக்கு கிடைத்தது. அதை கவனமாக பரிசீலித்த ஜனாதிபதி அப்துல் கலாம், சட்டம் மற்றும் நீதித்துறை நிபுணர்களுடனும் அதுபற்றி விரிவான ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து அந்த சட்ட மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளிக்காமல், பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் அதை மீண்டும் பரிசீலிக்கும்படி வற்புறுத்தி மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பினார். பார்க்க கார்ட்டூன் ( நன்றி TheHindu )

* எம்.பி. அல்லது எம்.எல்.ஏ.க்களை தகுதி இழக்கச்செய்வதற்கு விரிவான விதிமுறைகளை சட்ட மசோதாவில் குறிப்பிடவேண்டும் என்றும். அந்த விதிமுறைகள் நியாயமானதாகவும், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் பொருந்துவதாகவும் இருக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். அத்துடன் இரட்டைப்பதவி விவகாரத்தில் முன்தேதியிட்டு விதிவிலக்கு அளித்து இருப்பதையும் ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் தெரியவந்துள்ளது. அதாவது ஜெயபச்சனுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டமா ? என்று சொல்லாமல் சொல்லியிருக்கார்.

* ஆதாயம் பெறும் பதவி பிரச்சினையால் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை தொடர்ந்து, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று ஜனாதிபதி அப்துல்கலாமை சந்தித்து 30 நிமிடம் பேசினார். மேலும் மத்திய மந்திரிசபை அவசரமாக கூடி இந்த பிரச்சினை குறித்து ஆலோசனை நடத்துகிறது. அதாவது எப்படி பூசி மொழுகலாம் என்று ஆலோசனை.

* ஜனாதிபதி கேட்டுக்கொண்டபடி, இந்த மசோதாவை மீண்டும் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்ற மத்திய அரசு தீர்மானித்து உள்ளது. மழைக்கால கூட்டத்தொடரின் போது ஜூலை மாதம் இந்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகும் என தெரிகிறது. அப்படி அந்த மசோதா பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டால், அரசியல் சட்டத்தின் 111-வது விதியின்படி மசோதாவுக்கு அவர் ஒப்புதல் அளித்து தான் ஆகவேண்டும். இதுவே அரசுக்கு ஒரு பெரிய அசிங்கம். ஜனாதிபதி ஒரு ரப்பர் ஸ்டாம்ப் என்று சொல்பவர்களுக்கு நிச்சயம் மன்மோகன் சிங்கைவிட இவருக்கு கொஞ்சம் பவர் இருக்கிறது.

* பாராளுமன்றத்தை அவசரமாக கூட்டி மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று சில அரசியல் கட்சிகள் அரசை வற்புறுத்தி வருகின்றன. ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த மசோதா அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்று கருதினால் அரசியல் சட்டத்தின் 143-வது பிரிவின்படி இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டிடம் ஜனாதிபதி ஆலோசனை கேட்கலாம். ஜனாதிபதி கேட்பாரா ?

Office of Profit Complete Coverage in rediff

OOP's Timeline

Jun 1, 2006: Left backs Office of Profit Bill
Jun 1, 2006: RS polls: Jaya Bachchan files nomination
May 31, 2006: Office of Profit Bill: Govt rejects Kalam's concerns
May 31, 2006: Govt to return Office of Profit bill
May 31, 2006: Kalam returns Office of Profit Bill
May 16, 2006: Office of Profit Bill tabled in Lok Sabha
May 16, 2006: Amendment to Office of Profit Bill tabled in LS
May 15, 2006: Sonia takes oath as Lok Sabha MP
May 9, 2006: Office of profit: Govt approves amendment
May 8, 2006: Office of profit: SC dismisses Jaya's petition
May 3, 2006: Sonia flays opposition on resignation issue
Apr 27, 2006: Office of Profit: BJP against dilution of Statute
Apr 26, 2006: UPA seeks Sonia's return as NAC chief
Apr 25, 2006: Jaya Bachchan challenges disqualification as MP
Apr 17, 2006: Sonia files nomination papers from Rae Bareli
Apr 1, 2006: Office of profit: Amar replies to EC notice
Mar 30, 2006: Parliament to reconvene in May
Mar 28, 2006: Sonia lashes out at opposition in Rae Bareli
Mar 28, 2006: Row over Jharkhand MLAs' Rajasthan visit
Mar 28, 2006: Office of profit: Jharkhand MLAs meet Kalam
Mar 27, 2006: Office of profit: Blame game continues
Mar 27, 2006: Office of profit: Dasmunshi submits report
Mar 27, 2006: Office of profit: Jharkhand opposition up in arms
Mar 26, 2006: Consensus likely on office of profit issue
Mar 26, 2006: RSS ideologue praises Sonia Gandhi
Mar 26, 2006: Workers paid to gather in Sonia's support
Mar 25, 2006: MLAs act against MP Chief Minister
Mar 24, 2006: Congress asks MPs not to resign
Mar 24, 2006: Sonia's resignation evokes mixed reactions
Mar 23, 2006: Sonia Gandhi resigns from Lok Sabha
Mar 22, 2006: Remove Sonia as MP, says Opposition
Mar 17, 2006: Jaya Bachchan disqualified from RS

Read More...

குட்டி குட்டி ஜோக்ஸ்

* மூன்று நண்பர்கள் இறந்து மேல் உலகம் சென்றார்கள். அங்கு நீதி தேவன் முதல் நபரை அழைத்து, "உனக்கு தண்டனையாக தீயில் வெந்து எரிந்த பெண்ணை மணமுடிக்கிறேன்' என்றார். இந்த நபர் ஏன் என்று கேட்ட தற்கு, நீ சிறுவயதில் பறவை ஒன்றை கல்லால் அடித்துக் கொன்றாய் அதனால்தான் என்றார். அதே போன்று இரண்டாவது நபருக்கு தண்டனை விதித்து அதே காரணத்தை கூறினார்.
மூன்றாவது நபருக்கு மிகவும் அழகான பெண்ணை பரிசளித்தார். இருவரும் ஏன் என்று கேட்டதற்கு நீதிதேவன் இப்படி பதிலளித்தார், "அந்தப் பெண் சிறுவயதில் ஒரு பறவையை கல்லால் அடித்துக் கொன்றார்' என்றார்.

இரண்டு சர்தார்ஜிகள் லண்டன் நகருக்கு சென்றனர். அங்கு ஊரை சுற்றி பார்க்க வேண்டி பேருந்துக்காக நின்றனர். அப்பொழுது இரண்டு அடுக்கு மாடி பஸ் ஒன்று வந்தது. ஒரு சர்தார்ஜி கீழேயும், ஒரு சர்தார்ஜி பேருந்தின் மேல்புறத்திலும் தனித்தனியாக பயணம் செய்தனர். மேலே இருந்தவர் பயந்து கொண்டே கம்பியை கெட்டி யாக பிடித்துக் கொண்டு நின்றி ருந் தார். கீழே இருந்த நபர், ஏன் பயந்து கொண்டு உட்கார்ந் திருக்கிறாய் என்று கேட்டார். அதற்கு இந்த சர்தார்ஜி, உனக்காவது பரவாயில்லை கீழே டிரைவர் இருக்கிறார். மேலே யாருமே இல்லை. தானாக வண்டி ஓடியது என்றார்.

மூன்று வயோதிகர்கள் தங்களது நினைவுத்திறனைபரிசோதித்துக் கொள்வதற்காக மருத்துவரிடம் சென்றனர். மருத்துவர் முதல் வயோதி கரிடம் மூன்றும் ஏழும் எவ்வளவு என்றார். அவர் கொஞ்ச நேரம் யோசித்து விட்டு 274 என்றார். மருத்துவர் அடுத்ததாக இரண்டாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டார். அவர் நெடுநேரம் யோசித்து விட்டு செவ்வாய்க்கிழமை என்று பதில் அளித்தார். மருத்துவர் மூன்றாவது முதியவரிடம் அதே கேள்வியை கேட்டபோது அவர் உடனே 24 என்று பதில் அளித்தார். மருத்துவர் சபாஷ் எப்படி சொன்னீர்கள் என்று கேட்க, அவர் 274லிருந்து செவ்வாய்க் கிழமையைகழித்துச் சொன் னேன் என்று பதில் சொன்னார்.


புதிதாக பள்ளிக்கு வந்த ஆசிரியை ஒருவர் வகுப்பறையில் பாடம் எடுக்க நுழைந்தார். மாண வர்களிடம் கலகலப்பாக பழக வேண்டும் என்ற காரணத்திற்காக, இந்த வகுப்பில் யார் முட்டாளோ அவர்கள் எழுந்து நிற்கலாம். நான் ஒன்றும் கோபித்து கொள்ள மாட்டேன் என்றார். மாணவர்கள் மவுனமாக அமர்ந்திருந்தனர். அப்போது குறும்புக்கார மாணவன் ஒருவன், நாற்காலியின் மீது ஏறி நின்றான். ஆசிரியையும் பரவாயில்லையே தைரியமாக எழுந்து நிற்கிறாயே என்றார். அதற்கு அந்த மாணவன், இல்லை டீச்சர் நீங்கள் மட்டும் தனியாக நின்று கொண்டிருக்கிறீர்கள். எனக்கு மிகவும் கஷ்டமாக இருந் தது. அதனால் தான் துணைக்கு நானும் நிற்கிறேன் என்றான்.

ஒரு ஊரில் முட்டாள் பணக் காரர் ஒருவர் வசித்து வந்தார். தன் வேலைக்காரனை எப்பொ ழுதும் சந்தேகத்துடன் விசாரித்து வருவது அவரது வழக்கம். ஒரு நாள் தன் வேலைக்காரனிடம் 500 ரூபாய் கொடுத்து சமையல் செய் வதற்கு தேவையான எண் ணெய்யை வாங்கி வரச் சொன்னார்.
வேலைக்காரனும் கடைவீதிக் குச் சென்று 500 ரூபாய்க்கு பெருமானமுள்ள எண்ணெய் டின் ஒன்றை வாங்கி வந்தான். வேர்த்து விறுவிறுத்து வீட்டி ற்குள் நுழைந்த அவனை சந்தேகத்துடன் பார்த்த பணக்காரர், ஏன் இப்படி பயந்து நடுங்குகிறாய் என்று கேட்டு, எண்ணெய் டின்னை பார்த்தார். எண்ணெய் சிறிது குறைவாக இருந்தது. ஏன் என்று கேட்டார். அதற்கு வேலைக்காரன், டின் அடியில் ஓட்டை இருந்தது அத னால் கீழே வழிந்து விட்டது என்று கூறினான். அதற்கு பணக் காரர், கீழே ஓட்டை என்றால் கீழே தானே குறைந்திருக்க வேண்டும், எப்படி மேலே குறைந்தது என்று கத்தினார்


ஒரு ஊரில் ஒரு முட்டாள் பணக்காரர் இருந்தார். அவர் பெரிய பங்களா ஒன்று கட்டினார். அவை பார்வையிட தன் நண்பர்களுக்கு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். வந்திருந்தவர்கள் அனைவரும் பங்களாவின் அழகை வெகுவாக பாராட்டினர். பின்பு பங்களாவின் பின்புறம் சென்று பார்த்தனர். அங்கு மூன்று நீச்சல் குளங்கள் இருந்தது. அனைவரும் ஆச்சர்யத்துடன் எதற்காக 3 நீச்சல் குளங்கள் என்று கேட்டனர். அதற்கு அந்த பணக்காரர் ஒன்று வெந்நீர் குளியல் வேண்டும் என்பவர்களுக்காக, மற்றொன்று குளிர்ந்த நீர் வேண்டும் என்பவர்களுக்காக என்றார். அனைவரும் வெந்நீர் சரி, தண்ணீர் சரி. காலியாக இருக்கின்றதே அது எதற்கு என்று கேட்டனர். அது நீச்சல் தெரியாதவர்களுக்காக என்றார்


தமிழகத்தில் "தி டா வின்சி கோடு'' எனும் ஆங்கிலத் திரைப்படம் வெளியிடப்பட இருப்பது தொடர்பாக சிறுபான்மைச் சமுதாயத்தினரிடமிருந்து, குறிப்பாக கிறிஸ்தவ சமுதாயத்திடமிருந்து பல்வேறு முறையீடுகளும், புகார்களும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளன. இந்த படம் திரையிடப்பட்டால் கிறிஸ்தவ சமுதாய மக்களின் உணர்வுகளையும், மதச்சிந்தனைகளையும் புண்படுத்தக்கூடும். மேலும் இந்த படம் திரையிடப்படுவதன் மூலம் தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களும், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் சூழ்நிலைகளும் ஏற்படலாம்.

இவற்றை கருத்தில் கொண்டு சூழ்நிலைகளைக் கவனமாக பரிசீலனை செய்து 1952-ம் ஆண்டு (மத்திய சட்டம் 37, 1952-ம் ஆண்டு) திரைப்படங்கள் சட்டத்தின் 13-வது பிரிவின்படி நடவடிக்கைகள் எடுத்து மேற்படி திரைப்படம் திரையிடப்படுவதை நிறுத்தி வைக்க அனைத்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகர கமிஷனர் ஆகியோருக்கு தமிழக அரசு அறிவுரைகள் வழங்கியுள்ளது.

Read More...