பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, May 13, 2006

தேர்தல் போட்டி - முடிவுகள்

கடவுள் சோதனை தருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் அதை அனுபவித்தேன். சுமார் 40 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, நன்றாக சிந்தித்து பல நல்ல பதில்களை கொடுத்திருக்கிறார்கள்.

கலந்து கொண்ட 40 பேரில் பிரபு ராஜா மற்றும் குழலி பரிசு பெறுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கலந்து கொண்டவர்களின் விபரம் :
நாமக்கல் சிபி, மகேஸ், செந்தழல் ரவி, வினையூக்கி, NellaiKanth, Satheesh, இளையவன், Hamid, Rajkumar, குழலி, murugesan, நாகு, சிவா, பரஞ்சோதி, KVR, LuckyLook, இலவசக்கொத்தனார், முத்துகுமரன், Subramanian, Kodees,Haran prasanna, பிரதீப், ஜெயக்குமார், SK, தருமி, மாயவரத்தான், இளவஞ்சி, Kouthur Sriram, vasikar, Govikannan, மித்ரா, vishytheking, kumaresan.V, koothaadi, குமரேஸ், Suresh

இவர்கள் அளித்த பதில்களை publish செய்துள்ளேன். யான் பெற்ற இன்பம்...

9 Comments:

Anonymous said...

பரிசு பெற்ற முடிவுகளை மீள் பரிசீலனை செய்யவும். இருவரையும் விட நெருக்கமான பதில்கள் அளித்தவர்கள் இருப்பது போல் தெரிகிறதே? மேலும் குழலி 2,3 கேள்விகளுக்கு வெறும் வாக்கு இடைவெளிதான் சொல்லியுள்ளார். வெற்றியா தோல்வியா என்பதைச் சொல்லவில்லை. (அது உங்கள் கேள்விகளில் உள்ள மயக்கம்.)

மாயவரத்தான் said...

குழலிக்கு எந்த அடிப்படையில் பரிசு என்று விளக்கவும் ப்ளீஸ்.

Prabu Raja said...

Hoorrrayyy!!
Thanks Idlyvadai!

குமரேஸ் said...

குழலிக்கும், பிரபு ராஜாவிற்கும் வாழ்த்துக்கள்

குமரேஸ் said...

குழலிக்கும், பிரபு ராஜாவிற்கும் வாழ்த்துக்கள்

குழலி / Kuzhali said...

//பரிசு பெற்ற முடிவுகளை மீள் பரிசீலனை செய்யவும். இருவரையும் விட நெருக்கமான பதில்கள் அளித்தவர்கள் இருப்பது போல் தெரிகிறதே? மேலும் குழலி 2,3 கேள்விகளுக்கு வெறும் வாக்கு இடைவெளிதான் சொல்லியுள்ளார். வெற்றியா தோல்வியா என்பதைச் சொல்லவில்லை. (அது உங்கள் கேள்விகளில் உள்ள மயக்கம்.)
//
கேள்விகளில் கொஞ்சம் மயங்கியது உண்மைதான், தேமுதிக விற்கு 0 என்று கொடுத்ததிலிருந்தே விஜயகாந்த்க்கு தோல்வியடைவார் என்பது என் கணிப்பாக இருந்தது(அது ஊத்திகினது வேறு கதை), ஜெயலலிதா 15000-18000 வாக்கு வித்தியாசத்தில் தோற்பாரா என்ன?

//குழலிக்கு எந்த அடிப்படையில் பரிசு என்று விளக்கவும் ப்ளீஸ்.
//
எனக்கும் ப்ளீஸ்

IdlyVadai said...

குழலி, மாயவரத்தான் - தப்புதான். அதற்குதான் விதிமுறைகளில் 'ஆசிரியர் முடிவே இறுதியானது' என்று ஏன் வைக்கிறார்கள் என்று இப்போது புரிந்துக்கொண்டேன் :-). அடுத்த போட்டியில் பார்க்கலாம். இப்போது டூலேட்.

குழலி / Kuzhali said...

சரிங்க பரிசு எப்படி அனுப்புகின்றீர்?, காசோலையா? வரைஓலையா? பணமா? பொருளா? முகவரி தருகிறேன், முகவரியை ரகசியமா வச்சிக்குங்க தல, ஆட்டோ அனுப்ப தேடிக்கினு இருக்காங்க அவிங்ககிட்ட கொடுத்துடாதிங்க, என்னை தேர்ந்தெடுத்ததற்கு மிக்க நன்றி

IdlyVadai said...

குழலி - இட்லிவ்டையில ஒரு பதிவு எழுதலாம் அவ்வளவுதான்.