பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, May 31, 2006

தேமுதிகவிற்கு ஆபத்து !

மதிமுக தணிக்கை குழு உறுப்பினர் பொடா நாகராஜன், தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் இன்று தேமுதிகவில் இணைந்தார்.

வைகோவோடு பொடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு 19 மாத சிறை வாசம் அனுபவித்தவர் நாகராஜன். சட்டசபைத் தேர்தலில் திருமங்கலம் தொகுதியைக் கேட்டிருந்தார் நாகராஜன்.

ஆனால் அவருக்கு சீட் கிடைக்கவில்லை. மாறாக மதுரை புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் வீர. இளவரசனுக்கு சீட் கிடைத்தது.

இதனால் அதிருப்தியில் இருந்த நாகராஜன் சமீபத்தில் கட்சியிலிருந்து விலகுவதாக அறிக்கை விட்டார்.

ஆனால் சில மணி நேரங்களில் தனது முடிவை வாபஸ் பெற்றுக் கொண்டார். என்றும் வைகோவுடன்தான் இருப்பேன் என்று கூறினார்.

இந் நிலையில், தனது தலைவரைப் போலவே இன்று இன்னொரு முடிவை எடுத்துள்ளார்.

இன்று தேமுதிக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த், அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், பொதுச் செயலாளர் ராமுவசந்தன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து தேமுதிகவில் இணைந்தார்.

இதுகுறித்து பொடா நாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: நான் மதிமுக ஆரம்பித்த காலத்தி லிருந்து அக்கட்சிக்காக பாடுபட்டு உள்ளேன். மாநில தணிக்கை குழு உறுப்பினராக பதவி வகித்தேன். 19 மாதங்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்த போது, என் அண்ணன், அம்மா ஆகியோர் உயிரிழந்தனர்.

என்னுடைய நூல் மில்லில் பருத்தி அரைக்கும் பின்னிங் பேக்டரில் தொழில் பாதித்தது. அதற்கெல்லாம் நான் முதலில் கவலைப்படவில்லை. ஆனால் கட்சிக்காக நான் உழைத்தேன். எனக்கு உரிய மரியாதை, அங்கீகாரம் மதிமுகவில் கொடுக்கப்படவில்லை.

கேள்வி: உரிய மரியாதை எந்த முறையில் கொடுக்கப்படவில்லை?
பதில்: அதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருமங்கலம் தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் எனக்கு அந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கவில்லை. இது எனக்கு மன வருத்தத்தை அளித்தது. நான் ஏற்கனவே திருமங்கலம் நகர சபையில் இரண்டு முறை போட்டியிட்டு தோல்வியை தழுவியவன்.
இந்த தேர்தலில் மிகவும் எதிர்பார்த்த திருமங்கலம் தொகுதி எனக்கு கிடைக்காதது எனக்கு ஏமாற்றம் அளித்தது. இதனால் மதிமுகவிலிருந்து விலக முடிவு செய்தேன்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பெயரில் விஜயம் இருப்பதால் தேமுதிகவில் சேர முடிவெடுத்தேன். அவர் தேர்தல் நேரத்தில் பணியாற்றியதையும், அவருடைய தேர்தல் அறிக்கையும் எனக்கு பிடித்திருந்தது. அத்துடன், அவருக்கு பேரும், புகழும் அதிகமாக உள்ளது. அவருடைய கட்சியில் இணைவதில் நான் பெருமைப்படுகிறேன். அவருக்காக இன்று முதல் தேமுதிகவில் இணைந்து உண்மையாக உழைப்பேன் என்று கூறினார்.

Read More...

Monday, May 29, 2006

ஜயேந்திரர் - கோ.சி. மணி சந்திப்பு - கலைஞர் அதிர்ச்சி!

காஞ்சி சங்கராச்சாரியாரின் பாதுகா பட்டாபிஷேக மஹோத்சவ வைபவம் கும்பகோணம் ஸ்ரீசங்கர மடத்தில் மே 27, 28 ஆகிய இரு தினங்கள் நடைபெற்றன. நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக ஜயேந்திரர் மே 26-ம் தேதி இங்கு வந்தார்.

சனிக்கிழமை நடைபெற்ற விழா மற்றும் பாதுகா பட்டாபிஷேக ஊர்வலத்தில் கலந்து கொண்டு அருளாசி வழங்கிப் பேசினார் ஜயேந்திரர்.

தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை ஆயுஷ்ய, நவக்கிரக, ஸ்ரீசுக்த, ஸ்ரீபுருஷ ஸýக்த ஹோமங்கள், சஹஸ்ர போஜனம், வேதபாஷ்யம், வேதாந்த விசாரம் உள்ளிட்ட வேத வைபவங்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள், வேத விற்பன்னர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை காலை கும்பகோணத்துக்கு வந்த தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கோ.சி. மணி மற்றும் திமுகவினர் மடத்துத்தெருவில் உள்ள சங்கர மடத்துக்கு சென்றனர். அங்கு அமைச்சரை மகாசுவாமிகளின் மஹோத்சவ வைபவ விழாக் குழுவினர் வரவேற்றனர்.

மாமுனிவரின் பாதுகா பட்டாபிஷேக ஹோம நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் தொடர்ந்து மடத்தில் தங்கியிருந்த ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அறைக்குச் சென்றார். அங்கு ஜயேந்திரருக்கு கோ.சி. மணி மரியாதை நிமித்தமாக சால்வை அணிவித்தார். ஜயேந்திரரும் விழாக் குழு சார்பில் அமைச்சர் கோ.சி. மணிக்கு சால்வை அணிவித்து பழங்களைப் பிரசாதமாக வழங்கினார்.

அங்கு அமைச்சரும் ஜயேந்திரரும் சிறிது நேரம் தனியாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அமைச்சர் கோ.சி. மணி புறப்பட்டுச் சென்றார்.

ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது - கலைஞர்

காஞ்சி ஜெயேந்திரரை, திமுக அமைச்சர் கோ.சி.மணி சந்தித்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். அதுபற்றி என்ன சொல்கிறீர்கள்? என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் கருணாநிதி, "எனக்கு ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் இருக்கிறது. இதுபற்றி அமைச்சரிடம் விளக்கம் கேட்கப்படும்' என்றார்.

கீ.விரமணி அறிக்கை:

வெட்கப்படுகிறோம் - வேதனைப்படுகிறோம்!

தமிழக அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியைச் சந்தித்துச் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தியது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

தமிழக அமைச்சரவையில் மூத்த அமைச்சர்களுள் ஒருவரான மாண்புமிகு கோ.சி. மணி அவர்கள் திடீரென்று அரசியலுக்கு வந்தவரல்லர்; திராவிடர் கழகத்திலிருந்து திமுகவுக்குச் சென்றவர்! அடிப்படையில் தன்னை ஒரு சுயமரியாதைக்காரர் என்று சொல்லிக் கொள்பவர்; அத்தகைய ஒருவர் சற்றும் எதிர்பாராத ஒரு செயலில் ஈ டுபட்டு இருப்பது வெட்கத்தையும் வேதனையையும் அளிக்கிறது.

அமைச்சர் கோ.சி. மணி சங்கராச்சாரியாரைச் சந்திக்கலாமா?

மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சர°வதியின் ``பாதுகா பட்டாபிஷேகம்’’ கும்பகோணத்தில் மே 27, 28 தேதிகளில் நடைபெற்றிருக்கிறது. கும்பகோணம் தான் காஞ்சி மடத்துக்கு முன்னோடி; அந்தக் கும்பகோணம் மடமும் ஒரு காலத்தில் சிருங்கேரி மடத்தின் கிளையாக இருந்தது. பின்னர் பல தில்லுமுல்லு நடவடிக்கைகளின் காரணமாக காஞ்சிமடம் ஆதி சங்கரால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் கும்பகோணம் மடம் காஞ்சி மடத்தின் கிளை மடம் என்றும் கற்பிக்கப்பட்டது அந்த மடத்தில் மறைந்த சங்கராச்சாரியாருக்குப் பாதுகா பட்டாபிஷேகமாம். பாதுகா என்றால் மிதியடி அதாவது செருப்பு. அதற்கு ஒரு அபிஷேக விழாவாம் - அது எப்படியோ போய்த் தொலையட்டும்!

அந்த விழாவுக்கு வந்திருந்த, முதல் கொலை குற்றவாளியாக நீதிமன்ற முன் நிறுத்தப்பட்டுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சர°வதியாரை அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் சந்தித்துச் சால்வை அணிவித்து மரியாதை செய்தாராம்.

பதிலுக்கு அமைச்சர் கோ.சி. மணி அவர்களுக்குச் சங்கராச்சாரியார் சால்வை அணிவித்து, பிரசாதமாக பழங்களை வழங்கினாராம்.

(அதைக்கூட நேரிடையாக சங்கராச்சாரியார் செய்ய மாட்டார் - தன் சீட கோடி ஒருவர் மூலம்தான் செய்திருப்பார்)

அதன்பின் ஜெயேந்திரரும் அமைச்சரும் சிறிது நேரம் தனியாகப் பேசிக் கொண்டிருந்தனர் என்று இன்றைய `தினமணி’ ஏடு (29.5.2006) இரண்டு பத்தி செய்தி வெளியிட்டுள்ளது. `இந்தியன் எக்°பிர°’ ஏடு புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

கொலை வழக்கில் குற்றவாளியல்லவா?

சின்ன காஞ்சிபுரம் தெற்கு மாட வீதியைச் சேர்ந்த ஆனந்த சர்மாவின் மகனும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் மேலாளருமான சங்கரராமன் கொலை வழக்கில் முதல் குற்றவாளிதான் இந்த காஞ்சி ஜெயேந்திரர். இவர்மீது இ.பி.கோ 302, 120-பி, 34, 201 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தக் கொலை வழக்கின் காரணமாக இதே சங்கராச்சாரியார் 61 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டும் இருந்தார்.

இத்தகைய கிரிமினலை அரசு பொறுப்பில் உள்ள ஒரு அமைச்சர் சந்தித்துச் சால்வை அணிவிப்பதும், தனியாக உரையாடுவதும் சரியானது தானா? மக்கள் மத்தியில் தேவையில்லாத சந்தேகங்களையும், யூகங்களையும் அவ நம்பிக்கைகளையும் பெரும் அளவில் இது உருவாக்காதா? இந்த ஆட்சிக்கே இது களங்கத்தை உருவாக்காதா?

புதிய ஆட்சி உருவானதற்குப் பிறகு, சங்கராச்சாரியார் வழக்கு சரியாக நடத்தப்படுமா என்கிற `புரளிகள்’ ஒரு பக்கம் காற்றில் கலந்து வந்து கொண்டு இருக்கின்றன. அண்ணா திமுக ஏடேகூட சந்தேகங்களைக் கிளப்பி இருக்கின்றது.

அரசியல் ரீதியாகவும் சரியானது தானா?

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த ஒரு முக்கிய அமைச்சர் சங்கராச்சாரி யாரைச் சந்தித்திருப்பது சட்டப்படியும் நியாயப்பட்டியும், கொள்கைப்படியும் சரியானதுதானா? அந்த வதந்தி உரம் போடுவது போன்றதல்லவா?

அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டாலும் சரி, சவுண்டிப் பார்ப்பானிலிருந்து சங்கராச்சாரியார் பார்ப்பனர் வரை கலைஞரையும், திமுகவையும் எப்படியும் ஒழித்துக் கட்டியே தீருவது என்று பூணூலை உருவிக் கொண்டு நின்றிருக்கின்றனர்.

திமுகவுக்கு எதிராகவே வாக்களித்தனர் (ஏன், கும்பகோணத்திலேயே கூட அந்த அனுபவம் மாண்புமிகு அமைச்சருக்குக் கிடைத்திருக்குமே!)

இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் சங்கராச்சாரியாரைச் சந்தித்து மரியாதை காட்டுவது உகந்ததுதானா?

கலைஞருக்குச் `சாபம்’ விட்டவர் தானே இந்த ஜெயேந்திரர்?

``சங்கராச்சாரி-யார்?’’ என்ற தலைப்பில் சென்னையில் 10 நாள்கள் தொடர் சொற்பொழிவாற்றினேன்.

அந்தச் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டிய அவசரம் ஏன் ஏற்பட்டது தெரியுமா?

``கருணாநிதியை எடுத்துக் கொள்ளுங்கள். என்னைப்பற்றி எது வேண்டுமானாலும் சொல்லட்டும்; ஆனால் எனது பீடத்தை எதற்காக அவர் இழிவுபடுத்திப் பேச வேண்டும்? எனக்கு ரொம்ப வருத்தம். நான் என்ன செய்ய முடியும்? நான் வழிபடும் ஆண்டவனிடத்திலே அவருக்கு (கலைஞருக்கு)த் தண்டனை அளிக்கும்படி முறையிட்டுக் கொண்டேன். அப்படியே கருணாநிதியும் படுத்துவிட்டார்’’ என்று சிறிதும் மனிதாபிமானமற்ற முறையில், கலைஞர் அவர்கள் உடல் நலம் இல்லாத போது, பண்பற்ற முறையில் தனது கடுமையான எதிரியாகக் கருதிக் கூறியதை கண்டு `வெகுண்டு’தான் அந்தவுரையை நிகழ்த்தினேன் (1983)

கலைஞருக்கு நோய் ஏற்பட வேண்டும் என்று தாம் நம்பும் ஆண்டவனித்திலே பிரார்த்தனை செய்த ஒருவரைச் சந்தித்து, சால்வை அணிவித்து மரியாதை செலுத்துவது, அவர் சார்ந்த கட்சிக் கண்ணோட்டத்திலும் சரியானதுதானா?

கொள்கைப்படிதான் சரியா?

கொள்கைக் கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சங்கராச்சாரியாருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் - என்ன உறவு இருக்க முடியும்?

சிருங்கேரி சங்கராச்சாரியார் தம்மைச் சந்திக்கும்படி தந்தை பெரியாரை முகம் (கடிதம்) போட்டு அழைத்தாரே - தந்தை பெரியார் சந்தித்ததுண்டா? காஞ்சிபுரத்தில் தானே அண்ணா இருந்தார்? ஒரே ஒரு முறையாவது சங்கராச்சாரியாரை - அண்ணா சந்தித்து இருப்பாரா?

அந்த வகையில் கொள்கைக் கண்ணோட்டப்படி பார்த்தாலும் மாண்புமிகு அமைச்சர் கோ.சி. மணி அவர்கள் செய்தது ஏற்றுக் கொள்ளத் தக்கதுதானா?

திமுக அமைச்சர் ஒருவர் தீ மிதித்தார் என்பதற்காக முதல் அமைச்சர் கலைஞர் அவர்கள் அதனைக் காட்டுமிராண்டித்தனம் என்று கண்டிக்கவில்லையா?

மூத்த அமைச்சரும், திராவிடர் கழகம் தொட்டு பொது வாழ்வில் பங்கு கொண்டவருமான மாண்புமிகு கோ.சி. மணி அவர்களுக்கு இது தெரியாதா?

இதற்கு என்ன சமாதானம் தான் கூற முடியும்?

திமுக ஆட்சி அமைந்து அடிப்படையான கொள்கை அறிவிப்புகள் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுப்பு வரும் ஒரு காலகட்டத்தில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் ஒரு நேரத்தில், இப்படி ஒரு அபவாதமா - ஒரு அமைச்சர்மூலம் சறுக்கலா?

வெட்கம்! வேதனை!! வன்மையான கண்டனத்திற்குரியது!

முதல் அமைச்சர் எச்சரிக்கட்டும்!

இதுபோன்ற தவறு - இனி நடக்காதவாறு முதல் அமைச்சர் அவர்கள் கண்டிப்பாக எச்சரிக்க வேண்டும். இதுவே தொடக்கமானதாகவும், கடைசியானதாகவும் இருக்கட்டும்!

மக்கள் நல வளர்ச்சிக்கென்று இந்த ஆட்சிக்குப் பல திட்டங்கள் இருப்பதுபோலவே, திமுக ஆட்சிக்கென்று அடிப்படையான கொள்கைகள் உண்டே - அவைதானே அடிப்படைப் பலம்! அதனை ஆட்டம் காணச் செய்ய இடம் கொடுக்கலாமா? அமைச்சர்களும், தோழர்களும் சிந்திப்பார்களாக! இப்படி நமது அரசின் அமைச்சர் பற்றி எழுதும்போது மிகுந்த மன வலியுடன்தான் எழுதுகிறோம்.

முகாம்: தஞ்சை

தலைவர், திராவிடர் கழகம்.

( லிங்க் கொடுத்த Ravi Srinivasக்கு நன்றி )

கோ.சி.மணி விளக்கம்:

தேர்தல் நேரத்தில் சங்கரமடத்துக்குச் சென்று அங்குள்ள ஊழியர்களை திமுகவுக்கு ஓட்டு போட கேட்டுக் கொண்தாகவும், தனது வேண்டுகோளை ஏற்று திமுகவுக்கு வாக்களித்து தன்னை வெற்றி பெறச் செய்தவர்களுக்கு நன்றி சொல்வதற்காக மீண்டும் மடத்துக்கு சென்ற நேரத்தில் அங்கு இருந்த ஜெயேந்திரரை சந்திக்க நேர்ந்துவிட்டதால் அவருக்கு சால்வை போர்த்தியதாகவும் கோ.சி.மணி கூறி இருக்கிறார்.

Read More...

சட்டசபையில் விஜயகாந்த் பேச்சு

தமிழக சட்டசபையில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் நடிகர் விஜயகாந்த் பேசியது:

இப்பேரவையில் கலந்து கொள்ளும் வாய்ப்பளித்த விருத்தாச்சலம் தொகுதி வாக்காளப் பெருமக்களுக்கும் நான் சார்ந்திருக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு 28 லட்சம் வாக்குகள் அளித்த தமிழகத்தின் வாக்காளப் பெருமக்களுக்கும் முதற்கண் எனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டு ஆளுநர் உரையின் மீது எனது கருத்துகளைக் கூற விரும்புகிறேன்.

ஜனநாயகம் என்பது வேண்டாத ஆட்சியை நீக்கவும், வேண்டிய ஆட்சியைக்கொண்டுவரவும் மக்களுக்கு தரப்படும் சாதனமாகும். அந்த சாதனத்தின் மூலம் மக்களுக்கு நல்லாட்சி கிடைக்க ஜனநாயகம் வழிவகுக்க வேண்டும்.

ஆனால் இன்றைய ஜன நாயகம் என்ற கருவியில் பணநாயகம் என்ற துரு பிடித்துள்ளது. அரசியலில் ஊழல் செய்து பணம் சேர்க்கவும், அதில் ஒரு பகுதியை தேர்தலில் செலவிட்டு மீண்டும் பதவிக்கு வருவதும் அந்தப்பதவியை வைத்து மேலும் பணம் சேர்ப்பது என்ற நிலைக்கு ஆளாகிவிட்டது. இதனால் ஏழைகள் ஓட்டு போட முடியுமே தவிர, தேர்தலில் நின்று வெற்றிபெற முடியாது.

நல்லவர்கள் நாட்டுக்கு தொண்டு செய்ய விரும்பு பவர்கள் ஏழைகளானாலும், அரசியலில் பங்குகொள்ளும் அளவிற்கு பணநாயகத்தை வீழ்த்தி உண்மையான ஜன நாயகத்தை உருவாக்குவது அனைவரது கடமையாகும்.

பொது வாழக்கையில் ஈடுபட்டு ஊழல்கள் மூலம் சொத்துக்களைச் சேர்த்து ஜனநாயகத்தை மாசுபடுத்தும் சக்திகளை அடையாளம் காணவும் நடவடிக்கை எடுக் கவும் அந்த சொத்துக்களைக் கைப்பற்றவும் எவ்வித ஊழல் தடுப்பு நடவடிக்கையும் ஆளுநர் உரையில் குறிப்பிடாதது எனக்கு ஏமாற்றத்தை அளிக் கிறது.

தேசிய முற்போக்கு திரா விட கழகம் ஏழைகளுக்கு தரப்படும் இலவச திட்டங்களை வரவேற்பதோடு அவர் களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்களிலும் அக்கறை செலுத்துவதை கொள் கையாகக் கொண்டுள்ளது. மலிவு விலையில் அரிசி வழங்குவது, மண்எண்ணை தருவது போன்ற திட்டங்களை வரவேற்கிறேன்.

ஆனால் அதே நேரத்தில் அவர்கள் விரும்பும் தொழில் பயிற்சியைப் பெறவும் பின்னர் வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளவும், ஆளுநர் உரையில் குறிப்பிடத்தக்க திட்டங்கள் இல்லாதது வருத்தத்தைத் தருக்கிறது.

பல லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்கள் அடிப் படை கல்வியும், வேலை வாய்ப்பும் இன்றி வறுமையில் உழல்வதை நாம் அறிவோம். வறுமையில் இருந்துஅவர்களை மீட்க அவர்களை ஊக் கப்படுத்துவதற்கான குறிப் பிட்ட திட்டங்கள் எதுவும் கூறப் படவில்லை.

படிக்காத மற்றும் படித்த பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்கள் உழைப்பை நாட்டுக்கு தர தயாராக இருந்தும் அவர் களை பயன்படுத்திக் கொள்ள எந்தத் திட்டமும் சுய உதவிக் குழுக்களைத் தவிர காணப்படவில்லை. ஒருவேளை அரசு அளிக்கும் வரவு செலவு திட்டத்தில் இத்தகைய திட்டங்கள் இடம் பெறுமானால் வரவேற்கத் தயாராக உள்ளேன்.

கடந்த 38 ஆண்டுகளாக தீர்க்கப்படாத காவிரி பிரச்சினை ஆனாலும் சரி, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் உயர்த்த முடியாத முல்லைப் பெரியாறு அணைக்கட்டு பிரச்சினை ஆனாலும் சரி, பாலாற்றை மணல் ஆறாக ஆக்கிய பிரச்சினை ஆனாலும் சரி, கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்து கொடுத்ததோடு மட்டுமல் லாமல், மீன் பிடிக்கும் உரிமை களையும் இலங்கைக்கு விட் டுக் கொடுத்தது ஆனாலும் சரி, தமிழ்நாட்டின் உரிமைகள் பறிபோனதாகத்தான் வரலாறே தவிர எதையும் இதுவரை நாம் பெறவில்லை.

இந்த அரசு இழந்த உரிமைகளைப் பெற எத்தகைய முயற்சி மேற்கொண்டாலும்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் முழு ஒத்துழைப்பு தரும் என்று உறுதி அளிக்கிறேன்.

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி மேம்பட விவசாய முன்னேற்றம் இன்றியமையாதது. விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க ரூ. 7,000 கோடி கடனை ரத்து செய்ததை வரவேற்கிறேன். ஆனால் அதே நேரத்தில் அவர்கள் இதர வங்கிகளில் பெற்ற கடன் சுமை இதை விட அதிகமாக உள்ளது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அவ்வப்போது விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் அளிப்பதை விட விவசாயப் பொருளாதாரத்தை சீர் திருத்தி அவர்களின் விளை பொருள்களுக்கு கட்டுபடி ஆகக்கூடிய விலையைப் பெற்றுத்தருவதின் மூலமே அவர்களை கடன் சுமையிலிருந்து காப்பாற்ற முடியும்.

என்னுடைய விருத்தாச்சலம் தொகுதியில் சாலை வசதி, குடிதண்ணீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் மிகவும் மோசமாக உள்ளன. விருத்தாசலம் அரசு பள்ளிகளில் போதிய கட்டிட வசதி இல்லை. அரசு மருத்துவமனை மிகவும் வசதியற்ற நிலையிலே உள்ளது. எக்ஸ்ரே ïனிட் இருந்தும் நிறுவப்படவில்லை.

மகளிர் கல்லூரி இன்றியமையாத தேவையாக உள்ளது. விருத்தாசலம் நகரத்தில் பாலம் இன்னும் அமைக்கப்படவில்லை. ஒரு பொறியியல் கல்லூரி அவசியத் தேவையாக உள்ளது. இவையெல்லாம் அரசின் மூலம் பெற்றுத்தர வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

மத்திய அரசின் மூலம் கடலூர் மாவட்டத்தில் முந்திரி ஏற்றுமதி வளாகத்திற்கு 10.36 கோடி அனுமதி கிடைத்தும் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அரசு அதை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

Read More...

யார் இவர் ?

எனக்கு ஈமெயிலில் வந்த படங்கள். உங்களுக்கும் வந்திருக்கலாம் :-)

ரஜினி ராம்கி வேண்டுகோளுக்கினங்க படங்கள் நீக்கப்பட்டுள்ளது.

ஜூனியர் விகடன்/நக்கீரன் ஆகிய பத்திரிக்கைகளில் எல்லா படங்களும் வந்து விட்டதால் மீண்டும் பதிவு செய்கிறேன் :-)








Read More...

எதிர்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு

சட்டசபையில் கடந்த புதன்கிழமை அடிதடி ரகளை ஏற்பட்ட பிறகு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 60 பேரும் சட்டசபை கூட்டத்தொடர் முழுவ தும் "சஸ்பெண்டு'' செய்து சபாநாயகர் ஆவுடையப்பன் உத்தர விட்டார். அதை தொடர்ந்து ஜெயலலிதா தனது முடிவை அதிரடியாக மாற்றிக் கொண் டார்.

கடந்த சனிக்கிழமை அவர் சட்டசபைக்கு தன்னந்தனியாக சென்றார். கவர்னர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பினார். இடை இடையே தி.மு.க., காங்கிரஸ் உறுப்பினர் களுக்கு சளைக்காமல் பதில் சொன்னார்.

குறிப்பாக 2 ஏக்கர் நிலம், விவசாய கடன் தள்ளுபடி, மதமாற்ற தடை சட்டம் ஆகிய வற்றின் மீது ஆணித்தரமான வாதங்களை எடுத்து வைத்தார். முதல்-அமைச்சர் கருணாநிதியுடனும் நேருக்கு நேர் விவாதம் செய்தார். துணிச்சலாக அவர் எழுப்பிய கேள்விக்கணைகள் அ.தி.மு.க. வினரிடம் அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே சமயம் சட்டசபைக்கு சென்றதன் மூலம் "புதிய இமேஜ்'' உருவாகி இருப்பதை ஜெயலலிதாவும் உணர்ந்துள்ளார். எனவே தொடர்ந்து சட்டசபைக்கு சென்று அதிரடியாக கேள்விகள் கேட்க தீர்மானித்துள்ளார்.

எம்.எல்.ஏ. ஆக இருப்பவர்களுக்கு சட்டசபையில் பேச குறிப்பிட்ட நேரம்தான் கிடைக்கும். ஆனால் எதிர்க்கட்சித்தலைவராக இருந்தால் சபையில் நடக்கும் எல்லா விவாதங்களிலும் குறுக்கீடு செய்து பேச முடியும்.

இத்தகைய கூடுதல் வாய்ப்பை ஜெயலலிதா பெற, எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை தன் வசம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. மூத்த தலைவர் களும், கூட்டணி கட்சியினரும் வலியுறுத்தினார்கள். இதை ஜெயலலிதா ஏற்றுக் கொண்டதாக தெரிகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது. எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதா தேர்வு செய்யப்படுகிறார். தற்போது எதிர்க்கட்சித்தலைவராக உள்ள ஓ. பன்னீர் செல்வம் துணைத்தலைவர் ஆவார் என்று தெரிகிறது.

சட்டசபையில் நாளை (செவ்வாய்க்கிழமை) கவர்னர் உரை மீது எதிர்க்கட்சித் தலைவர் பேச கணிசமான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஓ. பன்னீர் செல்வம் சஸ்பெண்டு ஆகி இருப்ப தால் அவரால் பேச இயலாது.

இந்த நிலையில் ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவராகி, சட்டசபைக்கு சென்றால், நாளை அவர் பேசுவதற்கு கூடுதல் நேரம் கிடைக்கும்.

எதிர்க்கட்சித் தலைவருக்கு அமைச்சருக்கு உரிய அந்தஸ்து உண்டு. அவர் சபை விவாதத்தில் எப்போது வேண்டுமானாலும் குறுக்கிடலாம். இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத் திக்கொள்வதற்காக ஜெயலலிதா நாளை சட்டசபைக்கு வர உள்ளார்.

எதிர்கட்சித்தலைவராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்கக்கூடும் என்ற தகவல் வெளியானதும் ஆளும் கூட்டணி கட்சியினர் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் வாதத்திறமையை எவ்வாறு எதிர்கொள்வது என்று அவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர்.

ஜெயலலிதா பேட்டி

அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித்தலைமை அலுவலகத்தில் இன்று நடந்தது. கூட்டத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா கலந்துகொண்டார்.

ஓ. பன்னீர் செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், சேகர்பாபு, பதர் சயீத், கலைராஜன், செந்தமிழன், சீனிவாசன் உள்ளிட்ட 60 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர்.

இதில் சட்டசபை அ.தி.மு.க. தலைவராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு ஓ. பன்னீர் செல்வம் பூச்செண்டு கொடுத்து வாழ்த்தினார்.

கூட்டம் முடிந்ததும் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

கேள்வி:- சட்டசபை அ.தி.மு.க. தலைவராக நீங்கள் "செலக்ட்'' ஆகி இருக்கிறீர்களா?

பதில்:- செலக்ட் செய்யப்படவில்லை. ஒருமனதாக "எலக்ட்'' ஆகி இருக்கிறேன்.

கே:- உங்கள் மீது சட்ட சபையில் உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்பட்டுள்ளதே?

ப:- அதை சட்டசபையில் நாளை சந்திப்பேன்.

கே:- நீங்கள் எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்று விட்டீர்களா?

ப:- இப்போதே நான் எதிர்க்கட்சித் தலைவர்தான். சட்டசபையில் அ.தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி. அ.தி.மு.க. சார்பில் சட்டசபைக்கு தலைவராக யார் தேர்ந்து எடுக்கப்படுகிறரோ அவர் எதிர்க்கட்சித் தலைவராக செயல்படுவார்.

Read More...

Sunday, May 21, 2006

!

போன பதிவில் ஒரு படத்தை கொடுத்து இது என்ன என்று கேட்டேன். யாரும் சரியான விடையை தரவில்லை. இன்றோடு 15 வருடங்கள்..



May 21, 1991 ஸ்ரீபெரும்புதூரில் ஒரு தேர்தல் கூட்டத்தில் வெடிகுண்டு வெடிப்பில் ராஜிவ் காந்தி பலியானார்.

சம்பவம் நடந்த சிறுதி நேரத்தில் காவல்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஆர்.கே.ராகவன் இறந்து போன போட்டோ கிராபர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த சினான் கேமராவை கைப்பற்றினார். அதை 23ஆம் தேதி தமிழ்நாடு தடய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் டெவலப் செய்தார்கள். அதில் மொத்தம் பத்து புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருந்தன. பத்தாவது புகைப்படத்தில் குண்டு வெடித்ததன் காரணமாக ஏற்பட்ட பெருந்தீயும், புகையும் சூழ்ந்த தருணம் பதிவாகி இருந்தது. ராஜிவ் காந்தி, மனித வெடிகுண்டு மற்றும் அப்பாவிகள் பலர் பலியான சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த விநாடி புகைப்படமாக உறைந்து போயிருந்தது. அந்த புகைப்படம் தான் இது!.

மேலும் தகவலுக்கு : வாய்மையில் வெற்றி, ராஜிவ் காந்தி படுகொலை - புலனாய்வு. டி.ஆர்.கார்த்திகேயன், ராதா வினோத் ராஜூ. தமிழில் எஸ். சந்திரமெளலி. ராஜராஜன் பதிப்பகம். விலை 220/=)

படம் உதவி: The Human Bomb. Assassination of Former Primer Minister of India Shri Rajiv Gandhi. DVD Price 500/=



பின்னூட்டத்தில் பாலபாரதி கொஞ்சம் பக்கத்தில் வந்தார். அவருக்கு வாழ்த்துக்கள் !

Read More...

Friday, May 19, 2006

?

Read More...

Thursday, May 18, 2006

MLA விஜயகாந்த் பேட்டி

எம்.எல்.ஏ. பதவி ஏற்று விட்டு வெளியில் வந்த நடிகர் விஜயகாந்த் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விபரம் -

கேள்வி:- சட்டசபைக்கு தொடர்ந்து வருவீர்களா?

பதில்:- வருவேன்.

கே:- சட்டசபையில் எந்த பிரச்சினை குறித்து பேசுவீர்கள்?

ப:- முதன் முதலாக சட்ட சபைக்கு செல்கிறேன். 2 கட்சிக்கும் (அ.தி.மு.க., தி.மு.க.) மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் மக்கள் என்னை ஆதரித்துள்ளனர். எனவே மக்கள் பிரச்சி னைகள் குறித்து பேசுவேன்.

கே:- தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவீர்களா?

ப:- நான் ஆட்சியில் இல்லை. எம்.எல்.ஏ. ஆக தேர்ந்து எடுக்கப்பட்டு இருக்கிறேன்.

என் தொகுதி மக்களுக்காக போராடுவேன். இப்போது தான் சட்டமன்ற வளாகத்துக்கே வந்து இருக்கிறேன்.

இன்னும் 10 நாள் கழித்து கேளுங்கள். இன்னும் படமே போடவில்லை. அதற்குள் கிளைமாக்ஸ் பற்றி கேட்டால் எப்படி?

கே:- உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவீர்களா?

ப:- போட்டியிடுவேன்.

கே:- தனித்துப் போட்டியிடுவீர்களா?

ப:- பின்னர் அறிவிப்பேன்.

கே:- முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்திப்பீர்களா?

ப:- முதல்-அமைச்சர் எனக்கு தெரியாதவர் அல்ல. மக்கள் பிரச்சினைக்காக நிச்சயம் அவரை சந்தித்து பேசுவேன்.

கே:- நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுவீர்களா?

ப:- நான் அதை இங்கு சொல்ல இயலாது. கலந்து பேசி முடிவு செய்வேன்.

கே:- சட்டசபையில் தனி ஆளாக எப்படி சமாளிக்கப் போகிறீர்கள்?

ப:- மக்கள் ஆதரவுடன் இப்போது தான் நான் சட்ட சபைக்கு வந்து இருக்கிறேன். சட்டசபையில் எப்படி செயல் படுவது என்று கலந்து பேசி முடிவு செய்வேன்.

கே:- தேர்தலில் உங்களைத் தவிர கட்சியில் மற்றவர்கள் தோற்று விட்டார்களே?

ப:- இதில் எனக்கு வருத்தம் இல்லை. நான் அதிக வாக்கு களில் வெற்றி பெற்றுள்ளேன். இதுவே எங்களுக்கு மிகப் பெரிய வெற்றிதான். புதிய வாக்காளர்கள், மாணவர்கள் எனக்கு ஓட்டுப் போட்டுள்ளார்கள். இந்த தேர்தலில் பணபலம், ஆள் பலத்தை தாண்டி நான் ஜெயித்து இருக்கிறேன்.

Read More...

Tuesday, May 16, 2006

எல்லோரும் அர்ச்சகர் ஆகலாம் !

சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் அமைச்சர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது.

அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் பதவியில் நியமிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டு, அதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்பட்டது. இதுதொடர்பாக முறையான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுவிட்டது.

சென்னை கடற்கரையில் நிறுவப்பட்டு கடந்த ஜெயலலிதா ஆட்சியால் அகற்றப்பட்ட கற்புக்கரசி கண்ணகி சிலை இன்னும் 15 நாட்களில் அதே இடத்தில் நிறுவப்படும்.

திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியின்படி ஏழை, எளிய மக்களுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும். அதற்கான செயலாக்கத் திட்டம் விரைவில் தொடங்கும். திட்ட வரைவு இறுதியானவுடன் டிவி வழங்குவது தொடர்பான விரிவான விவரங்கள் வெளியிடப்படும்.

தமிழ் நாட்டில் எவ்வளவோ வளர்ச்சி பணிகள் இருக்க.. சரி நான் இதற்கு மேல் பேசவில்லை.

- * -

ரோசாவசந்த் எழுதிய லோக் பரித்ரன் உடைகிறது படித்து பார்க்கவும்.

Welcome to Politics, என்று சொல்ல தோன்றுகிறது.

- * -
Update:
கி.விரமணி.
முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அமைந்த ஆட்சியின் சாதனைகள் ஒரு சரித்திர தொடராக, என்றென்றும் வரலாற்றின் வைர வரிகளால் எழுதப்படுபவையாக தொடர்ந்து கொண்டே உள்ளன. அமைச்சரவை கூட்டத்தின் முதல் கூட்டத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வழிவகை செய்யும் ஆணை நிறைவேற்றப்பட்ட முடிவு அறிவிக்கப்பட்டது. அதனைப் பார்த்து பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுப்பது தான் எனது ஆட்சியின் முதல் குறிக்கோள் என்று அறிவித்த கருணாநிதியின் ராக்கெட்வேக முடிவு கேட்டு, அவர்கள் தொண்டர்கள் மகிழ்ச்சிக் கண்ணீரில் மிதந்து கொண்டுள்ளனர். கருணாநிதிக்கும், அவரது அமைச்சரவைக்கும் நிரந்தர நன்றி என்ற சொல்லைத்தவிர வேறு சொற்களை அகராதியில் தேடிப்பார்க்கிறோம். பார்த்துக்கொண்டே இருக்கிறோம். உலகத் தமிழர்களின் பாராட்டு மழையில் கருணாநிதி ஆட்சி குளித்துக் கொண்டுள்ளது. இந்த துணிந்த முடிவுக்காக திராவிடர்கழகம் பாராட்டு நன்றித் திருவிழாக்களை நாடெல்லாம், தமிழர் வீடெல்லாம் நடத்தும்.


விசுவ இந்து பரிஷத்

விசுவ இந்து பரிஷத்தின் இளைஞர் அணி மாநிலத்தலைவர் ஆர்.ஆர்.கோபால்ஜி முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று தங்கள் தலைமையிலான தமிழக அமைச்சரவை முடிவு செய்து ஒரு உத்தரவு பிறப்பித்து இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.

கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி நடந்த இந்து சமுதாய பாதுகாப்பு மாநில மாநாடு மற்றும் கிராமகோவில் பூஜாரிகள் 5-வது மாநில மாநாடு தீர்மானத்தில் இதே கோரிக்கையை தமிழக அரசுக்கு வலியுறுத்தியிருந்தோம். தாங்கள் ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று அறிவித்து விசுவஇந்து பரிஷத் கோரிக்கையை நிறைவேற்றியதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதற்காக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.


அர்ச்சகராக விரும்பும் இந்து இளைஞர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க ஆலய வழிபாட்டு முறை பயிற்சிக்கல்லூரி ஒன்றை அமைக்க அரசு முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் 2001-ம் ஆண்டு தாங்கள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோது, கிராம கோவில் பூசாரிகளின் நலனுக்காக நலவாரியம் ஒன்றை அமைத்தீர்கள். தற்போது முடங்கிக்கிடக்கும் அந்த நலவாரியத்தை மீண்டும் செயலாக்கம் பெறச்செய்ய தேவையான நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

Read More...

விஜயகாந்த் பேட்டி

அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்த தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. உங்களுடைய வாக்கு வங்கியின் நிலையும் தெளிவாக்கப்பட்டுள்ளது. நீங்கள் எப்படி உணருகிறீர்கள்?

தமிழக மக்கள் அளித்த தீர்ப்பை தலைவணங்கி ஏற்கிறேன். எங்கள் கட்சியை ஆதரித்து வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும், முரசு சின்னத்தில் வாக்களித்திருக்கலாமோ? என்று நினைப்பவர்களுக்கும் எங்கள் கட்சியின் சார்பாக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் தமிழகத்தில் 100-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் கட்சியாக தேமுதிக உருவெடுத்துள்ளது. இந்தச் சூழ்நிலையை நீங்கள் முன்னரே எதிர்பார்த்தீர்களா?

பெரும்பாலான தொகுதிகளில் தேமுதிக வெற்றி பெறும் என்று நினைத்திருந்தேன். தற்போது பெரும்பாலான தொகுதிகளில் கணிசமான வாக்குகளைப் பெற்று கட்சிக்கான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளோம். இது முதல் வெற்றி. ஆட்சியமைப்பவர்களை முடிவு செய்யும் சக்தியாக எங்கள் கட்சி உருவாகும் என்று ஆரம்பத்தில் இருந்தே நான் சொல்லியுள்ளேன். எங்கள் வெற்றியை யாரும் சந்தேகப்பட முடியாது. அதற்குக் காரணம் எங்களுடைய நேர்மையான அணுகுமுறைதான்.

உங்கள் கட்சிக்கு கிடைத்த வாக்குகள் உங்களுக்காகக் கிடைத்தது என்று நினைக்கிறீர்களா? அல்லது திமுக, அதிமுக கட்சிகளுக்கு மாற்று வேண்டும் என்று நினைத்தவர்களால் கிடைத்தது என்று நினைக்கிறீர்களா?

விஜயகாந்த் என்ற தனி மனிதனுக்கு கிடைத்த வாக்குகளாக நான் கருதவில்லை. ஒரு மாற்றம் வேண்டும் என்று நினைத்தவர்களுக்கு நான் ஒரு நல்ல மாறுதலைத் தருவேன் என்ற நம்பிக்கை இருந்ததால் இந்த அளவுக்கு வாக்குகள் கிடைத்திருக்கலாம். அதற்காக நானும், எனது கட்சித் தொண்டர்களும் ஆற்றிய உழைப்பை, சிந்திய வியர்வையைக் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. ஆரம்பத்தில் நான் என்ன சொன்னேனோ அதை கடைசி வரை கடைபிடித்திருக்கிறேன். மற்ற கட்சிகள் நாள்தோறும் ஓர் அறிவிப்பை வெளியிட்ட போது கூட நாங்கள் மனம் கலங்காமல் நாங்கள் சொன்னதிலேயே உறுதியாக இருந்தோம். அந்த உறுதிப்பாடு மக்களிடையே எங்களுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்து எங்களுடைய வாக்கு வங்கியை மற்ற கட்சிகள் வியந்தும், பயந்தும் பார்க்குமளவுக்கு உயர்த்தியுள்ளது.

உங்கள் தேர்தல் பிரசாரத்தின் மூலம் நீங்கள் தெரிந்துகொண்டது...?

நான் ஏற்கெனவே சினிமா ஷூட்டிங்குக்காக பல கிராமங்களுக்குச் சென்றுள்ளேன். அப்போதே கிராம மக்களின் வாழ்க்கைத் தரம் எந்த அளவுக்கு கீழேயுள்ளது என்று தெரியும். ஆனால் கடந்த 5 மாதங்களாக தேர்தலுக்காக நான் பல கிராமங்களுக்குச் சென்ற போதுதான் நான் நினைத்திருந்ததை விட கிராமங்கள் எந்த அளவுக்குப் பின் தங்கியிருக்கின்றன என்று தெரிந்துகொண்டேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகள் கிராமங்களை மறந்துவிட்டன. அதனால்தான் மக்கள் பிழைப்பு தேடி கிராமங்களை விட்டுவிட்டு நகரங்களை நோக்கி வருகிறார்கள். நம்முடைய நாட்டில் இருக்கும் வளத்திற்கு கிராமங்களின் மீது தனி அக்கறை செலுத்தி அவற்றை முன்னேற்றினாலே போதும். பல தலைமுறைகளுக்கு பட்டினி இல்லாமல் வாழலாம்.

உங்களுடைய தேர்தல் அறிக்கையைப் பார்த்த பின்புதான் மற்ற கட்சிகள் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் பல இலவசத் திட்டங்களை அறிவித்தனர் என்று ஒரு பேச்சு உள்ளது. அதைப் பற்றி...?

அதில் எந்த அளவுக்கு உண்மை என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத்தான் தெரியும். அப்படி இருந்தால் மக்களுக்கு பல சலுகைகள் கிடைக்க நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்று சந்தோஷப்பட்டுக்கொள்வேன். எந்த ரூபத்திலாவது மக்களுக்கு நன்மை நடந்தால் சரிதான்.

விருத்தாசல வெற்றி குறித்து...?

விருத்தாசலத்தில் நிற்க வேண்டும் என்று முடிவெடுத்த போதே அங்கு வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. எவ்வளவோ எதிர்ப்புகள். ஆனால் மக்கள் என் மேல் வைத்திருந்த நம்பிக்கைக்கும், அன்புக்கும் முன்னால் எதுவும் எடுபடவில்லை. இனிமேல் என் தொகுதி மக்கள் நான் காட்டப் போகும் அன்பை பார்க்கத்தானே போகிறீர்கள்.

இனிமேல் உங்கள் தொகுதியில் மட்டும்தான் கவனம் இருக்குமா?

தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் விருத்தாசலம் தொகுதிக்கு குடி தண்ணீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, முந்திரி பதப்படுத்தும் தொழிற்சாலை, படித்த, படிக்காத இளைஞர்களுக்கு அவர்களுக்கேற்ற வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்க போராடுவேன். தேமுதிக தலைவர் என்ற முறையில் தமிழகம் முழுமைக்கும் நன்மை கிடைக்க பாடுபடுவேன்.

ஒவ்வொரு கட்சியினரும் சில தொகுதிகளை தங்கள் கோட்டை என்று கூறுவது குறித்து...?

என்னைப் பொருத்தவரை இனி அப்படியெல்லாம் சொல்ல முடியாது. குறிப்பாக சென்னை, தென் மாவட்டங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இந்த நிலை மாறியுள்ளது. இதற்குக் காரணம் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள் என்பதுதான்.

அடுத்து சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா?

நிச்சயமாக. பல கம்பெனிகளிடமிருந்தும் அழைப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய சொந்த பேனரிலும் படம் தயாரித்து நடிக்கும் எண்ணம் உள்ளது. இது எந்த விதத்திலும் என்னுடைய அரசியல் பணியைப் பாதிக்காதவாறு பார்த்துக்கொள்வேன்.

எம்.எல்.ஏ. ஆகிவிட்டீர்கள். நடிகர் சங்கத் தலைவர் பதவியில் நீடிப்பீர்களா?

இப்போதுதான் எங்களது மன்ற நிர்வாகிகளிடமும், திரையுலக நண்பர்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அனைவருடைய விருப்பத்துக்கு ஏற்றாற்போல் முடிவெடுப்பேன்.

தேர்தலுக்குப் பிறகு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்தீர்களா?

இல்லை. ஆனால் அவருக்கு என்னுடை மனமார்ந்த வாழ்த்துக்கள். சட்டப் பேரவைக்கு செல்வதற்கு முன்பு நிச்சயம் அவரைச் சந்தித்து ஆசி பெறுவேன்.

உங்கள் கட்சியின் பலவீனம் என்று எதை நினைக்கிறீர்கள்?

நாங்கள் சந்தித்த முதல் தேர்தல் என்பதால் சில சில பிரச்சினைகளைச் சந்தித்தோம். சில இடங்களில் தவறு நிகழ்ந்துள்ளது. பண பலம் இல்லாததும் ஒரு பலவீனம்தான். எல்லாவற்றையும் கட்சி நிர்வாகிகளும், என்னுடைய நல விரும்பிகளும், பத்திரிகைகளும் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். அவற்றை உதாசீனப் படுத்தாமல் தேவையான மாற்றங்களைச் செய்து அனைவரின் நன்மதிப்பையும் பெறுவோம்.

இப்போது உங்கள் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ள உற்சாகம் குறையாமலிருக்க என்ன திட்டம் வைத்துள்ளீர்கள்?

இனி எங்கள் தொண்டர்களின் உற்சாகம் மேலும் அதிகரிக்கும். அடுத்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் இன்னும் அதிக உழைப்பை வெளிப்படுத்துவோம். தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று நிர்வாகிகளைச் சந்தித்து பொதுக்கூட்டம், மாநாடு போன்றவற்றின் மூலம் தொண்டர்கள், பொதுமக்கள் ஆகியோரின் அபிமானத்தைப் பெறுவேன். அரசியலில் எங்களுக்கு அங்கீகாரம் பெற்றுத் தந்த தமிழக மக்களின் நலனுக்காக இறுதி வரை பாடுபடுவேன்.

நன்றி: தினமணி

Read More...

Monday, May 15, 2006

ஜெயலலிதா செய்த தவறு! - சோ பேட்டி

சிறப்புப் பேட்டி - சோ

தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்தும், முதல் முறையாகத் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்படப்போவது குறித்தும் 'துக்ளக்' ஆசிரியரும், அரசியல் விமர்சகருமான சோவிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

"தி.மு.க., அ.தி.மு.க. போன்ற எந்த பெரிய கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காமல், தமிழக மக்கள் வித்தியாசமான தீர்ப்பளித்திருக்கிறார்கள். இதற்கு என்ன காரணம்?"

"தமிழகத்தில் தி.மு.க. அமைக்கப்போகும் புதிய அரசாங்கத்தில், அதன் கூட்டணிக் கட்சிகள் பங்கேற்குமா அல்லது வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து ஆட்சியில் தி.மு.க-வை அமர்த்துமா என்பது இன்னும் முடிவாகாத நிலையில்தான் நான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். எப்போதும் ஒரு தேர்தல் முடிவு வெளிவந்துவிட்டால், அதுதான் மக்களின் மனநிலை என்ற கருத்து நிலவுகிறது. அது தவறு. இந்தத் தேர்தலில் கூட்டணி ஆட்சிதான் வேண்டும் என்று எந்த வாக்காளரும் ஓட்டுச் சாவடிக்குப் போகவுமில்லை; ஓட்டுப் போடவும் இல்லை. அதேபோல், இந்தத் தொகுதியில் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்போம், அடுத்த தொகுதியில் தி.மு.க. கூட்டணிக்கு எதிர் அணியில் இருப்பவர்களுக்கு ஆதரவளிப்போம் என்றும் பெரும்பாலான வாக்காளர்கள் முடிவு செய்து ஓட்டுப் போடுவதுமில்லை. இப்படித்தான் ஆட்சி அமையவேண்டும் என்று மக்கள் திட்டமிட்டு ஓட்டுப் போட்டதினால் வந்த முடிவல்ல இது. இப்போது வந்திருக்கும் முடிவு எதேச்சையானது. ஆகவே, இப்படி முடிவு வரும்போது, மக்களை முன்னிறுத்தி இப்படிப்பட்ட கருத்துக்களை நாம்தான் பரப்புகிறோம்."

"தேர்தல் முடிவுகள் ஜெயலலிதாவுக்கும் அவரது கட்சிக்கும் சாதகமானதா... பாதகமானதா?"

"தி.மு.க-வைவிட அ.தி.மு.க. என்ற இயக்கம் வலுவானது என்பது இந்தத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தி.மு.க-வுக்கு இந்தத் தேர்தலில் அதன் கூட்டணிக் கட்சிகள் மூலம் சராசரியாக 22 சதவிகித ஓட்டுகள் கிடைத்திருக்கலாம். அதாவது, காங்கிரஸில் என்னதான் கோஷ்டிகள், சர்ச்சைகள் இருந்தாலும் தமிழகத்தில் அந்தக் கட்சிக்குப் பத்து சதவிகித ஓட்டுகள் இருக்கும். பா.ம.க-வுக்கு, குறைத்து மதிப்பிட்டாலும்கூட ஐந்து சதவிகித ஓட்டு வங்கி இருக்கும். இரண்டு கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கும் தமிழகத்தில் என்றுமே ஆறு சதவிகித ஓட்டு வங்கி இருந்து வருகிறது. இவற்றுடன் இந்தத் தேர்தலில் தி.மு.க-வை ஆதரித்த பல்வேறு அமைப்புகள், இயக்கங்களின் மூலம் ஒரு சதவிகிதம் ஓட்டு வங்கி சேர்ந்திருக்கும். ஆக, 23 சதவிகித ஓட்டு வங்கியை இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வைவிட, தி.மு.க. அதிகமாகப் பெற்றிருக்கிறது.

நடைபெற்று முடிந்திருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் சம பலத்தில் இருக்கும் கட்சிகள் என்ற நிலை இருக்குமானால், ஒட்டுமொத்த தொகுதிகளையும் தி.மு.க. அணிதான் பெற்றிருக்க வேண்டும். காரணம், அதனிடம்தான் கூட்டணி பலம் இருந்தது. ஆனால், கூட்டணி பலமே இல்லாமல் அ.தி.மு.க. மட்டுமே அறுபது இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றிக்கு அ.தி.மு.க. தன் பலத்துடன் கூடுதலாக ஆறு சதவிகித ஓட்டு வங்கியைத் தனது கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெற்றிருக்கிறது. ம.தி.மு.க-வுக்கு நான்கு சதவிகிதம், விடுதலைச் சிறுத்தைகள் அமைப்புக்கு இரண்டு சதவிகித ஓட்டு வங்கி, அதுவும் சில இடங்களில்தான். அந்தக் கட்சிகள் எட்டு இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதாவை ஏற்பவர்கள், கலைஞரை ஏற்பவர்களைவிட அதிகம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு, தனது சரிந்துபோன செல்வாக்கை மீண்டும் பெருமளவு ஜெயலலிதா நிமிர்த்தியிருக்கிறார். அடுத்து, இந்தத் தேர்தலில் சரியான கூட்டணியோடு ஜெயலலிதா தேர்தலைச் சந்தித்திருந்தால் மிகபெரிய வெற்றியை அடைந்திருப்பார். கூட்டணி இல்லாமல் தேர்தலைச் சந்தித்தது, ஜெயலலிதா செய்த தவறு என்பது என் கருத்து. அ.தி.மு.க., ம.தி.மு.க-வோடு மட்டுமில்லாமல், விஜயகாந்த் கட்சியோடும் கூட்டணி அமைத்திருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும். தி.மு.க-வுக்கு அதன் கூட்டணி பலம் வெற்றிக்கு உதவியது.

அடுத்து, இலவச கலர் டி.வி., இலவச நிலம் என தி.மு.க. இலவச வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தபோது, அவர்களுக்குப் போட்டியாக ஜெயலலிதாவும் இலவசங்களை வாக்குறுதிகளாக அள்ளித் தெளித்திருக்கக் கூடாது. மாறாக, 'தி.மு.க. சொன்னதுபோல எதையும் அவர்களால் கொடுக்க முடியாது. நடைமுறைக்கு சரிப்பட்டு வராதவை இந்த இலவச அறிவிப்புகள். இலவசங்களைக் கொடுப்பது மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அழகல்ல' என்பது மாதிரியான பிரசாரங்களை ஜெயலலிதா செய்திருக்க வேண்டும். கலைஞரின் வாக்குறுதிகளுக்கு மக்களிடையே ஆரம்பத்தில் நம்பகத்தன்மை இல்லை. ஆனால், ஜெயலலிதாவின் போட்டி அறிவிப்புகள் பிற்பாடு அதை ஏற்படுத்திக் கொடுத்து விட்டன என்பது என் கருத்து."

"இந்தத் தேர்தல், விஜயகாந்த்தை அரசியல் கதாநாயகனாக நிர்ணயித்திருப்பதாகப் பேச்சுக்கள் எழுந்திருக்கின்றன. விஜயகாந்த் கட்சியை மக்கள் உண்மையிலேயே ஏற்றுக் கொண்டார்களா?"

"நான் அவரது கட்சிக்கு ஒரு ஸீட் வரும் என்று முன்பே சொல்லியிருந்தேன். கூடவே பல இடங்களில் மூன்றாவது இடத்துக்கு வந்திருப்பார், பல இடங்களில் டெபாஸிட் இழந்திருப்பார் என்றும் சொல்லியிருந்தேன். தொகுதிவாரியாக அவரது கட்சி எவ்வளவு ஓட்டுகளை வாங்கியிருக்கிறது என்ற விவரம் தற்போது என்னிடம் இல்லை. ஆனாலும், அவர் இந்தத் தேர்தலில் அ.தி.மு.க-வோடு கூட்டணி வைத்திருந்தால், கணிசமான எம்.எல்.ஏ-க்களோடு பலம் வாய்ந்த எதிர்க்கட்சியாகத் தமிழகத்தில் விளங்கியிருப்பார். அவரது கட்சியைப் பற்றிய எதிர்பார்ப்பும் பேச்சும் இந்தத் தேர்தலில் மக்களிடம் இருப்பது தெரிகிறது."

"சென்னையில் அ.தி.மு.க. கணிசமான இடங்களைப் பெற்று, தி.மு.க-வின் கோட்டையில் பெரிய விரிசலை ஏற்படுத்தி இருக்கிறதே?"

"சென்னை மக்கள் இந்த முறை அ.தி.மு.க-வுக்கு வாக்களித்ததற்கு முக்கிய காரணம், குடிநீர் பிரச்னையை அது கையாண்ட விதமும், அதற்கு தீர்வு தேடிக் கொடுத்ததும்தான். இதோடு, சென்னை மாநகரம் சுனாமியாலும், மழை வெள்ளத் தாலும் பாதிக்கப்பட்டபோது, அரசு இயந்திரம் ஓடோடி வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டதையும் மக்கள் எண்ணிப்பார்த்து அ.தி.மு.க-வுக்கு ஓட்டுப் போட்டிருப்பார்கள்."

"இந்தத் தேர்தலில் ம.தி.மு.க., அ.தி.மு.க-வுடன் இணைந்ததும், வைகோவின் பிரசார பாணியும்... அ.தி.மு.க-வுக்குப் பலமா, பலவீனமா?"

"வைகோவின் பிரசாரம், அ.தி.மு.க-வுக்கு மிகப் பெரிய அளவுக்குக் கைகொடுத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், ம.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் அ.தி.மு.க-வுக்கு ஓட்டு பலம் கூடும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்க்கவில்லை."

"பா.ம.க-வுக்கு இந்தத் தேர்தல் பெரிய சறுக்கல் என்று வரும் விமர்சனங்களைப் பற்றி..?"

"என்னைக் கேட்டால், பா.ம.க-வுக்கு இந்தத் தேர்தல் மூலம் பெரிய முன்னேற்றமும் இல்லை... பின்னடைவும் இல்லை. கூட்டணி பலமில்லாமல் தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியாது என்பதை மீண்டும் ஒருமுறை பா.ம.க. நிரூபித்திருக்கிறது."

நன்றி: ஜூனியர் விகடன்

Read More...

வாய்ப்பைத் தவறவிட்டது தி.மு.க!

அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கிய வலிமையான ஓர் அரசாங்கத்தை அமைக்கும் வாய்ப்பினைத் திராவிட முன்னேற்றக் கழகம் தவறவிட்டு விட்டதாகவே தோன்றுகிறது. வெறும் 96 சட்டமன்ற உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ள அக் கட்சி தனித்து ஆட்சியமைத்துள்ளமை, இதையே காட்டுகிறது.

தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகள் தாமாகவே முன்வந்து நிபந்தனையற்ற ஆதரவு தந்துள்ளது அக் கட்சிகளின் பெருந்தன்மைக்கு எடுத்துக்காட்டு! ஆனால், இதனைக் கூட்டணிக் கட்சிகளின் பலவீனமாக தி.மு.க. கருதிவிடக் கூடாது. "நிபந்தனையற்ற ஆதரவு' என்பது பேருக்காக இருக்கலாம். நடைமுறையில் இருக்க முடியாது.

உண்மையில், மற்றொரு கட்சிக்கு "நிபந்தனையற்ற' ஆதரவு அளிப்பதற்காக அக் கட்சிகள் வெற்றி பெற்று வரவில்லை - தங்களை ஆதரித்த மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யவே அவை சட்டமன்றத்திற்கு வந்துள்ளன!

தேர்தலுக்கு முன்பு கூட்டணியில் பங்கேற்ற கட்சிகளை, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி அரசில் பங்கேற்குமாறு தி.மு.க. தாமாகவே முன்வந்து அழைத்திருக்க வேண்டும். மேற்கு வங்கத்தின் 293 சட்டமன்றத் தொகுதிகளில் 176 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையிலும், கூட்டணி அரசு அமைக்க அம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முன்வரும்போது, தமிழகத்தின் 234 தொகுதிகளில் 96-ல் மட்டுமே வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி ஆட்சி அமைக்க முன்வராதது வியப்புக்குரியது.

ஆட்சியில் பங்கு கொடுத்து அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள முன்வராவிட்டாலும், ஆட்சி நடத்துவதற்கான வழிகாட்டுதல்களையாவது பெறுவதற்கு தி.மு.க. முன்வந்திருக்க வேண்டும்.

தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பரபரப்பாகப் பேசப்பட்டதுதான். அதற்காக தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை மட்டுமே உயர்வானது, மற்றதெல்லாம் மோசம் என முடிவெடுத்து விட முடியாது. தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், பா.ம.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் அனைத்தும் ஆளுக்கொரு அறிக்கையை முன்வைத்துத்தான் தேர்தலைச் சந்தித்துள்ளன. இந்த அறிக்கைகளுக்காகத் தொடர்ந்து பாடுபட வேண்டிய கடமை அக் கட்சிகளுக்கு உண்டு.

எனவே, தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை மட்டுமே இலக்காகக் கொள்ளாமல், கூட்டணிக் கட்சிகளின் அனைத்துத் தேர்தல் அறிக்கைகளிலும் கூறப்பட்டுள்ளவற்றைப் பட்டியலிட்டு, அவற்றில் எல்லா கூட்டணிக் கட்சிகளுக்கும் உடன்பாடான அம்சங்களைக் கொண்டு, ஒரு குறைந்தபட்ச பொதுச் செயல்திட்டத்தைத் தயாரித்திருக்க வேண்டும்.

ஏனெனில், தி.மு.க. ஆட்சியமைக்க, காரணமாக உள்ள 163 சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்திற்குப் பின்னால், தி.மு.க.வின் எதிர்பார்ப்புகள் மட்டும் தனியாக இல்லை. கூடவே, கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகளும், லட்சியங்களும் கலந்தே உள்ளன! அந்த எதிர்பார்ப்புகளுக்கு தி.மு. கழகம் மதிப்பளித்திருக்க வேண்டும்! அதுதான் நியாயமும்கூட.

அவ்வாறே, ஆட்சி நடத்தும் போது அவ்வப்போது எடுக்க வேண்டிய முக்கிய முடிவுகளை எல்லாம், தி.மு.க.வின் அமைச்சரவை மட்டுமே முடிவெடுக்காமல், கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி ஒருமித்த முடிவினை எடுக்கக்கூடிய ஓர் அமைப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்காக, கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைக் கொண்ட ஓர் ஒருங்கிணைப்புக் குழுவினையும் அமைத்திருக்க வேண்டும்.

இவ்வாறாக, ஜனநாயகத்தை வலுப்படுத்துவதற்காகக் கிடைத்த ஓர் அரிய வாய்ப்பினை தி.மு.க. தவறவிட்டுள்ளது. இனியாவது, இத்தகைய பொது செயல்திட்டம் மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதற்கு தி.மு.க. முன்வரலாம். அப்படி முன்வந்தால் தமிழகத்திற்கு நல்லது.

நன்றி: தினமணி

Read More...

Sunday, May 14, 2006

கார்ட்டூன்ஸ் டாப் 10

இட்லிவடையில் பல கார்ட்டூன்களை ரசித்திருப்பீர்கள். ஒரு கார்ட்டூனிஸ்டின் வேலை நம்மிடையே ஒளிந்திருக்கும் நகைச்சுவை உணர்வை தட்டி எழுப்புவது (சிலருக்கு கிச்சு-கிச்சு மூட்டினால் தான் சிரிப்பார்கள்; சிலருக்கு இலக்கியம் படித்தால் தான் சிரிப்பு வரும்). நான் ஒரு நாளைக்கு நேரத்தை வீணடிக்காமல் அட்லீஸ்ட் ஒரு கார்ட்டூனையாவது பார்த்துவிடுவேன். கார்ட்டூனை பார்ப்பதற்கு ஒரு சில நொடிகளே போதும்.

மதன் சொல்லுவதை போல் -

"படம் போடத் தெரிந்தவர்கள் கார்ட்டூனிஸ்ட் ஆகி விட முடியாது. இன்னும் கேட்டால் தேவையான நகைச்சுவை உணர்வு உள்ளவர்கள் கார்ட்டூன் வரையக் கற்றுக் கொள்ள முடியும்!. சிலருக்கு தீடீரென்று H2+O தண்ணீர் மாதிரி நகைச்சுவை உணர்வும் படம் வரையும் திறமையும் ஒருங்கிணைந்து வெளிப்பட்டு விடுகிறது. கார்ட்டூன் இல்லாத பத்திரிகை மீசையில்லாத் வீரன். தோகையில்லாத மயில்; மிளகாய்ப்பொடி இல்லாத இட்லி".
அன்றாட அரசியலில் தலைவர்களின் நிலைகளையும், அவர்களின் பேச்சுக்களையும் உன்னிப்பாக கவனித்து மக்கள் ரசிக்கத்தக்க வகையில் அதை கார்ட்டூனாக வெளிப்படுத்துவது என்பது எளிய வேலை இல்லை. தமிழ் நாட்டில் கார்ட்டூனிஸ்ட்டுகள் விரல் விட்டு எண்ணும் அளவிலேயே தான் இருக்கிறார்கள். தற்போது இது பரவாயில்லை என்று சொல்லலாம். சொல்ல நினைக்கும் விஷயத்தை நீட்டி முழக்காமல் பளிச் என்று மின்னல் வேகத்தில் சொல்லி மற்றவரை சிரிக்கவும் செய்கிறார் ஒரு கார்ட்டூனிஸ்ட்!.


ஆனந்த விகடன் - மதன், குமுதம் - பாலா, Times of India - R.K.Laxman, தினமணி - மதி, Delhi Times - Sudir Dar, கோபுலு, சிம்பு என்று சொல்லுக்கொண்டே போகலாம்.

என்னிடம் இருக்கும் சில கார்ட்டூன் புத்தகங்கள் பற்றிய குறிப்புகள்.

1. தினமணிடூன் 1, 2 - மதியின் கார்ட்டூன்ஸ் தொகுப்பு. இரண்டும் நல்ல புத்தகங்கள். முதல் புத்தகம் - அரசியல், இரண்டாவது - அரசியல் அல்லாத சமூகப் பிரச்சினைகளை கொண்டது.
( The New Indian Express Group publication, ஒவ்வொரு புத்தகமும் 75/= )

2. ஆங்! - உதயன் கார்ட்டூன்ஸ் - இவர் எந்த படத்தை போட்டாலும், எல்லோருக்கும் மண்டை குண்டாக இருக்கும். ரசிக்கலாம். ( காலச்சுவடு பதிப்பகம் - 200/= )

3. மதன் ஜோக்ஸ் 1, 2 - 1992, 1993ல் ஆனந்த விகடன் வெளியிட்ட புத்தகங்கள். ஏனோ இதை மறு பிரசுரம் செய்யவில்லை. விழுந்து விழ்ந்து சிரிக்கலாம். அதுவும் அந்த ரெட்டைவால் ரெங்குடு, சிரிப்பு திருடன் சிங்காரவேலு, முன்ஜாக்கிரதை முத்தண்ணா, வீட்டு புரேக்கர் புண்ணியகோடி, ஹலோ டாக்டர், உஷ்...ஒய்ஃப். ( விகடன் பதிப்பகம் - முதல் தொகுதி - 12/=, இரண்டாம் தொகுதி - 17/=)

4. சமிபத்தில் கோபுலு ஜோக்ஸ் என்று ஆனந்த விகடன் ஒரு செல்போன் சைஸில் புத்தகம் வெளியிட்டார்கள். மிக நல்ல புத்தகம். ( விகடன் பதிப்பகம் - 50/= )

5. கிமுவில் சோமு - சிம்பு - தமிழ் காமிக்ஸ் என்றால் இந்த புத்தகம் தான் வந்திருக்கிறெது. மற்ற தமிழ் காமிக்ஸ் எல்லாம் ஆங்கிலத்திலிருந்து காப்பி. ( நர்மதா பதிப்பகம் - 27/=)

6. The Mad, Mad world of elections - Sudir Darன் அரசியல் கார்ட்டூன்ஸ். ஒரு பக்கம் கார்ட்டூன் மறு பக்கம் தேர்தல் பற்றி சில குறிப்புகள். நல்ல புத்தகம். (Penguin, 200/=)

7. The Dose of Laughter - R.K.Laxman - ஒரு பக்கம் கார்ட்டூன் ஒரு பக்கம் ஜோக்ஸ் என்று கலக்கல் புத்தகம். (Penguin, 200/=)

8. A Vote for Laughter - R.K.Laxman - முன்பு சொன்ன புத்தகம் போல் ஒரு பக்கம் அரசியல் ஜோக்ஸ் மறு பக்கம் கார்ட்டூன். இதுவும் ஒரு கலக்கல் புத்தகம். (Penguin, 200/=)

9. The Best of Laxman Series கார்ட்டூன் தொகுப்பு (Penguin, Each 200/=)
- The common man balances his budget
- The common man seeks justice
- The common man goes to the village

- The common man watches cricket

- The common man casts his vote

- The common man in the new millennium

- The common man tackles corruption

- The common man at large

- The common man meets the mantri

- The common man stands in queue
- The common man takes a stroll
- The common man at home


இவை எல்லாம் மிக நல்ல தொகுப்புகள்.

10. சமிபத்தில் "Brushing up the years - A cartoonist's history of India 1947 - 2004" R.K.Laxman என்ற புத்தகம் வாங்கினேன். விலை 750/=, கொடுக்கலாம். 1947 முதல் 2004 வரை முக்கிய நிகழ்வுகளின் கார்ட்டூன் தொகுப்பு. இது புத்தகம் அல்ல பொக்கிஷம் (Penguin, 750/=)


இந்த பதிவுடன் நட்சத்திர பதிவு முடிகிறது. தமிழ்மண நிர்வாகிகளுக்கும், வாசகர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.

Read More...

தேர்தல் போஸ்ட் மார்டம்






வெற்றி பெற்றவர்கள் விவரம் - பகுதி 1
வெற்றி பெற்றவர்கள் விவரம் - பகுதி 2

தகவல் உதவி, TheHindu, தினகரன்.

Read More...

Saturday, May 13, 2006

டாப் 10-1 தேர்தல் அறிக்கை

இட்லிவடை டாப் 10-1 தேர்தல் அறிக்கை

திமுகவின் தேர்தல் அறிக்கை தான் இந்த தேர்தலின் கதாநாயகன் என்று எல்லோரும் பாராட்டுகிறார்கள். கில்லி கொடுத்த தைரியத்தில் வலைப்பதிவில் தேர்தல் நடந்தால்? இதோ என் தேர்தல் அறிக்கை.

1. போலி டோண்டுவினால் பாதிக்க பட்ட அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து.

2. தமிழ்மணத்தில் இலவச இட ஒதிக்கீடு (நட்சத்திர பதிவாளர் போல்)

3. பதிவுகள் இல்லாத போது இலவச பதிவுகள் எழுதி தரப்படும். பின்னூட்டம் அதிகம் வரவில்லை என்றால்(வாங்க வாங்க, :-), சூப்பர் அப்பு, கலக்கல், போன்ற பின்னூடங்கள் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும்.

4. போன ஆட்சியில் வலைப்பதிவை விட்டு துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடியவர்களை எல்லாம் தேடி கண்டுபிடித்து, திரும்பவும் வலைப்பதிவு எழுத சொல்லி மற்றவர்களை விரட்டுவோம்.

5. பெண் வலைப்பதிவாளர்களுக்கு தனியாக மாமிமணம் என்று ஒரு சுய உதவி குழு ஆரம்பிக்கப்படும்.

6. சுனாமி/வெள்ளம் போல் தாக்கும் வலைப்பதிவு வைரஸுக்கு உடனடி நிவாரணம்.

7. வீரப்பனை தேடி வீழ்த்தியது போல் வலைப்பதிவு தீவிரவாதிகளை வீழ்த்துவோம். அவர்களுக்கு ஆதரவு தருவோரை போடோ( போடோ - போலி டோண்டு :-) சட்டத்தில் கைது செய்வோம்.

8. மதிய சத்துணவில் எல்லோருக்கும் இனிமேல் இரண்டு முட்டைக்கு பதில் இரண்டு இட்லி போடப்படும்.

9. எல்லோருக்கும் கையடக்க எலிக்குட்டி

வேறு வாக்குறுதிகள் இருந்தால் பின்னூட்டதில் நீங்கள் சொல்லலாம்....

Read More...

தேர்தல் போட்டி - முடிவுகள்

கடவுள் சோதனை தருவார் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் இன்று தான் அதை அனுபவித்தேன். சுமார் 40 பேர் ஆர்வமுடன் கலந்து கொண்டு, நன்றாக சிந்தித்து பல நல்ல பதில்களை கொடுத்திருக்கிறார்கள்.

கலந்து கொண்ட 40 பேரில் பிரபு ராஜா மற்றும் குழலி பரிசு பெறுகிறார்கள். அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

கலந்து கொண்டவர்களின் விபரம் :
நாமக்கல் சிபி, மகேஸ், செந்தழல் ரவி, வினையூக்கி, NellaiKanth, Satheesh, இளையவன், Hamid, Rajkumar, குழலி, murugesan, நாகு, சிவா, பரஞ்சோதி, KVR, LuckyLook, இலவசக்கொத்தனார், முத்துகுமரன், Subramanian, Kodees,Haran prasanna, பிரதீப், ஜெயக்குமார், SK, தருமி, மாயவரத்தான், இளவஞ்சி, Kouthur Sriram, vasikar, Govikannan, மித்ரா, vishytheking, kumaresan.V, koothaadi, குமரேஸ், Suresh

இவர்கள் அளித்த பதில்களை publish செய்துள்ளேன். யான் பெற்ற இன்பம்...

Read More...

நன்றி !

போன மாதம் சென்னை கடற்கரையில் சுண்டல் சாப்பிட்டு கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒரு கூட்டம் அரசியல் பற்றி விவாதித்துக்கொண்டிருந்தது. அட, நம்ம சப்ஜெட் என்று பக்கத்தில் போய் சுண்டல் சாப்பிட ஆரம்பித்தேன். அப்போது பேச்சு திசை மாறி இட்லிவடைக்கு வந்தது எனக்கு கொஞ்சம் ஆச்சரியத்தை கொடுத்தது. சரி, நானும் கவனிக்கப்படுகிறேன் என்று உடனே நடுநிலைக்கு மாறினேன் :-)

பாஸ்டன் பாலா அவர்கள் தேர்தல் பதிவுகளில் இட்லிவடைக்கு முதல் மார்க் கொடுத்துள்ளார். ( நிச்சயம் இது சன் டிவி டாப் டென்னை விட உயர்ந்து ) அவருக்கு என் நன்றி. சமிபத்திய பதிவில் தேர்தல் நிலவரம் இன்னும் நன்றாக கொடுத்திருக்கலாம் என்ற கருத்தும் சரியே!. நிச்சயம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம். ( தேர்தல் செய்திகள் அப்டேட் செய்யும் போது கரண்ட் கட் , அதைவிட நேற்று டிவிக்கள் செய்த குழப்பம் என்னை கொஞ்சம் கலங்கடித்துவிட்டது. தேர்தல் நிலவரம் பற்றிய என்னுடைய நேற்றைய குறிப்புக்கள் பார்த்தால் நீங்களே புரிந்துக்கொள்வீர்கள் :-)

பிரகாஷ் கில்லியில் இட்லிவடை பற்றி கொஞ்சம் ஓவரக புகழ்ந்திருக்கிறார். அவருக்கும் என் நன்றி.

அதேபோல் Lazygeek.net, prabhukrish.net, hotmachihot.com, sambharmafia பதிவுகளில் என்னை பாராட்டி குறிப்பிட்டதற்கு நன்றி.

மேலும், DNA.com, Deccan Cronicle, CNN-IBN ஆகிய பதிவுகளில் தேர்தல் வலைப்பதிவுகளில் இட்லிவடையை பற்றி குறிப்பு வந்துள்ளது. அவர்களுக்கும் என் நன்றி.

இன்று தேன்கூட்டில் என் பதிவை இரண்டாவது முறையாக வாசகர் பரிந்துரையில் கவரேஜ் செய்ததற்கு மிக்க நன்றி.

தமிழ்மணத்தில் என்னை நட்சத்திரமாக இருக்க வாய்ப்பளித்த நிர்வாகிகளுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி. ( இன்னும் இரண்டு நாள் இருக்கு அதற்குள் நன்றியா ? பின்ன இந்த இரண்டு நாள் கரண்ட் இல்லை என்றால் ? )

பல பின்னூட்டங்களில் என்னை பாராட்டி கருத்து தெரிவித்த அனைவருக்கும் என் நன்றி. தனியாக ஒவ்வொருவருக்கும் பின்னூட்டத்தில் நன்றி சொல்ல ஆசை தான், ஆனால் மாயவரத்தானை நினைத்தால் பயமாக இருக்கிறது.

தினமும் காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் பார்த்துக்கொண்ட படத்தில் உள்ளஅரசியல் தலைவர்களுக்கு ஒரு மிக பெரிய நன்றி.

( போன மாதம் எடுத்த படம். சென்னை தி.நகரில் உள்ள பிரின்ஸ் ஜுவல்லரி பனகல் பார்க் எதிரில் உள்ள டிஜிடல் பேனர்)

கொஞ்சம் தலைகிறுக்கு ஏறி வலைப்பதிவு தேர்தலில் நிற்கலாம் என்று இருக்கிறேன். தேர்தல் அறிக்கை தயார் செய்து கொண்டிருக்கிறேன். அது நாளை..



ஒரு அல்ப சந்தோஷம். என்னை பற்றி குறிப்புக்களை கீழே தொகுத்திருக்கிறேன். படிக்கணும் என்று அவசியம் இல்லை.

பாஸ்டன் பாலா....
இட்லி-வடை: அலுவல் சம்பந்தமான க்ளையண்ட் விசிட்டில் தமிழ் நண்பரை முதன்முதலாக சந்தித்தேன். வழக்கமான வானிலை, போக்குவரத்து உசாவலுக்குப் பின் தமிழகத் தேர்தல் குறித்து பேச்சு திரும்பியது. என்னுடைய வலைப்பதிவு(கள்) குறித்தும் சிறிது கோடிட்டேன். 'எனக்கு இந்த ப்ளாக் எல்லாம் தெரியாது... இண்ட்ரெஸ்ட் கிடையாது. நீங்க இட்லி-வடை வெப்சைட் படிப்பது உண்டா?' என்று பேச்சை முடித்துக் கொண்டார்.
தேர்தல் 2006-இல் தமிழ்ப்பதிவுகளின் வலைத்துடிப்பு.


கில்லியில்...
வலையுலகைப் பொறுத்த வரை, நடந்து முடிந்த தேர்தலிலே, வெற்றி பெற்றது திமுக கூட்டணியுமல்ல, அதிமுக கூட்டணியுமல்ல. இட்லிவடைதான்!
கடந்த நூறு நாட்களாக, தேர்தல் குறித்த செய்திகள் அனைத்தையும், ஒன்று விடாமல், வலைப்பதிவு வாசகர்களுக்கு சுடச்சுட அளித்து, வலைப்பதிவு என்கிற தொழில்நுட்பத்தின் சாத்தியக்கூறுகளை பிற ஊடகங்களுக்கும் எடுத்துச் சொல்லி, கலக்கோ கலக்கென்று கலக்கிய
இட்லிவடைக்கு,
கில்லியின் மனமார்ந்த பாராட்டுக்கள்


தேன்கூட்டில்....
மூன்றாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் வலைப்பதிவுலகில் தனது நகைச்சுவை எழுத்தால் பலரை கவர்ந்து வருகிறார் இவர். 'தமிழர்கள் சாப்பாட்டு பிரியர்கள். எனவே தான் எனது வலைப்பதிவிற்கு 'இட்லி வடை', என்று பெயரிட்டுள்ளேன்' என்று குறிப்பிட்டிருக்கிறார். இட்லி வடை - எழுதும் வலைப்பதிவர் யார் என்பது நீண்டகாலமாகவே இருந்து வரும் சுவாரசியமான ஒரு கேள்வி. சமீபகாலமாக இன்னமும் அதிகமாகவே!

நடந்து முடிந்த தமிழகத் தேர்தல் நேரத்தில் இவரது வலைப்பதிவைப் பார்க்காதவரே இல்லை என்று சொல்லலாம். செய்திகளை முந்தித் தருவதில் இணையத்தின் அனைத்து ஊடகங்களையும் பின்னுக்குத் தள்ளியவர். தமிழ் இணைய வாசகர்கள் பலரையும் வேறு இணையதளங்கள் பார்க்கும் தேவையில்லாமல் செய்து விட்டவர்!

தமிழ் வலைப்பதிவுகளைப் பொறுத்த வரை தேர்தல் வலைப்பதிவுகளில் இட்லி வடை ஏகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

முடிந்தவரை சார்பு நிலை கொள்ளாமல் செய்திகளை மட்டும் கொடுத்ததுடன், முடிவுகளை அறிவிப்பதிலும் இட்லி வடை சுட சுடத்தான்! அச்சு மற்றும் செய்தி ஊடகங்களிலும் கவனம் பெற்று வலைப்பதிவுகளின் பக்கம் ஏராளமான வாசகர்களை கவர்ந்து இழுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த முறையில் 'தேர்தல் 2006'-ஐ கவரேஜ் செய்த 'இட்லி வடை'-க்கு, வாழ்த்துகளும், பாராட்டு்களும்!


மூக்குகண்ணாடி...
வலைப்பூவை பொறுத்த வரை இட்லி வடை எகோபித்த ஆதரவுடன் வெற்றி பெற்றிருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அடுத்த தேர்தலில் கட்சிகள் பிரத்யோக வலைப்பூவை ஆரம்பித்தால் கூட இட்லி வடையின் கவரேஜை பீட் பண்ண முடியாது போல. முடிந்தவரை சார்பு நிலை கொள்ளாமல் செய்திகளை மட்டும் கொடுத்தற்கும் ஒரு ஷொட்டு. Hats off இட்லிவடை! முடிவுகளின் கவரேஜையும் எதிர் பார்க்கிறோம்.
Lazygeek.net....
For the superb minute by minute un-biased reporting /analysis on Tamil Nadu Elections 2006, Idly Vadai Weblog should be awarded a mid-term Indibloggies.
Atleast I suggest we create a Tamil Bloggies and award the first one to Idly Vadai.
prabhukrish.net....
The winner in this election is IdlyVadai by a big margin. Not just the speed in which he/she updated the results. Interviews/manifesto details, defection gossip etc. You name it, IdlyVadai had it.
IdlyVadai. May your good work continue :)
DNA.com....
Kerala blogs like Newkerala.-blogspot.com crank up the spice quotient by detailing political scandals, investigations against politicians, strikes and developments like pay revision of employees.

Serving up piping hot political news, Idlyvadai.blogspot.com and Hotmachihot.blogspot.com gives information on the latest deserters, newcomers and campaigning gaffes like the politician who used Hindi handbills to campaign in Tamil Nadu.
Deccan Cronicle....
But the most interesting is Idlyvadai. blogspot.com and Hotmachihot. blogspot.com, which gives information on the latest deserters, newcomers and campaigning gaffes like the politician who used Hindi handbills to campaign in Tamil Nadu.“
CNN-IBN....
"The Tamil Nadu elections are not just being discussed at tea shops and bus stands. For the first time ever in Indian politics, blogs might just have a say in the final results.

Sambharmafia, Idlyvadai and Hotmachihot - these are just some of the over 20 blogs that have come up in the last two months and are dedicated to the Tamil Nadu elections.

From serious analysis on seat sharing to poking fun at free colour TVs in English and Tamil, these blogs have them all. "

Read More...

Friday, May 12, 2006

விஜயகாந்த் ஸ்பெஷல்

சூப்பர் ஸ்டார் ரஜினி விஜயகாந்த்
விருத்தாசலம் தொகுதியை சவால் விட்டு பிடித்தார் விஜயகாந்த். இதன் மூலம் பா.ம.க., கோட்டைக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.தே.மு.தி.க., கட்சியை துவங்கிய நடிகர் விஜயகாந்த், தேர்தலில் 232 தொகுதிகளில் போட்டியிட்டார். விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டார். வன்னியர்கள் அதிகம் உள்ள தொகுதியில் எப்படி ஜெயிக்க முடியும் என்று பல தரப்பிலும் கேள்வி எழுந்தது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத விதமாக பா.ம.க.,வின் கோட்டையான விருத்தாசலத்தில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

வன்னியர்கள் அதிகமாக வாழும் பகுதியில் அவர்களைத் தவிர மற்றவர்கள் அத்தொகுதியில் வெற்றிபெறுவது குதிரை கொம்பான விஷயம். அத்தோடு தேர்தலில் பா.ம.க.,வின் சார்பில் டாக்டர் கோவிந்தசாமியும், அ.தி.மு.க.,வின் சார்பில் காசிநாதன் என்பவரும் போட்டியிட்டனர். இவர்கள் இருவருமே வன்னியர்கள். ஆனால், விஜயகாந்த் 61 ஆயிரத்து 337 ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க., வேட்பாளர் டாக்டர் கோவிந்தசாமி 13 ஆயிரத்து 777 ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.

விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் விஜயகாந்த்தை தோல்வியடைய செய்ய, அரசியல் கட்சிகள் அனைத்து அஸ்தரங்களையும் பயன்படுத்தினர்.

பேட்டி:
தேர்தலுக்குப் பின்னர் சென்னையில் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற நிலை ஏற்பட்டுள்ளதற்கு எனது அரசியல் பிரவேசமே காரணம். வெற்றி கிடைக்காவிட்டாலும் பல தொகுதிகளில் கணிசமான வாக்குகள் அளித்து எனக்கு ஆதரவு அளித்த மக்களுக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

கட்சித் தொண்டர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள். நான் 5 முதல் 10 தொகுதிகள் வரை கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்.

அ.தி.மு.க.வின் தோல்விக்கு காரணமா?

அ.தி.மு.க. அணி தோல்வி அடைய நாங்கள் காரணமா என்பதை நான் சொல்ல முடியாது. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு என்பார்கள். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பின்னர் 5 ஆண்டுகள் இரு கட்சிகளும் மாறி, மாறி தான் ஆட்சி செய்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்திருந்தது தெரிகிறது.

சட்டமன்றத்துக்கு தவறாமல் சென்று பணியாற்றுவேன். இந்த ஆட்சியாளர்கள் தவறு செய்தால் தட்டிக் கேட்பேன். ஒரு கை ஓசை எந்த அளவுக்கு எதிரொலிக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் நான் தனித்தே செயல்படுவேன். தேவை ஏற்பட்டால் போராடுவேன்.

கூட்டணி ஏற்படுத்தாதது தவறு என்று நினைக்கிறீர்களா?

இல்லை. தனித்துப் போட்டியிட வேண்டும் என்பதை விரும்பித்தான் செய்தோம். இரு கட்சிகளும் (அதிமுக, திமுக) கூட்டணி குறித்து பேசினர். அடுத்த தேர்தலில் கூட்டணி ஏற்படுத்திக் கொள்வது குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பேசி முடிவு எடுக்கப்படும்.

அரசியலிலிருந்து விலகல் ?

இவ்வளவு ஓட்டுகள் கிடைத்த பிறகு நான் ஏன் அரசியலில் இருந்து விலக வேண்டும். தொடர்ந்து கட்சியை வளர்க்க பாடுபடுவேன். அ.தி.மு.க, தி.மு.க.வுக்கு ஒரு மாற்று கட்சியாக உருவாக பாடுபடுவேன். தேர்தலில் இரு அணிகளும் எங்களை கூட்டணியில் சேர அழைத்தன. ஆனால் நான் தான் முடியாது என்று கூறிவிட்டேன்.

நடிகர்கள், டைரக்டர்கள் ஆகியோர் எனக்கு எதிராக பிரசாரம் செய்ததை எல்லாம் நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்.டி.ஆர், எம்.ஜி.ஆர். போன்றவர்கள் கட்சி தொடங்கி வெற்றி பெற்ற போதெல்லாம் இவ்வளவு கட்சிகள் இல்லை. எம்.ஜி.ஆருக்கு காங்கிரஸ் ஆதரவு இருந்தது. ஆனால் இப்போது எத்தனை கட்சிகளை எதிர்த்து, யாருடைய ஆதரவும் இன்றி நான் போட்டியிட்டிருக்கிறேன் என்பதே பெரிய விஷயம்.

பாமக கோட்டையில் நீங்கள் வெற்றி பெற்றது குறித்து ?

கோட்டை என்பது எல்லாம் வெறும் மாயை. சென்னை திமுக கோட்டை என்றார்கள் இன்று அதிமுக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

நிர்வாகிகளிடம் பேசி முடிவு எடுப்போம்.

சினிமாவில் தொடர்ந்து நடிப்பீர்களா அல்லது முழு நேர அரசியலில் ஈடுபடுவீர்களா?

அரசியலில் ஈடுபடும் அதேவேளையில் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன்.

நீங்கள் தமிழகம் முழுவதும் சுற்றி வந்தீர்கள் மக்கள் பிரச்சினை என்ன?

குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்பதுதான் முக்கியப் பிரச்சினை.
முதல்- அமைச்சராக கருணாநிதி பதவி ஏற்றதும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பேன் என்றார்.

பாதிப்புகள்
தமிழக சட்டசபை தேர்தலில் விஜயகாந்த் கட்சி பல தொகுதிகளில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க. போன்ற கட்சி வேட்பாளர்களின் வெற்றியில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் சில

* விஜயகாந்த்தின் தே.மு.தி.க. வேட்பாளர் தர்மன் 48,522 ஓட்டுகள் பெற்றது அரசியல் கட்சியினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

* நெல்லை சட்டசபை தொகுதியில் அமைச்சர் நயினார் நாகேந்திரன் (அ.தி.மு.க), தி.மு.க. வேட்பாளர் மாலை ராஜாவை விட 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இந்த தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெயச்சந்திரன் 4 ஆயிரத்து 80 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

*இதே போல சேரன்மாதேவி தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க.வேட்பாளர் பால்மனோஜ் பாண்டியன் காங்கிரஸ் வேட்பாளர் வேல்துரையை விட 6 ஆயிரத்து 32 ஓட்டுகள் குறைவாகப் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்த தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ராஜேந்திரநாதன் 8 ஆயிரத்து 122 ஓட்டுகள் பெற்றார்.

*மொடக்குறிச்சி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பழனிச்சாமியை விட அ.தி.மு.க.வேட்பாளர் நமச்சிவாயம் 4 ஆயிரத்து 60 ஓட்டுகளே குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் விக்டோரியா 10 ஆயிரத்து 711 ஓட்டுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

*பெருந்துறை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பொன்னுதுரை, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் பெரியசாமியை விட 8 ஆயிரத்து 578 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் 18 ஆயிரத்து 212 ஓட்டுகள் பெற்றார்.

*இதேபோல கோபிச்செட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் (அ.தி.மு.க) தி.மு.க.வேட்பாளர் மணிமாறனை விட 4 ஆயிரத்து 19 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் நடராஜன் 10 ஆயிரத்து 875 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

*பவானி தொகுதியில் பா.ம.க.வேட்பாளர் ராமநாதனிடம், அ.தி.மு.க. வேட்பாளர் கருப்பண்ணன் 5 ஆயிரத்து 103 ஓட்டுகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கோபால் 17 ஆயிரத்து 1 ஓட்டு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

*சேடபட்டி தொகுதியில் முன்னாள் அமைச்சர் துரைராஜ் (அ.தி.மு.க) 2 ஆயிரத்து 49 ஓட்டுகள் கூடுதலாகப் பெற்று தி.மு.க. வேட்பாளர் தளபதியை தோற்கடித்தார். இந்த தொகுதியில் நிறுத்தப்பட்ட விஜயகாந்த் கட்சி வேட்பாளர் சாமுண்டீஸ்வரி 11 ஆயிரத்து 99 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

*அரியலூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பாளை அமரமூர்த்தி, அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரனை 4 ஆயிரத்து 194 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெயவேல் 8 ஆயிரத்து 630 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இதே போல ஆண்டிமடம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் என்.கே.பன்னீர்செல்வம் தி.மு.க.வேட்பாளர் சிவசங்கரிடம் 5 ஆயிரத்து 828 ஓட்டுகள் குறைவாக பெற்று தோற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் எம்.கே.பன்னீர்செல்வம் 10 ஆயிரத்து 954 ஓட்டுகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.

* ஜெயங்கொண்டம் தொகுதியில் பா.ம.க. வேட்பாளர் குரு, அ.தி.மு.க. வேட்பாளர் ராஜேந்திரனிடம் 3 ஆயிரத்து 57 ஓட்டுகள் குறைவாகப் பெற்று தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சியின் வேட்பாளர் ஜான்சன் 6 ஆயிரத்து 427 ஓட்டுகள் பெற்றுள்ளார். உடுமலைப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சண்முகவேல், தி.மு.க. வேட்பாளர் வேலுச்சாமியை விட 3 ஆயிரத்து 963 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஞானசம்பந்தன் 9 ஆயிரத்து 183 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ராசிபுரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சுந்தரம், தி.மு.க. வேட்பாளர் ராமசாமியை விட 4 ஆயிரத்து 966 ஓட்டுகளே குறைவாக பெற்று தோல்வி அடைந்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ராஜா கவுண்டர் 11 ஆயிரத்து 991 ஓட்டுகள் வாங்கினார்.


* பொள்ளாச்சி தொகுதியில் அமைச்சர் ஜெயராமன் (அ.தி.மு.க), தி.மு.க. வேட்பாளர் சாந்தி தேவியை 2 ஆயிரத்து 946 ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் மீனாட்சி சுந்தரம் 7 ஆயிரத்து 543 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத் தக்கது.

* நிலக்கோட்டை தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் தேன்மொழி காங்கிரஸ் வேட்பாளர் செந்தில்வேலை விட 6 ஆயிரத்து 284 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ரவிச்சந்திரன் 16 ஆயிரத்து 745 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


* வரகூர் (தனி) தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சந்திரகாசி, பா.ம.க. வேட்பாளர் கோபாலகிருஷ்ணனை விட 2 ஆயிரத்து 543 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால் அந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கணபதி 10 ஆயிரத்து 303 ஓட்டுகள் பெற்றார்.

* இதே போல கம்பம் தொகுதியில் ம.தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணன், தி.மு.க. வேட்பாளர் செல்வேந்திரனை விட 1958 ஓட்டுகள் அதிகம் பெற்று தி.மு.க.வேட்பாளரை தோற்கடித்தார். அந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜெகநாத் 12 ஆயிரத்து 360 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* போடி தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன், அ.தி.மு.க.வேட்பாளர் பார்த்திபனை விட 898 ஓட்டுகள் மட்டுமே அதிகம் பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் அட்சயகண்ணன் 4 ஆயிரத்து 973 ஓட்டுகள் பெற்றார்.

* தொட்டியம் தொகுதியில் இதே போல காங்கிரஸ் வேட்பாளர் ராஜசேகரன், ம.தி.மு.க. வேட்பாளர் நடராஜனை 53 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் மனோகரன் 12 ஆயிரத்து 445 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* ஆலங்குடி தொகுதியில் இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ராஜசேகரன், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வெங்கடாசலத்தை விட 9 ஆயிரத்து 151 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் செல்வின்ராஜ் 16 ஆயிரத்து 739 ஓட்டுகள் வாங்கினார் என்பது குறிப்பிடத் தக்கது.

* அமைச்சர் ராதாகிருஷ்ணன் திருமயம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராமசுப்புராமிடம் 314 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தனது வெற்றி வாய்ப்பை இழந்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் முருகேசன் 7 ஆயிரத்து 863 ஓட்டுகள் வாங்கியது குறிப்பிடத்தக்கது.

* இதேபோல மேட்டுப்பாளையம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ், தி.மு.க.வேட்பாளர் அருண்குமாரை விட 142 ஓட்டுகளே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் சரஸ்வதி 10 ஆயிரத்து 77 ஓட்டுகள் பெற்றிருக்கிறார்.

* அவினாசி தனித் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் பிரேமா, இந்திய கம்யூனிஸ்டு வேட்பாளர் ஆறுமுகத்தை விட 4 ஆயிரத்து 539 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால் இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் அனந்தராஜ் 14 ஆயிரத்து 567 ஓட்டுகள் பெற்றுள்ளார்.

* இதே போல பாலக்கோடு தொகுதியில் அமைச்சர் அன்பழகன், பா.ம.க.வேட்பாளர் மன்னனை 4 ஆயிரத்து 844 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாலும், விஜயகாந்த் கட்சி வேட்பாளர் விஜயசங்கர் 11 ஆயிரத்து 882 ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* திருப்பத்தூர் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பெரியகருப்பன், அ.தி.மு.க. வேட்பாளர் உமாதேவனை விட 5 ஆயிரத்து 627 ஓட்டுகள் கூடுதலாக பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 12 ஆயிரத்து 111 ஓட்டுகள் பெற்றது.

* அருப்புக்கோட்டை தொகுதியில் இதே போல தி.மு.க. வேட்பாளர் தங்கம் தென்னரசு, அ.தி.மு.க. வேட்பாளர் முருகனை விட 8 ஆயிரத்து 234 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றாலும், விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கமலி பாரதிதாசன் 13 ஆயிரத்து 836 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* உசிலம்பட்டி தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் மகேந்திரன், தி.மு.க.வேட்பாளரை விட 3 ஆயிரத்து 254 ஓட்டு அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் இங்கு விஜயகாந்த் கட்சி 9 ஆயிரத்து 670 ஓட்டுகள் பெற்றிருக்கிறது.

* தி.மு.க.பொதுச் செயலாளர் க.அன்பழகன் துறைமுகம் தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சீமாபஷீரை விட 410 ஓட்டுகளே அதிகம் பெற்று வெற்றி பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. வேட்பாளர் சந்திரபிரகாசம் 4 ஆயிரத்து 781 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத் தக்கது.

* இதே போல ஆலந்தூர் தொகுதியில் அமைச்சர் வளர்மதி தி.மு.க.வேட்பாளர் அன்பரசனிடம் 17 ஆயிரத்து 872 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார். இங்கு விஜயகாந்தின் கட்சி வேட்பாளர் விஜயகுமார் 22 ஆயிரத்து 866 ஓட்டுகள் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* தாம்பரம் தொகுதியில் இதே போன்று விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தர்மா 48 ஆயிரத்து 522 ஓட்டுகள் பெற்று ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ராஜா, ம.தி.மு.க. வேட்பாளர் சோமுவை 48 ஆயிரத்து 606 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


* இதேபோல புரசைவாக்கம் தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் ஜாக்குலின் ஜோம்ஸ் 12 ஆயிரத்து 690 ஓட்டுகள் பெற்று இருக்கிறார். இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் பாபு, அ.தி.மு.க.வேட்பாளர் வெங்கடேஷ்பாபுவை விட 7 ஆயிரத்து 369 ஓட்டுகளே அதிகம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* பெரம்பூர் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. மகேந்திரன், ம.தி.மு.க.வேட்பாளர் மணிமாறனை 2 ஆயிரத்து 788 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 15 ஆயிரத்து 881 ஓட்டுகள் பெற்றுள்ளது.

* தி.மு.க.துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆயிரம் விளக்கு தொகுதியில், அ.தி.மு.க.வேட்பாளர் ஆதிராஜாராமை விட 2 ஆயிரத்து 468 ஓட்டுகள் அதிகம் பெற்று வென்றார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தளபதி 5 ஆயிரத்து 545 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* இதேபோல மைலாப்பூர் தொகுதியில் நடிகர் எஸ்.வி.சேகர், நடிகர் நெப்போலியனை தோற்கடித்தார். ஓட்டு வித்தியாசம் 1667தான். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெற்ற ஓட்டு 7 ஆயிரத்து 441 ஆகும்.

* சைதாப்பேட்டை தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் செந்தமிழன் பா.ம.க.வேட்பாளரை விட 5ஆயிரத்து 905 அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும், இங்கு விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 11 ஆயிரத்து 675 பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* கும்மிடிப்பூண்டியில் விஜயகுமார் (அ.தி.மு.க), பா.ம.க. வேட்பாளர் ஜெயவேலுவை விட 229 ஓட்டுகளே அதிகம் பெற்றார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 21 ஆயிரத்து 738 ஓட்டுகள் பெற்றிருக்கிறது.

* இதேபோல திருவொற்றியூர் தொகுதியில் தி.மு.க.வேட்பாளர் கே.பி.பி.சாமி, அ.தி.மு.க வேட்பாளர் மூர்த்தியை 3 ஆயிரத்து 447 ஓட்டுகளில் தோற்கடித்தாலும் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் முருகன் 21 ஆயிரத்து 915 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மதுராந்தகம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் காயத்ரிதேவி, அ.தி.மு.க.வேட்பாளரை விட 3 ஆயிரத்து 375 ஓட்டுகள் அதிகம் வாங்கி வெற்றி பெற்றிருந்தாலும் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் கஜேந்திரன் 9 ஆயிரத்து 811 ஓட்டுகள் வாங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

* மதுரை மத்தி தொகுதியில் கடந்த முறை தேர்ந்து எடுக்கப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி எம்.எல்.ஏ. நன்மாறன் ம.தி.மு.க.வேட்பாளர் பூமிநாதனை 51 ஓட்டுகள் வித்தியாசத்தில்தான் தோற்கடித்துள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் தாமோதரன் 18 ஆயிரத்து 632 ஓட்டுகள் வாங்கியிருக்கிறார்.

* வீரபாண்டி தொகுதியில் அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி, தி.மு.க.வேட்பாளர் ராஜேந்திரனிடம் 1638 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ஆனால் இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 28 ஆயிரத்து 254 ஓட்டுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

* அதே போல சேலம்-2வது தொகுதியில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், அ.தி.மு.க.வேட்பாளர் சுரேஷ்குமாரை விட 14 ஆயிரத்து 742 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றாலும் விஜயகாந்த் கட்சி இங்கு 20 ஆயிரம் ஓட்டுகளுக்கு மேல் பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* ராஜபாளையம் தொகுதியில் அ.தி.மு.க.வேட்பாளர் சந்திரா, தி.மு.க.வேட்பாளர் ராஜனை விட 493 ஓட்டுகள் மட்டுமே கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி 10 ஆயிரத்து 251 ஓட்டுகள் பெற்றுள்ளது.

* தொண்டாமுத்தூர் தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் கட்சி தலைவர்களில் ஒருவருமான எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், ம.தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொருளாளருமான மு.கண்ணப்பனிடம் 9 ஆயிரத்து 874 ஓட்டு வித்தியாசத்தில் தோற்று உள்ளார். இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் 37 ஆயிரத்து 448 ஓட்டுகள் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

* அதேபோல சிங்காநல்லூர் தொகுதியில் ஐ.என்.டி.யூ.சி. வேட்பாளர் (அ.தி.மு.க. கூட்டணி) சின்னசாமியிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளரும், சி.ஐ.டி.யூ தொழிற்சங்க பொதுச் செயலாளருமான சவுந்திரராஜன் 14 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். இங்கு விஜயகாந்த்தின் கட்சி வேட்பாளர் 31 ஆயிரத்து 268 ஓட்டுகள் வாங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.


* திருச்சி:திருச்சி மாவட்டத்தல் திருச்சி 1, திருச்சி 2, முசிறி, உப்பிலியபுரம், லால்குடி, ஆகிய தொகுதிகளில் தேமுதிக வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளால் அதிமுக வேட்பாளர்களுக்கும், மருங்காபுரியில் திமுக வேட்பாளர் ரொக்கையா மாலிக் என்கிற சல்மாவுக்கும், ஸ்ரீரங்கத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெரோம் ஆரோக்கியராஜுக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

* புதுக்கோட்டை:புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி தொகுதியில் 3-வது இடத்தை பிடித்தது.

* திருமயம், புதுக்கோட்டை, குளத்தூர்(தனி) தொகுதிகளில் 4-வது இடத்துக்கு வந்தது.

* மதுரை மாவட்டத்தில் விஜயகாந்தின் தேமுதிக 1,81,512 வாக்குகள் பெற்றுள்ளது.

* தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர், தூத்துக்குடி, கோவில்பட்டி, சாத்தான்குளம், விளாத்திகுளம் ஆகிய 5 தொகுதிகளிலும் தே.மு.தி.க. வேட்பாளர்கள் 3-வது இடத்தைப் பிடித்துள்ளனர்.

* ஓட்டப்பிடாரம் (தனி), ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் தே.மு.தி.க.வுக்கு 4-வது இடம் கிடைத்துள்ளது. மாவட்டம் முழுவதும் 7 தொகுதிகளிலும் சேர்த்து பதிவான 7,44,243 மொத்த வாக்குகளில் தே.மு.தி.க. 38,423 வாக்குகளைப் பெற்றுள்ளது. இது 5.16 சதம் ஆகும்.

* இம் மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவில்பட்டி தொகுதியில் தே.மு.தி.க.வுக்கு 11,633 வாக்குகள் கிடைத்துள்ளன.இது மொத்தம் பதிவான வாக்குகளில் 10.16 சதம் ஆகும். இந்தத் தொகுதியில் தி.மு.க. கூட்டணியின் வாக்குகளைக் கணிசமாகத் தன்பக்கம் இழுத்துள்ளது தே.மு.தி.க. இதனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் கோவில்பட்டி தொகுதி இம்முறை அ.தி.மு.க. வசமாகியுள்ளது.

* வேலூர் மாவட்டத்தில் உள்ள 12 சட்டப் பேரவை தொகுதிகளிலும் தேமுதிக மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளது. இக்கட்சி வேட்பாளர்கள் மாவட்டத்தில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 145 வாக்குகளைப் பெற்றுள்ளனர்.

* அதிகபட்சமாக குடியாத்தம் தொகுதியில் 16.94 சதவீத வாக்குகளையும், குறைந்தபட்சமாக ராணிப்பேட்டை தொகுதியில் 5.39 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

* பிற தொகுதிகளில் இக்கட்சி பெற்ற வாக்குகள் சதவீதம் வருமாறு - வேலூர் 7.05, சோளிங்கர் 9.34, ஆர்க்காடு 6.88, காட்பாடி 5.61, பேரணாம்பட்டு 9.35, வாணியம்பாடி 7.56, நாட்றம்பள்ளி 5.77, திருப்பத்தூர் 6.38, அரக்கோணம் 6.53, அணைக்கட்டு 5.57.

* குடியாத்தம் தொகுதியில் விஜயகாந்த்தின் மைத்துனர் எல்.கே. சுதீஷ் 20 ஆயிரத்து 557 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

தினமலர் கிரப்பிக்ஸ்



தேர்தலுக்கு முன்:
விஜயகாந்த் பேட்டி- 1
விஜயகாந்த் பேட்டி - 2
விஜயகாந்த் பேட்டி - 3

வீட்டுக்கு ஒரு பசு மாடு

விஜயகாந்த் தேர்தல் அறிக்கை

விஜயகாந்த் பற்றி கலைஞர்:
.. புதிதாகக் கட்சி தொடங்கியிருக்கிற விஜயகாந்த், ஊர் ஊராகப் போய் '40 எம்.பி.க்களும் வேஸ்ட்!' னு மக்களிடம் கடுமையாகப் பேசி வருகிறாரே?"

"அது அவராகப் பேசுகிறார் என்று நான் கருதவில்லை. தவிர, அவரைப் பத்தி என்னனு சொல்றது... அவரு ஹார்ம்லெஸ்!"

விஜயகாந்த் பற்றி நம்புங்கள் நாராயணன்:-
* விஜயகாந்த்தின் கட்சிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. தனித்துப் போட்டியிடுவதாக அவர் கூறி வந்தாலும் கூட அதிமுகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலையை அவர் எடுப்பார். அமைச்சராகும் யோகமும் அவருக்கு உள்ளது.

கடைசியாக விஜயகாந்த் வீடியோ : பார்க்க இங்கே

Read More...

இன்றைய செய்திகள்

முதல்-அமைச்சராக கருணாநிதி தேர்வு: கவர்னரை சந்தித்து மந்திரிகள் பட்டியலை கொடுத்தார்


இன்று காலை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் சென்னை வந்து சேர்ந்தனர். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று மதியம் 12 மணிக்கு அண்ணா அறிவலாயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடந்தது.

கூட்டத்தில் சட்டசபை கட்சித் தலைவராக கருணாநிதி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதற்கான தீர்மானத்தை அன்பழகன் முன் மொழிய ஆற்காடு வீராசாமி வழிமொழிந்தார். சட்ட சபை கட்சித் தலைவராக தேர்ந்து எடுக்கப்படுபவர்தான் முதல்- அமைச்சர் பதவியை ஏற்க வேண்டும்.

அந்த வகையில் இன்று தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால், கருணாநிதி முதல்- அமைச்ச ராக தேர்ந்து எடுக்கப்பட்டார். இதையடுத்து தி.மு.க. மூத்த தலைவர்களுடன் கவர்னர் மாளிகைக்கு கருணாநிதி புறப் பட்டு சென்றார்.

கவர்னர் பர்னாலாவை மதியம் ஒரு மணிக்கு கருணாநிதி சந்தித்தார். அப்போது சட்டசபை தி.மு.க. தலைவராகதான் தேர்வு செய்யப்பட்டுள்ள கடிதத்தை அவர் கவர்னர் பர்னாலாவிடம் வழங்கினார்.

பிறகு தி.மு.க. ஆட்சிக்கு நாங்கள் ஆதரவு அளிக்கிறோம் என்று காங்கிரஸ், பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகள் உறுதி அளித்து கொடுத்துள்ள கடிதங்களையும் கவர்னர் பர்னாலாவிடம் கருணாநிதி கொடுத்தார்.

தி.மு.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுக்கும் கடிதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கிருஷ்ணசாமி, தங்க பாலு, சுதர்சனம், ஜே.எம்.ஆரூண் ஆகியோர் இன்று மதியம் கருணாநிதியிடம் கொடுத்தனர்.

இதன் அடிப்படையில் தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று கருணாநிதி கோரினார்.

இதை கவர்னர் ஏற்றுக் கொண்டார். பிறகு கருணா நிதியை ஆட்சி அமைக்க வருமாறு கவர்னர் பர்னாலா அழைப்பு விடுத்தார்.

கவர்னரின் அழைப்பை தொடர்ந்து புதிய அமைச்சர்கள் பட்டியலை கவர்னரிடம் கருணாநிதி வழங்கினார். அதை கவர்னர் ஏற்றுக் கொண்டார்.

இதையடுத்து புதிய அமைச் சரவை பதவி ஏற்பு விழா பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் இன்று பிற்பகல் வெளியிடுவார். நாளை காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது.

மந்திரிகள் பட்டியல்:
கருணாநிதி- உள்துறை;
அன்பழகன்- நிதி;
ஆற்காடு வீராசாமி- மின்சாம்;
மு.க.ஸ்டாலின்- உள்ளாட்சித்துறை;
கோ.சி.மணி- கூட்டுறவு;
வீரபாண்டி ஆறுமுகம்- விவசாயம்;
துரைமுருகன்- பொதுப்பணித்துறை;
பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன்- அறநிலையத்துறை;
பொன்முடி- உயர்கல்வி;
கே.என்.நேரு- போக்குவரத்து;
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்- பிற்படுத்தப்படடோர் நலம்;
ஐ.பெரியசாமி- வருவாய், சட்டம்;
சுரேஷ்ராஜன்- சுற்றுலா;
பரிதி இளம்வழுதி- செய்தி, விளம்பரம்;
ஏ.வ.வேலு- உணவு; சுப.தங்கவேலன்- வீட்டுவசதி;
சாத்தூர் ராமச்சந்திரன்- மக்கள் நலவாழ்வு;
தா.மோ.அன்பரசன்- தொழிலாளர்நலம்;
கே.ஆர்.பெரியகருப்பன்- குடிசை மாற்று வாரியம்;
என்.கே.கே.பி.ராஜா- கைத்தறி;
தங்கம் தென்னரசு- பள்ளிக்கல்வி;
உபயதுல்லா- வணிக வரிகள்;
மைதீன் கான்- விளையாட்டு;
என்.செல்வராஜ்- வனத்துறை;
வெள்ளக்கோவில் சாமிநாதன்- நெடுஞ்சாலைத்துறை;
பூங்கோதை- சமூக நலம்;
கீதா ஜீவன்- கால்நடை;
தமிழரசி- ஆதிதிராவிடர் நலம்;
கே.பி.பி.சாமி- மீன்வளம்; மதிவாணன்- பால்வளம்;
கே.ராமச்சந்திரன்- கதர்வாரியம்.



மந்திரி சபையில் காங்கிரஸ் இடம் பெறுமா ?

இன்று காலை 9.45 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வீட்டுக்கு வீரப்பமொய்லி சென்றார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் சென்றார். இருவரும் கருணாநிதியை சந்தித்து பேசினார்கள். தேர்தல் முடிவு குறித்து ஆலோசித்தனர். 10.45 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது.

கருணாநிதியுடன் பேசியது பற்றி வெளியில் வந்த வீரப்பமொய்லி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

நானும், கிருஷ்ணசாமியும், தி.மு.க. தலைவர் கருணா நிதியை சந்தித்து சோனியா காந்தியின் வாழ்த்துக்களை தெரிவித்தோம். எங்கள் கட்சி சார்பிலும், தொண்டர்கள் சார்பிலும் கருணாநிதிக்கு கிடைத்த வெற்றிக்கு வாழ்த்து சொன்னோம்.

தி.மு.க. ஆட்சிக்கு காங்கிரஸ் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது. இதற்கான ஆதரவு கடிதத்தை கிருஷ்ணசாமி கவர்னரிடம் கொடுப்பார்.

கேள்வி: தி.மு.க. மந்திரி சபையில் காங்கிரஸ் இடம் பெறுமா?

பதில்: பல விஷயங்கள் பற்றி பேசினோம். இந்த கேள்விக்கு எங்கள் பதில் எளிமையானது. தி.மு.க. ஆட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவிக்கிறோம்.

அதே போன்று புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு தி.மு.க. நிபந்தனையற்ற ஆதரவு தருகிறது.


வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுடன் ஜெயலலிதா ஆலோசனை

வெற்றி பெற்ற அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பலர் நேற்று போயஸ் கார்டன் சென்றனர். வெற்றி பெற்ற செங்கோட்டையன், ஜெயக்குமார், பி.கே. சேகர்பாபு, ஜி. செந்தமிழன், கு. சீனிவாசன், வி.பி. கலைராஜன், பதர்சயீத், எஸ்.வி. சேகர் உள்ளிட்ட பலர் ஜெயலலிதா வீட்டுக்கு சென்றனர்.

வெற்றி பெற்ற சான்றிதழை காட்டி ஜெயலலிதாவிடம் ஆசி பெற்றனர். அவர்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார். தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வெளி மாவட்டங்களில் வென்ற அ.தி.மு.க. வேட்பாளர்கள் இன்று சென்னை வருகிறார்கள். அவர்களையும் ஜெயலலிதா சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Read More...

கூட்டணி செய்திகள்

தி.மு.க. கூட்டணிக்கு 163 இடங்கள் கிடைத்துள்ள போதிலும், எந்த கட்சிக்கும் தனி மெஜாரிட்டிக்கான 118 இடங்கள் கிடைக்கவில்லை. எனவே தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கூட்டணி ஆட்சி ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டணி ஆட்சியில் பங்கு பெற போவது இல்லை பா.ம.க.வும், கம்ïனிஸ்டு கட்சிகளும் திட்டவட்டமாக ஏற்கனவே அறிவித்தன.

தி.மு.க. ஆட்சி அமைக்க வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கப்போவதாக பா.ம.க., கம்ïனிஸ்டு கட்சிகள் கூறி உள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வ கடிதத்தை இந்த இரு கட்சிகளும் நேற்றே கவர்னர் பர்னாலாவுக்கு அனுப்பி வைத்தன.

தி.மு.க. கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து தி.மு.க.வுக்கு ஆதரவு கொடுக்குமாப அல்லது தி.மு.க. தலைமையிலான மந்திரி சபையில் இடம்பெறுமா என்பது இன்று காலை வரை தெளிவாகவில்லை.

புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்பதா, வேண் டாமா என்பது குறித்து நேற்று மதியம் முதலே காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் விவாதம் தொடங்கி விட்டது. இதைத் தொடர்ந்து இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாவை, தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் வீரப்பமொய்லி சந்தித்து ஆலோசனை நடத்தினார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறுகையில், "கருணாநிதியை சந்தித்து ஆலோசனை நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும்'' என்றார்.

நேற்றிரவே விமானம் மூலம் வீரப்பமொய்லி சென்னை வந்தார். இன்று காலை அவர் கவர்னரை சந்தித்து தி.மு.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கும் கடிதத்தை கொடுத்தார். முன்னதாக இன்று காலை அவர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, மத்திய மந்திரிகள் வாசன், இளங்கோவன் மற்றும் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ் மூத்த தலை வர்களில் பெரும் பாலானவர்கள் தி.மு.க. தலைமையிலான மந்திரி சபையில் இடம் பெற வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். தி.மு.க. கூட்டணியில் தி.மு.க. வுக்கு அடுத்தப்படியாக அதிகபட்சமாக 34 இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால் ஆட்சி அதிகாரத்தில் பங் கெடுக்க காங்கிரசில் ஒரு பிரிவினர் விரும்புகின்றனர்.

வடமாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடக்கும் மாநிலங் களில் பெரிய தோழமை கட்சிக்கு துணை முதல்-மந்திரி பதவியை வழங்கி உள்ளனர். அதே பாணியில் தமிழ்நாட்டில் துணை முதல்-மந்திரி பதவியை கேட்க வேண்டும் என்று இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் வீரப்பமொய்லியிடம் வற்புறுத் தப்பட்டதாக தெரிகிறது.

மந்திரி சபையில் சேரும் பட்சத்தில் சில முக்கிய இலாகாக்களை காங்கிரசுக்கு வாங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வலியுறுத்தினார்கள். இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பலரும் தி.மு.க. தலை மையிலான மந்திரி சபையில் சேர்ந்து அமைச்சராகி விட வேண்டும் என்று ஓசை இல்லாமல் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலÚÖசனை நடத்திய பிறகு காங்கிரஸ் மேலிட பிரதிநிதி வீரப்பமொய்லி, தி.மு.க. தலைவர் கருணாநிதியை சென்று சந்தித்தார். அவர்கள் புதிய கூட்டணி தொடர்பாக ஆலோசனை நடத்தி னார்கள்.

தி.மு.க. மந்திரி சபையில் சேர வேண்டாம். வெளியில் இருந்து ஆதரிக்கலாம் என்று டெல்லி காங்கிரஸ் மேலிடம் விரும்புவதாக தெரிகிறது. ஆனால் தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்க தீவிரமாக இருப்பதாக தெரிகிறது. இது தொடர்பான தெளிவான நிலை இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.

காங்கிரஸ் தலைவர்களில் பலரும் மந்திரி சபையில் சேர விரும்புவதால், அதற்கு தி.மு.க. சம்மதம் தெரிவிக்கலாம் என்று ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அத்தகைய சூழ்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியையும் தி.மு.க மந்திரி சபையில் சேர்க்க முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க போவதில்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஏற்கனவே கூறி உள்ளார். அவர் நிலையில் மாற்றம் வருமா என்பது இன்று மாலைக்குள் தெரிந்து விடும்.

தகவல்: மாலைமலர்

Read More...

Thursday, May 11, 2006

ஜெ, ரஜினி , வைகோ அறிக்கை

ஜெ அறிக்கை
மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன் என்று அதிமுக பொதுச் செயலர் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

அறிக்கை:

"மக்கள் தீர்ப்பு மகேசன் தீர்ப்பு என்பதில் நான் எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் வழங்கியுள்ள தீர்ப்புக்கு நான் தலை வணங்குகிறேன்.

அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளப் பெருமக்களுக்கும் எனது உளமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

எவ்வித வருத்தமும் இன்றி முதலமைச்சர் பதவியில் இருந்து நான் விலகுகிறேன். தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் என்னால் இயன்ற அனைத்து வகையிலும், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் மேன்மைக்காகவும் இடையறாது பாடுபட்டுள்ளேன். இந்த மனநிறைவுடன்தான் தமிழக முதலமைச்சர் பதவியிலிருந்து விலகுகிறேன்.

அதிமுக தொடர்ந்து மக்கள் பணி ஆற்றிடும் என்ற உறுதியையும் இந்த நேரத்தில் தமிழக மக்களுக்கு அளிக்க விரும்புகிறேன்"

ரஜினி அறிக்கை
தர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்காக திமுக தலைவர் மு.கருணாநிதிக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வாழ்த்துச் செய்தி:

"இந்த வெற்றி, முழுக்க முழுக்க, தென்னாட்டு அரசியல் மூத்த தலைவர் கருணாநிதியின் வெற்றியாகும். அவரது பழுத்த அரசியல் அனுபவத்துக்குக் கிடைத்த வெற்றி. இந்த வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்க் கொள்கிறேன். அவருக்கு நீண்ட ஆயுளும் மன அமைதியும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்"

வைகோ அறிக்கை
ட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

அறிக்கை:

"அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறுகிறோம். 2004 மக்களவைத் தேர்தலில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைய தமிழக வாக்காளர்கள் பெரும் வெற்றியைத் தந்தார்கள். அவர்கள் இப்போது சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு தந்துள்ள ஆதரவை மதிப்பிட்டால், திமுக கூட்டணியின் வாக்கு வங்கியில் சரிவு ஏற்பட்டிருப்பதை உணரலாம். அதிமுக அரசு மீது அதிருப்தியோ, எதிர்ப்போ இல்லை என்றே கூறலாம்.

சென்னை ராஜதானியில் இருந்து தமிழ்நாடு தனி மாநிலமாக உருவெடுத்ததற்குப் பின்னர் நடந்த பொதுத் தேர்தல்களில் இதுவரை பிரதான எதிர்க்கட்சி பெற்றிருந்த இடங்களைவிட அதிக இடங்களில் சட்டமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சியாக அதிமுக பெற்றுள்ளது. இதுவே தமிழக அரசியலில் எங்கள் அணிக்கு சாதகமான திருப்புமுனையை விரைவில் உருவாக்கும்.

இத்தேர்தலில் பல கட்சிகளின் கூட்டணி பலத்தை சேர்த்துக் கொண்டு போட்டியிட்ட திமுக, வாக்காளர்களை ஏமாற்றிக் கவருவதற்காக செயல்படுத்தவே முடியாத வாக்குறுதிகளை வாரி இறைத்தது. தேர்தல் வெற்றிக்காக இவர்கள் தந்த பொய்யான மாய்மால வாக்குறுதிகள் எல்லாம் ஏமாற்று வேலை என்பது வெகுவிரைவில் வெட்ட வெளிச்சம் ஆகிவிடும்.

இத் தேர்தலில் தமிழக வாக்காளர்கள் தந்த தீர்ப்பை மதித்து ஏற்றுக் கொள்கிறோம். சட்டப்பேரவையில் ஒரு எதிர்க்கட்சிக்கு உரிய ஜனநாயகக் கடமையை முறையாகச் செய்வோம்."

Read More...

வாழ்த்துக்கள்!

தமிழக முதல்வராக 5-வது முறையாக பதவி ஏற்கும் கலைஞர் கருணாநிதிக்கு இட்லிவடையின் வாழ்த்துக்கள் !

தமிழக முதல்வராக 5-வது முறையாக தி.மு.க. தலைவர் கருணாநிதி பதவி ஏற்கிறார். மீண்டும் ஒரு புதிய சாதனையை அவர் நிகழ்த்தி உள்ளார் இதுவரை கருணாநிதி வென்ற தொகுதிகள்.
குளித்தலை (1957-62), தஞ்சாவூர் (1962-67), சைதாப்பேட்டை (1967-71, 1971-76), அண்ணாநகர் (1977-80, 1980-83), துறைமுகம் (1989-91, 1991), சேப்பாக்கம் (1996-2001, 2001-06, 2006)

கலைஞர் பேட்டி:

கேள்வி:- கூட்டணி ஆட்சி அமையுமா?

பதில்:- தேர்தல் முடிவு அனைத்தும் வந்த பிறகு கூட்டணி கட்சி தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். அதன் பிறகு இந்த விஷயத்துக்கு பதில் சொல்கிறேன்.

கே:- தமிழ்நாட்டில் முதன் முறையாக கூட்டணி ஆட்சி அமைகிறதே?

ப:- அந்த பெருமை இந்த கூட்டணிக்கு இருக்கிறது.

கே:- தி.மு.க.வை ஜெயலலிதா பரம்பரை எதிரி என்று சொன்னாரே?

ப:- நான் ஏற்கனவே ஐந்தாறு பொதுக்கூட்டங்களில் சொல்லி இருக்கிறேன். தி.மு.க. ஆட்சி காலத்தில் ஏழை பெண்கள் திருமண உதவி திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கினோம். அதை அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் ரத்து செய்துவிட்டனர்.

தற்போது தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க. ஆட்சியில் நிறுத்தப்பட்ட திருமண உதவி திட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றும், முன்பு அறிவித்த ரூ.10 ஆயிரத்துக்கு பதில் ரூ.15 ஆயிரம் வழங்குவோம் என்றும் தெரிவித்து இருக்கிறோம்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாலிக்கு 4 கிராம் தங்கம் தருவதாக கூறினார். அதை நாங்கள் தடுக்கவும் இல்லை. மறுக்கவும் இல்லை.

திருமண உதவி திட்டத்தின்போது திருமண விழாவில் வந்து அ.தி.மு.க. கலந்து கொண்டு 4 கிராம் தங்கத்தை அவர்கள் கொடுக்கட்டும்.

நாங்கள் ஆளும் கட்சியாக மாறினாலும் எதிர்க்கட்சிகளை மதிப்போம். இதில் இருந்தே நாங்கள் எதிர்க்கட்சிகளை எப்படி நடத்துவோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

கே:- தேர்தல் அறிக்கையில் சொன்னதை எப்படி மக்களுக்கு வழங்குவீர்கள்.

ப:- ஒவ்வொரு திட்டமாக படிப்படியாக வழங்குவோம். நான் சட்டத்தின் ஆட்சி நடத்துவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறேன். எதிர்க்கட்சிகளை திட்டமிட்டு பழி வாங்கும் செயல் எங்கள் ஆட்சியில் இருக்காது.

கே:- சிறப்பாக ஆட்சி நடத்த வேறு ஏதேனும் திட்டம் உள்ளதா?

ப:- நீங்களே சொல்லுங்கள்.

கே:- தி.மு.க. தேர்தல் அறிக்கைதான் கதாநாயகன் என்று ப. சிதம்பரம் கூறினாரே?

ப:-அவர் சொன்னது சரி தான்.

கே:- பதவியேற்பு விழா மெரீனா கடற்கரையில் நடத்தப்படுமா?

ப:- மெரீனா கடற்கரையில் கூட்டம் நடத்த கோர்ட்டில் வழக்கு உள்ளது. எனவே அது பற்றி இப்போது சொல்ல இயலாது.

கே:- டாக்டர் ராமதாஸ், அன்புமணி மீது கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளதே?

ப:- ஜனநாயக முற்போக்கு கூட்டணி சார்பில் கவர்னரிடம் முறையிட்டுள்ளோம். முறைப்படி நடவடிக்கை எடுப்போம்.

கே:- அ.தி.மு.க. கூட்டணி 234 தொகுதியிலும் வெற்றி பெறும் என்று வைகோ கூறினாரே?

ப:- அவர் கூறியதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை.

கே:- கண்ணகி சிலை மீண்டும் கடற்கரையில் அமைக்கப்படுமா?

ப:- கண்ணகி சிலை உடைந்து அரசு அருங்காட்சியத்தில் உள்ளது. விரைவில் அதையே இடத்தில் நிறுவோம்.

கே:- சென்னையில் தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதே?

ப:- அதை நான் ஒத்துக் கொள்கிறேன்.

கலைஞரின் வெற்றி கவிதை:

ஆறு நோக்கிச் செல்கின்றேன் அவர்கள்
வாரி இறைத்த
சேறு கழுவிக் கொள்வதற்காக!
களிம்பு மருந்து தேடுகின்றேன்
தழும்பு தோன்றிடும் நெஞ்சக்
காயத்தில் தடவுதற்காக!
மூச்சை இழுத்துப் பெருமூச்சாக
விடுகின்றேன்; அவர்தம் ஆபாசப்
பேச்சை என் சுவாசம்,
அடித்துப் போவதற்காக!
வெற்றி என்பதைத் தேடிக் கொடுத்து
துரோகத்தின்
நெற்றிப் பொட்டில் அறைந்திட்ட
உடன்பிறப்பு நீ இருக்கும்போது;
உடல் பொருள் ஆவி அனைத்தையும்
உலகில் ஓர் துரும்பென மதித்து
கடல் போல் நம் அணியைப் பெருக்கிட
கழகம் வளர்த்திட
கண்ணியர் அண்ணாவின் வழி நடத்திட
கட்டுப்பாடெனும் அய்யாவின் மொழி போற்றிட-
காத்திருப்போம்; தமிழகத்தைப்
பூத்திருக்கும் மலர்ச் சோலையாக்குதற்கே!

-மு.க.

அடுத்தது நம் சிங்கம் விஜயகாந்திற்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து!.

சுமார் ஏழு மாதம் முன் துவங்கி திராவிட கட்சிகளுக்கு ஒரு பயத்தை உண்டு பண்ணி, தனித்து நிற்பதில் உறுதியாய் இருந்து விருத்தாசலத்தில் வெற்றியும் பெற்றார் அதுவும் 14 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில். பாமக இவரை கண்டு இனிமேல் நடுங்கும். ஏதாவது தொந்தரவு தந்து கொண்டே இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இவர் கட்சி 232 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டது. மேலும் இந்த வெற்றி அவர் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. தயாநிதி/அன்புமணி போல் வானத்திலிருந்து குதிக்கவில்லை. பத்திரிக்கை, செய்தி ஊடகம்( இட்லிவடையை தவிர:-) அவரை அவ்வளவாக கண்டுகொள்ளவில்லை. இருந்தும் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவருடைய கட்சி போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் அதிக ஓட்டுகள் பெற்று 3-வது இடத்தைப் பிடித்து உள்ளது. அவரது கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் விஜயகாந்தின் தே.மு.தி.க. 30 ஆயிரத்து 96 ஓட்டுகளை பெற்றுள்ளது. இங்கு காங்கிரஸ் 70 ஆயிரம் ஓட்டு பெற்று வெற்றி பெற்றுள்ளது. எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகளுக்கு 52 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்துள்ளன.

இந்த தொகுதியில் விஜயகாந்த் கட்சி பெற்ற 30 ஆயிரம் ஓட்டுகள் விடுதலை சிறுத்தைகளுக்கு கிடைத்திருந்தால் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றிருக்கும்.

தாம்பரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் மொத்தம் 89 ஆயிரம் ஓட்டு பெற்றார். ம.தி.மு.க.வுக்கு 73 ஆயிரம் ஓட்டுகள் கிடைத்தது. இந்த தொகுதியில் தே.மு.தி.க. 15 ஆயிரத்து 750 ஓட்டுகள் பெற்றுள்ளது. இந்த ஓட்டு கிடைத்திருந்தால் ம.தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். அச்சரபாக்கத்தில் தே.மு.தி.க. 10 ஆயிரத்து 500 ஓட்டுகளும், காஞ்சீபுரத்தில் 15 ஆயிரம் ஓட்டுகளும் பெற்றுள்ளது.

இது போல தமிழ்நாட்டின் பெரும்பாலான தொகுதிகளில் விஜயகாந்தின் தே.மு.தி.க. அதிக அளவில் ஓட்டுகளைப் பெற்றுள்ளது. ஓட்டுகள் பிரித்ததால் பல தொகுதிகளில் அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளும், சில தொகுதிகளில் தி.மு.க. கூட் டணி கட்சிகளும் தோல்வி அடைந்துள்ளன.

மொத்தத்தில் விஜயகாந்த் கட்சி பெரிய கட்சிகளுக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.

வலைப்பதிவிலும் பலர் விஜயகாந்த் தோல்வி என்ற செய்தி கேட்டு தீகுளிக்க கூட தயாராக இருந்தார்கள்.


முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா:

எதிர் கட்சி தலைவவி ஆனதற்கு வாழ்த்துக்கள். நல்ல வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறீர்கள். ராஜினாமா கடிதத்தை நீங்கள் தானே முறைப்படி கடிதத்தை போய் ஆளுநரிடம் கொடுத்திருக்க வேண்டும்? ஏன் ஒரு அமைச்சரிடம் அனுப்பி வைத்தீர்கள் ? நீங்கள் ஒன்றும் கலங்க தேவையில்லை. ஒரு பெரிய கூட்டணியுடன் நீங்கள் மோதி 70+ சீட்டுகளை வாங்கியுள்ளீர்கள்.

தோல்வி என்ற உடன் பத்திரிக்கையை கூப்பிட்டு ஒரு அறிக்கை விட வேண்டியதுதானே? சென்னை திமுக கோட்டையை நீங்கள் ஆட்டியுள்ளீர்கள். அதற்கு ஒரு வாழ்த்து.

நாளையாவது வெளியே வருவீர்களா ? கட்டாயம் சட்டசபைக்கு செல்லுங்கள் ! கலைஞர் மாதிரி கையெழுத்து போட்டுவிட்டு வந்துவிடாதீர்கள்.

வலைப்பதிவில் எனக்கு ஊக்கம் அளித்த எல்லோருக்கும் என் நன்றி.

Read More...