பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, April 22, 2006

ஏழை மக்களுக்கு வீட்டுக்கு ஒரு பசுமாடு - விஜயகாந்த்

நடிகர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று பிரசாரம் செய்தார். வடபழனி அருகே உள்ள ஆலந் தூர் தொகுதிக்கு உட்பட்ட தசரதபுரத்தில் இருந்து பிர சாரத்தை தொடங்கினார்.

அதில் அவர் பேசியது :-

முதன் முறையாக இந்தபகு தியில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் எனது வீட்டின் அருகிலேயே நடைபெறும் இந்த கூட்டத்தில் பேசுவதற்கு கொஞ்சம் கூச் சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் 15 கிலோ இலவச அரிசி தருவேன் என்று கூறியிருந்தேன்.

ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசி மட்டும் போதாது மளிகை பொருட்கள் வாங்க குடும்ப தலைவியின் பெயரில் அஞ்சலக கணக்கில் மாதம் ரூ.500 போடப்படும். 3வருடங்கள் வரை 2 குழந்தைகள் பிரசவத் திற்கு தாய்மார்களின் ஊட்டச் சத்தக்கு மாதம் ரூ.500 வழங் குவேன்.

படிக்காத இளைஞர்களுக் கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தருவேன் படித்த பட்டதாரிகள் வங்கி கடன் உதவி முலம் தொழில் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

ஏழை குடும்பங்கள் பிழைப்பு நடத்த ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சீமை பசு வழங்குவேன்.

தமிழ்நாட்டில் 30ஆயிரம் கி.மீ.சுற்றி வந்து இருக்கிறேன். மக்கள் எதற்கெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நான் உதவுவேன். நான் ஆட்சிக்கு வந்தால் கிலோ அரிசி ரூ.2க்குத்தான் முதல் கையெழுத்து என்கிறார். முதல்-அமைச்சர் 10கிலோ இலவச அரிசி தருவேன் என்று சொல்கிறார். இவர் கள் எலலாம் ஆட்சியில் இருக் கும் போது இதை செய்து இருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இருந்து இருக்காது.

சிலர் ஒவ்வொரு தேர்த லிலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்கிறார்கள். எந்தகூட்ட ணியில் இருந்தால் வெற்றி பெறுவோம் என்று அவர்க ளுக்கே நம்பிக்கை இல்லை.

எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் கொடுத்த வாக் குறுதி எல்லாம் நான் நிறை வேற்றிக் காட்டுவேன்.

4 Comments:

Thekkikattan|தெகா said...

Ha...ha...ha, Tamil Nadu politics sucks! Though, Pasu Maadu scheme sounds much better than Color T.V. We are going to hell no matter what... :)

Anbu

TheKa.

aathirai said...

ஆ மாடு குடுத்தா போதுமா. புல்லு குடுப்பாங்களான்னு கேட்டு சொல்லுங்க.
அப்புறம் மாட்டுக்கு சிகிச்சை,vitamin, பிரசவம் இதுக்கெல்லாம் மாசம் ஒரு
amount குடுத்தா நல்லா இருக்குமில்லே.

Anonymous said...

அது சரி!!
யார்? பசு மாட்டுக்கு வைக்கோல் இலவசமாக கொடுக்கப் போறாங்க????
யோகன்
பாறிஸ்

நெருப்பு சிவா said...

// ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசி மட்டும் போதாது மளிகை பொருட்கள் வாங்க குடும்ப தலைவியின் பெயரில் அஞ்சலக கணக்கில் மாதம் ரூ.500 போடப்படும். 3வருடங்கள் வரை 2 குழந்தைகள் பிரசவத் திற்கு தாய்மார்களின் ஊட்டச் சத்தக்கு மாதம் ரூ.500 வழங் குவேன்.

படிக்காத இளைஞர்களுக் கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தருவேன் படித்த பட்டதாரிகள் வங்கி கடன் உதவி முலம் தொழில் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.

ஏழை குடும்பங்கள் பிழைப்பு நடத்த ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சீமை பசு வழங்குவேன்.
//

It increases the weight to my doubt that if 'Actor' Vijaikanth knows anything about basics of economics. 10th statndard student is enough to understand the absurdity of this statement.

Enga, inga mattum SK kannuleye padalai?

SK Sirippu Mandra 'Thalai'
NERUPPU