பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, April 10, 2006

போலிடோண்டு - குமுதம் ரிப்போர்ட்டர் கட்டுரை


வாசகர்களின் வேண்டுகோளுக்கினங்க குமுதம் ரிப்போர்ட்டரில் வந்த போலிடோண்டு கட்டுரை (ஸ்கேன் செய்தது )

பக்கம் 1
பக்கம் 2
பக்கம் 3

சுட்டி கொடுத்த அனானிக்கு நன்றி. முன்பே கொடுத்திருந்தால் ஸ்கேன் செய்திருக்க மாட்டேன் :-)

காலையில் போய் கம்ப்யூட்டரைத் திறக்கிறீர்கள். இ_மெயிலை ஆர்வத்துடன் திறந்தால்...‘‘தே.... மவனே... உன்னைக் கொன்னுடுவேண்டா...’’ என்று ஆரம்பித்து உங்கள் அப்பா, அம்மா, சகோதரி, பிள்ளைகள், நண்பர்கள் என்று எல்லோரையும் வக்கிரமாகத் திட்டி ஒரு அனாமதேய மெயில் வந்திருந்தால், உங்களுக்கு எப்படியிருக்கும்?

தமிழ் இணைய உலகில் ‘பிளாக்’ (Blog) என்று சொல்லப்படும் தனிப்பக்கங்கள் வைத்து எழுதிக்கொண்டிருப்பவர்கள் இம்மாதிரியொரு அவஸ்தையில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள். உலகளாவிய இணைய உலகில், யார் இந்த வேலையைச் செய்பவன் என்று தெரியாமல் பலர் மனம் நொந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.

தமிழில் ‘பிளாக்’ எழுதுபவர்கள் சுமார் 1000 பேர் இருக்கிறார்கள். அதில் சுமார் 300 பேர் தீவிரமாக இயங்குகிறார்கள். தமிழில் எழுதப்படும் இந்த பிளாக்குகள் அனைத்தையும் திரட்டி ‘தமிழ் மணம்’ என்ற இணையதளம் வழங்குகிறது. இதற்கு போனால் யார் யார், என்னென்ன விவரங்களை புதிதாக தங்கள் பிளாக்கில் அப்டேட் செய்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியும்.

இப்படி தமிழ் இணைய உலகில் தீவிரமாக இயங்குபவர்களில் ‘டோண்டு’ ராகவன் என்ற மொழிபெயர்ப்பாளரும் ஒருவர். இவர்தான் அந்த ‘பயங்கரவாதியால்’ கடுமையான பாதிப்புக்குள்ளானவர். இவரிடம் பேசினோம்.

‘‘நான் ‘டோண்டு’ என்ற பெயரில் ‘பிளாக்’ எழுதி வருகிறேன். நான் எழுதிய ஒரு கருத்துக்கு நூறு பேர் வரை ‘கமெண்டுகள்’ எழுதுவார்கள். இது சாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சி. ஒருமுறை, நான் என்ன சாதி என்பதைக் குறிப்பிட்டு, அதை பகிரங்கமாக ஒப்புக்கொள்வதில் தவறில்லை; எதற்காக என் சாதியை நான் மறைக்க வேண்டும்? என்று குறிப்பிட்டேன். இதைத்தான் அந்த ‘பயங்கரவாதி’ பிடித்துக் கொண்டுவிட்டான். அதைத் தொடர்ந்து என் பிளாக்குக்கு வந்து கெட்ட வார்த்தைகளால் அச்சில் ஏற்றமுடியாத என்னை அர்ச்சித்தவன், என் ‘பிளாக்’ மாதிரியே வேறொரு ‘பிளாக்’கை என் பெயரிலே ‘டிசைன்’ செய்ய ஆரம்பித்து, நான் எழுதும் எல்லாவற்றையும் ‘திருடி’ அங்கே போட்டு, அதில் இடையிடையே சில வார்த்தைகளை மாற்றிப் (கெட்ட வார்த்தைகளை, குறிப்பாக பாலுறுப்புகள் தொடர்பான வார்த்தை) போட்டுவிடுவான். அதைப் பார்ப்பவர்கள், ‘டோண்டு’ ராகவனுக்கு அறுபது வயதாகிறது. இவ்வளவு வக்கிரமான ஆளாக இருக்கிறாரே என்று நினைக்க ஆரம்பித்தார்கள். அது மட்டுமல்ல, என் பெயரில் இவன் மற்றவர்கள் எழுதும் தமிழ் பிளாக்குகளுக்கும் போய் ‘கமெண்ட்’ எழுதவும் ஆரம்பித்தான். கமெண்டுகளா அவை? அய்யோ... படிக்கவே கண் கூசும் கடைந்தெடுத்த வக்கிர வார்த்தைகள் அவை... படிக்கும் ஆண்களுக்கே குமட்டும் என்றால் பெண்கள் என்ன ஆவார்கள்?

இந்த ‘உவ்வே’ சமாச்சாரத்தைக் கண்டுபிடித்த நான் பிறகு எல்லோருக்கும் அதைத் தெரிவித்தேன். நான் எழுதும் ஒரிஜினல் கமெண்டுகளைத் தொகுத்து ஒரு இடத்தில் போட்டேன். இதையும் அவன் மோப்பம் பிடித்து, அந்த கமெண்டுகளுக்கும் போலியாக தனி இடம் ஆரம்பித்து போலி கமெண்டுகளை என் போலவே தொகுக்க ஆரம்பித்துவிட்டான்.

இதோடு விட்டானா என்றால் இல்லை... என் ‘பிளாக்’கைப் படித்துவிட்டு யாராவது ஒரு சின்ன கமெண்டை எழுதிவிட்டால் போதும். அடுத்த நிமிடம் அதை எழுதியவரை ஆபாசமாக அர்ச்சனை செய்து... கொலை மிரட்டல் விட்டு அச்சுறுத்திவிடுகிறான்!’’ என்று மூச்சுவிடாமல் சொல்லி சற்று நிறுத்தினார் டோண்டு ராகவன்.

இதுபோன்ற வக்கிர செய்கைகள் நடந்த ஓர் ஆண்டாக தொடர்ந்து நடந்திருக்கிறது. ஆனால், சமீபத்தில் ஒரு அறுபது வயதுப் பெண்மணி, தன் அமெரிக்க மகளுடன் பேசுவதற்காக இணைய தளத்தைப் பயன்படுத்த ஆரம்பித்தவர், அப்பாவித்தனமாக ‘டோண்டு’வின் ‘பிளாக்’கில் ஒரு கருத்தை எழுதிவிட்டார். அவ்வளவுதான். அவருக்கு வந்து சேர்ந்த மோசமான வார்த்தைகளை அவர் வாழ்நாளில் கேட்டதில்லை. இப்போது அவர் மனரீதியாகப் பாதிக்கப்பட்டு கணிப்பொறியை பார்த்தாலே கை கால் நடுங்கும் அளவுக்குப் போய்விட்டார்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, இதை இத்துடன் விடக்கூடாது என்று பாதிக்கப்பட்டவர்கள் முடிவெடுத்திருக்கிறார்களாம்.

இணைய உலகில் இயங்கும் பலரிடம் சாதி குறித்த பிடிமானம் அபரிமிதமாக உள்ளது. ஏனெனில், ‘அங்கே முகம் காட்ட வேண்டாம். தங்கள் அடையாளங்களை மறைத்துக் கொள்ளலாம்’ என்பது ஒரு வசதி. எந்தக் கருத்தையும் தன் ‘பிளாக்’கில் சுதந்திரமாக எழுதிவிடலாம். சில ‘பிளாக்’குகள் இதைப் பயன்படுத்தி இனவாதம், மதவாதம் பேசிவிடுவதும் உண்டு. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தால், அவற்றை இந்த ‘பிளாக்’குகளுக்கு இடம் தரும் இணைய தளங்கள் நீக்கிவிடும்.

ஆனால் இந்த பயங்கரவாதி எப்படியோ ஒருவரின் சாதி, அவரது பின்னணி, அவர் வேலை பார்க்கும் இடம், அவரது கல்லூரித் தொடர்புகள் எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கண்டுபிடித்துவிடுகிறான். பிறகு அவற்றை பப்ளிக்காக தன் ‘போலி டோண்டு’ பிளாக்கில் வெளியிட்டும் விடுகிறான். அமெரிக்காவில் வசிக்கும் திருமலைராஜன் என்பவரது முழுமுகவரி, அவர் எங்கோ, எப்போதோ எடுத்துக் கொண்ட ஒரு படம் ஆகியவற்றை வெளியிட்டு பெரிய சலசலப்பையே தமிழ் இணைய தள எழுத்தாளர்களிடம் ஏற்படுத்திவிட்டான் அவன்.

இதனால் தன் அறுபதாம் கல்யாணம் விமரிசையாக நடந்தும் ஒரு ‘பிளாக்’ எழுத்தாளர், தன் நண்பர்கள் வலியுறுத்தியும் அந்தப் படங்களை வெளியிடவே தயங்கிக் கொண்டிருக்கிறார். சென்னையிலிருக்கும் ஒரு மூத்த பெண் பத்திரிகையாளருக்கும் இந்தக் கிறுக்குப் பிடித்த பயங்கரவாதியிடமிருந்து ஆபாச மிரட்டல்கள் வர, அவரும் இப்போதெல்லாம் கம்ப்யூட்டரைப் பார்த்தாலே கை நடுங்க ஆரம்பித்துள்ளார்.

‘தமிழ் மணம்’ என்ற பிளாக்குகளைத் திரட்டும் தளம் நடத்துபவர் பெயர் ஆறுமுகம். இவருக்கும் அந்த பயங்கரவாதிக்கும் இதனால் மோதல் வர, அவன் சகட்டு மேனிக்கு அவரைப் பற்றி எழுத ஆரம்பிக்க, அவற்றை ஏதேச்சையாகப் படித்துவிட்ட அவரது குடும்பத்தினர், ‘‘உங்களுக்கு இந்த இணையதள பிஸினஸே வேண்டாம்!’’ என்று பெரும் பிரச்னை செய்திருக்கிறார்கள்.

தமிழில் பிளாக் எழுதுபவர்களில் பிரபலமானவர்களான பத்ரிநாராயணன், பிரகாஷ் ஆகியோரிடம் இதுபற்றிக் கேட்டோம். ‘தாங்களும் இவனால் பாதிக்கப்பட்டவர்களே’ என்ற அவர்கள், தங்கள் கவலையை நம்முடன் பகிர்ந்து கொண்டார்கள்.

‘‘இணையத்தின் பயன்பாடு இப்போது உலகம் முழுக்க அதிகரித்துக்கொண்டே போகிறது. பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் இதைப் பயன்படுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் புதிதாக உள்ளே நுழைந்தவுடன் அவர்களை மீண்டும் இணையதளம் பக்கம் திரும்ப வராமல் செய்கிறான் இவன். எங்களுக்கும் இவனிடமிருந்து மிரட்டல் கடிதங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அதை நாங்கள் பொருட்படுத்தவில்லை. ஆனால் பெண்கள் இவனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாவதைத்தான் சும்மா விட்டுவிட முடியவில்லை. சாதாரணமாக, வெளியுலகில் ஒரு தெருவில் ஒரு பைத்தியக்காரன், அவ்வழியாகப் போகும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசிக் கொண்டிருக்கிறான், அதைத் தட்டிக் கேட்க யாரும் இல்லை என்றால் என்ன செய்வார்கள்... பெண்கள் அந்தத் தெரு வழியாக வருவதையே நிறுத்திவிடுவார்கள். அதுதான் இப்போது நடக்கிறது. தமிழ் இணையத்தில் ஆர்வத்துடன் பங்கெடுக்க வந்த பல பெண்கள் இப்போது இவனது மிரட்டலால் காணாமலே போய்விட்டார்கள்.

இதே அமெரிக்காவாக இருந்தால், இவனை கிரிமினல் மற்றும் சிவில் வழக்குகளில் பிடித்துப்போட்டு ‘நொங்கு’ எடுத்துவிடுவார்கள். சைபர் கிரைம் தொடர்பாக சட்டங்கள் அவ்வளவு தெளிவானவையாக உள்ளன. ஆனால் இங்கே அப்படிக் கிடையாது. தமிழகத்தில் எங்கு சைபர் கிரைம் நடந்தாலும், அதை எங்கே புகார் கொடுப்பது என்பது பற்றிய தெளிவான விவரங்கள் இல்லை. இதை முறைப்படுத்தாவிட்டால், எதிர்காலத்தில் இன்னும் பயன்பாடுகள் அதிகரிக்கும்போது விபரீதங்கள் ஏற்படும்’’ என்று தெரிவித்தார்கள் இவர்கள்.

இப்படியொரு ‘குடைச்சலைக்’ கொடுத்துவரும் அவன் யாரென்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையுடன் தொழில்நுட்ப ஓட்டைகளைப் பயன்படுத்திச் செயல்படுகிறானாம். அத்துடன் அவன் எழுதும் தமிழ்நடை, உண்மையிலேயே நன்றாக இருக்கிறது என்பதால் அவன் மெத்தப் படித்த அறிவாளி என்று ஒப்புக்கொள்ளும் இவர்கள், எங்கோ அவனுக்கு மனரீதியாக பாதிப்பு ஏற்பட்டு அவனொரு சைக்கோவாக ஆனதால்தான் இப்படி நடந்துகொள்கிறான் என்கிறார்கள். தற்போதைக்கு அவன் யாரென்று ஒருவிதமாக புரிந்திருக்கும் இவர்கள், அவனைப்பற்றி காவல்துறைக்கும் தெரிவித்திருக்கிறார்களாம். ஆனால், அவனைப் பிடிக்க சர்வதேச காவல் துறையின் உதவி தேவைப்படும் என்பதால் தமிழக போலீஸ் கூடுதல் சிரத்தையுடன் செயல்பட்டால்தான் பிடிக்க முடியும் என்கிறார்கள்.

இணையதளத்தில் தகவல்களைத் தேடித்தரும் மென்பொருட்கள் உள்ளன. இவன் பலரையும் பற்றி கன்னா பின்னாவென்று ஆபாசமாக எழுதிவருவதால், இவனால் பாதிக்கப்பட்ட யாரைப்பற்றியாவது தகவல்களைத் தேடினால், இவன் அவர்களைப்பற்றி எழுதிய அசிங்கமான விஷயங்களே வந்து விழுகின்றனவாம். இதுவே இணையதள எழுத்தாளர்களின் அச்சத்தைப் பன்மடங்கு பெரிதாக்கியிருக்கிறது!

தொழில்நுட்பம் வளர வளர எவ்வளவு பிரச்னைகளைத்தான் சந்திக்க வேண்டியிருக்கிறது!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்.

பிகு : இணைய பதிப்பில் முக்கியமாக இரண்டு மிஸ்ஸிங் -
- பிரகாஷ் மற்றும் நாராயணன் படங்கள்
- மற்றும் டாக்டர் அட்வைஸ்

18 Comments:

dondu(#11168674346665545885) said...

மிக நல்ல வேலை செய்திருக்கிறீர்கள் இட்லி வடை அவர்களே. உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றி.

இந்தப் பின்னூட்டத்தை குமுதம் ரிப்போர்டருக்கு நன்றி தெரிவித்து நான் இட்டப் பதிவிலும் பின்னூட்டமாக நகலிடுகிறேன். பார்க்க: http://dondu.blogspot.com/2006/04/blog-post_08.html
அன்புடன்,
டோண்டு ராகவன்

துளசி கோபால் said...

இட்லிவடை,

நன்றிங்க.

IdlyVadai said...

Anonymous - நன்றி.

paarvai said...

குமுதம் படிக்கக்கிடைக்கவில்லை; மிக்க நன்றி
யோகன்
பாரிஸ்

IdlyVadai said...

Article published in Unicode. Thanks Anonymous.

வெளிகண்ட நாதர் said...

உங்களுடய மற்றூம் டோண்ட்டுவின் பதிவு பார்த்து நான் நேத்து தான் குமுதம் ரிப்போர்ட்டர் இணைய பதிப்பில் தேடினேன், கிடைக்கவில்லை, வெளியிட்ட உங்களுக்கு நன்றி!

Anonymous said...

இட்லி வடை

ரிப்போர்ட்டர் பக்கங்களை எடுத்து இட்டமைக்கு நன்றி. ரிப்போர்ட்டரில் என்னைப் பற்றி வந்துள்ள தகவல்களில் ஒரு தகவற்பிழை உள்ளது. அவன் போட்ட படம் என்னுடையது அல்ல என்பதை மட்டும் இதைப் படிக்கும் அல்லது அந்தப் படத்தைப் பார்க்க நேர்ந்த அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை ஏற்கனவே சந்தித்திருக்கும் நண்பர்களுக்கு அது என் படம் இல்லை என்பது தெரியும். யாருக்காவது என்னை அடிக்கும் உத்தேசம் இருந்தால் தப்பான நபரை போய் அடித்து விடக்கூடாது பாருங்கள் :)) தவிர்க்க இயலாத தருணங்கள் தவிர புகைப் படங்களில் இடம் பெறும் வழக்கம் எனக்குப் பொதுவாகக் கிடையாது. இந்த ஆட்டம் எது வரை போகிறது என்று பார்க்கலாம்.

அன்புடன்
ச.திருமலை

Anonymous said...

ச.திருமலைராஜன்தான் முகமூடி என்று வலைப்பதிவுகளில் பலர் சொல்கிறார்களே? அந்த யூகம் மெய்யானதா? பொய்யானதா?

பொன்ஸ்~~Poorna said...

நல்ல வேலை செய்தீர்கள். நிச்சயம் தேவையான ஒரு நடவடிக்கை..

Anonymous said...

Good work. Hope this kind of species not going to threat anyone anymore. we need to take next step. hope Dondu can join with badri/para/prakash and take tis to next level.. will Mr. Dondu ?

Anonymous said...

Hilarious:-)

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்...

எல்லாம் வல்ல அல்லாவின் இறைப்பார்வை எப்போதும் தங்கள்மீதும் தங்கள் குடும்பத்தின்மீதும் செய்தொழிலின்மீது எப்போதும் நிறைந்து இருக்கட்டும்.

மதம் என்பது என்னைப் பொருத்தவரையில் இறைவனைச் சென்றடையும் மார்க்கம். அவரவர்களுக்குப் பிடித்த மார்க்கத்தினில் இறைவனைச் சென்றடைகிறார்கள். இந்துவும் இஸ்லாமும் கிறிஸ்துவர்களும் மற்ற மதத்தினரும் தமக்குப் பிடித்த வழிகளில் தத்தமது இறைவனிடம் செல்கின்றனர். நமக்குப் பிடித்த வழிகளில் நாம் இறைவனிடம் செல்வது தவறு ஆகாது. நம் மதம் குறித்த நல்ல கருத்துக்களை பரப்புவதில்கூட தவறு இல்லை. ஆனால் மற்ற மதங்களைக் கேவலமாக சித்தரித்தல் ஒருபோதும் கூடாது. இதுதான் மிகவும் தவறான செயல். நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.

நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.

எனது ஜாதி மட்டுமே இந்த உலகத்தில் பெரிய ஜாதி என்று மார்தட்டியவர்கள். நாம் வாழ்ந்து கொண்டிருப்பது விஞ்ஞான யுகம். 21ம் நூற்றாண்டு. நிலவிலும் சந்திரனிலும் செவ்வாயிலும் காலடி எடுத்து வைத்து வீடு கட்டலாமா, காலிமனை விற்பனை செய்யலாமா என ராக்கெட் வேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கிறோம். அப்படி இருக்கும்போது நான் அய்யங்கார் என்பதில் பெருமைப்படுகிறேன் என்றும் நான் பூணூல், குடுமி வைத்திருப்பதை பெருமையாக நினைக்கிறேன் என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.

ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள். பிறக்கும் குழந்தை தெய்வத்திற்கு சமமானது. எல்லாக் குழந்தையும் தெய்வ. அப்படி இருக்கும்போது தலித் வீட்டில் பிறக்கும் குழந்தையும் அய்யங்கார் வீட்டில் பிறக்கும் குழந்தையும் ஒன்றேதான். ஜாதியை அரசர்கள் காலத்தில் முதலில் அறிமுகப்படுத்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தது ஆரியர்களாக வந்த பார்ப்பனர்கள்தான். இதனை பலரும் எழுதி உள்ளனர். வரலாற்றில் தகுந்த சான்றுகள் உண்டு. ஜாதியை வளர்த்தவர்கள் தலித்தோ தாழ்த்தப்பட்டவரோ இல்லை.

இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.

டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம். அதனால் பாலஸ்தீனத்தை வெறுக்கிறாராம். ஏன் இஸ்ரேலைப் பிடிக்கிறது என்று கேட்பவர்களுக்கு தகுந்த பதில் இல்லை. பாலஸ்தீனம் இஸ்லாமிய நாடு என்ற ஒரே ஒரு விஷயத்தினால் மட்டுமே டோண்டுவுக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது! தவிர டோண்டு போன்ற பல பார்ப்பனர்களுக்கும் அமெரிக்காவைப் பிடித்து இருப்பதும் ஒரு காரணம். இஸ்ரேல் அமெரிக்காவின் நண்பன் என்பதால் இவருக்கு இஸ்ரேலைப் பிடித்து இருக்கிறது.

இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! வந்தேறிகுடிகளான ஆரியர்கள் காசுக்காக எதையும் செய்யும் மிருகங்கள். அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.

லக்கிலுக் said...

///பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.///

அப்பட்டமான பொய்... போலி டோண்டு பிராமணர்கள் என்று நினைக்கும் அனைவருமே பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்... ஏன் டோண்டுவின் Blogல் பிராமணர்கள் மட்டும் தான் பின்னூட்டம் இடுகிறார்களா?

ஏதோ ஒரு கருத்துக்கு சும்மா பின்னூட்டம் இட்ட எனக்கு ஆபாச மெயில்களை போலி டோண்டு அனுப்பியதால் தான் நான் போலி டோண்டுவை எதிர்க்கிறேன்...

இவனை பிராமணர்கள் மட்டும் தான் எதிர்க்க வேண்டும் என்றெல்லாம் சட்டம் ஏதும் கிடையாதே?

சல்மா அயூப் said...

போலி டோண்டு அவர்களுக்கு,

தாங்கள் சொல்லுவது அத்தனையும் உண்மை என்று ஏற்றுக்கொண்டாலும், பார்ப்பனர்களின் சாதி வெறியை தாங்கள் எதிர்க்க முயன்றாலும், ஆபாசமாக எழுதுவதும், மிரட்டுவதும், திருட்டுத்தனமாக பிறரைப்போல் பெயரிட்டுக்கொள்வதும் ஈனமான செயல்தான்.

இதைத்தான் இஸ்லாத்தில் அறிந்து கொண்டீர்களா?

சொல்லும் கருத்துக்களை எதிர் கருத்துக்களால் வெல்ல இயலாத தாங்கள், நீட்டி முழக்கி நியாயம் பேசுவது சரியான ஜோக்.

தங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.

நன்றி

Anonymous said...

//
எல்லாம் வல்ல அல்லாவின் இறைப்பார்வை எப்போதும் தங்கள்மீதும் தங்கள் குடும்பத்தின்மீதும் செய்தொழிலின்மீது எப்போதும் நிறைந்து இருக்கட்டும்...

இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.
//


எதற்கு, புதிதாக இந்த இஸ்லாமிய வேஷம்? கிறித்தவர்களை அணைத்துக்கொள்ளும் பாசமும் திசைதிருப்பலும்?
----------

//இங்கே டோண்டு என்ற பெயரில் எழுதும் கிழ மிருகத்துக்கு சோ என்ற பார்ப்பன பத்திரிக்கையாளனைப் பிடிக்குமாம். சோ பற்றி முத்து(தமிழினி) முதல் தங்கமணி, கறுப்பு வரை எழுதி இருக்கின்றனர். //

//டோண்டுவுக்கு ராஜாஜியை ரொம்பப் பிடிக்குமாம். ராஜாஜியின் குலக்கல்விமுறை பெரும் கண்டனத்துக்கு உள்ளானதை பல தோழர்களும் அறிவீர்கள்.//

//டோண்டுவுக்கு இஸ்ரேல் பிடிக்குமாம்....//

//இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது...//


//நமக்குப் பிடிக்காதது மற்றவர்களுக்குப் பிடித்து இருக்கலாம். நம் பார்வையில் தவறு என்று நினைப்பது அடுத்தவர் பார்வையில் சரியாக இருக்க வாய்ப்புண்டு. எல்லோர் பார்வையிலும் சரியாகாவே எல்லாமும் தெரிந்தால் பின்னர் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக?//

நீங்களே உங்கள் கருத்துகளோடு எவ்வளவு முரண்பட்டிருக்கிறீர்கள் பார்த்தீர்களா? உங்களுக்குப் பிடிக்காதவை டோண்டூவுக்கோ மற்றவர்களுக்கோ பிடிக்கக் கூடாதா என்ன? முத்து(தமிழினி), தங்கமணி, கறுப்பு போன்றவர்கள் மட்டுமே அதாரிடியா என்ன? மாற்றுக்கருத்து வைத்த உங்கள் கூட்டத்தின் பார்வைதான் சரி என்றால் நீதிமன்றம் என்ற ஒன்று எதற்காக? [கருத்தைக் கருத்தால் அடிக்கலாம் என்ற முடிவோடும் தெளிவோடும் நல்ல நண்பர்களாக இருக்கும் முத்து(தமிழினி), டோண்டூவைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?]
----------

//இஸ்லாத்திலும் பல பிரிவுகள் இருக்கின்றன. அவர்கள் தனித்தனியாக பிரியாமல் அனைவரும் ஒன்றாக இருந்து இஸ்லாமியம் பேணுகின்றனர். ஜியா என்றும் சன்னி என்றும் நமது நட்டைப் பொருத்தவரையில் சண்டை ஏற்பட்டதில்லை. அதேபோல கிறிஸ்துவர்களுக்குள்ளும் கத்தோலிக் என்றும் ப்ராட்டஸ்டண்டு எனவும் பிரிவுகள் இருந்தாலும் அவர்கள் அடித்துக் கொண்டு நான் பார்த்தது இல்லை.//

இடையில் இந்த அளவு நகைச்சுவை கூட இல்லை என்றால் மூச்சுத் திணறியிருக்கும்.
----------

//ஆனால் இந்த இந்து மதத்தில் மட்டும் பார்ப்பனர்கள் மற்ற எல்லோரையும் தீண்டத்தகாதவர்கள் என்றும் பிறப்பால் நீ தாழ்ந்தவன் என்றும் சொல்கிறார்கள்.//

பிராமணர்கள் மட்டுமா சொல்கிறார்கள்? ஏன் இந்தப் புரட்டுவேலை?
----------

//இந்திய நாட்டில் படித்து தேறி அமெரிக்காவில் பணிபுரிந்து காசை மூட்டை கட்டுவது என்பது பல பார்ப்பனர்களின் வாடிக்கை. சோறு போடும் நாடு என்பதால் அவர்களுக்கு இந்தியாவைவிட அமெரிக்காவைப் பிடித்து இருக்கிறது. இனிமேல் அவர்கள் அமெரிக்கா என் தாய்நாடு என்று சொல்லிக் கொண்டாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை!..//


பிராமணரல்லாதவர் பலரே ஏன் உங்கள் கூட்டத்திலேயே பலர் இந்தியாவில் இல்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? :) இந்திய தேசிய கீதத்திற்குக் கூட எனக்கு மூட் இருந்தால் தான் எழுந்து நிற்பேன்; இந்தியா ஒரு ஒன்றுபட்ட நாடு என்று சொல்வதே பம்மாத்து என்று பேசுபவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? :)) இவர்களையும் தாக்கி எங்காவது எழுதியிருக்கிறீர்களா? இனியாவது எழுதுவீர்களா?
----------
//அமெரிக்காவில் வேலை, வசதி என்றால் தம் தாய்நாட்டுக்கு எதிராக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். அதுதான் உண்மை.//


அப்படி ஏதாவது சாட்சி இருக்கிறதா? தெரிந்தால் சொல்லுங்கள், சட்டத்தின் துணையால் போட்டுத் தள்ளிவிடலாம். நானும் அந்த வந்தேறிகளின் மேலான ஆத்திரத்தில் கேட்கவில்லை. தாய்நாட்டின் மீதான அக்கறையில்தான் கேட்கிறேன்.
----------

//நான் எழுதிய சில கருத்துக்களால் சிலர் புண்பட்டது உண்மை. அவ்வாறு புண்பட்டவர்கள் ஜாதியை வளர்த்த பிராமணர்கள். எந்த இஸ்லாமியராவது என்னால் பாதிக்கப் பட்டாரா? எந்த கிறிஸ்துவராவது என்மேல் கோபம் கொண்டிருப்பதாக உங்களால் சொல்ல முடியுமா? எந்த புத்த மதத்தினராவது என்னால் பாதிப்புக் குள்ளானார்களா? பாதிக்கப் பட்டவர்கள் அனைவரும் பிராமனர்கள்.//


நீங்கள் புண்படுத்தியது ஜாதி பேசிய பிராமணர்கள் மட்டும் இல்லை என்பதை luckylook ஏற்கனவே போட்டு உடைத்துவிட்டார். அதனால் மேலே கேட்க நினைப்பது, நீங்கள் ஜாதி பேசும் அனைத்து சாதியினரையுமே தாக்கி எழுதியிருப்பதாகக் கூறுகிறீர்கள். ஆனால் வன்னியர், தேவர் ஆதரவாளர்களைத் தாக்கி நீங்களே எழுதியதாகச் சொல்லும் பின்னூட்டங்கள் ஏன் ஒன்று கூட உங்கள் வலைப்பதிவில் இல்லை? அவர்கள் தான் தங்கள் பதிவில் நாகரிகமாக அழித்துவிட்டார்கள். நீங்களாவது வைத்திருந்தால் எல்லோருக்கும் உங்கள் ஜாதி எதிர்ப்புக் கொள்கை புரிந்திருக்குமல்லவா? இனிமேல் வைக்கிறீர்களா?
----------

//எனவே நாம் சொல்ல வந்த கருத்தினை மிகவும் நல்ல வழியில் யார் மனதும் புண்படாதவாரு சொல்ல வேண்டும்.//


இப்படிச்சொல்லும் நீங்கள் எழுதிய கருத்துகள் புண்படாதவாறு கூட இருக்கவேண்டாம், குறைந்தது படிக்கத் தகுந்தவையாக இருந்தனவா? அப்படி இருக்கும்போது பதிவை நீக்கியதற்காகவும், மட்டுறுத்தலைக் கட்டாயப்படுத்தியதற்காகவும் காசி, செல்வராஜைத் தாக்குவது என்ன நியாயம்?
----------

இரண்டு சந்தேகங்கள்:

நீங்கள் அநாகரிகமாகத் தாக்குகிறீர்கள் என்பதற்காக பிராமணர்களும், மாற்றுக்கருத்து வைக்க நினைப்பவர்களும், அநாநியாக வந்து போட்டுத் தாக்கினால் என்ன செய்வீர்கள்? உங்களால் தீர்க்கக் கூடிய பிரச்சினையாக இதை நினைக்கிறீர்களா? இப்போதே அதிகம் அப்படித்தான் நடக்கிறது. நான் பிராமணன் இல்லை என்றாலும் உங்களுக்கு மாற்றுக்கருத்தை அப்படித்தானே வைக்கிறேன். சக வலைப்பதிவராக ஒரு வாழ்த்துச் சொன்னதைத் தவிர நானும் அதில் சம்பந்தமே இல்லாத என் குடும்பப் பெண்களும் என்ன தவறு செய்தோம்? உங்கள் கடிதம் படித்துவிட்டு கணினியிலிருந்து மெதுவாக என் குடும்பத்தைத் திரும்பிப் பார்க்கிறேன். ஒரு கவலையும் இல்லாமல் அவர்கள் டிவியில் கெட்டிமேளம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இணையத்தை அவர்களும், அவர்களை இணையமும் அறியாததால் அதிர்ச்சி என்னோடு முடிந்துவிட்டது. ஆனால் உங்கள் கடிதங்களைப் படித்த பெண்பதிவர்களை நினைத்துப் பார்த்தீர்களா? ஆண் செய்த தவறுக்குக் கூட பாஸ்... என்று அவனைப் பெற்றவளைத்தான் திட்டக் கற்றிருக்கிறோம். பெண்களை இப்படித் தரக்குறைவாகத் தாக்குவதைத்தான் உங்கள் இஸ்லாமும் பெரியாரும் அம்பேத்காரும் சொல்லித் தந்தார்களா? இந்த விஷயத்தில் வருணாசிரமப் படி நீங்கள் தான் ஐயா முற்றிய பிராமணன்.

அது இருக்கட்டும், உங்கள் எழுத்துகளைப் படிக்கும் உங்கள் கூட்டத்தில் இருக்கும் பெண் உறுப்பினர் என்ன சொல்கிறார்? உங்கள் வீட்டுப் பெண்கள் என்ன சொல்கிறார்கள்? வாழ்க்கையில் நல்ல தோழி கிடைத்த ஆண் தன் மனைவியையும் மரியாதையாக நடத்துவான். அதே மாதிரி நல்ல மனைவி கிடைத்த ஆண் சக பெண்களையும் மரியாதையாக நடத்துவான். உங்களுக்கு இரண்டில் எது கோளாறானது? அல்லது இரண்டுமேயா?
----------

ஒரு ஆலோசனை: எதிர்ப்பது என்று முடிவுசெய்துவிட்டீர்கள், ஏன் டோண்டூவிற்குப் பின்னூட்டமிடுபவர்களை மட்டும் தாக்கவேண்டும். அவர் பதிவுக்கு வந்து படிப்பவர்கள் எல்லோரையும்கூட தாக்கலாமே. இதனால் அவரை வலைப்பதிவில் இன்னும் அதிகம்பேர் ஒதுக்குவார்கள். முடியாதது எதுவுமில்லை. தமிழ்மணம் வழியாக வருபவர்களை மட்டுமாவது ட்ரேஸ் செய்து தாக்கலாமே. உங்களுக்குத்தான் தமிழ்மணம் நிர்வாகத்திலும் ஆள் இல்லாமலா இருப்பார்கள்? :) செய்வீர்களா?
----------

//...என்றும் டோண்டு சொன்னதும் அதற்கு பல பார்ப்பனர்களின் ஆதரவு பின்னூட்டமும் எங்களை சினம் கொள்ள வைத்தது. பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!//

இது சுவாரசியமானது. முதலில் ஒருவராக இருந்தது, எப்போது பலரானீர்கள்? போகட்டும் இதே நேர்மையுடன் மற்றவர்களையும் உங்களால் பொதுவில் அறிமுகப்படுத்த முடியுமா? எந்த நிமிடத்திலிருந்தோ நீங்கள் தாக்கும் நபர்களின் அடையாளங்கள் மாறிவிட்டதை நீங்கள் கவனிக்காவிட்டாலும் நாங்கள் கவனிக்கிறோம். நீங்கள் தாக்காதவர்களின் வட்டம் சிறியது என்பதும் அதிலேயே அவர்களைக் கண்டுகொள்ளமுடியும் என்பதும் உங்களுக்குத் தெரியுமா?

உங்களுக்கு எந்தவிதத்திலோ சாதிப் பற்றுமேல் மற்றவர்களைவிட அதிகமாகக் கோபம் வர எந்தவிதத்திலாவது எங்காவது நீங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பலனை உங்களுக்குத் தருகிறேன். அதே மாதிரி கோபத்துடன் தன் சாதியைப் பொதுவில் சொல்ல டோண்டுவும் எந்த விதத்திலாவது மற்றவர்களால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்பதை நீங்களும் ஏற்றுக் கொள்வீர்களா? மொத்த இணையமும் ஒரு சாதியை எவ்வளவு திட்டினாலும் அதை முற்போக்குக் கருத்தாக எடுத்துக்கொண்டு எல்லோரும் வாய்மூடி மௌனமாக இருக்க வேண்டும். அல்லாதவர்கள் மேல் சினம் கொண்டு இழிவாகப் பேசுவோம் என்று நீங்கள் சொல்வதையும் ஒரு கூட்டம் ஆதரிப்பதைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது. இதை எல்லாம் கேட்டுக் கேட்டு பாதிக்கப்பட்டே இன்று மிதவாதப் பார்ப்பனர்களாக இருப்பவர்களில் எவருள்ளிருந்தும் இன்னொரு 'போலி திராவிட ராஸ்கல்' உருவாகி உங்கள் கூட்டத்தை அதே மொழியில் அடுக்கினால் அதையும் நியாயமென்று இந்தக் கூட்டம் ஒத்துக்கொள்ளுமா?

இறுதியாக, உங்கள் பின்னால் எவ்வளவுபேர் இருந்தாலும் மாட்டினால் நீங்களும் உங்கள் தொழிலும், அவமானத்திலும், பொருளாதார சீர்கேட்டிலும் சமுதாயத்தில் உங்கள் குடும்பம் மட்டுமே பாதிக்கும். உங்களை ஏவியவர்களோ புனிதப்பசுவாக என்றென்றும் நித்யஜீவனம் கழித்துக்கொண்டு 'திருடன் திருடன்' என்று அவர்களும் எல்லோருடனும் உங்களைத் துரத்திக்கொண்டோ அல்லது தன் கீழ்த்தர வேலைக்கு அடுத்தவனைத் தேடியோ போய்விடுவார்கள்.

இதை அவர்கள் புரிந்தே இருக்கிறார்கள். நீங்கள் எப்போது புரிந்துகொள்வீர்கள்? :பிரார்த்தனைகள்:

Anonymous said...

//பல முறை நாங்களும் சொல்லிப் பார்த்தோம். சாம, பேத, தான, தண்ட வழிமுறைகளின் கடைசி முயற்சியாகத்தன் எங்கள் தாக்குதல் தீவிரமானதே தவிர எடுத்தவுடன் கவிழ்ப்பதற்கு நாங்கள் ஒன்றும் சிறு குழந்தை அல்ல!

//

ஆக நீங்க தனி ஆள் கிடையாது ஒரு கூட்டம் ! சரி தான்.

வாழ்க உங்கள் தொண்டு.
வாழ்க உங்கள் கோழைதனம்.
வாழ்க உங்கள் பேடித்தனம்.
வாழ்க உங்கள் கோழைத்தனம்

Anonymous said...

y don't u show ur Name mrAnymous..
R U......... ????

Anonymous said...

--//y don't u show ur Name mrAnymous..
R U......... ???? //--

he he he he he what a CHECK

--(வாழ்க உங்கள் கோழைதனம்)--

AYOOO AYOO CHINA PULA THANAMA IRRUKU

-Poli Dondu rasigar mandram
(Middle east branch)
(Hope london branch also enjoy this fun)