இன்றைய கல்விநிலை பற்றி கனிமொழி...
____________________________________________________________________________________
"....பிள்ளைகள் ஒன்பதாம் வகுப்பு வந்ததும் அவர்களின் மற்ற ஆர்வங்கள் மூட்டை கட்டிப் பரண்மீது தூக்கி எறியப்படுகின்றன....
பிள்ளை பத்தாம் வகுப்பு வந்ததும் பெற்றோர்கள் பல தியாகங்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். முதல் கட்டமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குமுதம், ஆனந்த விகடன் நிறுத்தப்படுகின்றன. இந்து நாளிதழ் அவசியமாகிறது. அப்பாக்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அம்மாக்கள் பொதுத் தேர்விற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நீண்ட விடுமுறைக்கு அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.
இதுவே 12ஆம் வகுப்புத் தேர்வாக இருந்தால் குடும்பமே தயிர்சாதம், பச்சை மிளகாய்க்கு மாறிக்கொள்கிறது. மிச்சப்படும் பணத்தை கணக்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், practicals என்று சிறப்புப் பாட ஆசிரியர்களுக்குக் கொடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு வகுப்புகள் காலை சுமார் ஆறு அல்லது ஐந்தே முக்கால் மணிக்குத் துவங்கி, பள்ளி நேரங்களில் 'பிரேக்' விட்டு மாலை மீண்டும் கூடி இரவு 10, 11க்கு முடியும்......"
____________________________________________________________________________________
ஆக இப்படிக் கழியும் அல்லது தொடங்கும் ஒரு மாணவனின் வருடங்களில் மிகச் சில அற்புத கணங்களில் ஒன்று தன்னைச் சுற்றி கிடைக்கும் நட்பு வட்டம். எந்த வித்தியாசமும் இல்லாமல் பழகுகிறார்கள். ஆனால் மேல்கூறிய அத்தனை முயற்சிகளை எல்லா மாணவர்களும் அவரின் குடும்பங்களும் செய்தாலும் மதிப்பெண் சான்றிதழ் வாங்கியவுடன், ஒருசிலர் வசதியான இடத்தை அடைந்துவிட, சிலர் அதைவிட மதிப்பெண் அதிகம் வாங்கியிருந்தும் நிறுத்திவைக்கப்படும்- அதற்குச் சொல்லப்படும்- காரணம் சாதி. மாணவன் திகைத்துப் போவது இங்கேதான். இதுநாள் வரை உறுத்தாத சாதி இன்று அவரவர்க்கு ஏற்பட்ட நஷ்டத்தின் அளவுகோல் படி நெருடலையோ, கோபத்தையோ ஆவேசத்தையோ கொடுக்கிறது. இத்தனை நாள் தானும் வித்தியாசம் இல்லாமல் இருந்த இன்னொருவனோ, இப்போது தான் என்ன சாதி என்பதில் ஆர்வம் காட்டி (ஐநூறு ஆயிரம் கொடுத்தாவது) ஒரு சான்றிதழ் வாங்குவதில் தீவிரம் காட்டி முன்னால் நிற்கும் நெருங்கிய நண்பனை எந்த உறுத்தலும் இல்லாமல் தள்ளிவிட்டு முன்னால் போகிறான்.
கேட்டால் சொல்லிவைத்தாற்போல் எல்லோரும் சொல்லும் காரணம், "2000 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்டவர்கள்".
2000 வருடங்களாக கல்வி மறுக்கப்பட்டதா? இன்னும் எத்தனை நாளைக்குத் தான் இந்த ஜல்லியை அடித்துக்கொண்டிருப்பது? 2000 வருடங்களாகவா கல்லூரிப் படிப்பும், தொழில்நுட்பப் படிப்புகளும், மேல்படிப்பு IIT/IIM களும் இருந்துவருகின்றன? இரண்டு தலைமுறையாகத்தான் SSLC/5வது படித்த தாத்தா பாட்டி, MSc/B.Sc படித்த பெற்றோரைத் தாண்டி இந்தத் தலைமுறைக்கு இதர கல்லூரிப் படிப்புகளே பரவலாக்கப்பட்டிருக்கின்றன. இன்று சாதியின் பொருட்டு மட்டுமே படிப்பு மறுக்கப்படும் எத்தனை குடும்பங்களில் முப்பாட்டன்கள் B.E., MBBS, IIT/IIMல் படித்துவந்திருக்கிறார்கள்? எல்லாக் குடும்பத்திலுமே இதுதான் முதல்/இரண்டாம் தலைமுறை. அப்படி இருக்க எந்த சமூகநீதியில் அவனுக்கு சாதியின் பெயரால் இந்தப் படிப்புகள் மறுக்கப்படுகிறது? மருத்துவ மேல்படிப்பில் இங்கே சாதியின் பொருட்டு சாதிக்கமுடியாமல் போன பெண் மருத்துவருக்கு, அமெரிக்கா போனதும் நூற்றுக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களை சமர்பிக்கமுடிகிறது- அங்கே மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிக்க முடிகிறது என்றால் நஷ்டம் யாருக்கு?
தனக்கு இணையாக சமகாலத்தில் தன்வீட்டிலேயே வாழும் கணவன்/மனைவியையே கூட தன் தனிப்பட்ட கொள்களைகளைக் கூறி தனிநபர் சுதந்திரத்தைப் பறிக்கக் கூடாதென்றால், உழைத்துப் படித்து வாழ்க்கையில் முன்னுக்குவர நினக்கும் ஒரு மாணவனை அவன் பார்த்தே இராத அவன் முப்பாட்டனைச் சொல்லி முட்டுக்கட்டை போடுவது எந்த விதத்தில் நியாயமாகும். அப்பா சொல்வதையே கேட்காமல், 'உன் காலம் வேறு, என் காலம் வேறு' என்று எடுத்தெறிந்து பேசிவிட்டு நாம் நமது கொள்களைகளோடு போகும்போது முப்பாட்டான்களுக்கான செய்கைகளை இவனுக்கு முன் காரணங்களாக வைப்பது எந்தச் சமூக நீதி? இப்படிச் சொல்வதால் இவர்கள் மட்டும் படித்து முன்னேறவேண்டும் என்று சொல்லவரவில்லை. ஆனால் அதற்குச் சொல்லப்படும் காரணம் மட்டுமே சரியில்லை. ஒருவனது பொருளாதாரத்தை, குடும்பச் சூழ்நிலையைச் சொல்லி சலுகைகளைத் தரும்போது அடுத்தவர் யோசிக்கவாவது இடமிருக்கிறது. செய்வதை சாதியின் பெயரால் செய்வதே இங்கே நெருடுகிறது.
அப்படியாவது இட ஒதுக்கீட்டில் படித்தபின்பும் இவர்கள் கௌரவிக்கப் படுகிறார்களா என்றால் இல்லை. அவர்களின் சிறுசிறு தவறுகள் கூட ஒதுக்கீட்டைச் சொல்லி ஏளனப்படுத்தப் படுகின்றன. 'ரிசர்வேஷன்ல படிச்சுட்டு வந்து விஷயமும் தெரியாம நம்ப தாலியை அறுக்குறானுக!' என்று சொல்லியிருக்கிறோம், அலுவலகங்களில் கேட்டே வருகிறோம்.
அதற்காக வாழ்க்கைத் தரத்தில் கீழே இருப்பவர்களை மேலே கொண்டுவரக் கூடாது என்பது அல்ல என் கருத்து.
* எல்லோருக்கும் கல்வியைக் கட்டாயப்படுத்தட்டும். விளிம்புநிலை மனிதர்களுக்கான இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு (அரசு/தனியார்) ஆரம்பப் பள்ளியிலிருந்தே அவர்களுக்கு இலவசக் கல்வியை அளிக்கலாம்.
* உயர்கல்வியில் ஒதுக்கீட்டை எடுத்துவிடவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. ஆனால் அது கிராமப்புற பள்ளிகளில் படிக்கும்- எத்தனை முயன்றும் நகரத்துப் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியாதவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
* மேல்படிப்பில் பொருளாதராத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை அரசும், தனியார் கல்வி நிறுவனங்களும் ஒரு வரையறை வைத்து செய்யலாம்.
இவை அல்லாமல் சாதியின் பெயரால் செய்யப்படும் ஒதுக்கீடுகள்/சலுகைகள் எல்லாம் முத்திரை இடப்பட்ட அரசியல் கயமை அன்றி வேறு இல்லை.
Anti-Reservations சார்பாக போடப் பட்டிருக்கும் ஒரு ஆங்கிலப் பதிவு (Petition against proposed reservation in premeir educational institutes பார்க்க - http://entrancetotheshrine.blogspot.com/2006/04/anti-reservations-blogroll.html
http://ray-deo.blogspot.com/2006/04/bring-it-on.html என்ற வலைப்பதிவில்
If I happen to recruit from these campuses any time in the future, I will make sure the candidate who gets through to my company is not a student who got in because of his caste certificate. Reservation candidates who can afford not to use the reservations can live in their own little world and work and thrive with their kind, I don’t want them around me...
இவர் சொல்வதில் ஏதாவது தவறு இருக்கிறதா? அவர்களது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியிலேயே தரமான கல்வி கொடுக்கப்பட்டும், கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
அட, கல்வியின் தரமும் படிப்பவனின் மெத்தனமும் ஒருபக்கம் இருக்கட்டும். அதைவிட முக்கியமாக ஒதுக்கீடு வருவதற்குமுன் நம்மில் எத்தனைபேருக்கு இந்தியாவில் சாதியின் இத்தனை பிரிவுகள், உள்பிரிவுகள் தெரிந்திருந்தது. நாளொரு சாதியும் பொழுதொரு உட்பிரிவும், அவரவர்கள் தங்களுடைய சாதியை இணைத்துக்கொள்ள அரசை வற்புறுத்தும் ஒதுக்கீட்டுச் சண்டைகளும், அதன் பிரதிநிதித்துவம் வேண்டி செய்யப்படும் போராட்டங்களும், ஆரம்பிக்கப் படும் கட்சிகளும், ஓட்டுக்காக அரசு மேன்மேலும் செய்யும் தடாலடிகளும்....
இந்துமதத்தின் நான்கு வகை வர்ணபேதத்தை சாடும் நாம் அதை எல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிக்கொண்டு இன்னும் அதனின்று ஒதுக்கீட்டின் பெயரைச் சொல்லி பிரிந்து பிரிந்து வெளிவந்துகொண்டேயிருக்கும் (வர்ண) சாதிப்பிரிகைகளுக்கு என்ன பதில் சொல்லப் போகிறோம்? சாதி ஒழியவேண்டும் என்று நினைக்கும் நம்மிடம் இதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? நம் குழந்தைகளுக்கு சாதி சொல்லித்தராமல் வளர்க்கத்தான் நினைக்கிறோம். ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை.
ஓட்டு வங்கிக்காகச் செயலாற்றும் அரசியல் கட்சிகளும், சாதி கூடாது என்று சொல்லிக்கொண்டே அதற்கான சலுகைகளுக்கு வாதாடுபவர்களின் உள்நோக்கமும் தெரிந்தே இருப்பதால் அதுகுறித்து மேலே மேலே விவாதிப்பதுகூட அயர்வையே அளிக்கும் விஷயம் என்றாலும் தெரியாமல் தான் கேட்கிறேன்..
சாதியை ஒழிக்க (சாதி சார்ந்த)இட ஒதுக்கீட்டை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?
பிகு:
49.5 இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இத்துடன் நிறுத்திவிட கூடாது - ரானுவம், பாராளுமன்றம், சட்டசபை, அமைச்சர்கள், இந்திய கிரிக்கேட் அணி ஏன் வலைப்பதிவில் கூட கொண்டு வர வேண்டும்.
49.5% பற்றி rediff.com
40 Comments:
ayya Idly Vadai, give the source link please
கனிமொழி கொஞ்சம் வித்தியாசமாகத் தான் இருக்கிறார்.
அப்பாவுக்கும் எடுத்துச் சொன்னால் தமிழகத்திற்கு பிரயோசனமாக இருக்கும்.
இட ஒதுக்கீடு கல்லூரியளவில் தேவையில்லை. இது முற்றிலும் அரசியலுக்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.
நோய் நாடாமல் வெளிப்புண்ணுக்கு மருந்து தடவிக்கொண்டிருக்கிறார்கள் அரசியல்வாதிகள்.
இதணை உணரக்கூட முடியாமல் தர்க்கம் செய்கின்றனர் படித்தவர்கள். ஆனால் யார் வாயிலிருந்தும் மறந்தும் கூட பிரச்சினையின் வேரை பற்றி பேசுவதில்லை.
இட ஒதுக்கீட்டால் தரம் இருக்காது என்றால் அவர்களின் தரத்தை எங்கே மேம்படுத்துவது?
வசதியில்லாமல் படிப்பை பள்ளிஅளவிலேயே நிறுத்தி விடுபவர்கள் தான் அதிகம்.
இட ஒதுக்கீட்டை கல்லூரிகளில் அறிமுகப்படுத்துவதை விட பள்ளிகளில் குழந்தைகளின் கல்வி தரத்ததை மேம்படச் செய்து கல்லூரிகளுக்கு செல்வதற்கான வசதிகளை செய்தால் உருப்படியாக இருக்கும்.
இதை செய்தால் மேற்படிப்புகளுக்கு போட்டியிடுபவர்களின் திறன் ஒரே நிலையில் இருக்கும். அவர்கள் படிப்புச் செலவை கூட ஏற்றுக்கொள்ளலாம்.
உண்மையிலேயே படிக்கும் ஆசை உள்ளவர்களும் திறமையானவர்களும் இட ஒதுக்கீட்டில நுழைவது தான் நல்லது. ஆனால் நடப்பது என்ன? வசதியான வீட்டு பிள்ளைகள் இட ஒதுக்கீட்டு முறையால் ஒரு பெருமைக்காக மருத்துவ தொழிநுட்ப கல்லூரிகளில் நுழைந்து விடுகிறார்கள். இவர்களிடம் நாம் எப்படி மருத்துவம் செய்து கொள்வது?
இந்த தொலைக்காட்சிகளும் பரபரப்புக்காக விவாதாங்களை ஆரோக்கியமில்லாமல் திசை திருப்பிவிடுகின்றன. உருப்படியான யோசனைகளை சொல்லி அடிப்படை மாற்றங்களை உண்டாக்குவது தான் நல்லதாக இருக்கும்.
போதாக்குறைக்கு இதில் ஜாதியையும் இழுத்து...
சந்திப்பு இப்படி ஒரு பத்தி எழுதியருக்கிறார் தன் பதிவில்
//நுழைவுத் தேர்வுக்காக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் மிக முக்கியமானது. இந்த வகுப்புகளில் கூட குறிப்பிட்ட ஜாதியைச் சார்ந்தவர்களுக்கே மிக அதிக அளவில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதைத்தான் நான் உள்வட்டம் - வெளிவட்டம் என்று குறிப்பிட்டிருந்தேன்//
பயிற்சி வகுப்புகளில் ஜாதி என சொல்கிறாரே! இது அதிகமாக படவில்லையா? அங்கே பணம் தான் பிரதானம். அதற்கும் இந்த கல்லூரிகளுக்கும் என்ன சம்பந்தம்?
வேண்டுமானால் இது போன்ற தரமான பயிற்சி வகுப்புகளை இலவசமாக அரசு ஒவ்வொரு மாவட்ட அளவிலும் உருவாக்க வேண்டுமென சொல்லுங்கள்.
நமக்கு பிரச்சினகைளை மேலும் சிக்கலாக்க தெரியுமே தவிர தீர்வு காணத் தெரியாது. அது இந்தியனின் குறைபாடு. அது சாலை விதிகளில் மக்களின் செயல்பாடுகளை கொண்டே சொல்லிவிடலாம்.
அப்படித் தான் இடஓதுக்கீடும்.
You posting claim that the students get a big shock once they complete +2 exams.
Nowadays students are very clear/clever. If they belong to the forward community, their parents very clearly tell them about the future.
Moreover the BC/ST students also face the same thing if they want to join the premier institutions. Look at the cut-off marks published by Anna university.
Students miss out top colleages by a mark or two. They might feel bad. But that is not the end of the world to them. There are tons of opportunity in the world.
So your logic of "rude shock" when they pass the exams is totally in-correct.
நல்ல பதிவு. கனிமொழிக்கு பாராட்டுக்கள்.
கனிமொழி, பார்பணர் அல்ல, அதனால் கண்டணங்கள் வராது என்று நினைக்கிறேன்.
ஸ்ரீதர்
Again some one has catagorized it as விளையாட்டு/புதிர். One way it is correct, this topic has been a puzzle a long time.
( May be because of too many election accessing thamizmanam has become very slow :-)
இதில் கனிமொழி எழுதியது எத்தனை, இட்லி வடை இணைத்தது எத்தனை என்று கனிமொழி எழுதியதின் சுட்டி தந்திருந்தால் சரிபார்க்க வசதியாக இருந்திருக்கும்...
//பிள்ளை பத்தாம் வகுப்பு வந்ததும் பெற்றோர்கள் பல தியாகங்களுக்குத் தங்களைத் தயார் செய்துகொள்கிறார்கள். முதல் கட்டமாக வீட்டில் உள்ள தொலைக்காட்சிப் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குமுதம், ஆனந்த விகடன் நிறுத்தப்படுகின்றன. இந்து நாளிதழ் அவசியமாகிறது. அப்பாக்கள் வீட்டிற்கு நண்பர்களை அழைப்பதை நிறுத்திவிடுகிறார்கள். அம்மாக்கள் பொதுத் தேர்விற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நீண்ட விடுமுறைக்கு அலுவலகத்தில் விண்ணப்பிக்கிறார்கள்.
இதுவே 12ஆம் வகுப்புத் தேர்வாக இருந்தால் குடும்பமே தயிர்சாதம், பச்சை மிளகாய்க்கு மாறிக்கொள்கிறது. மிச்சப்படும் பணத்தை கணக்கு, ஆங்கிலம், ஃப்ரெஞ்ச், கம்ப்யூட்டர் சயின்ஸ், கெமிஸ்ட்ரி, ஃபிசிக்ஸ், practicals என்று சிறப்புப் பாட ஆசிரியர்களுக்குக் கொடுத்து சிறப்பு வகுப்புகளுக்கு அனுப்புகிறார்கள். சிறப்பு வகுப்புகள் காலை சுமார் ஆறு அல்லது ஐந்தே முக்கால் மணிக்குத் துவங்கி, பள்ளி நேரங்களில் 'பிரேக்' விட்டு மாலை மீண்டும் கூடி இரவு 10, 11க்கு முடியும்......
//
ம்... இப்படி இருக்க மாணவனுக்கும் அவன் சார்ந்திருக்கும் குடும்பத்திற்கும் முதலில் விழிப்புணர்ச்சி வேண்டும், எத்தனை குடும்பங்களுக்கு இந்த விழிப்புணர்ச்சி இருக்கின்றது, இந்த விழிப்புணர்ச்சிக்கு பின்புலமாக இருப்பது எது? எப்படி வந்தது இந்த குடும்பங்களுக்கு மட்டும் விழிப்புணர்ச்சி?
வசதி படைத்த விவசாய குடும்பங்களிலும் இன்றும் வயலுக்கு மருந்தடிச்சாச்சா? நேத்து வாங்கிட்டு வந்த பால்டாயில் எரவாணத்துல சொறுவியிருக்கு பார்த்து எவனாவது மருந்தடிச்சி நம்ம தாலியறுக்க போறானுங்க என்று எச்சரித்துவிட்டு இன்னைக்கு செய்முறைத்தேர்வில் என்ன வரும் என்று பார்த்துக்கொண்டே ஓடும் மகனை எங்கே போறான் ஒம்மொவன் அவசரமா என்று தகப்பனிடம் கேட்கும்போது என்ன எளவோ படிக்கிறானாம், படிக்கிறான் என்று கூறும் குடும்பங்களுக்கு என்ன பதில், அந்த மாணவன் இந்த so called புத்திசாலியாக இருக்காமலிருப்பதற்கு அந்த குடும்பம் மட்டும் காரணமா அல்லது 2000 வருட நம் சமூகம் காரணமா?
ஓரிரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களின் படிப்பே தம் வாழ்க்கையாக கேபிள் டிவி, குமுதம், விகடனையெல்லாம் நிறுத்திவிட்டு இரவெல்லாம் கண்விழித்து படிக்கும் மகனுக்கு தேநீர் போட்டு கொடுக்கும் விழிப்புணர்வு கொண்ட பெற்றோர்களுக்கு மத்தியில் பல பிள்ளைகள் பெற்று சமூகம் கையில் கொடுத்த தொழிலை செய்து தம் பிள்ளைகளுக்கு மேலே குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்காமலேயே 85%, 90% எடுக்கும் மாணவன் தயிர் சாத சூழலில் படிப்பிற்காக மொத்த குடும்பமே தாங்கியதால் 95% எடுக்கும் மாணவனை விட எந்த விதத்தில் குறைந்தவன்?
1991ல் கம்ப்யூட்டர் சயின்ஸ் குரூப் எடுக்கப்போறேன் என்றவனுக்கு யாரிடமோ ஓடிப்போய் இப்படி சொல்றானே மகன் என்ன செய்யலாம் என கேட்க கம்ப்யூட்டரெல்லாம் மாமி வீட்டு பசங்க படிக்க வேண்டிய படிப்பு, அதெல்லாம் படிச்சா பாம்பே, டெல்லி னு தான் வேலைக்குப் போகனும் நம்மூரிலே ஒன்னும் கெடைக்காது எனவே பயாலஜி குருப்பே எடுடா என்று கூறிய படித்த வேலைக்கு செல்லும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவரோட விழிப்புணர்சிக்கும் 9வது படிக்கும் போதே IIT, IIM என்று சொல்லி வளர்க்கும் பெற்றோரின் விழிப்புணர்ச்சிக்கும் நம் சமுதாயம் காரணமில்லையா?
//அவர்களது ஆரம்ப மற்றும் உயர்நிலைப் பள்ளியிலேயே தரமான கல்வி கொடுக்கப்பட்டும், கிட்டத்தட்ட LKG, UKG யிலிருந்து ஆரம்பித்து 14 வருடங்கள் ஒரே கல்விநிறுவனத்தில் படித்தும், அத்தனை வருட இடைவெளியில்கூட சக மேல்சாதி(என்றழைக்கப்படுகின்ற) மாணவனுக்குச் சரியாக தன்னை வளர்த்துக்கொள்ள முடியாமல் +2 முடித்ததும் மேலே படிக்க இட ஒதுக்கீடு வேண்டுமானால் இவர்கள் எதை சாதிக்கப் போகிறார்கள்?
//
இதிலிருந்து என்ன சொல்ல வருகின்றீர் அதாவது so called புத்திசாலித்தனம் பிறப்பினால் வருகிறதா? பிறப்பினால் வருகிறது என்பதற்கு ஏதேனும் ஆதாரம் இருக்கின்றதா?? நம் so called புத்திசாலித்தனத்திற்கு குடும்ப சூழல், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி பேருதவி புரிகின்றது, தயிர்சாத குடும்ப சூழலை பிறரால் உருவாக்க முடியாத இந்த இந்த இடைவெளி தான் காரணம்..
//படிப்பவனின் மெத்தனமும் ஒருபக்கம் இருக்கட்டும்
//
எந்த மாணவனும் தனக்கு இட ஒதுக்கீடு இருக்கின்றது என்பதற்காக மெத்தனமாக இருப்பதில்லை, 90% வாங்கும் திறன் உள்ள மாணவன் எனக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது என்பதற்காக மெத்தனமாக 80% வாங்குவதில்லை, 80% வாங்கினால் தனியார் பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும், அதே 90% வாங்கினால் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று முயல்வானேயொழிய யாரும் இவ்ளோ மதிப்பெண்கள் வாங்கினால் போதும் என்று சொல்லிக்கொள்வதில்லை.ம்... நல்லாதான் கற்பனை குதிரையை தட்டி விட்டிருக்கின்றார்.
//அட, கல்வியின் தரமும்
//
தரமா? எதைய்யா தரம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடதிட்டம், ஒரே மாதிரியான சாப்பாடு, ஒரே மாதிரியான விடுதி, ஒரே மாதிரியான ஆசிரியர், ஒரே மாதிரியான சூழல் என்று இருந்த கல்லூரிகளில் (என் கல்லூரியும் அதில் ஒன்று) படித்த மாணவர்களில் கட்-ஆப் மதிப்பெண்களில் 300க்கான மொத்த மதிப்பெண்களில் கிட்டத்தட்ட 50 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் உள்ளே வந்த மாணவர்கள் கல்லூரி விட்டு வெளியேறும் போது கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலாக வந்தனர், மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....
இதெல்லாம் அவர்களுக்கு தெரியாததா? புரியாததா? மீண்டும் மீண்டு இதை விளக்க வேண்டியதின் அவசியமென்ன என்று எனக்குள் வினவினேன், இதெல்லாம் தெரிந்தும் அறிந்துமே மீண்டும் மீண்டும் இந்த மாதிரி பிரச்சாரம் செய்யும் போது மீண்டும் மீண்டும் விளக்குவதில் சோர்ந்து விடக்கூடாது என்பதே இந்த பின்னூட்டத்தின் அவசியத்தை கூறுகின்றது.
'கணீர்' மொழி! :-)
//If I happen to recruit from these campuses any time in the future, I will make sure the candidate who gets through to my company is not a student who got in because of his caste certificate. Reservation candidates who can afford not to use the reservations can live in their own little world and work and thrive with their kind, I don’t want them around me...
//
மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ
இட்லி,
குழலி கேட்ட கேள்வியை தயவு செய்து நேர்மையாக எதிர்க்கொள்ளவும்.
இதில் எது கனிமொழி எழுதியது? எது நீர் சேர்த்தது என்பது அவர் கேள்வி.இதில் அர்த்தம் உள்ளது.
எல்லாமே கனிமொழி எழுதியது என்று உங்களால் சுட்டியோ ஆதாரமோ தர முடிந்தால் உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இல்லாவிட்டால் இது ஒரு கேவலமான செயல்பாடாகத்தான் வலைப்பதிவுலகில் பார்க்கப்படும்.
சாரி இட்லி,
உங்கள் மேல் சந்தேகம் இருந்தது.ஆனால் இந்தளவிற்கு இறங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.நன்றி.
இது எல்லாம் கனி(ர்)மொழி சொன்னது என்று நினைத்துக்கொண்டு முழங்கிய நண்பர்கள் இதைப்பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவேண்டுகிறேன்.
இப்பதிவில் indentation கொடுத்து தரப்பட்டிருப்பது மட்டுமே "தேவையில்லாத பாடங்கள்" என்ற தலைப்பில் கனிமொழி எழுதியது (http://www.thozhi.com/issue11/kanimozhi.php) என்பதை இட்லிவடை சார்பில் (அல்லது கனிமொழி சார்பில்) தெரிவித்துக்கொள்கிறேன். ஒரு நகைமுரணாக தோழி.காம் சமீபித்திய பதிப்பில் இடஒதுக்கீடு குறித்து ஊடகங்களும் இட்லிவடை போன்றோரும் உருவாக்கும் பிம்பங்கள் குறித்து சாடி எழுதியிருக்கிறார்.(http://www.thozhi.com/kanimozhi.php)
அ.த்.தி.ம்.பே.ர்..!!!
தேர்தல் ஜொரத்துல இதை எல்லாம் கண்டுகலையோன்னு கலங்கிட்டேன். வந்துட்டேள்.
உங்க வழக்கமான ஸ்டைல்ல ஆனா நச். என்ன பிரச்னை ஆகிப்போச்சுன்னா, கனிமொழி கருத்தை intend செஞ்சு கொடுத்திருக்கீங்ளோன்னோ, அதுக்குக் கீழ இருக்கற மத்ததெல்லாம் உம்மோட கருத்தாக்கும்னுனா நினைச்சேன். இங்க கொழந்தைகளெல்லாம் எல்லாமே கனிமொழி மொழியாக்கும்னு குழம்பறாளே. கொஞ்சம் வெவரமா சொல்லப்டாதா? அவா வெவரமா சொன்னாளே புரியாத மாதிரி நடிக்கறவா.
///
சாதி கூடாது என்று சொல்லிக்கொண்டே அதற்கான சலுகைகளுக்கு வாதாடுபவர்களின் உள்நோக்கமும் தெரிந்தே இருப்பதால்...
///
அதெல்லாம் சலுகையா?! என்ன தைரியம் உங்களுக்கு! திராவிட ராஸ்கல்கள் யாரும் வர்றதுக்குள்ள நைசா 'உரிமை'ன்னு மாத்திட்டு ஓடீருங்கோ!!
நான் கொடுக்க வேண்டிய சுட்டியை கொடுத்த தொப்புளானுக்கு நன்றி. சந்தேகத்தை நீக்க கனிமொழி சொன்னதை மேலும் கீழும் ஒரு கோடு போட்டு பச்சையாக கொடுத்துள்ளேன். ;-)
\\...மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....\\
ஒரு தலைமுறை (33 வருசம்) இந்த சூழலில் இருந்து வெளியே வர தடை ஏது இல்லாத பொதும், வெளியே வர மறுக்கும் போது, அதற்கு வழி/காரணம் கண்டறியாமல் இட ஒதுக்கிட்டை மட்டும் ஆதரிப்பது அரசியல் வா(வியா)திகள் விரித்த வலையில் படித்தவர்களும் விழுந்துவிட்டனர் என்பதை காட்டுகிறது. இது அடுத்த தலைமுறைக்கு நல்லதல்ல, எண்ணுடைய கரிசனத்தை ஆடு,நரி என்று பார்த்தால் அது தங்கள் இஷ்டம். ஸ்ரீதர்
அனானி மிக்க நன்றி..இதற்கெல்லாம் வருத்தப்படுவதை விட்டு பலநாள் ஆகிறது.
இட்லியின் இந்த வேலை எனக்கு அதிர்ச்சிதான்.இந்த பச்சை எழுத்து இப்பத்தானே வந்தது.முதல்ல வந்திருக்கணும்யா.
//சாதி கூடாது என்று சொல்லிக்கொண்டே அதற்கான சலுகைகளுக்கு வாதாடுபவர்களின் உள்நோக்கமும் தெரிந்தே இருப்பதால்...//
ஹி ..ஹி...
முத்து - மற்ற பதிவுகளை பார்த்தால் உங்களுக்கு புரிந்திருக்கும் ( உதாரணம் இந்திரகுமாரி திமுகவில் சேர்ந்த பதிவு ) அதிலும் intend செய்துதான் போட்டிருக்கிறேன். இனிமேல் 'இந்த' மாதிரி பதிவுகளை கட்டம் கட்டி போடுகிறேன்.
//மிக்க நன்றி இதனால் இழப்பு அந்த நிறுவனத்திற்கு தான், திறமையில்லாமல் இட ஒதுக்கீட்டில் படித்தவர்கள் தான் இன்று உலகம் பூராவும் மென்பொருள் தகவல் தொழில்நுட்பத்துறையில் புகுந்து விளையாடுகின்றனர் என்பது அன்னாத்தைக்கு பிரியுமோ இல்லையோ //
அப்பறம் ஏங்க்ணா இன்னும் இட ஒதுக்கீடு? புகுந்து விளையாடறவங்க ஏங்ணா இன்னும் சைட்லயே புகுந்து வெளயடறாங்க?
நன்றி இட்லி,
இந்த இன்டென்ட் இப்போதுதான் வந்தது.அதான் நான் டென்சன் ஆயிட்டேன்.
///
பிகு:
49.5 இட ஒதுக்கீட்டை மத்திய அரசு இத்துடன் நிறுத்திவிட கூடாது - ரானுவம், பாராளுமன்றம், சட்டசபை, அமைச்சர்கள், இந்திய கிரிகெட் அணி ஏன் வலைப்பதிவில் கூட கொண்டு வர வேண்டும்.
///
ரொம்ப டாங்க்ஸ் இட்லிவடை.
வலைப்பதிவு... ஹி.. ஹி... நாங்க திறமை காமிச்சாதான் கிடைக்கும்னு இருக்கச் சொல்ல தான் ஒதுக்கீடு கேப்போம். வலைப்பதிவு ஆத்தோட தண்ணி; நீயும் குடி, நானும் குடி, அள்ளிக் குடி மேட்டரு. . . அதுக்கெல்லாம் ஒன்னும் வேணாம் போ!
வேணும்னா, மேல்குடி இவ்ளோ சனம்தான் பதிவு வெக்கலாம்னு ஒரு லிமிடேசன் ரூல் வெக்கிலாம். அப்பவும் இந்த முகமூடிகளை எந்த கணக்குல சேர்க்க?..
///
Nowadays students are very clear/clever. If they belong to the forward community, their parents very clearly tell them about the future.
////
///
நம் குழந்தைகளுக்கு சாதி சொல்லித்தராமல் வளர்க்கத்தான் நினைக்கிறோம். ஆனால் எப்படி என்றுதான் புரியவில்லை.
///
///
சாதியை ஒழிக்க (சாதி சார்ந்த)இட ஒதுக்கீட்டை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?
////
ஹி.. ஹீ..
It's 'indent', not 'intend'.
//////////
இட்லி,
குழலி கேட்ட கேள்வியை தயவு செய்து நேர்மையாக எதிர்க்கொள்ளவும்.
இதில் எது கனிமொழி எழுதியது? எது நீர் சேர்த்தது என்பது அவர் கேள்வி.இதில் அர்த்தம் உள்ளது.
எல்லாமே கனிமொழி எழுதியது என்று உங்களால் சுட்டியோ ஆதாரமோ தர முடிந்தால் உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இல்லாவிட்டால் இது ஒரு கேவலமான செயல்பாடாகத்தான் வலைப்பதிவுலகில் பார்க்கப்படும்.
--
சாரி இட்லி,
உங்கள் மேல் சந்தேகம் இருந்தது.ஆனால் இந்தளவிற்கு இறங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.நன்றி.
--
இட்லியின் இந்த வேலை எனக்கு அதிர்ச்சிதான்.இந்த பச்சை எழுத்து இப்பத்தானே வந்தது.முதல்ல வந்திருக்கணும்யா.
//////////////
ஐயா முத்து! எத்தனை நாள்களாக இந்தப் பதிவு படித்துவருகிறீர்கள்? அதிலேயே பதிவின் வடிவம் புரிந்திருக்கவேண்டும்.
அது போகட்டும், அதற்குக் கீழே ஆங்கில வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியையும் intendல் மட்டும்தானே கொடுத்திருந்தார். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா? நிதானமாக யோசிக்கலாம்; அல்லது ஒருமுறை பதிவரை சந்தேகம் கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருக்கலாம். அதைவிட்டு இவ்வளவு ஆவேசமாக வார்த்தைகளை அடுக்க என்ன அவசியம்?
ஒத்த கருத்திருந்தால் கூழைக் கும்பிடுவது போடுவது. அல்லாத இடத்தில் வந்து அடுத்தவர் நேர்மையை கேள்வி எழுப்புவது. எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீர்கள்.
///
இது எல்லாம் கனி(ர்)மொழி சொன்னது என்று நினைத்துக்கொண்டு முழங்கிய நண்பர்கள் இதைப்பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவேண்டுகிறேன்.
///
ஆக, கருத்து கனிமொழியுடையதாக இருந்தால் ஒரு முழக்கமும், இட்லிவடையாக இருந்தால் *தங்கள்* கருத்து வேறுமாகப் பதிவுசெய்யப் படுமா? அது மேட்டரு! இப்பத்தான் தெளிவா தெரிஞ்சிடுச்சில்ல, இனி அடிச்சு ஆடுங்க..
குழலி அண்ணாவ்,
///
வசதி படைத்த விவசாய குடும்பங்களிலும் இன்றும் வயலுக்கு மருந்தடிச்சாச்சா? நேத்து வாங்கிட்டு வந்த பால்டாயில் எரவாணத்துல சொறுவியிருக்கு பார்த்து எவனாவது மருந்தடிச்சி நம்ம தாலியறுக்க போறானுங்க என்று எச்சரித்துவிட்டு இன்னைக்கு செய்முறைத்தேர்வில் என்ன வரும் என்று பார்த்துக்கொண்டே ஓடும் மகனை எங்கே போறான்....
ஓரிரண்டு பிள்ளைகள் பெற்று அவர்களின் படிப்பே தம் வாழ்க்கையாக கேபிள் டிவி, குமுதம், விகடனையெல்லாம் நிறுத்திவிட்டு இரவெல்லாம் கண்விழித்து படிக்கும் மகனுக்கு தேநீர் போட்டு கொடுக்கும் விழிப்புணர்வு கொண்ட பெற்றோர்களுக்கு மத்தியில் பல பிள்ளைகள் பெற்று சமூகம் கையில் கொடுத்த தொழிலை செய்து தம் பிள்ளைகளுக்கு மேலே குறிப்பிட்ட சூழலை ஏற்படுத்தி கொடுக்காமலேயே...
///
இவங்களெல்லாம் எங்கண்ணா இருக்காங்க? கிராமத்துல தானே. (நகரத்தில எவன் 10 பெத்து வெச்சிருககான், அத்தனைபேரும் பல்வெளக்கவே தண்ணி இருக்காதே. அப்படி மட்டும் இன்னி தேதில நகரத்தில ஒருத்தனுக்கு 10 பிள்ளை இருந்தா அதுக்கே அந்தாளை நாடு கடத்தணும்.) கிராமத்துக்கு ஒதுக்கீடு வேணும்னுதான் சொல்லியிருக்காங்களே.
மத்தபடி நகரத்துல 1,2 பெத்தவனுக்கு மட்டும் தொழில், குடும்பப் பிரச்சினையே இல்லையாக்கும். சரிதான்.
////
தரமா? எதைய்யா தரம், எல்லோருக்கும் ஒரே மாதிரியான பாடதிட்டம், ஒரே மாதிரியான சாப்பாடு, ஒரே மாதிரியான விடுதி, ஒரே மாதிரியான ஆசிரியர், ஒரே மாதிரியான சூழல் என்று இருந்த கல்லூரிகளில் (என் கல்லூரியும் அதில் ஒன்று) படித்த மாணவர்களில் கட்-ஆப் மதிப்பெண்களில் 300க்கான மொத்த மதிப்பெண்களில் கிட்டத்தட்ட 50 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் உள்ளே வந்த மாணவர்கள் கல்லூரி விட்டு வெளியேறும் போது கிட்டத்தட்ட ஒரே மதிப்பெண்கள் வாங்கியிருந்தனர், இட ஒதுக்கீட்டில் வந்தவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலாக வந்தனர்,
///
அதைத்தான் நாங்களும் கேக்கறோம். அந்த 5 வருஷத்துல வாங்குறத முதல் 14 வருஷத்துல ஏன் வாங்கலைன்னு. ஒரே ஸ்கூல், ஒரே பாடத் திட்டம், ஒரே வாத்தியார், ஒரே பென்ச், ஒரே சாக்பீஸ்...
////
மற்றவர்களுக்கும் தயிர்சாத சூழல் கிடைக்கும்போது இந்த so called புத்திசாலிகளைவிட அதிக மதிப்பெண்கள் பெறுவார்கள், அதே போல் தயிர்சாத சூழலில் மதிப்பெண்கள் வாங்கும் so called புத்திசாலிகள் மற்ற குடும்பங்களின் சூழலில் இருந்தால் தற்போது இவர்கள் வாங்கும் மதிப்பெண்களை விட குறைவாக வாங்கவும் வாய்புள்ளதை மறக்க கூடாது....
///
நல்லாத்தான் எடுத்துக் கொடுக்கறீங்க. அதைத்தாங்கண்ணே நாங்களும் சொல்றோம். துப்புக்கெட்ட அரசே, சாதியைப் பார்த்து கொடுக்காதடா, இட ஒதுக்கீடு. எவன் என்ன சோறு திங்கறான், எந்த சூழல்ல வளர்றான்னு பார்த்து பொருளாதாரத்துல கையாலாதவனுக்கு ஒதுக்கீடைக் கொடுன்னு. விளங்கிச்சா? விளங்கியும் விளங்காத மாதிரி நடிக்கிறீங்களா?
தெளிவா இட்லிவடையும் சொல்லியிருக்காரே.. நல்லா படிங்கண்ணா.
=====
* எல்லோருக்கும் கல்வியைக் கட்டாயப்படுத்தட்டும். விளிம்புநிலை மனிதர்களுக்கான இட ஒதுக்கீட்டை பொருளாதாரத்தைக் கருத்தில்கொண்டு (அரசு/தனியார்) ஆரம்பப் பள்ளியிலிருந்தே அவர்களுக்கு இலவசக் கல்வியை அளிக்கலாம்.
* உயர்கல்வியில் ஒதுக்கீட்டை எடுத்துவிடவேண்டும் என்பதுகூட அவசியமில்லை. ஆனால் அது கிராமப்புற பள்ளிகளில் படிக்கும்- எத்தனை முயன்றும் நகரத்துப் பள்ளி மாணவர்களோடு போட்டிபோட முடியாதவர்களுக்கு மட்டுமே அளிக்கப்பட வேண்டும்.
* மேல்படிப்பில் பொருளாதராத்தில் பின் தங்கி இருக்கும் மாணவர்களுக்கு பொருளாதார உதவிகளை அரசும், தனியார் கல்வி நிறுவனங்களும் ஒரு வரையறை வைத்து செய்யலாம்.
====
என்ன இட்லிவடை, இதை எல்லாம் கட்டம் கட்டி சொல்றதில்லையா? எனக்கு பெண்டு நிமிருது. :(
anony,
i made my point..that's all
anbulla anony,
இட்லி,
குழலி கேட்ட கேள்வியை தயவு செய்து நேர்மையாக எதிர்க்கொள்ளவும்.
இதில் எது கனிமொழி எழுதியது? எது நீர் சேர்த்தது என்பது அவர் கேள்வி.இதில் அர்த்தம் உள்ளது.
எல்லாமே கனிமொழி எழுதியது என்று உங்களால் சுட்டியோ ஆதாரமோ தர முடிந்தால் உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.
இல்லாவிட்டால் இது ஒரு கேவலமான செயல்பாடாகத்தான் வலைப்பதிவுலகில் பார்க்கப்படும்.
--
this is before indent....
சாரி இட்லி,
உங்கள் மேல் சந்தேகம் இருந்தது.ஆனால் இந்தளவிற்கு இறங்குவீர்கள் என்று எதிர்பார்க்கவில்லை.நன்றி.
--
this is after indent
இட்லியின் இந்த வேலை எனக்கு அதிர்ச்சிதான்.இந்த பச்சை எழுத்து இப்பத்தானே வந்தது.முதல்ல வந்திருக்கணும்யா.
//////////////
this is for others so separate...as simple as that...
ஐயா முத்து! எத்தனை நாள்களாக இந்தப் பதிவு படித்துவருகிறீர்கள்? அதிலேயே பதிவின் வடிவம் புரிந்திருக்கவேண்டும்.
so called indent should have come earlier...
அது போகட்டும், அதற்குக் கீழே ஆங்கில வலைப்பதிவில் இருந்து எடுக்கப்பட்ட பகுதியையும் intendல் மட்டும்தானே கொடுத்திருந்தார். அதை நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லையா?
earlier comment applies
நிதானமாக யோசிக்கலாம்; அல்லது ஒருமுறை பதிவரை சந்தேகம் கேட்டுவிட்டு பதிலுக்காகக் காத்திருக்கலாம். அதைவிட்டு இவ்வளவு ஆவேசமாக வார்த்தைகளை அடுக்க என்ன அவசியம்?
clearly explained
ஒத்த கருத்திருந்தால் கூழைக் கும்பிடுவது போடுவது. அல்லாத இடத்தில் வந்து அடுத்தவர் நேர்மையை கேள்வி எழுப்புவது. எத்தனை பெரியார் வந்தாலும் திருந்த மாட்டீர்கள்.
///
good joke..thanks...every individual can make their judgement by seeing the happenings.i agree with you.
இது எல்லாம் கனி(ர்)மொழி சொன்னது என்று நினைத்துக்கொண்டு முழங்கிய நண்பர்கள் இதைப்பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவேண்டுகிறேன்.
///
ஆக, கருத்து கனிமொழியுடையதாக இருந்தால் ஒரு முழக்கமும், இட்லிவடையாக இருந்தால் *தங்கள்* கருத்து வேறுமாகப் பதிவுசெய்யப் படுமா? அது மேட்டரு! இப்பத்தான் தெளிவா தெரிஞ்சிடுச்சில்ல, இனி அடிச்சு ஆடுங்க..
another joke..point is whether this is kanimozhi' article or not...it was giving an impression that it has been written by kanimozhi.
//அப்பறம் ஏங்க்ணா இன்னும் இட ஒதுக்கீடு? புகுந்து விளையாடறவங்க ஏங்ணா இன்னும் சைட்லயே புகுந்து வெளயடறாங்க?//
ரொம்ப அப்பாவி போலத்தான் பேசறீங்க!!
இடஒதுக்கீட்டினாலதானே புகுந்து விளையாட முடிஞ்சது! இல்லேன்னா, ஒரு ஓரமா உட்கார்ந்து வேடிக்கைதானே பார்த்திருப்போம்?
சென்னையில இருக்கும் பெரும்பாலான சாஃப்ட்வேர் கம்பெனிகளில் பாருங்க! அப்ரைசல் பண்ணும்போது அவாள்லாம் எப்படி மத்தவாளோட விளையாடறான்னு தெரியும்.
samiyo ...idly ivalavu naala idly vadai kudithinga
idly,vadai,satini,halwaa......yellam seethu kudukiringa
naala thampa irruku ummoda mixing
kulzhi n muthu mattum illana intha halwaa enakum seethu keedachu irrukum
-Swamy red bull
சாதியை ஒழிக்க (சாதி சார்ந்த)இட ஒதுக்கீட்டை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது?
"நச்"!!!
இப்படி எல்லாவற்றிற்கும் 'அவாளையே' குத்தம் சொல்லிக் கொண்டிராமல், கொஞ்சம் தன்நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அநாவசிய ஆத்திரங்களைக் குறைத்தால், இட ஒதுக்கீடும் வேண்டாம்; ரத்த அழுத்தமும் வராது.
தவறாக எண்ண வேண்டாம்.
அண்ணாவ் என்று விளித்திருக்கும் அன்பு அனானிமஸ் தம்பி/தங்கையே
என் பின்னூட்டத்தை பாதி கூட படிக்காத அவசரத்துடன் பின்னூட்டியிருப்பது புரிகின்றது, கொஞ்சம் முழுசா படிச்சி தான் பாருங்களேன் அட நான் என்னதான் எழுதியிருக்கேன்னு படிச்சி பாருங்களேன்,
பொருளாதாரத்திற்கும் so called புத்திசாலித்தனத்திற்கும் தொடர்பில்லை பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருக்கும் பலரால் so called புத்திசாலித்தனத்திற்கு தேவையான தயிர் சாத சூழலை உருவாக்கி தரமுடியாத நிலை... ஓரிரு விதிவிலக்குகளை தவிர இதற்கு காரணம் இத்தனை காலமாக இருந்த நம் சமூக கட்டமைப்பு என்பதில் எனக்கு மாற்று கருத்து இல்லை.
முத்துவின் மீதான வாய்ஸ் ஆப் விங்க்ஸ் குற்றச்சாட்டு சற்றும் யோசிக்காமல் வைத்துள்ளது, முத்து மட்டுமல்ல, நானும் இந்த கட்டுரையை படிக்கும் போது கனிமொழி எழுதியது போன்ற தோற்றத்தினையே தந்தது, மேலும் முதலில் வந்துள்ள சில பின்னூட்டங்களும் இதே கண்ணோட்டத்தில் வந்தவைகளே...
//முத்துவின் மீதான வாய்ஸ் ஆப் விங்க்ஸ் குற்றச்சாட்டு சற்றும் யோசிக்காமல் வைத்துள்ளது,//
???
உங்களது குறிப்பிட்ட ஒரு கருத்து குறித்து:
//மருத்துவ மேல்படிப்பில் இங்கே சாதியின் பொருட்டு சாதிக்கமுடியாமல் போன பெண் மருத்துவருக்கு, அமெரிக்கா போனதும் நூற்றுக்கணக்கான ஆய்வுப் பேப்பர்களை சமர்பிக்கமுடிகிறது- அங்கே மருத்துவத் துறைக்கு பெரும் பங்களிக்க முடிகிறது என்றால் நஷ்டம் யாருக்கு?//
நிஜமாகவா? அதுதான் காரணமா? அமெரிக்காவில் NIHன் கடந்த வருட பட்ஜெட் 28 பில்லியன் டாலர்கள். அதற்கு ஈடான ஆராய்ச்சி மூலதனத்தை அளிக்கும் நிறுவனம் உலகத்தில் வேறு எங்கும் இல்லை. இது தவிர, ஒவ்வொரு மருந்துத் தயாரிப்புக்கும் 600-800 மில்லியன் டாலர்களை ஆராய்ச்சி, clinical trialsக்குள் பாய்ச்சும் மருந்து நிறுவனங்கள், மருத்துவக் காப்பீட்டை ஒரு வெற்றிகரமான லாபந்தரும் தொழிலாகச் செய்துவதும் காப்பீடு நிறுவனங்கள், மருத்துவர்கள் என்று 'ஆராய்ச்சி' என்பது science for the sake of science என்ற ஐரோப்பியக் காலகட்ட மனோபாவத்தையும் தாண்டி, ஒரு enterprise ஆகிவிட்டது; இவ்வளவு பெரிய இயந்திரத்தைச் செலுத்தத் திட்டமிடல் தேவைப்படுகிறது - இது ஒழுங்காக நடக்கும் அமெரிக்காவை, மேற்கு ஐரோப்பாவை, ஜப்பானை நோக்கி ஆர்வமுள்ளவர்கள் படையெடுக்கிறார்கள் - அவ்வளவு தான், இங்கே வருபவர்கள் அனைவரும் இது தெரிந்து வருபவர்கள்தான். இட ஒதுக்கீட்டினால் பாதிக்கப்பட்டு இங்கே ஓடி வந்து பேப்பர்களை அச்சடித்துத் தள்ளுகிறேன் என்பதெல்லாம் வெறும் சப்பைக்கட்டு வாதம். Quota system அமெரிக்காவில் இல்லாதனால்தான் அவ்வளவு முன்னேறியிருக்கிறது என்று இன்னுமொரு வாதத்தை முன்வைத்தால், தனது வாணிகத்துக்கு இடையூறாயிருப்பவர்களை நேர்த்தியாகக் கையாண்டு வாணிகத்தைப் பெருக்கி வளமாயிருந்த சோழர் காலத்து வாழ்க்கைமுறையையும் தற்போதைய அமெரிக்க வாழ்க்கைமுறையையும் வேண்டுமானால் ஒப்பிடலாம்.
இந்தியாவின் மொத்த pharmaceutical industryயின் மதிப்பு சில பில்லியன் டாலர்கள். அமெரிக்காவில் பெரும் மருந்து நிறுவனங்கள், தங்களது ஒன்றிரண்டு மாத்திரைகளின் விற்பனை மூலமேயே அதை வெகு சுலபமாகத் தாண்டுகின்றன. இந்தியாவின் foreign reserve நூறு பில்லியன் டாலர்களோ சற்று மேலோ என்று படித்த நினைவு; 2002ல் pet productsக்கு அமெரிக்கர்கள் செலவழித்த தொகை 32 பில்லியன் டாலர்கள். எல்லாம் பணம், market-driven economy; அறிவியல் ஆராய்ச்சி உட்பட.
பணம், ஆராய்ச்சிக்கான/வேலைக்கான வசதிகள், அதிக வாய்ப்புகள் - எனக்குத் தெரிந்து, இங்கே வருபவர்களுக்கு இதுதான் பிரதான காரணங்கள். கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து, ஏன் சில மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இங்கே வந்து படிப்பவர்கள், தங்கிவிடுபவர்களையெல்லாம் என்ன சொல்ல? அங்கேயும் இட ஒதுக்கீடு கொடுத்து பிழைப்பைக் கெடுத்து துரத்திவிட்டார்களா என்ன?
//'....நஷ்டம் யாருக்கு?"//-- இதுதான் கேள்வி!
திரு. 'சன்னாசி'யின் பதில் அதற்கு வரவில்லையே!
முந்தைய பகுதியைத் தூக்கிக் கொண்டு வந்தது போல இருக்கிறதே!
All who oppose reservations, Please sign in the below petition.
Thanks
Sa.Thirumalai
http://www.petitiononline.com/obcrev/petition.html
I challenge the concerned jokers to go ahead with 50% Reservation for not only students but also for teaching staff. Its better that Government builds one more IIT and IIM and call them RIIT and RIIM (R stands for you know what) and let others live in peace and maintain their standards. RIIT and RIIM may be put under AICTE for added glory. It will be wiser for the government to offer the best of education from primary education and make them face the world rather than give them feel of artificial security by reservation.
Naam Arjun Raknewala sab Yudh nahi jeeet saktein
aur IIT IIM koi Kurushetra bi nahi hein
Na is Arjun ke paas koi Krishn bhi hai
Paritranaya sadhunam vinasaya Sathuskratham
Dharma samsdha banarthaya sambavami yuge yuge
Tora Tora Tora
கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.
IITs and IIMs will remain Institutions of the government by the government and for the government. One day MHRD may passa resolution stating that each MP is entitled for an IIT or IIM seat as the MPs are serving the nation. On the contrary take the case of BITS Pilani. In the year 2000, BITS Pilani put up a campus at DUBAI. In the year 2004, BITS Pilani commissioned a campus at Goa. In the year 2007 BITS Pilani is spearheading a campus at Hyderabad. Name one IITor IIM which broke the governmental shell and did something like BITS Pilani could do. Every one knows the famous IIM and IIT wanting to set up a Sing apore Campus. Well the song was over long back. We are left only with the National Anthem.
AICTE Punched by Court Orders
The Madras High Court, in an interim direction relating to the regulatory jurisdiction of the AICTE and the UGC over deemed universities, has instructed the former to issue a public notice advising students to attend classes.
Reserving its final order, a bench comprising Chief Justice A P Shah and Justice Prabha Sridevan said the AICTE in its advertisement should mention that students must return to their colleges, since failure to attend classes would result in their losing an academic year.
It must be published in English and Indian language newspapers, the judges said.
The bench indicated that orders would be pronounced in the third week of May and observed that all deemed universities must take prior permission from the UGC before starting new courses.
The AICTE could be part of the inspection team mandated to visit deemed universities, the judges added.
Post a Comment