கேள்வி:- மானியம் வழங் கினால் மண்எண்ணை விலை குறையுமா?
பதில்:- மானியம் வழங்கி னால் மண்எண்ணை விலை குறையத்தானே செய்யும்.
கே:- முந்தைய தேர்தல் கருத்துக்கணிப்புகள் அ.தி.மு.க.வுக்கு சாதகமாகவும், தற்போதைய கருத்துக்கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாகவும் மாறி மாறி வருகிறதே?
ப:- நாங்கள் 7 மாதங்களுக்கு முன்பே கணித்து விட்டோம். பத்திரிகைகளில் வருவது கருத்துக்கணிப்புகள் அல்ல. ஏற்கனவே கணித்த கருத்துகள் கடந்த 3 வாரமாக எங்களுக்கு சாதகமாக வருகின்றன. கருத்துக்கணிப்புகளை பார்த்து கூட்டணிக்கட்சி தோழர்களும், தி.மு.க. தோழர்களும் மெத்தனமாக இருந்துவிடக்கூடாது.
கே:- மத்திய மந்திரி தயாநிதி மாறன் டி.டி.எச் விவகாரத்தில் சிக்கி இருக்கிறாரே?
ப:- அவர் மீது பொறாமையினாலும், எரிச்சலினாலும் சொல்கிறார்கள். உருப்படியான குற்றச்சாட்டு எதுவும் இல்லை. இவர் அவரிடம் சொல்லி இருக்கிறார். அவர் இவரிடம் சொல்லி இருக்கிறார். அவ்வளவுதான்.
இது தொடர்பாக தயா நிதி மாறன் வழக்கு தொடர்ந்திருக்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டால் நானே நடவடிக்கை எடுப்பேன். இந்த கருணாநிதி எப்போதும் தயவு தாட்சண்யம் பார்க்க மாட்டான். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தயாநிதி மாறனை எனது பேரனாக கருதமாட்டேன். ஒரு அடிப்படை உறுப்பினரை போன்றே நடத்தப்படுவார்.
ஆனால் அந்த குற்றச்சாட்டில் எந்த ஆதாரமும் இல்லை. வேண்டுமென்றே தேர்தல் நெருங்க நெருங்க இப்படிப்பட்ட திசை திருப்பும் குற்றச் சாட்டுகளை சொல்கிறார்கள். அதே போன்று என் மீது சாதி மோதல் குற்றச்சாட்டையும் சுமத்தி இருக்கிறார்கள். உசி லம்பட்டியில் இலக்கியரீதி யாக பதில் சொன்னேன். அதில் எந்த உள்நோக்கமும் இல்லை. முக்குலத்தோருக்கும், தலித்துகளுக்கும் இடையே கலகம் ஏற்படுத்த பேசியதாக கூறுகிறார்கள்.
மதுரையில் இருக்கும் பெரிய தேவர் சிலையினை குடியரசுத் தலை வராக இருந்த வி.வி.கிரியை அழைத்து வந்து நான் திறந்து வைத்தேன். கமுதி, உசிலம் பட்டி உள்பட 3 இடங்களில் தி.மு.க. ஆட்சியில் கல்லூரி கள் கட்டப்பட்டது. வன்னி யர்களை மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தபோது அதனை ஏற்றுக்கொண்டு அத்துடன் சேர்த்து சீர்மர பினரையும் மிகவும் பிற்படுத் தப்பட்டோர் பட்டியலில் இணைத்து அவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்ததே தி.மு.க. ஆட்சி தான்.
அதே போன்று டாக்டர் அம்பேத்கார் பெயரால் முதன் முதலில் சட்ட பல்கலைக் கழகம் சென்னையில் அமைத்ததும் தி.மு.க. ஆட்சியில்தான். அண்டை மாநிலமான மராட்டிய மாநிலத்தில் கூட அம்பேத்கார் பெயரில் பல் கலைக்கழகம் அமைக்க அறி வித்து பணி நிறுத்தப்பட்ட போது அமைக்க வலியுறுத்தி தி.மு.க. சார்பில் அம்மாநில கவர்னருக்கு தந்தி அனுப்பப் பட்டது. ரூ.4 கோடி செலவில் சென்னையில் முக்கியமான இடத்தில் அம்பேத்காருக்கு மணி மண்டபம் அமைத்ததும் தி.மு.க. ஆட்சியில் தான். மேலே கூறிய இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே அவர்களுக்கு தெரியும். தலித் இட ஒதுக்கீடு 16 சதவீதமாக இருந்ததை 18 சதவீதமாக உயர்த்தி மேலும் தனியாக ஒரு சதவீதம் மலைவாழ் மக்களுக்கு ஒதுக்கிக் கொடுத்ததும் தி.மு.க. ஆட்சியில்தான்.
கே:- அண்டை மாநில தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளதேப அதே போல் தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் உயருமா?
ப:- மக்களின் ஆர்வத்தையும், ஆரவாரத்தையும் பார்க்கும்போது வாக்குப்பதிவு சதவீதம் குறைவாக இருக்காது என்று கருதுகிறேன்.
கே:- நடிகர் விஜயகாந்தும், பாரதீய ஜனதா கட்சியும் ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டில் யாருக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்கக்கூடாது என்று திட்டமிட்டு செயல்படுவதாக கூறப்படுகிறதே?
ப:- அதைப்பற்றி எனக்கு தெரியாது. கருத்துச் சொல்லவும் விரும்பவில்லை.
கே:- தி.மு.க.வின் மீது மேலும் பல பிரம்மாஸ்திரங்களை தொடுக்க இருப்பதாக கூறினார்களே?
ப:- மோகன அஸ்திரத்துக்கு அடிமைப்பட்டு பிரம்மாஸ்திரங்களை பிரயோகிப்பதாக கூறினார்கள். என் மீது தாக்கிய அஸ்திரங்களின் முனை மழுங்கிப்போய் விட்டது. அஸ்திரங்களால் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்பட்ட தில்லை. பாதிக்கப்பட்டதும் இல்லை. பாதிக்கப்படப் போவதும் இல்லை.
கே:- தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்படுமா?
ப:- கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை. இப்போதைய சூழ்நிலைகளை பார்க்கும்போது தி.மு.க. தனித்து ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள்தான் அதிகமாக இருக்கிறது.
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
Sunday, April 30, 2006
டாட்டா பற்றி - கலைஞர் பேட்டி
Posted by IdlyVadai at 4/30/2006 08:37:00 PM 4 comments
தேர்தல் மேடைகளை சுற்றி
கேரள கம்யூனிஸ்டு கட்சி யினர் தங்கள் மாநில நலனை மட்டும் பார்க்கிறார்கள். தமிழக கம்ïனிஸ்டுகள் அகில இந்திய, அகில உலக பார்வை கொண்டவர்கள். கேரளா வின் நன்மைக்கு, கேரள மக்கள் நல்வாழ்விற்கு குரல் கொடுக்கும் அச்சுதானந்தன் போல தமிழக மக்கள் நலனுக் காக சங்கரய்யா போன்றவர் கள் குரல் கொடுப்பதில்லை.
மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு கட்சியினர் கேரளாவில் காங் கிரசை எதிர்த்து போட்டியிடு கிறார்கள். இங்கு கூடலூர் வரை காங்கிரசுடன் ஒரே மேடையில் அமர்ந்து கட்டித் தழுவி பேசுகிறார்கள். 10 கிலோ மீட்டர் தாண்டி கேரள எல்லைக்கு போனால் காங் கிரசை திட்டி பேசுகிறார்கள். 10 கிலோ மீட்டருக்கு ஒரு கூட்டணி வைக்கும் கம்ïனிஸ்டுகளுக்கு எங்களை பற்றி பேச தகதி இல்லை. - வைகோ
தி.மு.க. தேர்தல் அறிக்கை முதல்பரிசை தட்டிச் சென்று விட்டது என்று கூட்டணி கட்சி தோழர்கள் கூட சொன்னார்கள். எல்லோருடைய எண்ணத்தை யும் உருட்டி உருவாக்கப்பட்டது தான் இந்த தேர்தல் அறிக்கை.
தனிப்பட்ட ஒருவரின் திறமை யின் அடையாளம் அல்ல. இது ஏழைகளின் கண்ணீரை தொட்டு, உழைப்பாளிகளின் வியர்வையை தொட்டு, வணிகர் களின் ஆலோசனையில், நடுத் தெருவில் நாதியற்று நிற்கும் ஏழைப் பெருங்குடி மக்களை எண்ணி எழுதப்பட்டது. தமிழகத்தின் எதிர்கால தலையெழுத்தை நிர்ணயிக்க எழுதப்பட்டது. - கலைஞர்
ஏழைகளின் வாழ்வு மலருவதற்காகவும், மக்களுக்காக உழைக்கவும் மீண்டும் அதிமுக அரசை ஆட்சியில் அமர்த்த வேண்டும். முந்தைய தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிய மனநிறைவு எனக்கு உள்ளது.
வரலாறு காணாத இயற்கை பேரழிவுகளும் எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்ட போதும் தொடர்ந்து சாதனை படைத்துள்ளோம். ஆட்சிப் பொறுப்பை ஏற்றவுடன் 32லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். - ஜெயலலிதா
எம்.ஜி.ஆரால் தொடங்கப் பட்ட சத்துணவு திட்டத்தில் முட்டையை சேர்த்தவர் கருணா நிதி. தற்போது தனது தேர்தல் அறிக்கையில் சத்துணவில் வாரத் திற்கு 2 முட்டை வழங்கப்படும் என அறிவித்து உள்ளார். அது உறுதியாக நிறை வேற்றப்படும்.
இதன் மூலம் தற்போது வாரத் திற்கு 3 கோடி முட்டை சப்ளை செய்யும் நீங்கள் 6 கோடியாக உங்களது வர்த்தகத்தை உயர்த்த முடியும். தொழில் வளர்ச்சி அடையும்.
எனவே கருணாநிதி தலைமை யிலான ஆட்சி அமைய நீங்கள் அனைவரும் காங்கிரஸ் வேட் பாளர் டாக்டர்.ஜெயக்குமா ருக்கு கை சின்னத்தில் வாக்களி யுங்கள். - மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முழுவதும் நான் 30 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப் பயணம் செய்துள்ளேன். 2-வது முறையாக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பிரசாரம் செய்து வருகிறேன்.நிறைய இடங்களில் நமது கட்சி கொடியை கட்ட விடாமல் தடை செய்கிறார்கள்.
சில இடங்களில் மேடை அமைப்பதற்கு தடை செய்கிறார்கள். 2 பெரிய கட்சிகளும் தேசிய முற்போக்கு திராவிட கழக வளர்ச்சிக்கு தடங்கல் ஏற்படுத்துகிறார்கள். நான் நேற்று கூட சென்னையில் பிரசாரம் செய்தேன். எனது பிரசாரத்தை மக்கள் பார்க்கக் கூடாது என்று தடை செய்கிறார்கள்.
நமது கட்சிக்கு வரும் கூட்டத்தை பார்த்து ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் பயப்படுகிறது. அதனால் நமக்கு எப்படி எல்லாம் தொல்லை கொடுக்க முடியுமோ அப்படியெல்லாம் கொடுக்கிறார்கள். - விஜயகாந்த்
முதல்அமைச்சர் ஜெயலலிதா மிகுந்த பண்பாடு மிக்கவர் ஆவார். நான் டெல்லி சென்று வந்தபோது அவரை விமானத்தில் சந்தித்தேன்.அப்போது மழைநீர் சேமிப்புதிட்டம் சிறப்பாக உள்ளது என்று கூறினேன்.உடனே அவர் முகமலர்ச்சியுடன் நன்றி தெரிவித்து பேசினார். இது அவருடைய உயர்ந்த பண்பாட்டினை விளக்குகிறது.
ஆனால் தி.மு.க தலைவர்களுக்கு மரியாதை என்பது தெரியவில்லை.தயாநிதிமாறன், வைகோவைப் பார்த்து ஒண்டிக்கு ஒண்டிவர்றியா என்று நாகரீகமற்ற முறையில் பேசி இருக்கிறார்.அவர் எம்.பி.ஏ படித்த பட்டதாரி என்கிறார்கள்.ஆனால் கற்றவர் இப்படி நாகரீகமற்ற வார்த்தைகளை உபயோகிப்பதா? - சரத்குமார்
வருகிற சட்டசபை தமிழக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் தனிப்பட்ட மெஜாரிட்டி கிடைக்காது. பா.ஜனதா கூட்டணியில் 18 கட்சிகள் இடம் பெற்று உள்ளன. இந்த கூட்டணிக்கு 25 இடங்கள் வரை கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. பா.ஜனதா கூட்டணி இல்லாமல் ஆட்சி உருவாக்க முடியாது.மின்னணு வாக்குபதிவில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. உக்ரைன் உள்பட சில நாடுகளில் இவ்வாறு முறைகேடுகள் நடந்து இருக்கிறது.சி.என்.என். இந்து போன்ற பத்திரிகைகள் நடத்திய கருத்து கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது என்று சொல்லி இருக்கிறார்கள்.ஆனால் கருணாநிதி 200 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று சொல்கிறார். அதை அவர் எப்படி சொல்கிறார். அவரால் எப்படி சொல்ல முடிகிறது. இதில் தான் ரகசியம் இருக்கிறது. இந்தியாவுக்கு இஸ்லாமிய தீவிரவாதிகள், மதம் மாற்றுகிறவர்களால் ஆபத்து இருக்கிறது. எனவே பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்.அவ்வாறு வெற்றி பெற செய்தால் சேலத்திற்கு சர்வதேச விமான நிலையம் கொண்டு வரபாடுபடுவோம். - சு.சுவாமி
பிகு: சென்னையில் நேற்று 105 டிகிரி வெயில் கொளுத்தியது இன்றும் வெயில்தாக்கம் இருக்கும் என்று வானிலை மையம் அறிவிப்பு
Posted by IdlyVadai at 4/30/2006 01:29:00 PM 3 comments
Friday, April 28, 2006
பொறாமையை திருப்பிபோடு !
மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தேர்தல் பிரச்சாரத்தை சன் டிவி சற்று முன் நேரடியாக ஒளிபரப்பினார்கள். அதில் பேசிய தயாநிதி மாறன் தினகரன் பத்திரிக்கையை ஒரு ரூபாய்க்கு தருவதால் மற்ற பத்திரிக்கைக்கு பொறாமை. அவர்களுக்கு என் பதில் 'பொறாமை' என்ற வார்த்தையை திருப்பி போடுங்கள் என்றார். எனக்கு என்ன சொன்னார் என்று புரியவில்லை உங்களுக்கு ?
( நல்ல வேளை பில்கேட்ஸுக்கு தமிழ் தெரியாது )
Posted by IdlyVadai at 4/28/2006 09:18:00 PM 8 comments
மீண்டும் சோனியா !
அகில இந்திய காங்கிரஸ் தலைவி சோனியாகாந்தி கடந்த 25-ந்தேதி தமிழகம் வந்தார். புதுவை, மதுரை, சென்னை கூட்டங்களில் பேசி தி.மு.க., காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு திரட்டினார். அதை தொடர்ந்து சென்னை கூட்டத்தில் கருணாநிதியும் சோனியாவுடன் பங்கேற்றார்.
இரண்டாவது கட்டமாக மே 5-ந்தேதி சோனியா மீண்டும் தமிழகம் வருகிறார்.தூத்துக்குடி, நெல்லை, கோவை கூட்டங்களில் பேசு கிறார். தி.மு.க., காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.
பிரதமர் மன்மோகன் சிங் 4-ந்தேதி சென்னை வருகிறார். மீனம்பாக்கம் எதிரில் உள்ள மைதானத்தில் நடக்கும் பிரசாரக்கூட்டத்தில் பேசுகிறார். கருணாநிதியும் இக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
சோனியா பேச 3 இடங்களிலும் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. அதே போல் சோனியாவின் வலது பக்கத்தில் கலைஞர், இடது பக்கத்தில் தயாநிதி மாறனுக்கும் காங்கிரஸ் ஊடுருவ முடியாத நாற்காலிகள் அமைக்கப்படுகிறது.
Posted by IdlyVadai at 4/28/2006 03:10:00 PM 6 comments
போட்டுத்தாக்கு
டாடாவை மிரட்டியவர்கள் தாத்தாவை மிரட்டமாட்டார்களா?. - விசு ( டி.ராஜேந்தர்க்கு போட்டியா )
30 ஆண்டுகளுக்குப் பிறகு, சென்னையில் நேற்று 108 டிகிரி வெயில் வறுத்தெடுத்தது. - செய்தி ( தேர்தல் பிரச்சரத்தை பார்த்தாலே தெரிகிறது )
அ.தி.மு.க, தி.மு.க 2 பேரும் தவறு செய்கிறார்கள். அவர்களின் தவறுகளை தெய்வம் கேட்கும். எனக்கு தெய்வமும், மக்களும் தான் துணை. இந்த ஒரு முறை எனக்கு வாய்ப்பு கொடுங்கள். ஒரு தடவை ஓட்டை மாற்றிப் போடுங்கள். - விஜயகாந்த் ( தமிழகத்தில் காங்கிரஸ் 3 - முறையும், திமுக - 4 முறையும் அதிமுக - 5 முறையும் ஆட்சி அமைத்துள்ளன, தெய்வமே! )
செங்கல்பட்டில் பரபரப்பு பிரசார வேன் கவிழ்ந்து பா.ஜனதா வேட்பாளர் படுகாயம் - செய்தி ( ஆள் இல்லாட்டி மாட்டு வண்டி தான் குடைசாய்யும், பிரச்சார வேனுமா ? )
வாக்குறுதிகளை நிறைவேற்றும்படி தி.மு.க..வுக்கு பா.ம.க. குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும் - டாக்டர் ராமதாஸ் ( அட ராமா, முதல்ல ஆட்சியை பிடியுங்க )
நடிகர் சங்கிலி முருகன் அ.தி.மு.க.வில் இணைந்தார் - செய்தி ( நிஜ சங்கிலி )
ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ பேசுவதையும், விடுதலை சிறுத்தைகள் அமைப்புத் தலைவர் தொல்.திருமாவளவன் பேசுவதையும் ஒளிபரப்பக் கூடாது என்று எங்களை மிரட்டுகிறார்கள். - விண் "டிவி' தலைவர் தேவநாதன ( ராஜ் டிவியும் அப்படிதான் முன்பு சொன்னார்கள், அப்புறம் பல்டி அடித்தார்கள். அப்போ நீங்க ? )
நூறு கோடி கொடுத்து இழுப்பதாக கூறும் நடிகர் யார் என்பதை கருணாநிதி கூற வேண்டும். இல்லையென்றால் தகவல் அறியும் உரிமை சட்டப்படி வழக்கு தொடர்ந்து கூற வைப்பேன் - நடிகர் சரத்குமார் ( தெரிந்தால் என்ன செய்வதாக உத்தேசம் )
Posted by IdlyVadai at 4/28/2006 02:15:00 PM 3 comments
2006 - அதிக பெண் வேட்பாளர்கள் !
தமிழ்நாடு முழுவதும் 3,725 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில் தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி ஆவணங்கள் சமர்ப்பிக்காததாலும், தேவையான தகவல்கள் இல்லாததாலும் 800-க்கும் மேற்பட்டோரின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
தமிழக தேர்தல் களத்தில் தற்போது, 2,586 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் 160 பேர் பெண்கள் ஆவர். 1952 முதலான தமிழக தேர்தல் வரலாற்றில் இந்த அளவிலான அதிக எண்ணிக்கையில் பெண் வேட்பாளர்கள் போட்டியிட்டதே கிடையாது. இதற்கு முன்பு 1999-ல் 101 பெண்களும், 1996-ல் 156 பெண்களும், 2001-ல் 109 பெண் வேட்பாளர்களும் போட்டியிட்டதே இதுவரை அதிக பெண் வேட்பாளர்கள் போட்டியிட்ட தேர்தல்களாக இருந்தன.
இதுபோல், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் அதிகபட்சமாக 26 வேட்பாளர்கள் போட்டிக் களத்தில் உள்ளனர். ஒரத்தநாடு தொகுதியில் மிகக் குறைந்த அளவாக, 4 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிடுகிறார்கள்.
2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகளும், அவை போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையும்:-
தேசிய கட்சிகள்
1. இந்திய கம்யூனிஸ்டு- 10
2. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு- 13
3. இந்திய தேசிய காங்கிரஸ்- 48
4. பகுஜன் சமாஜ் கட்சி- 164
5. பாரதீய ஜனதா கட்சி- 225
6. தேசியவாத காங்கிரஸ் கட்சி- 12
தமிழக மாநில கட்சிகள்
1. அ.தி.மு.க- 188
2. தி.மு.க- 132
3. ம.தி.மு.க-35
4. பா.ம.க-31
மற்ற மாநிலங்களின் கட்சிகள்
1. பார்வர்டு பிளாக்- 62
2. மதச்சார்பற்ற ஜனதா தளம்-1
3. ஐக்கிய ஜனதா தளம்-28
4. ஜனதா கட்சி-5
5. லோக் ஜனசக்தி கட்சி- 27
6. ராஷ்டிரீய லோக் தளம்- 8
7. புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி-2
8. சமாஜ்வாடி கட்சி-62
9. கம்யூனிஸ்டு (எம்.எல்)(எல்)-10
பதிவு பெற்ற அங்கீகரிக்கப்படாத கட்சிகள்
1. தேசிய முற்போக்கு திராவிட கழகம்-232
2. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி-9
3. அகில பாரத இந்து மகாசபா-11
4. அகில இந்திய வெள்ளாளர் பேரவை-2
5. பாரதீய திராவிட மக்கள் கட்சி-4
6. இந்திய நீதிக் கட்சி-2
7. இந்தியன் விக்டரி கட்சி-1
8. ஜெபமணி ஜனதா-3
9. லோக் பரித்ரன் கட்சி- 6
10. மகாராஷ்டிரவாடி கோமந்தக்-1
11. புதிய நீதிக்கட்சி-4
12. சக்தி பாரத தேசம்-2
13. தமிழ்நாடு ஜனநாயக காங்கிரஸ்- 18
14. ஐக்கிய இந்திய கம்யூனிஸ்டு- 4
15. விவசாய அன்பு கட்சி- 2
சுயேச்சை வேட்பாளர்கள்-1,222
மொத்த வேட்பாளர்கள்- 2,586
அது சரி, எவ்வளவு பேர் டெபாசிட் இழக்க போகிறார்கள் ?
தகவல் உதவி: தினத்தந்தி
Posted by IdlyVadai at 4/28/2006 12:15:00 PM 4 comments
Thursday, April 27, 2006
சோ, கலைஞர் பதில்கள்
சோ பதில்கள்:
கேள்வி: பத்து கிலோ அரிசி இலவசம் என்று அறிவித்த ஜெயலலிதா மந்திரி சபையை கூட்டி முடிவெடுத்து அறிவித்திருக்க வேண்டும் என்று கருணாநிதியும், ராம தாசும் விமர்சிப்பதில் நியாயம் உள்ளதா?
பதில்:- மந்திரி சபையை கூட்டி முடிவெடுப்பதற்கு இது இன்றைய தமிழக அரசின் திட்டம் இல்லை. அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் அ.தி.மு.க. என்ன செய்யும் என்பதை பற்றிய அறிவிப்பு இது. இதற்கும் இன்றைய மந்திரி சபைக்கும் என்ன சம்பந்தம்ப ராமதாஸ், கலைஞர் ஆகியோரின் விமர்சனத்தில் அர்த்தம் இல்லை.
கே:- கலைஞர் கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்கிறார். ஜெயலலிதாவோ கிலோ அரிசி ஒரு ரூபாய் எழுபத்தைந்து காசுகள் என்று போட்டி அறிவிப்பு வெளியிடுகிறார்களே மக்கள் எதை விரும்புவார்கள்?
ப:- அத்துடன் முடியவில்லை. அதை ஜெயலலிதா வின் அறிவிப்பை பார்த்த வுடன் கலைஞர் அரிசி விஷயத்தில் மேலும் சலுகைகள் அறிவிக்கப்படும் என்று ஒரு உப வாக்குகுறுதியை அறிவித்திருக்கிறார். இப்படி யாக இது வாக்குறுதி என்பதை மீறி வம்பு சண்டையாகி வருகிறது. இதில் மக்களுக்கு நம்பிக்கையை விட சுவராஸ்ய மும், பொழுது போக்கும்தான் அதிகம்.
கே:- மத்தியில் மானிய குறைப்பு செய்து வரும் சிதம்பரம் தமிழகத்தில் இரண்டு ரூபாய்க்கு அரிசி கொடுப்பது சாத்தியம் என்கிறாரே?
ப:- அவர் கூறியுள்ளதை அப்படியே ஏற்பதனால் மாநில அரசுகள் பணக்கார அரசுகள் அவர்களிடம் நிதி குவிந்து கிடக்கிறது. மத்திய அரசோ ரொம்பவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது.வருமானமே கிடையாது என்பதை ஏற்க வேண்டும். ஏற்க முடியாத வாதம் என்றால் சிதம்பரத்தின் கூற்றும் ஏற்க முடியாததே.
கே:- தி.மு.க. கூட்டணி ஓட்டுக்களை விஜயகாந்த் கட்சி பறிக்குமா?
ப:- விஜயகாந்த் கட்சி எவ்வளவு ஓட்டுக்களை பெறப்போகிறதோ தெரியாது. அது எவ்வளவானாலும் சரி அதில் இரு கழக ஓட்டுக்களும் இருக்கும் என்று நினைக்கத்தான் இடமிருக்கிறது.
கலைஞர் பதில்கள்:
கேள்வி:- விஜயகாந்தின் வரவு, உங்கள் கட்சியின் வாய்ப்புகளை எந்த அளவு பாதிக்கிறது?
பதில்:- எந்த வரவு செலவுகளும் எங்கள் கட்சியைப் பாதிக்காது. ஏனென்றால், இது கொள்கை அடிப்படையில் குறிக்கோள் தவறாமல் நடைபோடுகின்ற ஒரு இயக்கம். அதனால் தான் இதை நாங்கள் கட்சி என்று சொல்வதை விட திராவிட இயக்கம் என்று குறிப்பிடுகிறோம்.
கே:- கருத்துக்கணிப்பு களின்படி பார்த்தால் தி.மு.க.வின் ஓட்டுக்களைத்தான் விஜயகாந்த் கட்சி பிரிப்பதுபோல் இருக்கிறது. தி.மு.க.வினர் விஜயகாந்த் பக்கம் சாய்கிறார்களா?
ப:- தி.மு.க.வினர் யார் பக்கமும் சாய மாட்டார்கள். ஒன்றிரண்டு தலையாட்டி பொம்மைகள் வேறு பக்கம் சாயலாம். அது மொத்த தி.மு.க.வைக் குலைத்து விடாது.
கே:- டி ராஜேந்தர், வைகோ, விஜயகாந்த், சரத்குமார் இவர்களில் உங்களோடு நெருக்கமாக இருந்து இப்போது தேர்தலில் உங்களை எதிர்ப்ப வர்களின் பிளஸ் மற்றும் மைனஸ்களை வரிசைப்படுத்துங்கள். இவர்களில் யாருடைய நடவடிக்கை உங்களுக்குத் திருப்தி தருகிறது?
ப:- விஜயராஜேந்தர்-அவர்தான் இன்றைக்கு எங்கள் அணியில் இல்லாவிட்டாலும், என்னை அவரது அரசியல் குரு என்பதை மறக்காமல் இருக்கிறார்.
கே:- ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்து வைகோவை அணி மாறாமல் தடுத்து நிறுத்தியிருக்கலாம் என்று இப்போது தோன்றுகிறதா?
ப:- அப்பாடா! நல்ல வேளை! மடியிலே கட்டிக் கொண்டு இராமல் தப்பித்துக் கொண்டோமே என்றுதான் இப்போது தோன்றுகிறது.
கே:- வைகோவின் பிரச்சாரம் தி.மு.க.வைப் பாதிக்கும் என்று நினைக்கிறீர்களா?
ப:- பாதிக்காது, மாறாக வளர்க்கும்.
Posted by IdlyVadai at 4/27/2006 11:26:00 AM 2 comments
Wednesday, April 26, 2006
டாட்டாவிற்கு தயாநிதி மாறன் மிரட்டல்
இன்று தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த இந்த செய்தி இவ்வளவு பெரிசாக ஆகும் என்று நான் நினைக்கவில்லை. ஜெயா டிவிக்கு அல்வா போல் ஒரு நியூஸ் என்று மற்றும் தோன்றியது. அதே போல் இன்றைய ஜெயா செய்திகளில்
"டாடா நிறுவன டி.டி.ஹெச் சேவையை அபகரிக்க, மத்திய அமைச்சர் தயாநிதிமாறன் தீட்டிய சதித்திட்டம் அம்பலம் : தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பேராபத்து ஏற்படும் என தொழிலதிபர்கள் அச்சம்" என்று இந்த செய்திக்கு முக்கியதுவம் கொடுத்து அதற்கு சோவிவின் விமர்சனம் என்று தூள் கிளப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
( சன் டிவி இந்த செய்தியை வெளியே கொண்டுவரகூடாது என்பதற்கு நிறைய முயற்சிகள் மேற்கொண்டதாக தெரிகிறது )
தினமணி செய்தி:
செட்-டாப் பாக்ஸ் மூலம் வீடுகளுக்கு நேரடியாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப வகைசெய்யும் டி.டி.எச். திட்டத்தை டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க மத்திய தகவல், தொழில்நுட்பத் துறை அமைச்சர் தயாநிதி மாறன் நிர்பந்தம் செய்து, மிரட்டல் விடுத்தது உண்மையா என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.
டி.டி.எச். டி.வி. திட்டத்தை தனது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கக் கோரி டாட்டா குழுமத்தை நிர்பந்தம் செய்து, மிரட்டியதாக தயாநிதி மாறன் மீது மதிமுக பொதுச்செயலர் வைகோ தேர்தல் பிரசாரத்தின்போது புகார் கூறியிருந்தார்.
இப்புகார் உண்மைதானா என்பதை அறிந்துகொள்வதற்காக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை கேள்விப் பட்டியலை அனுப்பியிருந்தது. இதற்கு உடனடியாக டாட்டா குழுமத்திடமிருந்து பதில் வந்தது.
"நீங்கள் அனுப்பியுள்ள கேள்விகளில் கடுமையான புகார்கள் இடம்பெற்றுள்ளன. இப்புகாரை நாங்கள் மறுக்கவில்லை. ஆனால் இப்புகார் குறித்து கருத்து ஏதும் தெரிவிக்க விரும்பவில்லை.' என்று அந்த பதில் கடிதத்தில் குறிப்பிடப்பட்டது.
இப்புகாரை டாட்டா குழுமத்தினர் மறுக்காத காரணத்தால், புகார்களை அவர்கள் உறுதி செய்ததாகவே முடிவுசெய்ய வேண்டியுள்ளது.
இப்புகார்கள் குறித்து கோவையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த தயாநிதி மாறனிடம், நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் தொடர்புகொண்டு கருத்து கோரப்பட்டது.
டாட்டா டி.டி.எச். டிவி. திட்டத்தை, டாட்டா குழுமத்திடமிருந்து அபகரிக்க முயன்றதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து நேரடியாக பதில் அளிப்பதை தயாநிதி மாறன் தவிர்த்தார். மாறாக புகார் கூறிய வைகோவை இகழ்ந்து பேசினார்.
நேர்மையுடனும் நெறிமுறைகளுடனும் செயல்பட்டுவரும் டாட்டா குழும விவகாரத்தில் தயாநிதி மாறன் சிக்கிவிட்டதாக கருதப்படுவதால் இது பெரும் பிரச்சினையாக உருவாகும் என்பது நிச்சயமாகிவிட்டது.
தயாநிதி மாறனுக்கு எதிராக கூறப்பட்டுள்ள புகார் தொடர்பான விவரம்:
சர்வதேச டி.வி. ஜாம்பவான் ரூபர்ட் முர்தோச்சின் ஸ்டார் டி.வி.யுடன் இணைந்து, டாட்டா குழுமம் டி.டி.எச். டி.வி. திட்டத்தை மேற்கொண்டது. இத்திட்டம் பல கோடிக்கணக்கான மதிப்புடையது. இத்திட்டத்தில் டாட்டா குழுமத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட் மர்தோவின் பங்கு 20 சதவீதமாகும்.
இது ஒருபுறம் இருக்க, தயாநிதி மாறன் குடும்பம் டி.டி.எச். உரிமத்தை அண்மையில் பெற்றது. ஆனால் இதை நடத்துவதற்கேற்ற வல்லமை படைத்த பங்குதாரர் நிறுவனத்தை அது தேடிவந்தது. ஸ்டார் டி.வி.யைப் போன்று சன் டி.வி. நிறுவனமும் (தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரர் கலாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமானது) 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்திருக்க இயலும்.
எனவே 80 சதவீதம் வல்லமை படைத்த பங்குதாரரையும் அதற்கேற்ற பணபலம் படைத்த நிறுவனத்தையும் சன்.டி.வி. நிறுவனம் தேடவேண்டிய அவசியம் நேரிட்டது.
எனவே டாட்டா குழுமம் மற்றும் ரூபர்ட் முர்தோச் இணைந்து நடத்திவந்த டி.டி.எச். டி.வி. திட்டத்தை கைக்கொள்ள தயாநிதி மாறனும் சகோதரர் கலாநிதி மாறனும் ஆர்வம் காட்டினர்.
இதுவிஷயமாக டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரடியாக விவாதிக்க அனுமதி கோரினார் கலாநிதி மாறன்.
டாட்டா-ஸ்டார் டி,டி,எச். திட்டத்தில் 33 சதவீத பங்கை அளிக்குமாறு ரத்தன் டாட்டாவிடம் கலாநிதி மாறன் கோரினார். அத்துடன் நிர்வாக உரிமைகளையும் அளிக்குமாறு வலியுறுத்தினார். சுருக்கமாக கூற வேண்டுமெனில் பங்குதாரராக மட்டுமின்றி ஏராளமான சலுகைகளையும் கோரினார்.
இக்கோரிக்கைகளைக் கேட்டு ரத்தன் டாட்டா அதிர்ச்சி அடைந்தார். டாட்டா குழும திட்டத்தில் பங்குதாரர் என்ற கோரிக்கைக்கே இடமில்லை என அவர் மறுத்துவிட்டார்.
இதையடுத்து இந்த விவகாரத்தில் அமைச்சர் தயாநிதி மாறன் தலையிடத் தொடங்கினார். 33 சதவீத பங்குதாரராக அனுமதிக்கக் கோரி ரத்தன் டாட்டாவை நிர்பந்தம் செய்யத் தொடங்கினார் தயாநிதி மாறன்.
இதேவேளையில், ரூபர்ட் முர்தோச்சையும், தயாநிதி மாறன் தொடர்புகொண்டு 33 சதவீத பங்குதாரராக அனுமதி கோரினார். ஆனால் இக்கோரிக்கையை ரூபர்ட் முர்தோச் நிராகரித்துவிட்டார்.
டாட்டா நிறுவனமும் முர்தோச்சின் ஸ்டார் நிறுவனமும் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்க ஒப்புக்கொண்டுவிட்டதாக தயாநிதி மாறன் கூறிவந்தார். ஆனால் அவர் கூறியது பொய்யானது என்பது பின்னர் உறுதியானது.
இதற்கிடையில், தனது நிர்பந்தத்துக்குப் பணியாத டாட்டா குழுமத்தை மிரட்டத் தொடங்கினார் தயாநிதி மாறன். டாட்டா டெலிகாம் திட்டத்தை சீர்குலைத்துவிடுவேன் என மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. மேலும் டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு பல அனுமதிகளை நிறுத்திவைத்ததாகவும் தெரிகிறது.
இப்புகார்கள் குறித்து சன் டி.வி.க்கு தலைமை வகிக்கும் கலாநிதி மாறனிடம் பதில் கோரி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் சார்பில் கேள்விகள் அனுப்பிவைக்கப்பட்டன.
"எங்களிடம் ஏற்கெனவே டி.டி.எச். உரிமம் உள்ளதால், நாங்கள் எதற்காக டாட்டா குழுமத்தை நிர்பந்திக்க வேண்டும்' என கலாநிதி மாறன் பதில் அனுப்பியுள்ளார். டாட்டா குழுமத்துக்கு தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் புகார்களை. டாட்டா குழுமம் மறுக்கவில்லை. எனவே இப்புகார்கள் தொடர்பாக இனி பதில் அளிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்.இந்தியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விகள்
டாட்டா குழுமத்துக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அனுப்பிய கேள்விப் பட்டியல்
டி.டி.எச். திட்டத்தில் பங்குதாரராக சேர்க்க அனுமதி கோரி, டாட்டா குழுமத்தை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியதாகக் கூறப்படும் புகார் உண்மையா என்பதை உறுதி செய்ய. டாட்டா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாட்டாவுக்கு நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் அனுப்பியிருந்த கேள்விப் பட்டியல் விவரம்:
1. டி.டி.எச். திட்டத்தில் மூன்றில் ஒரு பங்கு அனுமதி கோரி ரத்தன் டாட்டாவை கலாநிதி மாறன் நேரடியாகச் சந்தித்தது உண்மையா?
2. ஸ்டார் டி.வி.யின் பீட்டர் முகர்ஜியும் டாட்டா குழுமத்தின் இஷாத் ஹுசைனும் இந்த விவகாரம் தொடர்பாக சென்னையில் கலாநிதி மாறனைச் சந்தித்து அதிக அளவு பங்குகளை அளிக்க முடியாது எனக் கூறியது உண்மையா? வேண்டுமானால் 20 சதவீதம் அளவுக்கு மட்டுமே பரிசீலிக்கலாம் என டாட்டா குழுமத்தின் சார்பில் கூறப்பட்டதா?
கலாநிதி மாறனின் கோரிக்கையை ரத்தன் டாட்டா ஏற்காதது, தயாநிதி மாறனுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்தது உண்மையா? அதற்காக டாட்டாவிடம் அதிகார தொனியில் தயாநிதி மாறன் பேசினாரா?
ரத்தன் டாட்டாவிடம் தொலைபேசியில் தயாநிதி மாறன் தொடர்புகொண்டு டி.டி.எச். திட்டத்தில் 33 சதவீத பங்குகளை சன் டி.வி.க்கு அளிக்குமாறு கோரியது உண்மையா?
தனது கோரிக்கையை ஏற்காவிடில் டாட்டா டெலிகாம் வர்த்தகத்தை சீரழித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தாரா?
டாட்டா டெலிகாம் நிறுவனத்துக்கு வழக்கமாக அளிக்கவேண்டிய அனுமதிகளை தயாநிதி மாறன் நிறுத்திவைத்தாரா?
ரத்தன் டாட்டா, ரூபர்ட் முர்தோச் ஆகியோர் 33 சதவீத பங்குகளை வழங்க ஒப்புக்கொண்டுவிட்டதாக கலாநிதி மாறன் கூறியது உண்மையா? இதை டாட்டா குழுமம் மறுத்துவிட்டது.
ரூபர்ட் முர்தோச்சை மூன்றில் ஒரு பகுதி பங்குகளை வழங்கக் கோரி தயாநிதி மாறன் மிரட்டல் விடுத்தாரா?
இப்பிரச்சினை தொடர்பாக பிரதமரை, ரத்தன் டாட்டா சந்தித்து முறையிட்டது உண்மையா? டாட்டா தொடர்பான பிரச்சினைகளை கவனிக்க செயலர்கள் குழுவை பிரதமர் நியமித்தாரா?
டி.டி.எச். திட்டத்தில் பங்குகள் எதையும் அளிக்க இயலாது என தயாநிதி மாறனுக்கு, டாட்டா கடிதம் அனுப்பியது உண்மையா?
இதுபோன்ற வர்த்தக விவகாரங்களை வெளிப்படையாக விவாதிக்கும் வழக்கம் டாட்டா குழுமத்துக்கு இல்லை எனக் கூறப்படுவது உண்மையா?
இக்கேள்விகள் அனைத்துக்கும் டாட்டா குழுமத்திடமிருந்து தெரிவிக்கப்பட்ட சுருக்கமான பதில், "இக்கேள்விகளில் இடம் பெற்றுள்ள உண்மைகள் அனைத்தையும் நாங்கள் மறுக்கவில்லை' என்பதுதான். எனவே இனி இக்கேள்விகளுக்கான உண்மையைத் தெரிவிக்க வேண்டியது தயாநிதி மாறன்தான்.
New Indian Express link இங்கே
துக்ளக் ஆசிரியர் சோ கருத்து :
"டாடாவையே தயாநிதி மாறன் மிரட்டியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதிலிருந்து ஒன்று தெளிவாகிறது. நாட்டில் யாருமே தொழில் நடத்தக் கூடாது, தங்களைத் தவிர வேறு யாருமே இருக்கக் கூடாது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அதற்காகத்தான் இவ்வாறு மிரட்டிப் பணிய வைக்க முனைகிறார்கள்.
தயாநிதி மாறன் அமைச்சராக இருந்து கொண்டு பதவியைத் துஷ்பிரயோகம் செய்கிறார் என்று ஏற்கனவே துக்ளக்கில் நான் எழுதியிருந்தேன். இதுதொடர்பாக ஏற்கனவே சில தொழிலதிபர்கள் புகார்கள் கூறியவண்ணம் இருந்தனர். ஆனால் அவர்கள் பகிரங்கமாக வெளியில் சொல்லப் பயப்பட்டார்கள். ஆனால் டாடா இதற்கு எல்லாம் அப்பாற்பட்டவர்.
நாட்டிலேயே கண்ணியமான, மிகவும் நேர்மையான, மிகப் பெரிய வர்த்தகத்தை நடத்தி வருகிறவர்கள் டாடா குழுமத்தினர். அவர்கள் விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு எதையும் செய்தார்கள் என்று புகார் கூட வந்ததில்லை.
அப்படிப்பட்ட நிறுவனத்தையே மிரட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால் மத்தியில் ஆட்சியில் பங்கு வகிக்கின்ற திமுக எவ்வளவு தூரம் அந்த வாய்ப்பை துஷ்பிரயோகம் செய்து வருகிறது என்பது நிரூபணமாகிறது.
டாடா நிறுவனத்தின் டிடிஎச் திட்டத்தில் 33 சதவீத பங்குகளை அதாவது மூன்றில் ஒரு பங்கை, அதுவும் அடிமாட்டு விலைக்கு தர வேண்டும், நிர்வாக அதிகாரம் தர வேண்டும், முக்கிய முடிவுகளை எடுக்கிற அதிகாரங்களும் தர வேண்டும் என்று தயாநிதி மாறனும், கலாநிதி மாறனும் கேட்டுள்ளனர். ஆனால் இதை ஏற்க டாடா நிறுவனம் மறுத்து விட்டது.
இதையடுத்து தயாநிதி மாறன், டாடாவை அழைத்து உங்களது பிசினஸையே தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.
அப்புறமும், அவர் மசியவில்லை. இதனால் டாடா நிறுவனத்தின் பங்குதாரரான முர்டோச்சை அழைத்து பேசியுள்ளார் தயாநிதி மாறன். ஆனால் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. மறுத்து விட்டார்.
முர்டோச் உலகின் முன்னோடி தொழிலதிபர்களில் ஒருவர், டிவி, பத்திரிக்கை என பல்வேறு தொழில்களை நடத்துபவர். எத்தனையோ நாட்டு அமைச்சர்களை பார்த்தவர். ஆனால் அந்த உலக அமைச்சர்களுக்கெல்லாம் பெரிய அமைச்சராக நடந்து கொண்டுள்ளார் தயாநிதி மாறன்.
தமிழகத்தில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், கலைஞர் குடும்பத்தினர் வேறு என்னதான் செய்ய மாட்டார்கள்?. இங்கே ஆட்சிப் பொறுப்பு இல்லை என்பதுதான் அவர்களுக்கு பெரிய தடைக்கல்லாக உள்ளது. வேறு யாரும் பிசினஸ் செய்யக் கூடாது, எதைச் செய்தாலும் அதில் 50 சதவீதம் ஷேர் கொடு என்று மிரட்டலாம்.
இப்படித்தான் கேபிள் டிவிக்காரர்களை மிரட்டியே சுமங்கலி கேபிள் விஷன் நிறுவனத்தை பெரிதாக்கினார்கள். பின்னர் ராஜ் டிவி மீதும் புகார் வந்தது.
அரசியல்வாதிகள், பதவிக்கு வந்த பின்னர் அதிகார துஷ்பிரயோகம் செய்வார்கள். ஆனால் தங்களுக்காக மட்டுமல்லாது, மற்றவர்கள் வாழக் கூடாது, நாங்கள் மட்டும்தான் இருக்க வேண்டும். பிசினஸ் என்றால் அது எங்களது குடும்பம் மட்டும்தான் என்று தயாநிதி மாறன் புறப்பட்டிருக்கிறார். இது மிகவும் விபரீதமான ஒரு விஷயம்.
பொருளாதார தாராளமயமாக்கல் என்கிறோம், தனியார் முதலீடுகளுக்காக மெனக்கெடுகிறது மத்திய அரசு. இதுகுறித்து மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும் தினம் தினம் ஏதாவது பேசி வருகிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் தொலைத்து விடுவேன் என்று தயாநிதி மாறன் போய்க் கொண்டிருக்கிறார்.
இவர்கள் தமிழகத்திலும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் விபரீதத்திற்குத் தடையே இல்லாமல் போய் விடும்.
வருகிற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட்டால், மத்தியில் இவர்களது செல்வாக்கு மங்கி விடும். தயாநிதி மாறன் டாடாவை மிரட்டும் அளவுக்கு வர முடியாது. சோனியா காந்திக்கு, தமிழக முதல்வர் மீது உள்ள கோபத்தின் காரணமாகவே, திமுகவுக்கு பெரிய செல்வாக்கு அளிக்கப்பட்டுள்ளது.
இவர்களுடைய செல்வாக்கு பெயரளவில்தான், ஓட்டளவில் இல்லை, தேர்தலில் மக்கள் ஆதரவு கிட்டவில்லை என்று மக்கள் காட்டி விட்டால், மத்தியிலும் இவர்களது செல்வாக்கு தானாகவே மங்கி விடும். அது நாட்டுக்கு நல்லது, இல்லையென்றால் யாரையும் வளர விட மாட்டார்கள், தமிழகத்தையும் மிரட்டுவார்கள்"
வைகோ கிளப்பிய புயல் :
டாடா நிறுவனமும், ஸ்டார் டிவி நிறுவனங்களின் அதிபருமான பெரும் தொழிலதிபர் ரூபர்ட் முர்டோச்சும் இணைந்து டிடிஎச் சேவையை இந்தியாவில் தர முடிவு செய்தனர். எந்தவித கேபிள் இணைப்பும் இன்றி சாட்டிலைட் டிவிகளை பார்க்கும் வகையிலான திட்டம் இது.
ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் முதலீட்டில் இந்த டிடிஎச் திட்டத்தை செயல்படுத்த டாடாவும், ஸ்டாரும் முடிவு செய்திருந்தன. இதில் டாடா நிறுவனத்தின் பங்கு 80 சதவீதம். ரூபர்ட்டின் பங்கு 20 சதவீதமாகும்.
இந்த இடத்தில்தான் சன் டிவி நிறுவனம் குறுக்கிட்டுள்ளது. ஏற்கனவே டிடிஎச் திட்டத்தை அமல்படுத்த உரிமம் பெற்று வைத்துள்ள சன் டிவி நிறுவனம், இத்திட்டத்தை செயல்படுத்துவதில் ஒரு சிக்கலை எதிர்கொண்டது.
அதாவது, டிவி நிறுவனத்தை நடத்தி வருவதால், சன் டிவி டிடிஎச் சேவையை நடத்த வேண்டும் என்றால் அத்திட்டத்தில் 20 சதவீத பங்குகளை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். மீதமுள்ள 80 சதவீத பங்குகளுக்கு வெளியாட்களைத் தேட வேண்டும்.
மேலும் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களையும் (குறைந்தது ரூ. 3000 கோடி என்கிறார்கள்) முதலீடாக போட வேண்டும். இதே பிரச்சினை காரணமாகத்தான் ஸ்டார் டிவி நிறுவனம் 20 சதவீத பங்குகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதமள்ள 80 சதவீதத்திற்காக இத்திட்டத்தில் டாடா நிறுவனத்தையும் சேர்த்துக் கொண்டது.
எதிர்காலத்தில் டிடிஎச் சேவைதான் நிலைக்கப் போகிறது என்பதால் தனக்கென தனியாக ஒரு டிடிஎச் சேவையை வைத்துக் கொண்டாக வேண்டும் என்று நினைத்த சன் டிவி, அதேசமயம், பல ஆயிரம் கோடியை முடக்க மனம் இல்லாமல், டாடாவின் திட்டத்தில் புகுந்து அதன் மூலம் பலன் பெற நினைத்தது.
இதையடுத்து முதலில் கலாநிதி மாறன் களம் இறங்கினார். டாடா நிறுவனத்துடன் தொடர்பு கொண்ட அவர் சன் டிவியையும் இதில் ஒரு பங்குதாரராக சேர்த்துக் கொள்ள வேண்டும், 33 சதவீத பங்குகளை தங்களுக்குத் தர வேண்டும், நிர்வாக உரிமையும் தர வேண்டும் மற்றும் இன்ன பிற சலுகைகளையும் தர வேண்டும் என்று அவர் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
கலாநிதி மாறன், நேரடியாக டாடாவிடம் தொலைபேசியில் இதுதொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதை உடனடியாக நிராகரித்து விட்டார் டாடா. எங்களுக்கு பங்குதாரர் யாரும் தேவையில்லை. இந்தத் திட்டம் முடிவாகி விட்டது. இதில் சன் டிவியை சேர்க்கவே முடியாது என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையடுத்து கலாநிதியின் தம்பியும், டிடிஎச் சேவை தொடர்பான அனுமதியைத் தரும் முக்கியத் துறையைக் கையில் வைத்துள்ளவருமான தயாநிதி மாறன் நேரடியாக களத்தில் இறங்கினார்.
அவரும் டாடாவுடன் பேசியுள்ளார். நெருக்குதல் தரும் வகையில் பேசியதால் அதிர்ந்து போயுள்ளார் டாடா.
இதேபோல ரூபர்ட் முர்டோச்சையும் தொடர்பு கொண்ட கலாநிதி இத்திட்டத்தில் 33 சதவீத பங்குகளுடன் பங்குதாரராக சன் டிவியையும் சேர்க்க வேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் ரூபர்ட் இதை மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து, எங்களது கோரிக்கையை ஏற்காவிட்டால், உங்களது டெலிகாம் பிசினஸை ஒன்றும் இல்லாமல் செய்து விடுவோம் என்று தயாநிதி மாறன் மிரட்டினார்.
மேலும் டாடா டெலிகாம் நிறுவனம் தொடர்பான பல்வேறு கோப்புகளை தயாநிதி நிறுத்தி வைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தொலைத்தொடர்புத் துறையில் தற்போது நிலவும் கடும் போட்டியான சூழலில் அமைச்சகத்தின் ஒப்புதல்கள், அனுமதிகள் உடனடியாக கிடைக்காவிட்டால் பெரும் நஷ்டம் ஏற்படும்.
இதை டாடா உணர்ந்திருந்தாலும் கூட, தயாநதி மாறனின் நெருக்கடிக்குப் பணிய மறுத்து விட்டார். என்ன வந்தாலும் சமாளிக்க அவர் தயாராகி விட்டார்.
இதுதான் வைகோ தெரிவித்த புகார்.
இந்தப் புகார் குறித்து சென்னையிலிருந்து வெளியாகும் ஒரு ஆங்கில நாளிதழ் டாடா குழுமத்திற்கு நேரடியாகவே கேள்விப் பட்டியல் ஒன்றை அனுப்பி வைத்தது.
அதில் தயாநிதி மாறன் மிரட்டல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
அதற்கு டாடா நிறுவன செய்தித் தொடர்பாளர் உடனடியாக பதில் அனுப்பியுள்ளார். அதில், உங்களது கேள்விகளுக்குப் பதில் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோ கருத்து மற்றும் வைகோ கிளப்பிய புயல் செய்தி உதவி: தட்ஸ் தமிழ்
ஒரு கோடி நஷ்ட ஈடு தினமணிக்கு தயாநிதி மாறன் நோட்டீஸ்: பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
ஜெ அறிக்கை:
வீடுகளுக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்யும் டிடிஎச் திட்டம் தொடர்பாக டாடா தொழில் குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடாவை மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மிரட்டியிருப்பதால் அவரை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என பிரதமரை தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தயாநிதி மாறன் தனது பதவி அதிகாரத்தை பயன்படுத்தி டாடா குழுமத்தை மிரட்டியிருப்பது பத்திரிகை புலனாய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
தனது பதவி மற்றும் கூட்டணி ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி தொழிலதிபர்களை மிரட்டி வரும் தயாநிதி மாறன் மத்திய அமைச்சர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர் என ஜெ. தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
சரத்குமார் பேட்டி
`டாட்டா' நிறுவனத்திடம் கலாநிதிமாறன் வியாபார ரீதியாக பேசியது என்றால் முறையாகும். அதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் மத் திய மந்திரி தயாநிதிமாறன் தங்களுக்கு அதிகபட்சமான `ஷேர்' வேண்டும் என கேட்டு மிரட்டி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை `டாட்டா' மறுக்கவில்லை.
எனவே பிரதமர் மன்மோகன்சிங் இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். தயாநிதிமாறன் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து இருந்தால் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்க வேண்டும்.
ரூ.2 லட்சம் கோடிக்கு அதிபதியாக இருக்கும் `டாட்டா'வையே தயாநிதி மாறன் மிரட்டுகிறார் என்றால் என்ன சொல்ல? தயாநிதி மாறனிடம் ஒரு தரம் கிடையாது. அரசியல் நாகரீகம் கிடையாது. அவருடைய சர்வாதிகார போக்கு மக்கள் மத்தியில் ஆழமாக பதிந்து விட்டது.
சுப்பிரமணிய சுவாமி
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் சுவாமி பேசுகையில், உலகப் புகழ் பெற்ற டாடா நிறுவனத்தை மிரட்டி பணிய வைக்க முயற்சித்த தயாநிதி மாறன், தனது அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். இது சாதாரண விஷயமல்ல, தண்டனைக்குரிய குற்றம்.
தயாநிதி மாறனின் நடவடிக்கை மிகவும் கேவலமானது. அவரது மிரட்டல் தொடர்பாக டாடா, பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார். எனவே தயாநிதி மாறன் அமைச்சர் பதவியில் தொடரக் கூடாது என்று கோரி நானும் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.
சன் டிவி நிறுவனத்தின் நிதி நிலை, எப்படி அது இவ்வளவு பெரிய நிறுவனமாக மாறியது, பயங்கரவாத அமைப்பு ஏதாவதுடன் அதற்கு தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் தனியாக விசாரிக்க வேண்டும்.
தவிர, தம்பி, அண்ணா இருவரும் சேர்ந்து பெரிய நிறுவனத்தை கேவலமாக பேசி மிரட்டியிருப்பது குறித்து சிபிஐ விசாரணைக்கும் உத்தரவிட வேண்டும்
மாறன் மறுப்பு:
தோல்வி பயம் அதிகமாகி, ஜெயலலிதா கூட்டணி இப்போது திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடத் துவங்கியுள்ளது.
டிடிஎச் குறித்து, நான் டாடா நிறுவனத்தை மிரட்டியதாக வந்த செய்தி அப்பட்டமான பொய் என்றும், இதுகுறித்து சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் எந்தப் புகாரும் கூறாத நிலையில் "தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', போன்ற ஏடுகள் வலிந்து வெளியிட்டுள்ள செய்தி, உள்நோக்கத்தோடு இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் என்பதை தெளிவாக்குகின்றன. இப்படி வெளியிடப்பட்ட செய்திக்காக அந்த ஏடுகளுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் என் சார்பில் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த ஏடுகள் கூட தெளிவாகக் குற்றம் சாட்டிட பயந்து, சட்டத்தின் சந்து பொந்துகளில் புகுந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியோடு யாருடைய நிர்ப்பந்தத்துக்கோ பயந்து செய்தியினை வெளியிட்டிருப்பது அந்தச் செய்தியினை ஆழ்ந்து படிப்பவர்களுக்கு தெளிவாகத் தெரியும்.
ஆதாரமற்ற இந்தச் செய்தியினைப் படித்துக் கொண்டு ஜெயலலிதா கரையேற நினைப்பதையே அவரது அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
டான்சி வழக்கின்போது தான் போட்ட கையெழுத்தையே தனது கையெழுத்து இல்லை என்று நீதிமன்றத்திலே பொய் சொல்லி, பின்னர் உச்ச நீதிமன்றம், ஜெயலலிதா மனசாட்சிபடி நடக்கவில்லை என்று கண்டித்த போதும், சிறுசேரி நிலத்தை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி ஆதாயத்துக்காக விற்றுவிட்டு, விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததும், அதைத் திரும்ப வாங்கிக் கொண்டதாக நாடகம் நடத்திய நிலையிலும் தனது பதவியை ராஜிநாமா செய்ய முன்வராத ஜெயலலிதா, இப்போது இல்லாத ஒன்றை சிருஷ்டித்து அதற்காக என்னை ராஜிநாமா செய்ய வேண்டும் என்று கேட்பது வேடிக்கை.
"தினமணி', "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்', ஏடுகளில் வெளியிடப்பட்ட செய்திக்குப் பின்னால் உள்ள சூத்ரதாரிகளை நான் அறிவேன்.
டிடிஎச் உரிமம் அளிக்கும் துறை என்னைச் சார்ந்ததில்லை. இச்சூழலில் செய்திகள் வெளியிட்ட ஏடுகள் மீது வழக்குத் தொடர இருக்கும் நிலையில் வழக்கும், வழக்கு முடிவும் உண்மைகளை நாட்டுக்கு உணர்த்திடும். நம் கவனத்தைத் தேர்தல் பணிகளில் இருந்து திசை திருப்பும் இந்த முயற்சிக்கு பலியாகாது நாம் நமது பணியினைச் தொடருவோம் தயாநிதி மாறன் வழக்கு !
தன்னைப்பற்றிய அவதூறு செய்திகளை வெளியிட தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி நாளிதழ்களுக்கு நிரந்தரத் தடைவிதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது தொடர்பாக தயாநிதி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில்,
தேர்தல் பிரசாரத்தின்போது னனக்குக் கூடும் கூட்டத்தை ஜீரணிக்க முடியாமல் அதிமுக மற்றும் மதிமுகவினரின் தூண்டுதலின் பேரில் இந்த அவதூறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தியில் சற்றும் உண்மை இல்லை.
பொய்யான ஒரு செய்தியை திரும்பத் திரும்பக் கூறுவதன் மூலம் அது உண்மையானதாகி விட முடியாது. என் மீது சேற்றை வாரி இறைக்க உதவும் கருவிதான் இது. இந்த செய்தியால் எனக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது.
இதுபோன்றஅவதூறான செய்திகளை வெளியிட இரு நாளிதழ்களுக்கும் நிரந்தரத் தடை விதிக்க வேண்டும். மேலும் இரு நாளிதழ்களும் தலா ரூ. 15 லட்சம் நஷ்ட ஈடு தர உத்தரவிட வேண்டும்.
ஜெயா டிவி தொடர்ந்து பொய்யான செய்தியை ஒளிபரப்பி வருவதால் அந்த டிவி நிறுவனமும் என்னைப் பற்றிய அவதூறான செய்திகளை ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும். மேலும் ரூ. 1 லட்சம் நஷ்ட ஈடாக அளிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.
Posted by IdlyVadai at 4/26/2006 04:06:00 PM 38 comments
அதிமுகவில் விசு - சன் டிவி மீது புகார்
முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் செவ்வாய்க்கிழமை இணைந்தார் திரைப்பட இயக்குநர் விசு.
கேள்வி:- அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வீர்களா?
பதில்:- விருப்பம் தெரிவித்துள்ளேன். தலைமை கழகம் அறிவித்தபின் பிரசாரம் தொடங்குவேன்.
கே:- திடீரென அ.தி.மு.க.வில் சேர காரணம் என்ன?
ப:- ஆரம்பத்தில் இருந்தே இதுபற்றி மனதில் எண்ணியிருக்கிறேன். திருப்பத்தூரில் அரட்டை அரங்கம் முடிந்ததும் சன் டி.வி.யுடன் எனக்கு இருந்த ஒப்பந்தம் முடிந்தது. அதன் பின்னர் அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ளேன்.
கே:- அரசியலில் உங்களால் சாதிக்க முடியுமா?
ப:- டிராவல் ஏஜென்சியில் ஊழியராக இருந்தேன். பின்னர் சினிமாவுக்குள் நுழைந்ததும் வீட்டில் ஏன் என்றனர். முயற்சி எடுத்தேன். சோரம் போகவில்லை. அரட்டை அரங்கத்தை தொடங்கினேன். ஏன் இப்படி என பலர் கேட்ட னர். அதிலும் நான் சோரம் போகவில்லை. பின்னர் அரசியலில் சேரலாம் என எண்ணினேன். கண்டிப்பாக இதிலும் நான் சோரம் போக மாட்டேன். ஏனென்றால் எனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறது.
கே:- அ.தி.மு.க. ஆட்சி உங்கள் பார்வையில்...
ப:- அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்காக தமிழகம் முழுவதும் சென்றுள்ளேன். 600 முதல் 700 வரை நிகழ்ச்சி நடத்தியுள்ளேன். நான் பார்த்த வரையில் ஒட்டு மொத்தத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் திருப்தியாக உள்ளனர்.
கே:- அடிக்கடி அரட்டை அரங்கம் மூலமாக என்ன செய்தீர்கள்?
ப:- நல்லது செய்ய வேண்டும் என நினைத்தேன். செய்துள்ளேன். நல்ல நிகழ்ச்சி மூலம் மக்களுக்கு சேவை செய்துள்ளேன். என் மூலமாக ரூ. 1 கோடி வரை நன்கொடை கொடுத்துள்ளேன். கல்வி அறக்கட்டளை அமைத்து சேவை செய்து வருகிறேன்.
அரட்டை அரங்கம் ஒரு இயக்கமாக மாறி 5 வருடம் ஆகி விட்டது. அதில் உள் ளூர் பிரச்சினைகளை சொல் கிறோம். சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அவற்றை சரிசெய்துள்ளனர். அதற்கு உதாரணம் பல உள்ளன. அதற்கு அரசுக்கு நன்றி என போட்டோம். அவற்றை `கட்' செய்தார்கள். எனினும் ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டு சத்தியத்துக்கு கட்டுப்பட்டு இருந்தேன். அரட்டை அரங்கம் ஒரு இயக்கம் என்பதை நிரூபிக்க வந்துள்ளேன். தி.மு.க.வை பொறுத்தவரை சரத்குமார் சொன்னது போல அது தி.மு.க. அல்ல. தயாநிதி, கலாநிதி முன்னேற்ற கழகம்.
கே:- அரட்டை அரங்கம் தொடர்ந்து நடத்தப்படுமா?
ப:- விசுவின் அரட்டை அரங்கம் என்பது விசு இறந்த பிறகும் தொடரும். சன் டி.வி. இல்லாவிட்டால் என்ன ஜெயா டி.வி. உள்ளிட்ட வேறு டி.வி.க்கள் உள்ளனவே!
தினமலர் பேட்டி
கேள்வி: அரட்டை அரங்கம் இனி என்னவாகும்?
பதில்: இன்னும் நான்கு வாரம்தான் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும்.
கேள்வி: அரட்டை அரங்கம் நிகழ்ச்சி இனி வராதா?
பதில்: சென்ற ஞாயிற்றுக்கிழமையே (23ம் தேதி) அரட்டை அரங்கம் நிகழ்ச்சிக்கான கான்ட்ராக்ட் முடிந்து விட்டது. இது தொடர்பாக ஏழு மாதத்துக்கு முன்பாகவே "சன் டிவி' நிர்வாகத்துக்கு தெரிவித்து விட்டேன். அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராததால் நான் என்ன செய்ய முடியும். வரும் நான்கு வாரத்துக்கான கேசட்டுகளை கொடுத்து விட்டேன்.
கேள்வி: நீங்கள் அ.தி.மு.க.,வில் இணைவது யாருக்காவது தெரியுமா? ஏன் இந்த திடீர் முடிவு?
பதில்: நான் அ.தி.மு.க.,வில் இணைவதை தெரிந்து கொண்ட "சன் டிவி' நிர்வாகத்தினர் அ.தி.மு.க.,வில் இணைய வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். மனிதனை மனிதனாக மதிக்கத் தெரியாதவர்கள் அங்கு உள்ளனர். "சன் டிவி'யால் அரட்டை அரங்கம் முன்னுக்கு வரவில்லை.
கேள்வி: எத்தனை ஆண்டுகளாக அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வந்து கொண்டிருக்கிறது.
பதில்: "சன் டிவி' ஆரம்பித்ததில் இருந்து அரட்டை நிகழ்ச்சி நடத்தி வருகிறேன். இதுவரை 601 வாரம் இந்நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
கேள்வி: பின்னர் எதற்கு இந்த பிரச்னை?
பதில்: "சன் டிவி'யில் வரும் அரட்டை அரங்கத்தால் தான் நான் வளர்ந்தேன் என சிலர் குற்றம் சாட்டினர். இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியது. நான் நானாகத் தான் வளர்ந்தேன். கலாநிதி மாறன் வளர்க்கவில்லை. சென்ற ஐந்து ஆண்டில் ஒரு முறை தான் கலாநிதி மாறனை பார்த்துள்ளேன்.
அரட்டை அரங்கம் நிகழ்ச்சி மூலம் சில பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். குறிப்பாக சில கிராமங்களின் குறைகளை இந்நிகழ்ச்சியில் காண்பித்த பின்னர், ரோடு போடும் பணி, குடிநீர் வழங்கும் பணி, பட்டா வழங்கும் பணிகள் போன்றவை வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் பிரச்னை தீர்ந்த விஷயத்தை அரட்டை அரங்கத்தில் "சன் டிவி' நிர்வாகம் காட்ட மறுத்தது. தொடர்ந்து இதுபோன்று நடந்ததால் எனக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. தவறு செய்யும் அதிகாரிகளை சுட்டிக் காட்டுவதுதான் என் பணி. அந்த அதிகாரி தவறை திருத்தி சரி செய்து விடுவார். ஆனால் சன் டிவியில் அது ஒளிபரப்புவதில்லை. அவ்வாறு ஒளிபரப்பினால், அது அ.தி.மு.க., அரசுக்கு சாதகமாகி விடும் என்ற அச்சத்தில் அவர்கள் ஒளிபரப்பவில்லை.
கேள்வி: "ஜெயா டிவி'யில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வருமா?
பதில்: "ஜெயா டிவி'யில் அரட்டை அரங்கம் நிகழ்ச்சி வந்தாலும் தவறு செய்யும் அதிகாரிகளை சுட்டிக்காட்டுவேன். என்னைப் பொறுத்தவரை அரட்டை அரங்கம் இனி "சன் டிவி'யில் வரக் கூடாது.
படம் உதவி: தினமலர்
Update: 26/4/06
கீழே படம் உதவி: தட்ஸ் தமிழ்
( இந்த படத்துக்கு நல்ல பின்னூட்டங்கள் வரவேற்க்கப்படுகின்றன:-)
Posted by IdlyVadai at 4/26/2006 10:30:00 AM 27 comments
Tuesday, April 25, 2006
போட்டுத்தாக்கு
இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கிலோ அரிசி 2 ரூபாய்க்கு வழங்க பிரதமர் தயாரா?'' - எல்.கே.அத்வானி ( அதை சாப்பிட மக்கள் தயாரா என்று யாருமே கேட்க மாட்டீர்களா ? )
சாலை, குடிநீர், மருத்துவ வசதி செய்யாமல் இலவச டி.வி.தருவதாக சொல்வதா? - வெங்கையா நாயுடு ( அது சரி, ஒரு காலத்தில் இந்தியா இந்தியா ஒளிர்கிறது என்று நீங்க ஜல்லி அடித்தீர்கள் )
காங்கிரசுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகளே இங்கே வென்று வந்திருக்கின்றன. எழுத்தும், நாவலும் போல இல்ல இது. அரசியல் கொஞ்சம் கடினம் தான். அதிகபட்சம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது...- திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியின் தி.மு.க., வேட்பாளரான கவிஞர் சல்மா ( கவிதை போல் கஷ்டம் என்று சொல்லுங்கள் )
சன் டிவியில் அரட்டை அரங்கம் நடத்தி வரும் விசு அதிமுகவில் ஐக்கியமாகப்போகிறார் - செய்தி ( 'செல்வி' ஜெயலலிதா அரட்டை அரங்கம் பார்க்க போகிறார் )
திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று கையில் வாழைப்பழத்தை வைத்துக் கொண்டு அதைக் காட்டி சிம்ரன் ஆதரவு திரட்டினார். ( இதே போல் சிறுத்தைக்கு டிரை பண்ணாதீங்க )
எல்லா கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டால் புதிய தமிழகம்தான் அதிக வாக்கு களைப் பெறும். - டாக்டர் கிருஷ்ணசாமி ( இட்லிவடைக்கு எழுத உங்களுக்கு எல்லா தகுதியும் இருக்கு )
எங்களுக்கு வரும் மிரட்டல்களைப் பார்த்தால் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோமா என்ற சந்தேகம் வருகிறது. இது தேர்தலா? யுத்தமா? - கார்த்திக் (புதுசா அரசியலுக்கு வந்தவர்கள் சொல்லும் வார்த்தை இது )
தலைமைக்கான அனைத்து தகுதி யும் ஸ்டாலினுக்கு உள்ளது. அவருடன் போட்டியிட யோக்கியதை இல்லாத வர்கள்தான் வாரிசு அரசியல் பற்றி வம்பளக்கின்றனர் - திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் ( அட பாவமே, உங்க நிலமையை பார்த்தீங்களா ? )
பொதுவாக நடிகர், நடிகைகள் எங்கே போனாலும் கூட்டம் கூடும். அது ஓட்டாக மாறுமா என்பதே பிரச்சனை. - டி.ராஜேந்தர் ( அனுபவம் தான் )
Posted by IdlyVadai at 4/25/2006 04:40:00 PM 8 comments
கலைஞர் பேட்டி
கேள்வி:- காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டை அணுக போவதாக கூறி இருக்கிறது. நீங்கள் வழக்கு எதுவும் தொடர்வீர்களா?
பதில்:- இது தொடர்பான சட்ட நுணுக்கம் பற்றி ஆராய்ந்து வருகிறோம்.
ப:- அவர்களும் நாங்கள் சொல்லும் கருத்தைதான் சொல் வார்கள் என்று நம்புகிறோம். சம்பந்தப்பட்ட 4 மாநில அரசு களும் தேவையான புள்ளி விவரங்கள், ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து விட்டது. முடிவு அறிவிக்க வேண்டியதுதான் பாக்கி. இந்த சூழ்நிலையில் மறுபடியும் முதலில் இருந்தே ஆராய முடியாது.
ப:- எங்கள் கூட்டணி கட்சி கள் நிறைவேற்றியுள்ள தீர்மா னத்தை அவரிடம் கொடுப் போம். இன்று சென்னை யில் சோனியாகாந்தியிடமும் விளக்கி சொல்வேன்.
ப:- நிரம்ப மன நிறைவை தந்துள்ளது. 3-வது கட்ட சுற்றுப்பயணமும் செய்ய இருக்கிறேன்.
ப:- வேலை வாய்ப்பு தருவ தாக கூறி இருந்தார்கள். ஆனால் சாலை பணியாளர் கள், மக்கள் நல பணியாளர் கள் 25 ஆயிரம் பேரை வீட்டுக்கு அனுப்பினார்கள். வேலை நியமன தடைச்சட்டமும் கொண்டு வந்தார்கள். சேது சமுத்திர திட்டத்திற்காக வாதாடுவோம், பேராடுவோம் என்றார்கள். ஆனால் நாங்கள் மத்திய அரசை வலியுறுத்தி அனுமதி பெற்று பணிகள் தொடங்கிய நிலையில் அதற்கு எதிராக பேசுகிறார்கள். செயல்படுகிறார்கள். தேர்தல் அறிக்கைக்கு முரணாகவே செயல்படுகிறார்கள்.
ப:- தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள வாக்குறுதிகள் நிறைவேற மத்திய நிதி அமைச்சரின் சான்றிதழ் எதிர்காலத்தில் மிகவும் பயன்படும் என்று நம்புகிறேன்.
ப:- வானத்தை வில்லாக வளைப்பேன் என்று கூறுபவர்கள் கூறலாம். ஆனால் வளைப் பவர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் அவசரப்பட்டு எதையும் சொல்ல மாட்டோம். இது சாத்தியமாகுமாப சாத்திய மாகாதாப என்று ஆரா அமர யோசித்துதான் முடிவு எடுப்போம். சாத்தியமாகும் என்பதை தான் எங்கள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்து இருக்கிறேன்.
ப:- அவர் அப்படி பேச வில்லை என்று அவரது கட்சியை சேர்ந்த துரை மாணிக்கம் கூறினார். தா.பாண்டியன் அப்படி சொல்லியிருக்க முடியாது. பட்ஜெட்டில்தான் எந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்க முடியும். வரி இல்லாமல் பட்ஜெட் வராது.
ப:- அந்த தொகுதிகளில் ஏற்கனவே யாரை ஆதரிப்பது என்று தி.மு.க. முடிவு எடுத்ததோ அந்த நிலை தொடரும்.
ப:- இது ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால்.
ப:- தனி மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைக்கும் வலிமையை பெற்று வருகிறோம்.
ப:- கருத்து கணிப்பு முடிவை முழுயைமாக நம்பி தேர்தல் பணியாற்றுபவன் அல்ல நான். கருத்து கணிப்புகள் சாதகமாக வந்தாலும், பாதகமாக வந்தாலும் நான் ஒரே நிலையில் தான் இருப்பேன். கருத்து கணிப்பும் உண்டு. கணிப்பு கருத்துகளும் உண்டு.
ப:- இது அதிகார பூர்வமாக நடக்கவில்லை. தலைமை கழ கத்தில் இருந்து எந்த அறிக் கையும் கொடுக்கவில்லை. வாக்காளர்களை தேடி செல்லும் யாராவது கேட்டு இருக்கலாம். இதற்கும் தி.மு.க. தலைமைக்கும் எந்த சம்பந்தம் இல்லை. ஒவ்வொரு நாளும் ஜெயலலிதா ஒவ்வொரு தேர்தல் அறிக்கையை வெளி யிட்டு இருக்கிறார். இது தேர்தல் விதிமுறைக்கு உகந்ததாப உட்பட்டதா?
ப:- கருத்து சொல்ல விரும்ப வில்லை என்பதன் சுருக்கம்தான் நரேஷ்குப்தா.
ப:- மிருக சாதிக்குள் கலகம் இருந்தால் நான் என்ன சொல்வது.
Posted by IdlyVadai at 4/25/2006 04:35:00 PM 4 comments
Monday, April 24, 2006
போட்டுத்தாக்கு
மதுரையில் தேவர் சிலை அமைத்தது நான்தான் - கருணாநிதி ( காக்கா ஓட்டு போடாது சார் ).
கர்ப்பிணி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் ஆறு மாதகாலத்திற்கு ஆறாயிரம் ரூபாய் தருவோம் என்று தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. பொறுப்பு இல்லாத கணவர்கள் மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும் ஆசையில் தங்களது மனைவிகளை நிரந்தரமாக கர்ப்பிணியாக்கி விடுவார்கள். பெண்களே ஜாக்கிரதையாக இருங்கள். - தமிழக ஜனதா கட்சி மாநில தலைவர் சந்திரலேகா ( சுப்பிரமணிய சாமி டிரெயினிங் பின்ன எப்படி இருக்கும் )
அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை மூன்று தடவை மாறிவிட் டது. இப்போது அ.தி.மு..க,வும், தி.மு.க.,வும் போட்டி போட்டு கொண்டு தேர்தல் அறிக்கையில் அதை கொடுப்போம், இதை கொடுப் போம் என்று கூறுகின்றனர். அதையெல்லாம் அவர்கள் ஆட்சியில் இருந்த போதே கொடுத்திருந்தால் நான் ஏன் அரசியலுக்கு வந்திருக்கப் போகிறேன்...- விஜயகாந்த் ( இப்படி ஒரு காரணமா ? பலே பலே )
காரைக்கால் வடக்குத் தொகுதியில் நேஷனல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தங்க தேவதாஸ் போட்டியிடுகிறார். இவரது முதல் வாக்குறுதியே கொசு ஒழிப்புதான். காரைக்காலில் பொதுமக்களின் வருடாந்திர பிரச்னையான கொசுக்களை அழித்து மக்களுக்கு நிம்மதியான தூக்கத்துக்கு உத்தரவாதம் தரப்படும். என்ற சபதத்துடன் டூ வீலரில் தெருக்களில் வலம்வருகிறார். ( சூப்பர் சார் சூப்பர். அதையும் மீறி கடிச்சா சொறிஞ்சி விடுவீங்களா? )
கண்ணை மூடிக்கொண்டு எனக்கு ஓட்டுப் போடுங்கள், பிறகு அடுத்த 50 ஆண்டுகளுக்கு யாருமே என்னை அசைக்க முடியாத அளவுக்கு வளமான ஆட்சியைத் தமிழகத்துக்குத் தருவேன் - விஜயகாந்த் ( தமிழ் நாட்டில் இதுவரை எல்லோரும் அப்படி தான் ஓட்டுபோட்டு கொண்டிருக்கிறார்கள் )
Posted by IdlyVadai at 4/24/2006 01:13:00 PM 7 comments
Sunday, April 23, 2006
போட்டுத்தாக்கு
அ.தி.மு.க.,வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வதற்காக ஒரு பிரபல நடிகரிடம் ரூ.100 கோடி பேரம் பேசப்பட்டதாக தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அந்த நடிகர் ரஜினியா, கமலா, விஜயகாந்தா அல்லது நானா என கருணாநிதி மக்களுக்கு விளக்கிக் கூறவேண்டும். நான் பணத்திற்காக அ.தி.மு.க.,விற்கு வரவில்லை... - நடிகர் சரத்குமார ( என் அப்பன் குதிர்குள்ளே இல்லை.. )
எங்கள் கூட்டணிக்கு 10 எம்.எல்.ஏ.,க்கள் கிடைத்து விட்டால் போதும். அடுத்த பார்லிமென்ட் தேர்தலில் மொத்த இடங்களையும் எங்கள் கூட்டணியே பிடிக்க வழி செய்து விடுவோம். அடுத்த பிரதமர் தமிழகத்திலிருந்து தான்; அதில் மாற்றமிருக்காது. அடுத்த பிரதமர் யார் என்பதற்கான முயற்சியில் இப்போதே ஈடுபட்டு வருகிறோம்... - சுப்ரமணியசாமி ( வாங்கிய அடி பத்தலை என்று நினைக்கிறேன் )
அம்மாவுக்கு குடும்பமே மக்கள் தான். வைகோ குடும்பம் வெளியே தெரிவதே இல்லை. திருமாவளவனுக்கு குடும்பமே இல்லை. ஆனால், ஒரே குடும்பம், அரசாளத் துடிக்கிறது. இங்கே நான்கு முறை வெற்றி பெற்ற பரிதியை கருணாநிதி அமைச்சர் ஆக்கவில்லை. அண்ணன் பரிதிக்காக நான் பரிதாபப்படுகிறேன்... திருமாவளவன் ( அட அட )
கருணாநிதியுடன் ஜெயலலிதாவை ஆயிரத்தில் ஒரு பங்கு கூட ஒப்பிட முடியாது. கடந்த முறை அ.தி.மு.க.,வை பா.ம.க., எப்படி ஆட்சியில் அமர்த்தியது என்று கேட்கின்றனர். ஆனால் நாங்கள் மட்டும் அந்த தவறை செய்யவில்லை. எங்களுடன் மூப்பனார், இந்திய கம்யூ., மார்க்., கம்யூ., ஆகியோரும் அந்த தவறை செய்தனர். ஆனால் அந்த தவறை உணர்ந்து நாங்கள் தான் முதலில் வெளியே வந்தோம்...ராமதாஸ் ( மீண்டும் மீண்டும் சிரிப்பு என்று ஒரு தொடர் சன் டிவியில் வரும் அதில் நீங்க நடிக்கலாம் )
என்னை பொறுத்தவரையில் இப்போது கூட்டணி ஆட்சிக்கான வாய்ப்புகள் இல்லை. 234 தொகுதிகளில் பெரும்பாலான இடங்களில் தி.மு.க., கூட்டணி வெற்றி பெறும். எனவே கூட்டணி ஆட்சிக்கு அவசியம் இருக்காது. என்னுடைய கொள்கையை மாற்றவில்லை. இப்போது இருக்கும் நிலையை அனுசரித்து தான் இவ்வாறு கூறுகிறேன்... இளங்கோவன் ( அப்போ கேட்ட மன்னிப்பு இன்னும் மறக்கவில்லை )
100 இளைஞர்களை கொடுங்கள்; இந்த நாட்டையே மாற்றி காட்டுகிறேன்' என்று விவேகானந்தர் தெரிவித்தார். என்னிடம் லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் மூலம் இந்த தமிழகத்தையே மாற்றிக் காட்டுவேன்...விஜயகாந்த் ( தமிழகம் அவ்வளவு மோசமா ? )
தி.மு.க., அலை வீசுகிறது என்பது தான் உண்மையான கணிப்பு. நான் பல தேர்தல்களைச் சந்தித்துள்ளேன். இதுபோன்றதொரு அலையை 1967ல் பார்த்தேன். இப்போது அதையும் தாண்டி மக்களிடம் அமோக ஆதரவு தெரிகிறது. ஒரு கன்னத்தில், "பளார்' என அறைந்துவிட்டு 100 ரூபாய் பணத்தைக் கொடுத்தால், அடிபட்டதை மக்கள் மறப்பார்களா...? - வெற்றிகொண்டான் ( அது சரி நீங்க எப்போ அதிமுகவில் சேரபோறீங்க )
அதிமுக திறந்தவெளி சிறைச்சாலை - கராத்தே தியாகராஜன் ( நம்புகிறேம், உங்களால் எப்படி ஈசியா தப்பிக்க முடிஞ்சது )
ஜெயலலிதா தற்போது 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப் போவதாக அறிவித்துள்ளார். அப்படி வழங்க முடியும் என்று அவர் நம்பினால், கடந்த ஐந்து ஆண்டுகளில் ஏன் வழங்கவில்லை? எதிர்க் கட்சியை கேலி செய்துவிட்டு, பிறகு அதே பாணியை முதல்வர் கடைப்பிடிப்பது விசித்திரமாக உள்ளது... ஜெயந்தி நடராஜன் ( எப்போ டில்லியிலிருந்து வந்தீர்கள் )
இரண்டு ரூபாய்க்கு அரிசி என்று சொல்கிறாயே? நீ தானே அரிசி விலையை ரூ.3.50 க்கு உயர்த்தினாய். இப்பொழுது முதல்வர் மாதம் 10 கிலோ அரிசி என்று சொன்னவுடன் மக்களிடம் மகிழ்ச்சி வந்து விட்டதே. கருணாநிதி அஸ்திவாரமே ஆடிவிட்டதே. இதை எப்படி கொடுக்க முடியும் என்று கேட்பீர்கள். உன்னால் முடியும் போது, எங்களால் முடியாதா...? - நாஞ்சில் சம்பத் ( ஐயா வைகோ கூட முடியாது என்றார் பிறகு ஒரு துண்டு சீட்டு ... சரி சரி இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா )
Posted by IdlyVadai at 4/23/2006 10:45:00 AM 5 comments
தேர்தல் செய்திகள்
* முதல்-அமைச்சர் ஜெயலலிதா போட்டியிடும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அகில இந்திய பார்வர்டு பிளாக் வேட்பாளர் பொன்முருகன் தனது வேட்பு மனுவை நேற்று திடீரென வாபஸ் பெற்றுக் கொண்டார்.
* தி.மு.க. கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து விஜய டி.ராஜேந்தர் நாளை (திங்கட்கிழமை) முதல் பிரசாரத்தை தொடங்குகிறார்.
* பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்டே தீருவேன்'' என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உறுதியாக கூறினார்.
* அ.தி.மு.க. அணிக்கு வாருங்கள் என்று தி.மு.க. தொண்டர்களுக்கு வைகோ அழைப்பு விடுத்தார்.
* தி.மு.க.வில் உள்ள நல்லவர்கள் விரைவில் வெளியேறுவார்கள்' என்று நடிகர் சரத்குமார் கூறினார்.
* தமிழகத்தில் பொடா சட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்திதாகக் கூறி வாக்குக் கேட்கத் தயாரா? என்று ஜெயலலிதாவிற்கு, மார்க்சீய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் என். வரதராஜன் கேள்வி எழுப்பினார்.
* ஜெ நேற்று மாலை திரும்பவும் வைகோ வீட்டுக்கு சென்றார்.
* சரத்குமாருக்கு 20 கோடி, வைகோவிற்கு 40 கோடி - இந்திரகுமாரி.
Posted by IdlyVadai at 4/23/2006 09:55:00 AM 4 comments
Saturday, April 22, 2006
இலவசங்கள்
எல்லா அரசியல் கட்சிகளும் ஏதாவது ஒரு இலவசத்தை கொடுக்கிறது. என் பங்கிற்கு சில இலவச காட்டூன்கள் :-)
இன்றய இலவச நிலவரம் :
1. கலர் டிவி
2. 10 கிலோ அரிசி
3. பசு மாடு
கார்டூன் நன்றி: தினமணி, விகடன், குமுதம், கல்கி
Posted by IdlyVadai at 4/22/2006 07:24:00 PM 2 comments
இன்றைய நீக்கங்கள்
1. சுயேச்சையாக போட்டியிடும் அதிமுக எம்எல்ஏ கட்சியிலிருந்து நீக்கம்
அதிமுக கூட்டணியில் நாகர்கோவில் தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தொகுதியில் அக்கட்சி சார்பாக ரத்தினராஜ் போட்டியிடுகிறார். நாகர்கோவில் தொகுதியின் தற்போதைய அதிமுக எம்எல்ஏ ஆஸ்டின் அத்தொகுதியை கேட்டு கட்சித் தலைமையிடம் விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால், நாகர்கோவில் தொகுதி கூட்டணி கட்சியான மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதையடுத்து, ஏமாற்றமடைந்த ஆஸ்டின் தற்போது சுயேச்சையாக அத்தொகுதியில் போட்டியிடுகிறார். மேலும், அங்கு தனது ஆதரவாளர்களுடன் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், ஆஸ்டினை கட்சியிலிருந்து நீக்கி பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று உத்தரவு வெளியிட்டுள்ளார்.
அதில், கட்சிக்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாக்கும் விதத்தில் செயல்பட்ட ஆஸ்டின், இன்று முதல் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவிக்கப்படுகிறார். அதிமுக தொண்டர்கள் யாரும் அவருடன் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளார்.
2. எடப்பாடி கணேசன் பா.ம.க.வில் இருந்து நீக்கம்
எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக உள்ள இவருக்கு, இத் தேர்தலில் போட்டியிட கட்சி சார்பில் டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே, சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
இவரையும், எடப்பாடி நகர செயலாளர் அ. செங்குட்டுவன், நகரத் தலைவர் எம்.டி. ரமேஷ் ஆகியோரையும் கட்சியில் இருந்து நீக்குவதாக பா.ம.க. பொதுச் செயலாளர் தென்.சு. மூக்கையா தெரிவித்துள்ளார்.
1996-ல் பா.ம.க. தனித்துப் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வென்றது. அதில் எடப்பாடி கணேசனும் ஒருவர். 2001-ல் அதிமுக கூட்டணியில் பா.ம.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
எம்.ஜி.ஆர். காலத்தில் 1977 முதல் 1980 வரையிலும், 1980 முதல் 1984 வரையிலும் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்துள்ளார்.
Posted by IdlyVadai at 4/22/2006 07:15:00 PM 0 comments
ஏழை மக்களுக்கு வீட்டுக்கு ஒரு பசுமாடு - விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சென்னையில் இன்று பிரசாரம் செய்தார். வடபழனி அருகே உள்ள ஆலந் தூர் தொகுதிக்கு உட்பட்ட தசரதபுரத்தில் இருந்து பிர சாரத்தை தொடங்கினார்.
அதில் அவர் பேசியது :-
முதன் முறையாக இந்தபகு தியில் உங்களை சந்திக்க வந்திருக்கிறேன் எனது வீட்டின் அருகிலேயே நடைபெறும் இந்த கூட்டத்தில் பேசுவதற்கு கொஞ்சம் கூச் சமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் பரவாயில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் 15 கிலோ இலவச அரிசி தருவேன் என்று கூறியிருந்தேன்.
ஒவ்வொரு வீட்டுக்கும் அரிசி மட்டும் போதாது மளிகை பொருட்கள் வாங்க குடும்ப தலைவியின் பெயரில் அஞ்சலக கணக்கில் மாதம் ரூ.500 போடப்படும். 3வருடங்கள் வரை 2 குழந்தைகள் பிரசவத் திற்கு தாய்மார்களின் ஊட்டச் சத்தக்கு மாதம் ரூ.500 வழங் குவேன்.
படிக்காத இளைஞர்களுக் கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தருவேன் படித்த பட்டதாரிகள் வங்கி கடன் உதவி முலம் தொழில் தொடங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.
ஏழை குடும்பங்கள் பிழைப்பு நடத்த ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு சீமை பசு வழங்குவேன்.
தமிழ்நாட்டில் 30ஆயிரம் கி.மீ.சுற்றி வந்து இருக்கிறேன். மக்கள் எதற்கெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று எனக்கு தெரியும். அவர்களுக்கு நான் உதவுவேன். நான் ஆட்சிக்கு வந்தால் கிலோ அரிசி ரூ.2க்குத்தான் முதல் கையெழுத்து என்கிறார். முதல்-அமைச்சர் 10கிலோ இலவச அரிசி தருவேன் என்று சொல்கிறார். இவர் கள் எலலாம் ஆட்சியில் இருக் கும் போது இதை செய்து இருந்தால் நான் அரசியலுக்கு வரவேண்டிய அவசியம் இருந்து இருக்காது.
சிலர் ஒவ்வொரு தேர்த லிலும் ஒவ்வொரு கட்சியுடன் கூட்டணி வைத்து தேர்தலில் நிற்கிறார்கள். எந்தகூட்ட ணியில் இருந்தால் வெற்றி பெறுவோம் என்று அவர்க ளுக்கே நம்பிக்கை இல்லை.
எங்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் கொடுத்த வாக் குறுதி எல்லாம் நான் நிறை வேற்றிக் காட்டுவேன்.
Posted by IdlyVadai at 4/22/2006 07:04:00 PM 4 comments
Friday, April 21, 2006
முதல்வர் பதவிக்கு 3 பேர் போட்டி - சரத்குமார்
கே:- சென்னையில் தேர்தல் பிரசாரத்தை எங்கெங்கு செய்தீர்கள்.
ப :- சென்னையில் நேற்று பிரசாரம் தொடங்கினேன். காளிகாம்மாள் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வட சென்னை, மத்திய சென்னை தொகுதிகளில் பிரசாரம் செய்தேன். அ.தி.மு.க.வுக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சி உருவாகி இருப்பதை காண முடிகிறது.
கே:- சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்?
ப:- நான் 4 தேர்தல்களை சந்தித்து உள்ளேன். மக்களிடம் `பல்ஸ்' பார்க்கும்போது அ.தி. மு.க. கூட்டணி அமோக வெற்றி பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
கே:- தி.மு.க.வில் இருந்ததற்கும், தற்போது அ.தி.மு.க.வில் இருப்பதற்கும் எப்படி உணருகிறீர்கள்?
ப:- நான் அ.தி.மு.க.வில் தான் இருந்திருக்க வேண்டும். 8 ஆண்டு காலம் தி.மு.க.வில் இருந்ததை விட இப்போது சந்தோசமாகவும், நிம்மதியாகவும் இருக்கிறேன். தி.மு.க. தயாநிதி முன்னேற்ற கழகமாக மாறிவிட்டது. மக்களுக்கான எந்த பணி களையும் அவர்கள் செய் வதில்லை. நாளைய சமுதாயத் தை பற்றியோ, இளைஞர்க ளின் எதிர்காலத்தை பற்றியோ அவர்களுக்கு அக்கறை இல்லை. சுயமரியாதைக்கும் தி.மு.க.வில் இடமில்லை. எனவே எதிர் கால சிந்தனையும் சுயமரியாதையும் இருக்கிற இடத்துக்கு நான் வந்துள்ளேன். என்னை பாசத்தோடு அரவணைத்துக் கொண்டார் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.
கே:- எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்வீர்கள்?
ப:- அ.தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் இன்னும் மக்களுக்காக செய்யப்பட உள்ள திட்டங்கள் குறிப்பாக மதிய உணவு திட்டம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாட புத்தகம், இலவச சைக்கிள், அனைத்து மக்களுக்கும் மாதந்தோறும் இலவச 10 கிலோ அரிசி ஆகியவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வேன்.
கே:- தற்போது தி.மு.க.வின் நிலை என்ன?
ப:- தி.மு.க.வில் தற்போதைய நிலவரப்படி முதல்- அமைச்சர் பதவிக்கு 2 பேர் போட்டி போடுகிறார்கள். ஒருவர் தயாநிதி மாறன், இன்னொருவர் மு.க.ஸ்டாலின். 3-வதாக இன்னொருவரும் காத்திருக்கிறார். அவர் உதயநிதி.தரம் இல்லாதவர்கள் எல்லாம் முதல்-அமைச்சர் பதவிக்கு போட்டி போடுகிறார்கள். சென்னையில் நடந்த கூட்டத்தில் மத்திய மந்திரியாக இருக்கும் தயாநிதிமாறன் திராவிட இயக்க வளர்ச்சிக்காக பல ஆண்டுகள் உழைத்த வைகோவை பார்த்து சென்னை பாஷையில் ஒண்டிக்கு ஒண்டி வர்றியா?என்று கேட்கிறார். அப்போது மேடையில் இருந்த அவரது தாத்தாவும் இதுபற்றி கண்டிக்கவில்லை. இது என்ன அரசியல் நாகரீகம். எல்லா தொழிலையும் அவர்கள்தான் செய்ய வேண்டும், எல்லா பத்திரிகைகளையும் அவர்கள் தான் நடத்த வேண்டும் என்ற ஆதிக்க மனப்பான்மை சர் வாதிகார போக்குக்கு அவர்கள் வழிவகுத்து வருகிறார்கள்.
கே:- அ.தி.மு.க.வில் சேர ஒரு நடிகருக்கு ரூ. 100 கோடி வரை பேரம் பேசப்பட்டதாகவும் அதற்கு அந்த நடிகர் மறுத்து விட்டதாகவும் தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியிருக்கிறாரே?
பதில்: சினிமாவில் பெரிய நடிகர்கள், உயரமான நடிகர்கள் நிறைய பேர் உள்ளனர். எந்த நடிகர் என்பதை தைரியமாக அவரே சொல்லட்டும் அரசியல் ஞானி என்று கூறி கொள்ளும் அவர் அதனை வெளிப்படையாக தெரிவிக்க ஏன் தயங்குகிறார்ப முரசொலி மாறன் மறைவுக்கு பிறகு பாரதீய ஜனதா கூட்டணியில் இருந்து விலகி காங்கிரஸ் கூட்டணிக்கு தி.மு.க. தாவிய போது காங்கிரசிடம் இருந்து தி.மு.க. எவ்வளவு பணம் வாங்கியது
கே: தற்போது அ.தி.மு.க.வில் சேர்ந்துள்ள உங்களின் மன நிலை எப்படி உள்ளது?
ப: இப்போது தான் நிம்மதியாகவும், சந்தோஷ மாகவும் இருக்கிறேன்.எனது மனபாரத்தை இறக்கி வைத்தது போல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது.
கே: அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டதால் தி.மு.க. தரப் பில் இருந்து உங்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதா?
ப: தனிப்பட்ட முறையிலும், தொழில் ரீதியாகவும் எந்த பிரச்சினை வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறேன். வருமான வரித்துறையை ஏவி விட்டு என் வீட்டில் சோதனை கூட நடத்தலாம். நான் ஊரில் இல்லாத போது என் வீட்டில் வந்து சோதனை நடத்தட்டும். அங்கு என்ன இருந்தாலும் அவர்கள் எடுத்துக் கொள்ளட்டும். தி.மு.க.வில் தனி மனித ஆதிக்கம் ஓங்கி உள்ளது.
கே: உங்களுடன் சேர்ந்து மனைவி ராதிகாவும் பிர சாரத்துக்கு வருவாரா?
ப: இப்போதைக்கு அந்த திட்டம் இல்லை. என் மகனுக்கு இரண்டு வயது ஆகிறது. அவனை பராமரிக்க வேண்டும். தேவைப்படும் போது நாங்கள் நிர்பந்திக்கப்படும் போது அவரே பிரசாரத்திற்கு வருவார்.
கே: நிர்பந்தம் என்று எதை குறிப்பிடுகிறீர்கள்?
ப: போக, போக நீங்களே பார்ப்பீர்கள். எங்களை சீண்டி பார்த்தால் விபரீதமான விளைவுகளை தி.மு.க. சந்திக்கும். அரசியல் நாகரீகம் கருதி சில விபரங்களை வெளியே சொல்லவில்லை. அதை நாங்கள் சொல்ல ஆரம்பித்தால் தி.மு.க.வுக்கு ஒரு `சீட்' கூட கிடைக்காது.
கே: சில நாடார் அமைப்புகள் அந்த இயக்கத்துக்கு தலைமை தாங்க அழைத்ததாகவும், இப்போது நீங்கள் அ.தி.மு.க.வில் சேர்ந்து விட்டதால் அவர்கள் வருத்தப்படுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறார்களே?
ப: அவர்கள் நல்ல தீர்மானத்தைத்தான் நிறை வேற்றி இருக்கிறார்கள். அந்த தீர்மானத்தில் சரத்குமார், அ.தி.மு.க.வில் இருந்தாலும், சுய மரியாதையை விட்டுக் கொடுக்கக்கூடாது என்று தான் கூறி இருக்கிறார்கள்.
அவர்களின் எதிர் பார்ப்புக்கு ஏற்ப அன்பும், பண்பும், பாசமும், நிறைந்த இடத்திற்குதான் வந்துள்ளேன். அவர்கள் எதிர்பார்ப்புக்கு மேல் ஒரு படி செல்லக்கூடிய இயக்கத்தில் தான் சேர்ந்துள் ளேன். அவர்களின் எதிர் பார்ப்புகள் நிச்சயமாக நிறை வேற்றப்படும்.
கே: அ.தி.மு.க.வில் சேர்ந்த தால் உங்கள் மன்ற நிர்வாகிகள் மிரட்டப்படுவதாக கூறப்படுகிறதே?
ப: சன் டி.வி.யும், ஒரு ரூபாய் பத்திரிகையும் சரத்குமார் ரசிகர் மன்ற கார்டை காட்டி `சரத்குமார் ஒழிக' என்று சத்தம் போட்டால் ரூ. 10 ஆயிரம் தருவதாக ஆசை காட்டி வருகிறார்கள். அதற்கெல்லாம் எனது மன்றத்தினர் விலை போக மாட்டார்கள். அவர்கள் மீது நானும் என் மீது அவர் களும் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளோம். நெல்லை மாவட்டத்தில் சரத்குமார் நுழைய கூடாது என்று சிலர் கூறியதாக ஒரு ரூபாய் பத்திரிகையில் செய்தி வெளியிடுகிறார்கள். இதன் மூலம் சாதி பிரச்சினையை அவர்களே கிளப்பி விடுகிறார் கள். என் மீது ஒரு கீறல் விழுந்தாலும் தி.மு.க. தான் பொறுப்பு. அவர்கள் வன் முறை கலாசாரத்தை உருவாக்கு கிறார்கள்.
கே: கூட்டணி ஆட்சிக்கு கருணாநிதியே தற்போது சம்மதம் தெரிவித்திருப்பது, அவருக்கு ஏற்பட்ட தோல்வி பயத்தை வெளிப்படுத்து கிறதா?
ப: மத்திய மந்திரி இளங் கோவன் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் வேண் டும் என்று சொன்ன ஒரே காரணத்துக்காக கட்சியின் உயர்நிலை கூட்டத்தை கூட்டி இளங்கோவன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தவர் கருணாநிதி. ஆனால் அவரே இப்போது கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டு வருகிறார் என்றால், தோல்வி பயம் அவருக்கு வந்துவிட்டது என்பது தான் முக்கிய காரணம்.
கே: தேர்தலுக்கு பிறகு நாடார் அமைப்புகள் உரு வாக்கும் அரசியல் அமைப்புக்கு உங்களை தலைமை ஏற்க அழைப்பு விடுக்க இருப்பதாக கூறி இருக்கிறார்களே?
ப: அப்படி அவர்கள் தீர்மானம் போட்டு இருக்கி றார்கள். வருங்காலத்தில் நான் அவர்களை அழைத்து பேசி இங்கே (அ.தி.மு.க.) வரவைக்கும் சூழ்நிலையும் ஏற்படும். நான் அனைத்து சமுதாய மக்களையும் ஒருங் கிணைத்து சாதி, மத, பேத மற்ற சமுதாயத்தை உருவாக்க நினைப்பவன்.
கே: தேர்தல் கருத்து கணிப்புகள் எல்லாம் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று கூறுகிறது. ஆனால் அதை எதிர்கட்சிகள் ஏற்க மறுக்கிறதே?
ப: அவர்கள் கருத்து கணிப்பை ஏற்க வேண்டாம். மக்கள் தீர்ப்பை ஏற்கத்தானே வேண்டும்.
கே: தி.மு.க. கூட்டணியில் இருந்து வைகோவும், தி.மு.க.வில் இருந்து நீங்களும் விலகியது சந்தர்ப்பவாதம் என்று தி.மு.க. கூட்டணியினர் கூறுகிறார்களே?
ப: நான் தி.மு.க.வில் இருந்த போதும் எதையும் அவர்களிடம் கேட்கவில்லை. சரத்குமார் இதை கேட்டார் அதை கேட்டார் என்று என் மீது குற்றச்சாட்டு கூற முடியாது. தமிழக மக்களின் எதிர்கால தேவைகள் மக்க ளின் கடமைகளை செய்ய தவறும் போது அதனை சுட்டிக்காட்டுவது எப்படி தவறாகும். சந்தர்ப்பவாதமாக செயல்படுபவர்கள் அவர்கள் தான். தனது குடும்பத்தை பற்றி நினைப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதவில்லை.
கே: மத்திய அரசு நடத்திய தபால்தலை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜயை அழைத்தது தான் நீங்கள் தி.மு.க.வில் இருந்து விலகு வதற்கு காரணமா?
ப: நடிகர் விஜய் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தப்பட்ட சில நாட்களில் மத்திய அரசு விழாவில் பிரதமர் முன்னிலையில் நடிகர் விஜயை கலந்து கொள்ள செய்தது என்ன நியாயம். எத்தனையோ பெரிய நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த் உள்ளனர். அவர்களை அழைத்து சென்றிருக்கலாம். ஆனால் தயாநிதி மாறன் நடிகர் விஜயை அழைத்து சென்று தபால் தலையை வெளியிட்டது சகித்து கொள்ள முடியாத ஒரு நிகழ்வு ஆகும் அதுவும் எனது மனதை உறுத்தியது.
கே: இன்று நீங்கள் எங்கெல்லாம் தேர்தல் பிரசாரம் செய்கிறீர்கள்.
ப: இன்று காலை மீனாட்சி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு கோவில்பட்டி செல்கிறேன். அங்கிருந்து ஓட்டப்பிடாரம், விளாத்திக் குளம், தூத்துக்குடி ஆகிய பகுதி களில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்கிறேன்.
Posted by IdlyVadai at 4/21/2006 08:27:00 PM 4 comments
லயோலா கல்லூரி கருத்து கணிப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் குறித்து சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் கருத்து கணிப்பு நடத்தினர். அதன் முடிவுகளை பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் இன்று வெளியிட்டார். அதன் விவரம் வருமாறு:-
* தற்போதுள்ள அரசி யல் சூழலில் இன்று எந்த கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு வாக்காளர் பதில்.
அ.தி.மு.க. -38.5%
தி.மு.க. -36.0%,
காங்கிரஸ் 4.5, %
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-2.1. %
பா.ம.க.-1.8 %
ம.தி.மு.க.-1.2 %
தே.மு.தி.க.-12.3 %
பாரதீய ஜனதா-0.5 %
விடுதலை சிறுத்தைகள்-0.3.%
இந்த முடிவுகளை இதற்கு முந்தைய கணிப்புகளோடு ஒப்பிட்டால் அ.தி.மு.க.வின் வாக்கு சீராக உயர்ந்து தி.மு.க.வை முந்தியிருப்பது புலப்படுகிறது.
நவம்பர் 2004:
அ.தி.மு.க. -19.0 %
தி.மு.க. -41.7.%
மே-2005:
அ.தி.மு.க. -30.1 %
தி.மு.க. -46.1 %
ஜனவரி 2006,
அ.தி.மு.க. -.33.7 %
தி.மு.க. -38.4. %
ஏப்ரல் 2006:
அ.தி.மு.க. -38.5. %
தி.மு.க. -36.8. %
ஆட்சியில் எந்த அணி
* வரும் தேர்தலில் அ.தி.மு.க. அணி பெரும்பான்மை இடங்களை கைப்பற்றும் என யூகமாக கருதுவோர்.
அ.தி.மு.க.கூட்டணி -43.8%
தி.மு.க. கூட்டணி -42.3 %
* கணிப்பில் கலந்து கொண்டவர்கள் வாக்களிக்கும் முடிவிற்கும் அணி வெல்லும் என்ற யூகத்திற்கும் இடைவெளி உள்ளது. கூட் டணிகள் என்ற அளவில் வாக்களிக்க விரும்புவோர்:
தி.மு.க.அணி -44.5 %
அ.தி.மு.க.அணி -40.1 %
தே.மு.தி.க. -12.3 %
முடிவு செய்யாதோர்-1.6.%
தி.மு.க. அணிக்கு ஆதர வாக 44.5 சதவீதம் பேர் வாக் களித்தாலும் அ.தி.மு.க. அணி தான் பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் என்று 43.8 சதவீதம்பேர் யூக மாக கருத்து தெரிவித்து உள்ளனர்.
அ.தி.மு.க. அணிக்கு கிடைக் கும் வாக்குகள் 40.1 சதவீதம், தே.மு.தி..க.வுக்கு கிடைக்கும் வாக்குகள் 12.3 சதவீதம். அ.தி.மு.க.வுக்குசீரான ஆதரவு பெருகி வருகிறது. தி.மு.க. அணிக்கு வாக்களிப் போரிடம் தன்னம்பிக்கை குறைந்துள்ளது.
* எந்த கட்சிக்கோ அணிக்கோ ஆதரவாக அலை வீசவில்லை.
* ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவுக்கும், சேப்பாக்கத்தில் கருணாநிதிக்கும் சாதகமான நிலை உள்ளது.
* தேர்தல் அறிக்கை பற்றி வாக்காளர் கருத்து:
தி.மு.க. -59.4 %
அ.தி.மு.க. -58.6%
* வாக்களிக்கும் பெண்கள் அ.தி.மு.க.-55.4. %
தி.மு.க. -31.7, %
தே.மு.தி.க. -11.2. %
ஆண்கள்:
தி.மு.க. -45.8, %
அ.தி.மு.க. -38.6, %
தே.மு.தி.க. -12.4 %
படிக்காதவர்கள்:
அ.தி.மு.க. -55.6 %
தி.மு.க. -31.8 %
கல்லூரி உயர் கல்வி:
அ.தி.மு.க. -34.2. %
தி.மு.க. -47.3. %
மகளிர் சுய உதவிகுழுவினர் ஆதரவு:
அ.தி.மு.க. -68.1 %
தி.மு.க. -23.2 %
சுய உதவிகுழு உறுப்பினர் அல்லாத பெண்கள்:
அ.தி.மு.க. அணி -45.7 %
தி.மு.க. அணி -37.4 %
அரசு ஊழியர்:
தி.மு.க. -62.5 %
அ.தி.மு.க. -28.3 %
குடும்பப் பெண்கள்:
அ.தி.மு.க. -50 %
தி.மு.க. -41.1 %
* மக்களின் பார்வையில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. அணிகளின்தேர்தல் வியூகங் கள் சம அளவில் சிறப்பாக அமைந்துள்ளன. இவற்றுக்கு அடுத்ததாக சராசரி 20சதவீதத்துக்கும் சற்று அதிகமானோர் தே.மு. தி.க.வின் வியூகம் சிறப்பாக உள்ளதாப கருதுகின்றனர்.
தினமணி செய்தி:
வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் தனிப்பட்ட முறையில் அ.தி.மு.க. கட்சியும் கூட்டணி என்ற முறையில் தி.மு.க. அணியும் அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
அக்கல்லூரியின் ஊடகவியல் ஆய்வுத் துறை அண்மையில் நடத்திய கருத்துக் கணிப்பு இதைத் தெரிவிக்கிறது. காட்சித் தகவல் இயல் துறையுடன் நடத்தப்பட்ட இக்கருத்துக் கணிப்பை வெளியிட்டு பேராசிரியர் ராஜநாயகம் நிருபர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
நாங்கள் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின்படி தற்போதைய சூழலில் அ.தி.மு.க. கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 38.5 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், தி.மு.க. கட்சியை 36 சதவீதம் பேர்தான் ஆதரித்துள்ளனர்.
கூட்டணி என்று பார்க்கும்போது, தி.மு.க. கூட்டணிக்கு 44.5 சதவீதம் பேரும், அ.தி.மு.க. கூட்டணிக்கு 40.1 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நான்காவது முறையாக தற்போது ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 2004-ம் ஆண்டு நவம்பரில் அ.தி.மு.க.க-வை 19 சதவீதம் பேரும், தி.மு.க-வை 41.7 சதவீதம் பேரும் ஆதரித்தனர். ஆனால், அ.தி.மு.க.வுக்கு மக்களிடையில் செல்வாக்கு அதிகரித்து, தி.மு.க.வுக்குக் குறைந்து வந்தது.
இதன் விளைவாக ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட கள ஆய்வில் தி.மு.க.வுக்கான ஆதரவு 36 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அ.தி.மு.க.வுக்கான ஆதரவு 38.5 சதவீதமாக அதிகரித்துள்ளது.
அ.தி.மு.க.வுக்கு மக்களிடையே ஆதரவு மெல்ல மெல்ல அதிகரித்ததுடன், தி.மு.க.வை விட உயர்ந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
இந்தக் கள ஆய்வில் கட்சிகளின் தேர்தல் வியூகம், பத்திரிகைகள், தகவல் சாதனங்களின் நடுநிலைமை, தேர்தல் நியதிகள், திரையுலகத்தின் தாக்கம், ரஜினிகாந்த் மேற்கொண்டுள்ள நிலைப்பாடு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு, தொகுதியின் முக்கியப் பிரச்சினை ஆகியவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன.
சுய உதவிக் குழுவினர், ஆண் -பெண், வெவ்வேறு தொழில்களில் இருப்போர் எந்தக் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர்; மத, சாதி ரீதியில் எப்படி வாக்குகள் போகின்றன; படித்தவர்கள், படிக்காதவர்களின் வாக்குகள் எப்படி அமைந்துள்ளன என்ற விவரமும் சேகரிக்கப்பட்டுள்ளன.
கருத்துக் கணிப்புகளுக்கு மக்களிடம் எத்தகைய வரவேற்பு உள்ளது என்ற கருத்தும் சேகரிக்கப்பட்டுள்ளது.
சரத் குமார்: தி.மு.க.விலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் அ.தி.மு.க.வில் சேர்ந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்கள், அ.தி.மு.க. அண்மையில் அறிவித்த ரேஷன் அரிசி சலுகை ஆகியவற்றின் பின்னணி இந்த ஆய்வில் இடம்பெறவில்லை.
இக்கள ஆய்வு தமிழகத்தில் நீலகிரி மாவட்டம் நீங்கலாக இதர அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 122 தொகுதிகளில் வசிக்கும் 5,058 பேரிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. இப்பணியில் இரு பேராசிரியர்கள், மூன்று கள ஆய்வு ஒருங்கிணைப்பாளர்கள், 29 மாணவர்கள் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, 2004-ம் ஆண்டு நவம்பர், 2005-ம் ஆண்டு ஏப்ரல், மே, நவம்பர் மாதங்களில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் கடந்த ஜனவரி மாதமும் தற்போது ஏப்ரல் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் கருத்து கேட்கப்பட்டுள்ளது.
Posted by IdlyVadai at 4/21/2006 08:23:00 PM 9 comments
Thursday, April 20, 2006
சென்னை புதிய போலீஸ் கமிஷனர் - லத்திகா சரண்
லத்திகா சரணை நியமிக்க தமிழக அரசிற்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் கட்டுப்பாடுகளை மீறி பேட்டி அளித்த குற்றத்திற்காக, சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜை பணி இடமாற்றம் செய்ய தமிழக அரசிற்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு இருந்தது. அதற்கு , 3 பேர் கொண்ட பட்டியலை 18ம் தேதிக்குள் அளிக்குமாறு தமிழக அரசிற்கு கெடு விதிக்கப்பட்டு இருந்தது. இந்த கெடுவை இன்று மாலை 5 மணி வரை நீட்டித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், பெண் போலீஸ் அதிகாரி லத்திகா சரணை நியமிக்குமாறு, முறையான கடிதத்தை தமிழக அரசிற்கு தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளது.
நடராஜ் இடமாற்றம் தீர்ப்பு
தேர்தல் கமிஷன் சரியா தவறா ?
Posted by IdlyVadai at 4/20/2006 06:53:00 PM 0 comments
மனு தாக்கல் முடிந்தது !
முதல் நாளிலேயே பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பார்களும், சுயேட்சை வேட்பாளர்களும் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். கடந்த 15ந் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா ஆண்டிப்பட்டி தொகுதியில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும் அன்று தனது வேட்பு மனுவை துறைமுகம் தொகுதியில் தாக்கல் செய்தார். 17ந் தேதி திமுக தலைவர் கருணா நிதியும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் மு.க.ஸ்டாலினும் முறையே சேப்பாக்கம் மற்றும் ஆயிரம்விளக்கு தொகுதியில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனு தாக்கலின் ஐந்தாவது நாளான நேற்று 805 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அத்துடன் 2164 பேர் மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர்.
வேட்பு மனு தாக்கல் செய்ய இன்றுதான் கடைசி நாளாகும். இதனால் இன்று அனைத்து தொகுதிக ளிலும் வேட்பு மனுக்கள் குவிந்தன. இன்று வேட்பு மனு தாக்கல் செய்தவர்களில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி, அண்ணாநகர் தொகுதியில் போட்டியிட சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தி.நகர் தொகுதி அதிமுக வேட்பாளர் வி.பி.கலைராஜனும் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 12 தொகுதிகளில் நேற்று வரை 44 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்துள்ள னர். அவர்களில் சிலர் இரண்டு மூன்று மனுக்களை தாக்கல் செய்திருந்ததால், மொத்த வேட்பு மனுக்களின் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது.
வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் முடிவடைந்தது. இதனை யடுத்து வேட்புமனு தாக்கல் செய்தவர் களின் விவரங்கள் மற்றும் எண்ணிக்கை இன்றிரவு வெளியிடப் படும். வேட்புமனுக்கள் நாளை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப் படும். வேட்பு மனு பரிசீலனை முடிவடைந்து, மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ள வரும் 23ந் தேதி கடைசி நாளாகும். மே8ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, 11ந் தேதி வாக்குகள் எண்ணப்படும்.
Posted by IdlyVadai at 4/20/2006 05:10:00 PM 0 comments
10 கிலோ அரிசி இலவசம் - அறிவிப்பு இல்லை அலறல் - கலைஞர்
கேள்வி: முதல்-அமைச்சர் ஜெயலலிதா நிபந்தனையின்றி 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: ஜனங்கள் அதுபற்றி எல்லாம் வேடிக்கையாக கேட்டு வருகிறார்கள். தேர்தல் அறிக்கை என்பது புனிதமானது. தி.மு.க. தேர்தல் அறிக்கைக்கு போட்டியாக அது சொல்லப்பட்டுள்ளது.
கேள்வி: ஜெயலலிதா தற்போது 10 கிலோ அரிசி இலவசமாக கொடுப்பதாக சொல்லியுள்ளாரே. இது சாத்தியப்படுமா?
கிலோ 2 ரூபாய்க்கு அரிசி வழங்கப்படும் என்று சொன்னவுடன் இது ஆகாத காரியம். மக்களை ஏமாற்றுகிற வேலை. கட்டுப்படியாகாது. நிதி ஆதாரம் இடம் தராது என்றெல்லாம் பேசிய ஜெயலலிதா ஒரே நாளில் தன்னை மாற்றிக்கொண்டு இப்படி அறிவித்து இருப்பது தோல்வி பயத்தின் எதிரொலிதான் என்பதை தவிர வேறு ஒன்றுமில்லை.
மனோகரா படத்தில் வசந்தசேனையை பயமுறுத்துவதற்காக கேசரிவர்மன் அருவ உருவத்தில் (மாயத்தோற்றம்) பயமுறுத்துவது போல், தேர்தல் தோல்வி அவர்களை பயமுறுத்துகிறது. இந்த திடீர் அறிவிப்புக்கு அதுதான் காரணம். சொல்லபோனால் இது அறிவிப்பு அல்ல அலறல்.
அ.தி.மு.க. 2001-ல் கொடுத்த தேர்தல் வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. கல்வித்துறையில் ஒரு வகுப்புக்கு ஒரு ஆசிரியர் நியமனம் என்று சொன்னார்கள். அதை நிறை வேற்றவில்லை.
வேலை தேடி அலையும் நிலை அறவே இருக்காது என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை.
கோப்புகள் மீது ஒரு வாரத்தில் நடவடிக்கை என்றார்கள். ஆனால் ஊழல் கோப்புகள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
கிராமபுரத்தில் சமையல் எரிவாயு அடுப்பு கொடுப்பதாக சொன்னார்கள். அதையும் கொடுக்கவில்லை.
பெண்களுக்கு பெண்களே நடத்தும் தனி தொழிற்பேட்டை அமைப்பதாக கூறினார்கள். அதுவும் அமைக்கவில்லை.
கேள்வி: தமிழகத்தின் வளர்ச்சிக்காக தி.மு.க. என்னென்ன திட்டங்கள் வைத்துள்ளது?
பதில்: நான்குநேரியில் பெரிய தொழிற்பேட்டை அமைப்பதற்கு 2 ஆயிரம் ஏக்கரில் நில ஆர்ஜிதம் செய்தோம். முரசொலி மாறன் தொழில் அமைச்சராக இருந்தபோது அது நடந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்சி மாறியது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் சில இடங்களை தேர்வு செய்து தொழில் வளர்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்படும்.
ஒவ்வொரு முறையும் தி.மு.க. ஆட்சி வரும் போதெல்லாம் தொழில் பேட்டைகள் உருவாக்கப்பட்டு பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக ஓசூர், ராணிபேட்டை ஆகிய இடங்களில் தொழில் பேட்டை அமைத்துள்ளோம். சென்னையில் மிகப்பெரிய டைட்டல் பார்க் நிறுவி உள்ளோம். இந்தியாவில் உள்ள பெரிய தொழில் கூடங்களில் அதுவும் ஒன்று. வருகிற தேர்தல் மூலம் தி.மு.க. ஆட்சி அமைந்தால் ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழிற்பேட்டை உருவாக்கப்படும். அந்தந்த மாவட்டத்தின் வசதி வாய்ப்புகளை பொருத்து தொழிற்பேட்டைகள் தொடங்கப்படும்.
கே: சினிமா நடிகர்கள் அரசியலுக்கு வருவது சினிமாவின் எழுச்சியாப அல்லது அரசியலின் வீழ்ச்சியா?
ப: இதற்கு மக்களிடையே உள்ள விழிப்பின்மைதான் காரணம். அதற்காக கலையுலகில் இருப்பவர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என சொல்லமாட்டேன். ஆனால் சினிமாகாரர்களை அரசியல் கட்சிகள் (குறிப்பாக அ.தி.மு.க.) பிரசாரத்துக்கு இழுக்கும் முறை பெரிய வியாபாரமாக உள்ளது. நேற்றுக்கு கூட ஒரு பிரபலமான நடிகரை அ.தி.மு.க.வில் இழுக்க ரூ.100 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது.
ஆனால் அதற்கு அந்த நடிகர் மறுத்து விட்டார். அவரது பெயர் கேட்காதீர்கள்.
கே: அது நடிகர் ரஜினிகாந்த் என்று எடுத்துக்கொள்ளலாமா?
ப: அதுபற்றி நான் சொல்ல மாட்டேன்.
கே: நடிகர் சரத்குமார் தி.மு.க.வில் இருந்து அ.தி.மு.க. வுக்கு சென்றது தென் மாவட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளதா?
ப: நீங்கள்தான் அதை சொல்ல வேண்டும்.
கே: சாதாரண உப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதை நீக்க நட வடிக்கை எடுப்பீர்களா?
ப: 6 மாத காலமாக அந்த துறை மந்திரியுடன் பேசியிருக் கிறேன். நல்லவிதமாக பதில் வரும் என நினைக்கிறேன். மீண்டும் பேசுவேன்.
கே: சிறிய உப்பு உற்பத்தியாளர்கள் இலவசமாக மின்சாரம் வழங்க வேண்டும் என்று கேட்டுள்ளார்களே?
ப: அந்த கோரிக்கை வந்துள்ளது. தி.மு.க. ஆட்சி அமைந்தால் உடனடியாக பரிசீலிக்கப்படும்.
கே: மீனவர்களுக்கு டீசல், மண்எண்ணை மானியம் வழங்கப்படுமா?
ப: தி.மு.க. ஆட்சியில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தொடரும்.
கே: ஜெயலலிதா அறிவித்துள்ள இலவச அரிசி திட்டம் தேர்தலுக்கு புறம்பானதா?
ப: அதை தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்ய வேண்டும்.
கே: சேது சமுத்திர திட்டம் நிறைவேற்றப்படுவதால் மீனவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறதே?
ப: மீனவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் இல்லை. அப்படி பாதிப்பு ஏற்பட்டால் நிவாரணம் வழங்கப்படும். தி.மு.க. ஆட்சி வராவிட்டால் கூட மத்திய அரசு மூலம் வழங்க உத்திரவாதம் அளிக்கிறேன்.
கே: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட வாய்ப்பு உள்ளதா?
ப: அது மக்களின் முடிவை பொறுத்தது. கூட்டணி ஆட்சி தவிர்க்க முடியாது என்றால் அதை தி.மு.க. எதிர்க்காது. ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் தி.மு.க. ஆட்சி அமையவே அதிக வாய்ப்பு உள்ளது.
தகவல் உதவி: மாலை மலர்
Posted by IdlyVadai at 4/20/2006 03:49:00 PM 2 comments
காமராஜர் ஆட்சி
இந்த படம் சில வாரங்களுக்கு முன் ஜெயா டிவியில் எடுத்தது. சென்னை சத்தியமூர்த்தி பவன் முன் காங்கிரஸார் செய்த நூதன போராட்டம்.
Posted by IdlyVadai at 4/20/2006 03:39:00 PM 0 comments
கூட்டணி ஆட்சி ?
காங்கிரஸ் பிரமுகர் கோபண்ணா எழுதிய தேர்தல் பிரசார நூல் வெளியீட்டு விழாவில் கலைஞர் (18/4/06)
தமிழ்நாட்டில் சில பேர் கேட்கிறார்கள். என்ன ஆட்சி வரும்? நீங்கள் தனியாக ஆட்சிக்கு வருவீர்களா? வராவிட்டால் என்ன செய்வீர்கள்? என்றெல்லாம் கேட்கிறார்கள். அவர்களுக்கெல்லாம் நான் சொல்கிற பதில் தி.மு.க. 'தனி ஆட்சி' வரும் என்பது தான். தனி ஆட்சியோ, கூட்டாட்சியோ, எந்த ஆட்சி வந்தாலும், இந்த ஆட்சி ஒழிய வேண்டும் என்பதைத் தவிர எனக்கு வேறு ஒன்றும் குறிக்கோள் அல்ல.
தேர்தல் தோல்வி பயத்தால், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொண்டுள்ளார் கருணாநிதி - திருமாவளவன் ( 19/04/06 )
தி.மு.க. தலைவர் கருணாநிதி நடந்து முடிந்த அ.தி.மு.க. அரசின் மீதும், முதல் அமைச்சர் ஜெயலலிதா மீதும் எந்த குறையும் சொல்லமுடியாத குழப்பமான நிலையில் இருக்கிறார். அவரால் குற்றம் கண்டுபிடிக்காத அளவிற்கு அ.தி.மு.க. தலைமையிலான ஆட்சி இருந்தது. இந்த குழப்பமான மன நிலையில்தான் நிலையில்லாத பல கவர்ச்சி திட்டங்களை தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளார்.
தி.மு.க. தோற்றுவிடும் என்ற பயத்தில்தான் தற்போது கருணாநிதி கூட்டணி ஆட்சிக்கு ஒத்துக் கொண்டுள்ளார். தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தை ஆரம்பித்த கால கட்டத்தில் கூட்டணி ஆட்சிக்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அவர்தான் இப்போது கூட்டணி ஆட்சி என்றாலும் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைப்போம் என்று கூறுகிறார். இந்த அறிவிப்புகளில் இருந்தே அவர் தோற்று போய்விடுவோம் என்ற பயத்தில் இருப்பதை அறிந்து கொள்ளலாம்.
தற்போது தி.மு.க.கூட்டணி கட்சிகள் உள்ளவர்கள் எல்லாம் சோர்ந்து போய் இருக்கிறார்கள். எனவே அவர்களை உற்சாகப்படுத்தி தேர்தல் வேலைகளை வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கூட்டணி ஆட்சி அமைத்து அவர்களுக்கு அமைச்சர் பதவி தருவதாக ஆசை காட்டி வருகிறார்.
தி.மு.க. தலைமையில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் காங்கிரஸ் இடம் பெறுமா?( 20/04/06) வாசன்
தி.மு.க. தலைவர் கருணாநிதி, கூட்டணி ஆட்சிக்கும் தயார் என்பதுபோல் பேசுகிறாரே? இது தோல்வி பயத்தை காட்டுகிறதா?
பதில்: ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் ஒரே நோக்கம் அ.தி.மு.க. ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் வாக்களிக்க வேண்டும். எந்த வகையில் வாக்களிப்பார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்.
கேள்வி: தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி ஏற்பட்டால் அதில் காங்கிரஸ் பங்குபெற வாய்ப்பு உண்டா?
பதில்: எங்களுடைய ஒரே நோக்கம் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதற்கு மக்கள் எந்த வகையில் துணை நிற்பார்கள் என்பது தேர்தல் முடிந்த பிறகுதான் தெரியும்.
தோல்வி பயத்தால் கூட்டணி ஆட்சி என்கிறார், கருணாநிதி - வைகோ (20/4/06)
கூட்டணி ஆட்சி என்று நேற்று ஒரு குண்டை தூக்கி போட்டார் கலைஞர். நான் கலைஞரை கேட்கிறேன் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந் தேதி காங்கிரஸ் கட்சியினுடைய தலைவர்களில் ஒருவரும் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினுடைய தலைவராக இருந்தவரும் மத்திய மந்திரியுமான சகோதரர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சத்திய மூர்த்தி பவனில் நடந்த எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பி.க்களின் கூட்டத்தில் தமிழ்நாட்டில் காமராஜரின் கனவுகள் நனவாக வேண்டும் என்றால் கூட்டணி ஆட்சிதான் வேண்டும். கூட்டணி ஆட்சி தான் அமைய வேண்டும், நாம் அதற்காக குரல் கொடுக்க வேண்டும் என்று சொன்னார். பத்திரிகையாளர்களிடமும் சொன்னார்.
அவ்வளவுதான் அன்று மாலையில் இருந்து ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மீது கடுமையான திட்டுக்கள். கலைஞர் ஒரு கவிதையே எழுதிவிட்டார். அதையும் நான் வைத்து இருக்கிறேன்.
அதில் என்ன எழுதி இருக்கிறார். 4 எருதுகள் ஒன்றாக இருந்ததை நயவஞ்சகமாக பிரித்து ஒவ்வொரு எருதாக அடித்து சாப்பிட்டது ஒரு வேங்கை, ஒரு சிங்கம். அது மாதிரியான காரியங்களை நடக்க நாம் அனுமதிக்க கூடாது.
அதோடு நிறுத்தவில்லை. 70 கோடி பகைவர்கள் இருக்கலாம் ஒரு பழுது எண்ணுகிற மந்திரி பக்கத்தில் இருக்க கூடாது. 70 கோடி எதிரிகள் இருக்கலாம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மாதிரி ஒரு மந்திரி இருக்க கூடாது என்று எழுதி விட்டு 27-ந் தேதி அறிவாலயத்தில் உயர்நிலைக்குழு என்ற ஒரு கூட்டத்தை போட்டார்.
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை கண்டித்து தீர்மானம் போட்டதோடு மட்டுமல்லாமல் சோனியாகாந்தியும், பிரதமர் மன்மோகன்சிங்கும் வருத்தம் தெரிவித்து இருக்கிறார்கள். இருந்தாலும் இளங்கோவனை கண்டனம் செய்து அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் போட்டார்கள்.
கூட்டணி மந்திரிசபை என்று சொன்ன இளங்கோவன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இவ்வளவு அர்ச்சித்தீர்களே இப்ப எப்படி நேற்று கூட்டணி மந்திரி சபை என்று சொல்றீங்க தோற்க போறோம் என்பதனால் படுதோல்வி அடையப்போகிறோம் என்பதனாலே, இதையாவது சொன்னா கூட்டணி கட்சி காரர்கள் கொஞ்சம் உற்சாகமாக இருப்பார்கள் என்று.
கூட்டணி ஆட்சி ஏற்பட்டால், கருணாநிதி முதல்வராக நிபந்தனையற்ற ஆதரவு - டாக்டர் ராமதாஸ் ( 20/04/06 )
தமிழகத்தில் நான் மட்டும் தான் கடந்த 2 மாதமாக 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என கூறி வருகிறேன். எங்கள் தேர்தல் அறிக்கையில் கூட்டணி அரசில் சேர மாட்டோம் என ஏற்கனவே அறிவித்திருக்கிறோம். அப்படி ஒரு நிலை ஏற்பட்டால் கூட்டணி அரசில் கலைஞர் முதல்வர் ஆவதற்கு நிபந்தனையற்ற ஆதரவு தருவோம்.
இளங்கோவன் ( 20/4/06)
மக்களவைத் தேர்தலின்போது இருந்த எழுச்சி இப்போதும் தெரிகிறது. திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். திமுக தனிப்பெரும்பான்மை பெற்று கருணாநிதி தலைமையில் ஆட்சிக்கு வரும். கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பில்லை.
Posted by IdlyVadai at 4/20/2006 02:58:00 PM 1 comments
Wednesday, April 19, 2006
பார்வர்ட் பிளாக் வேட்பாளர் தற்கொலை முயற்சி
நடிகர் கார்த்திக் தலைமையிலான பார்வர்ட் பிளாக் கட்சியின் திருமங்கலம் தொகுதி வேட்பாளர் செந்தில் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான முயற்சியில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் மதுரை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. நடிகர் கார்த்திக், அதிமுக அணியுடன் கூட்டணி அமைப்பதற்காக ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். எப்படியும் கூட்டணியில் இடம்பெற்றுவிடலாம் என்று கருதிய அவருக்கு கூட்டணியில் தொகுதிகள் அளிக்கப்படாததால் மிகவும் ஏமாற்றமடைந்தார். அதற்குப் பதிலாக பார்வர்ட் பிளாக் அதிருப்தி வேட்பாளர் சந்தானத்திற்கு மட்டும் ஒரு தொகுதியை ஜெயலலிதா வழங்கினார்.
பின்னர் தமிழ்நாடு முழுவதும் தனது கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக கார்த்திக் அறிவித்தார். ஜெயலிதாவுக்கு எதிராகவும் வேட்பாளர் பெயரை அறிவித்தார்.
இந்நிலையில் மதுரை திருமங்கலம் தொகுதி பார்வர்ட் பிளாக் வேட்பாளர் செந்தில் புதன்கிழமை காலை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
சிலர் மிரட்டியதால் அவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.
செய்தி: தினமணி
Update: 21/4/06
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று நள்ளிரவு இறந்தார். இத்தகவலை அக்கட்சியின் மாவட்டத் தலைவர் பூண்டி சுகுமார் தெரிவித்தார்.
Posted by IdlyVadai at 4/19/2006 06:57:00 PM 7 comments
நீ ஆண் மகனா ? - வைகோவிற்கு தயாநிதி சவால்
சரியான ஆண் மகனாக இருந்தால், மீசை வைத்த ஆண் மகனாக இருந்தால் சன் டிவி குறித்து நான் சொன்ன குற்றச்சாட்டுகளுக்காக என் மீது வழக்குப் போடு என்று எனக்கு சவால் விட்டார் வைகோ. அவரது சவாலை ஏற்று அவர் மீது நான் வழக்குப் போட்டுவிட்டேன்.
நாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை. அதனால் தைரியமாக வழக்கையும் போட்டுவிட்டோம்.
அதே போல அவருக்கும் நான் ஒரு சவால் விட்டேன். நீ ஒரு ஆண் மகனாக இருந்தால், ஜெயலலிதாவுடன் ஒரே மேடையில் ஏறி என்னை ஏன் பொடாவில் கைது செய்தீர்கள் என்று ஒரே ஒரு கேள்வியைக் கேள் என்று சொல்லியிருந்தேன். அந்த சவாலுக்கு இதுவரை வைகோவிடம் இருந்து பதில் வரவில்லை.
என் கெட்ட நேரம் பார்த்தீர்களா? பில் கேட்சுடன் எல்லாம் நான் பேசக் கூடிய நிலையில் அமர்ந்திருக்கிறேன். அவருடன் தொழில் திட்டங்கள் குறித்து மணிக்கணக்கில் விவாதிக்கிறேன். அதே நேரத்தில் வைகோ மாதிரியான ஆட்களுக்கு எல்லாம் பதில் சொல்ல, பதிலுக்கு சவால் விட வேண்டிய நிலையிலும் இருக்கிறேன். எல்லாம் என் நேரம் தான்.
தனது பச்சோந்தித்தனத்தால் வைகோ தனது மரியாதையை இழந்துவிட்டார். இப்போது அதிமுகவுக்கு மட்டுமல்ல மதிமுகவுக்கே அவர் ஒரு சுமையாக மாறிவிட்டார்.
நேற்று முன் தினம் ஒரு கூட்டத்தில் வைகோ பேசும்போது, கருணாநிதியால் எப்படி ரூ. 2க்கு அரிசி தர முடியும்? கேட்பவன் என்ன கேனையனா? என்று கேள்வி எழுப்பி அரிசியை குறைந்த விலைக்குத் தரவே முடியாது என்று பொருளாதார நிபுணர் மாதிரி ஏகப்பட்ட புள்ளி விவரங்களோடு பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு ஒரு துண்டு சீட்டு வந்தது. அதில் 10 கிலோ அரிசி வாங்கினால் 10 கிலோ அரிசி இலவசம் என்று ஜெயலலிதா இப்போது தான் ஆண்டிப்பட்டியில் அறிவித்திருக்கிறார் என்று கூறப்பட்டிருந்தது.
உடனே நம்ம வைகோ அடித்தாரே ஒரு பல்டி. நான் அந்தர் பல்டி, அட்டகாச பல்டி எல்லாம் பார்த்திருக்கிறேன். ஆனால், இப்படி ஒரு ஹைஜம்ப் பல்டியை பார்த்தே கிடையாது.
துண்டுச் சீட்டு வந்தவுடன் தனது நாக்கை மாற்றிப் போட்டு பேசி ஆரம்பித்த வைகோ, 10 கிலோ வாங்குனா 10 கிலோ இலவசம். இது எப்படி இருக்கு. புரட்சித் தலைவி வச்சாரா ஆப்பு.. தங்கத் தலைவியின் திட்டத்தைப் பார்த்தீர்களா?.. உங்களுக்காக, ஏழைகளுக்காக அரிசியை இலவசமாகவே தருகிறார் என்று பேச ஆரம்பித்தார்.
அடப் பாவி.. 2 நொடிக்கு முன்னாடி ஒரு வார்த்தை பேசிட்டு அப்படியே பல்டி அடிக்கிறியே.. உன்னை எவன் மதிப்பான். நீங்கள் சொன்ன புள்ளிவிவரம் என்னாச்சு?, விலையையே குறைக்க முடியாது என்று அடித்துப் பேசிய வைகோ துண்டுச் சீட்டு வந்த வினாடியே ஓசிக்கு அரிசி தர முடியும் என்று பேசியது சுத்தமான பச்சோந்தித்தனம் இல்லையா?
அதனால் தான் சொல்கிறேன், வைகோ மரியாதையை இழந்து ரொம்ப நாளாச்சு. நான் வயதில் குறைந்தவன் தான் ஆனாலும் ஜெயலலிதாவுக்கு ஒரு அட்வைஸ் செய்ய விரும்புகிறேன்.
வைகோவை நம்பாதீர்கள். நாளைக்கே நீங்கள் தோற்றால்.. தோற்கப் போவது உறுதி, தோற்றால் உடனே உங்களை விட்டுவிட்டு கலைஞரே என்று கருணாநிதியின் காலில் வந்து விழுந்து அழுவார். எங்கள் தலைவரும் மனமிறங்கி சேர்த்தாலும் சேர்த்துக் கொள்வார் (மாறனே சிரித்தார்).
இப்படிப்பட்ட வைகோவை இந்தத் தேர்தலில் மக்கள் புரட்டிப் போட போகிறார்கள்.
வேலைக்கு ஆள் எடுப்பதை ஜெயலலிதா அரசு நிறுத்தி 5 வருடமாகிவிட்டது. ஆனால், அவரது தேர்தல் அறிக்கையில் 5 லட்சம் வேலை வாய்ப்புக்களை வழங்குவோம் என்கிறார். இது அண்டப் புளுகு இல்லையா.
மத்திய அரசில் உள்ள நாங்கள் தமிழகத்துக்குக் கொண்டு வரும் தொழிற்சாலைகளுக்கும் தடை போடும் ஜெயலலிதாவால் எப்படி இவ்வளவு வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.
தேர்தலில் அதிமுகவுக்குத் தோல்வி உறுதி என்று அவர் ரொம்பவே நம்பும் உளவுப் போலீஸ் ஜெயலலிதாவிடம் எழுதியே தந்துவிட்டது. இதனால் தான் அரிசி தர்றேன்.. ஓசியில தர்றேன் என்று புளுகு மூட்டைகளை அவிழ்த்துவிட ஆரம்பித்துள்ளார்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு ரூபாயில் பேச வழி செய்தவன் நான். அதெல்லாம் சாத்தியமா என்றார்கள். சாத்தியமாக்கிக் காட்டினேன். நோக்கியா தொழிற்சாலையை சென்னைக்குக் கொண்டு வந்தேன்.
ஜெயலலிதா அரசு மட்டும் தடைகள் போடாமல், கமிஷன் கேட்காமல் இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ தொழில்கள் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். நம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்திருக்கும்.
வாக்காளர்களை நான் கேட்டுக் கொள்வதெல்லாம், மத்தியில் நம் அரசு. மாநிலத்திலும் கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் தமிழ்நாட்டுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் கொண்டு வந்து கொட்டுவோம். தமிழக பொருளாதாரத்தை உயர்த்துவோம்.
வேலைவாய்ப்புகளை உருவாக்கி இளைஞர்களை கை தூக்கிவிட முயல்வோம். வளர்ச்சித் திட்டங்களை அமலாக்கி மாநிலத்தை உயர்த்துவோம். இதெல்லாம் சாத்தியமான உறுதிமொழிகள் தான்.
அதற்கு மத்தியிலும் மாநிலத்திலும் நம் ஆட்சி வர வேண்டும். அந்த வகையில் யோசித்து, சிந்தித்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார் மாறன்.
நன்றி: thatstamil.com
Posted by IdlyVadai at 4/19/2006 04:34:00 PM 8 comments