பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Friday, March 31, 2006

FLASH: நட்ராஜ் இடமாற்றம் - தீர்ப்பு

நேற்று தேர்தல் கமிஷன் சரியா தவறா என்று பதிவு எழுதியிருந்தேன்.

இன்று ஐகோர்ட் தீர்ப்பு வந்துள்ளது

தமிழக முதல்வரைப் புகழ்ந்து பேசியதாக சென்னை போலீஸ் கமிஷனர் நட்ராஜை இடமாற்றம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் கமிஷனின் உத்தரவு தமிழக அரசை கட்டுப்படுத்தாது என்று சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Update:

தீர்ப்பின் விபரம் :

போலீஸ் அதிகாரி நடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷனுடன் தமிழக அரசு கலந்து பேசி தெளிவான நிலை எடுக்க வேண்டும். கமிஷனர் நடராஜ் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட உத்தரவு இப்போது தமிழக அரசை கட்டுப்படுத்தும் என்று நாம் கருத தேவை இல்லை, என்றாலும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பாக தேர்தல் கமிஷன் உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசு வது நல்லது. ஏப்ரல் 13-ந் தேதி தேர்தல் அறிவிக்கை வெளியிட்ட பிறகு தேர்தல் கமிஷனுக்கு முழு அதிகாரம் கிடைத்து விடும் என்பதால் அதற்குள் மாநில அரசு தேர்தல் கமிஷனுடன் ஆலோசித்து முடிவு செய்ய வேண்டும்.

தமிழக அரசு இந்த விஷ யத்தில் தக்க முடிவு எடுப்பது நல்லது. இதில் தெளிவான நிலை இல்லாமல் இருப்பது நல்லது அல்ல.

கமிஷனர் நடராஜ் மாநில அரசின் பெரிய அதிகாரியாக இருப்பதால் தேர்தல் கமிஷன் மாநில அரசுடன் கலந்து பேசிய பிறகே முடிவு எடுத்து இருக்க வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் தேர்தல் கமிஷன் உத்தரவு கட்டுப்படுத்தாது. என்றாலும் 13-ந்தேதிக்கு பிறகு அந்த அதிகாரம் வந்து விடும்.

அரசியல் சட்டம் 324 வது பிரிவின்படி தேர்தல் கமிஷனுக்கு அதிக அதிகாரம் இப்போது உள்ளது என்று சொல்ல முடியாது. கமிஷனர் நடராஜ் சொன்ன கருத்துக்கள் பாதிப்பை ஏற்படுத்தாது என்று உடனே நிராகரிக்க இயலாது. இது குறைந்த அளவு பாதிப்பை ஏற்படுத்தலாம்.

தகைய விவகாரங்களில் நேரடியாக பேசாமல் தன் பதிவியை உணர்ந்து கவனத்துடன் பேசி இருக்க வேண்டும். இது பற்றி தேர்தல் கமிஷனும் மாநில அரசுக்கு முன் கூட்டியே நோட்டீசு அனுப்பி கலந்து பேசி இருக்க வேண்டும்.

தமிழக அரசும் தேர்தல் கமிஷனும் ஒரு ஆரோக்கியமான கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். இதற்கு இரு தரப்பினரும் கலந்து பேசி தக்க முடிவு எடுக்க வேண்டும்.

தீர்ப்பு குறித்து தேர்தல் கமிஷன் வக்கீல் ஜி.ராஜ கோபால் :

கமிஷனர் நடராஜ் பெண்கள் தினம் பற்றி கூறிய கருத்துக்கள் சரியாப தவறாப என்று தேர்தல் கமிஷன் தான் முடிவு செய்ய வேண்டும். கமிஷனரின் இடமாற்றம் உத்தரவு தொடர் பாக மாநில அரசுடன் கலந்து பேசி முடிவு எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது.

தேர்தல்கமிஷன் மாநில அரசு இரண்டுக்கும் அதிக அதி காரங்கள் உள்ளன என் பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டி உள்ளனர். தேர்தல் கமிஷனின் உத்தரவு ஏப்ரல் 13-ந் தேதி முதல் அமலுக்கு வருவதால் அதன் பிறகு அவர்கள் அதிகாரிகளை மாற்ற அதிகாரம் பெற்று விடுவார்கள். கமிஷனர் தனது கருத்தை தெரிவிக்கையில் ஜாக் கிரதையாக பேசி இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

3 Comments:

பறக்கும் பட்டம் said...

செய்தி வந்த உடனேயே போட்டுட்டீங்களே! வாழ்த்துகள். கவிஞர் சல்மாவுக்கு திமுகவில சீட்டாமே...

சீனு said...

// தமிழக அரசை கட்டுப்படுத்தாது// அப்படீன்ன என்ன?

நட்டு மாறுவாரா? இல்லையா?

IdlyVadai said...

சீனு - பதிவை அப்டேட் செய்திருக்கிறேன். பாருங்கள்