பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 23, 2006

FLASH: சோனியா எம்.பி பதவியை ராஜினாமா செய்தார்

சோனியா தனது எம்.பி., பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, ஆதாயம் தரும் பதவியில் இருப்பதாக ஜெயா பச்சனின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பார்லிமென்ட்டில் அமளியில் ஈடுபட்டன. இடது சாரிக் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. சோனியா காந்தியும் ஆதாயம் தரும் பதவியை வகிப்பதால் அவரை எம்.பி., பதவியில் இருந்து விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்நிலையில், காங்., தலைவர் சோனியா தனது எம்.பி., பதவியையும், தேசிய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும், தனது தொகுதியான ரே பரேலியில் மீண்டும் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

Update 1:
Text of Congress president Sonia Gandhi's statement

"For the last two days, some people have been trying to create an atmosphere as if the government and parliament are being used to favour me. This has hurt me very much.

I have stated it earlier also that I am in politics and public life not for my selfish ends.

I have taken a pledge to serve the people of the country and to protect the secular ideals. So, in keeping with my public life and political principles and according to my own belief, I resign as member of Lok Sabha and chairperson of National Advisory Council.

I have full faith that brothers and sisters of Rae Bareli and the whole nation will understand this feeling of mine.

I have been dragged into a needless controversy. I hope people in Rae Bareli will understand me."


சோனியா செய்தது மகத்தான தியாகம் - கபில் சிபில்
வருத்தமாக இருக்கிறது - ஜெயந்தி நடராஜன்
அவர்கள் செய்த சூழ்ச்சியில் அவர்களே மாட்டிக்கொண்டார்கள் - பா.ஜ.க
கம்யூனிஸ்ட் எம்பிக்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டார்கள் - சீத்தாராம் எச்சூரி

Update 2 :
மதி கார்ட்டூன் !


19 Comments:

Anonymous said...

meeyaluma.....

ippadiyum naamnatil thalaivargala oru maari ennaiya mumari malai peyum

மணியன் said...

என்னங்க இப்படி பண்ணிட்டாங்க, சோம்நாத் உள்ளிட்ட மத்தவங்க பாடு திண்டாட்டமாகி விட்டதே!

தயா said...

Nothing but a game to gain political mileage.

She should have resigned the council post and not the MP one.

Congress has fallen into its own trap and Sonia knows how to turn this to her favour perfectly. By resigning from both the posts, she send other 40+ MPS who hold such positions to nuts.

I guess they are safe as Media and opposition will forget the rest and focus on this Drama now.

mummari malai peyum ena nambum anonymous-kalai enna seyvathu?

Have to watch the News channel tonight and how they turn advantage to Sonia?

IBN has posted some remarks on their website and looks like they are not impressed.

NDTV and TVToday may be on sonia side.

யோசிப்பவர் said...

ithu appattamaana arasiyal stunt!

வாசகன் said...

//Nothing but a game to gain political mileage.//

//ithu appattamaana arasiyal stunt!//

If a politician is sincere to his/her antharaathma then there are 'readymade phrases' as above to spoil the spirit.

If this is for gaining political mileage, why not Advani did the same when he was a home minister and an accused.

Amar said...

ஆடுத்த நாடகம்!
மக்கள அத்தனை ஏமாளிகளா என்ன?

Sud Gopal said...

ஆஹா...இன்னும் கொஞ்ச நாளைக்கு ஜெயந்தி நடராஜன்,கபில் சிபல்,ரேணுகா சௌத்ரி,ஜெயராம் ரமேஷ் காட்டில மழ தான்.

barathee|பாரதி said...

பாஜக, காங்கிரஸ் ஆடும் ஆட்டத்தில் இன்னும் எத்தணை நடக்குமோ.. தொகுதிக்கு யாரப்பா பதில் சொல்வார்?
பணம் வேஸ்ட். தேர்தல் வேஸ்ட். ஓட்டுப்போட நடந்த மக்களின் நடையும் வேஸ்ட்.

நியோ / neo said...

அத்வானி பெரிசும், வாஜ்பாயும்தான் இப்போது முழிப்பதாகத் தகவல்!

சோனியா இரண்டு வருடங்களில் இரண்டு முறை இந்தப் பண்டாரங்களுக்கு நாமம் போட்டு விட்டார்!

சோனியாவுக்காகத்தான் அவசரச் சட்டம் கொண்டு வரப்படுகிறது என்று பாஜகவினர் குதித்துக் கொண்டிருந்தார்கள்! இப்போது சோனியா போல 'ஆதாயம் தரும் பதவியிலிருக்கும்' விஜய் மல்ஹோத்ரா ராஜினாமா செய்வாரா என்று கேட்டால் பாஜகவினர் உளறிக்கொட்ட ஆரம்பிக்கிறார்கள்!

இவர்களை விடவும் 'சாணக்கியத்தனம்' சோனியா அம்மையாருக்கு உண்டென்பதை இந்த நிகழ்வு மீண்டும் நிரூபித்திருக்கிறது!

கொலைகார மோடியை பாதுகாக்கும் கேடிகளுக்கு "சோனியா"த்தனமே சரியான வழி! :)

Sivabalan said...

Even it is political drama, Do anybody have guts to refuse PM Post and MP post? that too in a high competitive politics.

She definitely opens up a big debate which may bring more votes to congress in coming elections.

பினாத்தல் சுரேஷ் said...

சோனியா அற்புதமான அதிர்ஷ்டம் படைத்தவர். பிரதம மந்திரி பதவி கிடைப்பதில் சிக்கல் என்ற "உடனே" தியாகம் செய்தார்; ஜெயா பச்சனின் பதவி பறி போன "உடனே" தார்மீக ரீதியாக முடிவெடுக்கிறார். அதுவும் பெரிய தியாகமாக மதிக்கப்படுகிறது!

துளசி கோபால் said...

எனக்கு ஒண்ணும் புரியலீங்களே(-:

'எம்.பி. பதவிங்க எல்லாமே ஆதாயம் தரும் பதவி' இல்லையா?
ஜனங்களுக்கு சேவை செய்யவா அரசியலுக்கு ஆளுங்க போய் எலீக்ஷன்லே நின்னு ஜெயிக்கறாங்க?

எனக்கு ஒண்ணும் புரியலீங்களே(-:

Anonymous said...

If Sonia had not resigned, she would have been disqualified by the President. She was clever enough to avoid that disgrace. That's it. This is no sacrifice that she is doing for the country.

IdlyVadai said...

//ஜெயா பச்சனின் பதவி பறி போன "உடனே" தார்மீக ரீதியாக முடிவெடுக்கிறார். அதுவும் பெரிய தியாகமாக மதிக்கப்படுகிறது!//

இல்லை. அப்துல் கலாம் எதிர் கட்சியின் மனுவை தேர்தல் ஆனையத்துக்கு அனுப்பியுள்ளார். எங்கே ஜெயா பச்சன் மாதிரி தனக்கு ஆகிவிடுமோ என்று ராஜினாம செய்துள்ளார்.

தயா said...

Karuthu Kandasami,

If this is not a political stunt, why she didn't resign only the post which is office of profit as described by others? She need not have resigned the MP one.

If she listens to antharathma, why she wants to contest again?

She knows what is best and playing the cards rightly. She don't have any problems as long as the feelers and supporters like you who thinks this is renunciation.

Haranprasanna said...

சோனியா பதவி விலகுவதைத் தவிர வேறு வழியில்லை. அதனால் பதவி விலகினார். இல்லையென்றால் தேர்தல் ஆணையம் அம்முடிவை எடுத்திருக்கலாம். (எடுத்திருக்கும் என்பதை உறுதியாகச் சொல்லமுடியவில்லை. தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் ஒரு சார்பாக இருக்கும் தோற்றம் பெற்றுவிட்டன.) மேலும் சட்டத் திருத்தத்தைக் கடுமையாக இடதுசாரிகள் எதிர்த்தார்கள். அதனால் சோனியாவுக்கு வேறு வழியிருக்கவில்லை. பதவியும் விலகவேண்டும், அது தனக்குச் சாதகமானதாகவும் இருக்கவேண்டும் - ஒரே வழி திடீர் ராஜினாமா செய்வதே என்கிற முடிவுக்கு வந்தார். இம்முடிவு அவர் எதிர்பார்த்த பலன்களைத் தந்திருக்கிறது. என்னதான் வேறு வழியில்லாததால் ராஜினாமா செய்தார் என்று சொன்னாலும் மக்கள் மத்தியில் அவர் பதவியை உதறினார் என்பதே எடுபடும். இதைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 60 எம்.பி.க்கள் பதவி விலக வேண்டியிருக்குமென்றும் அதில் மத்திய அரசுக்கு ஆதரவு தருபவர்கள் கிட்டத்தட்ட 44 பேர்கள் என்றும் செய்தி அடிபடுகிறது. இது உண்மையாக இருக்குமானால், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து அவர்களது எம்.பி.பதவிகளைப் பறிக்குமானால், மத்திய ஆட்சியின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படும். இடதுசாரிகளும், சமாஜ்வாதியும் தங்கள் நிலையில் மாற்றமில்லை என்றும் தங்கள் எம்.பி.க்கள் ராஜினாமா செய்யமாட்டார்கள் என்றும் அறிவித்திருக்கிறார்கள். (சமாஜ்வாதி அவசரச் சட்டம் கொண்டுவந்தது, அதை ஆளுநர் ஏற்கவில்லை என்று தெரிகிறது.)

காங்கிரஸ் ஆரம்பித்த பழிவாங்கல் நடவடிக்கையில் காங்கிரஸே மாட்டிக்கொண்டுவிட்டது. (அவசரச் சட்டம் கொண்டுவருமாறு அறிவுறுத்திய மத்திய சட்ட அமைச்சரின் பதவியும் பறிக்கப்படலாம் என்று உறுதியற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.)

எங்கோ ஆரம்பித்து, எங்கேயோ மாட்டிக்கொண்டுவிட்டது காங்கிரஸ்.

இதில் சோனியாவின் அதிரடி முடிவைப் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. என்ன செய்தால், பா.ஜ.க. முழிக்கும் என்பதை அறிந்து செய்துவருகிறார். வேறு வழியில்லாமல் ராஜினாமா செய்ததைத் தியாகம் என்று சொல்லி பெயர் வாங்கிக்கொண்டார். (இதை அறியாத காங்கிரஸ் கட்சி நாடெங்கும் அத்வானியின் உருவ பொம்மையைக் கொளுத்துகிறது. அப்படியானால் இது பா.ஜ.க.வின் வெற்றி என்பதாகிவிடும். காங்கிரஸ் ஒன்று சொல்ல தொண்டர்கள் ஒன்று செய்வது காங்கிரஸுக்குப் புதியதல்ல!) பிரதமர் பதவியை உதறி, வெளிநாட்டில் பிறந்தவர் பிரதரமராகலாமா என்கிற பிரச்சினைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார். அடுத்த தேர்தலில் மீண்டும் "வெளிநாட்டில் பிறந்தவர்" என்கிற வாதம் எடுபடும் என்று நான் நினைக்கவில்லை. ஒரே பல்லவி இரண்டு தேர்தல்களுக்கு எடுபடுவதில்லை. இதை அறிந்தே சோனியா பா.ஜ.க.வை சரியான இடத்தில் அடித்திருக்கிறார்.

IdlyVadai said...

பிரசன்னா - நல்ல எழுதியிருக்கிறீர்கள்.

Anonymous said...

Cong (I): The Oscar for the Best Actor goes to ........ Deve Gowda! Deve Gowda!!

People: The Oscar for the Best Actress goes to....... Sonia Gandhi! Sonia Gandhi!!

The rate at which "Renouncement Queen" Sonia "renounces" her positions one by one, the day is not far off when she will be forced to "renounce" India itself & run away to Quattrochhi land.

Kettle

Anonymous said...

//If this is not a political stunt, why she didn't resign only the post which is office of profit as described by others? She need not have resigned the MP one.
//
adra sakka adra sakka emma periya unmaiepaa

kaasu vangi camerala vanthum resign pannam courtuku ponnanuga,ithuku bjp support vera