பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 15, 2006

FLASH: நோ வாய்ஸ்: ரஜினி அறிவிப்பு

"ரஜினிகாந்த் யாருக்கும் எதிரி அல்ல, அவருக்கும் யாரும் எதிரி இல்லை. வரும் தேர்தலில் அவர் அரசியல் பற்றி பேச மாட்டார்' --இது ரஜினி ரசிகர் மன்றத்தினருக்கு சத்தியநாராயணா அனுப்பியுள்ள அறிக்கை.

"ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என 1996-ல் ரஜினி கொடுத்த "வாய்ஸýக்கு' செல்வாக்கிருந்தது. ஆனால் மக்களவைத் தேர்தலில் பாமகவுக்கு எதிரான ரஜினியின் "வாய்ஸ்' எடுபடவில்லை. ஜெயலலிதாவுக்கு எதிராக இருந்த ரஜினி அதற்குப் பின் அவரை "தைரியலஷ்மி' எனப் பாராட்டவும் செய்தார்.

இத் தேர்தலில் ரஜினி "வாய்ஸ்' யாருக்கு என்று அவரது ரசிகர்கள் குழம்பிப் போயிருந்தனர். சிலரோ தாங்களாகவே "ரஜினிகாந்த் இவருக்கு நண்பர், அவருக்கு எதிரி, இவருக்கு ஆதரவு, அவருக்கு ஆதரவு இல்லை' என விளம்பரம் எழுதவும், போஸ்டர் ஒட்டவும் செய்தனர். மேலும் சிலர் ரஜினி மன்றம் சார்பில் தேர்தலில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருந்தனர்.

இதுபோன்ற குழப்பங்களைத் தடுப்பதற்காக, ரஜினி மன்ற அகில இந்தியத் தலைவர் க.சத்தியநாராயணா, அனைத்து மாவட்ட ரசிகர் மன்றப் பொறுப்பாளர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

"சிவாஜி படப்பிடிப்பில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கும் ரஜினியிடமிருந்து, வரும் தேர்தலில் அரசியல் சம்பந்தமாக எந்த அறிக்கையும் வராது. அவர் அரசியல் பற்றி பேசவும் மாட்டார் என்பதை ரஜினி ஒப்புதலுடன் தெரிவிக்கிறோம்.

பல்வேறு கட்சிகளின் ஆதரவாளர்களாக உள்ள ரசிகர்கள், தனிப்பட்ட முறையில், உங்கள் விருப்பப்படி ஆதரவைத் தெரிவித்துக் கொள்ளலாம். இது உங்களது உரிமையும் ஆகும்.

எனவே ரஜினி மன்றத்தின் பெயரிலோ, ரசிகர் பெயரிலோ கூட்டம் போட்டு விவாதிப்பது, போஸ்டர் அடிப்பது, நோட்டீஸ் விநியோகிப்பது, விளம்பரம் எழுதுவது, வேட்பாளர்களை நிறுத்துவது கூடாது. மீறுவோர் மன்றத்திலிருந்து கண்டிப்பாக நீக்கப்படுவார்கள்' என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத் தேர்தலில் தனது ஆதரவு யாருக்கும் இல்லை என சத்தியநாராயணா மூலம் ரஜினி தெளிவுபடுத்திவிட்டார். அவர் ஒருமுறை "நோ வாய்ஸ்' என கூறினால், அது நூறு முறை கூறியதற்கு சமம்.

நன்றி: தினமணி

22 Comments:

Anonymous said...

அவரும் குழம்பி மத்தவங்களைக் குழப்புறதுக்கு பதில் அவர் பேசாமலே இருக்கலாம்

ஜோ/Joe said...

//"ஜெயலலிதா மீண்டும் முதல்வரானால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது' என 1996-ல் ரஜினி கொடுத்த "வாய்ஸýக்கு' செல்வாக்கிருந்தது. //

இந்த பொய்யை எத்தனை தடவை சொல்லுவாங்க!ரஜினி வாய்ஸ் குடுக்காவிட்டாலும் மக்கள் ஜெயலலிதாவை தோற்கடிக்குற முடிவுக்கு அப்போ வந்திருந்தாங்க.இவர் வாய்ஸ் குடுத்துத் தான் திமுக ஜெயிச்சுதுங்குறதெல்லாம் பேத்தல்.

அது சரி..இப்போ இவர் வாய்ஸ் பத்தி யாரு கேட்டாங்களாம்..அவனவன் எங்கே இவர் நமக்கு வாய்ஸ் குடுத்து நம்மளை தோக்கடிச்சுருவாரோ-ன்னு ஓடி ஒளிஞ்சுகிட்டிருக்கான் .பெரிய இவரு மாதிரி வாக்குச்சாவடியிலே வச்சு 'நான் அதிமுக -வுக்கு தான் ஓட்டு போட்டேன்'-னாரு ..மக்கள் 40-லயும் வச்சாங்க ஆப்பு.

Anonymous said...

romba romba nanri thalaivaa! namma velaiya parpom.

siva gnanamji(#18100882083107547329) said...

thamadhu cinima puhashai misuse
pannavittal kuzhappa vadhiya?

kamalum rajaniyum visirigalai exploit seyyamal iruppadhu parattukku uriyadhu

endha koothadi entha katchiyil irundhalum andha katchikku avaral enro orunal aabaththu erpadum

idhu mgr mudhal sarath varai unmai

எண்ணச்சிதறல்கள் said...

இதுதாம்பா தலைவர் வுட்டதுலயே பெஸ்ட் வாய்ஸ்!!!

rajkumar said...

இன்று என்னதான் கடற்புரத்தான் கரடியாய் கத்தினாலும் அன்றைய (1996) அராஜக அரசை எதிர்த்து ஒருமித்த கருத்தை உருவாக்கியதில் முக்கிய பங்கு ரஜினியையே சேரும்.

அதற்கு பின்னால் தீவிர அரசியலில் இறங்குவதற்கான மெனெக்கிடுதலும், முனைப்பும் ரஜினிக்கு இல்லை.

தான் அணி சேரும் கட்சியெல்லாம் வெற்றி பெற வேண்டும் என எதிர்பார்க்க, போராட அவர் ஒன்றும் அரசியல்வாதி ராம்தாஸ் அல்ல. தோற்றுவிடுவார்கள் என்று தெரிந்துதான் அதிமுகவிற்கு ஆதரவு தந்தார்.

1996 வரலாற்றை ஜோ என்னதான் கூக்குரலிட்டாலும் மாற்ற முடியாது.மற்றபடி அரசியலுக்கு தேவைப்படும் உறுதியும், சில தியாகங்களும் (??) செய்ய இயலாத நிலையில் ரஜினி நடிப்பதுடன் நிறுத்திக் கொள்வதே சரியான முடிவு.

Muthu said...

ராஜ்குமார்,

நீங்க என்னதான் ஜோவை கரடின்னு சொன்னாலும் "தலைவர்" வாய்ஸ் என்பது ஒரு துன்பியல் சம்பவம்தான்.

கண்டிப்பா ஜெயிப்போம்னா தான் அரசியலுக்கு வரணும்னு தலைவருக்கு ஒரு அல்ப ஆசை.

டி ராஜ்/ DRaj said...

சிவஞானம்ஜி: //rajaniyum visirigalai exploit seyyamal iruppadhu parattukku uriyadhu//

நேத்து கந்தெக்டர், இன்னிக்கு நடிகன் (read சூப்பர் ஸ்டார்), நாளைக்கு ... ஹாஹா (வானத்தை பாத்து சிரிப்பு)

எப்போ வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துக்கு சரியா வருவேன்

இதெல்லாம் ரசிகர்களை அரசியல் வடை காட்டி exploit செய்தது தானே?

Anonymous said...

டக் டக் டக்.. ரஜினி ராம்கி are you there ?

ஜோ/Joe said...

நண்பர் ராஜ்குமார்,
1996-ல் ரஜினியின் வாய்ஸ் இல்லாவிட்டாலும் ஜெயலலிதா படு தோல்வி அடைந்திருப்பார் .ரஜினியின் வாய்ஸ் கூட்டிய 2 அல்லது 3 சதவீத வாக்குகள் படுதோல்வியை 'படு படு தோல்வி' யாக மாற்றியது என்பது உண்மை .ஆனால் நீங்களும் பத்திரிகைகளும் நிறுவமுனைவது போல ,ரஜினி வாய்சுக்கு முன்னால் ஜெயலலிதா வெற்றி பெற வாய்ப்பு இருந்து ரஜினியின் வாய்ஸ் முடிவையே தலை கீழாக மாற்றி விட்டது என்பதெல்லாம் ,கொஞ்சம் ஓவராக இல்லை .ரஜினியின் வாய்ஸ் முடிவுகளை மாற்றக் கூடிய சக்தி படைத்ததல்ல என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது .இப்போது அந்த நிலை இன்னும் கீழே போய் அவர் ஆதரிப்பவர்களுக்கு பின்னடைவே என்ற நிலை தான் இருக்கிறது .

ரஜினி ஒன்றும் எம்.ஜி.ஆர் அல்ல .ரஜினி பெரிய சூப்பர் ஸ்டார் தான் .அவரது திரைப்படங்களை அதிகமான பேர் ரசிக்கிறார்கள் .ஆனால் எம்.ஜி.ஆர் போல அவர் தலைவர் அல்ல .வெறும் காமெடியன் .திரைப்படத்தில் அவர் நடிப்பை ,ஒரு பபூனை ரசிப்பது போல பலர் (நான் உட்பட) ரசிக்கிறார்கள் .மற்றபடி திரைக்கு வெளியே அவரை பெரும்பாலோர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை .ஆனானப்பட்ட நடிகர் திலகமே எடுபடவில்லை.இவர் எம்மாத்திரம்.அதை இப்போது ரஜினி நன்கு உணர்ந்திருக்கிறார் .அந்த வகையில் ரஜினி புத்திசாலி .ஆனால் அவர் ரசிகர்கள் திருந்துவதற்க்கு நாளாகலாம்.

J. Ramki said...

ஆண்டவா...

அடுத்தவரை வாழ வைக்கும்
எங்களது முயற்சிகள்
வெற்றி பெறட்டும்!

அடுத்தவரை வீழ வைக்கும்
எங்களது முயற்சிகள்
தோல்வியுறட்டும்!

:-)

rajkumar said...

//1996-ல் ரஜினியின் வாய்ஸ் இல்லாவிட்டாலும் ஜெயலலிதா படு தோல்வி அடைந்திருப்பார் .ரஜினியின் வாய்ஸ் கூட்டிய 2 அல்லது 3 சதவீத வாக்குகள் படுதோல்வியை 'படு படு தோல்வி' யாக மாற்றியது என்பது உண்மை//

இதை வெற்றி பெற்ற கலைஞரும் மூப்பனாரும் கூட மானசீகமாக ஒப்புக் கொள்ள மாட்டார்கள். அக்கால சம்பவங்களை நினைவுபடுத்திப் பாருங்கள். காங்கிரஸ் தலைமையிடம் அதிமுகவிடம் கூட்டணி வைத்ததும், மூப்பனார் பிரிய நேரிட்டதும் நினைவுக்கு வருகிறதா? பிரிந்த காங்கிரஸிற்கு குறுகிய காலத்தில் பிரபலத்தையும், ஒருங்கிணைப்பையும் வழங்கியது ரஜினியின் பிரபல்யம். சொற்ப நாட்களுக்குள்ளாகவே சைக்கிள் சின்னத்தை அண்ணாமலை சைக்கிள் போஸ்டரை ஒட்டித்தான் பிரபல படுத்தினார்கள். அன்றைய தா.மா.கா -தி.மு.க இணைப்பு ரஜினியில்லாமல் சாத்தியப்பட்டிருக்காது என்பது உண்மை.
இதைக்குறித்து ப.சிதம்பரம் ஜூனியர் விகடனில் ஒரு தொடரை எழுதினார். ஆக மொத்தம் ரஜினியின் செல்வாக்கு அவரை வைத்து வெற்றி சம்பாதித்தவர்களுக்கு நன்றாக தெரியும்.

மற்றபடி ரஜினி அரசியல் களத்திற்கு ஏற்றவரல்ல என்பதுதான் என் கருத்து. அதற்காக 96ம் ஆண்டின் உண்மைகளை ஜோவைப் போல மறுதலித்து பேச என்னால் இயலாது.

rajkumar said...

//ஆனால் எம்.ஜி.ஆர் போல அவர் தலைவர் அல்ல .வெறும் காமெடியன் .திரைப்படத்தில் அவர் நடிப்பை ,ஒரு பபூனை ரசிப்பது போல பலர் (நான் உட்பட) ரசிக்கிறார்கள் .மற்றபடி திரைக்கு வெளியே அவரை பெரும்பாலோர் சீரியஸாக எடுத்துக்கொள்வதில்லை//

இவையெல்லாம் ரஜினி ரசிகர்கள் மனம் புண்படட்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக கூறப்படும் வார்த்தைகள். ஆனால் ரஜினியின் காமெடியையாவது காசு கொடுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வைகோ, ராமதாஸ் ஆகியோர் செய்யும் காமெடிகளை காசு செலவில்லாமல் பார்க்க முடிகிறது.

இந்த காமெடியர்களை காட்டிலும் நடிகர்கள் தேவலை.

தருமி said...

"ஆனால் அவர் ரசிகர்கள் திருந்துவதற்க்கு நாளாகலாம்"//- அப்படியா சொல்றீங்க, ஜோ? எனக்கு நம்பிக்கையில்லை..

J. Ramki said...

// எனக்கு நம்பிக்கையில்லை..

எனக்கும்தான்! -:-)

அதுக்காக இப்படி கன்னத்துல கைய வெச்சுக்கினு... என்ன இது?!

ஜோ/Joe said...

//இவையெல்லாம் ரஜினி ரசிகர்கள் மனம் புண்படட்டும் என்பதற்காக வலுக்கட்டாயமாக கூறப்படும் வார்த்தைகள்.//
கண்டிப்பாக அந்த எண்ணம் எனக்கில்லை .உங்கள் மனம் புண்பட்டிருந்தால் (ஏனென்று புரியாவிடினும்) வருந்துகிறேன்.

//ஆனால் ரஜினியின் காமெடியையாவது காசு கொடுத்துதான் பார்க்க வேண்டும். ஆனால் வைகோ, ராமதாஸ் ஆகியோர் செய்யும் காமெடிகளை காசு செலவில்லாமல் பார்க்க முடிகிறது.//
சம்பந்தமே இல்லயே!நானும் ரஜினியின் காமெடி நடிப்புக்கு ரசிகனே..அப்புறம் வைகோ ராமதாஸ் போன்றவர்கள் பண்ணும் காமெடியை ரசிப்பதற்காகவே காசு கொடுத்து விகடன்.காம் பதிந்திருக்கிறேன்.

//இந்த காமெடியர்களை காட்டிலும் நடிகர்கள் தேவலை. //
உண்மை தான் .நடிகர்கள் வெறும் நடிகர்களாக இருக்கும் வரை!

தருமி,
//அப்படியா சொல்றீங்க, ஜோ? எனக்கு நம்பிக்கையில்லை.. //
அட போங்கப்பா..உங்களுக்கு கடவுள் நம்பிக்கையே இல்ல..பாபா படம் பார்த்தாவது திருந்துங்க..ஹி..ஹி

Anonymous said...

இண்டர்நெட்ல எவன் வேணாலும் எதையும் எழுதலாந்தான். அதுக்காக தொடர்ந்து ரஜினியைத் தாக்கி வரும் இந்த ஜோ போன்றவர்கள் 'பபூன்' போல நடிப்பது என்று சொல்வதெல்லாம் இங்கே சண்டையைக் கிளப்பும் நோக்கத்தில் மட்டுமே. வன்மையாகக் கண்டிக்கிறேன்.
- கமலேஷ்

ஜோ/Joe said...

கமலேஷ்,
நான் சொன்னது இது தான்"ஒரு பபூனை ரசிப்பது போல பலர் (நான் உட்பட) ரசிக்கிறார்கள்" ..ஆனால் நீங்களோ நான் ரஜினி 'பபூன்' போல நடிப்பதாக சொன்னதாக சொல்லுகிறீர்கள் .உண்மையிலேயே உங்களுக்கு வித்தியாசம் தெரியவில்லையா? எம்.ஜி.ஆரோடு ஒப்பிட்டு மக்கள் எப்படி ரசிக்கிறார்கள் என்பதைத் தான் சொன்னேன் .எம்.ஜி.ஆர் பேசும் வசனங்களை மக்கள் சீரியஸாக எடுத்தார்கள் .ஏனென்றால் அவர் அதை காமெடியாக பண்ணுவதில்லை .ஆனால் ரஜினி பாணி வேறு .அவர் சொல்லுவதை விட சொல்லுகிற பாணியைத் தான் ரசித்தார்கள் ..இது தான் ஐயா நான் சொல்ல வந்தது .அதற்கு நான் ஏதோ ரஜினியை குறை சொல்வதையே தொழிலாக வைத்திருப்பது மாதிரி சொல்லுகிறீர்கள் ..ஆளை விடுங்கப்பா!

பிரதீப் said...

எப்படியானால் என்ன?
இப்ப அவர் ரசிகர்களுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச மதிப்பும் கோவிந்தா. பல இடங்களில் விஜயகாந்தின் "தொண்டர்"கள் முன் ரஜினி ரசிகர்கள் ஏற்கனவே கூனிக் குறுகிப் போயிருந்தார்கள். இப்பக் கேக்கவே வேணாம்.

அனேகமா இவங்களே உள்குத்து வேலைய ஆரம்பிச்சுருவாங்கன்னு நினைக்கிறேன்.

Anonymous said...

//ரஜினியின் வாய்ஸ் முடிவுகளை மாற்றக் கூடிய சக்தி படைத்ததல்ல என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது .இப்போது அந்த நிலை இன்னும் கீழே போய் அவர் ஆதரிப்பவர்களுக்கு பின்னடைவே என்ற நிலை தான் இருக்கிறது .//

பின்னடைவு அடைந்திருக்கும் அணிக்கு ரஜினி வாய்ஸ் கொடுத்தாலும் பிரயோசனமில்லை என்று நீங்கள் சொன்னால் ஒப்புக் கொள்ளும்படி இருக்கும். ஆனால் அதற்கு மாறாக ரஜினி வாய்ஸ் கொடுக்கும் அணிக்கு அந்தக் காரணத்தினாலேயே பின்னடைவு ஏற்படும் என்பதும் "கொஞ்சம் ஓவர்" தான்.

Anonymous said...

இந்த விவகாரத்தில் என் கருத்துக்கள் மிகப்பெரிதாய் நீண்டதால் தனிப்பதிவாகவே செய்திருக்கிறேன்.

இங்கே பார்க்கவும்: தலைவர் வாய்ஸ்

-- Vignesh

சீனு said...

அடேங்கப்பா...ரஜினியைப் பத்தின பக்கத்துக்கு எத்தனை comments...

சீனு.