பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 30, 2006

மதிமுக வேட்பாளர்கள் பட்டியல் - வைகோ போட்டியில்லை

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ தேர்தலில் போட்டியிடவில்லை. வைகோ சிவகாசி தொகுதியில் அவர் நிச்சயம் போட்டியிடுவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், தான் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வைகோ நேற்று இரவு அறிவித்தார். அவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சிவகாசி தொகுதியில் ஞானதாஸ் என்பவர் போட்டியிடுகிறார்.

ம.தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல் விவரம்:

1. துறைமுகம் - சீமா பஷீர்
2. எழும்பூர் - மல்லை சத்யா
3. பெரம்பூர் - மணிமாறன்
4. அண்ணாநகர் - விஜயா தாயன்பன்
5. தாம்பரம் - பாலவாக்கம் சோமு
6. பூந்தமல்லி - டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன்
7. வேலூர் - சுப்ரமணி
8. திருப்பத்தூர் - கே.எஸ்.அழகிரி
9. செஞ்சி - மாசிலாமணி
10.நெல்லிக்குப்பம் - சபாபதி மோகன்
11. குறிஞ்சிப்பாடி - ராமலிங்கம்
12. பட்டுக்கோட்டை - விஸ்வநாதன்
13. மயிலாடுதுறை - மகாலிங்கம்
14. திருச்சி 1 - மலர்மன்னன்
15. தொட்டியம் - நடராஜன்
16. அரவக்குறிச்சி - பி.ராமசாமி
17. தாரமங்கலம் - தாமரைக்கண்ணன்
18. கபிலர்மலை - குருசாமி
19. தர்மபுரி - வி.எஸ்.சம்பத்
20. தொண்டாமுத்தூர் - மு.கண்ணப்பன்
21. திருப்பூர் - சு.துரைசாமி
22. வெள்ளகோவில் - கணேசமூர்த்தி
23. சத்தியமங்கலம் - டி.கே.சுப்ரமணியம்
24. மதுரை கிழக்கு - பூமிநாதன்
25. திருமங்கலம் - வீர இளவரசன்
26. கம்பம் - ராமகிருஷ்ணன்
27. திண்டுக்கல் - செல்வராகவன்
28. ராமநாதபுரம் - கராத்தே பழனிசாமி
29. சிவகங்கை - செவந்தியப்பன்
30. விருதுநகர் - வரதராஜன்
31. தென்காசி - ராம உதயசூரியன்
32. வாசுதேவநல்லூர் - சதன் திருமலைகுமார்
33. சாத்தான்குளம் - நாசரேத் துரை
34. நாகர்கோவில் - ரத்தினராஜ்
35. சிவகாசி - ஆர்.ஞானதாஸ்

புதுச்சேரி:

1. திருநள்ளாறு - பி.ஆர்.சிவா
2. திருபுவனை - கோமளா

படம் உதவி: தினமலர்

Update - 1

வைகோ சிவகாசி தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று ஏராளமான கட்சி தொண்டர்கள் விருப்ப மனு கொடுத்து இருந்தனர். ஆட்சி மன்றகுழுவிலும் வற்புறுத்தப்பட்டது. அப்போது வைகோ சம்மதம் தெரிவித்த தாகவும் திடீர் என்று அவர் முடிவை மாற்றிக் கொண்டதாகவும் தெரிய வந்துள்ளது.

வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட வைகோ கடைசியாக `சிவகாசி தொகுதி என்று கூறி நிறுத்தினார். உடனே தொண்டர்கள் ஆர்வத்தில் வைகோ என்று ஆரவாரம் செய்தார்கள். ஆனால் வைகோ திடீர் என்று ஞானதாஸ் என்று அறிவித்தார். இதைக் கேட்டு தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

உடனே மேடையில் இருந்த எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், கண்ணப்பன் மற்றும் முன்னணி தலைவர்கள் வைகோவை சமரசம் செய்தனர். ஆனால் வைகோ உடனே எழுந்து சென்று விட்டார்.

வைகோவின் அறிவிப்பால் சோர்ந்துபோன கட்சி நிர்வாகிகள் இன்று காலை அண்ணாநகரில் உள்ள அவரது வீட்டுக்கு படை எடுத்தனர். அதில் மாவட்ட செயலாளர்கள், ம.தி.மு.க. வேட்பாளர்கள், 35 பேரும் இடம் பெற்று இருந்தனர்.

அவர்கள் வைகோ சட்டசபை தேர்தலில் போட்டியிடவேண்டும் என்று வற்புறுத்தினார்கள். ஆனால் வைகோ எந்த உறுதிமொழியையும் அளிக்கவில்லை.

7 Comments:

சம்மட்டி said...

//தென்காசி - ராம உதயசூரியன்//
அப்ப வைகோ உதயசூரியனுக்கு ஓட்டு கேப்பாரா...

- யெஸ்.பாலபாரதி said...

தலிவா...
நீங்க கொஞ்சம் தாமதம்...
ஆனாலும் தெளிவாகவும் விரிவாகவும் இருந்தது.. பதிவு...
நன்றி

IdlyVadai said...

சம்மட்டி - ரசித்தேன்.

எஸ். பாலபாரதி - கொஞ்சம் தாமதம் தான். தூங்கிவிட்டேன் :-)

rajkumar said...

தன்னை தியாகியாக அடையாளம் காட்டிக் கொள்ள வைகோ செய்யும் மற்றுமொரு தந்திரம் இது.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாததற்கு, திமுக மதிமுக விற்கு ஒதுக்கும் தொகுதிகளை குறித்து தன்னிச்சையாக முடிவெடுத்ததுதான் காரணம் என குறிப்பிட்டார். நாளை ஜேக்கு எதிராக காரணங்களை குறிப்பிட தற்போது தேர்தலில் போட்டியிடாமல் இருக்கிறார்.

சம்மட்டி said...

""எசு விடுவிக்கிறார்''

தூத்துக்குடி மாவட்டம், நாலுமாவடியில் "ஏசு விடுவிக்கிறார்' என்ற பெயரில் சனிக்கிழமைகளில் நடக்கும் ஜெபக் கூட்டம் பிரபலமானது. கடந்த மார்ச் 25ந்தேதி... நடந்த இந்த பொதுக் கூட்டத்துக்கு தனது மனைவி ரேணுகாதேவியோடு வந்து கலந்து கொண்டார் வைகோ.

வெளிநாட்டுப் பாதிரியார்கள் மத்தியில் மைக் பிடித்த வைகோ... ""நான் ஒரு பகுத்தறிவாளன். அனால் எந்த மதத்தையும், புண்படுத்தமாட்டேன். கிறிஸ்துவ கோட்பாடுகளை அனைவரும் பின்பற்ற வேண்டும். வேத வாக்கின்படி நாம் வாழ வேண்டும்...'' இன பகுத்தறிவு பேசிவிட்டு ஒரு பைபிள் கதையையும் சொன்னார்.

"யோசேப் கனவுகளுக்கு பலன் சொல்பவர். இவரை ஒரு கட்டத்தில் கொடிய சிறையில் தள்ளினார்கள். சிறைவாசத்துக்குப் பிறகுதான் யோசேப் வாழ்வில் உயர்நிலையை அடைந்தார்...'' என பொடா சிறைவாசத்தை ஞாபகப்படுத்தினார்.

யோசேப் சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அமைச்சர் பதவி அடைந்தார்... என்றார் அவ்விழாவில் பேசிய பாதர் மோகன் சீ லாசரத்.

மேடையில் வெளிநாட்டு பாதிரியார்களை தவிர யாருக்கும் நாற்காலி கிடையாது. இதனால்... வைகோவை மேடையேற்றியபோதும்... மேடையில் இவரை கீழேயே அமர வைத்தனர். சம்மணம் கொட்டி அமர்ந்திருந்தார் வைகோ. அவர் மனைவி... கிறிஸ்துவ பெண்கள்போல முக்காடு அணிந்திருந்தார்.

பிரசங்கத்தில் கலந்து கொண்ட ம.தி.மு.க.வினர்... "எங்க போனாலும் தமிழன் பெருமையை கம்பீரமாக பேசும் வைகோவை... மேடையேற்றி கீழே உட்கார வைத்தது அவமானமாத்தான் இருக்கு. இன்னும் தி.மு.க. கூட்டணியிலேயே இருக்கிற நினைப்புல இவர் சிறைவாசத்தப் பத்தி பேசிக்கிட்டே ஆருக்காரே...'' என்கின்றனர்

நன்றி
http://www.nakkheeeran.com/nakkheeran/nakk/n5.html

IdlyVadai said...

பதிவை update செய்துள்ளேன்.

Anonymous said...

யாம் கண்ட கயவர்களில் வைகோவைப் போல் கண்டதில்லை