பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 29, 2006

தேர்தல் கொசுறு

தனித்தே போட்டி
எங்களது கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக, திமுக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த வந்தன. ஆனால், கூட்டணி அமைக்க நாங்கள் மறுத்து விட்டோம். ஆதாயம் பெறும் எண்ணம் இருந்தால் 20 அல்லது 30 தொகுதிகளை கேட்டிருப்போம்.

தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவில் எந்த மாற்றும் வராது - விழுப்புரத்தில் நடிகர் விஜயகாந்த்

அதிமுக வேட்பாளர்கள் மாற்றம்

அ.தி.மு.க. சார்பில் போட்டியிட உள்ள 182 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை நேற்று முன்தினம் முதல்- அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். மேலும் `சீட்' கிடைக்கும் என்று காத்திருந்த ஏராளமான பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் வேட்பாளர்களாக அறிவித்தவர்கள் மீது ஏராளமான புகார்களை கட்சி தலைமைக்கு பேக்ஸ், தந்திகள் மூலம் அனுப்பினர்.

இதற்கிடையே 4 வேட்பாளர்களை மாற்றி முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். அதன்படி மதுரை மத்தியில் காளிமுத்துவுக்கு பதிலாக எஸ்.டி.கே. ஜக்கையன், பேரூரில் கே.பி.ராஜ×வுக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணி, அந்திïரில் செல்வி துரைசாமிக்கு பதிலாக சுப்பிரமணியமும், போடி நாயக்கனூரில் பரமசிவத்துக்கு பதிலாக ஆர்.பார்த்திபன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர்.

அ.தி.மு.க. அவைத்தலைவர் காளிமுத்து கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அ.தி.மு.க.வில் உள்ள நல்ல பேச்சாளரும் இவரே என்பதால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் தேர்தலில் நின்றால் அவரது உடல் நலம் ஒத்துழைக்காது என்று கூறப்படுவதால் போட்டியிடவில்லை என தெரிகிறது. அவரிடம் ஜெயலலிதா போட்டியிட வாய்ப்பு இல்லை என்றாலும் உங்களுக்கு உரிய மரியாதை கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.

கோவை பேரூர் தொகுதியில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.பி.ராஜ× மீது கட்சி தலைமைக்கு ஏராளமான புகார்கள் பேக்ஸ், தந்திகள் மூலம் தலைமை கழகத்துக்கு அனுப்பினர். அதன் காரணமாகவே இவரை மாற்றிவிட்டு எஸ்.பி. வேலுமணி நிறுத்தப்பட்டுள்ளார்.

அதேபோல் செல்வி துரைசாமி, பரமசிவம் ஆகியோர் மீதும் ஏராளமான புகார்கள் எழுந்ததால் இவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

மதிமுக வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

ம.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. 35 தொகுதிகளுக்கும் ஏராளமான ம.தி.மு.க. நிர்வாகிகள் போட்டி போட்டு மனு செய்தனர்.

மனு செய்தவர்களிடம் கடந்த 2 நாட்களாக ம.தி.மு.க. அலுவலகமான தாயகத்தில் நேர்காணல் நடந்தது.

ஒவ்வொரு தொகுதிக்கும் மனு செய்தவர்களை நேரில் வரவழைத்து அவர்களிடம் கட்சி நிர்வாகிகள் நேர்காணல் நடத்தினார்கள். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, கட்சிக்கு ஆற்றிய பணி ஆகியவை பற்றி நேரடியாக கேட்கப்பட்டது.

நேர்காணல் முடிந்ததும் ம.தி.மு.க. வேட்பாளர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்றது. இந்தப் பணி முடிவடைந்து பட்டியல் தயாராகி விட்டது.

வேட்பாளர்கள் பட்டியலை இன்று மாலை சென்னை அண்ணா நகர் புல்லாரெட்டி அவென்யூரோட்டில் நடை பெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் வைகோ வெளியிடுகிறார். வேட்பா ளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகிறார்.

0 Comments: