கார்த்திக் பேட்டியிலிருந்து...
நான் யாரையும் தனிப்பட்ட முறையில் எதிராளியாக்கிக் கொள்ள விரும்பாதவன். ஆனால், இப்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. நான் ஜெயலலிதாவை எதிர்த்து ஆண்டிபட்டியில் போட்டியிட வேண்டும் என்று எங்கள் கட்சியின் தொண்டர்கள் அவ்வளவு பேரும் விரும்புகின்றனர். இது ஒரு அருமையான வாய்ப்பு என்பதால், அதை நான் ஏற்றுக் கொள்ளப் போகிறேன். தொண்டர்களின் உணர்வு தான் எனது உணர்வு. முழு வேகத்தில் நான் ஜெயலலிதாவை எதிர்த்துக் களத்துக்கு வருவேன். ஆண்டிபட்டியில் கார்த்திக் கின் குரல் ஓங்கி ஒலிக்கும். சமுதாய மக்கள் என் பின்னால் தான் அணி திரளுவர். நிச்சயம் ஜெயலலிதா தோற்கடிக்கப்படுவார்...
2 Comments:
கார்திக் தனக்கு அந்த தகுதி இருகிறதா என்று மனசாட்சியை கேட்கட்டும் முதலில்...
ஜெகன்
//கார்திக் தனக்கு அந்த தகுதி இருகிறதா என்று மனசாட்சியை கேட்கட்டும் முதலில்...///
கார்த்திக்கு இல்லாத ஒரு ஷ்பெஷல் தகுதி என்று ஜெயலலிதாவுக்கு ஏதாவது இருக்கிறதா என்ன?.:).
Post a Comment