பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Saturday, March 25, 2006

அறிவாலயத்தில் ஜெ.வுக்கு 'பாராட்டு'!

இன்று தினமணியில் வந்த செய்தி.

அதிமுக பொதுச் செயலாளரைப் பாராட்டிப் பேசுகின்றனர் திமுகவினர். அதுவும் அண்ணா அறிவாலய வளாகத்துக்குள்ளேயே இது நடக்கிறது. இது ஆச்சர்யமாக இருக்கிறதல்லவா?

திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதற்கான நேர்காணல் அறிவாலயத்தில் நடந்து வருகிறது. நேர்காணலுக்கு வந்திருந்த கட்சிக்காரர்கள் தான் ஜெயலலிதாவை பாராட்டி வெளியில் பேசினர்.

எதற்காகப் பாராட்டு? ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் எம்.எல்.ஏ.வாகவோ, எம்.பி.யாகவோ, அமைச்சராகவோ வர முடியும் என்ற நிலை அதிமுகவில் இல்லை. தேர்தல் பிரசாரத்துக்கு சுவரில் வெள்ளையடித்துக் கொண்டிருந்தவரை அதே தொகுதியின் எம்.எல்.ஏ.வாக்கியதும், அரசு பஸ் ஊழியர் அமைச்சராக முடிந்ததும் அதிமுகவில் மட்டுமே இப்போதுகூட சாத்தியம்.

மாவட்டச் செயலாளர் சொல்வதைக் கூட முழுமையாக நம்பிவிடாமல், தனக்குரிய ஆள்கள் மூலம் விசாரித்து, அடிமட்டத் தொண்டன் பக்கமும் அதிர்ஷ்டக் காற்று வீசச் செய்பவர் ஜெயலலிதா என்ற கருத்து உள்ளது.

ஆனால், திமுகவில் குறிப்பிட்ட சில தலைவர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் தான் பதவிகளை வகிக்க முடியும் என்ற கருத்து உருவாகிவிட்டது. அதனால் தான் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு கொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிமுகவைவிட மிகவும் குறைவாகவே உள்ளது என திமுகவினர் கூறுகின்றனர்.

வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் மாவட்டச் செயலாளர் போன்ற உயர் பதவியில் இருப்பவர்கள் உள்ளே இருந்தால், குறைகளை எப்படி எடுத்துச் சொல்ல முடியும்? என்றும் அவர்கள் கேட்கின்றனர்.

வேட்பாளர் தேர்வு, கட்சிப் பதவிகள் தருவது என்பதில் ஜெயலலிதாவின் அணுகுமுறை தொண்டர்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது என்று திமுகவினர் கூறுகின்றனர்.

6 Comments:

Anonymous said...

தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதா குறித்து கடுமையான விமர்சனங்களும் அவரைப்பற்றிய எதிர்மறையான தோற்றங்களுமே ஊடகங்களில் வெளியாவதை தவிர்த்து இது போன்ற சில நல்ல செய்திகளும் வெளிவருவது பாராட்டுக்குரியதுதான். ஆனால் அங்கே உட்கட்சி ஜனநாயகம் என்ற ஒன்று இருக்கிறதா என்ற கேள்வியையும் மறுக்கவியலாது.

இந்த பதிவு மிக நன்றாக தேர்தல் செய்திகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. மிக நல்ல பணி. வாழ்த்துக்கள் நண்பர்.

சிவா

IdlyVadai said...

சிவா - அட என்னது இது இட்லிவடைக்கு பாராட்டா ?

siva gnanamji(#18100882083107547329) said...

tell me a party wih inner party democracy

பாலசந்தர் கணேசன். said...

நீங்கள் தவறாக ப்ராஜெக்ட் செய்கிறீர்கள் இட்லிவடை அவர்களே,

தி.மு.க வில் ஜனநாயகம் ஒரளவுக்கு உள்ளது. செல்வாக்கு மிக்க இரண்டாம் கட்ட தலைவர்கள் உள்ளனர். அவர்களை ஒதுக்க முடியாது. ஆனால் அ.தி.மு.க வில் இருப்பது அடிமைகள் கூட்டம். அதனால் யாருக்கு வேண்டுமானாலும் வாய்ப்பு கிடைக்கலாம். ஏனெனில் அங்கே கிடைப்பது பிச்சை. சென்ற முறை திண்டுக்கல் சீனிவாசனை விட்டு (அவர் பெயர் பட்டியலில் இல்லை) பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா.

IdlyVadai said...

//நீங்கள் தவறாக ப்ராஜெக்ட் செய்கிறீர்கள் இட்லிவடை அவர்களே//

ஐயா நான் எதையும் ப்ராஜெக்ட் செய்யவில்லை வந்த செய்தியை அப்படியே தந்தேன். அவ்வளவுதான் !

தயா said...

ஜனநாயகம் எங்கே இருக்கிறது.

நான் போட்டியிடுவேனா முதல்வர் பதவிக்கு முன்மொழயிப்படுவேனா என கட்சி பொதுக்குழு முடிவு செய்யும் என கட்டளை இடுவது தான் ஜனநாயகமா? தலைவர் கருத்துக்கு ஒத்து ஊதுவது தான் செல்வாக்கு மிக்க இரண்டாம் கட்ட தலைவர்களின் வேலையா? இளைஞர் அணி என எத்தனை காலத்துக்கு ஒருவர் தலைவராயிருப்பார்? உணமையில் ஜனநாயக கட்சியென்றால் இந்நேரம் மாற்றம் வந்திருக்கும்.
வலைப்பதிவில் எல்லோரும் அலுத்துக்கொள்ளும் மற்றொரு விஷயம் ஏன் எல்லோரும் திமுகவை குறி வைக்கிறார்கள் என்று. ஒரு விஷயத்தை இப்படித்தான் என்று சொல்லி செய்துவிட்டார் யாரும் குறை காணப்போவதில்லை. ஆனால் போலி முகமூடி மாட்டிக்கொள்வதால் தான் விமர்சனம் செய்ய வேண்டியிருக்கிறது.


இதற்கு ஜெ பரவாயில்லை. ஆமாய்யா நான் அப்படித்தான் என தைரியமாக சொல்லிவிட்டு செயல் இறங்குகிறார். தவறென்றால் ஒத்துக்கொள்ள மனமில்லாவிட்டாலும் பல்டியடித்துவிடுகிறார். தகுதியானவர்களை பயன்படுத்திக்கொள்கிறார். ஒரு கார்ப்பரேட் போல பெர்பார்மன்ஸ்க்கு பரிசு அளிக்கப்படுகிறது. அவர்கள் எந்த கொள்கை முடிவுமே எடுக்கமுடிவதில்லை என்பது மட்டுமே ஒரு குறை.