பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Thursday, March 23, 2006

தி.மு.க-காங்கிரஸ் தொகுதி ஒப்பந்தம்

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 48 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கேட்கும் சில தொகுதிகளை பாட்டாளி மக்கள் கட்சியும் கேட்டதால் தான் பேச்சு வார்த்தையில் உன்பாடு ஏற்படாமல் இழுபறி ஏற்பட்டது.

கடந்த 2 நாட்களாக பேசியும் முடிவு ஏற்படவில்லை. இந்த பேச்சு வார்த்தை விவரம் குறித்து அவ்வப்போது தயாநிதி மாறன் எழுந்து வந்து அடுத்த அறையில் நேர்காணல் நடத்தி கொண்டிருந்த கருணாநிதியிடம் வந்து தெரிவித்தார். அவரிடம் கருணாநிதி சில விவரங்களை கூறுவார். அந்த விவரங்களை பேச்சு வார்த்தை நடத்திய தி.மு.க. குழுவிடம் தயாநிதி மாறன் தெரிவிப்பார்.

இவ்வாறு பேச்சுவார்த்தை நீண்டு கொண்டே சென்றது. தொடர்ந்து இழுபறியாக இருந்தது. ஒரு கட்டத்தில் காங்கிரஸ் குழுவினர் எழுந்து அருகில் உள்ள மற்றொரு அறைக்கு சென்று சிறிது நேரம் தனியாக ஆலோசனை நடத்தினார்கள்.

நேற்று முன்தினமும் சேர்த்து மொத்தம் 5 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பிறகு இந்த முடிவு ஏற்பட்டுள்ளது.

வீரப்பமொய்லி மகிழ்ச்சியுடன் கருணாநிதியின் கையை பிடித்து குலுக்கி, "மிக்க நன்றி'' என்று கூறினார். அவரிடம் கருணாநிதி, "நினைத்த தொகுதிகளை வாங்கி கொண்டீர்கள்'' என்று சிரித்துக்கொண்டே கூறினார்.

ஒப்பந்தத்தில் கைருஷ்ணசாமி, மற்றும் கலைஞர் கையெழுத்திட்டனர். அப்போது அருகில் இருந்து துரைமுருகன், "தொகுதிகள் பெயர் வெளியில் தெரியாமல் மறைத்துக்கொண்டு கையெழுத்து போடுங்கள் ஏற்கனவே பிரச்சினை ஆகிவிட்டது'' என்றார்.

உடனே கிருஷ்ணசாமியும் தொகுதிகள் பெயரை ஒரு கையால் மறைத்துக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அதை ஒரு தொலைகாட்சி வீடியோ கேமராமேன் அருகில் சென்று லென்சை சூம் செய்து படம்பிடித்தார். இதை கவனித்து விட்ட மத்திய மந்திரி சுப்புலட்சுமி ஜெகதீசன் கோபத்துடன் அந்த கேமராமேனிடம் "நீங்கள் எப்படி தொகுதிகள் பெயர்களை படம் பிடிக்கலாம்'' என்று கூறினார்.

கலைஞர் பேட்டி:
கேள்வி: காங்கிரசுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய ஏன் இவ்வளவு இழுபறி?'

பதில்: இழுபறி எதுவும் இல்லை. சுமூகமாக முடிந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன

கேள்வி:- தி.மு.க. கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் முழு பட்டியல் எப்போது வெளியாகும்?

பதில்:- நாளை(இன்று) அல்லது நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வெளியாகும். 2 நாட்களுக்குள் பட்டியலை வெளியிட்டுவிடுவோம்.

கேள்வி:- பாட்டாளி மக்கள் கட்சி எப்போது பேசுகிறார்கள்?

பதில்:- இன்று இரவு அல்லது நாளை(இன்று) பேசுவோம். பா.ம.க.வை பொறுத்தவரை ஒன்றிரண்டு தொகுதிகள் குறித்து தான் பேசவேண்டி உள்ளது. அதனால் விரைவாக முடித்து விடுவோம்.

வீரப்பமொய்லியிடம் பேட்டி:

கேள்வி:- இந்த உடன்பாட்டில் உங்களுக்கு திருப்திதானா?

பதில்:- திருப்தி என்பதால் தானே கையெழுத்து போட்டுள்ளோம்.

கேள்வி:- தொகுதி பட்டியலை முடிவு செய்வதில் ஏன் இவ்வளவு தாமதம்?

பதில்:- காங்கிரசில் உள்ள எல்லா தரப்பினரையும் சந்தித்து பேசி ஆலோசனை நடத்தினோம். அதனால் தான் தாமதம் ஏற்பட்டது.

கேள்வி:- தொகுதிகள் பட்டியலை எப்போது வெளியிடுவீர்கள்?

பதில்:- உரிய நேரத்தில் வெளியிடப்படும்.

* - *

காங்கிரஸ் பட்டியல் ( காங்கிரஸ் தரப்பில் விசாரித்து உத்தேசமாக கிடைத்த தகவல் என்று தினந்தந்தி கூறுகிறது. தினமலர் குட்டையை குழப்புகிறது என்றி தேர்தல் 2006'ல் பத்ரி கூறுகிறார். )

வேலூர்

1.ஆர்.கே.நகர் 2.தாம்பரம் 3.பூந்தமல்லி 4.ஸ்ரீபெரும்புதூர் 5.மதுராந்தகம் 6.திருப்போரூர் 7.பள்ளிப்பட்டு8.வேலூர் 9.சோளிங்கர் 10.செய்யாறு 11.கிருஷ்ணகிரி 12.ஓசூர் 13.ஆத்தூர் 14.சேலம்-1 15.ஊட்டி 16.கோவைமேற்கு 17.தொண்டாமுத்தூர் 18.வால்பாறை 19.வேடசந்தூர் 20.நிலக்கோட்டை 21.நாமக்கல் 22.அரியலூர் 23.காட்டுமன்னார்கோவில் 24.ரிஷிவந்தியம் 25.வானூர் 26.தொட்டியம் 27.திருவாடானை

சாத்தான்குளம்

28.பேராவூரணி 29.பட்டுக்கோட்டை 30.பாபநாசம் 31.மயிலாடுதுறை 32.தேனி 33.மதுரைமத்தி 34.முதுகுளத்தூர் 35.சோழவந்தான் 36.ராமநாதபுரம் 37.பரமக்குடி 38.சிவகங்கை 39.தலைவாசல் 40.விருதுநகர் 41.சிவகாசி 42.தென்காசி 43.கடையநல்லூர் 44.சேரன்மகாதேவி 45.ஸ்ரீவைகுண்டம் 46.சாத்தான்குளம் 47.நாங்குநேரி 48.கிள்ளியூர்.

பிகு: காங்கிரஸ் கட்சி தமிழக தலைவர் எம். கிருஷ்ணசாமி பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாசின் சம்பந்தி ஆவார். அதனால் பா.ம.க தொகுதி பங்கீட்டில் எந்த பிரச்சனையும் வராது என்று நினைக்கிறேன்.

4 Comments:

வானம்பாடி said...

காங்கிரஸ் தொகுதிப் பட்டியலை தினகரனும் வெளியிட்டுள்ளது.
http://www.dinakaran.com/epaper/2006/mar/23/16.htmL

IdlyVadai said...

சுதர்சன் - தகவலுக்கு நன்றி.

ஜோ/Joe said...

நாகர்கோவில் இல்லாதது ஆச்சர்யமா இருக்கு!

Sud Gopal said...

கோவைமேற்கு -மகேஸ்வரி
தொண்டாமுத்தூர் - எஸ்.ஆர்.பி.
வேலூர் - கு.ஞானசேகரன்
நிலக்கோட்டை - பொன்னம்மாள்(கிடைக்குமா???)