பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Wednesday, March 22, 2006

அதிமுக - திமுக தொகுதி பங்கீடு நிலவரம்

தொகுதி பங்கீடு இன்னும் முடியாத நிலையில் திமுக அதிமுக திணருகிறது என்பது மட்டும் தெரிகிறது.

தினமும் பேசுகிறார்கள். பேசிவிட்டு 'தொடரும்...' என்று கூறிவிட்டு போகிறார்கள். சிக்கல் பல விதத்தில் இருக்கிறது.

* பா.ம.க கேட்கும் தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. அத்துடன் காங்கிரசில் உள்ள கோஷ்டி தலைவர்கள் தங்கள் ஆதரவாளர்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளை வாங்க தீவிரமாக உள்ளனர். காங்கிரசில் நடக்கும் உள்கட்சி மோதலால் உடன்பாடு ஏற்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதல் பட்டியல் என்ன முழு பட்டியல் தருகிறேன் என்று சொல்லியிருக்கிறார் கலைஞர்.
( திமுகவிற்கு மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு, இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு தொகுதிகள் முடிவு செய்யப்பட்டுவிட்டன என்பது தான் கொஞ்சம் அறுதலான விஷயம் )

* அதிமுகவில் 9 சுற்று பேச்சு வார்த்தை நடந்து முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை ஒன்பது முறை நடந்தாலும் மகிழ்ச்சியோடு பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் தொகுதிகள் பட்டியலை முதல்வரும் பொதுச் செயலருமான ஜெயலலிதா அறிவிப்பார் என்று கூறியுள்ளார்கள்.

இதுலேயே இவ்வளவு இழுபறி என்றால் கூட்டணி ஆட்சி என்றால் ?

0 Comments: