பாயும் வேகம் ஜெட் லீ தாண்டா
பன்ச் வெச்சா இட்லி தாண்டா
Rated PG - for Pseudo-DK, DMK, Liberals, Marxists....
ஊர்ல சொல்றது சொலவடை
உண்மையைச் சொல்றது இட்லிவடை

Monday, March 20, 2006

ஜெயா டிவி - வைகோ பேட்டி

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ நேற்று ஜெயா டி.வி.க்கு சிறப்பு பேட்டி அளித்தார். அதிலிருந்து சில பகுதிகள்.

* ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சரவையில் சேர்ந்தால் என்ன என்ற எண்ணம் எனது சகாக்களில் சிலருக்கு ஏற்பட்டது. அப்போது அமைச்சரவையில் மதிமுகவை சேர்ப்பது குறித்து பரிசீலனை செய்யலாம் என்று பிரதமரை சந்தித்தேன்.

அதற்கு அவர், உங்கள் கட்சிக்கும் சேர்த்துத்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கி விட்டதே என்றார்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன சொல்கிறீர்கள் பிரதமரே என்று கேட்டேன். உங்கள் கட்சி திமுகவுடன் சேர்ந்து தனிக்கூட்டு அமைத்துள்ளதாகவும், திமுகவுக்குள் நீங்கள் உள் கூட்டு வைத்திருப்பதாகவும் சொன்னார்கள்.

உங்களது கட்சி எம்.பிக்கள் நான்கு பேரையும் சேர்த்து திமுகவுக்கு மொத்தம் 20 எம்.பிக்கள் என்று கூறித்தான் திமுக அமைச்சர் பதவிகளை வாங்கியிருக்கிறது என்றார்.

இது சோனியா காந்திக்குக் கூட தெரியுமே என்றார். இதையடுத்து சோனியா காந்தி அம்மையாரிடிம் சென்று கேட்டேன். அவரும் பிரதமர் சொன்னதையே கூறினார்.

எங்கள் எம்.பிக்களையும் தங்கள் கட்சி எம்பிக்கள் என்று கணக்கு காட்டி, எங்களை அடமானம் வைத்து அமைச்சர் பதவிகளை வாங்கியுள்ளது திமுக.

எங்களது எம்.பிக்களையும் சேர்த்துத்தான் மத்திய அமைச்சர் பதவிகளை வாங்கிய விஷயம் பற்றி திமுகவிடம் நான் இதுவரை பேசவில்லை.

நான் ஜீரணித்துக் கொண்டேன். எங்களுக்குத் தெரியாமல் எங்கள் எம்.பிக்களைக் காட்டி அமைச்சர் பதவி வாங்கியுள்ளார்களே, அப்படி என்றால் யார் யாருக்கு துரோகம் செய்திருக்கிறார்கள்?

நாங்களா துரோகம் செய்திருக்கிறோம்? தி.மு.க.வினர் வாஜ்பாய் மந்திரி சபையில் இருந்து கொண்டே கடைசி நிமிடம் வரைக்கும் அதை அனுபவித்துக் கொண்டே காங்கிரசுடன் உறவுக்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தார்கள். இதை நான் எந்த இடத்திலும் சொல்ல முடியும். இதுதான் பச்சை சந்தர்ப்பவாதம். தி.மு.க. கூட்டணியில் இருந்துகொண்டே அ.தி.மு.க.வுடன் வைகோ எப்படி பேச்சு நடத்துகிறான் என்று கேட்கிறார்கள். ஒரு திறந்த புத்தகமாகத்தான் எங்கள் இயக்கத்தின் அணுகுமுறையை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

எங்கள் பொதுக்குழுவிலும் அதைத்தான் சொன்னேன். நீங்கள் இப்படி நடத்துவீர்களேயானால் அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி வைக்கக்கூடிய நிலை ஏற்பட்டு விடும் என்று டாக்டர் கலைஞரிடமும் சொன்னேன்.

* முரசொலி மாறனின் இறுதிச்சடங்கிலே பெசன்ட் நகரிலே கலந்துகொண்டுவிட்டு வாஜ்பாய் இந்த பக்கம் விமானத்தில் ஏறி போகிறார்.

அவருக்கு டாட்டா காண்பித்துவிட்டு அதற்குப் பிறகு காங்கிரசுடன் உடன்பாடு வைக்க போய்விட்டார்கள் என்று கூட நான் சொல்லவில்லை. அந்த காலகட்டத்திலேயே தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் தலைவர்களுடன் உறவு வைத்துக்கொண்டு காங்கிரசுடன் உடன்பாடு ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று டாக்டர் கலைஞர் அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

தமிழக காங்கிரஸ் கமிட்டியில் உள்ள முக்கியமான தலைவர்கள் என்னிடத்திலே சொன்ன உண்மை. இப்போது கூட்டணி காரணமாக வெளியில் சொல்ல மாட்டார்கள். காங்கிரசுடன் கூட்டணி வைத்துக்கொள்வது என்று 2003-ம் ஆண்டு பிற்பகுதியிலேயே தொடங்கவிட்டார்கள். இப்படிதான் கூட்டணி வரும் என்பது கலைஞர் பேச ஆரம்பித்துவிட்டார். இது திடீரென்று ஒருநாளில் ஏற்பட்டது அல்ல. இதற்கு காரணம் தேடினார்கள். வெங்கையா நாயுடு சாதாரணமாக சொன்ன ஒரு விஷயத்தை காரணம் சொல்லிவிட்டு நாங்கள் வெளியே போகிறோம் என்று சொன்னார்கள். அதுதான் பச்சை சந்தர்ப்பவாதம்.


வாஜ்பாய் அரசில் இருந்து கொண்டே காங்கிரஸ் கட்சியுடன் உறவு வைத்துக்கொள்ளக்கூடிய அளவுக்கு அவர் அதுமாதிரி ஈடுபட்டார்கள். ஆனால், நான் அதுமாதிரி எதுவும் செய்துவிடவில்லை. எங்களது கொள்கைகளை, லட்சியங்களை வென்றெடுப்பதற்கான நாங்கள் சிலவழிமுறைகளை தேர்ந்தெடுத்தோம். மனமகிழ்ச்சியுடன் இந்த உடன்பாடு ஏற்பட்டது என்று சொல்வதற்கு காரணம் சில நிகழ்ச்சிகளை கோர்வைப்படுத்திச் சொன்னால் சரியாக இருக்கும்.

2 மாதங்களுக்கு முன்பே வைகோ முடிவெடுத்துவிட்டார் என்று மதிப்பிற்குரிய அண்ணன் கலைஞர் சொல்கிறார்கள். நான் சொல்கிறேன். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள் என்று நான் சொல்கிறேன்.

2004 பாராளுமன்றத் தேர்தல் முடிந்த உடனே போடப்பட்ட தோழமைக்கட்சிகளின் பொதுக்கூட்டத்தில் ம.தி.மு.க.வின் பெயர் கிடையாது. எங்கள் கட்சியை விட்டுவிட்டீர்களே என்று போனிலேயே நான் கேட்டேன். அதற்கு சட்டமன்றத்திலே அங்கம் வகிக்கும் கட்சிகளின் கூட்டம் என்று பதில் சொன்னார்கள். பொதுக்கூட்டம் சட்டமன்றத்திலேயே நடக்கவில்லையே பொது இடத்தில்தானே நடக்கிறது என்று நான் சொன்னேன். அதன்பிறகு மறுநாள் எங்கள் கட்சியின் பெயரைச் சேர்த்து வெளியிட்டார்கள்.

எனது நடைபயணம் முடிந்து 7 நாள் கழித்து செப்டம்பர் 23-ந்தேதி முரசொலியில் டாக்டர் கலைஞர் ஒரு கடிதம் எழுதினார்.

அந்த கடிதத்தில், மிகக் கடுமையாக எங்களை நிந்தித்து, "இவர்கள் அறிவாலயத்தை கைப்பற்ற நினைத்தவர்கள். கட்சியை கைப்பற்ற நினைத்தவர்கள், துரோகிகள், இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்று தெரியுமா? இவர்கள் வட்டமிடும் கழுகுகளாக, வாய்பிளந்து நிற்கும் ஓநாய்களாக, வளைத்துவிட்ட மலைபாம்புகளாக சுருக்கமாகச் சொன்னால், வசந்த சேனையின் வடிவமாக இவர்கள் வாள்நீட்டிப் பார்த்தவர்கள். வலைக்குள் பதுங்கி இருக்கிறார்கள் என்று எழுதியிருந்தார்.

எனக்கே ஒன்றும் புரியவில்லை. அதிர்ச்சி அடைந்தேன். எங்களை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணம் அன்றைக்கே இருந்தது. உடனே கலைஞரை சந்தித்து கேட்டேன். ஏதோ ஒரு கோபத்தில் அப்படி எழுதிவிட்டேன் என்று சொன்னார். கோபப்படும் அளவுக்கு நான் எந்த தவறும் செய்யவில்லையே என்று சொன்னேன்.

நடை பயணத்தில் ஆலடி அருணா எப்படி வந்து பேசலாம் என்று கேட்டார். நான் அழைக்கவில்லை அவராகத்தான் வந்தார் என்று சொன்னேன். அவர் வேற ஒன்றும் பேசவில்லை. வருங்கால முதல்வராக வைகோவை நான் பார்க்கிறேன் என்று சொன்னார். அந்த கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை என்றேன். அதற்காக கோபப்பட்டார்கள்.

இப்போது வருங்காலம், வராத காலம் என்று தினம்தினம் போஸ்டர் அடிக்கிறார்கள். வருங்கால முதல்வர் என்று கலைஞரின் மகனை பற்றி போஸ்டர் அடித்து ஒட்டுகிறார்கள். விளம்பரம் பண்ணுகிறார்கள்.

இதற்கு கருணாநிதி எந்த விதமான விளக்கமும் சொல்ல முடியாது.

வெளியேற்ற வேண்டும் என்று நினைப்பதை விட கூட்டணியில் நான் நீடிப்பதை அவர்களைச் சுற்றியுள்ள சில சக்திகள் விரும்பவில்லை.

* இதுதான் இயல்பான கூட்டணி. இயற்கையான உணர்ச்சி. 1972-ல் மக்கள் திலகம் எம்ஜிஆர் டாக்டர் கலைஞரின் குடும்ப நலனுக்காக தூக்கி எறிந்தார், என்ன காரணத்திற்காக? சுயநலம், குடும்ப நலம். அதேபோல்தான் 1993-ம் ஆண்டு எந்த இயக்கத்திற்காக என் வாழ்நாளை நான் முழுமையாக அர்ப்பணித்தேனோ என் வாழ்வின் ஜீவனும் சுவாசமும் எல்லாம் நான் ஏற்றுக்கொண்டா அண்ணா உருவாக்கிய இயக்கமான தி.மு.க. என்று இருந்த என்னை குற்றமற்ற என்னை கொலைகாரன், சதிகாரன் என்று பழிசுமத்தி தூக்கி வெளியே எறிந்தார்கள். ஒரு கட்சியில் உள்ள ஒருவரை நீக்குவதற்கு குற்றச்சாட்டுகள் சொல்வது வழக்கம்.

ஆனால், கட்சிச் தலைமையை கொலைசெய்ய சதித்திட்டத்திலே ஈடுபட்டிருக்ககூடும் என்று குற்றம்சாட்டி கட்சியை விட்டு நீக்கியது எனக்கு தெரிய உலகத்திலே வேறு எங்குமே நடக்கவில்லை. எவ்வளவு பெரிய மனக்காயங்களுக்கு நான் ஆளாகியிருப்பேன்.

என்னை நீக்குவது கொடுமை என்று 5 தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை தந்தார்கள். அவர்களின் படங்களை என் வீட்டில் மாட்டி வைத்திருக்கிறேன். அதை பார்த்துவிட்டுத்தான் தினமும் வெளியே போவேன். அவர்களை எனது காவல் தெய்வங்களாக நினைக்கிறேன்.

ஆனாலும் கூட எந்த இயக்கத்தில் இருந்து நான் வெளியேற்றப்பட்டேனோ அந்த இயக்கத்தைச் சேர்ந்த தொண்டர்கள் என்னோடு வந்துவிட்டார்கள். அவர்கள்தான் எனக்கு முகவரி. அவர்களால்தான் இன்று அரசியலில் இருக்கிறேன்.

அந்த தொண்டர்களும் அ.தி.மு.க. தொண்டர்களும் மகிழ்ச்சியுடன் கரம் கோர்த்துள்ளதற்கு என்ன காரணம்? இது அடிப்படையில் இயல்பாக ஏற்படுகிற உணர்ச்சி.

* திமுக தலைமை தன்னை எப்படியெல்லாம் புறக்கணித்தது, சன் டிவி தன்னை எப்படியெல்லாம் இருட்டடிப்பு செய்தது என்பதை எல்லாம் மிக விளக்கமாகவே கூறிய வைகோ, பொடா குறித்த கேள்விக்கு மட்டும், அது ஊழ் வினை.. காலத்தின் தீர்ப்பு.. அது ஒரு அரசியல் நடவடிக்கை என்று பதிலளித்துவிட்டு நழுவிக் கொண்டார்.

13 Comments:

Unknown said...

என்னடா இவ்வளவு நேரமா பதிவு ஏதும் வரலியேன்னு காத்திருந்தேன் வந்துவிட்டது.

மத்திய அமைச்சர்கள் மாநில முதல்வரைப் புறக்கணிப்பது பற்றியும், அவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனே அவரைக் குற்றம் சாட்டிய போது அதை வை.கோ. எதிர்த்து பாராளுமன்றத்தில் பேசியது பற்றிய குறிப்பை எழுதியிருக்கலாமே?

Muthu said...

1.இந்த கொள்கைக்குன்றும் தான் பா.ஜ.க கூட்டணியில் இருந்தது.இப்போது காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறது...

2.முரசொலி மாறன் இறுதி சடங்கில் கலந்துகொண்டால் பாரதீய ஜனதா கூட்டணியில் தொடருகிறோம் என்று தி.மு.க சொன்னதா? அரசியலுக்கு அப்பாற்ப்பட்ட நட்பு என்றெல்லாம் வாய்கிழிய பேசும்போது?

3.ஆலடி அருணா அவராக வந்தாராம்.பேசினாராம்.இவரும் தடுக்கலையாம்.

4.இவருக்காக உயிர் நீத்த காவல் தெய்வங்கள் என்றெல்லாம் தொண்டர்களை கொச்சைப்படுத்துவதை இவர் எப்போது விடுவார்?

வைகோ இருக்கும் இடத்திற்கு ஏற்றவாறு பேசுகிறார்.இவர்களை பேசவைத்து ஜெயலலிதாவும் மற்றவர்களும் ரசிக்கிறார்கள்.நடக்கட்டும்.

இதற்குமுன் திருமாவளவன் பேசினாரே? அதை போடுங்க இட்லி வடை..இன்னும் சுவாரசியம் அது.

IdlyVadai said...

முத்து - நகைச்சுவை பதிவுக்கு குறைவே இல்லாமல் பார்த்துக்கொள்கிறார்கள் :-)

நியோ / neo said...

வைகோ முழுமையான கோமாளித்தனம் செய்துவிட்டார்; சுந்தரமூர்த்தியார் ஜோவின் பதிவிம் சொன்னது போல தன்னுடைய 'Political capital'-ஐ வீணடிக்கிற காரியத்தில் இறங்கி.. சொல்வதற்கு ஒன்றுமில்லை.

அவருடைய நம்பகத்தன்மை முழுமையாக அழிந்து விட்டது. இனி அவர் எங்கிருந்தாலும் - நமது எம்ஜியாரில் குறிப்பிட்டது போல 'ஒட்டுண்ணியாகத்தான் இருக்க முடியும் என்கிற நிலைக்குப் போய் விட்டார்.

ஈழப்பிரச்சனையிலும் - இதே போல கேவலமான 'பல்ட்டி' அடிக்க மாட்டார் என்பது என்ன நிச்சயம் என்று இதுகாறும் அவர் மீது மரியாதை கொண்டிருந்தோரே கேட்கும் அளவுக்கு அவர் நிலை போய்விட்டது.

கலைஞராவது சிறீசபாரத்தினம் கொலைக்குப் பிறகு விடுதலைப்புலிகளுடன் நெருக்கத்தை விட்டுவிட்டேன்; ஆனால் ஈழ மக்களின் ஒரே பாதுகாவலர்கள் புலிகள்தான் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம் - என்கிற நிலையிலிருந்து அன்றும் இன்றும் பிறழவில்லை.

3 சீட்டுக்காக புரட்சித்தலைவி அம்மா என்றெல்லாம் மானக்கெட்டுப்போய் தடம் மாறும் வைகோ - நாளை புலிகளுக்கெதிராகவும் பேசமாட்டார் என்பது நிச்சயமில்லை.

வைகோவின் "ஒரே" மரியாதைக்குரிய தகுதி - அவர் புலிகளை நேரடியாக ஆதரித்துப் பேசிக்கொண்டிருந்ததுதான். அவர் கலைஞரைப்போல் இந்த விடயத்தில் tone down செய்யவே முடியாது.

ஆக - தன்னுடைய "வீரதீரசூர தியாக" இமேஜிக்கு அவரே வேட்டு வைத்துக் கொண்டுவிட்டார்.

மேலும், 1980-இல(எமர்ஜென்சிக்குப் பிறகான ஜனதா ஆட்சி வீழ்ச்சிக்குப் பிறகு) கலைஞர் இந்திராவை ஆதரித்தது பற்றிய முட்டாள்தனமான ஒப்புவமையைப் பேசி கலைஞரிடம் நன்றாக வாங்கிக் கொண்டுவிட்டார்.

அப்போது எமர்ஜென்சியை கொண்டுவந்ததற்கு தான் மனப்பூர்வமாய் வருந்துவதாகவும், அதற்காக அனைவரிடமும் மன்னிப்புக் கேட்பதாகவும் - சீரணி அரங்க (கடற்கரை) துமுக பொதுக்கூட்டத்தில் இந்திரா மன்னிப்புக் கேட்டார்.

இப்போது ஜெ. யாரிடம் மன்னிப்புக் கேட்டார் பொடா கைதுகளுக்காக?

வைகோவிடம் கூடக் கேட்கவில்லையே? அவர் கட்சிக்காரர்களிடம் கேட்டாரா?

சுபவீ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உட்பட பலர் மீது கொடூரமான சட்டப்பிரிவுகளில் வழக்குத் தொடுத்தாரே?

வைகோ மட்டும்தான் சிறையிலிருந்தாரா? நெடுமாறனும் சுபவீயும் வெஞ்சிறையில் வாடவில்லையா?

இப்போது 'ஊழ்வினை' என்கிறார் இந்த மனிதர். இதை விட இந்த ஆள் தூக்குப் போட்டுக் கொள்ளலாம்.

இங்கே ஒருத்தர் - பிரச்சார பீரங்கியான வைகோவும் வெளியேறிவிட்டார்; அதிமுக வில் விஜயகாந்த்தும் சேர்ந்தால் வெற்றிவாய்ப்பு அவர்களுக்குத்தான் என்று கூசாமல் ஆரூடம் சொல்லுகிறார். வெட்கக்கேடு.

இதுவரை சத்திரிய(தேவர்)/ பார்ப்பன கூட்டணி அரசியலுக்கு பக்கவாத்தியம் வாசித்துக் கொண்டிருந்தவர்கள், இப்போது புதிதாக நாயக்கர் அரசியலை தங்கள் துணைக்கு அழைக்கிறார்கள் என்று தமிழகத்தில் கோபக்குரல்கள் ஒலிக்க ஆரம்பித்துவிட்டன.

2006- தேர்தல் தமிழர்களின் சுயமரியாதைக்கான தேர்தல். "பெரியாரரின் நெஞ்சில் தைத்த முள்"ளை எடுக்கத் துணைபுரியும் தேர்தலாக விடியட்டும்.

Naarathar said...

துரோகத்தின் முழு உருவம் கருனாநிதி.
அறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பின் நாவலர் நெடுஞ்செழியன் அவர்களே முதல்வராக தெரிவு செய்யப்பட இருக்கையில் எம்.ஜி.ஆர்
அவர்களின் காலில் விழுந்து தன்னை முதல்வராக்கும் படி கெஞ்சி மன்றாடி
பின்னர் எம்.ஜி.ஆரின் தயவால்
முதல்வராகி, தி,மு.க வில் எம்.ஜி.ஆரின் செல்வாக்கைக் கண்டு மனம் தாங்காமல், எம்.ஜி.ஆரையே
கட்சியை விட்டு தூக்கி எறிந்தவர் தான்
இந்த நன்றி கெட்ட கருனாநிதி.
தி.மு.க வின் மூத்த தலைவரான நாவலர் நெடுஞ்செழியனை அவமதித்து
கட்சியை விட்டு ஒட வைத்த துரோகிதான் கருனாநிதி. அறிஞர் அண்ணா மரணப்படுக்கையிலே இருக்கையிலேயே முதல்வர் பதவியைப்
பிடிக்கச் சதி செய்த கீழ்த்தனமானவர் தான் கருனாநிதி. கவியரசர் கண்ணதாசனுடன் நட்பாக பழகி , கவியரசர் வீட்டில் இல்லாத நேரத்தில்
கவியரசரின் காதலியுடன் தகாத முறையில் நடக்க முற்பட்ட மோசமான
மனிதர் தான் இந்த கருனாநிதி.[கவியரசர் தனது சுயசரிதமான வனவாசம் எனும் நூலில் இதை தெரிவித்திள்ளார்]துரோகத்தின் முழு உருவமான கருனாநிதிக்கு துரோகத்தை
பற்றி பேச என்ன அருகதை உண்டு?

நியோ / neo said...

ஈழவர்கள் தமிழகத்தின் அரசியற் விவகாரங்களில் அவசரப்பட்டுப் பேசி நண்பர்கள் மனதைக் கசந்து போகச் செய்யாதீர்கள். முடிந்தால் சென்னையில் காசி ஆனந்தனிடம் தொலைபேசிவிட்டு பிறகு வந்து கருத்துச் சொல்லுங்கள்.

தமிழ்நாட்டு அரசியலை பார்ப்பனீய ஒற்றர் தலைவியான ஜெ.விடம் அடகு வைக்க சம்மதிப்போர் யாவரும் தமிழின விரோதச் செயலுக்குத் துணைபோகிறவர்களே..அதுவும் நெடுமாறன், சுபவீ, நக்கீரன் கோபால் இன்னும் பல பல தமிழர்களின் தியாகத்தை அவமதித்து விட்டார் கோபால்சாமியார்.

தமிழகத்தில் பெரியாரியத்தையும், தமிழனின் சுயமரியாதையையும், தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்க வேண்டிய நெருப்புச் சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். வீணாக வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம்.

சிறில் அலெக்ஸ் said...

சந்தர்ப்பவாதம் இன்றைய வாழ்க்கைக்கு முக்கியம். அதிகமாக சம்பளம் கிடைக்கிறது என்று மென்பொருள் கம்பெனிகளிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப்போகும் மன்பொருள் வல்லுநர்களிடம் கேளுங்கள் சொல்வார்கள்.

அரசியலில் இதெல்லாம் சகஜம். நம் அரசியல் கட்சிகளின் கொள்கைகளெல்லாமே வெறும் மேலோட்டமான உணர்ச்சிகளை வைத்தே ஆக்கப்படுகின்றன. இப்போதிருக்கும் அரசியல்வாதிகளில் முதல்வராகத் தகுதியுள்ளவராய் வைகோ மட்டுமே படுகிறார். விரைவில் (அடுத்த 4 தேர்தல்களுக்குள்) அவர் முதல்வராகிவிடுவார், அதற்கான அடித்தளம்தான் இந்த கூட்டணி.

வசந்தன்(Vasanthan) said...

நாரதர், அமைதி அமைதி. மற்றவர் மனத்தை நாங்கள் புண்படுத்தக்கூடாது. மேலும் 'துரோகி' என்று சொல்லிச்சொல்லியே பழகிப்போய்விட்டதோ எமக்கு?

நியோ,
////தமிழகத்தில் பெரியாரியத்தையும், தமிழனின் சுயமரியாதையையும், தமிழின அடையாளங்களையும் மீட்டெடுக்க வேண்டிய நெருப்புச் சூழலில் நின்று கொண்டிருக்கிறோம். வீணாக வார்த்தைகளைக் கொட்ட வேண்டாம். ////

தி.மு.க. கூட்டணி வந்துதான் இவையெல்லாம் நடக்குமென்றால் நடக்கட்டும். உங்கள் விருப்பம் ஈடேற வாழ்த்துக்கள். ஆனால் உங்கள் பேச்சில் (சே! எழுத்தில்) நெருப்புப்பொறி பறக்கிறது. திராவிடக்கட்சிகளுக்குரிய நல்ல மேடைப்பேச்சாளனாக வரமுடியும்.;-)

நிலைமை தெரியாமல் ஈழத்தவன் கதைப்பது தவறுதான். (காசியரிடம் ஏன் போகவேண்டும். முடிந்தால் நீர் நெடுமாறனிடம் வை.கோவின் முடிவு பற்றி அவர் கருத்தைக் கேட்டுவிட்டு எழுதும்.) ஆனால் ஈழத்தவனைச் சாட்டியே நீங்களெல்லாம் வை.கோ மீதும் திருமா மீதும் வசைமாரி பொழிக; சேறு பூசுக.

முடிந்தால் ஈழத்தவனைச் சாட்டாமல் உங்கள் அரசியலைக் கதைத்துக்கொள்ளுங்களேன்.

நியோ / neo said...

>> முடிந்தால் ஈழத்தவனைச் சாட்டாமல் உங்கள் அரசியலைக் கதைத்துக்கொள்ளுங்களேன். >>

முதலில் ஈழத்தவனை எங்கே நான் 'சாட்டினேன்'? நாரதரைக் கூட சற்று பொறுமையாக அனைத்தையும் சீர்தூக்கிப் பார்த்து பிறகு கருத்துச் சொல்லுங்கள் என்றுதான் சொன்னேன்.

தமிழகத்தில் "வை.கோபால்சாமியாரின்" "இருப்பே" - புலிகளின் வெளிப்படையான ஆதரவாளர் என்பதுதான். எனவேதான் அவருடைய சகிக்கமுடியாத அரசியற் குட்டிக்கரணம் ஈழ விஷயத்திலும் வெளிப்ப்ட்டுவிடும் என்று சொன்னேன்.

நெடுமாறன், சுபவீ போன்றோரின் நிலை மிகத்தெளிவானதே. அவர்கள் யாரும் "பதவிகளை" எதிர்பார்த்து தடா, பொடா வழக்குகளில் சமரசம் செய்து கொள்ளும் மனிதர்களில்லை.

பொடா சிறைக் கொடுமை அனுபவித்த அனைத்துத் தமிழர்கள்ளையும் கோபால்சாமியார் வஞ்சித்து விட்டார்.

இன்னும் கொஞ்ச நாளில் இது அனைவர்க்கும் புரியும். "நெருப்புப் பொறி" பறக்கும் பேச்சு என்கிற உங்கள் கிண்டலுக்கு என் நன்றிகள்! :)

வசந்தன்(Vasanthan) said...

'ஈழத்தமிழனைச் சாட்டி' என்பதன் பொருள், ஈழத்தமிழ்ப்பிரச்சினையைச் சாட்டி வை.கோவையும் திருமாவையும் வையும் செயல்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் வை.கோவினதும் திருமாவினதும் நிலைப்பாடு தொடர்பாக ஈழத்தமிழனுக்கே வராத சந்தேகமும் குழப்பமும் இங்கே சிலருக்கு வருகிறது. பலரின் கண்ணீர் வெறும் நீலிக்கண்ணீர். அதைத்தான் சொன்னேன்.

நான் சொன்னது வை.கோவின் அணிமாற்றம் பற்றி நெடுமாறனின் கருத்தைக் கேட்டுவிட்டு எழுதும்படி. நெடுமாறன் தேர்தல் அரசியலுக்கு வரமாட்டாரென்பது எனக்கும் தெரியும்.

காசியரிடம் என்ன கேட்பது? திராவிட முன்னேற்றக் கழகத்தைப்பற்றியும் கருணாநிதியைப்பற்றியும் கூடக் கேட்கலாமே? கேட்டால் என்ன பதில் வருமென்று உங்களுக்குத் தெரியுமா? வைரமுத்துவிடம் பரிசு வாங்கிய பின்னும் ஏதும் மாற்றிச் சொல்லமாட்டாரென்றே நினைக்கிறேன். ;-) (கவனிக்க: காசியரின் கருத்தை முக்கியமானதென்று நான் சொல்வில்லை. நியோதான் சொன்னார்.)

நியோ / neo said...

நெடுமாறனது நிலைப்பாடு - தி.க.வின் நிலைப்பாடு எல்லாம் வெகு தெளிவாகவே இருக்கிறது. 'தமிழ் ஓசை' நாளிதழ் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு தன் நிலைப்பாட்டை நெடுமாறன் வெளிப்படையாகவே சொல்லிவிட்டார் என தி.க.வினர் சொல்லுகின்றனர்.

சுப.வீயினது்ம் அவ்வாறே.

மற்றபடி அமிர்தலிங்கம், உமா மகேசுவரன், சிறீசபாரத்தினம், பத்மநாபா போன்றவர்களுக்குத் தொடர்பான நிகழ்வுகளில் கலைஞரின் நிலைப்பாடு எப்படி - ஈழவர்களுக்குத் தேவையற்றதோ - அவ்வாறே - தி.மு.க குறித்து காவி அவர்களின் நிலையும் எமக்குத் தேவயற்றது.

நாரதரின் கேடுகெட்ட (உணர்ச்சி வசப்பட்ட நிலையிலான) பேச்சுக்கு - அவரை விடவும் கடுமையாக எனகுப் பேசத் தெரியும் என்றாலும் - ஒரு நிதானமாக பதில் சொல்ல வேண்டும் என்பதற்காகவே - வேண்டுமென்றால் காசியிடம் கேட்டு - தமிழக அரசியல் நிலவரங்களால் ஈழ ஆதரவு நிலைகளில்(தமிழகத்தில்) மாற்றம் வருமா என்று கேட்டுக் கொண்டு பிறகு கருத்துச் சொல்லுங்கள் என்று நான் தெரிவித்தேன் (உட்கிடையாக).

மற்றபடி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு யாரிடம் பெரியாரியத்தை எதிர்பார்ப்பது யாரிடம் பார்ப்பனியத்தை எதிர்பார்ப்பது என்று வேறு யாரிடமும் பாடம் கற்றுக் கொள்ளத் தேவையிருப்பதாக நான் கருதவில்லை. :)

நியோ / neo said...
This comment has been removed by a blog administrator.
IdlyVadai said...

neo - நான் எதையும் moderate செய்யவில்லை